TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 16th August 2024

1. கேனைன் டிஸ்டெம்பர் நோயை ஏற்படுத்தும் காரணி எது?

அ. பூஞ்சை

. வைரஸ்

இ. பாக்டீரியா

ஈ. புரோட்டோசோவா

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கார்பெட் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் வாழும் தெருநாய்களுக்கு கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (CDV) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. கேனைன் டிஸ்டெம்பர் என்பது கேனைன் டிஸ்டெம்பர் வைரஸால் (CDV) ஏற்படும் ஒரு தீவிரமான, தொற்றுநோயாகும். இந்த வைரஸ் நாய்களின் சுவாசம், இரைப்பை, குடல் மற்றும் நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. நான்கு மாதங்களுக்கும் குறைவான நாய்க்குட்டிகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாய்கள் இந்நோயால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளன.
  • CDV ஆனது மரநாய்கள் மற்றும் பல்வேறு பாலூட்டிகளையும், குறிப்பாக நரிகள், ஓநாய்கள், ரக்கூன்கள் மற்றும் ஸ்கங்க்ஸ் போன்ற மாமிச உண்ணிகளையும் பாதிக்கலாம். பூனைகள் CDVஆல் பாதிக்கப்படலாம், ஆனால் அவை நோய்வாய்ப்பட வாய்ப்பு இல்லை.

2. கலிங்கா பரிசுடன் தொடர்புடைய துறை எது?

அ. அறிவியல்

ஆ. விவசாயம்

இ. நிதி

ஈ. அரசியல்

  • கலிங்கா பரிசுக்கான ஆதரவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது. அறிவியலை பிரபலப்படுத்தியதற்காக UNESCOஆல் வழங்கப்படும் மிகப்பழமையான விருது கலிங்கா பரிசாகும். இது ஒடிஸாவின் முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் நன்கொடையுடன் கடந்த 1951இல் நிறுவப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு விளக்க உதவும் எழுத்து, தொகுப்பு, விரிவுரை அல்லது ஊடகத்தயாரிப்பில் குறிப்பிடத்தக்க தொழில்களைப் புரியும் நபர்களை இந்தப் பரிசு கௌரவிக்கிறது.

3. அண்மையில், அமெரிக்காவுக்கான இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. விஜை கேசவ்

ஆ. வினை மோகன் குவாத்ரா

இ. விக்ராந்த் சிங்

ஈ. அமந்தீப் சிங்

  • தரஞ்சித் சிங் சந்துவுக்குப் பிறகு, வினை மோகன் குவாத்ரா அமெரிக்காவுக்கான இந்தியத்தூதராகப் பொறுப்பேற்றார். வினை மோகன் குவாத்ரா, அமெரிக்க-இந்திய கூட்டுறவை வலுப்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளார். அமெரிக்க துணைத்தூதர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் வினை மோகன் குவாத்ராவை வரவேற்றார். வினை மோகன் குவாத்ராவுக்கு 32 ஆண்டுகால அனுபவம் உள்ளது.

4. அண்மையில், “இளையோருக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப்போக்குகள் – 2024” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஆ. உலக வங்கி

இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO)

ஈ. UNDP

  • பன்னாட்டு தொழிலாளர் அமைப்பானது அதன் 20ஆமாண்டு நிறைவைக்குறிக்கும் வகையில், “இளையோருக்கான உலகளாவிய வேலைவாய்ப்புப்போக்குகள் – 2024” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • இளையோரின் வேலைவாய்ப்புக்கான சாதனைகள், சவால்கள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டங்களை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 2023ஆம் ஆண்டில், உலகளாவிய இளையோரின் வேலையின்மை விகிதம் 13% ஆகக் குறைந்தது; அது 15 ஆண்டுகளில் மிகக்குறைவாகும். 64.9 மில்லியன் வேலையற்ற இளையோர் என்ற எண்ணிக்கையுடன், 2000ஆம் ஆண்டுக்குப்பின் அது மிகக்குறைவாகும். 20.4% இளையோர் NEET (வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் இல்லாதோர்) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

5. அண்மையில், ‘அமிர்த கியான் கோஷ்’ மற்றும் ‘ஆசிரியர் மேம்பாட்டு’ இணையதளங்கள் ஆகியன கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டன?

அ. கர்மயோகி இயக்கம்

ஆ. சமக்ர சிக்ஷா

இ. அடல் புத்தாக்க இயக்கம்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • கர்மயோகி இயக்கத்தின்கீழ் “அமிர்த கியான் கோஷ்” மற்றும் “ஆசிரிய மேம்பாட்டு” இணையதளங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. அமிர்த கியான் கோஷ் என்ற இணைய நுழைவு, இந்தியாவை மையமாகக்கொண்ட நேர்வு ஆய்வுகளுடன் பகிரப்பட்ட ஓர் அறிவு வங்கியை வழங்குகிறது. “ஆசிரிய மேம்பாட்டு” இணைய நுழைவானது அரசு ஊழியர்களுக்கு அறிவு வழங்கலை மேம்படுத்த பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்துகிறது. கடந்த 2020இல் தொடங்கப்பட்ட கர்மயோகி இயக்கம், இந்திய மதிப்புகளின் அடிப்படையில் திறமையான குடிமைச்சேவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. குஜராத்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

  • இடிந்துவிழும் அபாயத்திலுள்ள முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பெரியாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இதன் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளுக்கு நீரைத் திருப்புவதுதான். அணை கேரளத்திலிருந்தாலும், 999 ஆண்டு குத்தகை தமிழ்நாட்டிற்கு செயல்பாட்டு உரிமையை வழங்குகிறது. இந்த அணை வெள்ளக்கட்டுப்பாட்டிற்கு உதவுவதோடு தமிழ்நாட்டின் நிலத்தை வளமான பகுதிகளாக மாற்றுகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் உரிமை தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.

7. ‘மோதல் தவிர்ப்பு அமைப்பு – Collision Avoidance System’ என்றால் என்ன?

அ. ரெயிலின் வேகத்தை அதிகரிக்கும் ஒரு முறை

ஆ. ஒரு வாகனம் மற்ற வாகனங்கள் அல்லது தடைகளுடன் மோதுவதைத் தவிர்க்க உதவும் தொழில்நுட்பங்களின் தொகுப்பு

இ. ரெயிலின் அழகியலை மேம்படுத்துவதன்மூலம் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் ஓர் அமைப்பு

ஈ. ரெயிலின் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்கும் ஒருமுறை

  • அண்மையில் இந்தியாவில் நிகழ்ந்த ரெயில் விபத்துக்கள் சிறந்த மோதல் தவிர்ப்பு அமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஒரு மோதல் தவிர்ப்பு அமைப்பு என்பது தடைகளைக் கண்டறிந்து தடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாகனங்கள் மோதல்களைத் தவிர்க்க உதவுகிறது. ரெயில்களைப் பொறுத்தவரை, நிகழ்நேரத்தில் அவற்றின் நிலைகளைக் கண்காணிப்பதன்மூலம் பிற ரெயில்களில் விபத்துக்கள் அல்லது தடைகளைத் தவிர்ப்பது ஆகும்.

8. அண்மையில், DRDOஉம் இந்திய இராணுவமும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கையால் எடுத்துச்செல்லக்கூடிய பீரங்கி-எதிர்ப்பு வழிசெலுத்தப்பட்ட ஏவுகணையை கீழ்க்காணும் எப்பகுதியில் வெற்றிகரமாகச் சோதனை செய்தன?

அ. போர்பந்தர், குஜராத்

ஆ. பொக்ரான், இராஜஸ்தான்

இ. விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்

ஈ. நாகப்பட்டினம், தமிழ்நாடு

  • DRDO மற்றும் இந்திய இராணுவமும் பொக்ரான் ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் கையால் எடுத்துச்செல்லக்கூடிய பீரங்கி- எதிர்ப்பு வழிசெலுத்தப்பட்ட ஏவுகணையை (MPATGM) வெற்றிகரமாக பரிசோதித்தது. MPATGM என்பது தோளில் வைத்து ஏவப்படும், சிறிய ஏவுகணை அமைப்பாகும்; இது எதிரி பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களைத் தாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் ஏவி, இலக்கு கையகப்படுத்தும் அமைப்பு மற்றும் தீக்கட்டுப்பாட்டு அலகு ஆகியவை அடங்கும். இது மேம்பட்ட அகச்சிவப்பு ஹோமிங் உணரிகள் மற்றும் ஒருங்கிணைந்த ஏவியோனிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது; இது பகல் மற்றும் இரவு செயல்பாடுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

9. மத்திய நீர் ஆணையம் உருவாக்கிய, ‘ஃப்ளட் வாட்ச் இந்தியா 2.0’ என்ற செயலியை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. ஜல் சக்தி அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர், மத்திய நீர் ஆணையத்தின், ‘FloodWatch India’ திறன்பேசி செயலியின் பதிப்பு 2.0-ஐ அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலி நிகழ்நேர வெள்ளத்தகவல்களையும், ஏழு நாள் முன்னறிவிப்புகளையும் பொதுமக்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் படிக்கக்கூடிய மற்றும் ஒலிக்கோப்பு வடிவங்களுடன் வழங்குகிறது.
  • இதன்மூலம் பயனர்கள் நிகழ்நேர ஆற்றுவெள்ளத்தரவைப் பயன்படுத்தி நாடு முழுவதும் வெள்ளச்சூழ்நிலைகளைக் கண்காணிக்கலாம் மற்றும் அருகிலுள்ள நிலையங்களில் வெள்ள முன்னறிவிப்புகளைப் பெறலாம். இச்செயலியில் செயற்கைக்கோள் தரவு பகுப்பாய்வு மற்றும் கணித மாதிரிபோன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன.

10. ‘GAURAV’ என்ற நீள்நெடுக்கச் சறுக்கக்குண்டை (Long Range Glide Bomb) உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. HAL

ஈ. JAXA

  • இந்திய வான்படை Su-30 MK-I இலிருந்து நீள்நெடுக்கச் சறுக்கக்குண்டான (Long Range Glide Bomb), GAURAV இன் முதல் பறப்புச்சோதனையை DRDO வெற்றிகரமாக நடத்தியது. GAURAV என்பது 1,000 கிலோ எடைகொண்ட, வானிலிருந்து ஏவப்படும் சறுக்கக்குண்டு ஆகும்; இது தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் விமான ஓடுபாதைகள், பதுங்குக்குழிகள் மற்றும் கட்டிடங்களை அழிக்க வழக்கமான வெடியுளைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையமான இமாரத் நிறுவணத்தால் உருவாக்கப்பட்ட இது, சோதனையின்போது துல்லியத்துடன் இலக்கைத்தாக்கி முழுமையான தரவு போன்றவற்றை கைப்பற்றுகிறது.

11. அண்மையில், “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள்” என்ற அறிக்கையின் 25ஆவது பதிப்பை வெளியிட்ட அமைப்பை எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், “இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள்- 2023” அறிக்கையின் 25ஆவது இதழை வெளியிட்டது; இது பாலினம் தொடர்பான தரவுகளின் ஒரு விரிவான பார்வையை வழங்குகிறது.
  • 2036ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் மக்கள்தொகை 152.2 கோடியை எட்டும் என்றும் அதில் பெண்களின் சதவீதம் 48.8%ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாலின விகிதம் 943 (2011) இலிருந்து 952 (2036) ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உழைக்கும் வயது மக்கள்தொகை (15-59 வயது) 2036ஆம் ஆண்டில் 60.7% இலிருந்து 64.9%ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2031-36ஆம் ஆண்டில் ஆண்களின் ஆயுட்காலம் 71.2 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 74.7 ஆண்டுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12. கார்பெட் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. உத்தரகாண்ட்

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. ஒடிஸா

  • கார்பெட் புலிகள் காப்பகமானது உலக யானைகள் நாளை விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் கொண்டாடியது. இது உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது; இந்தக் காப்புப்பகுதி பௌரி, நைனிடால் மற்றும் அல்மோரா மாவட்டங்களில் பரவியுள்ளது. 1936இல் ஹெய்லி தேசியப்பூங்காவாக நிறுவப்பட்ட இது, 1957இல் இயற்கை ஆர்வலர் மற்றும் பாதுகாவலரான ஜிம் கார்பெட்டைக் கௌரவிப்பதற்காக மறுபெயரிடப்பட்டது.
  • தற்போது 1,288.31 சகிமீ என்ற பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தக் காப்பகம், பள்ளத்தாக்குகள் மற்றும் ராமகங்கை, பல்லேன் மற்றும் சோனாநதிபோன்ற ஆறுகள்கொண்ட அலையில்லாத நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பாபர் & கீழ் ஷிவாலிக் பகுதிகளில் பரவியுள்ள இது முக்கியமாக கற்பாறைகள் மற்றும் மணல் படிவுகளுடன்கூடிய நுண்ணிய பாதையால் வகைப்படுத்தப்படுகிறது.

1. Canine Distemper Disease is caused by which agent?

A. Fungi

B. Virus

C. Bacteria

D. Protozoa

  • Stray dogs near the Corbett Tiger Reserve in Uttarakhand will be vaccinated against the canine distemper virus (CDV). Canine distemper is a serious, contagious disease caused by canine distemper virus (CDV). The virus affects the respiratory, gastrointestinal, and nervous systems of dogs. Puppies under four months and unvaccinated dogs are particularly at risk. CDV can also infect ferrets and various other mammals, especially carnivores like foxes, wolves, raccoons, and skunks. Cats can be infected by CDV, but they are unlikely to become sick.

2. Kalinga Prize is related to which field?

A. Science

B. Agriculture

C. Finance

D. Politics

  • The Science and Technology Ministry has withdrawn support from the Kalinga Prize. The Kalinga Prize is UNESCO’s oldest award for popularizing science. It was established in 1951 with a donation from Odisha’s former Chief Minister Biju Patnaik. The prize honors individuals with notable careers in writing, editing, lecturing, or media production, who help explain science and technology to the public.

3. Recently, who has been appointed as Indian Ambassador to the United States?

A. Vijay Keshav

B. Vinay Mohan Kwatra

C. Vikrant Singh

D. Amandeep Singh

  • Vinay Mohan Kwatra assumed charge as India’s Ambassador to the United States, succeeding Taranjit Singh Sandhu. Kwatra expressed commitment to strengthening the US-India partnership. Sripriya Ranganathan, Deputy Ambassador, welcomed Kwatra to the US. Kwatra has 32 years of experience in this field.

4. Which organization recently published “Global Employment Trends (GET) for Youth 2024” report?

A. International Monetary Fund

B. World Bank

C. International Labour Organisation (ILO)

D. UNDP

  • The International Labour Organization released the “Global Employment Trends for Youth 2024” report, marking its 20th anniversary. The report highlights achievements, challenges, and future outlooks for youth employment.
  • In 2023, the global youth unemployment rate dropped to 13%, the lowest in 15 years, with 64.9 million unemployed youth, the lowest since 2000. 20.4% of youth were classified as NEET (Not in Employment, Education, or Training), showing broad labor market exclusion.

5. Recently, ‘Amrit Gyan Kosh’ and ‘Faculty Development’ portals were launched under which mission?

A. Mission Karmayogi

B. Samagra Shiksha

C. Atal Innovation Mission

D. None of the above

  • The Amrit Gyan Kosh and Faculty Development portals were recently launched under Mission Karmayogi. The Amrit Gyan Kosh portal provides a shared knowledge bank with India-centric case studies. The Faculty Development portal focuses on training practitioners and faculty to improve knowledge delivery to civil servants. Mission Karmayogi, launched in 2020, aims to build a competent civil service based on Indian values.

6. Mullaperiyar Dam is located in which state?

A. Kerala

B. Gujarat

C. Maharashtra

D. Odisha

  • There are concerns about the safety of the Mullaperiyar Dam, which may be at risk of collapsing. Built by the British across the River Periyar, its main purpose is to divert water to Tamil Nadu’s arid regions.
  • A 999-year lease gives Tamil Nadu operational rights, despite the dam being in Kerala. The dam helps with flood control and transforms land in Tamil Nadu into fertile areas. There is a long-standing dispute between Kerala and Tamil Nadu over the dam’s safety and water rights.

7. What is a ‘Collision Avoidance System (CAS)’?

A. A method for increasing train speed

B. A collection of technologies to help a vehicle avoid collisions with other vehicles or obstacles

C. A system for enhancing passenger comfort by improving the train’s aesthetics

D. A method of increasing train’s fuel efficiency

  • Recent train accidents in India emphasize the need for better collision avoidance systems. A collision avoidance system helps vehicles avoid collisions by using technology to detect and prevent obstacles. For trains, this means avoiding crashes with other trains or obstacles by monitoring their positions in real-time.

8. Recently, which Indian became the youngest para swimmer in the world to cross the English Channel?

A. Porbandar, Gujarat

B. Pokhran, Rajasthan

C. Visakhapatnam, Andhra Pradesh

D. Nagapattinam, Tamil Nadu

  • DRDO and the Indian Army successfully tested the Man Portable Anti-Tank Guided Missile (MPATGM) at Pokhran Field Firing Range. MPATGM is a shoulder-launched, portable missile system designed to target enemy tanks and armored vehicles. The system includes a launcher, target acquisition system, and fire control unit. It has advanced infrared homing sensors and integrated avionics, making it effective for day and night operations.

9. Which ministry recently released the ‘Flood Watch India 2.0 App,’ developed by the Central Water Commission (CWC)?

A. Ministry of Rural Development

B. Ministry of Agriculture

C. Ministry of Jal Shakti

D. Ministry of Urban Development

  • The Union Minister for Jal Shakti launched Version 2.0 of the ‘FloodWatch India’ mobile app by the Central Water Commission (CWC). The app provides real-time flood information and 7-day forecasts to the public in English and Hindi, with both readable and audio formats. Users can monitor flood situations across the country using real-time river flow data and get flood forecasts at nearby stations. The app includes advanced technologies like satellite data analysis and mathematical modeling.

10. Long Range Glide Bomb ‘GAURAV’ is developed by which organization?

A. DRDO

B. ISRO

C. HAL

D. JAXA

  • DRDO successfully conducted the first flight test of the Long-Range Glide Bomb (LRGB), GAURAV, from an Indian Air Force Su-30 MK-I. GAURAV is a 1,000 kg air-launched glide bomb designed to strike targets at long distances. It is equipped with conventional warheads to destroy enemy airstrips, bunkers, and buildings. Developed by the Research Centre Imarat (RCI) in Hyderabad, it hit the target with pinpoint accuracy during the test, with complete data captured.

11. Which ministry recently released ’25th Edition of Women and Men in India 2023′ report?

A. Ministry of Culture

B. Ministry of Statistics and Programme Implementation

C. Ministry of Home Affairs

D. Ministry of Women and Child Development

  • The Ministry of Statistics and Programme Implementation (MoSPI) released the 25th issue of the ‘Women and Men in India 2023’ report, offering a comprehensive view of gender-related data. By 2036, India’s population is expected to reach 152.2 crore, with the female percentage increasing to 48.8%. The sex ratio is projected to rise from 943 (2011) to 952 (2036). The working-age population (15-59 years) is expected to grow from 60.7% to 64.9% by 2036. Life expectancy is projected to improve to 71.2 years for males and 74.7 years for females by 2031-36.

12. Corbett Tiger Reserve is located in which state?

A. Tamil Nadu

B. Uttarakhand

C. Himachal Pradesh

D. Odisha

  • Corbett Tiger Reserve celebrated World Elephant Day with an awareness campaign. It is located in the foothills of the Himalayas in Uttarakhand, the reserve spans the districts of Pauri, Nainital, and Almora. Established in 1936 as Hailey National Park, it was renamed in 1957 to honor Jim Corbett, a naturalist and conservationist.
  • The reserve now covers 1,288.31 sq. km, featuring undulating terrain with valleys and rivers like Ramganga, Pallaen, and Sonanadi. It is mainly spread over the Bhabar and lower Shivalik regions, characterized by a porous tract with boulders and sand deposits.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!