TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 16th and 17th July 2024

1. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து 28ஆவது மலபார் கடற்படை பயிற்சியை வரும் அக்டோபரில் நடத்தவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. வங்காளதேசம்

ஈ. மியான்மர்

  • அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து வரும் அக்டோபர் மாதத்தில் 28ஆவது மலபார் கடற்படை பயிற்சியை இந்தியா நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சியானது, அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் பயிற்சி மற்றும் உத்திசார் கடற்படை நிகழ்வுகளில் கவனஞ்செலுத்தி, ராணுவ ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் உத்திசார் பங்கையும் பங்கேற்கும் நாடுகளிடையே கூட்டு பாதுகாப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

2. டிஜிட்டல் பாரத நிதி என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?

அ. நகர்ப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை அதிகரித்தல்

ஆ. தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு வலையமைப்புகளை மேம்படுத்துதல்

இ. பழங்குடியினர் பகுதிகளில் எண்மக்கல்வியறிவை மேம்படுத்துதல்

ஈ. வெள்ளஞ்சூழ் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குப் பள்ளிசார் உபகரணங்களை வழங்குதல்

  • கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பாரத நிதியைச் செயல்படுத்த தொலைத்தொடர்புத்துறை வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. தொலைத்தொடர்பு இயக்கிகளின் வருவாயில் 5% அனைத்து சேவைகள் வரியைப் பயன்படுத்தி தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட Universal Service Obligation Fund (USOF) திட்டத்துக்கு மாற்றாக டிஜிட்டல் பாரத நிதி இருக்கும். தொலைத்தொடர்புச் சட்டம், 2023இன்கீழ் நிறுவப்பட்ட டிஜிட்டல் பாரத நிதி, தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யாத, பின்தங்கிய பகுதிகளில் வலையமைப்புகளை விரிவுபடுத்த எண்ணுகிறது.

3. அண்மையில், கீழ்க்காணும் யாருக்கு பிரான்ஸின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, ‘செவாலியே’ (Knight of the Legion of Honour) வழங்கப்பட்டது?

அ. கொப்பு சதாசிவ மூர்த்தி

ஆ. ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா

இ. புஷ்ப் குமார் ஜோஷி

ஈ. அலோக் ஓரி

  • HCLTechஇன் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, வர்த்தகம் மற்றும் நிலைத்தன்மைக்காகவும் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ததற்காகவும் பிரான்ஸின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, ‘செவாலியே’ வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவரால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. பன்னாட்டு வணிகம் மற்றும் செயல்திறமை மிக்க அவரது விதிவிலக்கான தலைமை மற்றும் செல்வாக்கை அங்கீகரித்து அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

4. ஏரியன் 6 ஏவுகணையை உருவாக்கிய விண்வெளி நிறுவனம் எது?

அ. ISRO

ஆ. NASA

இ. ESA

ஈ. JAXA

  • ஐரோப்பாவின் ஏரியன் 6 ஏவுகணை நான்காண்டு தாமதத்திற்குப் பிறகு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஐரோப்பிய விண்வெளி முகமை மற்றும் ஏரியன்ஸ்பேஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த, கனரக ஏவுகலம், திரவ மற்றும் திட உந்து இயந்திரங்கள் என இரண்டையும் பயன்படுத்தி வணிக மற்றும் அரசாங்க பணிகளுக்கு செலவுகுறைந்த மற்றும் நெகிழ்வான தீர்வை வழங்குகிறது. பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டு 1975இல் நிறுவப்பட்ட ESA, உறுப்புநாடுகளிடையே விண்வெளி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் பன்னாட்டு விண்வெளி நிலையம் மற்றும் ரொசெட்டா பணிபோன்ற திட்டங்களில் ஒத்துழைக்கிறது.

5. ‘இ-ஸ்வஸ்திய தாம்’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. யாத்ரீகர்களுக்கான தங்குமிடத்தை முன்பதிவு செய்தல்

. நாற்பெருந்தல யாத்ரீகர்களின் சுகாதார அளவுருக்களை கண்காணித்தல்

இ. யாத்ரீகர்களுக்கு பயண வழிகாட்டிகளை வழங்குதல்

ஈ. யாத்திரை சேவைகளுக்கான கட்டணத்தை எளிதாக்குதல்

  • இ-ஸ்வஸ்திய தாம் தளத்துடன் இப்போது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்ட மத்திய துறை திட்டமாகும். இது ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உத்தராகண்ட் மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இ-ஸ்வஸ்திய தாம் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளத்தின்மூலம் சார் தாம் யாத்ரீகர்கள் 14 இலக்கம் கொண்ட ஆயுஷ்மான் சுகாதார எண்ணை உருவாக்கலாம். இந்த நடவடிக்கை, நாற் பெருந்தல (சார் தாம்) யாத்திரை என்று அழைக்கப்படும் யமுனோத்ரி (யமுனை தேவி), கங்கோத்ரி (கங்கை தேவி), கேதார்நாத் (சிவபெருமான்), பத்ரிநாத் (திருமால்) ஆகிய இடங்களுக்குச் செல்லும் புனிதப்பயணிகளின் சுமூகமான பயணத்தை உறுதிசெய்கிறது.

6. உலகின் மிகப்பெரிய இராமாயண திருக்கோவில் கட்டப்படும் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. பீகார்

இ. கேரளா

ஈ. இமாச்சல பிரதேசம்

  • பீகார் மாநிலம் கிழக்குச் சம்பரானில் உலகின் மிகப்பெரிய இராமாயண திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது அயோத்தியில் உள்ள இராமர் திருக்கோவிலைவிட மும்மடங்கு பெரியதாகவும், கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டைவிட உயரமானதாகவும் இருக்கும். இக்கோவிலில் மாமல்லபுரத்திலிருந்து கருங்கல்லால் செய்யப்பட்ட 33 அடி உயர சிவலிங்கமும், இராமாயண காலத்தின் முக்கிய தெய்வங்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இருபத்திரண்டு சிறிய திருக்கோவில்களும் இடம்பெறும். இந்தியா மற்றும் கம்போடியாவில் உள்ள குறிப்பிடத்தக்க கோவில்களில் இருந்து பெறப்பட்ட கட்டிடக்கலை பாணியுடன், இக்கோவிலின் விமானம் 270 அடி உயரத்திற்கு அமைக்கப்படும்.

7. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக மலாலா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.12

ஆ. ஜூலை.13

இ. ஜூலை.14

ஈ. ஜூலை.15

  • மலாலா யூசுப்சாய் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக வாதிட்டதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.12ஆம் தேதியன்று உலக மலாலா நாள் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானில் 1997 ஜூலை.12இல் பிறந்த மலாலா யூசுப்சாய், 2012இல் தலிபான் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார்.
  • உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற அவர், தனது 16ஆவது பிறந்தநாளில் ஐநாவில் பேசினார். 2013இல் TIME இதழின் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்ட அவர், அமைதிக்கான நோபல் பரிசை கடந்த 2014 ஆம் ஆண்டில் வென்றார். அவர் பர்மிங்காமிலிருந்து தனது கல்வி மற்றும் செயல்பாடுகளைத் தொடர்கிறார்.

8. அண்மையில், இத்தாலியில் நடந்த ஷாட்கன் ஜூனியர் உலகக்கோப்பையில் வெண்கலப்பதக்கம் வென்றவர் யார்?

அ. மனு பாக்கர்

ஆ. அஞ்சலி பகவத்

இ. சபீரா ஹரீஸ்

ஈ. நந்திதா தாஸ்

  • இத்தாலியில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலகக்கோப்பையில் பெண்கள் டிராப் போட்டியில் இந்தியாவின் சபீரா ஹரிஸ் 40 இலக்குகளில் 29 இலக்குகளை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். அமெரிக்காவின் கேரி கேரிசன் 50 இலக்குகளில் 40 இலக்குகளை எறிந்து தங்கப்பதக்கமும், இத்தாலியின் சோபியா கோரி 39 இலக்குகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் பவ்யா திரிபாதி மற்றும் இராஜ்குவார் இங்கிள் முறையே 26 மற்றும் 33ஆவது இடம்பிடித்தனர்.

9. அண்மையில், நாட்டின் கரிமிகா எரிசக்தித் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவிற்கு $1.5 பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ள அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. IMF

இ. ADB

ஈ. NATO

  • 2023ஆம் ஆண்டில் பெறப்பட்ட இதேபோன்ற ஒரு கடனைத் தொடர்ந்து, கரிமிகா எரிசக்தித் துறையை (low-carbon energy) மேம்படுத்துவதற்காக, இந்தியாவிற்கு $1.5 பில்லியன் டாலர் அளவுக்குக் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்தது. கரிமிகா எரிசக்தித் துறையில் ஹைட்ரஜன் (H) மற்றும் உயிரி எரிபொருள்கள் போன்ற எரிபொருட்கள் அடங்கும்; இவை புதைபடிவ எரிபொருட்களைவிடவும் குறைவான கரியை வெளியிடுகின்றன.
  • ஹைட்ரஜன் உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தும் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்போன்ற முன்னெடுப்புகளின் துணையோடு 2070ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய கரிம உமிழ்வை அடைவதற்கு இந்தியா நோக்கம் கொண்டுள்ளது.

10. அண்மையில் பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த ஜிம்மி ஆண்டர்சன் சார்ந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. தென்னாப்பிரிக்கா

இ. இங்கிலாந்து

ஈ. அயர்லாந்து

  • கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 2024 ஜூலை.12 அன்று லார்ட்ஸில் மேற்கிந்தியத் தீவு அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 114 இரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்த பிறகு பன்னாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், 2002-03இல் அறிமுகமாகி, 188 டெஸ்ட் போட்டிகளில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக ஓய்வுபெற்றார். 21 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்வை உடைய அவர், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் ஆவார்.

11. முன்பு, Indian Regional Navigation Satellite System (IRNSS) என அறியப்பட்ட NavICஐ உருவாக்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. HAL

ஈ. BHEL

  • ISROஆல் உருவாக்கப்பட்ட இந்திய வழிசெலுத்தல் அமைப்பான NavIC-க்கான பெறுநர் சில்லை (receiver chip) உருவாக்கும் பணியை பெங்களூரு நிறுவனத்திற்கு DRDO வழங்கியுள்ளது. இந்திய பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான ‘NavIC’, ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளது. இது இந்தியா முழுவதும் துல்லியமான புவி நில்லிட நிலை மற்றும் நேரத்தகவலை வழங்குகிறது. புவியிலிருந்து 1,500 கிமீ தொலைவில் இது உள்ளது. குடிமக்கள் மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டிற்கான சேவைகளை வழங்கும் இது, இந்தியாவில் 10 மீட்டருக்கும் அதிகமான துல்லியத்துடன் தகவல்களை வழங்குகிறது. NavICஇன் சமிக்ஞைகள் GPS, Glonass, Galileo மற்றும் BeiDou போன்ற பிற உலகளாவிய வழிசெலுத்தல் அமைப்புகளுடன் இணக்கமாக உள்ளன.

12. அண்மையில், விவசாயத்தில் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக `750 கோடி மதிப்பில், ‘Agri SURE’ நிதியத்தை அறிவித்து உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. NABARD

ஆ. ICAR

இ. NITI ஆயோக்

ஈ. விவசாய அமைச்சகம்

  • விவசாயத்தில் புத்தொழில்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை ஆதரிப்பதற்காக NABARD அண்மையில் Agri-SURE நிதியத்தை அறிவித்தது. NABARD, வேளாண் அமைச்சகம் மற்றும் பிற நிறுவனங்களின் பங்களிப்புடன் `750 கோடி நிதியில், தலா `25 கோடி முதலீடுகளுடன் 85 வேளாண் புத்தொழில்கள் இதன்மூலம் ஆதரிக்கப்படும். Agri-SURE ஆனது புதுமை, தொழில்நுட்பம், மதிப்புச்சங்கிலியை மேம்படுத்தல், கிராமப்புற இணைப்புகளை உருவாக்கல், வேலைவாய்ப்பை உருவாக்கல் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறது. NABVENTURES இதற்கான நிதியை நிர்வகிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து காலிழப்புகளை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த பாதம் பாதுகாப்போம் திட்டம் `26.62 கோடி செலவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என நடப்பாண்டு மக்கள் நல்வாழ்வுத்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்புக்கு ஏற்ப ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்படி, 8,000 மருத்துவர்கள், 19,175 மருத்துவப் பணியாளர்களைக்கொண்டு மொத்தமாக 28,000 பேருக்கு பயிற்றுவிக்கும் அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பாத பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனை மையங்கள் தமிழ்நாட்டிலுள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

2. இந்தியாவில் ஒரு தடுப்பூசிகூட செலுத்தாத நிலையில் 16 இலட்சம் குழந்தைகள்.

இந்தியாவில் 2023இல் சுமார் 16 இலட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் UNICEF இணைந்து வெளியிட்ட தரவுகளின்மூலம் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. 8 சார்க் (SAARC) கூட்டமைப்பு நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டின் தடுப்பூசி அட்டவணையைப் பொறுத்து, 9-12 மாதங்களில் செலுத்தப்படும் ‘எம்சிவி1’ தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்திய குழந்தைகளின் விகிதம் 93%ஆகக் குறைந்துள்ளது.

3. வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள்: முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

கைத்தறித்துறையில் சிறந்து விளங்குவோருக்கான ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருதை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். தஞ்சாவூர் கே.பி.உமாபதி, நெல்லை சா.ராஜகோபால், திருவண்ணாமலை சி. முத்துசுவாமி ஆச்சாரி, தஞ்சை ப.சுலைகாள் பீவி, கன்னியாகுமரி செ.தங்கஜோதி ஆகியோருக்கு, ‘வாழும் கைவினைப்பொக்கிஷம்’ விருதுக்கான தலா `1,00,000 காசோலை, 8 கி தங்கம், தாமிரப்பத்திரம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதேபோன்று, தலா `50,000 பரிசுத்தொகை, 4 கி தங்கம், தாமிரப்பத்திரம், தகுதிச்சான்றை உள்ளடக்கிய பூம்புகார் மாநில விருதுகள், தஞ்சாவூர் சி.ரவி, ச.நாகலட்சுமி, ம.முருகேசன், இரா.லோகநாதன், புதுக்கோட்டை மா.இராஜப்பா, கன்னியாகுமரி ந.பூவம்மாள், செ.லில்லிமேரி, செங்கல்பட்டு ப.வரதன், மு.ராஜரத்தினம், கள்ளக்குறிச்சி ரா.சக்திவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

4. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர்.மகாதேவன், கோடீஸ்வர் சிங் நியமனம்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். மணிப்பூரைச் சேர்ந்தவரான என்.கோடீஸ்வர் சிங், அந்த மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் இவ்விருவரின் பெயரையும் பரிந்துரைத்தது. இந்நிலையில், இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

முழு பலத்தை எட்டும் உச்சநீதிமன்றம்:

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 32 நீதிபதிகள் உள்ளனர். மேற்கண்ட இருவரும் பதவியேற்கும்போது, இந்திய உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தையும் எட்டும்.

1. Which country will host the 28th Malabar naval exercise in October, in collaboration with the United States, Japan, and Australia?

A. India

B. China

C. Bangladesh

D. Myanmar

  • India will host the 28th Malabar naval exercise in October, partnering with the United States, Japan, and Australia. The exercise aims to enhance military coordination and interoperability, focusing on advanced anti-submarine warfare and strategic naval maneuvers. It highlights India’s strategic role in the Indo-Pacific region, emphasizing the importance of collaborative defense efforts among these nations.

2. What is the primary objective of Digital Bharat Nidhi (DBN) initiative?

A. Increasing telecom services in urban areas

B. Enhancing telecom networks in remote and rural areas

C. Enhancing digital literacy in tribal areas

D. Providing school kit to children in flood prone areas

  • The Department of Telecommunications has proposed draft rules to implement the Digital Bharat Nidhi (DBN), aiming to enhance telecom connectivity in rural areas. The DBN will replace the Universal Service Obligation Fund (USOF), which was created to provide affordable telecom services in remote regions using a 5% Universal Service Levy on telecom operators’ revenue. Established under the Telecommunications Act, 2023, the DBN seeks to expand networks in underserved areas where private companies may not invest.

3. Recently, who has been conferred with the “Chevalier de la Légion d’Honneur” (Knight of the Legion of Honour), the highest civilian award of France?

A. Koppu Sadashiva Murthy

B. Roshni Nadar Malhotra

C. Pushp Kumar Joshi

D. Alok Ohrie

  • Roshni Nadar Malhotra, Chairperson of HCLTech, was awarded France’s highest civilian honor, the “Chevalier de la Legion d’Honneur,” for her significant contributions to business and sustainability, as well as enhancing economic relations between France and India. The honor was presented by the French Ambassador to India, acknowledging her exceptional leadership and influence in international business and diplomacy.

4. Ariane 6 rocket was developed by which space agency?

A. ISRO

B. NASA

C. ESA

D. JAXA

  • Europe’s Ariane 6 rocket successfully launched satellites into orbit after a four-year delay. Developed by the European Space Agency (ESA) and Arianespace, this heavy-lift launch vehicle offers a cost-effective and flexible solution for commercial and government missions, utilizing both liquid and solid propellant engines. The ESA, established in 1975 and headquartered in Paris, coordinates space activities among member states and collaborates on projects like the International Space Station and the Rosetta mission.

5. What is the primary objective of the ‘eSwasthya Dham portal’?

A. To book accommodation for pilgrims

B. To monitor the health parameters of Char Dham Yatra pilgrims

C. To provide travel guides for pilgrims

D. To facilitate payment for pilgrimage services

  • The eSwasthya Dham portal, integrated with the Ayushman Bharat Digital Mission (ABDM), monitors the health parameters of pilgrims undertaking the Char Dham Yatra, which includes Yamunotri, Gangotri, Kedarnath, and Badrinath. This initiative ensures a smooth pilgrimage experience, allowing pilgrims to create a 14-digit Ayushman Bharat Health Account number. Each site holds religious significance: Yamunotri is dedicated to Goddess Yamuna, Gangotri to Goddess Ganga, Kedarnath to Lord Shiva, and Badrinath to Lord Vishnu.

6. Where is the world’s largest Ramayan temple being constructed?

A. Tamil Nadu

B. Bihar

C. Kerala

D. Himachal Pradesh

  • The world’s largest Ramayan temple is being built in East Champaran, Bihar. It will be three times larger than the Ram Temple in Ayodhya and taller than Angkor Wat in Cambodia. The temple features a 33-foot tall shivling, made of black granite from Mamallapuram, and includes 22 smaller temples dedicated to key deities from the Ramayana. The main shikhar rises to 270 feet, with architectural inspiration drawn from notable temples in India and Cambodia.

7. Which day is observed as ‘World Malala’ Day every year?

A. July.12

B. July.13

C. July.14

D. July.15

  • World Malala Day, celebrated on July 12th, honors Malala Yousafzai’s advocacy for women’s and children’s rights. Born on July 12, 1997, in Pakistan, Malala survived a Taliban assassination attempt in 2012. She gained global recognition, speaking at the UN on her 16th birthday, being named one of TIME’s most influential people in 2013, and winning the Nobel Peace Prize in 2014. She continues her education and activism from Birmingham.

8. Recently, who won the bronze medal in the Shotgun Junior World Cup in Italy?

A. Manu Bhaker

B. Anjali Bhagwat

C. Sabeera Haris

D. Nandita Das

  • India’s Sabeera Haris won the bronze medal in the women’s trap event at the ISSF Junior World Cup in Italy, shooting 29 out of 40 targets. Carey Garrison of the US took gold with 40 out of 50 targets, and Italy’s Sofia Gori earned silver with 39 hits. Indian shooters Bhavya Tripathi and Rajkuwar Ingle finished 26th and 33rd, respectively.

9. Recently, which organization has approved $1.5 billion loan to India to develop the country’s low-carbon energy sector?

A. World Bank

B. IMF

C. ADB

D. NATO

  • The World Bank approved a $1.5 billion loan to India for developing its low-carbon energy sector, following a similar loan in 2023. The low-carbon energy sector includes fuels like hydrogen and biofuels, which emit less carbon than fossil fuels. India aims for net-zero carbon emissions by 2070, supported by initiatives like the National Green Hydrogen Mission, which uses renewable energy for hydrogen production.

10. Jimmy Anderson, who recently announced his retirement from international cricket, belongs to which country?

A. Australia

B. South Africa

C. England

D. Ireland

  • James Anderson, one of cricket’s greats, retired from international cricket on July 12, 2024, after England defeated the West Indies by an innings and 114 runs at Lord’s. Anderson, a right-arm fast bowler, debuted in 2002-03 and retired as the highest wicket-taker among fast bowlers with 704 wickets in 188 Test matches. He played 21 years, becoming the second-most capped Test player after Sachin Tendulkar.

11. NavIC, formerly known as the Indian Regional Navigation Satellite System (IRNSS), developed by which organization?

A. ISRO

B. DRDO

C. HAL

D. BHEL

  • The DRDO has tasked a Bengaluru firm with developing a receiver chip for the Indian navigation system NavIC, created by ISRO. NavIC, the Indian Regional Navigation Satellite System, consists of seven satellites providing precise positioning and timing information across India and 1,500 km beyond. It offers services for civilian and defense use, with accuracy better than 10 meters in India. NavIC signals are compatible with other global navigation systems like GPS, Glonass, Galileo, and BeiDou.

12. Recently, which organization announced Rs 750 crore ‘Agri SURE’ fund to promote innovation in agriculture?

A. NABARD

B. ICAR

C. NITI Aayog

D. Ministry of Agriculture

  • NABARD recently announced the Agri-SURE fund to support start-ups and rural enterprises in agriculture. The ₹750 crore fund, with contributions from NABARD, the Ministry of Agriculture, and other institutions, will back 85 agri start-ups with investments up to ₹25 crore each. Agri-SURE focuses on innovation, technology, enhancing the value chain, creating rural linkages, generating employment, and supporting Farmers Producer Organisations. NABVENTURES will manage the fund.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!