Tnpsc Current Affairs in Tamil & English – 16th 17th and 18th September 2024
1. அண்மையில், “Montreal Protocol: Advancing Climate Action” என்ற தலைப்பிலான உரையாடலை ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?
அ. புவி அறிவியல் அமைச்சகம்
ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம்
இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
ஈ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
- 30ஆவது உலக ஓசோன் நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம் ஓர் உரையாடலை நடத்தியது. “மாண்ட்ரீல் நெறிமுறை: தட்பவெப்பநிலை செயல்பாட்டை மேம்படுத்துதல்” என்பது இதன் கருப்பொருளாகும். மாண்ட்ரீல் புரோட்டோகால் என்பது ஓசோன்-அழிப்புப் பொருட்களைக் குறைப்பதன்மூலம் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாகும். கூட்டு முயற்சிகளின் காரணமாக இந்தியா அதன் மாண்ட்ரீல் நெறிமுறைக்கடமைகளை நிறைவேற்றுவதில் வெற்றிபெற்றுள்ளதாகக் கூறினார். ஐநா வளர்ச்சித் திட்டத்தின் இந்தியாவின் வதிவிடப் பிரதிநிதி ஏஞ்சலா லூசிகி, ஹைட்ரோபுளோரோகார்பன்களைக் குறைப்பதில் இந்தியாவின் தலைமையைப் பாராட்டினார். உலக ஓசோன் நாள் செப்.16 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2. பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்காக அண்மையில், “ஜன் சன்வாய்” என்ற இணைய நுழைவைத் தொடங்கிய அமைச்சகம் எது?
அ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
ஆ. மின்சார அமைச்சகம்
இ. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது வர்த்தகத்துறையின் இணைய நுழைவான, ‘ஜன் சன்வாய்’ஐ தொடங்கியது. வணிகம் மற்றும் தொழில்துறை சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதற்கு நேரடி மற்றும் வெளிப்படையான வழியை வழங்குவதன்மூலம் பங்குதாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவதை இந்த இணைய நுழைவு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மக்கள் இணையம்மூலம் குறைகளை பதிவுசெய்ய அனுமதிக்கிறது. வணிகம் மற்றும் வணிகத்துறைகளை மேம்படுத்துவதற்கு இது உதவும்.
3. அண்மையில், BRICS புதிய வளர்ச்சி வங்கியில் புதிய உறுப்பினரான நாடு எது?
அ. அல்ஜீரியா
ஆ. பெரு
இ. சிங்கப்பூர்
ஈ. கம்போடியா
- அண்மையில் அல்ஜீரியா BRICS புதிய வளர்ச்சி வங்கியின் புதிய உறுப்பினராகி, 2024 செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக உறுப்பினர் தகுதியைப் பெற்றது. அல்ஜீரியாவுக்கு முன், வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், உருகுவே மற்றும் எகிப்துபோன்ற நாடுகளும் புதிய வளர்ச்சி வங்கியில் இணைந்தன. புதிய வளர்ச்சி வங்கி என்பது BRICS நாடுகளால் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நிறுவப்பட்ட பலதரப்பு மேம்பாட்டு வங்கியாகும்.
4. இருளர்கள் முதன்மையாக வசிக்கின்ற மாநிலங்கள் எவை?
அ. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா
ஆ. ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒடிஸா
இ. மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் இராஜஸ்தான்
ஈ. ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார்
- சென்னை அருகே இருளர்களால் நடத்தப்படும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் நிச்சயமற்ற எதிர் காலத்தை எதிர்கொள்கிறது. இருளர்கள் இந்தியாவின் பழமையான பழங்குடி சமூகங்களில் ஒன்றாவர்; அவர்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகத்தில் முதன்மையாக வாழ்கின்ற அவர்கள், தமிழ் மற்றும் கன்னட மொழியுடன் தொடர்புடைய இருளர் மொழியைப் பேசுகிறார்கள். இருளர்கள் நாகப்பாம்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய தெய்வமான கன்னியம்மாவை வழிபடுகிற தெய்வீகவாதிகள். பாரம்பரியமாக வேட்டையாடுதல், மூலிகை மருத்துவம் மற்றும் பாம்பு பிடிப்பதில் திறமையான அவர்கள் பாம்புகள் மீட்பு மற்றும் நஞ்சை முறிப்பதில் நிபுணர்கள். இந்தியாவில் பாம்பு நஞ்சுமுறிவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் 80% நஞ்சை அவர்களின் கூட்டுறவே வழங்குகிறது.
5. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயருக்கு சூட்ட முன்மொழியப்பட்டுள்ள புதிய பெயர் என்ன?
அ. கேசரி
ஆ. ஸ்ரீ விஜயபுரம்
இ. சமுத்திரம்
ஈ. இராஜராஜன் திடல்
- போர்ட் பிளேரின் பெயர், ‘ஸ்ரீ விஜயபுரம்’ என மாற்றப்படவுள்ளதாக நடுவண் உள்துறை அமைச்சர் அறிவித்தார். அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயருக்கு கடற்படை அதிகாரி ஆர்க்கிபால்ட் பிளேரின் பெயர் சூட்டப்பட்டது. இது தெற்கு அந்தமான் தீவின் கிழக்குக்கடற்கரையில் அமைந்துள்ளது மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதல் கொடியேற்ற நிகழ்வைக் கண்டது. வரலாற்று ரீதியாக, அந்தமான் தீவுகள் சோழப்பேரரசர்-I இராஜேந்திரனால் ஸ்ரீவிஜயத்தை (இன்றைய இந்தோனேசியா) தாக்குதற்கு கடற்படை தளமாக பயன்படுத்தப்பட்டது. சோழர்கள் இத்தீவுகளை “மா-நக்கவரம்” என அழைத்தனர்; இது நிக்கோபார் என்ற பெயரை ஏற்படுத்தியிருக்கலாம்.
6. சமீபத்தில், தொழில்துறை பயிற்சி நிறுவன (ITI) மாணாக்கருக்காக யூடியூப் அலைவரிசையைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?
அ. இந்திய இதழியல் மற்றும் புத்தூடக நிறுவனம்
ஆ. தேசிய போதனை ஊடக நிறுவனம்
இ. இந்திய மக்கள் தொடர்பு நிறுவனம்
ஈ. சிம்பயோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மீடியா அண்ட் கம்யூனிகேஷன்
- தேசிய போதனை ஊடக நிறுவனம் (NIMI) தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ITI) மாணாக்கருக்காக யூடியூப் அலை வரிசைகளை தொடங்கியுள்ளது. 1986இல் மத்திய கல்வி ஊடக நிறுவனமாக (CIMI) நிறுவப்பட்ட NIMI, தற்போது திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக உள்ளது. இது பயிற்சி ஊடக தொகுப்புகள் (IMP), டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கான மதிப்பீட்டுக் கருவிகளை உருவாக்குகிறது. யூடியூப் சேனல்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட ஒன்பது மொழிகளில் உயர்தர பயிற்சி காணொலிகளை வழங்குகின்றன. உள்ளடக்கத்தில் பயிற்சிகள், திறன் விளக்கங்கள் மற்றும் கோட்பாட்டு பாடங்கள் உள்ளன. இம்முயற்சி தேசிய திறன் மேம்பாட்டியக்கம் மற்றும் புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றை ஆதரிக்கிறது.
7. ‘Onitis bordati’ என்பது சார்ந்த இனம் எது?
அ. சாண வண்டு
ஆ. சிலந்தி
இ. தவளை
ஈ. மீன்
- மேகாலயாவின் நோங்க்ஹில்லம் வனவிலங்கு சரணாலயத்தில், ‘Onitis bordati’ என்ற புதிய சாண வண்டு இனம் கண்டுபிடிக்கப்பட்டது. ‘Onitis’ வகையைச் சார்ந்த இந்த வண்டு, அதன் குடைவு நடத்தைக்குப் பெயர்பெற்றதாகும். ஆண் வண்டுகளுக்கு நீண்ட, மெல்லிய, வளைந்த முன்னங்கால்கள் பற்கள் அல்லது முதுகெலும்புடன் இருக்கும்.
- முன்னதாக, வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் இதேபோன்ற இனங்கள் காணப்பட்டன. விதைப்பரவல், ஊட்டச்சத்து சுழற்சி, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதில் சாண வண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்விட அழிவு மற்றும் தட்பவெப்பநிலை மாற்றத்தால் இவ்வுயிரினங்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. நோங்க்ஹில்லம் வனவிலங்கு சரணாலயமானது மேகாலயா பீடபூமியில் அமைந்துள்ள கிழக்கு இமயமலை பல்லுயிர் பெருக்கத்தில் அமைந்துள்ளது.
8. நீர்மின் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தின் மொத்த செலவீடு என்ன?
அ. ரூ.10,000 கோடி
ஆ. ரூ.12,461 கோடி
இ. ரூ.15,000 கோடி
ஈ. ரூ.16,641 கோடி
- பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், `12,461 கோடி மொத்த ஒதுக்கீட்டில், நீர்மின் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஆதரவு திட்டத்தை மாற்றியமைப்பதற் -கான மின்சார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 2024-25 நிதியாண்டு முதல் 2031-32 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்.
- இது மின் தொடரமைப்பு வடங்கள், துணை மின்நிலையங்கள், கயிற்றுப்பாதை, ரெயில்வே பக்க அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கான செலவுகளை உள்ளடக்கியது. 2024-25 நிதியாண்டு முதல் 2031-32 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும் சுமார் 31,350 MW ஒட்டுமொத்த உற்பத்தித் திறனுக்காக, இந்தத் திட்டத்தில் மொத்தம் `12,461 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. ‘ஜோராவர் பீரங்கிகளை’ உருவாக்கிய அமைப்பு எது?
அ. DRDO
ஆ. ISRO
இ. HAL
ஈ. BHEL
- DRDO ‘ஜோராவர்’ பீரங்கிகளுக்கான சோதனையின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. இந்தப் பீரங்கிகள் உயரமான பகுதிகளில் இந்திய இராணுவத்தின் திறன்களை உயர்த்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. DRDO மற்றும் L&T இணைந்து உருவாக்கிய இதற்கு, ஜெனரல் ஜோராவர் சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘ஜோராவர்’ டாங்கிகள் சிறந்த சூழ்நிலை விழிப்புணர்வுக்காக டிரோன்கள் மற்றும் போர் மேலாண்மை அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. அவை மலைப்பகுதிகளில் விரைவாகப் பயன்படுத்துதற்கும் சூழ்ச்சித்திறனுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
10. அண்மையில், 2024 – BRICS இலக்கிய மன்றம் நடைபெற்ற இடம் எது?
அ. பிரேசிலியா, பிரேசில்
ஆ. கசான், ரஷ்யா
இ. ஷாங்காய், சீனா
ஈ. கோயம்புத்தூர், இந்தியா
- 2024 – BRICS இலக்கிய மன்றம் அண்மையில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. “World Literature in the New Reality: Dialogue of Traditions, National Values, and Cultures” என்பது இந்த மன்றத்தின் கருப்பொருளாகும். BRICS நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு குழுமினர். சமுதாயத்தில் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை இம்முழு அமர்வு வலியுறுத்தியது. “இந்திய எழுத்தாளர்களை சந்திக்கவும்” என்ற அமர்வு “வோல்கா முதல் கங்கை வரை”, ஆறுசார்ந்த கலாச்சாரங்கள் பன்முக கலாச்சாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை ஆராய்ந்தது.
11. அண்மையில், தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு நடத்தப்பட்ட இடம் எது?
அ. சென்னை
ஆ. மதுரை
இ. புது தில்லி
ஈ. கோழிக்கோடு
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் 2024 – தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். பன்னாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதைத் தடுப்பது உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்த விரிவான உத்தி முன்மொழியப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக NIA மற்றும் மாநில ATSகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2047ஆம் ஆண்டிற்குள் வளமான மற்றும் வளர்ந்த இந்தியாவை நோக்கிச் செயல்பட மாநில DGPகள் ஊக்குவிக்கப்பட்டனர்.
12. அண்மையில், “உலகளாவிய சைபர் செக்யூரிட்டி குறியீடு – 2024”ஐ வெளியிட்ட அமைப்பு எது?
அ. பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU)
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி
இ. உலக வங்கி
ஈ. IMF
- பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) வெளியிட்ட உலகளாவிய சைபர் செக்யூரிட்டி குறியீடு – 2024இல் இந்தியா அடுக்கு-1க்கு முன்னேறியுள்ளது. இந்தச் சாதனை, இணையப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பையும் அதன் நேர்மறையான தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது. உலகளாவிய சைபர் செக்யூரிட்டி குறியீடு அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகளவில் சைபர் பாதுகாப்பிற்கு நாடுகள் எவ்வாறு உறுதியளிக்கின்றன என்பதை அளவிடுகிறது.
13. குமரநல்லூர் தேவி திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. ஆந்திர பிரதேசம்
- கேரள மாநிலம் கோட்டயத்தில் அமைந்துள்ள குமரநல்லூர் தேவி திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 10ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சேரமான் பெருமாளின் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் தனது கட்டிடக்கலையில் அரிய ‘ஸ்ரீ சக்கரம்’ பாணியைக் கொண்டுள்ளது. அதன் சுவரோவியங்கள், 14 பிரிவுகளில் பரவி, கார்த்யாயனி தேவியின் உருவத்தில் தொடங்கி ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காட்சிகளை சித்தரிக்கின்றன.
14. சாம்ரான்-1 என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
அ. இஸ்ரேல்
ஆ. ஈரான்
இ. சீனா
ஈ. இந்தியா
- அண்மையில் ஈரான் தனது ஆராய்ச்சி செயற்கைக்கோளான சாம்ரான்-1ஐ விண்ணில் செலுத்தியது. தனியார் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு துணை நிறுவனங்களுடன் இணைந்து ஈரானிய நாட்டுப் பொறியாளர்களால் இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. கேம்-100 விண்வெளி ஏவூர்தியைப் பயன்படுத்தி பூமியிலிருந்து 550 கிமீ உயரத்தில் இது நிலைநிறுத்தப்பட்டது. ஈரானின் முதல் முந்நிலை திட-எரிபொருள் ஏவுகலாமான Ghaem-100, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் (IRGC) தயாரிக்கப்பட்டதாகும். 60 கிகி எடைகொண்ட சாம்ரான்-1 ஆனது முதன்மையாக சுற்றுப்பாதை தொழில்நுட்பத்தை சோதிக்கிறது.
15. அண்மையில், 3ஆவது INDUS-X உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. ரஷ்யா
ஆ. அமெரிக்கா
இ. ஆஸ்திரேலியா
ஈ. ஐக்கிய இராச்சியம்
- இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை மேம்படுத்துகிற 3ஆவது INDUS-X உச்சிமாநாடு அமெரிக்காவில் நிறைவடைந்தது. இது 2023இல் இந்தியப்பிரதமரின் அமெரிக்காவுக்கான அரச பயணத்தின்போது தொடங்கப்பட்டது. இருநாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையே உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இதன் குறிக்கோள். இது iDEX (இந்தியா) மற்றும் DIU (அமெரிக்கா) ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது.
16. யாகி புயலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்குவதற்காக அண்மையில் இந்தியா தொடங்கிய நடவடிக்கையின் பெயர் என்ன?
அ. ஆபரேஷன் விகாஸ்
ஆ. ஆபரேஷன் சத்பவ்
இ. ஆபரேஷன் வீர்
ஈ. ஆபரேஷன் காவேரி
- யாகி புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்குவதற்காக இந்தியா ‘ஆபரேஷன் சத்பவ்’ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த ஆண்டு ஆசியாவின் மிகசக்திவாய்ந்த புயல் காரணமாக இந்த நாடுகள் பெருவெள்ளத்தை எதிர்கொண்டன. உலர் உணவுகள், உடைகள் மற்றும் மருந்துகள்கொண்ட INS சத்புரா மூலம் மியான்மருக்கு இந்தியா பத்து டன் உதவிகளை அனுப்பியது. ஒரு இராணுவ விமானம் வியட்நாமுக்கு 35 டன் மற்றும் லாவோஸுக்கு பத்து டன் உதவிகளை வழங்கியது.
17. அண்மையில், தொழில்முனைவோருக்கு விரிவான ஆதரவை வழங்க, ‘பாஸ்கர்’ முயற்சியைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
அ. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
இ. தகவல் தொடர்பு அமைச்சகம்
ஈ. மின்சார அமைச்சகம்
- வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் – உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), இந்தியாவின் புத்தொழில் சூழலமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அற்புதமான டிஜிட்டல் தளத்தைத் தொடங்கவுள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின்கீழ் பாரத் புத்தொழில் அறிவு அணுகல் பதிவு (பாஸ்கர் -The Bharat Startup Knowledge Access Registry – BHASKAR) என்ற முன்முயற்சி தொடங்கப்படுகிறது. இது புத்தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், சேவை வழங்குநர்கள், அரசு அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளமாகும்.
- இந்த முன்முயற்சி புதுமையிலும் தொழில்முனைவிலும் இந்தியாவை உலகளாவிய முன்னணி நாடாக மாற்றுவதற்கான இந்திய அரசின் பார்வைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. 1,46,000 க்கும் மேற்பட்ட DPIITஆல் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களைக் கொண்டது இந்தியா. ஒரு மையப்படுத்தப்பட்ட பதிவகமாக செயல்படுவதன்மூலம், பாஸ்கர் பரந்த அளவிலான வளங்கள், அறிவுக்குத் தடையற்ற அணுகலை வழங்கும்.
18. அண்மையில், ‘குளோபல் பயோ-இந்தியா – 2024’இன் நான்காவது பதிப்பு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
அ. பெங்களூரு
ஆ. ஹைதராபாத்
இ. புது தில்லி
ஈ. சென்னை
- 4ஆவது குளோபல் பயோ-இந்தியா – 2024 நிகழ்வு 14 செப்டம்பர் 2024 அன்று புது தில்லியில் நிறைவடைந்தது. பயோடெக் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் 3 நாள் நிகழ்வு இது. இந்த நிகழ்வு 2021 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் BIRAC ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது. தென் கொரியா பங்காளர் நாடாக இருந்தது. Dr ஜிதேந்திர சிங் 12 செப்டம்பர் 2024 அன்று நிகழ்வைத் தொடங்கி வைத்தார். ‘Biotech Innovation’ மற்றும் ‘Bio-manufacturing’ ஆகியன இதன் கருப்பொருளாகும்.
19. 2024 – உலக ஓசோன் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Montreal Protocol: Advancing Climate Action
ஆ. Global Cooperation Protecting Life on Earth
இ. Keep Cool and Carry On
ஈ. Ozone for Life
- ஓசோன் படலத்தின் அழிவுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 1995ஆம் ஆண்டு முதல் செப்.16ஆம் தேதி உலக ஓசோன் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓசோன் செல் தேசிய மற்றும் மாநில அளவில் இந்த நாளைக் கடைப்பிடிக்கிறது. 1987 செப்டம்பர்.16ஆம் தேதி மாண்ட்ரீல் நெறிமுறையில் கையெழுத்திட்டதன் நினைவாக 1994இல் ஐநாவால் இந்நாள் நிறுவப்பட்டது. முதல் உலக ஓசோன் நாள் 1995இல் அனுசரிக்கப்பட்டது. 30ஆவது உலக ஓசோன் நாளுக்கானக் கருப்பொருள், “Montreal Protocol: Advancing Climate Action” என்பதாகும்.
20. ஆண்டுதோறும் பன்னாட்டு மக்களாட்சி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 15 செப்டம்பர்
ஆ. 16 செப்டம்பர்
இ. 17 செப்டம்பர்
ஈ. 18 செப்டம்பர்
- சமத்துவம், ஒற்றுமை மற்றும் நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் 2,500 கிமீ மனிதச்சங்கிலியுடன் கர்நாடகா ‘பன்னாட்டு மக்களாட்சி நாள்’ கொண்டாடப்பட்டது. பன்னாட்டு மக்களாட்சி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2007இல் ஐநா பொதுச்சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் மக்களாட்சியின் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மக்களாட்சி என்பது தீவிரமான பங்கேற்பு தேவைப்படும் தொடர்ச்சியான நாட்டம் என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
- மக்களாட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை ஆதரிக்கும் UNGA தீர்மானத்தைத் தொடர்ந்து கடந்த 2008இல் இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மற்றும் மக்கள் தங்கள் அரசியல் அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1997இல் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் மக்களாட்சி குறித்த உலகளாவிய பிரகடனத்தை இந்நாள் நினைவுபடுத்துகிறது.
21. அண்மையில், லேவில் Centre for Rural Enterprise Acceleration through Technology (CREATE)ஐத் தொடக்கிய அமைச்சகம் எது?
அ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
ஆ. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- மத்திய MSME அமைச்சர், ஜிதன் ராம் மஞ்சி, லேவில், Centre for Rural Enterprise Acceleration through Technology (CREATE)ஐத் தொடக்கினார். இந்த நிகழ்ச்சியில் MSME துறை அமைச்சர் மற்றும் லடாக்கின் துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். KVICஇன் தலைவர், MSME, லடாக் நிர்வாகம், KVIC மற்றும் MGIRI அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 200 உள்ளூர் கைவினைஞர்கள் கலந்து கொண்டனர்.
22. அண்மையில், “G20 வேளாண் அமைச்சர்கள் கூட்டம்” நடைபெற்ற இடம் எது?
அ. வாரணாசி, இந்தியா
ஆ. குய்யாபா, பிரேசில்
இ. மாஸ்கோ, ரஷ்யா
ஈ. பெய்ஜிங், சீனா
- செப்டம்பர்.12-13, 2024 அன்று பிரேசிலின் குய்யாபாவில் நடந்த G20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது. அமைச்சர் ராம்நாத் தாக்கூர் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாய தொழில்நுட்பம், குளிர் சேமிப்பு மற்றும் இந்திய மாதுளை மற்றும் திராட்சைகளுக்கான சந்தை அணுகல்குறித்து கவனம் செலுத்தினார். பிரேசிலுடனான கலந்துரையாடல்கள் எத்தனால் உற்பத்தி மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை உள்ளடக்கியது; இருநாடும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் காலநிலை-திறன்மிக்க உழவு, பயிர்க்காப்பீடு மற்றும் இந்திய பழங்கள் & காய்கறிகளுக்கான சந்தை அணுகல் ஆகியவை அடங்கும்.
23. அண்மையில், 4ஆவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற இடம் எது?
அ. சென்னை
ஆ. கோயம்புத்தூர்
இ. சேலம்
ஈ. கன்னியாகுமரி
- 4ஆவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தமிழ்நாட்டின் சென்னையில், செப்டம்பர் 11-13, 2024 வரை நடந்தது. நடுத்தர ஓட்டப்பந்தயம் மற்றும் எறிதல் போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது; அதே நேரத்தில் இலங்கை குறுவிரையோட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கியது. ஆடவருக்கான 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இலங்கை தங்கமும், இந்தியா வெள்ளியும் வென்றது. இந்திய பெண்கள் 4×100 மீ தொடர் ஓட்டத்தில் இலங்கை இரண்டாவது இடத்தைப்பிடித்தது. 7 தெற்காசிய நாடுகள் பங்கேற்ற இதில், இந்தியா, 62 விளையாட்டு வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய அணியை அனுப்பியது.
- இந்தியா 48 பதக்கங்களுடன் (21 தங்கம்) முதலிடத்திலும், 35 பதக்கங்களுடன் இலங்கை இரண்டாவது இடத்திலும், மூன்று வெண்கலத்துடன் வங்கதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தானும், பூடானும் பதக்கம் எதுவும் வெல்லவில்லை.
24. இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து சித்த மருத்துவம் தோன்றிற்று?
அ. தெற்குப்பகுதி
ஆ. வடக்குப்பகுதி
இ. வடகிழக்குப்பகுதி
ஈ. நடுப்பகுதி
- ‘சித்த’ மருந்துகளின் கலவையானது, இளம்பெண்களில் இரத்தசோகையைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. சித்த மருத்துவம் என்பது தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும்; இது இந்தியாவின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் பாரம்பரியம் சுமார் பொ ஆ 10,000 வரை அதாவது சங்க காலத்திற்கே செல்கிறது. சித்தர்கள் எனப்படும் சிறப்பு அறிவுத்திறன்களைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குறுமுனி என்றழைக்கப்படும் அகத்தியர், சித்த அமைப்பை நிறுவிய பெருமைக்குரியவர். சித்த அறிவு கிராமப்புற சமூகங்களில் தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வருகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோர் சேமிக்கும் வாத்சல்யா திட்டம்.
குழந்தைகளின் ஓய்வூதியத்துக்காக பெற்றோர் சேமிக்கும், “NPC வாத்சல்யா” திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் தொடங்கி வைத்தார். இது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சிறார் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPC) நீட்சியாகும். இத்திட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயரில் ஓய்வூதியக் கணக்கு தொடங்க முடியும்.
வங்கி, அஞ்சலகம் மற்றும் இணையவழியில் 18 வயதுக்குள்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காக ஓய்வூதிய நிதியை பெற்றோர் சேமிக்கலாம். வாத்சல்யா ஓய்வூதியக்கணக்கை `1,000 செலுத்தி தொடங்கலாம். அதன் பிறகு ஆண்டுக்கு குறைந்தபட்சம் `1,000 கண்டிப்பாக கணக்கில் செலுத்தவேண்டும். அதிகபட்ச தொகை வரம்பு ஏதுமில்லை. 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்திலிருந்து வெளியேறிக்கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதியளிக்கப்படும்.
குழந்தையின் கல்வி, குறிப்பிட்ட சில உடல்நலக்குறைபாடு, உடல் ஊனத்திற்கான சிகிச்சை போன்ற தேவைகட்கு, முதலீடு தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப்பிறகு, மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்று 3 முறை திரும்பப்பெற அனுமதிக்கப்படும்.
1. Which ministry recently organized a dialogue on the theme “Montreal Protocol: Advancing Climate Action”?
A. Ministry of Earth Sciences
B. Ministry of Environment, Forest and Climate Change
C. Ministry of Housing and Urban Affairs
D. Ministry of New and Renewable Energy
- The Ministry of Environment, Forest and Climate Change held a dialogue ahead of the 30th World Ozone Day. The theme was “Montreal Protocol: Advancing Climate Action.” The Montreal Protocol is an international agreement to protect the ozone layer by reducing ozone-depleting substances. Environment Secretary Leena Nandan highlighted India’s success in meeting its Montreal Protocol commitments due to collaborative efforts. United Nations Development Programme India Resident Representative Angela Lusigi praised India’s leadership in reducing Hydrofluorocarbons. World Ozone Day will be observed on September 16.
2. Which ministry recently launched the “Jan Sunwai Portal” to improve communication between stakeholders and authorities?
A. Ministry of Statistics and Programme Implementation
B. Ministry of Power
C. Ministry of Commerce and Industry
D. Ministry of Defence
- Ministry of Commerce and Industry launched the ‘Jan Sunwai Portal,’ an online platform by the Department of Commerce. The portal aims to improve communication between stakeholders and authorities by providing a direct and transparent channel for addressing trade and industry issues. It allows people to file grievances online, removing the need for office visits. The portal will help boost the commerce and business sectors by simplifying issue resolution.
3. Recently, which country became a new member of the BRICS New Development Bank (NDB)?
A. Algeria
B. Peru
C. Singapore
D. Cambodia
- Algeria has recently become a new member of the BRICS New Development Bank (NDB), officially gaining membership status in September 2024. Before Algeria, countries like Bangladesh, the United Arab Emirates, Uruguay, and Egypt also joined the NDB. The New Development Bank is a multilateral development bank established by the BRICS nations (Brazil, Russia, India, China, and South Africa).
4. ‘Irula tribe’, primarily resides in which states?
A. Tamil Nadu, Kerala and Karnataka
B. Andhra Pradesh, Jharkhand and Odisha
C. Maharashtra, Gujarat and Rajasthan
D. Odisha, Jharkhand and Bihar
- The Irula Snake Catchers’ Industrial Cooperative Society, run by Irula tribals near Chennai, faces an uncertain future. Irulas are one of India’s oldest indigenous communities and are classified as a particularly vulnerable tribal group (PVTG). They live mainly in Tamil Nadu, Kerala, and Karnataka and speak the Irula language, related to Tamil and Kannada. Irulas are pantheists with a main deity, Kanniamma, associated with the cobra. Traditionally skilled in hunting, herbal medicine, and snake-catching, they are experts in snake rescue and venom extraction. Their cooperative supplies 80% of the venom used to produce anti-snake venom in India.
5. What is the proposed new name for the capital of the Andaman and Nicobar Islands, Port Blair?
A. Kesari
B. Sri Vijayapuram
C. Samudram
D. Rajarajan Thidal
- Union Home Minister announced that Port Blair will be renamed ‘Sri Vijaya Puram.’ Port Blair, the capital of Andaman and Nicobar Islands, was named after naval officer Archibald Blair. It is located on the east coast of South Andaman Island and hosted the first Tiranga unfurling by Netaji Subhash Chandra Bose. Historically, the Andaman Islands were used by Chola emperor Rajendra I for a naval base to attack Srivijaya (present-day Indonesia). The Cholas called the islands “Ma-Nakkavaram,” which may have led to the name Nicobar.
6. Which institute recently launched YouTube channels for Industrial Training Institute (ITI) students?
A. Indian Institute of Journalism and New Media
B. National Instructional Media Institute
C. Indian Institute of Mass Communication
D. Symbiosis Institute of Media and Communication
- The National Instructional Media Institute (NIMI) launched YouTube channels for Industrial Training Institute (ITI) students. NIMI was established in 1986 as the Central Instructional Media Institute (CIMI) and is now an autonomous body under the Ministry of Skill Development & Entrepreneurship. It develops Instructional Media Packages, digital content, and assessment tools for vocational courses.
- The YouTube channels provide high-quality training videos in nine languages, including English, Hindi, and Tamil. The content includes tutorials, skill demonstrations, and theoretical lessons. This initiative supports the National Skill Development Mission and the New Education Policy.
7. ‘Onitis bordati’ belongs to which species?
A. Dung beetle
B. Spider
C. Frog
D. Fish
- A new dung beetle species, Onitis bordati, was discovered in Meghalaya’s Nongkhyllem Wildlife Sanctuary. This beetle belongs to the genus Onitis, known for it tunneling behavior. Males have long, slender, curved forelegs with teeth or spines. Previously, similar species were found in Vietnam and Thailand. Dung beetles play a key ecological role in seed dispersal, nutrient cycling, pest control, and promoting plant growth. The species faces threats from habitat destruction and climate change. Nongkhyllem Wildlife Sanctuary is in the Eastern Himalayan biodiversity hotspot, located on the Meghalaya Plateau.
8. What is the total outlay of the scheme of budgetary support for enabling infrastructure for Hydro Electric Projects (HEP)?
A. Rs 10,000 crore
B. Rs 12,461 crore
C. Rs 15,000 crore
D. Rs 16,641 crore
- The Union Cabinet approved a budgetary support scheme for Hydro Electric Projects (HEP) with Rs 12,461 crore. Running from 2024-25 to 2031-32, it enhances infrastructure for hydro power in remote areas. It covers costs for transmission lines, substations, ropeways, rail sidings, and communication infrastructure. The scheme aids projects generating 31,350 MW, including private and Pumped Storage Projects (PSPs). Funding varies by project size, with increased support for larger projects.
9. ‘Zorawar tanks’ is developed by which organization?
A. DRDO
B. ISRO
C. HAL
D. BHEL
- DRDO has successfully completed the first phase of field firing trials for the ‘Zorawar’ tanks. These tanks are designed to boost the Indian Army’s capabilities in high-altitude areas.
- Developed jointly by DRDO and L&T, they are named after General Zorawar Singh, known for his victories in Tibet. The Zorawar tanks are equipped with drones and battle management systems for better situational awareness. They are built for quick deployment and maneuverability in mountainous regions.
10. Recently, where was the “BRICS Literature Forum 2024” held?
A. Brasilia, Brazil
B. Kazan, Russia
C. Shanghai, China
D. Coimbatore, India
- The BRICS Literature Forum 2024 was recently held in Kazan, Russia. The theme of the forum was “World Literature in the New Reality: Dialogue of Traditions, National Values, and Cultures.” It gathered writers, poets, philosophers, artists, and scholars from BRICS nations to share their ideas and experiences. The plenary session emphasized the importance of literature in promoting unity and cooperation in society. The “Meet the Authors from India” session focused on “Volga to Ganga,” exploring how river-based cultures contribute to multiculturalism and social progress. The forum highlighted literature’s role in connecting cultures and fostering social harmony.
11. Recently, where was the ‘National Security Strategies (NSS) Conference’ organized?
A. Chennai
B. Madurai
C. New Delhi
D. Kozhikode
- Union Home Minister Amit Shah chaired the National Security Strategies Conference 2024 in New Delhi. A detailed strategy was proposed to strengthen counter-terrorism efforts, including cooperation with international agencies and preventing terror financing. There was an emphasis on increasing coordination between the NIA and State ATSs to enhance counter-terrorism measures. State DGPs were encouraged to work towards the vision of a prosperous and developed India by 2047.
12. Which organization recently released the “Global Cybersecurity Index (GCI) 2024”?
A. International Telecommunication Union (ITU)
B. Reserve Bank of India
C. World Bank
D. IMF
- India has advanced to Tier 1 in the Global Cybersecurity Index (GCI) 2024, released by the International Telecommunication Union (ITU).
- This achievement reflects India’s strong commitment to cybersecurity and its positive impact. The Global Cybersecurity Index measures how countries commit to cybersecurity on a global level, raising awareness about its importance.
13. Kumaranalloor Devi temple is located in which state?
A. Tamil Nadu
B. Kerala
C. Karnataka
D. Andhra Pradesh
- The Kumaranallur Devi temple in Kottayam, Kerala, is undergoing a restoration project. The temple dates back to the 10th century during King Cheraman Perumal’s reign and features a rare ‘Sree Chakra’ style in its architecture. Its murals, spread across 14 sections, depict scenes from the Ramayana and Mahabharata, starting with an image of Karthyayani Devi.
14. Chamran-1 satellite is launched by which country?
A. Israel
B. Iran
C. China
D. India
- Iran recently launched its research satellite, Chamran-1, into space. The satellite was developed by Iranian engineers in collaboration with private firms and defense subsidiaries. It was placed 550 kilometers above Earth using the Ghaem-100 space launch vehicle. Ghaem-100, Iran’s first three-stage solid-fuel rocket, was made by the Islamic Revolutionary Guard Corps (IRGC). Chamran-1 weighs 60 kilograms and primarily tests orbital maneuver technology.
15. Recently, where was the third edition of the INDUS-X Summit held?
A. Russia
B. United States
C. Australia
D. United Kingdom
- The third INDUS-X Summit concluded in the US, advancing joint defence innovation between India and the US. It was launched in 2023 during the Indian Prime Minister’s state visit to the US. The goal is to expand strategic tech partnerships and defence cooperation between governments, businesses, and academic institutions in both countries. It is led by iDEX (India) and DIU (US).
16. What is the name of operation recently launched by India to provide humanitarian assistance to the countries affected by Typhoon Yagi?
A. Operation Vikas
B. Operation Sadbhav
C. Operation Veer
D. Operation Kaveri
- India launched Operation Sadbhav to provide humanitarian aid to Myanmar, Laos, and Vietnam, affected by Typhoon Yagi. These countries faced massive floods due to Asia’s most powerful storm this year. India sent 10 tonnes of aid to Myanmar via INS Satpura, including dry rations, clothing, and medicines. A military aircraft delivered 35 tonnes of aid to Vietnam and 10 tonnes to Laos.
17. Which ministry recently launched ‘BHASKAR initiative’ to provide comprehensive support to the entrepreneurs?
A. Ministry of Commerce and Industry
B. Ministry of Science and Technology
C. Ministry of Communication
D. Ministry of Power
- The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT), Ministry of Commerce and Industry has launched a digital platform called ‘Bhaskar’ to boost India’s startup ecosystem. The platform is part of the Bharat Startup Knowledge Access Registry (BHASKAR) initiative under the Startup India program. It is designed to centralize and enhance collaboration among startups, service providers, investors, mentors, and government bodies.
- The initiative aligns with India’s goal to become a global leader in innovation and entrepreneurship. India has over 1,46,000 DPIIT-recognized startups, and BHASKAR aims to provide a one-stop digital solution for challenges faced by entrepreneurs and investors.
18. Recently, where was the fourth edition of ‘Global Bio-India 2024’ organized?
A. Bengaluru
B. Hyderabad
C. New Delhi
D. Chennai
- The 4th Global Bio-India 2024 event concluded on 14 September 2024 in New Delhi. It was a three-day event showcasing India’s potential in biotech research, development, and manufacturing. The event has been held annually since 2021. It was organized by the Department of Biotechnology and BIRAC under the Ministry of Science & Technology, Government of India.
- South Korea was the partner country. Dr. Jitendra Singh inaugurated the event on 2024 Sep.12. The theme was ‘Biotech Innovation’ and ‘Bio-manufacturing,’ promoting India as a global hub
19. What is the theme of “World Ozone Day 2024”?
A. Montreal Protocol: Advancing Climate Action
B. Global Cooperation Protecting Life on Earth
C. Keep Cool and Carry On
D. Ozone for Life
- World Ozone Day is celebrated on 16th September since 1995 to raise awareness about ozone layer depletion. In India, the Ozone Cell under the Ministry of Environment, Forest, and Climate Change observes this day at national and state levels. The day was established by the UN in 1994 to commemorate the signing of the Montreal Protocol on 16th September 1987. The first World Ozone Day was observed in 1995. The theme for the 30th World Ozone Day 2024 is “Montreal Protocol: Advancing Climate Actions”.
20. Which day is observed as “International Day of Democracy” annually?
A. 15 September
B. 16 September
C. 17 September
D. 18 September
- Karnataka marked ‘International Day of Democracy’ with a 2,500-km human chain promoting equality, unity, and governance. International Day of Democracy is observed annually on 15 September. Established by the UN General Assembly in 2007, it highlights democracy’s global importance. The day emphasizes that democracy is a continuous pursuit requiring active participation. It was first observed in 2008, following a UNGA resolution supporting efforts to strengthen democracies. The date commemorates the 1997 Universal Declaration on Democracy by the Inter-Parliamentary Union, promoting free and fair elections and people’s right to choose their political systems.
21. Recently, which ministry inaugurated the Centre for Rural Enterprise Acceleration through Technology (CREATE) in Leh?
A. Ministry of Statistics and Programme Implementation
B. Ministry of Micro, Small and Medium Enterprises
C. Ministry of Science and Technology
D. Ministry of Home Affairs
- Union Minister for MSME, Shri Jitan Ram Manjhi, inaugurated the Centre for Rural Enterprise Acceleration through Technology (CREATE) in Leh virtually.
- The event was attended by key dignitaries including the Minister of State for MSME and the Lieutenant Governor of UT-Ladakh. The Chairman of KVIC, officials from the Ministry of MSME, UT-Ladakh, KVIC, and MGIRI also participated. Around 200 local artisans were present at the event.
22. Recently, where was the “G20 Agriculture Ministerial Meeting” held?
A. Varanasi, India
B. Cuiabá, Brazil
C. Moscow, Russia
D. Beijing, China
- India participated in the G20 Agriculture Ministerial Meeting in Cuiabá, Brazil on September 12-13, 2024. Minister Ram Nath Thakur held talks with Japan, focusing on agricultural technology, cold storage, and market access for Indian pomegranates and grapes. Discussions with Brazil covered ethanol production and science cooperation; both aimed to finalize an MOU. Talks with the U.S. included climate-smart agriculture, crop insurance, and market access for Indian fruits and vegetables.
23. Recently, the 4th South Asian Junior Athletics Championships was held at which place?
A. Chennai
B. Coimbatore
C. Salem
D. Kanyakumari
- The 4th South Asian Junior Athletics Championships took place in Chennai, Tamil Nadu, from September 11-13, 2024. India dominated middle-distance races and throwing events, while Sri Lanka excelled in sprint events. Sri Lanka won the men’s 4x100m relay, while India secured silver.
- The Indian women won the 4x100m relay, with Sri Lanka second. Seven South Asian countries participated, with India sending the largest team of 62 athletes. India topped the medal tally with 48 medals (21 gold), followed by Sri Lanka with 35 medals, and Bangladesh secured third place with three bronzes. Pakistan and Bhutan did not win any medals.
24. Siddha Medicine originated from which part of India?
A. South region
B. North region
C. North Eastern region
D. Central region
- A recent study shows that a combination of ‘Siddha’ drugs can reduce anaemia among adolescent girls. Siddha medicine is a traditional healing system that originated in South India, considered one of the oldest medical systems in India. Its roots trace back to the Sangam Era, around 10,000 BC. The system was developed by Siddhars, spiritual masters mostly from Tamil Nadu, who possessed special abilities called siddhis.
- Agastyar, also known as Kurumuni, is credited with founding the Siddha system. Siddha knowledge has been passed down through generations in rural communities.