TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 13th August 2024

1. ‘மித்ரா சக்தி’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

அ. இலங்கை

ஆ. மலேசியா

இ. சிங்கப்பூர்

ஈ. ஆஸ்திரேலியா

  • இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் இணைந்து தங்களது “மித்ர சக்தி” என்ற கூட்டுப்பயிற்சியின் 10ஆவது பதிப்பை இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள மதுரு ஓயாவில் தொடங்கின. அமைதி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த ஐநா அத்தியாயம் VII-க்கு இணங்க, அரை-நகர்ப்புற பகுதிகளில் கூட்டு நடவடிக்கைகளில் இந்த ஆண்டின் பயிற்சி கவனம் செலுத்துகிறது. இந்த ஆண்டுப் பயிற்சியில் இந்தியாவின் ராஜபுதன ரைபிள்ஸைச் சேர்ந்த 120 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் இந்திய & இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையே இயங்குதன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. BPalM விதிமுறையுடன் தொடர்புடைய நோய் எது?

அ. மலேரியா

ஆ. நீரிழிவு நோய்

இ. காசநோய்

ஈ. டெங்கு

  • MultiDrug-Resistant TuBerculosis (MDR-TB) சிகிச்சைக்காக BPalM விதிமுறைகளைப்பயன்படுத்த இந்தியா சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளது. BPalM விதிமுறைகளில் பெடாகுலின், ப்ரீடோமனிட், லைன்சோலிட் மற்றும் மோக்ஸிஃப்ளோக்சசின் ஆகியவை அடங்கும். 2022இல் WHOஆல் பரிந்துரைக்கப்பட்ட இது, ஏற்கனவே சுமார் 40 நாடுகளில் கிடைக்கிறது. மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த BPalM விதிமுறை, குறைவான பக்க விளைவுகள் கொண்டதாகவும், சிகிச்சை நேரத்தை 18-24 மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாகவும் குறைக்கிறது. காசநோய் பரவுவதைத் தடுக்கவும் இது உதவுகிறது, 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிப்பது இந்தியாவின் இலக்காகும். உலகளாவிய காசநோய் பாதிப்புகளில் 27% இந்தியாவில் உள்ளன.

3. ஆண்டுதோறும் உலக அரிமா நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 09 ஆகஸ்ட்

ஆ. 10 ஆகஸ்ட்

இ. 11 ஆகஸ்ட்

ஈ. 12 ஆகஸ்ட்

  • சிங்கங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட்.10ஆம் தேதி அன்று உலக அரிமா நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கங்கள் அறிவியல் ரீதியாக ‘Panthera leo‘ என்று அழைக்கப்படுகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராஃபிக் உடன் இணைந்து பாதுகாப்பு நிபுணர்களான டெரெக் மற்றும் பெவர்லி ஜூபர்ட் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘பிக் கேட்’ என்ற முயற்சி, வேட்டையாடப்படுவதிலிருந்து சிங்கங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்பை ஏற்படுத்துவதற்காக 2013ஆம் ஆண்டு முதன்முதலில் உலக அரிமா நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவில், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஆசிய அரிமாக்கள் பாதுகாப்பு திட்டம், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன் கீழ் ஆசிய சிங்கங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.

4. அஸ்ஸாமில் நிகழ்ந்து வரும் மனித-யானை மோதலை தணிக்க உதவுவதற்காக அண்மையில், ‘HaatiApp’ (ElephantApp) என்ற செயலியை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. ஆரண்யக்

ஆ. பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி

இ. WWF-இந்தியா

ஈ. வனசக்தி

  • அஸ்ஸாம் மாநிலத்தில் அடிக்கடி நிகழ்ந்து வரும் மனித-யானை மோதலைத் தணிக்க உதவுவதற்காக திறன்பேசி செயலி மற்றும் கையேட்டை ஆரண்யக் அறிமுகப்படுத்தியது. ‘HaatiApp’ என்ற செயலி, கிராமங்களுக்கு அருகில் உள்ள காட்டு யானைகள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை வழங்குகிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோருவதற்கான படிவத்தையும் அது கொண்டுள்ளது. ஆரண்யக் வனப்பிரிவுகளுக்கான படிவ சமர்ப்பிப்புகளைக் கையாளும். அஸ்ஸாமியிலுள்ள கையேடு, சூரிய ஆற்றலில் இயங்கும் வேலிகள், அவற்றின் பயன்பாடு, நிறுவல் மற்றும் பராமரிப்புபற்றிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

5. கமுகுகளில் பழ அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய நிறுவனம் எது?

அ. வறண்டநில வேளாண்மைக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத்

ஆ. மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், காசர்கோடு

இ. வறண்டநில தோட்டக்கலைக்கான மத்திய நிறுவனம், பிகானேர்

ஈ. மத்திய மண் உவர்தன்மை ஆராய்ச்சி நிறுவனம், கர்னால்

  • காசர்கோடில் அமைந்துள்ள ICAR-மத்திய தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் விவசாயிகளுக்கு பழ அழுகல் நோயைக்கட்டுப்படுத்தும் ஆலோசனையை வழங்கியுள்ளது. பழ அழுகல் நோய் பயிர்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது மற்றும் விளைபொருட்களை விற்க முடியாமல் செய்கிறது. இது சில சமயங்களில் தாவரத்தை உயிரிழக்கச் செய்கிறது. இந்த நோய் பூஞ்சை, பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்நோயைத் தடுப்பதும் சிகிச்சையளிப்பதும் கடினமான ஒன்றாகும். உயர் மழைப் பொழிவு, தாழ் வெப்பநிலை, உயர் ஈரப்பதம் ஆகியவை இந்நோய் பரவுவதற்கு சாதகமாக அமைகின்றன.

6. 2024 – ‘பன்னாட்டு இளையோர் நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?

அ. From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development

ஆ. Green Skills for Youth: Towards a Sustainable World

இ. Intergenerational solidarity: Creating a world for all ages

ஈ. Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health

  • 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.12ஆம் தேதி பன்னாட்டு இளையோர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது; இது இளையோரின் திறனைக் கொண்டாடவும், உலகளாவிய ரீதியில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாணவும் எண்ணுகிறது. இந்தியாவில், சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக்குறிக்கும் வகையில் 1985ஆம் ஆண்டு முதல் ஜனவரி.12ஆம் தேதி தேசிய இளையோர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • பன்னாட்டு இளையோர் நாளுக்கான கருத்தோட்டம் 1991இல் வியன்னாவில் நடந்த உலக இளையோர் மன்றத்தில் முன்மொழியப்பட்டது. 2009 ஐநா தீர்மானத்திற்குப்பிறகு, முதல் பன்னாட்டு இளையோர் நாள் 2010 ஆக.12 அன்று அனுசரிக்கப்பட்டது. “From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development” என்பது நடப்பு 2024இல் வரும் இந்நாளுக்காகணக் கருப்பொருளாகும்.

7. இந்தியாவின் எப்பகுதியில், ‘நீலக்குறிஞ்சி’ செடிகள் அதிகம் காணப்படுகின்றன?

அ. லடாக்

ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

இ. வடகிழக்குப் பிராந்தியம்

ஈ. இராஜஸ்தான்

  • பன்னீராண்டுகளுக்கு ஒருமுறை ஊதா நிறத்தில் பூக்கும் புதர்ச்செடியான, ‘நீலக்குறிஞ்சி’ அண்மையில் IUCNஇன் சிவப்புப்பட்டியலில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றது. இச்செடி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் பரவியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது. கேரளாவின் மூணாரைச் சுற்றியுள்ள உயரமான மலைகளில், குறிப்பாக மூணாறிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள எரவிகுளம் தேசியப்பூங்காவில் இந்தப் பூக்கள் அதிக அளவில் உள்ளன. இந்நீல மலர்களின் பெயராலேயே நீலகிரி அதன் பெயரைப் பெற்றது.
  • பளியர் இனப் பழங்குடியினர் அதன் பூக்கும் காலத்தைப் பயன்படுத்தி வயதைக் கணக்கிடுகின்றனர். தேயிலைத் தோட்டங்கள், மென்மரத்தோட்டங்கள் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக நீலக்குறிஞ்சிகள் தங்களது வாழ்விடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன.

8. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?

அ. 5

ஆ. 6

இ. 7

ஈ. 8

  • 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆகஸ்ட்.11 அன்று பிரான்ஸின் பாரிஸில் நிறைவடைந்தன. ஒலிம்பிக் சுடரை பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத் தலைவர் தாமஸ் பாக் மற்றும் பிரெஞ்சு நீச்சல் வீரர் லியோன் மார்சந்த் ஆகியோர் அணைத்தனர். ஒலிம்பிக் கொடி 2028ஆம் ஆண்டில் 34ஆவது கோடைகால ஒலிம்பிக்கை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா 117 பேர்கொண்ட குழுவை பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு அனுப்பி ஆறு பதக்கங்களை (1 வெள்ளி மற்றும் 5 வெண்கலம்) வென்றது. பதக்கம் வென்றவர்களில் மானு பாக்கர் (வெண்கலம், இரண்டு நிகழ்வுகள்), ஸ்வப்னில் குசலே (வெண்கலம்), ஆடவர் ஹாக்கி அணி (வெண்கலம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதலில் வெள்ளி), மற்றும் அமன் ஷெராவத் (மல்யுத்தத்தில் வெண்கலம்) ஆகியோர் அடங்குவர்.

9. ஆண்டுதோறும், ‘உலக யானைகள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 09 ஆகஸ்ட்

ஆ. 10 ஆகஸ்ட்

இ. 11 ஆகஸ்ட்

ஈ. 12 ஆகஸ்ட்

  • மிகப்பெரிய நிலவாழ் பாலூட்டிகளான யானைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்பை ஏற்படுத்துவதற்காக 2012 ஆக.12 முதல் உலக யானைகள் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ‘தடிமத்தோலிகள்’ என்று அழைக்கப்படும் யானைகள், அடர்த்தியான தோலைக்கொண்டவை மற்றும் நீர்யானை மற்றும் காண்டாமிருகங்கள்போன்ற பிற விலங்குகளுடன் தொடர்புடையவை. முதன்மையாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படுகின்ற இவை, தந்தம், மனித-யானை மோதல்கள், வாழ்விட ஆக்கிரமிப்பு, வேட்டையாடப்படுவது போன்ற அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றன். ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் சுமார் 55% இந்தியாவில் உள்ளது.
  • “Personifying prehistoric beauty, theological relevance, and environmental importance” என்பது நடப்பு 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. ’முனல் – Munal’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கிய நாடு எது?

அ. நேபாளம்

ஆ. பூடான்

இ. மியான்மர்

ஈ. சீனா

  • இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே நேபாளத்தின் முனல் செயற்கைக்கோளை ஏவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய வெளியுறவு அமைச்சரின் நேபாள விஜயத்தின்போது இந்த உடன்பாடு போடப்பட்டது. முனல் செயற்கைக்கோள் என்பது நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமியால் உருவாக்கப்பட்டது; இது அந்தரிச்சியா பிரதிஷன் நேபாளின் (APN) உதவியுடன் பூமியின் மேற்பரப்பின் தாவர அடர்த்தி தரவுத்தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. NSILஇன் துருவ செயற்கைக்கோள் ஏவுகலத்தைப் பயன்படுத்தி இந்தச் செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்.

11. ‘டாண்டலம்’ என்றால் என்ன?

அ. கருந்துளை

ஆ. அரு உலோகம்

இ. சிறுகோள்

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

  • நடுவணரசு அண்மையில் MMDR சட்டம், 1957இன்கீழ், ‘Tantalum’ உட்பட 24 கனிமங்களை முக்கியத்துவம் மிக்கது மற்றும் உத்திசார்ந்தது என வகைப்படுத்தியுள்ளது. ‘Tantalum’ என்பது Ta என்ற குறியீட்டையும் அணு எண் 73ஐயும் கொண்ட ஓர் அரிய உலோகமாகும். பொதுவாக கொலம்பைட்-டான்டலைட் (கால்டன்) தாதுவில் காணப்படும் இதன் முக்கிய உற்பத்தியாளர்களில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ருவாண்டா, பிரேசில் மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும். பளபளப்பான, வெள்ளி நிற உலோகமான ‘Tantalum’, தூயநிலையில் இருக்கும்போது மென்மையாகவும், 150° செல்சியஸுக்குக்கீழ் அரிப்பு மற்றும் வேதித்தாக்குதலுக்கு அதிக எதிர்ப்புத் திறனையும் கொண்டதாக உள்ளது. இது மிகவுயர்ந்த உருகுநிலையைக் கொண்டுள்ளது.

12. ‘Smithophis mizoramensis’ என்பது சார்ந்த இனம் எது?

அ. சிலந்தி

ஆ. தவளை

இ. பாம்பு

ஈ. பட்டாம்பூச்சி

  • மிசோரம் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மிசோரமில் ‘Smithophis mizoramensis’ என்ற புதிய பாம்பினத்தை அடையாளம் கண்டுள்ளனர். இவ்வினம், ‘Tuithiangrul’ அல்லது ‘மிசோ புரூக் பாம்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பானது அறியப்பட்ட ‘Smithophis’ இனங்களின் மொத்த எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்துகிறது. மற்ற இரண்டு ‘Smithophis’ இனங்களும் இதற்குமுன் மிசோரமிலேயே பதிவுசெய்யப்பட்டன. 10-14% DNA வேறுபாட்டைக் கொண்டுள்ள இந்தப் பாம்பு, தொடர்புடைய உயிரினங்களுடன் ஒத்திருப்பதால் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆய்வுசெய்யப்பட்டது. தனித்துவமான வண்ணம் மற்றும் அளவிலான வடிவங்களைக் கொண்டுள்ள இது, மிசோரம் மாநிலத்தில் பாயும் ஆறுகளுக்கு அருகில் தாழ்நில மற்றும் மேட்டுநிலப் பகுதிகளில் பொதுவாக வாழ்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல்: 6ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்.

மத்திய கல்வியமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை -யில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இத்தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து 6ஆவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. தரவரிசைப்பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள, “சிறந்த மாநில அரசு பல்கலைக்கழகங்கள்” பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.

பல்கலைக்கழக தரவரிசை: சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் பெங்களூரு IISc முதலிடம் பிடித்துள்ளது. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 2ஆம் இடத்தையும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலை 13ஆவது இடத்தையும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கைலக்கழகம் 26ஆவது இடத்தையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 36ஆவது இடத்தையும், சென்னைப்பல்கலைக்கழகம் 39ஆவது இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47ஆம் இடத்தையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 56ஆவது இடத்தையும், மதுரை காமராஜர் பல்கலை 63ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆராய்ச்சி: சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் தரவரிசையில் பெங்களூரு IISc, சென்னை IIT, தில்லி IIT ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

2. டெங்குவைக் குறைக்கும் ‘கியூடெங்கா’ தடுப்பூசி: ஆய்வில் தகவல்.

உலக சுகாதார அமைப்பால் (WHO) கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட ‘கியூடெங்கா’ தடுப்பூசி, நோயாளிகளுக்கு டெங்குவிலிருந்து நீண்டகால பாதுகாப்பு வழங்கும் திறனைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலுள்ள டகேதா மருத்துவ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கியூடெங்கா’ தடுப்பூசி ‘டிஏகே-003’ எனவும் அழைக்கப்படுகிறது.

1. ‘Mitra Shakti’ is a joint military exercise between India and which country?

A. Sri Lanka

B. Malaysia

C. Singapore

D. Australia

  • The Indian Army and Sri Lankan Army started their 10th joint exercise, “Mitra Shakti,” at Maduru Oya in Sri Lanka’s Southern Province. This year’s focus is on joint operations in semi-urban areas, in line with UN Chapter VII on peace and security threats. This year’s exercise involves 120 soldiers from India’s Rajputana Rifles. The exercise aims to strengthen defense ties, enhance coordination, and improve interoperability between the Indian and Sri Lankan armed forces.

2. BPalM regimen is associated with which disease?

A. Malaria

B. Diabetes

C. Tuberculosis

D. Dengue

  • India will train healthcare professionals to use the BPalM regimen for treating multidrug-resistant tuberculosis (MDR-TB). The BPalM regimen includes bedaquiline, pretomanid, linezolid, and moxifloxacin. Recommended by WHO in 2022, it’s already available in nearly 40 countries. The BPalM regimen is more effective, has fewer side effects, and shortens treatment time from 18-24 months to six months. It also helps prevent TB transmission, making it crucial for India’s goal to eliminate TB by 2025, as the country has 27% of global TB cases.

3. Which day is observed as ‘World Lion Day’ every year?

A. 09 August

B. 10 August

C. 11 August

D. 12 August

  • World Lion Day is celebrated annually on August 10 to promote lion conservation and protection. Lions are scientifically known as Panthera leo.
  • The Big Cat Initiative (BCI), started in 2009 by conservationists Dereck and Beverly Joubert with National Geographic, aims to protect lions from poaching and hunting. World Lion Day was first observed in 2013 to raise awareness about the threats faced by lions. In India, the Asiatic Lion Conservation Project, launched by the Ministry of Environment, Forests, and Climate Change, focuses on protecting Asiatic lions under the Wildlife (Protection) Act 1972.

4. Which organization has recently launched a ‘HaatiApp’ (ElephantApp) to help mitigate the ongoing Human-Elephant Conflict (HEC) in Assam?

A. Aaranyak

B. Bombay Natural History

C. WWF-India

D. Vanashakti

  • Aaranyak launched a mobile app and a handbook to address Human-Elephant Conflict (HEC) in Assam. The app, ‘HaatiApp,’ provides early warnings about wild elephants near villages and includes a form for victims to claim compensation. Aaranyak will handle form submissions to Forest Divisions. The handbook, in Assamese, covers solar-powered fences, offering guidance on their use, installation, and maintenance to prevent HEC.

5. Which institute recently issued an advisory to farmers to control ‘Fruit Rot Disease in arecanut plantations?

A. Central Research Institute of Dryland Agriculture, Hyderabad

B. Central Plantation Crops Research Institute, Kasaragod

C. Central Institute for Arid Horticulture, Bikaner

D. Central Soil Salinity Research Institute, Karnal

  • The ICAR-Central Plantation Crops Research Institute (CPCRI) in Kasaragod recently issued an advisory to help farmers control the spread of fruit rot disease, also known as koleroga, in arecanut plantations. Fruit rot disease harms crops, leading to major losses for farmers and making produce unsellable. It can sometimes even kill the plant. The disease is caused by fungi, bacteria, or viruses, making it hard to prevent and treat. Heavy rainfall, low temperatures, high humidity, and alternating sunshine and rain favor the spread of the disease.

6. What is the theme of ‘International Youth Day 2024’?

A. From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development

B. Green Skills for Youth: Towards a Sustainable World

C. Intergenerational solidarity: Creating a world for all ages

D. Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health

  • International Youth Day is observed on August 12th each year since 2010 to celebrate youth potential and address their challenges globally. In India, National Youth Day is celebrated on January 12th since 1985, marking Swami Vivekananda’s birth anniversary. The idea for International Youth Day was proposed at the 1991 World Youth Forum in Vienna.
  • The first International Youth Day was observed on August 12, 2010, following a 2009 UN resolution. The 2024 theme for this day is “From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development”.

7. ‘Neelakurinji plant’ is mostly found in which region of India?

A. Ladakh

B. Western Ghats

C. Northeastern

D. Rajasthan

  • Neelakurinji, a purplish flowering shrub that blooms once every 12 years, is now on the IUCN Red List of threatened species. It is found in the Western Ghats of Kerala, Karnataka, and Tamil Nadu. The flowers are most concentrated in the high ranges around Munnar, Kerala, especially in Eravikulam National Park, which is 12 kilometers from Munnar. Nilgiri Hills are named after its blue flowers, and the Paliyan tribes use its blooming cycle to calculate age. Neelakurinji is threatened by habitat loss due to tea plantations, softwood plantations, and urbanization.

8. How many medals were won by India at Paris Olympics 2024?

A. 5

B. 6

C. 7

D. 8

  • The 33rd Summer Olympics ended on August 11, 2024, in Paris, France, with the Olympic flame being extinguished by IOC President Thomas Bach and French swimmer Leon Marchand.
  • The Olympic flag was handed over to Los Angeles, USA, which will host the 34th Summer Olympics in 2028. India sent a 117-member team to the Paris Olympics and won six medals: one silver and five bronze. Medal winners included Manu Bhaker (bronze, two events), Swapnil Kusale (bronze), the Men’s Hockey Team (bronze), Neeraj Chopra (silver in javelin), and Aman Sehrawat (bronze in wrestling).

9. Which day is observed as ‘World Elephant Day’ every year?

A. 09 August

B. 10 August

C. 11 August

D. 12 August

  • World Elephant Day is observed on August 12th since 2012 to raise awareness about the challenges faced by elephants, the largest land mammals. Elephants, known as pachyderms, have thick skin and are related to animals like hippos and rhinos. They are primarily found in Africa and Asia but are threatened by poaching for ivory and human-elephant conflicts due to habitat encroachment. India is home to about 55% of the Asian elephant population. The 2024 theme is “Personifying prehistoric beauty, theological relevance, and environmental importance.”

10. Munal satellite is developed by which country?

A. Nepal

B. Bhutan

C. Myanmar

D. China

  • An MoU was signed between India’s Ministry of External Affairs and NewSpace India Limited (NSIL) to launch Nepal’s Munal satellite. The agreement was witnessed during the visit of India’s External Affairs Minister to Nepal. Munal Satellite is an indigenous Nepali project, developed by Nepal Academy of Science and Technology (NAST) with help from Antarikchya Pratishan Nepal (APN), focusing on creating a vegetation density database of Earth’s surface. The satellite will be launched soon using NSIL’s Polar Satellite Launch Vehicle.

11. What is ‘Tantalum’?

A. Black hole

B. Rare metal

C. Asteroid

D. Submarine

  • The Central Government recently classified 24 minerals, including Tantalum, as Critical and Strategic under the MMDR Act, 1957. Tantalum is a rare metal with the symbol Ta and atomic number 73. It is usually found in the ore columbite-tantalite (coltan) and major producers include the Democratic Republic of the Congo, Rwanda, Brazil, and Nigeria. Tantalum is a shiny, silvery metal, soft when pure, and highly resistant to corrosion and chemical attack below 150°C. It has an extremely high melting point.

12. “Smithophis mizoramensis” belongs to which species?

A. Spider

B. Frog

C. Snake

D. Butterfly

  • Scientists from Mizoram University and Max Planck Institute identified a new snake species in Mizoram named Smithophis mizoramensis. The species is also called “Tuithiangrul” or “Mizo Brook Snake.” This discovery raises the total number of known Smithophis species to five.
  • Two other Smithophis species were previously recorded in Mizoram. The snake was studied for 15 years due to its resemblance to related species, showing a 10-14% DNA difference. It has unique coloration and scale patterns and inhabits both lowland and highland areas near rivers in Mizoram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!