TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 13th September 2024

1. அண்மையில், “பசுமை ஹைட்ரஜன் குறித்த 2ஆவது பன்னாட்டு மாநாடு” நடைபெற்ற இடம் எது?

அ. லக்னோ

ஆ. ஜெய்ப்பூர்

இ. புது தில்லி

ஈ. சென்னை

  • 2024 செப்.11 அன்று பசுமை ஹைட்ரஜன் குறித்த 2ஆவது பன்னாட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2024 செப்டம்பர்.11-13 வரை நடைபெறுகிறது. பசுமை ஹைட்ரஜனில் இந்தியாவை உலகத் தலைமையாக நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாகும். இம்மாநாடு பசுமை ஹைட்ரஜன் மதிப்புச்சங்கிலியில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது. இந்த நிகழ்வை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

2. பன்னாட்டு பெரும்பூனைகள் கூட்டணி தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2003

ஆ. 2014

இ. 2023

ஈ. 2004

  • ‘புலிகள் திட்டத்தின்’ ஐம்பதாம் ஆண்டு விழாவின் போது, 2023 ​​ஏப்.09 அன்று இந்தியப்பிரதமரால் பன்னாட்டு பெரும்பூனைகள் கூட்டணி (IBCA) தொடங்கப்பட்டது. புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, சிவிங்கி, ஜாகுவார் மற்றும் மலைச்சிங்கம் ஆகிய ஏழு பெரும்பூனை இனங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் உலகளவில் பாதுகாப்பதே இதன் குறிக்கோளாகும். 97 நாடுகளை உள்ளடக்கிய இக்கூட்டணி, அறிவுப்பகிர்வு, திறன் கட்டமைப்பு மற்றும் வள ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் அதன் தலைமையகம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட IBCAஐ ஐந்தாண்டுகளுக்கு `150 கோடி பொருளுதவியுடன் இந்தியா ஆதரிக்கிறது.

3. அண்மையில், எந்த வடகிழக்கு மாநிலத்தில் முதன்முறையாக ஆவின கயால் தென்பட்டது?

அ. மிசோரம்

ஆ. மணிப்பூர்

இ. அஸ்ஸாம்

ஈ. நாகாலாந்து

  • ஓரளவு பழக்கப்படுத்தப்பட்ட வளர்ப்புப்பசு இனமான கயால் சமீபத்தில் அஸ்ஸாமில் முதன்முறையாகக் காணப்பட்டது. சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய “மலையின் கால்நடைகள்” என்று அழைக்கப்படும் “கயால்”, இந்திய காட்டெருதின் வழித்தோன்றல் என நம்பப்படுகிறது. இது வடகிழக்கிந்தியாவில், குறிப்பாக அருணாச்சல பிரதேசத்தில் அதிகளவில் காணப்படுகிறது; மேலும் இது தென்கிழக்கிசியாவிலும் காணப்படுகிறது.
  • இந்திய காட்டெருதை ஒத்துள்ள கயால் தோற்றத்தில் சிறியதாகும். 400-650 கிகி எடைகொண்ட இது, தனித்துவம் மிக்க கொம்புகள் மற்றும் வண்ணம் உடையது. இது அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தின் மாநில விலங்கு ஆகும். IUCNஇன் செம்பட்டியல் மற்றும் CITES பின்னிணைப்பு-Iஇல் “அழிவாய்ப்பு நிலையிலுள்ள உயிரினம்” எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

4. ‘வானிலை இயக்கத்திற்காக’ மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்த மொத்த நிதி எவ்வளவு?

அ. ரூ.1,000 கோடி

ஆ. ரூ.2,000 கோடி

இ. ரூ.3,000 கோடி

ஈ. ரூ.5,000 கோடி

  • பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை, ஈராண்டுகளில் `2,000 கோடி மதிப்பீட்டிலான “வானிலை இயக்கத்திற்கு” (மிஷன் மௌசம்) ஒப்புதல் அளித்தது. இது இந்தியாவின் வானிலை மற்றும் காலநிலை தொடர்பான ஆராய்ச்சி, சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • AI, இயந்திர கற்றல் மற்றும் உயர்செயல்திறன் கணினிபோன்ற மேம்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் ‘வானிலை இயக்கம்’ கவனம் செலுத்துகிறது. இது பருவமழை முன்னறிவிப்புகள், தீவிர வானிலை முன்னெச்சரிக்கைகள் மற்றும் காற்றின் தர அறிவிப்புகள் உள்ளிட்ட துல்லியமான வானிலை மற்றும் காலநிலை தகவல்களை வழங்கும். இந்திய வானிலை ஆய்வுத்துறை, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் ஆகியவற்றால் இது செயல்படுத்தப்படும். இது உழவு, பேரிடர் மேலாண்மை, விமானப்போக்குவரத்து மற்றும் எரிசக்திபோன்ற துறைகளுக்குப் பயனளிக்கிறது.

5. அண்மையில், ஏற்றுமதிக்கான வர்த்தக இணைப்பு மின்னணு தளத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக MSMEகளுக்கு பன்னாட்டு வர்த்தகத்தை அதிகரிக்க ஏற்றுமதிக்கான வர்த்தக இணைப்பு மின்னணு தளத்தை மத்திய வணிக அமைச்சர் தொடக்கினார். இந்த டிஜிட்டல் தளமானது இந்திய ஏற்றுமதியாளர்கள், MSMEகள் மற்றும் தொழில்முனைவோரை அயல்நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள்போன்ற பங்குதாரர்களுடன் இணைக்கிறது. இது உலகளாவிய வர்த்தக நிகழ்வுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பிற வர்த்தக தரவுபற்றிய தகவல்களை வழங்குகிறது. EXIM வங்கி, MSME அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம்போன்ற முக்கிய கூட்டாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது இந்தத் தளம்.

6. ‘சதர்ன் பேர்ட்விங் பட்டாம்பூச்சி’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் மாநிலப்பட்டாம்பூச்சியாகும்?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா

இ. மேகாலயா

ஈ. தெலங்கானா

  • இந்தியாவின் இரண்டாவது பெரிய பட்டாம்பூச்சி இனமான ‘சதர்ன் பேர்ட்விங் பட்டாம்பூச்சி’ சமீபத்தில் தமிழ்நாட்டின் மதுரையில் அமைந்துள்ள அமெரிக்கன் கல்லூரியின் சார் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘சயாத்ரி பறவைகள்’ என்றழைக்கப்படும் இது, பெரும்பாலும் தெற்காசியாவில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சிமலைகளில் காணப்படுகிறது. சில சிறிய பறவைகளைவிடவும் பெரிய இறக்கைகள்கொண்டதாலேயே இது ‘பேர்ட்விங்’ என்று அழைக்கப்படுகிறது.
  • ஆண் பட்டாம்பூச்சிகளுக்கு பசுநீல அடையாளங்களுடன் கருப்பு இறக்கைகள் உள்ளன; அதே சமயம் பெண் பட்டாம் பூச்சிகளுக்கு இளமஞ்சள் நிற இறக்கைகள் உள்ளன. இது கர்நாடக மாநிலத்தின் மாநிலப்பட்டாம்பூச்சியாகும்.

7. “தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை” நிறுவிய அமைச்சகம் எது?

அ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • செவிலியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். மொத்தம் 15 செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • சமுதாயத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பாராட்டத்தக்க சேவையை அங்கீகரிக்கும் அடையாளமாக நடுவணரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் கடந்த 1973ஆம் ஆண்டு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது ஏற்படுத்தப்பட்டது. பதிவுசெய்யப்பட்ட துணை செவிலியர்கள் & மருத்துவச்சி ஆகியோருக்கு மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய, மாநில / யூனியன் பிரதேசங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் பணிபுரியும் சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மருத்துவமனை அல்லது சமூக அமைப்புகள், கல்வி அல்லது நிர்வாக அமைப்பில் வழக்கமான பணியிலுள்ள செவிலியர் தேசிய விருதுக்கு தகுதியுடையவர். ஒவ்வொரு விருதும் தகுதிச்சான்றிதழ், `1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம் கொண்டதாகும்.

8. ஒவ்வோர் ஆண்டும், “தேசிய வனத்தியாகிகள் நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 11 செப்டம்பர்

ஆ. 12 செப்டம்பர்

இ. 13 செப்டம்பர்

ஈ. 14 செப்டம்பர்

  • காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தோரை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் செப்.11ஆம் தேதி தேசிய வனத்தியாகிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது 2013இல் சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிஷ்னோய் சமூகத்தினர் மரங்களைக் காத்த காரணத்தால் நிகழ்ந்த 1730-கெஜர்லி படுகொலையின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்நாள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் வனக்காவலர்கள், வனவர்கள் மற்றும் அதிகாரிகளை கௌரவப்படுத்துகிறது. வனக்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.

9. அண்மையில், ஆண்டிபயாடிக் மாசுபாடு குறித்த தனது முதல் உலகளாவிய வழிகாட்டுதலை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNEP

ஆ. உலக சுகாதார அமைப்பு

இ. இந்திய மருத்துவத் தகவலியல்களுக்கான சங்கம்

ஈ. ஐரோப்பிய ஒன்றியம்

  • நுண்ணுயிரெதிர்ப்பு மறுப்பு (Antimicrobial Resistance – AMR) சிக்கலின் முக்கிய காரணியான உற்பத்தி செயல்முறைகளிலிருந்து நோய்க்கிருமி கட்டுப்படுத்தி மாசுபாட்டை எதிர்கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் முதல் வழிகாட்டுதலை வெளியிட்டது. நோய்க்கிருமி கட்டுப்படுத்திகள் தயாரிப்பிலிருந்து வரும் கழிவு நீர், நீர்நிலைகள் மற்றும் நிலத்தை மாசுபடுத்தும் எச்சங்களைக் கொண்டுள்ளது; அது AMR-க்குப் பங்களிக்கிறது.
  • தற்போது, ​​உற்பத்தியினால் ஏற்படும் நோய்க்கிருமி கட்டுப்படுத்தி மாசுபாடு பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாக உள்ளது; மேலும் தரநிலைகள் சுற்றுச்சூழல் உமிழ்வை பூர்த்தி செய்வதுவுமில்லை. நோய்க்கிருமிகள் இனி மருந்துகளுக்கு பதிலளிக்காத என்னும்போது AMR ஏற்படுகிறது.

10. ஆண்டுதோறும் “தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐநா நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 12 செப்டம்பர்

ஆ. 14 டிசம்பர்

இ. 12 ஜனவரி

ஈ. 14 செப்டம்பர்

  • ஐநா அவையின் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான நாளாக செப்டம்பர்.12 அனுசரிக்கப்படுகிறது. பொருளாதார, சமூக மற்றும் அரசியல் துறைகளில் உலகளாவிய தெற்கில் வளரும் நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை இந்த நாள் கொண்டாடுகிறது. இது 1978இல் புவெனஸ் ஐரிஸ் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது; அது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், “A Better Tomorrow through South-South Cooperation” என்பதாகும். “உலகளாவிய தெற்கு” என்ற சொல் வளரும் நாடுகளைக் குறிக்கிறது. இந்தப்பதம் புவியியல் ரீதியாக தெற்கு அரைக்கோளத்திற்கு உள்ள நாடுகளை மட்டும் குறிப்பதல்ல; மாறாக பல நாடுகள் வடக்கு அரைக்கோளத்திலிருந்தும் இதில் இடம்பெற்றுள்ளன.

11. அண்மையில், நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் AYUSH வசதிகள் உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. ஜார்கண்ட்

ஈ. மேற்கு வங்காளம்

  • நகர்ப்புறங்களிலுள்ள அனைத்து 328 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் AYUSH வசதிகளைக் கொண்டிருப்பதில் மத்திய பிரதேசம் முன்னணியில் உள்ளது. 228 ஆயுஷ் மருத்துவர்களுடன் பழங்குடியினர் பகுதிகளில் மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது. AYUSH மருத்துவர்களில் ஒடிஸா மற்றும் சத்தீஸ்கர் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன. 2005ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை மத்திய பிரதேச மாநிலம் கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலங்கள் முழுவதும் சுகாதார உள் கட்டமைப்பு, பணியாளர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் இருப்பு ஆகியவற்றில் மேம்பாடுகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

12. அண்மையில், 5000 சிறுபாசன ஏரிகளை புனரமைக்க `500 கோடியை ஒதுக்கிய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

  • தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள 5000 சிறுபாசன ஏரிகளைப் புனரமைப்பதற்கு `500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதலளித்துள்ளது. நீர்சேமிப்பை மேம்படுத்துதல் மற்றும் உள்ளூர் நீராதாரங்களை நிர்வகித்தல், குறிப்பாக விவசாயத்திற்காக இவற்றை மேற்கொள்ளுதல் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • மாநில பட்ஜெட்டிலிருந்து `250 கோடியும், மாநில நிதி ஆணையத்தின் மானியமாக `250 கோடியும் நிதியுதவியில் அடங்கும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இந்த நிதியை நிர்வகிக்கும். தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் 22,051 சிறுபாசன ஏரிகள், 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் சிறுபாசன ஏரிகளை நிர்வகிக்கின்றன, அதே நேரத்தில் கிராமப் பஞ்சாயத்துகள் குளங்கள் மற்றும் ஊரணிகளை பராமரிக்கின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உதகை மலையில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சிப்பூக்கள்.

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அருகேயுள்ள எப்பநாடு கிராமத்தைச்சுற்றியுள்ள கொரனூர், எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயரமான மலைத்தொடர்களில் தற்போது நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத்தொடங்கியுள்ளன. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இக்குறிஞ்சிப்பூ குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைகளுள்ளன. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

2. புயல் பாதிப்பு: மியான்மர், லாவோஸ், வியத்நாமுக்கு இந்தியா நிவாரண உதவி.

யாகி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மியான்மர், வியாத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு உதவ ‘சத்பவ்’ என்ற நடவடிக்கையின்கீழ் நிவாரணப்பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. அதன்கீழ், இந்தியக்கடற்படை கப்பலான INS சத்புராவில் உலர் உணவுப்பொருள்கள், உடைகள் மற்றும் மருந்துகள் என 10-டன் நிவாரணப்பொருள்கள் மியான்மருக்கு அனுப்பப்பட்டன.

3. நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ சேவை.

நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரெயில் சேவையை குஜராத்தின் ஆமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையைப் பின்பற்றி ‘வந்தே மெட்ரோ’ ரெயில் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையில் விபத்துகளை தடுக்கும் தானியங்கி ரெயில் பாதுகாப்பமைப்பான ‘கவச்’ உள்பட அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

1. Recently, where was the “2nd International Conference on Green Hydrogen” held?

A. Lucknow

B. Jaipur

C. New Delhi

D. Chennai

  • Prime Minister Narendra Modi virtually inaugurates the 2nd International Conference on Green Hydrogen on 11 September 2024. The conference takes place at Bharat Mandapam, New Delhi, from 11-13 September 2024. The aim is to position India as a global leader in the green hydrogen ecosystem. It focuses on technological advancements and strategic investments in the green hydrogen value chain. The event is organized by the Union Ministry of New and Renewable Energy and the Principal Scientific Adviser’s Office.

2. ‘International Big Cat Alliance (IBCA)’ was launched in which year?

A. 2003

B. 2014

C. 2023

D. 2004

  • IBCA was launched by the Indian Prime Minister on 9 April 2023, during the 50th anniversary of Project Tiger. Its goal is to conserve seven big cat species—tiger, lion, leopard, snow leopard, cheetah, jaguar, and puma—and their habitats globally. The alliance covers 97 range countries and focuses on knowledge-sharing, capacity-building, and resource support. India supports IBCA with Rs 150 crore for five years, with its headquarters in India and a governance structure.

3. Recently, Bovine animal Mithun has been spotted in which northeastern state for the first time?

A. Mizoram

B. Manipur

C. Assam

D. Nagaland

  • Mithun, a semi-domesticated bovine species, was recently spotted in Assam for the first time. Known as the “cattle of the mountain,” Mithun originated over 8,000 years ago and is believed to be a descendant of the wild Indian gaur. It is most concentrated in Northeast India, especially in Arunachal Pradesh, and is also found in Southeast Asia.
  • Mithun resembles the Indian bison but is smaller, weighing 400-650 kg, with distinct horns and coloration. It is the state animal of Arunachal Pradesh and Nagaland. Mithun is listed as Vulnerable on the IUCN Red List and in CITES Appendix I.

4. What is the total financial outlay recently approved by the Union Cabinet for “Mission Mausam”?

A. Rs 1,000 crore

B. Rs 2,000 crore

C. Rs 3,000 crore

D. Rs 5,000 crore

  • The Union Cabinet approved ‘Mission Mausam’ with a budget of Rs. 2,000 crore for two years. It aims to enhance India’s weather and climate-related research, services, and technologies. Mission Mausam focuses on improving weather surveillance, forecasting, and management using advanced systems like AI, machine learning, and high-performance computing.
  • It will provide accurate weather and climate information, including monsoon forecasts, extreme weather alerts, and air quality updates. Implemented by India Meteorological Department, Indian Institute of Tropical Meteorology, and National Centre for Medium-Range Weather Forecasting. It benefits sectors like agriculture, disaster management, aviation, and energy.

5. Which ministry recently launched the “Trade Connect e-Platform”?

A. Ministry of Commerce and Industry

B. Ministry of Science and Technology

C. Ministry of Defence

D. Ministry of Home Affairs

  • The Union Minister for Commerce launched the Trade Connect e-platform to boost international trade for Indian exporters, especially MSMEs. This digital platform links Indian exporters, MSMEs, and entrepreneurs with stakeholders like Indian Missions Abroad and Export Promotion Councils. It provides information on global trade events, Free Trade Agreements (FTAs), and other trade data. Developed in collaboration with key partners like EXIM Bank, Ministry of MSME, and Ministry of External Affairs.

6. ‘Southern Birdwing butterfly’ is the state butterfly of which state?

A. Karnataka

B. Maharashtra

C. Meghalaya

D. Telangana

  • A Southern Birdwing butterfly, India’s second largest butterfly species, was recently found at the satellite campus of The American College in Madurai, Tamil Nadu. Also known as the ‘Sahyadri Birdwing,’ it is mostly found in South Asia, especially in the Western Ghats. It is exceptionally large, with wings larger than some small birds, which gives it the name “birdwing.”
  • Males have black wings with greenish-blue markings, while females display cream-coloured patterns. It is Karnataka’s state butterfly.

7. “National Florence Nightingale Award” is instituted by which ministry?

A. Ministry of Law and Justice

B. Ministry of Home Affairs

C. Ministry of Health and Family Welfare

D. Ministry of Defence

  • The President of India presented the 2024 National Florence Nightingale Awards. Instituted by the Ministry of Health and Family Welfare in 1973, these awards honor outstanding nurses from Central, State/UTs, and Voluntary Organizations. The award recognizes nurses for their exceptional service in hospital, community, educational, or administrative roles. Winners receive a Certificate of Merit, Rs.1,00,000 in cash, and a medal.

8. Which day is observed as “National Forest Martyrs Day” every year?

A. 11 September

B. 12 September

C. 13 September

D. 14 September

  • National Forest Martyrs Day is observed on September 11th in India to honor those who sacrificed their lives to protect forests and wildlife. It was established by the Ministry of Environment, Forest, and Climate Change in 2013, commemorating the 1730 Khejarli Massacre, where Bishnoi community members defended trees. The day highlights the importance of preserving natural resources and honors forest guards, rangers, and officers. Events and activities are held nationwide to raise awareness about forest conservation.

9. Which organization recently released its first ever global guidance on antibiotic pollution?

A. UNEP

B. World Health Organization

C. Indian Association for Medical Informatics

D. European Union

  • WHO released its first-ever guidance to address antibiotic pollution from manufacturing processes, a major factor in the Antimicrobial Resistance (AMR) crisis. Wastewater from antibiotic manufacturing contains residues that pollute water bodies and land, contributing to AMR.
  • Currently, antibiotic pollution from manufacturing is mostly unregulated, and quality standards do not address environmental emissions. AMR occurs when pathogens no longer respond to medicines.

10. Which day is observed as “United Nations Day for South-South Cooperation” annually?

A. 12 September

B. 14 December

C. 12 January

D. 14 September

  • September 12 is observed as the United Nations Day for South-South Cooperation. This day celebrates the progress made by developing countries in the Global South in economic, social, and political areas. It marks the adoption of the Buenos Aires Plan of Action in 1978, which promotes technical cooperation among developing countries.
  • The theme for 2024 is “A Better Tomorrow through South-South Cooperation.” The term “Global South” refers to developing countries and is not geographically limited to the southern hemisphere; many are actually in the Northern Hemisphere.

11. Recently, which state has topped in the country among states for having AYUSH facilities at all primary health centres in urban areas?

A. Madhya Pradesh

B. Rajasthan

C. Jharkhand

D. West Bengal

  • Madhya Pradesh leads in having AYUSH facilities at all 328 primary health centers in urban areas and ranks third in tribal areas with 228 AYUSH doctors. Odisha and Chhattisgarh rank first and second in AYUSH doctors, respectively. The state has significantly increased its number of sub-health centers in rural areas since 2005. The report highlights improvements in health infrastructure, staffing, and availability of specialist doctors across states.

12. Which state recently sanctioned Rs 500 crore for the rejuvenation of 5,000 minor irrigation tanks?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Karnataka

D. Odisha

  • Tamil Nadu government has approved ₹500 crore to rejuvenate 5,000 minor irrigation tanks in rural areas. The project aims to improve water storage and manage local water resources, particularly for agriculture. Funding includes ₹250 crore from the State Budget and ₹250 crore as a grant from the State Finance Commission. The Rural Development and Panchayat Raj Department will manage the funds. Tamil Nadu has 22,051 minor irrigation tanks and 69,777 ponds or ooranis. Panchayat unions manage the irrigation tanks, while village panchayats take care of the ponds and ooranis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!