Tnpsc Current Affairs in Tamil & English – 15th July 2024
1. அண்மையில், ‘டிஜிட்டல் பொருளாதார அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாடு
இ. பன்னாட்டு செலாவணி நிதியம்
ஈ. ஐநா வளர்ச்சித் திட்டம்
- ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு அண்மையில் டிஜிட்டல் பொருளாதார அறிக்கை-2024ஐ வெளியிட்டது. இது நிலையான எண்மமயமாக்கல் உத்திகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இணையப்பயனர்கள் 2005இல் இருந்த 1 பில்லியன் என்ற எண்ணிக்கையிலிருந்து 2023இல் 5.4 பில்லியனாக உயர்ந்துள்ளனர். ICT துறையின் உலகளாவிய GHG உமிழ்வு 2020இல் 1.5-3.2% ஆக இருந்தது. எண்மம் தொடர்பான கழிவுகள் 2010 முதல் 2022 வரை 30% அதிகரித்து, 10.5 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. 2022இல் தரவு மையங்கள் 460 டெராவாட் மணி நேரத்தை பயன்படுத்தியுள்ளன; 2026இல் இது 2 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதன்மையான கனிமங்களின் தேவை 2050ஆம் ஆண்டில் 500%ஆக உயரக்கூடும். சுழற்சிப் பொருளாதார மாதிரிகளை ஏற்றுக்கொள்வது, சுற்றுச்சூழல் தரநிலைகளை அமல்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்தல் மற்றும் நிலையான வணிக மாதிரியை மேம்படுத்துவது ஆகியவை இதன் பரிந்துரைகளில் அடங்கும்.
2. உம்லிங் லா கணவாய் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
அ. உத்தரகாண்ட்
ஆ. லடாக்
இ. சிக்கிம்
ஈ. இமாச்சல பிரதேசம்
- நியூஸ்பேஸ் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் 100 கிலோ எடையுள்ள மேக்ஸ் டேக் ஆஃப் வெயிட் (MTOW) UAVஐ உம்லிங் லா கணவாயில் வெற்றிகரமாக சோதித்தது. லடாக் மலைத்தொடரை ஒட்டி கீழை லடாக்கில் 19,024 அடி உயரத்தில் அமைந்துள்ள உம்லிங் லா கணவாய், ஹிமாங்க் திட்டத்தின்கீழ் எல்லைப்புற சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட உலகின் மிகவுயரமான சாலையாகும். இந்தச் சாலை, ஆதிக்க எல்லைக் கோட்டிற்கான இணைப்பை மேம்படுத்துகிறது மற்றும் சிசும்லே–டெம்சொக் பிரிவில் உள்ள உள்ளூர் சாலை இணைப்பை லே வரை மேம்படுத்தி, சுற்றுலாவை மேம்படுத்துகிறது. லடாக்கில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க கணவாய்களில் கர்துங் லா, சாங் லா மற்றும் டாங்லாங் லா ஆகியவை அடங்கும்.
3. ‘Salvinia molesta’ என்றால் என்ன?
அ. ஆக்கிரமிப்புக் களை
ஆ. சிறுகோள்
இ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
ஈ. AI கருவி
- பிரேசிலைச் சேர்ந்த Cyrtobagus salvinia என்ற அயல் திணைக்குரிய வண்டினமானது, மத்திய பிரதேச மாநிலத்தின் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள சரணி நீர்த்தேக்கத்தில் (சாத்புரா அணை) விரவியிருந்த ஆக்கிரமிப்புக் களையான ‘Salvinia molesta’ஐ முற்றாக அழித்துள்ளது. நர்மதையாற்றின் கிளையாறான தவா ஆற்றில் அமைந்துள்ள இந்த நீர்த் தேக்கம், “நீர்ப்பரணி” அல்லது “சீன ஜாலார்” என்றும் அழைக்கப்படும் பிரேசிலை பூர்வீகமாகக்கொண்ட தானே மிதந்து வாழும் ஒரு நீர்வாழ் பரணியாகும். இந்தக் களை கேரளா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிராவின் சூழலியலையும் பாதித்து வருகிறது.
4. அண்மையில், எந்தத்தொலைநோக்கிக்கான அகச்சிவப்பு விண்மீன் பட்டியலை உருவாக்குவதற்காக பொதுவளக் கருவியை இந்திய அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்?
அ. இமயமலை சந்திரா தொலைநோக்கி
ஆ. முப்பது மீட்டர் தொலைநோக்கி
இ. கேஸ்கிரேன் தொலைநோக்கி
ஈ. GROWTH-இந்தியா தொலைநோக்கி
- முப்பது மீட்டர் தொலைநோக்கிக்கான அகச்சிவப்பு விண்மீன் பட்டியலை உருவாக்க இந்திய அறிவியலாளர்கள் ஒரு பொதுவளக்கருவியை உருவாக்கியுள்ளனர். பன்னாட்டளவிலான இத்திட்டம், உலகின் அதிநவீன ஒளியியல் மற்றும் அகச்சிவப்பு ஆய்வகமாக பேரண்டத்தைப்பற்றிய நமது புரிதலில் புரட்சியை ஏற்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. 492 அறுகோணப்பிரிவுகளைக்கொண்ட 30 மீட்டர் பிரிக்கப்பட்ட முதன்மைக் கண்ணாடி இந்தத் தொலைநோக்கியின் முதன்மை அம்சங்களுள் அடங்கும்; இது வட அரைக்கோளத்திலேயே மிகப்பெரியதாகும்.
5. அண்மையில், 2024 – NATO உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. வாஷிங்டன் DC
ஆ. லண்டன்
இ. பாரிஸ்
ஈ. சிட்னி
- வாஷிங்டன் DCஇல் நடைபெற்ற அண்மைய NATO உச்சிமாநாட்டின்போது உக்ரைன் நாட்டை உறுப்பினாராக்கிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் உக்ரைனுக்கு குறைந்தபட்சம் 40 பில்லியன் யூரோக்கள் ($43.28 பில்லியன்) இராணுவ உதவியை வழங்கவும் அக்கூட்டணி பரிசீலித்தது. NATO என்பது 32 உறுப்புநாடுகளை உள்ளடக்கிய ஓர் அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.
6. போஜ் ஈரநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. மத்திய பிரதேசம்
இ. கேரளா
ஈ. இமாச்சல பிரதேசம்
- மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலில் அமைந்துள்ள போஜ் ஈரநிலம் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக ராம்சர் மாநாட்டின் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் உள்ளது. அவ்வீரநிலத்தின் நீர்ப்பிடிப்புப்பகுதியை பாதிக்கும் சாலைகட்டுமானம் குறித்த திட்டத்தால் இவ்வபாயம் எழுந்துள்ளது.
- ராம்சர் மாநாட்டின் செயலகம் இந்தியாவிடமிருந்து இதற்கான விளக்கத்தைக் கோரியுள்ளது; இது பட்டியலிலிருந்து நீக்கம் செய்வதற்கான செயல்முறையின் முதல் படியாகும். ஈரநிலங்களுக்கான மைய அதிகாரமாக விளங்கும் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இக்கட்டுமானம் ஈரநிலத்தின் சுற்றுச்சூழல் தன்மையை மாற்றுமா என்பதை மதிப்பிட்டு அறிக்கையை அனுப்பும்.
7. ‘Squalus hima’ என்றால் என்ன?
அ. இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை நாய்மீன் சுறா
ஆ. அரபிக்கடலில் காணப்படும் ஒரு புதிய வகை பவழப்பாறைகள்
இ. கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஓர் அழிந்து வரும் தவளை இனம்
ஈ. வடகிழக்குப்பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிலந்தி இனம்
- இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தைச்சேர்ந்த அறிவியலாளர்கள், கேரளத்தின் தென்மேற்குக் கடற்கரையில், புதிய ஆழ்கடல் நாய்மீன் சுறா இனமான, ‘Squalus hima’ஐக் கண்டுபிடித்துள்ளனர். ‘Spurdogs‘ என்று அழைக்கப்படும் இந்த இனமானது, மென்மையான முதுகுத்துடுப்பு முதுகெலும்புகள், ஒரு சிறிய வாய் மற்றும் உடலில் புள்ளிகள் ஏதுமற்று காணப்படுகிறது. முதுகெலும்பு எண்ணிக்கை, பற்கள் எண்ணிக்கை மற்றும் துடுப்பமைப்பு ஆகியவற்றில், ‘Squalus hima’ பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுகிறது. குவாலீன் நிறைந்த கல்லீரல் எண்ணெய்க்காகவும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிற்காகவும் இது முக்கியமாக பயன்படுகிறது.
8. 2024 – வேளாண் தலைமைத்துவ விருதுகளில், கீழ்க்காணும் எம்மாநிலம், ‘2024 – தோட்டக்கலையில் சிறந்த மாநிலம்’ என்ற விருதை வென்றது?
அ. அஸ்ஸாம்
ஆ. அருணாச்சல பிரதேசம்
இ. நாகாலாந்து
ஈ. சிக்கிம்
- பல்வேறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் புதுமையான தோட்டக்கலை திட்டங்களுக்காக நாகாலாந்து, ‘2024 – தோட்டக்கலையில் சிறந்து விளங்கும் மாநிலம்’ என்ற விருதை வென்றது. பெண்கள் வள மேம்பாடு மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சர் சல்ஹூதுவோனுவோ குரூஸ் புது தில்லியில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். அம்மாநிலத்தின் தோட்டக்கலைத் துறையானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்ததோடு மூன்று பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற பதிவும் செய்துள்ளது. நாகாலாந்து மாநிலம் பதிமூன்று விவசாயிகளுடன் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்கி, 6,800 ஹெக்டேர் நிலங்களுக்கு இயற்கை முறை சான்றளித்து, தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
9. எந்த வகை கொசுக்களால் டெங்கு (எலும்புமுறிவுக் காய்ச்சல்) பரவுகிறது?
அ. அனோபிலிஸ் கொசுக்கள்
ஆ. ஏடிஸ் கொசுக்கள்
இ. கியூலெக்ஸ் கொசுக்கள்
ஈ. கியூலிசெட்டா கொசுக்கள்
- கர்நாடகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவிவருவதைத் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது கர்நாடக மாநில உயர்நீதிமன்றம். வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பொதுவாகக் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்றுநோயான டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. பொதுவாக இந்த நோய்த்தொற்று சாதாரண அறிகுறியையே கொண்டிருந்தாலும், சில சமயங்களில் குருதிப்போக்குக் காய்ச்சல், விரைவான சுவாசம், வாந்தி மற்றும் ஈறுகளில் இரத்தப்போக்கு ஆகியவற்றையும் இது ஏற்படுத்துகிறது. ஆண்டுதோறும் 400 மில்லியன் பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.இந்நோய்த்தொற்றுக்கென குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை.
10. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தின்கீழ் (TDF) ஏழு புதிய தனியார்துறை திட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற முன்னெடுப்பின்கீழ் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை மேம்படுத்துவதற்காக தொடக்கப்பட்ட TDF திட்டம் என்பது DRDOஆல் செயல்படுத்தப்படும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத் திட்டமாகும். இது MSMEகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிக்கிறது. இது `50 கோடி வரை செலவாகும் திட்டங்களுக்கு 90% வரை நிதியுதவி அளிக்கிறது.
11. தாராளமயமாக்கப்பட்ட பணமனுப்பும் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்தல்
ஆ. இந்தியாவிற்குப் புறத்தே நிதியை அனுப்பும் செயல்முறையை எளிமைப்படுத்துவது & நெறிப்படுத்துவது
இ. அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகளை இந்தியாவுக்கு வர ஊக்குவிப்பது
ஈ. இந்தியாவுக்குள் அந்நியச் செலாவணி வருவதைக் கட்டுப்படுத்துதல்
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அண்மையில் குஜராத் மாநிலத்தில் உள்ள GIFT நகரத்தில் உள்ள பன்னாட்டு நிதிச் சேவை மையங்களில் தாராளமயமாக்கப்பட்ட பணமனுப்பும் திட்டத்தின்கீழ், அயல்நாட்டு நாணயக் கணக்குகளைத் தொடங்குவதற்கு குடியுரிமையுள்ள நபர்களுக்கு அனுமதி வழங்கியது. 2004ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட பணமனுப்பும் திட்டமானது இந்தியாவிற்குப் புறத்தே பணம் அனுப்புவதை எளிதாக்குகிறது. இதன்மூலம் ஒரு நிதியாண்டிற்கு $250,000 வரை அனுப்பவியலும். இது பெருநிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை -களைத் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நடப்பு அல்லது மூலதனக் கணக்குப் பரிவர்த்தனைகளை உள்ளடக்கும்.
12. அண்மையில், ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
அ. ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UNDESA)
ஆ. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)
இ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)
ஈ. உலக வங்கி
- ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது (UN-DESA) அண்மையில் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2080களின் நடுப்பகுதியில் உலக மக்கள்தொகை 10.3 பில்லியனாக உயரும், 2024இல் அது 8.2 பில்லியனாக இருக்கும்.
- இவ்வறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளில் தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.25 என்ற அளவிலும் ஆயுட்காலம் 73.3 ஆண்டுகளாக இருக்கும் என்பதும் அடங்கும். 2060களின் முற்பகுதியில் இந்தியாவின் மக்கள்தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. நேபாள பிரதமராக பதவியேற்றார் சர்மா ஓலி.
நேபாள நாட்டின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாாக்சிஸ்ட் லெனினிஸ்ட் (CPN-UML) கட்சித் தலைவர் கே பி சர்மா ஓலி பதவியேற்றார்.
2. நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக்கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்கருவிகளானது வெவ்வேறு வடிவங்களில் கிடைத்துள்ளன. முற்காலத்தில் நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன், உணவுப்பொருள்களை கிழிக்கவும், வெட்டவும் மற்றும் விலங்குகளை வேட்டையாடவும், இயற்கையாகக் கிடைக்கும் கற்களை உடைத்து அவற்றில் கூர்மையானவற்றை ஆயுதங்களாக -வும், கருவிகளாகவும் பயன்படுத்தி வந்தனர்.
1. Which organization recently released ‘Digital Economy Report 2024’?
A. World Bank
B. UN Trade and Development
C. International Monetary Fund
D. UN Development Programme
- The UN Trade and Development recently released the Digital Economy Report 2024. It emphasizes the need for sustainable digitalization strategies. Internet users grew from 1 billion in 2005 to 5.4 billion in 2023. The ICT sector’s global GHG emissions were 1.5-3.2% in 2020. Digital-related waste surged 30% from 2010 to 2022, reaching 10.5 million tonnes. Data centers consumed 460 terawatts hours in 2022, expected to double by 2026. Critical mineral demand may surge by 500% by 2050.
- Recommendations include adopting circular economy models, enforcing environmental standards, investing in renewable energy, and promoting sustainable business models.
2. Umlingla Pass is located in which state/UT?
A. Uttarakhand
B. Ladakh
C. Sikkim
D. Himachal Pradesh
- NewSpace Research and Technologies successfully tested a 100-kg Max Take Off Weight (MTOW) UAV at Umling La Pass. Located at 19,024 ft. in Eastern Ladakh along the Ladakh Range, Unming La Pass is the highest motorable road in the world, constructed by the Border Road Organization under Project Himank. The road enhances connectivity to the Line of Actual Control (LAC) and improves local connectivity in the Chisumle-Demchok sector to Leh, boosting tourism. Other significant passes in Ladakh include Khardung La, Chang La, and Tanglang La.
3. What is ‘Salvinia molesta‘?
A. Invasive weed
B. Asteroid
C. Earth observation satellite
D. AI Tool
- An exotic host-specific beetle, Cyrtobagus salvinia from Brazil, has eradicated the invasive weed Salvinia molesta from Sarani Reservoir (Satpura Dam) in Betul district, Madhya Pradesh. Located on the Tawa River, a tributary of the Narmada River, this reserve faced issues due to Salvinia molesta, a free-floating aquatic fern native to Brazil, also known as “Water Fern” or “Chinese Jhalaar.” This weed also affects the ecology of Kerala, Odisha, Uttarakhand, and Maharashtra.
4. Recently, Indian scientists have developed an open-source tool to generate an infrared star catalogue for which telescope?
A. Himalayan Chandra Telescope
B. Thirty Meter Telescope
C. Cassegrain Telescope
D. GROWTH-India Telescope
- Indian scientists have developed an open-source tool to generate an infrared star catalogue for the Thirty Meter Telescope (TMT). This international project aims to revolutionize our understanding of the universe as the world’s most advanced optical and infrared observatory. Key features include a 30-meter segmented primary mirror composed of 492 hexagonal segments, making it the largest in the Northern Hemisphere.
5. Recently, where was the NATO Summit 2024 held?
A. Washington D.C.
B. London
C. Paris
D. Sydney
- The recent NATO summit in Washington, D.C., extensively discussed Ukraine’s potential membership. The alliance also considered providing at least €40 billion ($43.28 billion) in military aid to Ukraine over the next year. NATO is an intergovernmental military alliance comprising 32 member states.
6. Bhoj Wetland is located in which state?
A. Tamil Nadu
B. Madhya Pradesh
C. Kerala
D. Himachal Pradesh
- Bhoj Wetland in Bhopal, Madhya Pradesh is at risk of being delisted from the Ramsar Convention’s list of Wetlands of International Importance due to potential ecological damage. Concerns have been raised about proposed road construction impacting the wetland’s catchment area. The Ramsar Convention Secretariat has requested clarification from India, marking the first step in the delisting process. India’s Environment Ministry, the nodal authority for wetlands, will assess whether the construction will alter the wetland’s ecological character.
7. What is ‘Squalus hima’?
A. A new species of dogfish shark discovered from southwest coast of India
B. A novel type of coral reefs found in Arabian Sea
C. An endangered frog species found in eastern ghats
D. A newly discovered species of spider found in northeastern region
- Scientists from the Zoological Survey of India discovered a new deep-water dogfish shark species, Squalus hima, off Kerala’s southwest coast. This genus, known as spurdogs, features smooth dorsal fin spines, a small mouth, and no body spots. Squalus hima is distinct from other species in vertebrae count, teeth count, and fin structure. Exploited for liver oil rich in squalene, it’s crucial for pharmaceuticals and cosmetics.
8. Which state won the ‘Best State in Horticulture Award 2024’ in the Agriculture Leadership Awards 2024?
A. Assam
B. Arunachal Pradesh
C. Nagaland
D. Sikkim
- Nagaland won the ‘Best State in Horticulture Award 2024’ for innovative horticulture programs benefiting many farmers and rural people. Women Resource Development and Horticulture Minister Salhoutuonuo Kruse received the award in New Delhi. The state’s horticulture sector enhanced livelihoods, created jobs, ensured nutritional security, and achieved GI registration for three crops. Nagaland formed 13 farmers’ producer companies and certified 6,800 hectares organically, earning national recognition.
9. Dengue (break-bone fever) is transmitted by which type of mosquitoes?
A. Anopheles mosquitoes
B. Aedes mosquitoes
C. Culex mosquitoes
D. Culiseta mosquitoes
- The High Court of Karnataka took suo motu cognizance of the dengue rise across the state. Dengue, a mosquito-borne viral infection common in tropical and subtropical areas, is spread by Aedes mosquitoes. While many infections are mild, severe cases can cause dengue hemorrhagic fever, leading to rapid breathing, vomiting, and bleeding gums. With 400 million infections annually, treatment focuses on supportive care, as no specific medicine exists.
10. Technology Development Fund scheme is a programme of which ministry?
A. Ministry of Science and Technology
B. Ministry of Home Affairs
C. Ministry of Urban Development
D. Ministry of Defence
- The Defence Research and Development Organisation (DRDO) sanctioned seven new private sector projects under the Technology Development Fund (TDF) scheme. Established to promote self-reliance in defence technology under the ‘Make in India’ initiative, the TDF is a Ministry of Defence program executed by DRDO. It supports MSMEs and startups, providing up to 90% funding for projects costing up to INR 50 crore.
11. What is the main purpose of the Liberalised Remittance Scheme (LRS)?
A. To increase foreign direct investment in India
B. To simplify and streamline the process of remitting funds outside India
C. To encourage foreign tourists to visit India
D. To control the flow of foreign currency into India
- The Reserve Bank of India (RBI) recently allowed resident individuals to open Foreign Currency Accounts (FCA) in International Financial Services Centres (IFSCs) at GIFT City, Gujarat, under the Liberalised Remittance Scheme (LRS).
- Introduced in 2004, LRS simplifies remitting funds outside India, allowing residents, including minors, to remit up to USD 250,000 per financial year. This excludes corporates and trusts, and covers any permissible current or capital account transactions.
12. Which organization recently released the ‘World Population Prospects Report 2024’?
A. United Nations Department of Economic and Social Affairs (UNDESA)
B. United Nations Development Programme (UNDP)
C. United Nations Environment Programme (UNEP)
D. World Bank
- The United Nations Department of Economic and Social Affairs (UN-DESA) recently released the World Population Prospects Report, projecting the global population to peak at 10.3 billion by the mid-2080s, up from 8.2 billion in 2024. Key findings include a current fertility rate of 2.25 births per woman and a life expectancy of 73.3 years. India’s population is expected to peak in the early 2060s.