Tnpsc Current Affairs in Tamil & English – 14th and 15th August 2024
1. NEOWISE தொலைநோக்கியை ஏவிய விண்வெளி நிறுவனம் எது?
அ. ISRO
ஆ. NASA
இ. CNSA
ஈ. JAXA
- NASAஇன் NEOWISE திட்டமானது முதன்முதலில் Wide-Field Infrared Survey Explorer (WISE) என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அகச்சிவப்புக்கதிர்மூலம் வானத்தை ஆய்வுசெய்து, சிறுகோள்கள், விண்மீன்கள் மற்றும் மங்கலான விண்மீன் திரள்களைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட இது, 2011இல் அதன் முதன்மைப் பணியை நிறைவுசெய்தது. கடந்த 2013இல், பூமிக்கருகில் உள்ள பொருள்கள் (NEOs) மற்றும் தொலைதூர சிறுகோள்கள் மற்றும் வால் விண்மீன்களை ஆய்வு செய்யும் NEOWISE திட்டத்திற்காக இந்தத் தொலை நோக்கி மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
- 34,000 புதிய கண்டுபிடிப்புகள் உட்பட 158,000 சிறிய கோள்களை NEOWISE கண்டறிந்துள்ளது. அதன் தரவுகள் சிறுகோள் எண்கள், சுற்றுப்பாதைகள், அளவுகள் மற்றும் கலவைகள் ஆகியவற்றில் வரம்புகளை அமைக்க உதவியதோடு, அறியப்பட்ட முதல் பூமி டிரோஜன் சிறுகோளைக் கண்டுபிடிக்கவும் வழிவகுத்தது.
2. ‘கோதிபுவா’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும்?
அ. ஜார்கண்ட்
ஆ. மகாராஷ்டிரா
இ. ஒடிஸா
ஈ. கேரளா
- ‘கோதிபுவா’ என்பது ஒடிஸா மாநிலத்தைச் சார்ந்த ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும். இது சுவாமி ஜகந்நாதரையும் ஸ்ரீ கிருஷ்ணரையும் போற்றும் வகையில் பெண் வேடமணிந்த சிறுவர்களால் ஆடப்படுகிறது. பாரம்பரிய ஒடிஸி நடனத்தின் முன்னோடியான இந்த நடனம், இராதை மற்றும் கிருஷ்ணரின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட கலிநடன அசைவுகளை உள்ளடக்கியது. சிறுவர்கள் ‘கஞ்சுலா’ எனப்படும் பிரகாசமான மேல்சட்டை மற்றும் ‘நிபிபந்தா’ எனப்படும் பூத்தையல் வேலைப்பாடுகொண்ட பட்டுத்துணியை அணிந்து ஆடுவார்கள்.
3. பிரதமர் JI-VAN யோஜனாவுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
ஆ. விவசாய அமைச்சகம்
இ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- மேம்பட்ட உயிரி எரிபொருள் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக பிரதமர் JI-VAN யோஜனாவில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. லிக்னோசெல்லுலோசிக் பயோமாஸ்போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 2ஆம் தலைமுறை (2G) பயோ-எத்தனால் உற்பத்தியை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. 2019இல் தொடங்கப்பட்ட இது, அண்மையில் 2028-29 வரை நீட்டிக்கப்பட்டது. இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் உள்ள உயர்-தொழில்நுட்ப மையத்தால் செயல்படுத்தப்படுகிறது. வணிக ரீதியாக சாத்தியமான 2G எத்தனால் திட்டங்களை நிறுவுதல், வேளாண் கழிவுகள்மூலம் விவசாயிகளுக்கு வருமானம் அளிப்பது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை நிவர்த்தி செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். Viability Gap Funding (VGF)மூலம் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
4. அண்மையில், பீகார் மாநிலத்தின் எந்த மலைப்பகுதியில் நீரிழிவு எதிர்ப்பு மூலிகையான, ‘Gymnema sylvestre’ இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்?
அ. பிரம்மயோனி மலைகள்
ஆ. துங்கேஸ்வரி மலைகள்
இ. கைமூர் மலைகள்
ஈ. மந்தர் மலைகள்
- பீகார் மாநிலத்தின் கயாவில் அமைந்துள்ள பிரம்மயோனி மலைகளில் நீரிழிவு சிகிச்சை திறனுக்கு பெயர்பெற்ற, ‘Gymnema sylvestre’ (சிறுகுறிஞ்சா / கோகிலம்) என்ற மூலிகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். CSIR ஆல் நீரிழிவு எதிர்ப்பு மருந்தான BGR-34இல் பயன்படுத்தப்படும் சிறுகுறிஞ்சா, குடல்சார் சர்க்கரை உறிஞ்சுதலைத் தடுப்பதன்மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. இதில் ஜிம்னெமிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் உள்ளன; இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதோடு கொழுப்பைக் குறைக்கிறது.
5. ‘சிலிக்கோசிஸ் – மணலியம்’ என்றால் என்ன?
அ. இருதய நோய்
ஆ. சுவாச நோய்
இ. நரம்பியல் கோளாறு
ஈ. செரிமானக்கோளாறு
- நுரையீரலை கடினமாக்கும் சுவாச நோயான சிலிக்கோசிஸ் (மணலியம்), ஆஸ்பெஸ்டாஸால் ஏற்படும் பாதிப்பைப் போலவே தீவிரமடையக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எச்சரித்துள்ளனர். மண், மணல், கான்கிரீட், கிரானைட் மற்றும் செயற்கை கல் ஆகியவற்றில் காணப்படும் சிலிக்கா தூசியை சுவாசிப்பதால் இது ஏற்படுகிறது. கட்டுமானம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல், சமையலறை பொறியியல், பல் மருத்துவம், மட்பாண்டங்கள் மற்றும் சிற்பவேலை ஆகியவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களை இது பொதுவாக பாதிக்கிறது. இந்தத் தொழில்களில் உள்ளவர்கள் 10-20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சிலிகோசிஸை’ உருவாக்கும் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். தொடர்ச்சியான இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
6. ‘Trichophyton indotineae’ என்பது கீழ்க்காணும் எந்த நோய்க்கிருமியால் ஏற்படுகிறது?
அ. வைரஸ்
ஆ. பூஞ்சை
இ. பாக்டீரியா
ஈ. புரோட்டோசோவா
- மருந்து-எதிர்ப்பு பூஞ்சைத்தொற்றுகள், குறிப்பாக ‘Trichophyton indotineae’, இந்தியாவில் வளர்ந்துவரும் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது. படர்தாமரை அல்லது கழிப்பறைப்படை எனப்படும் ‘Trichophyton indotineae’, முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டு பின்னர் உலகளவில் பரவியது. இது T. mentagrophytes/T. interdigitale-க்குள் VIIIஆவது மரபுமுத்திரையைச் சேர்ந்தது. ஸ்டீராய்டு களிம்புகளின் முறையற்ற பயன்பாடு இந்தப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிப்பதை கடினமாக்கியுள்ளது.
- பெரும்பாலும் ‘தோலழற்சி’ எனத்தவறாக கண்டறியப்படுகிற இதன் அறிகுறிகளில் விடாப்பிடியான, சிகிச்சை-எதிர்ப்பு தடிப்புகள் அடங்கும். தவறான நோயறிதல் மற்றும் தாமதமான சிகிச்சை நிலைமையை மோசமாக்குகிறது மற்றும் சமூகப்பரவலை அதிகரிக்கிறது. இட்ராகோனசோல் இந்தப் பூஞ்சை நோயின் பரவலைக் குறைக்க உதவுகிறது.
7. அண்மையில், நாட்டிலேயே முதன்முதலாக, சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு மாணவிகளுக்கு பணமளிக்கும் மாநிலம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. குஜராத்
இ. மத்திய பிரதேசம்
ஈ. ஒடிஸா
- இந்தியாவிலேயே வளரிளம்பருவப்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களுக்குப் பணம் வழங்கும் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இந்தப் பணமானது மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் தூய்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பள்ளிப்பயிலும் தகுதியுள்ள மாணவிகளுக்கு (7-12 வகுப்பு) ஆண்டுக்கு `300 வழங்கப்படுகிறது. 19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு இதுவரை `57 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. சமூக மரபுகளுக்குத் தீர்வுகாணவும், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுமாக 2016ஆம் ஆண்டு ‘உதிதா’ திட்டத்தையும் அம் மாநிலம் அறிமுகப்படுத்தியது. உதிதா திட்டத்தின்கீழ், 45 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒவ்வொரு மாதமும் ஆறு சானிட்டரி நாப்கின்களை இலவசமாகப் பெறலாம்.
8. ஆண்டுதோறும், ‘உலக உறுப்புதான நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 12 ஆகஸ்ட்
ஆ. 13 ஆகஸ்ட்
இ. 14 ஆகஸ்ட்
ஈ. 15 ஆகஸ்ட்
- உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி உலக உறுப்பு தான நாள் கொண்டாடப்பட்டது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Be the Reason for Someone’s Smile Today” ஆகும். உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிர்காக்கும் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நாள் உறுப்புதானத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பது மற்றும் அதுதொடர்புடைய கட்டுக்கதைகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிரைக் காப்பாற்றி, மற்றவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாய்ப்பளித்த உறுப்புதானம் செய்பவர்களையும் இந்த நாள் கௌரவிக்கிறது.
9. 2024ஆம் ஆண்டுக்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் முதலிடத்தில் உள்ள கல்வி நிறுவனம் எது?
அ. ஐஐடி மெட்ராஸ்
ஆ. ஐஐடி கான்பூர்
இ. ஐஐடி தில்லி
ஈ. ஐஐடி ரூர்க்கி
- இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசை – 2024 பட்டியலை மத்திய கல்வியமைச்சர் வெளியிட்டார். இதில், சென்னை ஐஐடி, ‘ஒட்டுமொத்த’ பிரிவில் தொடர்ந்து ஆறாமாண்டாக முதலிடத்திலும், 2016இல் தரவரிசை வெளியிடத் தொடங்கியது முதல் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ‘பொறியியல்’ பிரிவிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
- IISc பெங்களூரு, ‘பல்கலைக்கழகங்கள்’ பிரிவில் ஒன்பதாவது ஆண்டிலும், ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் 4ஆம் ஆண்டிலும் முதலிடம் பிடித்தது. IIM ஆமதாபாத் ஐந்தாமாண்டாக நிர்வாகத்தில் 1ஆவது இடத்தைப்பிடித்தது. ஏழாவது ஆண்டாக மருத்துவப்பிரிவில் தில்லி AIIMS முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தரவரிசை, 5 பரந்த அளவுருக்களைப் பயன்படுத்துகிறது.
10. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்தியப்பிரதமரால், எத்தனை தட்பவெப்பநிலை-நெகிழ்திறன் மிக்க விதை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன?
அ. 100
ஆ. 109
இ. 120
ஈ. 158
- அதிக மகசூல் தரும், தட்பவெப்பநிலையைத் தாங்கக்கூடிய மற்றும் உயிரி-வலுவூட்டப்பட்ட 109 புதிய விதை இரகங்களை பிரதமர் அறிமுகப்படுத்தினார். இந்த இரகங்கள் 34 வேளாண் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலைப் பயிர்கள் உட்பட 61 பயிர்களை உள்ளடக்கியது. வேளாண் பயிர்களில் தானியங்கள், தினைகள், தீவனப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி போன்றவை அடங்கும். தோட்டக்கலைப்பயிர்களில் பழங்கள், காய்கறிகள், தோட்டப்பயிர்கள், மசாலாப்பொருட்கள், பூக்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் ஆகியவை அடங்கும். இந்தப் புதிய விதை இரகங்கள் அதிக மகசூலைத் தரும் அதே வேளையில் குறைந்த நீரை உட்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு நெல் இரகத்திற்கு வழக்கத்தைவிட 30 சதவீதம் குறைவான தண்ணீர் தேவைப்படுவதால் இதன்மூலம் விவசாயிகள் மிகுந்த பயனடைவர்.
11. INS அரிகாத் என்றால் என்ன?
அ. ஏவுகலம்
ஆ. போர்க்கப்பல்
இ. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்
ஈ. விமானந்தாங்கிக்கப்பல்
- இந்தியா அணுசக்தியில் இயங்கும் தனது இரண்டாவது நீர்மூழ்கிக்கப்பலான INS அரிகாத்தை உத்திசார் தடுப்புக்காக இயக்கத்தயாராகவுள்ளது. INS அரிகாத் என்பது, 2018ஆம் ஆண்டு இயக்கப்பட்ட INS அரிஹந்த் கப்பலைத் தொடர்ந்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பலாகும். இது விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியக்கடற்படையின் கப்பல் கட்டுமான மையத்தில் கட்டப்பட்டது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் 111.6 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 6000 டன்கள் இடப்பெயர்ச்சி திறன்கொண்டதாகவும், நீரில் மூழ்கி 24 கடல் மைல்கள் வரை வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் உள்ளது.
12. ‘மாதிரி சோலார் கிராமம்’ என்ற திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது
ஆ. சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது
இ. சுகாதார வசதிகளை மேம்படுத்துவது
ஈ. கல்வி நிறுவனங்களை உருவாக்குவது
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், PM-சூரியா கர்: மஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின்கீழ், “மாதிரி சோலார் கிராமம்” என்ற திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்தியா முழுவதும் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி சோலார் கிராமத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இது, சூரிய ஆற்றலைப் பயன்படுத்தலை ஊக்குவிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் `1 கோடி என மொத்தம் `800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதியான கிராமங்கள் 5000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட (அல்லது சிறப்பு வகை மாநிலங்களில் 2000) வருவாய் கிராமங்களாக இருக்க வேண்டும்.
- கிராமங்கள் அவற்றின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனின் அடிப்படையில் போட்டியிடுகின்றன, வெற்றி பெறும் கிராமம் `1 கோடி பரிசு பெறும். PM-சூரியா கர்: மஃப்ட் பிஜிலி யோஜனாவானது `75,000 கோடி முதலீட்டில், 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 அலகு இலவச மின்சாரத்தை வழங்குகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்தில் `380 கோடி நிதி.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட, ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்துக்கு இதுவரை `380 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஈராண்டுகளுக்குமுன் முதல்வர் மு க ஸ்டாலின் தனது பங்களிப்பாக சொந்த நிதி `5 இலட்சத்தை வழங்கி ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
7.5 லட்சம் முன்னாள் மாணவர்கள்: பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தனது பங்களிப்பை நிதியாகவும் உழைப்பாகவும் வழங்க 7.5 லட்சம் நபர்கள் விழுதுகள் திட்டத்தில் பதிவுசெய்துள்ளனர்.
2. கருணாநிதி பிறந்தநாளான ஜூன்.03ஆம் தேதி செம்மொழி நாளாகக் கொண்டாடப்படும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன்.03ஆம் தேதி செம்மொழி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொழிப்போர் தியாகிகள் நாளான ஜன.25ஆம் தேதி “தமிழ்மொழி தியாகிகள் நாளாக” இனி கடைப்பிடிக்கப்படும்.
3. சுதந்திரப்போராட்ட பெண் போராளி குயிலியின் வரலாற்று மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு.
நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் முதல் பெண் போராளியான அரசி வேலு நாச்சியாரின் பெண்கள் பிரிவு படைத் தளபதியாக இருந்த குயிலி என்கிற வீர மங்கையின் வரலாற்றுக்கதை “தி பாலட் ஆஃப் த வாரியர்-கேர்ள் குயிலி” என்கிற தலைப்பில் வழக்குரைஞரும் கவிஞருமான வானவில் K இரவி ஆங்கிலக்கவிதை வடிவில் எழுதியிருந்தார்.
1. NEOWISE Telescope was launched by which space agency?
A. ISRO
B. NASA
C. CNSA
D. JAXA
- NASA’s NEOWISE mission, originally launched as the Wide-Field Infrared Survey Explorer (WISE) in 2009, has concluded after over a decade. Initially designed to survey the sky in infrared, detecting asteroids, stars, and faint galaxies, it completed its primary mission in 2011.
- In 2013, the telescope was reactivated for the NEOWISE project to study near-Earth objects (NEOs) and distant asteroids and comets. NEOWISE detected over 158,000 minor planets, including 34,000 new discoveries. Its data helped set limits on asteroid numbers, orbits, sizes, and compositions, and led to the discovery of the first known Earth Trojan asteroid.
2. Gotipua dance is a traditional dance form of which state?
A. Jharkhand
B. Maharashtra
C. Odisha
D. Kerala
- Gotipua is a traditional dance form from Odisha, performed by young boys who dress as women to honor Lord Jagannath and Lord Krishna. This dance, a precursor to Odissi classical dance, involves acrobatic movements inspired by the life of Radha and Krishna. The boys wear a bright blouse called “Kanchula” and an embroidered silk cloth called “Nibibandha.”
3. Pradhan Mantri JI-VAN Yojana comes under which ministry?
A. Ministry of New and Renewable Energy
B. Ministry of Agriculture
C. Ministry of Petroleum and Natural Gas
D. Ministry of Defence
- The Cabinet approved an amendment in the Pradhan Mantri JI-VAN Yojana to provide financial support for Advanced Biofuel Projects. The scheme promotes the production of 2nd-generation (2G) bioethanol from renewable sources like lignocellulosic biomass. Launched in 2019, it was recently extended until 2028-29. It is implemented by the Centre for High Technology under the Ministry of Petroleum and Natural Gas. The objective of scheme is to establishing commercially viable 2G ethanol projects, providing farmers income from agricultural waste, and addressing environmental pollution. Financial support is provided through Viability Gap Funding (VGF).
4. Recently, researchers have identified anti-diabetic herb ‘Gymnema sylvestre’ in which hills of Bihar?
A. Brahmayoni Hills
B. Dungeshwari Hills
C. Kaimur Hills
D. Mandar Hills
- Researchers identified Gymnema sylvestre (Gurmar) on Brahmayoni Hill in Gaya, Bihar, known for its diabetes treatment potential. Gurmar, used in the anti-diabetic drug BGR-34 by CSIR, reduces blood sugar by blocking intestinal sugar absorption. It contains gymnemic acid, flavonoids, and saponins, which regulate lipid metabolism and lower cholesterol.
5. What is ‘Silicosis’?
A. A cardiovascular disease
B. A respiratory disease
C. A neurological disorder
D. A digestive disorder
- Researchers have recently warned that silicosis, a respiratory disease that hardens the lungs, could become as serious as asbestos exposure. It is caused by inhaling silica dust found in soil, sand, concrete, granite, and artificial stone. Commonly affects workers in construction, mining, oil and gas extraction, kitchen engineering, dentistry, pottery, and sculpting. People in these industries face a higher risk of developing silicosis after 10-20 years of exposure. Symptoms include a persistent cough, shortness of breath, weakness, and tiredness.
6. ‘Trichophyton indotineae’ is caused by which pathogen?
A. Virus
B. Fungi
C. Bacteria
D. Protozoa
- Drug-resistant fungal infections, especially Trichophyton indotineae, are a growing health concern in India. Trichophyton indotineae, known as ringworm or jock itch, was first identified in India and has spread globally. It belongs to genotype VIII within the T. mentagrophytes/T. interdigitale species. Inappropriate use of steroid creams has made this strain difficult to treat.
- Symptoms include persistent, treatment-resistant rashes, often misdiagnosed as eczema. Misdiagnosis and delayed treatment worsen the condition and increase community transmission. Itraconazole may help reduce the spread of this condition.
7. Recently, which state has become the first in the country to give money to girl students to buy sanitary napkins?
A. Rajasthan
B. Gujarat
C. Madhya Pradesh
D. Odisha
- Madhya Pradesh has become the first state in India to give cash to adolescent girls for sanitary napkins. The cash is part of the state’s Sanitation and Hygiene scheme. Eligible school girls (class 7-12) receive ₹300 annually. Over ₹57 crore has been distributed to more than 19 lakh girls. The state also launched the Udita program in 2016 to address social taboos and raise awareness about menstruation. Under Udita, women and girls up to 45 years old can receive a free pack of six sanitary pads every month.
8. Which day is observed as ‘World Organ Donation Day’ every year?
A. 12 August
B. 13 August
C. 14 August
D. 15 August
- World Organ Donation Day 2024 is celebrated on August 13 to raise awareness about organ donation. The theme for 2024 is “Be the Reason for Someone’s Smile Today.” Thousands of people worldwide await life-saving organ transplants each year. The day aims to promote the importance of organ donation and dispel related myths. It also honors organ donors who have saved lives and given others a chance at a healthy life.
9. Which institution remained on the top spot in the National Institute Ranking Framework, 2024?
A. IIT Madras
B. IIT Kanpur
C. IIT Delhi
D. IIT Roorkee
- The India Rankings 2024 were released by the Union Education Minister, based on the National Institutional Ranking Framework (NIRF). IIT Madras ranked 1st in the Overall Category for the sixth year and in Engineering for the ninth year. IISc Bengaluru topped the Universities Category for the ninth year and Research Institutions for the fourth year. IIM Ahmedabad ranked 1st in Management for the fifth year. AIIMS Delhi topped the Medical Category for the seventh year. NIRF was launched in 2015 and uses five broad parameters for ranking.
10. How many climate-resilient seed varieties were launched by the Prime Minister of India at the Indian Agricultural Research Institute?
A. 100
B. 109
C. 120
D. 158
- The Prime Minister introduced 109 new seed varieties that are high-yielding, climate-resilient, and biofortified. These varieties cover 61 crops, including 34 field crops and 27 horticultural crops. Field crops include cereals, millets, forage crops, oilseeds, pulses, sugarcane, cotton, and more. Horticultural crops include fruits, vegetables, plantation crops, spices, flowers, and medicinal plants. The new seed varieties are designed to consume less water while producing higher yields. One paddy variety requires 30% less water than usual, benefiting farmers.
11. What is ‘INS Arighat’?
A. Rocket Launcher
B. Warfer Ship
C. Nuclear powered submarine
D. Aircraft carrier
- India is ready to commission its second nuclear-powered submarine, INS Arighat, for strategic deterrence. INS Arighat is India’s second indigenously built nuclear-powered ballistic missile submarine (SSBN), following INS Arihant, commissioned in 2018. It was built at the Indian Navy’s Ship Building Centre in Visakhapatnam. The submarine is 111.6 meters long, with a displacement of 6,000 tonnes, and can reach speeds up to 24 knots submerged.
12. What is the main objective of the ‘Model Solar Village initiative’?
A. Increase agricultural production
B. Promote solar energy adoption
C. Improve healthcare facilities
D. Develop educational institutions
- The Ministry of New and Renewable Energy released guidelines for the “Model Solar Village” under PM-Surya Ghar: Muft Bijli Yojana. The initiative aims to create one Model Solar Village per district across India, promoting solar energy adoption and self-reliance. A total of ₹800 crore is allocated, with ₹1 crore for each selected village. Eligible villages must be revenue villages with over 5,000 people (or 2,000 in special category states). Villages compete based on their installed renewable energy capacity, with winners receiving ₹1 crore.
- The PM-Surya Ghar: Muft Bijli Yojana provides 300 units of free electricity per month to 1 crore households, with a ₹75,000 crore investment.