TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 16th October 2024

1. 2024 – இராணுவத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. டேராடூன்

. காங்டாக்

இ. கோஹிமா

ஈ. ஷில்லாங்

  • 2024ஆம் ஆண்டிற்கான இரண்டாவது இராணுவத் தளபதிகள் மாநாட்டின் முதல் கட்டம் சிக்கிமின் காங்டாக்கில் நடைபெற்றது. இந்த இரண்டு நாள் மாநாடு, மூத்த தளபதிகளுக்கு செயல்பாட்டுத் தயார்நிலையை மறுபரிசீலனை செய்யவும், உத்திகளைப்பற்றி விவாதிக்கவும் மற்றும் எதிர்கால ஆணைகளை கோடிட்டுக்காட்டவும் ஒரு மன்றமாக செயல்பட்டது. இரண்டாம் கட்ட மாநாடு தில்லியில் அக்.28-29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

2. 2024 – இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

அ. கேப்ரியல் கார்சியா

ஆ. அலெக்சாண்டர் புஷ்கின்

இ. ஹான் காங்

ஈ. ஹருகி முரகாமி

  • தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் 2024-இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இந்தப் பெருமையைப் பெறும் முதல் கொரியர் இவர்தான். அவரது படைப்பு அதன் “தீவிரமான கவிதை உரைநடை” என்று அறியப்படுகிறது, இது வரலாற்று அதிர்ச்சிகள் மற்றும் வாழ்க்கையின் பலவீனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் தி வெஜிடேரியன் (2016-மேன் புக்கர் பரிசு வென்ற படைப்பு), தி ஒயிட் புக், மனித செயல்கள் மற்றும் கிரேக்க பாடங்கள் ஆகியவை அடங்கும்.

3. யுவ சங்கம் இணையதளத்தைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம்

ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • “ஒரே பாரதம் உன்னத பாரதம்” திட்டத்தின்கீழ் யுவ சங்கத்தின் ஐந்தாம் கட்டத்திற்கான பதிவு இணையதளத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளையோரிடையே, மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்காக, மத்திய அரசின் முன்முயற்சியே யுவ சங்கம் ஆகும். 18-30 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள இளையோர்கள் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சியின் வரவிருக்கும் கட்டத்தில் பங்கேற்க, யுவ சங்கம் இணையதளம்மூலம் பதிவுசெய்யலாம். 2024 அக்.21 வரை பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
  • யுவ சங்கம் சுற்றுப்பயணங்களின்போது, ​​பங்கேற்பாளர்கள் 5-7 நாட்களில் பரியாதன் (சுற்றுலா), பரம்பரா (பாரம் பரியம்), பிரகதி (முன்னேற்றம்), பரஸ்பர் சம்பார்க் (இணைப்பு) மற்றும் புரோத்யோகி (தொழில்நுட்பம்) ஆகிய ஐந்து பகுதிகளில் அறிவினைப் பெறுவார்கள்.

4. 2024 – உலக புலம்பெயர் பறவைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Sing, Fly, Soar – Like a Bird

ஆ. Dim the Lights for Birds at Night

இ. Protect Insects, Protect Birds

ஈ. Water: Sustaining Bird Life

  • உலக புலம்பெயர் பறவைகள் நாள் என்பது புலம்பெயர்ந்த பறவைகளின் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய பிரச்சாரமாகும். 2024ஆம் ஆண்டில், இது மே.11 & அக்.12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது; இது வெவ்வேறு அரைக்கோளங்களில் பறவைகள் புலம்பெயர்வதை பிரதிபலிக்கிறது.
  • 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “பூச்சிகளைப் பாதுகாத்தல், பறவைகளைப் பாதுகாத்தல்” என்பதாகும். இந்நாள் பறவைகள் உயிர்வாழ்வதில் பூச்சிகள் வகிக்கும் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

5. தட்பவெப்பநிலை தொடர்பான தரவுகளுக்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உருவாக்கத் திட்டமிட்டுள்ள தரவுக் களஞ்சியத்தின் பெயர் என்ன?

அ. ரிசர்வ் வங்கியின் தட்பவெப்பநிலை இடர் தகவல் அமைப்பு (RB-CRIS)

ஆ. ரிசர்வ் வங்கியின் தட்பவெப்பநிலை நடவடிக்கை அமைப்பு (RB-CAS)

இ. ரிசர்வ் வங்கியின் சுற்றுச்சூழல் தரவுக்களஞ்சியம் (RB-EDR)

ஈ. ரிசர்வ் வங்கியின் பசுமை தரவு மையம் (RB-GDH)

  • தட்பவெப்பநிலை தொடர்பான தரவுகளில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க ரிசர்வ் வங்கியின் தட்பவெப்பநிலை இடர் தகவலமைப்பை (RB-CRIS) RBI முன்மொழிந்தது. தற்போதைய தட்பவெப்பநிலை தரவு பல்வேறு ஆதாரங்கள், வடிவங்கள் என துண்டு துண்டாக உள்ளது. RB-CRIS இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்: தரவுமூலங்களின் பொது வலை அடைவு மற்றும் தரப்படுத்தப்பட்ட தரவுத்தொகுப்புகளுடன் கூடிய தரவு இணையம். RBI ஆனது RB-CRISஐ, தரவுத்திரட்டியில் தொடங்கி, அதைத்தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான இணையத்தைத் தொடங்கும்.

6. 2024 – பேரிடர் அபாயக் குறைப்புக்கான பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 11

ஆ. அக்டோபர் 12

இ. அக்டோபர் 13

ஈ. அக்டோபர் 14

  • பேரிடர் அபாயக்குறைப்புக்கான பன்னாட்டு நாள் ஆண்டுதோறும் அக்.13 அன்று கொண்டாடப்படுகிறது. பேரிடர் குறைப்பு மற்றும் இடர்-விழிப்புணர்வுக்கான உலகளாவிய கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1989இல் அந்நாள் நிறுவப்பட்டது. உலகெங்கிலுமுள்ள சமூகங்கள் மற்றும் மக்கள் பேரிடர்களில் தங்கள் வெளிப்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளை இந்நாள் கொண்டாடுகிறது.

7. ஹிஸ்புத் தஹ்ரிரை (HuT) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

  • மத்திய உள்துறை அமைச்சகம் Hizb-ut-Tahrir (HuT)ஐ சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA)கீழ் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவானது இந்தியாவின் தேசியப்பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தின்மூலம் உலகளாவிய இசுலாமிய அரசையும் கலிபாவையும் நிறுவ எண்ணுகிறது. HuT இளையோர்களை தீவிரமயமாக்குவதிலும், சமூக ஊடகங்கள் வழியாக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டுள்ளது; இது இந்திய அரசாங்கத்திற்கு தீவிர கவலையளிக்கிறது.

8. செறிவூட்டப்பட்ட அரிசி முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?

அ. ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவது

ஆ. அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பது

இ. அரிசி இறக்குமதியை அதிகரிப்பது

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத்திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின்கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை அதன் தற்போதைய வடிவத்தில் 2024 ஜூலை முதல் 2028 டிசம்பர் வரை தொடர ஒப்புதல் அளித்தது. அரிசி செறிவூட்டும் முன்முயற்சி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தின் (உணவு மானியம்) ஒருபகுதியாக, நடுவண் அரசின் 100% நிதியுதவியுடன் கூடிய நடுவணரசின் ஒரு முயற்சியாக தொடரும்.
  • இரும்பு, விட்டமின் B12 மற்றும் போலிக் அமிலம் ஆகியவற்றில் பரவலான குறைபாடுகளுடன், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்களிடையே, அதிக ஊட்டச்சத்து குறைபாடுகளை இந்தியா எதிர்கொள்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) உயர் இரத்தசோகை விகிதங்களைக் காட்டுகிறது; 1/2 பெண் இரத்தசோகையாலும், 1/3 குழந்தை வளர்ச்சிகுன்றிய நிலையிலும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியச்சூழலில், அரிசி, நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாக திகழ்கிறது. ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் 65% பேர் அரிசியை முதன்மை உணவாக உட்கொள்கிறார்கள்.

9. 2021-22-க்கான அகில இந்திய கிராமப்புற நிதி உள்ளடக்கக் கணக்கெடுப்பை (NAFIS) வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. NABARD

ஆ. RBI

இ. FCI

ஈ. SEBI

  • NABARDஇன் 2021-22-க்கான இரண்டாவது அனைத்திந்திய கிராமப்புற நிதி உள்ளடக்கக்கணக்கெடுப்பு (NAFIS) COVID தொற்றுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் 1 லட்சம் கிராமப்புற குடும்பங்களை ஆய்வுசெய்தது. குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 2016-17இல் இருந்த `8,059இலிருந்து 57.6% உயர்ந்து 2021-22இல் `12,698ஆக 9.5% CAGRஉடன் உயர்ந்துள்ளது. வேளாண் குடும்பங்கள் `13,661உம் விவசாயம் சாராத குடும்பங்கள் `11,438உம் வருவாயாக ஈட்டியுள்ளன. ஊதியம் பெறும் வேலை அனைத்து குடும்பங்களுக்கும் (37%) மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருந்துள்ளது. விவசாயக்குடும்பங்களுக்கு, பயிரிடுதல், வருமானத்தில் 1/3 பங்கையும், அரசு / தனியார் சேவைகள் 1/4 பங்கையும் வழங்குகின்றன. விவசாயம் அல்லாத குடும்பங்கள் முதன்மையாக அரசு / தனியார் சேவைகள் (57%) மற்றும் கூலித்தொழிலை (26%) நம்பியுள்ளன.

10. டெலி-மனஸ் என்ற முன்னெடுப்புடன் தொடர்புடைய துறை எது?

அ. வேளாண்மை

ஆ. மனநலம்

இ. கல்வி

ஈ. விளையாட்டு

  • சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உலக மனநல நாளை அனுசரித்ததோடு டெலி-மனஸின் ஈராண்டு நிறைவைக் கொண்டாடியது. “It is time to prioritize Mental Health at Workplace” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டின் கருப்பொருளாகும். டெலி–மனஸ் என்பது, இந்தியா முழுவதும் 24*7 தொலைநிலை மனநலச்சேவைகள்மூலம் மனநலப்பாதுகாப்புக்கான உலகளாவிய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. கீழ்க்காணும் எந்த ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் TDP1 (டைரோசில்-டிஎன்ஏ பாஸ்போடிஸ்டேரேஸ் 1)ஐ புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு நம்பிக்கைக்குரிய இலக்காக அடையாளம் கண்டுள்ளது?

அ. IISc, பெங்களூரு

ஆ. இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கொல்கத்தா

இ. AIIMS, தில்லி

ஈ. TATA நினைவு மருத்துவமனை, மும்பை

  • கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தின் அறிவியலாளர்கள் DNAஐ சரிசெய்யும் நொதியை TDP1ஐ செயல்படுத்துவதன்மூலம் அதனை புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு புதிய இலக்காகக் கண்டுபிடித்துள்ளனர். TDP1 (Tyrosyl-DNA phosphodiesterase1) என்பது சேதமடைந்த DNA தளங்களை நீக்குவதால், மனிதர்களில் DNA சரிசெய்தலுக்கு அவசியமாகிறது. இக்கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் துல்லியமான மருத்துவத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய பாதையைத் திறக்கிறது; குறிப்பாக தற்போதுள்ள சிகிச்சைகளை எதிர்க்கும் புற்றுநோய்களுக்கு.

12. ஆந்திர பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அண்மையில் ஒரு பிராமி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது?

அ. பாலநாடு

ஆ. நெல்லூர்

இ. குண்டூர்

ஈ. கர்னூல்

  • ஆந்திர பிரதேச மாநிலம், பாலநாடு மாவட்டம், அமராவதி மண்டலம், தரணிகோட்டா கிராமத்தில் பிராமி கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொ.ஆ 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ள இக் கல்வெட்டு, பிராகிருத மொழியில் உள்ளது. ‘பிராமி’ என்பது மௌரியர் காலத்திலிருந்து தோன்றிய பழமையான இந்திய எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது தமிழ், தேவநாகரி, வங்காளம் & மலையாளம் உட்பட தற்போதைய இந்திய எழுத்துக்களுக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வியாழன் கோளின் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது NASA.

வியாழன் கோளைச்சுற்றிவரும் ‘யுரோப்பா’ நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான NASA அனுப்பியுள்ளது. ஸ்பேஸ்-X நிறுவனத்தின் ஃபால்கன் ஹெவி பிளாக்-5 ஏவுகலம்மூலம் அது விண்ணில் செலுத்தப்பட்டது. ‘யுரோப்பா கிளிப்பர்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம், வியாழன் கோளை அடைவதற்கு 5 ½ ஆண்டுகள் ஆகும். அதையடுத்து அக்கோளின் சுற்றுப்பாதைக்குச் சென்று அதை சுற்றிவரத்தொடங்கும் அந்த விண்கலம், ‘யுரோப்பா’ நிலவை 44 முறை நெருக்கமாகக் கடந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

1. Where was the first phase of Army Commanders’ Conference 2024 organized?

A. Dehradun

B. Gangtok

C. Kohima

D. Shillong

  • The first phase of the Second Army Commanders’ Conference for 2024 was held in a hybrid mode in Gangtok, Sikkim. This two-day conference served as a forum for senior commanders to review operational preparedness, discuss strategies, and outline future directives. The second phase of the conference will take place in Delhi on October 28-29.

2. Who has been awarded the Nobel Prize in Literature 2024?

A. Gabriel Garcia

B. Alexander Pushkin

C. Han Kang

D. Haruki Murakami

  • South Korean author Han Kang won the 2024 Nobel Prize in Literature. She is the first Korean to receive this honor. Her work is known for its “intense poetic prose” that addresses historical traumas and the fragility of life. Notable works include The Vegetarian (Man Booker International Prize winner in 2016), The White Book, Human Acts, and Greek Lessons.

3. Which ministry launched Yuva Sangam Portal?

A. Ministry of Defence

B. Ministry of Education

C. Ministry of Youth Affairs and Sports

D. Ministry of Women and Child Development

  • The Ministry of Education launched the registration portal for the fifth phase of Yuva Sangam under Ek Bharat Shreshtha Bharat. Yuva Sangam aims to strengthen connections between youth from different states and union territories. Participants aged 18 to 30 can register on the portal.
  • The registration deadline is the 21st of this month. During the Yuva Sangam tours, participants will receive exposure in five areas: Paryatan (Tourism), Parampara (Tradition), Pragati (Progress), Paraspar Sampark (Interconnection), and Prodyogiki (Technology) over 5-7 days.

4. What is the theme of World Migratory Bird Day 2024?

A. Sing, Fly, Soar – Like a Bird

B. Dim the Lights for Birds at Night

C. Protect Insects, Protect Birds

D. Water: Sustaining Bird Life

  • World Migratory Bird Day is a global campaign to promote international cooperation for the conservation of migratory birds. In 2024, it is celebrated on 11 May and 12 October, reflecting bird migrations in different hemispheres. The 2024 theme is “Protect Insects, Protect Birds.” The day raises awareness about the role insects play in supporting bird survival and urges action for their protection.

5. What is the name of the data repository that the Reserve Bank of India is planning to create for climate-related data?

A. Reserve Bank Climate Risk Information System (RB-CRIS)

B. Reserve Bank Climate Action System (RB-CAS)

C. Reserve Bank Environment Data Repository (RB-EDR)

D. Reserve Bank Green Data Hub (RB-GDH)

  • RBI proposed the Reserve Bank Climate Risk Information System (RB-CRIS) to bridge gaps in climate-related data. Current climate data is fragmented, from varied sources, formats, and frequencies. RB-CRIS will have two parts: a public web directory of data sources and a data portal with standardized datasets. RBI will launch RB-CRIS in phases, starting with the directory, followed by the portal for regulated entities.

6. Which day is observed as the International Day for Disaster Risk Reduction (IDDR) annually?

A. October 11

B. October 12

C. October 13

D. October 14

  • The International Day for Disaster Risk Reduction (IDDR) is celebrated annually on October 13. The day was established in 1989 to promote a global culture of disaster reduction and risk-awareness. It celebrates the efforts of communities and people around the world to reduce their exposure to disasters.

7. Which ministry has designated Hizb-ut-Tahrir (HuT) as a terrorist organization?

A. Ministry of Defence

B. Ministry of External Affairs

C. Ministry of Home Affairs

D. Ministry of Law and Justice

  • The Union Ministry of Home Affairs (MHA) has designated Hizb-ut-Tahrir (HuT) as a terrorist organization under the Unlawful Activities (Prevention) Act (UAPA). The group seeks to establish a global Islamic state and Caliphate through terrorism, posing a significant threat to India’s national security. HuT has been involved in radicalizing youth and promoting terrorism via social media, making it a serious concern for the Indian government.

8. What is the primary objective of fortified rice initiative?

A. Combat malnutrition

B. Increase rice exports

C. Increase rice imports

D. None of the above

  • The Union cabinet, led by PM Modi, approved the continuation of fortified rice distribution under all government schemes, including Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY), from July 2024 to December 2028. The initiative is fully funded by the Centre, providing a unified mechanism for implementation.
  • India faces high malnutrition levels, especially among women and children, with widespread deficiencies in iron, Vitamin B12, and folic acid. The National Family Health Survey (NFHS-5) shows high anaemia rates, with every second woman anaemic and every third child stunted. Rice, a staple food in India, is ideal for fortification to address malnutrition and improve health.

9. Which organization recently released All India Rural Financial Inclusion Survey (NAFIS) for 2021-22?

A. NABARD

B. RBI

C. FCI

D. SEBI

  • NABARD’s second All India Rural Financial Inclusion Survey (NAFIS) for 2021-22 surveyed 1 lakh rural households across India post-COVID. The average monthly income of households rose by 57.6% from Rs 8,059 in 2016-17 to Rs 12,698 in 2021-22, with a 9.5% CAGR. Agricultural households earned Rs 13,661, while non-agricultural households earned Rs 11,438.
  • Salaried employment was the largest income source for all households (37%). For agricultural households, cultivation made up one-third of income, while government/private services contributed one-fourth. Non-agricultural households relied primarily on government/private services (57%) and wage labor (26%).

10. Tele-MANAS Initiative is associated with which field?

A. Agriculture

B. Mental health

C. Education

D. Sports

  • The Ministry of Health & Family Welfare observed World Mental Health Day and celebrated two years of Tele MANAS. This year’s theme is “It is time to prioritize Mental Health at Workplace.” Tele MANAS aims to provide universal access to affordable mental health care through 24/7 tele-mental health services across India.

11. Which research institution recently identified TDP1 (Tyrosyl-DNA phosphodiesterase 1) as a promising target for cancer treatment?

A. IISc, Bengaluru

B. Indian Association for the Cultivation of Science, Kolkata

C. AIIMS, Delhi

D. TATA Memorial Hospital, Mumbai

  • Scientists at the Indian Association for the Cultivation of Science in Kolkata have found a new target for cancer treatment by activating a DNA repair enzyme called TDP1. TDP1, or Tyrosyl-DNA phosphodiesterase 1, is essential for DNA repair in humans as it removes damaged DNA bases. This discovery opens a promising path for precision medicine in cancer treatment, particularly for cancers that are resistant to existing therapies.

12. A Brahmi inscription was recently discovered in which district of Andhra Pradesh?

A. Palnadu

B. Nellore

C. Guntur

D. Kurnool

  • A Brahmi inscription has been discovered in Dharanikota village, Amaravathi mandal, Palnadu district, Andhra Pradesh. The inscription is in the Prakrit language and uses Brahmi characters dating back to the 2nd century CE. Brahmi is one of the oldest known Indian scripts, originating from the Mauryan Period. It is the foundation for most current Indian scripts, including Tamil, Devanagari, Bengali and Malayalam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!