TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 14th and 15th September 2024

1. இந்தியாவில் மின்சார அடிப்படையிலான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட, ‘PM e-DRIVE’ திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. புவி அறிவியல் அமைச்சகம்

. கனரக தொழில்துறை அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் மின்சார அடிப்படையிலான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, “புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார ஓட்டுதல் புரட்சி (PM e-Drive)” என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான கனரக தொழில்கள் அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளில் `10,900 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • பொதுப்போக்குவரத்துக்கு ஆதரவளிப்பதன்மூலம் வெகுஜன இயக்கத்தை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. PM e-Drive திட்டத்தின் முதன்மை நோக்கம், EVகளை வாங்குவதற்கு முன்கூட்டியே ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும், EVகளுக்கான அத்தியாவசிய மின்னேற்ற (charging) உள்கட்டமைப்பை நிறுவுவதன்மூலமும் அவற்றை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதாகும். PM e-DRIVE திட்டம், போக்குவரத்தின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் EVகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடுவணரசின் இந்த முன்முயற்சி சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நிவர்த்திசெய்வதற்கும், நிலையான போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தயாராகவுள்ளது.

2. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் எந்நகரத்தில், “இந்திய பாதுகாப்பு விமானக்கண்காட்சியை (IDAX-24)” திறந்து வைத்தார்?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. ஜோத்பூர்

ஈ. வாரணாசி

  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தானின் ஜோத்பூரில், “இந்திய பாதுகாப்பு விமானக் கண்காட்சியை (IDAX-24)” தொடங்கி வைத்தார் மற்றும் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் தரங் சக்தி பயிற்சியையும் பார்வையிட்டார். செப்டம்பர் 12-14, 2024 வரை நடைபெற்ற இக்கண்காட்சி, தொழில்துறை பங்கேற்பு மற்றும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது. DPSUs, DRDO, தனியார் தொழில்துறைகள் மற்றும் புத்தொழில்கள் உள்ளிட்ட இந்திய விமானப்போக்குவரத்துத்துறையானது, உலகளாவிய விமானப்படை முடிவெடுப்பவர்கள் மற்றும் இறுதிப்பயனர்களுக்கு தங்கள் திறன்களை நிரூபிக்க இந்த நிகழ்வு வாய்ப்பளித்தது.

3. அண்மையில், மகாராஷ்டிர அரசு அதன் எந்த மாவட்டத்தில் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதாக அறிவித்தது?

அ. நாசிக்

ஆ. அமராவதி

இ. வார்தா

ஈ. லத்தூர்

  • பழங்குடியின மாணாக்கரின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கு ஆதரவாக நாசிக்கில் பழங்குடியினர் பல்கலைக் கழகம் நிறுவப்படும் என மகாராஷ்டிர ஆளுநர் CP இராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
  • மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரையில் தரமான கல்வியை அப்பல்கலைக்கழகம் வழங்கும். 80% இடங்கள் பழங்குடியின மாணாக்கர்க்கு ஒதுக்கப்படும். மாநிலப்பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், அத்தகைய நிறுவனங்களை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஆளுநருக்கு அதிகாரமுள்ளது. பழங்குடியினரின் போட்டித் திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த நவீன கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

4. அண்மையில், இந்தியா, கீழ்க்காணும் எந்த இடத்தில், Vertical Launch Short Range Surface to Air Missile (VLSRSAM)ஐ வெற்றிகரமாகச் சோதனைசெய்தது?

அ. சென்னை, தமிழ்நாடு

ஆ. சண்டிபூர், ஒடிசா

இ. பொக்ரான், இராஜஸ்தான்

ஈ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) இந்தியக்கடற்படையும் இணைந்து 2024 செப்.12 அன்று ஒடிசாவின் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பிலிருந்து Vertical Launch Short Range Surface to Air Missile (VLSRSAM)இன் பறப்புச்சோதனையை வெற்றிகரமாக நடத்தின. குறைந்த உயரத்தில் பறக்கும் அதிவேக வான்வழி இலக்கை குறிவைத்து நிலத்தை அடிப்படையாகக்கொண்ட ஏவுகலத்திலிருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாகச் செயல்பட்டது. இஸ்ரேலின் பராக்-1 ஏவுகணைக்கு மாற்றாக பயன்படுத்தப்படவுள்ள VL-SRSAMஐ பாரத் டைனமிக் நிறுவனம் தயாரிக்கும்.

5. அண்மையில், “BRICS தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்” நடைபெற்ற இடம் எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. பிரேசில்

  • BRICS தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தின்போது 12 செப்டம்பர் 2024 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்தார். 2024 அக்.22 முதல் 24 வரை கசானில் நடைபெறும் 16ஆவது BRICS உச்சிமாநாடு உட்பட, 2024ஆம் ஆண்டின் அனைத்து தொடர்புடைய கூட்டங்களையும் ரஷ்யா நடத்தும். BRICS தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செப்டம்பர்.11 முதல் 13, 2024 வரை நடைபெற்றது; இதில் இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா மற்றும் பிற 10 உறுப்புநாடுகள் கலந்துகொண்டன. இந்தக் கூட்டத்தை ரஷ்ய NSA செர்ஜி ஷோய்கு தொகுத்து வழங்கினார்.

6. அண்மையில், ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனாவின்கீழ் (AB-PMJAY) எந்த வயதுடைய மூத்த குடிமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்?

அ. 70 வயது அல்லது அதற்கு மேல்

ஆ. 65 வயது அல்லது அதற்கு மேல்

இ. 70 வயது அல்லது அதற்கு மேல்

ஈ. 75 வயது அல்லது அதற்கு மேல்

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின்கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதார பாதுகாப்பு வழங்க ஒப்புதலளித்தது. 6 கோடி மூத்த குடிமக்களைக்கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள், `5 இலட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டுடன் குடும்ப அடிப்படையில் பயனடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்புதலின்மூலம், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப்பொருட்படுத்தாமல், AB-PMJAYஇன் பலன்களைப்பெற தகுதியுடையவர்கள். 2018இல் தொடங்கப்பட்ட இத்திட்டம், தில்லி, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவைத்தவிர 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35.4 கோடி ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கியுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே காப்பீடு செய்யப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தங்களுக்கு ஆண்டுக்கு `5 இலட்சம் வரை கூடுதல் பலனைப்பெறுவார்கள். தனியார் சுகாதார காப்பீடுகள் அல்லது ஊழியர்களின் மாநில காப்பீட்டின்கீழ் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் AB-PMJAYஇன்கீழ் பலன்களைப்பெற திட்டம் தகுதியுடையதாகும்.

7. இந்தியாவின் எந்தப்பகுதிகளில் சோலைமந்திகள் முதன்மையாக காணப்படுகின்றன?

அ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ. இமயமலை

இ. வடகிழக்குப்பகுதி

ஈ. பன்னி புல்வெளிகள்

  • கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள சாமுண்டி மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சோலைமந்திக்குட்டி பிறந்துள்ளது. பழங்காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் ஒரு குரங்கினமான சோலைமந்திகள் (Macaca silenus) அதன் எல்லைகளை கூச்சலிடுவதன்மூலம் குறிக்கின்றன. 17 விதமான ஒலியெழுப்பல்களைக் கொண்டுள்ள அவைகளின் முகத்தைச்சுற்றி ஒரு சாம்பல் அமைப்பையும் சிங்கம்போன்ற வால் அமைப்பையும் கொண்டிருக்கும். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த விலங்கினங்கள், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மழைக்காடுகளில் வாழ்கின்றன. வாழ்விட அழிவால் இவ்வினம் அழிந்து வருகிறது.

8. அண்மையில், எந்த நாட்டுக்கான இந்தியத்தூதராக R ரவீந்திரா நியமிக்கப்பட்டார்?

அ. ஐஸ்லாந்து

ஆ. பல்கேரியா

இ. கிரேக்கம்

ஈ. குரோஷியா

  • ஐஸ்லாந்திற்கான அடுத்த தூதராக R ரவீந்திராவை வெளியுறவு அமைச்சகம் நியமித்தது. 1999ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியாவார் R ரவீந்திரா. அவர் தற்போது ஐநா அவையில் இந்தியாவின் துணை நிரந்தரப்பிரதிநிதியாக உள்ளார்.

9. “எதிர்கால தொற்றுநோய் ஆயத்த நிலை – நடவடிக்கைக்கான ஒரு கட்டமைப்பு” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. UNDP

இ. WHO

ஈ. FAO

  • “எதிர்கால தொற்றுநோய் ஆயத்தநிலை மற்றும் அவசரகால பதில் – நடவடிக்கைக்கான கட்டமைப்பு” என்ற தலைப்பிலான நிபுணர் குழு அறிக்கையை, NITI ஆயோக் வெளியிட்டது. இந்த அறிக்கையில் உள்ள நிபுணர் குழு, எந்தவொரு எதிர்கால பொதுச்சுகாதார அவசரநிலை (அ) தொற்றுநோயை எதிர்கொள்ளத் தயாராகவும், விரைவான நடவடிக்கை முறையைக் கொண்டிருக்கவும் நாட்டிற்கு ஒரு செயல்திட்டத்தை வழங்கியுள்ளது. COVID-19 தொற்று நோய், சந்தேகத்திற்கு இடமின்றி கடைசி தொற்றுநோய் அல்ல; எதிர்கால பொது சுகாதார அச்சுறுத்தல்களில் 75% விலங்குவழி அச்சுறுத்தல்களாக இருக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு உலகை எச்சரித்துள்ளது.
  • தொற்றுநோய்களுக்கான 100 நாள் நடவடிக்கை திட்டத்தை வழங்குகிற அறிக்கை, நிர்வாகம், தரவு மேலாண்மை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. டிஜிட்டல் கருவிகள் மற்றும் R&Dபோன்ற COVID-19 இன் போதான இந்தியாவின் முயற்சிகள் சிறப்பிக்கப்பட்டன. சட்டத்தை வலுப்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் திறனை வளர்ப்பதை இது பரிந்துரைக்கிறது. இது 60க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான ஆலோசனைகளை உள்ளடக்கியது. எதிர்கால பாதிப்புகளை சிறப்பாக தயாரித்து திறம்பட நிர்வகிப்பதை இந்தக் கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. அண்மையில், ‘ரங்கீன் மச்லி’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்

ஈ. விவசாய அமைச்சகம்

  • மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், புவனேஸ்வரில் உள்ள ICAR-மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் “ரங்கீன் மச்லி” திறன்பேசி செயலியைத் அறிமுகப்படுத்தினார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் ஆதரவுடன் ICAR – CIFAஆல் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, அலங்கார மீன்வளத்துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு ஆர்வலர்கள், மீன்வளக்கடை உரிமையாளர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு முக்கியமான அறிவு வளங்களை வழங்குகிறது.
  • “ரங்கீன் மச்லி” செயலி பிரபலமான அலங்கார மீன் இனங்கள் பற்றிய தகவல்களை எட்டு இந்திய மொழிகளில் பன்மொழி தகவல்களை வழங்குகிறது. இந்தச் செயலியின் முக்கிய அம்சங்களில் ஒன்று “மீன்வளக்கடைகளைக் கண்டறியும்” வசதியாகும்.

11. அண்மையில், செயல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளை நிறைவுசெய்த பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY), தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2017

ஆ. 2018

இ. 2019

ஈ. 2020

  • பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) 2020இல் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தது. இது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின்கீழ் உள்ள மீன்வளத்துறையின் முதன்மைத் திட்டமாகும். முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களின் கலவையின்மூலம் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதை இத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. PMMSY இரு கூறுகளைக் கொண்டுள்ளது: மத்தியத் துறைத்திட்டம் மற்றும் மத்திய நிதியுதவித் திட்டம். இந்தியா மீன் உற்பத்தியில் 3ஆவது இடத்திலும், மீன் வளர்ப்பில் 2ஆவது இடத்திலும் உள்ளது; அதில் ஆந்திர பிரதேசம் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மீன்பிடித்துறை 30 மில்லியனுக்கும் அதிகமான வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது.

12. அண்மையில், ஐநா பொதுச்சபையின் 79ஆவது அமர்வின்போது, ஐநா அரங்கில் இடம் தரப்பட்ட நாடு எது?

அ. பாலஸ்தீனம்

ஆ. ஏமன்

இ. ஆப்கானிஸ்தான்

ஈ. சூடான்

  • ஐநா பொதுச்சபையின் 79ஆவது அமர்வு நியூயார்க்கில் தொடங்கியது. பாலஸ்தீனம், ஐக்கிய நாடுகள் அவையின் முழு உறுப்பினராக இல்லாவிட்டாலும், பொதுச்சபை அரங்கில் உறுப்புநாடுகளுக்கு இடையே அதற்கு இருக்கை வழங்கப்பட்டது. பாலஸ்தீனத் தூதுவர் ரியாத் மன்சூர், இலங்கைக்கும் சூடானுக்கும் இடையில், “பாலஸ்தீன அரசு” என்று குறிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரதமர் நரேந்திர மோதி செப்.21-23 அமெரிக்கா பயணம்: குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.

குவாட் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும் ஐநாவில் நடைபெறும் ‘வருங்கால மாநாட்டில்’ உரை நிகழ்த்தவும் அமெரிக்காவுக்கு 3 நாள் அரசுமுறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோதி செல்கிறார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, அடுத்த ஆண்டு குவாட் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

1. ‘PM E-DRIVE Scheme’ is proposed by which ministry for promoting electric mobility in India?

A. Ministry of Earth Sciences

B. Ministry of Heavy Industries

C. Ministry of Housing and Urban Affairs

D. Ministry of New and Renewable Energy

  • The Union Cabinet approved the PM E-DRIVE Scheme to promote electric mobility, replacing the FAME programme. It has a budget of Rs 10,900 crore over two years, proposed by the Ministry of Heavy Industries. The scheme aims to boost electric vehicle adoption by offering upfront incentives for EV purchases. It focuses on building the required charging infrastructure to support EV use. The goal is to reduce the environmental impact of transportation and improve air quality. The scheme promotes EVs, mass public transport, and advanced EV technologies to enhance sustainability.

2. Defence Minister of India recently inaugurated “India Defence Aviation Exposition (IDAX-24)” in which city?

A. New Delhi

B. Chennai

C. Jodhpur

D. Varanasi

  • Defence Minister Rajnath Singh inaugurated “India Defence Aviation Exposition (IDAX-24)” in Jodhpur, Rajasthan and also observed the Tarang Shakti exercise at Jodhpur Air Force Station. The expo, held from September 12-14, 2024, featured industry participation and showcased various products and technologies. The event allowed the Indian Aviation Industry, including DPSUs, DRDO, private industries, and startups, to demonstrate their capabilities to global air force decision-makers and end users.

3. Recently, the Maharashtra government announced the establishment of a tribal university in which district?

A. Nashik

B. Amravati

C. Wardha

D. Latur

  • Maharashtra Governor C P Radhakrishnan announced the establishment of a tribal university in Nashik to support the development and future of tribal students. The university will offer quality education from Kindergarten to Post-graduation levels.
  • 80% of the seats will be reserved for tribal students. As the Chancellor of state universities, the Governor has the authority to establish and develop such institutions. The aim is to provide modern education to tribals to enhance their competitiveness and employability.

4. Recently, India successfully test-fired the Vertical Launch Short Range Surface to Air Missile (VLSRSAM) at which place?

A. Chennai, Tamil Nadu

B. Chandipur, Odisha

C. Pokhran, Rajasthan

D. Visakhapatnam, Andhra Pradesh

  • The Indian Navy and DRDO successfully tested the Vertical Launch Short Range Surface to Air Missile (VL-SRSAM) on 12 September 2024 at Chandipur Island, Odisha. This is DRDO’s second missile test, following the Agni-4 trial on 6 September 2024. The missile was launched from a vertical launcher and intercepted a high-speed target at low altitude using an advanced seeker. VL-SRSAM will replace Israel’s Barak-1 missile and be produced by Bharat Dynamic Limited.

5. Recently, where was the “BRICS National Security Advisers’ meeting” held?

A. Russia

B. China

C. India

D. Brazil

  • National Security Advisor Ajit Doval met Russian President Vladimir Putin on 12 September 2024 during the BRICS national security advisors meeting. Russia is the current chair of BRICS and will host all related meetings in 2024, including the 16th BRICS summit in Kazan from 22 to 24 October 2024. President Putin invited Prime Minister Narendra Modi to attend the summit. The BRICS national security advisors’ conclave took place in St. Petersburg from 11 to 13 September 2024, attended by 10 member countries, including India, Russia, Brazil, China, and others. The meeting was hosted by Russian NSA Sergei Shoigu.

6. Recently, senior citizens of which age has been included under Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PMJAY)?

A. 70 years of age or above

B. 65 years of age or above

C. 70 years of age or above

D. 75 years of age or above

  • The central government extended Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana (AB PMJAY) benefits to all senior citizens aged 70 or above.
  • This decision was made during a Union Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi. Launched in 2018, the scheme has issued over 35.4 crore Ayushman cards across 33 states and union territories, except Delhi, West Bengal, and Odisha. The inclusion benefits 6 crore senior citizens, providing Rs 5 lakh annual health insurance. If a senior citizen is part of a covered family, the total family insurance will rise to Rs 10 lakh. Senior citizens with private or other public insurance can also avail of AB PMJAY benefits.

7. Lion-tailed Macaque is mainly found in which regions of India?

A. Western ghats

B. Himalayas

C. Northeastern

D. Banni grassland

  • A lion-tailed macaque gave birth at the Chamundi Rescue and Rehabilitation Centre near Mysuru, Karnataka. The lion-tailed macaque (Macaca silenus) is an Old-World monkey, known for its males marking territory with calls. They have 17 vocalisations and are characterised by a grey mane around their face, resembling a beard, and a lion-like tufted tail. These primates are native to India, living in the fragmented rainforests of the Western Ghats in Karnataka, Kerala, and Tamil Nadu. The species is endangered due to habitat destruction.

8. Recently, R. Ravindran has been appointed as India’s ambassador to which country?

A. Iceland

B. Bulgaria

C. Greece

D. Croatia

  • The Ministry of External Affairs appointed Mr R Ravindran as the next ambassador to Iceland. He has served in various organizations and locations throughout his career. R. Ravindran is an Indian Foreign Service officer from the 1999 batch. He is currently India’s Deputy Permanent Representative at the United Nations.

9. Which institution released a report titled ‘Future Pandemic Preparedness and Emergency Response —A Framework for Action’?

A. NITI Aayog

B. UNDP

C. WHO

D. FAO

  • NITI Aayog released an Expert Group report titled ‘Future Pandemic Preparedness and Emergency Response —A Framework for Action’. The report offers a blueprint for rapid response to future public health emergencies. COVID-19 is not the last pandemic; 75% of future threats could be zoonotic. The report offers a 100-day response plan for pandemics, focusing on governance, data management, and partnerships.
  • India’s efforts during COVID-19, like digital tools and R&D, were highlighted. The report recommends strengthening legislation, surveillance, and capacity-building. It involved consultations with over 60 experts and stakeholders. The framework aims to better prepare and manage future outbreaks effectively.

10. Which ministry recently launched the ‘Rangeen Machhli’ mobile app?

A. Ministry of Home Affairs

B. Ministry of Rural Development

C. Ministry of Fisheries, Animal Husbandry and Dairying

D. Ministry of Agriculture

  • The Union Minister for Fisheries launched the ‘Rangeen Machhli’ app. Developed by ICAR-Central Institute of Freshwater Aquaculture with support from Pradhan Mantri Matsya Sampada Yojana. The app offers multilingual information on ornamental fish species in eight Indian languages.
  • It helps users find nearby aquarium shops and supports local businesses by connecting users with reliable fish sources. Ornamental fish farming involves raising colorful, attractive fish in confined aquatic systems.

11. Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY), recently completed four years of implementation, was launched in which year?

A. 2017

B. 2018

C. 2019

D. 2020

  • Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) completed four years since its launch in 2020. It is the flagship scheme of the Department of Fisheries under the Ministry of Fisheries, Animal Husbandry & Dairying. The scheme aims to boost the fisheries sector through a combination of initiatives and schemes. PMMSY has two components: Central Sector Scheme (CS) and Centrally Sponsored Scheme (CSS). India is the 3rd largest fish producer and 2nd in aquaculture globally, with Andhra Pradesh leading. The fisheries sector supports over 30 million livelihoods in India.

12. Which country recently took seat among UN member states at 79th session of the UN General Assembly?

A. Palestine

B. Yemen

C. Afghanistan

D. Sudan

  • The 79th session of the United Nations General Assembly started in New York. Palestine, despite not being a full UN member, was given a seat among member states in the General Assembly Hall. Palestinian envoy Riyad Mansour was seated at a table marked “State of Palestine,” positioned between Sri Lanka and Sudan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!