Tnpsc Current Affairs in Tamil & English – 15th October 2024
1. 2024 – உலக மனநல நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Mental Health at Work
ஆ. Mental Health in an Unequal World
இ. Make Mental Health & Well-being for All a Global Priority
ஈ. Mental Health for All
- உலக மனநல நாள் அக்.10 அன்று அனுசரிக்கப்படுகிறது; இது முதன்முதலில் 1992இல் மனநலத்திற்கான உலக கூட்டமைப்பால் தொடங்கப்பட்டது. இந்த நாள் மனநலப்பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உலகளவில் மனநலப்பாதுகாப்புக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது. மனநலப் பராமரிப்பில் நீடித்த மாற்றத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடையே ஒத்துழைப்பிற்கான குறிப்பிடத்தக்க தளமாக இது மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டின் கருப்பொருள், “Mental Health at Work” என்பதாகும். மனநலத்தை மேம்படுத்துவதற்கும் தேவைப்படுபவர்க்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலின் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
2. வியாழனின் நிலவை ஆராய்வதற்காக யூரோபா கிளிப்பர் திட்டத்தைத் தொடங்கியுள்ள விண்வெளி அமைப்பு எது?
அ. ISRO
ஆ. NASA
இ. ESA
ஈ. CNSA
- NASA வியாழனின் நிலவான யூரோபாவையும் அதன் உயிர்களை நிலைநிறுத்தும் திறனையும் ஆராய யூரோபா கிளிப்பர் விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் சுமார் 10 ஆண்டு பயணத்தில் 3 பில்லியன் கிமீ பயணிக்கும். யூரோப்பாவில் அதன் பனிக்கட்டி மேற்பரப்புக்குக்கீழே 120 கிமீ ஆழத்தில் கடல் இருப்பதாக நம்பப்படுகிறது. 2013ஆம் ஆண்டில், ஹப்பிள், யூரோபாவில் வெந்நீரூற்றுகளைக் கண்டறிந்தது; உயிர்களை ஆதரிக்கும் வெப்பத்துளைகள் இருக்கலாம் எனப்பரிந்துரைத்தது. யூரோபா கிளிப்பர் என்பது NASAஇன் மிகப்பெரிய விண்கலமாகும்; இது சூரிய ஒளி தகடுகளால் இயக்கப்படுகிறது. இதன் மதிப்பீட்டு செலவு $5.2 பில்லியன் ஆகும்.
3. அகஸ்தியமலை மூங்கில்வாலி என்பது சார்ந்த இனம் எது?
அ. ஊசித்தட்டான்
ஆ. மீன்
இ. சிலந்தி
ஈ. வண்டு
- கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மஞ்சாதிநின்னவிலாவில் அகஸ்தியமலை மூங்கில்வாலி (Agasthyamalai Bambootail) என்ற பெயருடைய புதிய ஊசித்தட்டான் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மூங்கில் வாலி குழுவிற்குச்சொந்தமான இந்த அரிய வகை ஊசித்தட்டான், மூங்கில் தண்டுகளை ஒத்த நீண்ட உருளை அடி வயிற்றுக்குப் பெயர்பெற்றது. இது மேற்குத்தொடர்ச்சிமலையின் அகஸ்தியமலை நிலப்பரப்பில் காணப்பட்டது. குடகு-வயநாட்டில் அமைந்துள்ள மலபார் மூங்கில்வாலி மட்டுமே இவ்வினத்தில் உள்ள ஒரே இனமாகும்.
4. 38ஆவது கோடைக்கால தேசிய விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் மாநிலம் எது?
அ. உத்தரகாண்ட்
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. கேரளா
ஈ. கர்நாடகா
- உத்தரகாண்ட் 38ஆவது கோடைக்கால தேசிய விளையாட்டுப் போட்டிகளை 2025 ஜனவரி.28 முதல் பிப்ரவரி.14 வரையிலும், அடுத்த குளிர்கால விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தும். 37ஆம் தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் 2023 செப்.25 முதல் நவ.09 வரை நடைபெற்றது. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு வெளியே குளிர்கால விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் (IOA) நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள், கோடைகால ஒலிம்பிக்கிற்கான திறமைகளை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்றன; இது முன்னர் அகில இந்திய ஒலிம்பிக் விளையாட்டு என்று அழைக்கப்பட்டது.
5. Lunar Polar Exploration (LUPEX) என்பது எந்த இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டுத்திட்டமாகும்?
அ. NASA மற்றும் ISRO
ஆ. ISRO மற்றும் JAXA
இ. ESA மற்றும் NASA
ஈ. CNSA மற்றும் ISRO
- திங்களுக்கான இந்தியாவின் ஐந்தாவது திட்டமான Lunar Polar Exploration (LUPEX)க்கு இந்திய தேசிய விண்வெளி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 2023 ஆகஸ்டில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதை அடுத்து, நிலவில் தரையிறங்கிய 4ஆவது நாடாக இந்தியா ஆனது. இது இந்தியாவின் ISRO மற்றும் ஜப்பானின் JAXA ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்; இது சந்திர வள ஆய்வில் கவனம் செலுத்துகிறது. நிலவின் மேற்பரப்பிலும் அதன் மறுகோடியின் கீழும் நீரின் இருப்பு மற்றும் பரவலை ஆய்வதே முக்கிய நோக்கமாகும்.
6. 2024 – வேதியியலுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
அ. டொனால்ட் ஜி. டுருஹ்லர் மற்றும் டோபின் ஜே. மார்க்ஸ்
ஆ. குலமணி பரிதா மற்றும் பராக் ஆர். கோகேட்
இ. டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம்
ஈ. மைக்கேல் கிராட்செல் மற்றும் ஜார்ஜ் எம்
- புரத அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் M ஜம்பர் ஆகியோருக்கு 2024 – வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. டேவிட் பேக்கர் கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்கான பரிசைப்பெற்றார்; 2003 முதல் முற்றிலும் புதிய புரதங்களை உருவாக்கினார். டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் AlphaFold2, 3D புரதக்கட்டமைப்புகளை முன்னறிவிக்கும் AI மாதிரியை உருவாக்குவதற்காக அங்கீகரிக்கப்பட்டனர். AlphaFold2ஆல் கிட்டத்தட்ட 200 மில்லியன் இனங்காணப்பட்ட புரதங்களின் கட்டமைப்பை கணிக்க முடியும். இக்கண்டுபிடிப்புகள் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மற்றும் நெகிழிச் சிதைவுபோன்ற சவால்களைத் தீர்க்கும் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
7. IBSAMAR பயிற்சியானது அண்மையில் எந்தெந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?
அ. ஈரான், பெலாரஸ் மற்றும் செர்பியா
ஆ. அயர்லாந்து, புருனே மற்றும் சுவீடன்
இ. இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா
ஈ. இஸ்ரேல், வங்கதேசம் மற்றும் செனகல்
- 2024 அக்.06 முதல் 18 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்திய, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகளின் கூட்டு பன்னாட்டு கடல்சார் பயிற்சியான இப்சாமரின் எட்டாவது பதிப்பில் பங்கேற்க, இந்தியக்கடற்படையின் முன்னணி போர்க்கப்பல், INS தல்வார் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றடைந்தது.
- இந்தப்பயிற்சி 3 கடற்படைகளுக்கு இடையிலான இயங்குதன்மையை மேம்படுத்துவதையும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுக கட்டத்தில் நடக்கும் இப்பயிற்சியில் தொழில்முறை பரிமாற்றங்கள், சேதக்கட்டுப்பாடு மற்றும் தீயணைப்புப் பயிற்சிகள், தேடல் மற்றும் பறிமுதல் பயிற்சிகள், விமான பாதுகாப்பு விரிவுரைகள், கூட்டு நீர்மூழ்கி நடவடிக்கைகள், பெருங்கடல் ஆளுமை கருத்தரங்கு, விளையாட்டு தொடர்புகள், சிறப்புப்படைகள் மற்றும் இளநிலை அதிகாரிகளிடையே கலந்துரையாடல் ஆகியவை அடங்கும்.
8. ஒவ்வோர் ஆண்டும் தேசிய அஞ்சல் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 09
ஆ. அக்டோபர் 10
இ. அக்டோபர் 11
ஈ. அக்டோபர் 12
- இந்தியா ஒவ்வோர் ஆண்டும் அக்.10ஆம் தேதி தேசிய அஞ்சல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்திய அஞ்சல் சேவையையும் நாட்டை இணைப்பதில் அதன் பங்கையும் மதிக்கிறது. இது 1854 அக்.10இல் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்ட சேவையின் நினைவாக உள்ளது. இந்திய அஞ்சல் சேவை உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இது எளிய அஞ்சல் விநியோகத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்குவதற்குப் பரிணமித்துள்ளது.
9. சம்பதா 2.0 என்ற பெயரில் அதிநவீன மின்-பதிவு முறையை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. உத்தரகாண்ட்
இ. மத்திய பிரதேசம்
ஈ. உத்தர பிரதேசம்
- மத்திய பிரதேசம் அதன் புதிய மின்-பதிவு முறையான சம்பதா 2.0மூலம் ஆவணப்பதிவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக மாறியுள்ளது. மென்பொருள் மற்றும் திறன்பேசி செயலியின் இந்த நவீன பதிப்பு, ஆவணப்பதிவை இணையவழிலேயே (online) நிறைவுசெய்ய அனுமதிப்பதோடு துணைப்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லவேண்டிய தேவையை நீக்குகிறது. இந்தச் செயல்முறை இப்போது முற்றிலும் எண்மமயமானது, பாதுகாப்பானது மற்றும் தாளற்றது.
10. அண்மையில், ‘லிவிங் பிளானட்’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலகளாவிய நிதியம்
ஆ. உலக வங்கி
இ. ஐநா வளர்ச்சித் திட்டம்
ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்
- இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அதன் ஈராண்டுக்கொருமுறை வெளியிடும் ‘வாழும் கோள்’ அறிக்கையை வெளியிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் (1970-2020) வனவிலங்குகளின் எண்ணிக்கை 73% குறைந்துள்ளது. நன்னீர் இனங்கள், அதைத்தொடர்ந்து நிலவாழ் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெருஞ்சரிவை எதிர்கொண்டன. இந்த வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகியவை அடங்கும். ஆந்திர பிரதேசத்தின் சமூக-நிர்வகிக்கப்பட்ட இயற்கை விவசாயம் (APCNF) நேர்மறையான சமூக-பொருளாதார தாக்கங்களைக் காட்டுகிறது. இயற்கை-சார்ந்த உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் தினை பணி பாராட்டைப்பெற்றது.
11. 2024 – ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற பதக்கம் என்ன?
அ. தங்கம்
ஆ. வெள்ளி
இ. வெண்கலம்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- 2024 – ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் சீன தைபேயிடம் 3-0 என தோற்று வெண்கலத்தை வென்றது. 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் குழு வெல்லும் மூன்றாவது தொடர்ச்சியான வெண்கலம் இதுவாகும். ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மொத்தம் ஏழு வெண்கலங்களை வென்றுள்ளது.
12. 2024 – உலக வாழ்விட நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Engaging youth to create a better urban future
ஆ. Resilient urban economies
இ. Mind the Gap: Leave No one and Place Behind
ஈ. Accelarating Urban Action for a carbon-free world
- உலக வாழ்விட நாள் முதன்முதலில் 1985இல் அக்டோபர் முதல் திங்கட்கிழமையன்று கொண்டாடப்பட்டது. உலக வாழ்விட நாள் இந்த ஆண்டு அக்.7ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வீட்டுரிமையை எடுத்துக்காட்டுகிறது. “Engaging youth to create a better urban future” என்பது நடப்பு 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்; இது விரைவான நகர்ப்புற வளர்ச்சியின் வாய்ப்புகள் மற்றும் சவால்களை மையமாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. திருப்பத்தூர் அருகே 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வீரன் நடுகல் கண்டெடுப்பு.
திருப்பத்தூார் அருகே 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. பண்டைய காலத்தில் வீரமரணமடைந்த அரசர்களுக்கும் வீரர்களுக்கும் நடுகல் வைத்துப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது.
நிரை கவர்தல், நிரை மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், விலங்குகளுடன் சண்டையிட்டு விளை நிலங்களையும் மக்களையும் காத்தல் மற்றும் அரசரின் வெற்றிக்காகப் போரிடும்போது உயிரிழந்த வீரர்களின் நினைவாகவும் நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது தொல்காப்பியர் காலம் முதல் தமிழர்களிடையே காணப்படும் வழக்கமாகும்.
2. உலக பட்டினிக்குறியீடு: “தீவிர பகுப்பாய்வு” பிரிவில் இந்தியா! 127 நாடுகளில் 105ஆவது இடம்.
உலகின் 127 நாடுகளுக்கு இடையேயான நிகழாண்டின் உலக பட்டினிக்குறியீட்டில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் பட்டினி விவகாரத்தில் தீவிர பகுப்பாய்வுக்கு உள்படுத்தும் பரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் மிகவும் பின்தங்கிய 111 இடத்தில் ‘தீவிர அளவில்’ இருந்த இந்தியா, தற்போது 105 இடத்தில் உள்ளது.
3. ஜம்மு-காஷ்மீர் முதல்வரானார் ஒமர் அப்துல்லா.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சி துணைத்தலைவர் ஒமர் அப்துல்லா பதவியேற்றார். அவருடன், துணை முதல்வராக நியமிக்கப்பட்ட சுரீந்தர் செளதரியும் பதவியேற்றார். கடந்த 2019இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீர், லடாக்) பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பேரவைத்தேர்தல் இதுவாகும்.
4. தமிழ்நாட்டிற்கு மூன்று பிரிவுகளில் தேசிய தண்ணீர் விருது.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் CR பாட்டீல் அறிவித்தார். இதில், மூன்று பிரிவுகளில் தமிழ்நாட்டிற்கு விருதுகள் கிடைத்துள்ளன. நீர்வளத்துறையில் பொதுமக்களின் சிறந்த பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், நீர் பாதுகாப்பு, மேலாண்மை தொடர்பான விஷயங்களில் பணியாற்ற மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் தேசிய நீர் விருதுகளை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வருகிறது.
‘சிறந்த மாநிலம்’ பிரிவில் ஒடிஸாவுக்கு முதலிடமும், உத்தர பிரதேசத்திற்கு இரண்டாமிடமும் குஜராத், புதுச்சேரி ஆகியவை இணைந்து மூன்றாடமிடத்திற்கான விருதுக்கும் தேர்வுசெய்யப்பட்டன.
தமிழ்நாட்டிற்கு மூன்று விருதுகள்: ‘சிறந்த தொழில் நிறுவனங்கள் பிரிவில்’ தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்திற்கு 2ஆவது இடத்திற்கான விருதும், ‘சிறந்த நீர் பயனர் சங்கத்திற்கான’ பிரிவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச்சோ்ந்த பரம்புர் பிக் டேங்க் நீர் பயனர் சங்கத்திற்கு மூன்றாமிடத்திற்கான விருதும், சிறந்த கல்வி நிறுவனங்கள் (கல்லூரி/பள்ளிகள் அல்லாத) பிரிவில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு முதலிடத்திற்கான விருதும், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு (IIT) மூன்றாமிடத்திற்கான (இணைந்த) பிரிவிலும் விருது கிடைத்துள்ளது.
1. What is the theme of World Mental Health Day 2024?
A. Mental Health at Work
B. Mental Health in an Unequal World
C. Make Mental Health & Well-being for All a Global Priority
D. Mental Health for All
- World Mental Health Day is observed on October 10 and was first initiated in 1992 by the World Federation for Mental Health. The day aims to raise awareness about mental health issues and support mental health care globally. It has become a significant platform for collaboration among governments, organizations, and individuals to promote lasting change in mental health care. The 2024 theme is “Mental Health at Work”. It stresses the need for safe and inclusive work environments to promote mental well-being and support those in need.
2. Which space organization has launched the Europa Clipper Mission to explore Jupiter’s moon?
A. ISRO
B. NASA
C. ESA
D. CNSA
- NASA launched the Europa Clipper spacecraft to explore Jupiter’s moon, Europa, and its potential to sustain life. The spacecraft will travel 3 billion kilometers in a nearly 10-year mission. Europa is believed to have a deep ocean, possibly 120 km beneath its icy surface. In 2013, Hubble detected geysers on Europa, suggesting thermal vents that could support life. Europa Clipper is NASA’s largest spacecraft, powered by solar panels, with a budget of $5.2 billion.
3. Agasthyamalai Bambootail belongs to which species?
A. Damselfly
B. Fish
C. Spider
D. Beetle
- Researchers have discovered a new damselfly species named Agasthyamalai Bambootail in Manjadininnavila, Thiruvananthapuram, Kerala. This rare species belongs to the bambootail group, known for their long cylindrical abdomens resembling bamboo stalks. It was found in the Agasthyamalai landscape of the Western Ghats. The only other species in this genus is the Malabar Bambootail, located in Coorg-Wayanad.
4. Which state is the host of 38th Summer National Games?
A. Uttarakhand
C. Kerala
D. Karnataka
- Uttarakhand will host the 38th Summer National Games from January 28 to February 14, 2025, and the next Winter Games. The 37th National Games were held in Goa from September 25 to November 9, 2023. This will be the first time Winter Games are held outside Jammu & Kashmir and Ladakh. The National Games, organized by the Indian Olympic Association (IOA), aim to identify talent for the Summer Olympics. The first National Games were held in 1924 in Lahore, originally called the All-India Olympic Games.
5. Lunar Polar Exploration (LUPEX) is a joint mission of which two space organizations?
A. NASA and ISRO
B. ISRO and JAXA
C. ESA and NASA
D. CNSA and ISRO
- India’s National Space Commission approved the Lunar Polar Exploration Mission (Lupex), India’s fifth lunar mission. Lupex follows the success of Chandrayaan-3’s Moon landing in August 2023, making India the fourth nation to land on the Moon. It is a joint mission between India’s ISRO and Japan’s JAXA, focusing on lunar resource exploration. The main objective is to study the presence and distribution of water on the Moon’s surface and beneath its regolith.
6. Who have been awarded the 2024 Nobel Prize in Chemistry?
A. Donald G. Truhlar and Tobin J. Marks
B. Kulamani Parida and Parag R. Gogate
C. David Baker, Demis Hassabis and John M
D. Michael Gratzel and George M
- The 2024 Nobel Prize in Chemistry was awarded to David Baker, Demis Hassabis, and John M. Jumper for contributions to protein science. David Baker received the prize for computational protein design, creating entirely new proteins since 2003. Demis Hassabis and John Jumper were recognized for developing AlphaFold2, an AI model that predicts 3D protein structures. AlphaFold2 can predict the structure of nearly all 200 million identified proteins. These innovations are used in fields like pharmaceuticals, vaccines, and solving challenges like antibiotic resistance and plastic degradation.
7. IBSAMAR Exercise is recently conducted between which countries?
A. Iran, Belarus and Serbia
B. Ireland, Brunei and Sweden
C. India, Brazil and South Africa
D. Israel, Bangladesh and Senegal
- INS Talwar arrived in South Africa for the eighth edition of exercise IBSAMAR. IBSAMAR is a joint maritime exercise involving India, Brazil, and South Africa. The exercise focuses on Blue Water Naval Warfare, covering Surface and Anti-Air Warfare.
- Activities include professional exchanges, firefighting drills, search-and-seizure operations, diving, aviation safety, and ocean governance seminars. The exercise strengthens naval interoperability, builds mutual trust, and fosters cooperation among like-minded nations for peaceful maritime environments.
8. Which day is observed as National Postal Day every year?
A. October 09
B. October 10
C. October 11
D. October 12
- India celebrates National Postal Day on October 10th each year. The day honors the Indian Postal Service and its role in connecting the nation. It commemorates the service’s founding by the East India Company on October 10, 1854. The Indian Postal Service has grown into one of the world’s largest networks. It has evolved from simple mail delivery to providing a wide range of services to millions across the country.
9. Which state became the first in India to launch a state-of-the-art e-registry system named Sampada 2.0?
A. Rajasthan
B. Uttarakhand
C. Madhya Pradesh
D. Uttar Pradesh
- Madhya Pradesh has become the first state in India to fully digitalize document registration with its new e-registry system, Sampada 2.0. This advanced version of the software and mobile app allows document registration to be completed online, eliminating the need for physical visits to Sub-Registrar offices. The process is now completely digital, secure, and paperless, making it more convenient and hassle-free for users.
10. Which organization recently released the Living Planet Report?
A. World Wide Fund
B. World Bank
C. United Nations Development Programme
D. United Nations Environment Programme
- The World Wildlife Fund (WWF) released its latest biennial ‘Living Planet’ report. Wildlife populations have dropped by 73% over the last 50 years (1970–2020). Freshwater species faced the largest declines, followed by terrestrial and marine populations. Main reasons for this decline include habitat loss, climate change, and invasive species. Andhra Pradesh’s Community-Managed Natural Farming (APCNF) shows positive socio-economic impacts. India’s millet mission received praise for promoting nature-positive food production.
11. India won which medal at Asian Table Tennis Championship 2024?
A. Gold
B. Silver
C. Bronze
D. None of the above
- India’s men’s team won the bronze medal at the 2024 Asian Table Tennis Championships after losing 3-0 to Chinese Taipei in the semi-finals. This is India’s third consecutive bronze in the men’s team event, following 2021 and 2023. India has won a total of seven bronze medals at the Asian Table Tennis Championships.
12. What is the theme of World Habitat Day 2024?
A. Engaging youth to create a better urban future
B. Resilient urban economies
C. Mind the Gap: Leave No one and Place Behind
D. Accelarating Urban Action for a carbon-free world
- World Habitat Day was first observed in 1985, celebrated on the first Monday in October. The Global Observance of World Habitat Day is observed on 7 October this year. It highlights the right to decent and safe housing for everyone. The 2024 theme is “Engaging youth to create a better urban future,” focusing on the opportunities and challenges of rapid urban growth.