TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 14th October 2024

1. கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தின் பங்கேற்பு வன மேலாண்மை திட்டத்தின் பெயர் என்ன?

அ. விடியல் வனப்பாதுகாப்பு சங்கம்

ஆ. மறையூர் முன்னெடுப்பு

இ. சந்தனமர பாதுகாப்பு திட்டம்

ஈ. புலிகள் பாதுகாப்பு அமைப்பு

  • கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தில் உள்ள பங்கேற்பு வன மேலாண்மை திட்டம், “விடியல் வனப்பாதுகாப்பு சங்கம் – The Dawn Forest Protection Group” என்று அழைக்கப்படுகிறது. முன்னாள் வேட்டையாடிகளை தீவிரமாக ஈடுபடுத்துகிற இத்திட்டம், அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டுதல் மற்றும் வேட்டையாடுதல் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற மாற்று வாழ்வாதாரங்களை வழங்குகிறது. பெரியாறு புலிகள் சரணாலயத்தில் வேட்டையாடுவதை கணிசமாகக் குறைத்து, அப்பகுதியின் சந்தனக்காப்புக்காடுகளைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் திகழ்கிறது.

2. அண்மையில், கர்நாடகாவின் எந்தப் புல்வெளி பாதுகாப்பு இருப்பாக அறிவிக்கப்பட்டது?

அ. சித்ரதுர்கா புல்வெளி

ஆ. கோலார் புல்வெளி

இ. ஹெசரகட்டா புல்வெளி

ஈ. நாகர்ஹோலே புல்வெளி

  • கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் அண்மையில் ஹெசரகட்டா புல்வெளியை பெரும் ஹெசரகட்டா புல்வெளி பாதுகாப்பு இருப்பாக அறிவிக்க ஒப்புதலளித்தது. நகர்ப்புற விரிவாக்கத்தின் மத்தியில் பெங்களூருவில் பசுமையான இடங்களைப் பாதுகாப்பதை இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பகுதி பல ஏரிகள் மற்றும் வனப்பகுதிகள் உட்பட 5,010 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நீண்டகால கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண்கிறது.

3. அண்மையில், இந்தியாவால் பொதுச்சுகாதாரப்பிரச்சனை என்பதிலிருந்து நீக்கப்பட்ட, ‘கண்ணிமை நோய்’ என்பது என்ன வகையான தொற்று?

அ. பாக்டீரியா

ஆ. பூஞ்சை

இ. வைரஸ்

ஈ. ஒட்டுண்ணி

  • உலக சுகாதார நிறுவனமானது இந்தியா ‘கண்ணிமை நோய் – Trachoma’ஐ ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனை என்பதிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தச் சாதனையை எட்டிய மூன்றாவது நாடு இந்தியா. ‘Chlamydia Trachomatis’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிற கண்ணிமை நோயானது கண்களைப்பாதிக்கிறது. இது பாதிக்கப்பட்ட நபரின் கண்கள், கண்ணிமைகள், மூக்கு (அ) தொண்டையிலிருந்து சுரக்கும் தொடர்புமூலம் பரவுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மீளமுடியாத குருட்டுத்தன்மைக்கு வழி கோலுகிறது. மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளில் உள்ள சமூகங்களை இது முதன்மையாகப் பாதிக்கிறது. உலகளவில் 150 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 6 மில்லியன் பேர் பார்வையற்றவர்கள் என்ற நிலையில் உள்ளனர்.

4. அண்மையில், உஸ்தாத் அலாவுதீன் கான் விழாவை ஏற்பாடு செய்த மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உஸ்தாத் அலாவுதீன் கான் விழா நடத்தப்பட்டது. மத்திய பிரதேசத்தின் மைகார் என்ற இடத்தில் நடைபெறும் இந்த விழா புகழ்பெற்ற இசைக்கலைஞர் உஸ்தாத் அலாவுதீன் கானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து பல புகழ்பெற்ற பிரமுகர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது மத்திய பிரதேச கலாசாரத்துறை, உஸ்தாத் அலாவுதீன் கான் இசை மற்றும் கலை அகாதெமி மற்றும் மைகார் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அக்.10 வரை இது நடக்கிறது. உஸ்தாத் அலாவுதீன் கான் மத்திய பிரதேசத்தின் இசை பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அறியப்பட்டவராவார்.

5. 2024 – இயற்பியலுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

அ. டொனால்ட் பி. ஷ்னைடர் மற்றும் ஜோயல் நாதன் பட்லர்

. ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன்

இ. சுபீர் சர்க்கார் மற்றும் ஜோஸ் பிளாண்ட்- ஹாவ்தோர்ன்

ஈ. மேக்ஸ் பிளாங்க் மற்றும் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன்

  • 2024 – இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு செயற்கை நரம்பியல் வலையமைப்புகள்மூலம் இயந்திரக்கற்றலில் அவர்கள் மேற்கொண்ட பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. இயந்திரக்கற்றல் என்பது செயற்கை நுண்ணறிவின் ஒரு கிளையாகும்; இது தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் அமைப்புகளை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துகிறது. இயந்திரக்கற்றல் அமைப்புகளை மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. இயந்திரக்கற்றலில் உள்ள வினைச்சரங்கள் தரவுகளில் உள்ள உறவுகள் மற்றும் வடிவங்களை அடையாளம் கண்டு, கணிப்புகளை உருவாக்கி, தகவலை வகைப்படுத்துகின்றன.

6. அண்மையில், MACE கூர்நோக்ககம் திறக்கப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக்

ஆ. உத்தரகாண்ட்

இ. இமாச்சல பிரதேசம்

ஈ. இலட்சத்தீவுகள்

  • லடாக்கின் ஹான்லேயில் DAEஇன் செயலாளரும் அணுசக்தி ஆணையத்தின் தலைவருமானவரால் MACE கூர் நோக்ககம் திறந்துவைக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய இமேஜிங் செரென்கோவ் தொலைநோக்கியைக் கொண்டுள்ள இது, உலகின் அதிக உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கியாகும்; இது சுமார் 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. Major Atmospheric Cherenkov Experiment (MACE) ஆனது பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ECIL மற்றும் பிற இந்திய தொழில்துறை பங்காளர்களின் உதவியுடன் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் (BARC) உள்நாட்டில் கட்டப்பட்ட இது, வானியற்பியல் மற்றும் துகள் முடுக்கம்பற்றிய ஆய்வுகளை மேம்படுத்தும். சூப்பர்நோவாக்கள், கருந்துளைகள் மற்றும் காமா-கதிர் வெடிப்புகள்போன்ற நிகழ்வுகள் குறித்த உலகளாவிய ஆராய்ச்சிக்கு உதவும் MACE, உயராற்றல்கொண்ட காமா கதிர்களைக் கண்காணிக்கும்.

7. உலக ஊறுபந்து (Pickleball) சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் நாடு எது?

அ. மியான்மர்

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. நேபாளம்

  • அகில இந்திய ஊறுபந்து சங்கம் (AIPA) முதன்முறையாக இந்தியாவில் உலக ஊறுபந்து சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது. இந்த நிகழ்வு, 2024 நவ.12-17 வரை மும்பையில் நடைபெறவுள்ளது. வியட்நாம் மற்றும் பாலியில் நடந்த போட்டிகளைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சிறந்த ஊறுபந்து வீச்சாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். ஆஸ்திரேலியா, வியட்நாம், தைவான், போலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 6 முதல் 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 650 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

8. லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்கவுள்ள அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. ஜல் சக்தி அமைச்சகம்

இ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • மத்திய அமைச்சரவை 2024 அக்.09 அன்று குஜராத்தின் லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்க ஒப்புதலளித்தது. இவ்வளாகம் பழங்கால சிந்து சமவெளி லோத்தலில் 2 கட்டங்களாக உருவாக்கப்படும். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச சுற்றுலாத்தலமாக இது திகழும். மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துகள் அமைச்சகம், குஜராத் அரசுடன் இணைந்து, சாகர்மாலா திட்டத்தின்கீழ் திட்டத்தை மேற்பார்வையிட்டு வருகிறது. 400 ஏக்கர் பரப்பில், சுமார் `4500 கோடி செலவில் 2024 மார்ச்சில் இத்திட்டம் தொடங்கும்.

9. அண்மையில், ருவாண்டாவில் அதிக இறப்பு விகிதத்துடன் தோன்றியுள்ள வைரஸ் எது?

அ. குரங்கம்மை

ஆ. மார்பர்க்

இ. எபோலா

ஈ. ஜப்பானிய மூளையழற்சி

  • ஃபிலோவைரஸ் குடும்பத்தின் ஒருபகுதியான மார்பர்க் வைரஸ், கொடிய நோய்க்கிருமிகளுள் ஒன்றாகும்; இதில் இறப்பு விகிதம் 24%-88% வரை இருக்கும். அண்மையில் ருவாண்டாவில் நிகழ்ந்த இதன் பாதிப்பு 46 நோய்த் தொற்றுகளில் 12 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது; இது முக்கியமாக மருத்துவ ஊழியர்களை பாதிக்கிறது.
  • பாதிக்கப்பட்ட உடல் திரவங்கள் மற்றும் அசுத்தமான பொருட்களுடனான நேரடி தொடர்புமூலம் மார்பர்க் பரவுகிறது. அதீத காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலி ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகளில் அடங்கும்; இரத்தப்போக்கு அடுத்த அறிகுறியாகும். தற்போது, ​​அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளென இதற்கு எதுவும் இல்லை.

10. அண்மையில், இந்தியக்கடற்படையில் பணியில் சேர்க்கப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆய்வுக்கப்பலின் பெயர் என்ன?

அ. நிர்தேஷக்

ஆ. விக்ராந்த்

இ. காவேரி

ஈ. கலஹாரி

  • அண்மையில், கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட நான்கு ஆய்வுக்கப்பல்களில் இரண்டாவதான நிர்தேஷக்கை இந்தியக்கடற்படை பெற்றது. ‘தற்சார்பு இந்தியா’ மீதான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ‘நிர்தேஷக்’ 80%க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வுக்கப்பலான இது, துறைமுகங்கள் மற்றும் கடலோர மற்றும் ஆழமான நீர்நிலை ஆய்வுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கப்பல் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கு கடல்சார் மற்றும் புவி இயற்பியல் தரவுகளையும் இது சேகரிக்கும்.

11. உலக அஞ்சல் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.08

ஆ. அக்டோபர்.09

இ. அக்டோபர்.10

ஈ. அக்டோபர்.11

  • அன்றாட வாழ்வில், உலகளாவிய தகவல் தொடர்பு & பொருளாதார வளர்ச்சியில் அஞ்சலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்.09 அன்று உலக அஞ்சல் நாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அஞ்சல் பரிமாற்றத்தை மாற்றியமைத்த சுவிட்சர்லாந்தின் பெர்னில் 1874இல் நிறுவப்பட்ட உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் (UPU) 150ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு குறிக்கிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “150 Years of Enabling Communication and Empowering People Across Nations” என்பதாகும்.
  • பன்னாட்டு அஞ்சல் சேவைகளை நெறிப்படுத்தவும், நாடுகளுக்கு இடையே எளிதான அஞ்சல் பரிமாற்றத்திற்காக ஓர் ஒருங்கிணைந்த அஞ்சலமைப்பை உருவாக்கவும் UPUஇன் முயற்சிகளுக்கு இது மதிப்பளிக்கிறது.

12. சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக, ‘தட்பவெப்பநிலை நிறுவனத்தைத்’ தொடங்கியுள்ள பல்கலை எது?

அ. லக்னோ பல்கலைக்கழகம்

ஆ. ஆமதாபாத் பல்கலைக்கழகம்

இ. மும்பை பல்கலைக்கழகம்

ஈ. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

  • ஆமதாபாத் பல்கலைக்கழகம் ‘தட்பவெப்பநிலை நிறுவனம் – The Climate Institute’ என்றவொன்றைத் தொடங்கி உள்ளது. இது ஆராய்ச்சி, கல்வி மற்றும் தட்பவெப்பநிலை சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத் தலைமைகளுக்காக இந்தியாவின் முதல் விரிவான தட்பவெப்பநிலை, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித்திட்டத்தை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இது 3 பகுதிகளில் இயங்குகிறது: ஆற்றல் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம்; நகரங்கள் & குடியிருப்புகள்; மற்றும் காற்று மற்றும் நீர். கொள்கை வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்க பல்துறைசார் ஆராய்ச்சி மற்றும் கூட்டாண்மைகளை இது ஊக்குவிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியா-ASEAN உறவை வலுப்படுத்த 10 அம்ச செயல்திட்டம் – பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.

இந்தியா மற்றும் ASEAN நாடுகள் இடையிலான விரிவான கூட்டுறவை வலுப்படுத்த 10 அம்ச செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், வியத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ASEAN கூட்டமைப்புக்கு நடப்பு ஆண்டில் லாவோஸ் தலைமை வகிக்கிறது. அந்நாட்டின் தலைநகர் வியன்டியனில், 21ஆவது இந்தியா-ASEAN உச்சிமாநாடு அக்.10 நடைபெற்றது.

2. TN – ALERT செயலி:

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தனியாக செயலி (TN-ALERT) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களையும், அடுத்த 5 நாள்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை தகவல்களையும் பெறலாம். மேலும் பெறப்பட்ட மழையளவு, அணைகளின் நீர்மட்டம், வெள்ளம் பாதிக்கும் வசிப்பிட பகுதிகள், பேரிடர் தொடர்பான புகார் பதிவு என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இச்செயலியில் உதவி எண்கள் என்ற பிரிவு தனியாக உள்ளது. அதிலிருந்து, மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையத்தையும், மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தையும் தொடர்புகொள்ளலாம்.

3. கொரிய சுற்றுலா அமைப்புடன் IRCTC ஒப்பந்தம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) கொரிய சுற்றுலா அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

1. What is the name of the participatory forest management project in Kerala’s Periyar Tiger Reserve?

A. Vidiyal Vanapathukappu Sangam

B. Marayoor Initiative

C. Sandalwood Conservation Project

D. Pulikal Pathukappu Amaippu

  • The participatory forest management project in Kerala’s Periyar Tiger Reserve is called “Vidiyal Vanapathukappu Sangam” which translates to “The Dawn Forest Protection Group” and primarily involves former poachers and sandalwood smugglers turned protectors of the reserve. This project actively engages former poachers, providing them with alternative livelihoods like tourist guiding and anti-poaching activities. The project has been credited with significantly reducing poaching in the Periyar Tiger Reserve and safeguarding the area’s sandalwood reserve.

2. Which grassland in Karnataka was recently declared a conservation reserve?

A. Chitradurga Grassland

B. Kolar Grassland

C. Hesaraghatta Grassland

D. Nagarhole Grassland

  • The Karnataka State Wildlife Board recently approved the declaration of Hesaraghatta grassland as the Greater Hesaraghatta Grassland Conservation Reserve. This decision aims to protect green spaces in Bengaluru amid urban expansion. The area encompasses 5,010 acres, including multiple lakes & forest areas. The move addresses long-standing demands for environmental conservation.

3. What kind of infection is Trachoma, recently eliminated by India as a public health problem?

A. Bacterial

B. Fungal

C. Viral

D. Parasitic

  • The World Health Organisation (WHO) has announced that India has eliminated Trachoma as a public health problem. India is the third country in the South-East Asia Region to achieve this milestone. Trachoma is caused by the bacterium Chlamydia Trachomatis and affects the eyes.
  • It spreads through contact with secretions from the eyes, eyelids, nose, or throat of infected individuals. If untreated, it can lead to irreversible blindness. It primarily affects communities in poor environmental conditions, with 150 million people worldwide at risk, including 6 million who are blind.

4. Which state recently organized the Ustad Allauddin Khan Festival?

A. Madhya Pradesh

B. Andhra Pradesh

C. Kerala

D. Karnataka

  • The Ustad Allauddin Khan Festival was recently organized in Madhya Pradesh. The festival is held in Maihar, Madhya Pradesh, and is dedicated to the renowned musician Ustad Allauddin Khan.
  • The three-day event features performances by many renowned personalities from across the country. It is organized by the Madhya Pradesh Culture Department, Ustad Allauddin Khan Music and Art Academy, and the Maihar District Administration, running until October 10. Ustad Allauddin Khan was a prominent figure in music, known for his efforts to promote Madhya Pradesh’s musical tradition and engage the younger generation.

5. Who have been awarded the 2024 Nobel Prize in physics?

A. Donald P. Schneider and Joel Nathan Butler

B. John Hopfield and Geoffrey Hinton

C. Subir Sarkar and Joss Bland- Hawthorn

D. Max Planck and Richard Feynman

  • The 2024 Nobel Prize in Physics has been awarded to John Hopfield and Geoffrey Hinton for their groundbreaking work in machine learning with artificial neural networks. Machine Learning (ML) is a branch of artificial intelligence (AI) focused on creating systems that learn from data. ML enables systems to adapt and improve as they gain more experience. Algorithms in ML identify relationships and patterns in data, making predictions and classifying information.

6. Recently, the MACE Observatory has been inaugurated in which state/UT?

A. Ladakh

B. Uttarakhand

C. Himachal Pradesh

D. Lakshadweep

  • The MACE Observatory was recently inaugurated by the Secretary of DAE and Chairman of the Atomic Energy Commission in Hanle, Ladakh. It is the largest imaging Cherenkov telescope in Asia and the world’s highest, located at an altitude of about 4,300 meters. The Major Atmospheric Cherenkov Experiment (MACE) aims to enhance international collaborations and strengthen India’s role in space research.
  • Indigenously built by the Bhabha Atomic Research Centre (BARC) with help from ECIL and other Indian industry partners, it will advance studies in astrophysics and particle acceleration. MACE will observe high-energy gamma rays, aiding global research on phenomena like supernovae, black holes, and gamma-ray bursts while supporting Ladakh’s socio-economic development.

7. Which country is the host of World Pickleball Championship series?

A. Myanmar

B. India

C. China

D. Nepal

  • The All-India Pickleball Association (AIPA) will host the World Pickleball Championship (WPC) Series in India for the first time. The event is scheduled for November 12th to 17th, 2024, in Mumbai. It will feature top pickleball talent from around the world, following successful tournaments in Vietnam and Bali. Approximately 650 players from 6 to 7 countries, including Australia, Vietnam, Taiwan, Poland, and Singapore, will participate.

8. Which ministry has developed the National Maritime Heritage Complex at Lothal?

A. Ministry of Defence

B. Ministry of Jal Shakti

C. Ministry of Ports, Shipping and Waterways

D. Ministry of Urban Development

  • The Union Cabinet approved the National Maritime Heritage Complex at Lothal, Gujarat, on 9 October 2024. This complex will be developed in two phases at the ancient Indus Valley site of Lothal. It aims to be an international tourist destination showcasing India’s maritime heritage from ancient to modern times. The Union Ministry of Ports, Shipping and Waterways, in collaboration with the Gujarat government, is overseeing the project under the Sagarmala scheme. Built on 400 acres, it will cost approximately Rs 4500 crore, with work beginning in March 2024.

9. Which virus has recently emerged in Rwanda with a high fatality rate?

A. Mpox

B. Marburg

C. Ebola

D. Japanese encephalitis

  • The Marburg virus, part of the filovirus family, is one of the deadliest pathogens, with case fatality rates ranging from 24% to 88%. The recent outbreak in Rwanda has already resulted in 12 deaths among 46 infections, predominantly affecting medical workers.
  • Marburg spreads through direct contact with infected bodily fluids and contaminated materials. Initial symptoms include high fever and severe headache, progressing to hemorrhagic symptoms. Currently, there are no approved vaccines for this viral infection.

10. What is the name of second indigenous Survey Vessel recently inducted in Indian Navy?

A. Nirdeshak

B. Vikrant

C. Kaveri

D. Kalahari

  • Recently, the Indian Navy received Nirdeshak, the second of four Survey Vessel ships, built at Garden Reach Shipbuilders & Engineers in Kolkata. Nirdeshak features over 80% indigenous content, reflecting the commitment to ‘Aatmanirbhar Bharat.’ These are the largest survey vessels in India, designed for comprehensive coastal and deep-water hydrographic surveys of ports and navigational channels. The ship will also gather oceanographic and geophysical data for both defense and civil applications.

11. Which day is observed as World Post Day?

A. October 8

B. October 9

C. October 10

D. October 11

  • World Post Day is celebrated every year on October 9 to highlight the importance of the postal system in daily life, global communication, and economic growth. This year marks the 150th anniversary of the Universal Postal Union (UPU), established in 1874 in Bern, Switzerland, which transformed international mail exchange.
  • The theme for this year, “150 Years of Enabling Communication and Empowering People Across Nations,” honors the UPU’s efforts to streamline international mail services and create a unified postal system for easier mail exchange between countries.

12. Which university has launched The Climate Institute to address environmental challenges?

A. Lucknow University

B. Ahmedabad University

C. Mumbai University

D. Madras University

  • Ahmedabad University has launched The Climate Institute, focusing on research, education, and impact to address climate issues. The Institute is developing India’s first comprehensive Climate, Energy, and Environmental education program for future leaders.
  • It operates in three areas: Energy and Climate Change, Cities and Settlements, and Air and Water, promoting interdisciplinary research and partnerships to inform policy design and innovation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!