Tnpsc Current Affairs in Tamil & English – 17th and 18th August 2024
1. ‘வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரச்சாரம்’ என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. கலாச்சார அமைச்சகம்
ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
- #HarGharTiranga பிரச்சாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம் தெரிவித்துள்ளார். கலாச்சார அமைச்சகம் மற்றும் ‘மைகௌ’மூலம் தொடங்கப்பட்ட இப்பிரச்சாரம், இந்தியாவின் தேசியக்கொடியான ‘மூவர்ணக்கொடி’பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசியக்கொடியுடனான நாட்டு மக்களின் உறவை தனிப்பட்ட மற்றும் இதயப்பூர்வமான பிணைப்பாக மாற்ற எண்ணுகிறது.
2. அண்மையில், இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து கீழ்க்காணும் எந்நிறுவனத்தில் நீர் தொழில்நுட்ப மையத்தை (CoWT) நிறுவுவதற்கான கூட்டுத்திட்டத்தை அறிவித்தன?
அ. ஐஐடி மெட்ராஸ்
ஆ. ஐஐடி பம்பாய்
இ. ஐஐடி ரூர்க்கி
ஈ. ஐஐடி கான்பூர்
- இந்தியாவில் நிலையான நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக IIT மெட்ராஸில் நீர் தொழில்நுட்ப மையத்தை நிறுவுவதற்கான கூட்டுத்திட்டத்தை இந்தியாவும் இஸ்ரேலும் தொடங்கியுள்ளன. நீர் பற்றாக்குறை பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தக் கூட்டு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த மையத்திற்கான கட்டமைப்பிற்காக, இஸ்ரேல் தூதரகம், IIT மெட்ராஸ் மற்றும் அம்ருத் திட்டம் ஆகியவை இணைந்து ஒரு நோக்க அறிக்கையில் கையெழுத்திட்டன. நகர்ப்புற நீர் வழங்கல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்வதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
3. அண்மையில், 6ஆவது இந்தியா-ஆஸ்திரேலியா கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி
ஆ. கான்பெர்ரா
இ. சென்னை
ஈ. ஹைதராபாத்
- இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களின் விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேம்படுத்த இரண்டு முக்கிய இருதரப்பு சந்திப்புகளை நடத்தின. கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க ஆஸ்திரேலியா 6ஆவது இந்தியா-ஆஸ்திரேலியா கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தையை கான்பெராவில் நடத்தியது. இதில் பங்கேற்ற இந்தியத்தூதுக்குழுவிற்கு முவான்புயி சையாவி தலைமைதாங்கினார்; அதே சமயம் சாரா ஸ்டோரி மற்றும் பெர்னார்ட் பிலிப் ஆகியோர் ஆஸ்திரேலிய குழுவுக்குத் தலைமைதாங்கினார்.
- அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், நிலையான கடல்வள பயன்பாடு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நீலப்பொருளாதாரம் மற்றும் துறைமுக நிலைக்கட்டுப்பாடுபற்றி விவாதித்தனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பதினான்காவது இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டுப்பணிக்குழுவை இந்தியா புது தில்லியில் நடத்தியது. 7ஆவது கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை புது தில்லியில் நடைபெறவுள்ளது.
4. கீழ்க்காணும் எந்த நாட்டு அறிவியலாளர்கள், கடல் மாசுபாட்டிற்கு ஒரு சாத்தியம்மிக்க தீர்வாக நெகிழி உண்ணும் பூஞ்சைகளைக் கண்டுபிடித்துள்ளனர்?
அ. ஜெர்மனி
ஆ. இந்தியா
இ. பிரேசில்
ஈ. பிரான்ஸ்
- நெகிழிக்கழிவுகளை அகற்ற உதவும் Aspergillus மற்றும் Pestalotiopsis வகையைச் சேர்ந்த நெகிழிகள் உண்ணும் பூஞ்சைகளை ஜெர்மனி நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை பூஞ்சைகள் நெகிழிகளை உடைத்து, நெகிழி மாசுபாட்டிற்கு தீர்வை வழங்கும். இந்தக் கண்டுபிடிப்பு உலகப்பெருங்கடல்களில் நெகிழி மாசைக் குறைக்க கணிசமாக உதவும்.
5. சமீபத்தில், ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அ. அசோக் குமார்
ஆ. P R ஸ்ரீஜேஷ்
இ. ஹர்மன்பிரீத் சிங்
ஈ. பல்பீர் சிங்
- அண்மையில் 2024-ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்த P R ஸ்ரீஜேஷ், இந்திய ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. ‘அமிர்த பாரத நிலையம்’ திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. ரெயில்வே அமைச்சகம்
ஆ. நகர்ப்புற விவகார அமைச்சகம்
இ. சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- மேற்கு ரெயில்வே கண்டிவாலி மற்றும் தாஹிசர் நிலையங்களை அமிர்த பாரத நிலையத் திட்டத்தில் சேர்த்துள்ளது. 2023 பிப்ரவரியில் ரெயில்வே அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பெருந்திட்டங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் நீண்டகால வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டம் ஒவ்வொரு நிலையத்தின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்திசெய்கிறது; சிறந்த வசதிகள், போக்குவரவு ஓட்டம் மற்றும் பலகைகளுடன் அவற்றை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. பிரேரணா திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. கல்வி அமைச்சகம்
ஆ. கலாச்சார அமைச்சகம்
இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- மத்திய கல்வியமைச்சர் அண்மையில் PM ஸ்ரீ பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் ‘பிரேரணா’ திட்ட முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 2024 ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘பிரேரணா திட்டம்’ என்பது இந்தியக் கல்விக்கொள்கைகள் மற்றும் 2020ஆம் ஆண்டு தேசியக்கல்விக்கொள்கைகளை மதிப்பு அடிப்படையிலான கற்றல்மூலம் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் இத்திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட 9ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான திட்டமாகும்.
8. அண்மையில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட, ‘தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பின்’ நோக்கம் என்ன?
அ. பூச்சிக்கொல்லி சில்லறை விற்பனையாளர்களை விவசாயிகள் சார்ந்திருப்பதை குறைப்பது
ஆ. மண்ணின் தரத்தைக் கண்காணிப்பது
இ. வானிலை முறைகளைக் கண்காணிப்பது
ஈ. நீர்ப்பாசன நுட்பங்களை மேம்படுத்துவது
- பூச்சிக்கட்டுப்பாட்டில் விவசாயிகளுக்கு உதவ இந்திய அரசாங்கம் AI-அடிப்படையிலான தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பை (NPSS) ஆக.15 அன்று அறிமுகப்படுத்தியது. NPSS உழவர்கள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வேளாண் நிபுணர்களுடன் தொடர்புகொள்ள உதவுகிறது; மேலும் பூச்சிக்கொல்லி சில்லறை விற்பனையாளர்களை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
- துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக உழவர்கள் பாதிக்கப்பட்ட பயிர்களின் படங்களை நிபுணர்களுக்கு அனுப்பலாம். சுமார் பதினான்கு கோடி விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் தகவல்களை வழங்கும் பூச்சித்தரவை பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்பு AI கருவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த முன்முயற்சியானது உற்பத்தித்திறனை அதிகரிப்பது, மண்ணின் நலத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
9. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவேலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகா
இ. மத்திய பிரதேசம்
ஈ. கேரளா
- நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், கழுவேலி பறவைகள் சரணாலயம் மற்றும் தவா நீர்த்தேக்கம் உட்பட மேலும் மூன்று இந்திய ஈரநிலங்கள் ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நஞ்சராயன் பறவைகள் சரணாலயமானது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது; ஏரியை புணரமைத்த அரசர் நஞ்சராயன் பெயரால் இச்சரணாலயம் அழைக்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கழுவேலி பறவைகள் சரணாலயம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் சோழமண்டலக்கடற்கரையிலுள்ள உப்பு நிறைந்த ஆழமற்ற ஏரியாகும்; இது பல்லுயிர் வளம்கொண்ட ஏரியாகும். மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியான தவா நீர்த்தேக்கம், சாத்புரா புலிகள் காப்பகத்தின் உள்ளே தவா மற்றும் டென்வா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.
10. அண்மையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, ‘HIM-UNNATI’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
அ. இமாச்சல பிரதேசம்
ஆ. உத்தரகாண்ட்
இ. குஜராத்
ஈ. இராஜஸ்தான்
- இமாச்சல பிரதேச மாநிலம் `150 கோடி ஒதுக்கீட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க HIM-UNNATI திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் 32,149 ஹெக்டேருக்கு மேல் இரசாயனமற்ற வேளாண்மை செய்யும் 1.92 இலட்சம் விவசாயிகளை ஆதரிக்கிறது. கொத்து அடிப்படையிலான வளர்ச்சி மாதிரி & இயற்கை வேளாண் நடைமுறைகளை ஊக்குவிப்பதன்மூலம் விவசாயத்தை பொருளாதார ரீதியாக இலாபகரமானதாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னெடுப்பானது சிறு விவசாயிகளை மொத்த உற்பத்திக்காக ஒருங்கிணைத்து, தற்போது உள்ள வேளாண் திட்டங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு & தோட்டக்கலைபோன்ற துறைகளுடன் ஒருங்கிணைத்து தாக்கத்தை அதிகப்படுத்தும்.
11. அண்மையில், அமலாக்க இயக்குநரகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. சத்யஜித் பிரகாஷ்
ஆ. வினை பட்நாயக்
இ. இராகுல் நவின்
ஈ. விக்ரம் சிங்
- IRS அதிகாரி ராகுல் நவின், புதிய அமலாக்க இயக்குநராக அமைச்சரவை நியமனக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அமலாக்க இயக்குநரகத்தின் (ED) சிறப்பு இயக்குநராகப் பணியாற்றுவார். 2019 நவம்பரில் ED சிறப்பு இயக்குநராக இராகுல் நவீன் பணியில் சேர்ந்தார்.
12. அண்மையில் காலமான Dr இராம்நாராயண் அகர்வாலுடன் தொடர்புடைய துறை எது?
அ. விளையாட்டு
ஆ. அரசியல்
இ. இதழியல்
ஈ. அறிவியல்
- “அக்னிமேன்” மற்றும் “ஏவுகணைகளின் தந்தை” என்றழைக்கப்படும் ராம்நாராயண் அகர்வால் ஹைதராபாத்தில் காலமானார். இந்தியாவின் தொலைதூர ஏவுகணைத் திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய இவர், அக்னி ஏவுகணைத் திட்டத்தின் முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார். ‘பத்மஸ்ரீ’ மற்றும் ‘பத்ம பூஷன்’ விருதுபெற்ற இராம்நாராயண் அகர்வால், இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். 2005ஆம் ஆண்டில் மேம்பட்ட அமைப்புகள் ஆய்வகத்தின் இயக்குநராக அவர் ஓய்வுபெற்றார். அவர், ஏவுகணை திட்டங்களில் Dr APJ அப்துல் கலாம் மற்றும் Dr அருணாச்சலம் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றினார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 2024 – விடுதலை நாள் விருதுகள்: தமிழ்நாடு.
தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `10 இலட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அடங்கிய, ‘தகைசால் தமிழர்’ விருது காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு Dr அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நீலகிரி மாவட்ட செவிலியர் ஆ. சபீனாவுக்கு வழங்கப்பட்டது.
2. பன்னாட்டு காத்தாடி திருவிழா.
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து ஆக.15-18 வரை நடைபெறும் 3ஆவது தமிழ்நாடு பன்னாட்டு காத்தாடி திருவிழாவைத் தொடக்கின.
3. விடுதலை நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புகள்..
குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும், ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.
முன்னாள் இராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ் படை வீரர்கள் வங்கிகளில் `1 கோடி வரை கடன்பெற ஏற்பாடு செய்துதரப்படும்.
தியாகிகள் ஓய்வூதியம் `21,000ஆக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் `11,500ஆக அதிகரிப்பு.
வயநாடு நிகழ்வின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வுசெய்யப்படும்.
4. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்!
ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆக.17 அன்று தொடங்கிவைத்தார். ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீர்நிரப்பி அதன்மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மற்றும் வேளாண்மை, குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக தொடங்கப்பட்டதுதான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.
5. 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள்.
சிறந்த தமிழ்த்திரைப்படம் – பொன்னியின் செல்வன்-1.
சிறந்த இசையமைப்பாளர் விருது (சிறந்த பின்னணி இசை) – AR ரஹ்மான் (பொன்னியின் செல்வன்).
சிறந்த ஒளிப்பதிவு – இரவி வர்மன் (பொன்னியின் செல்வன்)
ஒட்டு மொத்தமாக சிறந்த திரைப்படம் – ஆட்டம் (மலையாளத் திரைப்படம்).
சிறந்த மலையாளத் திரைப்படம் – சவுதி வெள்ளக்கா.
சிறந்த கன்னடத் திரைப்படம் – KGF-2.
சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா-2.
சிறந்த ஹிந்தி திரைப்படம் – குல்மோஹர்.
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்).
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா) மற்றும் விக்ராந்த் மாசே (12த் பெயில்)
6. கர்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண்.
தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ‘102’ என்ற மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை மையத்தில் இருந்து ஒரு கர்ப்பிணியை குறைந்தது 5 முறைக்குமேல் ஆலோசகர்கள் தொடர்புகொள்வர்.
தமிழ்நாட்டில் நிகழும் ஒரு இலட்சம் மகப்பேற்றில், 45.5ஆக உயிரிழப்பு உள்ளது.
7. அரசுப்பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ‘தேன்சிட்டு’ மற்றும் ‘புது ஊஞ்சல்’.
அரசுப்பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் ‘தேன்சிட்டு’, ‘புது ஊஞ்சல்’ ஆகிய சிறார் இதழ்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது. மாணவர்களின் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ‘புது ஊஞ்சல்’ இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ இதழும் மாதமிருமுறை வெளியிடப்படுகிறது.
1. ‘HarGhar Tiranga campaign’ is an initiative of which ministry?
A. Ministry of Defence
B. Ministry of Home Affairs
C. Ministry of Culture
D. Ministry of Urban Development
- Prime Minister Narendra Modi expressed pride over the #HarGharTiranga campaign. The campaign, initiated by the Ministry of Culture and MyGov, aims to spread awareness about India’s National Flag, the Tiranga. It seeks to transform people’s relationship with the flag from a formal connection to a more personal and heartfelt bond.
2. Recently, India and Israel have launched a joint project to establish a Center of Water Technology (CoWT) at which institute?
A. IIT Madras
B. IIT Bombay
C. IIT Roorkee
D. IIT Kanpur
- India and Israel have launched a joint project to establish a Centre of Water Technology at IIT Madras to enhance sustainable water management in India. The partnership is seen as a significant milestone, reflecting the growing collaboration between the two countries in addressing water scarcity issues. A Joint Statement of Intent was signed by the Embassy of Israel, IIT Madras, and the AMRUT mission, outlining the framework for the centre. The Centre will focus on innovation and research in urban water supply and technology.
3. Recently, where was the 6th India-Australia Maritime Security Dialogue held?
A. New Delhi
B. Canberra
C. Chennai
D. Hyderabad
- India and Australia held two key bilateral meetings to enhance their Comprehensive Strategic Partnership. Australia hosted the 6th India-Australia Maritime Security Dialogue in Canberra, to discuss maritime security cooperation. The Indian delegation was led by Ms Muanpuii Saiawi, while Ms Sarah Storey and Mr Bernard Philip led the Australian delegation.
- They discussed Humanitarian Assistance and Disaster Relief (HADR), sustainable marine resource use, Search and Rescue operations, pollution response, blue economy, and Port State control. India hosted the 14th India-Australia Joint Working Group on Counter-Terrorism in New Delhi. The 7th Maritime Security Dialogue will be held in New Delhi.
4. Which country’s scientists recently discovered plastic-eating fungi as a potential solution to ocean pollution?
A. Germany
B. India
C. Brazil
D. France
- Scientists in Germany have discovered plastic-eating fungi from the Aspergillus and Pestalotiopsis genera that may help address plastic waste. These fungi can break down plastics, potentially offering a solution to plastic pollution. This discovery could significantly help in reducing plastic pollution in the world’s oceans.
5. Recently, who has been appointed as the new head coach of Junior Men’s Hockey Team?
A. Ashok Kumar
B. P R Sreejesh
C. Harmanpreet Singh
D. Balbir Singh
- PR Sreejesh, who recently led India to a bronze medal at the 2024 Olympics, has been appointed as the new head coach of the Indian junior men’s hockey team.
6. Amrit Bharat Station Scheme comes under which ministry?
A. Ministry of Railways
B. Ministry of Urban Affairs
C. Ministry of Road Transport and Highways
D. Ministry of Home Affairs
- Western Railway has added Kandivali and Dahisar stations to the Amrit Bharat Station Scheme. Launched in February 2023 by the Ministry of Railways, this scheme aims to redevelop railway stations across India. It focuses on long-term development with master plans and phased improvements. The scheme addresses each station’s unique needs, aiming to modernize them with better amenities, traffic flow, and signage.
7. Prerana Programme is launched by which ministry?
A. Ministry of Education
B. Ministry of Culture
C. Ministry of Urban Development
D. Ministry of Defence
- The Union Education Minister recently interacted with students, teachers, and parents of PM SHRI Schools and Prerana Programme alumni. Prerana Programme, launched in January 2024, integrates Indian education principles and value-based learning from NEP 2020. It’s a week-long residential program for selected class IX to XII students, combining heritage and innovation.
8. What is the objective of ‘National Pest Surveillance System (NPSS)’, recently launched by Union Government?
A. To reduce farmers’ dependence on pesticide retailers
B. To monitor soil quality
C. To monitor weather patterns
D. To improve irrigation techniques
- The Indian Government launched the AI-based National Pest Surveillance System (NPSS) on August 15 to assist farmers with pest control. NPSS helps farmers connect with agricultural experts using their phones, reducing reliance on pesticide retailers.
- Farmers can send images of infested crops to experts for accurate diagnosis and treatment. The system uses AI tools to analyze pest data, providing timely information to around 14 crore farmers. This initiative aims to increase productivity, conserve soil health, and will be implemented at the state level through outreach programs without additional funding.
9. Nanjarayan Bird Sanctuary and Kazhuveli Bird Sanctuary are located in which state?
A. Tamil Nadu
B. Karnataka
C. Madhya Pradesh
D. Kerala
- Three more Indian wetlands have been added to the Ramsar list, including Nanjarayan Bird Sanctuary, Kazhuveli Bird Sanctuary, and Tawa Reservoir. Nanjarayan Bird Sanctuary is in Tiruppur District, Tamil Nadu, named after King Nanjarayan who restored the lake.
- Kazhuveli Bird Sanctuary, declared in 2021, is a brackish shallow lake on the Coromandel Coast in Villupuram district, Tamil Nadu, and is rich in biodiversity. Tawa Reservoir, the largest protected area in Madhya Pradesh, is located inside the Satpura Tiger Reserve at the confluence of the Tawa and Denwa rivers.
10. Recently, which state government has launched ‘HIM-UNNATI scheme’ to boost natural farming?
A. Himachal Pradesh
B. Uttarakhand
C. Gujarat
D. Rajasthan
- Himachal Pradesh has launched the HIM-UNNATI scheme to promote natural farming, with a ₹150 crore allocation. The scheme supports 1.92 lakh farmers practicing chemical-free farming on over 32,149 hectares. It aims to make agriculture economically viable by promoting a cluster-based development model and natural farming practices. The initiative will consolidate smallholding farmers for bulk production and integrate with existing agricultural schemes and departments like animal husbandry and horticulture to maximize impact.
11. Recently, who has been appointed as Director of the Enforcement Directorate?
A. Satyajit Prakash
B. Vinay Patnaik
C. Rahul Navin
D. Vikram Singh
- IRS officer Rahul Navin has been appointed as the new Enforcement Director by the Cabinet Appointments Committee. He will serve as the Special Director of the Enforcement Directorate (ED) for two years from the date he assumes charge. Navin joined the ED as Special Director in November 2019.
12. Dr Ramnarayan Agarwal, who recently passed away, was associated with which field?
A. Sports
B. Politics
C. Journalism
D. Science
- Ramnarayan Agarwal, known as “Agniman” and the “Father of Missiles,” passed away in Hyderabad. He played a key role in India’s long-range ballistic missile program and was the first Project Director of the Agni Missile Program. Agarwal, a Padma Shri and Padma Bhushan awardee, made significant contributions to India’s defense capabilities. He retired as Director of the Advanced Systems Laboratory (ASL) in 2005. He worked closely with Dr. APJ Abdul Kalam and Dr. Arunachalam on missile programs.