TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 13th & 14th July 2024

1. இந்தியப்பெருங்கடலின் நலம்பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக, “Regional Analysis of Indian Ocean (RAIN)” என்ற அமைப்பை அண்மையில் மேம்படுத்திய அமைப்பு எது?

அ. தேசிய கடல்சார் நிறுவனம்

. பெருங்கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS)

இ. இந்திய வானிலை ஆய்வு மையம்

ஈ. தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA)

  • ஹைதராபாத்தில் உள்ள பெருங்கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) அதன் இந்தியப்பெருங்கடலின் பிராந்திய பகுப்பாய்வு (Regional Analysis of Indian OceaNRAIN) அமைப்பில் உவர்தன்மை மற்றும் பெருங்ககடல் மேற்பரப்பு வெப்பநிலையுடன் பெருங்கடல் மேற்பரப்பு உயர ஒழுங்கின்மை (Sea Surface Height Anomaly-SSHA) ஆகியவற்றை உள்ளடக்குவதற்காக அவ்வமைப்பை மேம்படுத்தியுள்ளது. கடந்த 2023இல் உருவாக்கப்பட்டு அண்மையில் செயல்படுத்தப்பட்ட இவ்வமைப்பு, இந்தியப்பெருங்கடலின் நலத்தை கண்காணிக்க உதவுகிறது. கூடுதலாக, இந்தியப்பெருங்கடலின் இருமுனையம் தற்போது நடுநிலையாக உள்ளது, ஆனால் வரும் ஆகஸ்ட் முதல் இந்தியாவில் பருவமழை அதிகரிக்கும் வகையில் அது நேர்மறையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஆனந்த் திருமணச் சட்டமானது இந்தியாவில் உள்ள எந்தச்சமூகத்தினரின் திருமணச்சடங்குகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது?

அ. இசுலாமியர்கள்

ஆ. சீக்கியர்கள்

இ. சமணர்கள்

ஈ. யூதர்கள்

  • சீக்கிய திருமணச் சடங்குகளை அங்கீகரிக்கும் ஆனந்த் திருமணச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க தேசிய சிறுபான்மை ஆணையம் காணொளி வாயிலாக விவாதம் மேற்கொண்டது. ஜார்கண்ட், மகாராட்டிரா மற்றும் மேகாலயாபோன்ற மாநிலங்கள் அச்சட்டத்தைச் செயல்படுத்துவதாக அறிவித்தன; இவை தவிர பிற மாநிலங்கள் 2 மாதங்களுக்குள் அதைச் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. கடந்த 1909இல் தோற்றுவிக்கப்பட்டு 2012இல் திருத்தப்பட்ட இந்தச் சட்டம், சீக்கியர்களுக்கு இந்து திருமணச் சட்டத்திற்குப் புறத்தே திருமணங்களைப் பதிவுசெய்ய அனுமதிக்கிறது. அண்மையில், ஜம்மு-காஷ்மீர், ஆனந்த் திருமணப் பதிவுக்கான விதிகளை வகுத்தளித்தது.

3. எந்த நாட்டுடனான கரிமப்பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்தில், இந்தியா, கையெழுத்திட்டது?

அ. ஹாங்காங்

ஆ. தைவான்

இ. வியட்நாம்

ஈ. ஜப்பான்

  • இந்தியா, தைவான் இடையே இயற்கை வேளாண் பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் புது தில்லியில் தைவானுடனான வர்த்தகம் குறித்த 9ஆவது பணிக்குழு கூட்டத்தின்போது செயல்படுத்தப்பட்டது. இந்தியாவின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தைவானின் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் மற்றும் உணவு முகமை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் முகமைகளாகும்.
  • அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவு, பச்சை/கருப்பு, மூலிகை தேயிலை, மருத்துவ தாவரப் பொருட்கள்போன்ற முக்கிய இந்திய இயற்கை வேளாண் பொருட்களை தைவானுக்கு ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

4. அண்மையில், பிரதமரின் 25ஆவது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழு (PM-STIAC) ​​கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. பெங்களூரு

ஈ. ஹைதராபாத்

  • ஜூலை.09 அன்று புது தில்லியில் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமையில் நடைபெற்ற பிரதமரின் 25ஆவது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக்குழு (PM-STIAC) ​​கூட்டம், பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளை மதிப்பாய்வு செய்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட PM-STIAC உத்தி சார் விஷயங்களில் ஆலோசனைகளை வழங்குகிறது. ஆழ்கடல் ஆய்வு, AI, தேசிய பங்கு, மின்சார வாகனம் மற்றும் AGNIiபோன்ற பணிகளை உருவாக்குகிறது. மேலும், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசாங்க நிறுவனங்கள் முழுவதும் அவற்றை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுகிறது.

5. அண்மையில், நிதிசார் சேர்ப்புக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. NABARD

இ. நிதி அமைச்சகம்

ஈ. SEBI

  • 2023 மார்ச்சில் 60.1ஆக இருந்த ரிசர்வ் வங்கியின் நிதிசார் சேர்ப்புக் குறியீடு 2024 மார்ச்சில் 64.2ஆக உயர்ந்தது. இது இந்தியா முழுவதும் நிதிசார் சேர்ப்பில் வளர்ச்சியைக் குறிக்கிறது. இக்குறியீடு 0 (முழு விலக்கு) முதல் 100 (முழு சேர்த்தல்) வரை இருக்கும். அணுகல் (35%), பயன்பாடு (45%) மற்றும் தரம் (20%) ஆகிய மூன்று அளவுருக்களை இது உள்ளடக்கியுள்ளது. இம்முன்னேற்றம் முக்கியமாக பயன்பாட்டு பரிமாணத்தால் உந்தப்பட்டுள்ளது.

6. அண்மையில், EWS, SEBC, OBC பெண்களுக்கான இலவச உயர்கல்வி கொள்கையை அறிவித்த மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. இமாச்சல பிரதேசம்

  • பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (EWS), சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் (SEBC), மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகிய பெண்களுக்கான உயர்கல்வியை இலவசமாக வழங்கும் புதிய கொள்கையை மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. 2024-25 கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் இம்முயற்சியானது, தொழில்முறை படிப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதையும், தேசியக் கல்விக்கொள்கையுடன் ஒத்திசைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. அண்மையில், எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நுண்திவலை தண்ணீரைப்பயன்படுத்தி கனிம நானோ துகள்களை உருவாக்குவதற்கான ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி தில்லி

ஈ. ஐஐடி பம்பாய்

  • மெட்ராஸ் ஐஐடி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 மைக்ரோமீட்டர் அளவுள்ள நுண்திவலைகள் நீரைப் பயன்படுத்தி கனிம நானோதுகள்களை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு வாழ்வின் தோற்றம் மற்றும் வேளாண் மண் நிறைவாக்கலுக்கான சாத்தியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. நுண்திவலைகளால் தாதுக்களை பேரளவு நீரைவிட வேகமாக விரைவாக நானோ துகள்களாக உடைக்க முடியும். எடுத்துக்காட்டுக்கு, சிலிக்கா நானோதுகள்களால் தாவர வளர்ச்சியை மேம்படுத்த முடியும், தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்ற முடியும் மற்றும் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இயலும்.

8. அண்மையில், ‘மருத்துவச் சாதனங்கள் தகவல் அமைப்பு – MeDvIS’ஐ அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. உலக சுகாதார அமைப்பு

ஆ. உலக வங்கி

இ. UNICEF

ஈ. UNDP

  • 2,301 வகையான மருத்துவ சாதனங்கள்பற்றிய தகவல்களை வழங்கும் MeDevIS (மருத்துவச் சாதனங்கள் தகவல் அமைப்பு) என்ற இணையதளத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிமுகப்படுத்தியது. பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மருத்துவச் சாதனங்களின் தேர்வு, கொள்முதல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான முடிவெடுக்க இது உதவுகிறது.
  • இத்தளமானது 10,000-க்கும் மேற்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. வெப்பமானிகள்போன்ற எளிய கருவிகள் முதல் உதறல்நீக்கி மற்றும் ரேடியோதெரபி சாதனங்கள்போன்ற சிக்கலான உபகரணங்கள் வரை இதில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

9. 2024 – உலக மக்கள்தொகை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. To Leave No One Behind, Count Everyone

ஆ. Safeguard the health and rights of women and girls

இ. Gender equality and reproductive health

ஈ. Family Planning is a Human Right

  • உலக மக்கள்தொகை நாளானது 1990 முதல் ஆண்டுதோறும் ஜூலை.11ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இது மக்கள்தொகை வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வளர்ச்சி சிக்கல்களை மையமாகக்கொண்டுள்ளது. 1989ஆம் ஆண்டு UNDPஆல் நிறுவப்பட்ட இந்நாள், 1987 ஜூலை.11இல் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனைத் தாண்டிய தேதியைக் நினைவுகூருகிறது. “To Leave No One Behind, Count Everyone” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. 2024 – பிட்ச் பிளாக் பயிற்சியை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. பிரான்ஸ்

இ. ஆஸ்திரேலியா

ஈ. நியூசிலாந்து

  • பிட்ச் பிளாக்-2024 பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் குழு ஆஸ்திரேலிய விமானப்படை தளமான டார்வின் சென்றது. இந்தப் பயிற்சி 2024 ஜூலை.12 முதல் ஆக.02 வரை நடைபெறுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும். ‘பிட்ச் பிளாக்’ என்ற இந்தப் பயிற்சி மக்கள் இல்லாத பெரிய பகுதிகளில் இரவு நேரத்தில் நடத்தப்படும் பயிற்சியாகும்.
  • பிட்ச் பிளாக்கின் 43 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஆண்டின் பயிற்சி மிகப்பெரியதாகும். இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட விமானங்களும் பல்வேறு விமானப்படைகளின் 4400 வீரர்களும் பங்கேற்கின்றனர். இப்பயிற்சி, பங்கேற்கும் நாடுகளின் திறனை வலுப்படுத்துதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை வலுப்படுத்தவும் உதவும். இந்திய விமானப்படை இதற்கு முன்பு 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்தப்பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

11. துளைக்குழி புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (Borehole Geophysics Research Laboratory) அறிவியல் ரீதியான ஆழ்துளையிடல் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கடல்சார் பல்லுயிர்குறித்து ஆய்வு செய்தல்

ஆ. புதைபடிவ எரிபொருட்களை ஆராய்தல்

இ. நீர்த்தேக்கத்தால் தூண்டப்படும் நிலநடுக்கங்களைப் புரிந்து கொள்ளுதல்

ஈ. நிலத்தடி நீராதாரங்களைத் தேடுதல்

  • புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், மகாராஷ்டிராவின் காரத்தில் உள்ள துளைக்குழி புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியாவின் அறிவியல் ரீதியிலான ஆழ்துளையிடல் திட்டத்தை வழிநடத்துகிறது. மகாராஷ்டிராவின் கொய்னா-வார்னா பகுதியில், 1962இல் கொய்னா அணை கட்டப்பட்டதிலிருந்து, நில அதிர்வுக்கு ஆளாகக்கூடிய நீர்த்தேக்கத்தால் தூண்டப்பட்ட நிலநடுக்கங்களை ஆய்வுசெய்வதற்காக பூமியின் மேலோட்டில் 6 கிமீ தூரம் வரை எட்டுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி நிலநடுக்கவியல் & தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதோடு புவி இடர்களைப் புரிந்துகொள்வதற்கும் புவி வளங்களை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

12. அண்மையில், இந்தியாவின் எந்தப் பகுதியில் கேடய-வால் பாம்பின் புதிய இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?

அ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

இ. மேற்கிமயமலைகள்

ஈ. ஆரவல்லி மலைத்தொடர்

  • மேற்குத்தொடர்ச்சி மலையின் மேகமலை – மூணாறு நிலப்பரப்பில், ‘Uropeltis caudomaculata’ என்ற புதிய வகை கேடய-வால் பாம்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மஞ்சள்நிற புள்ளிகளைக் கொண்ட அதன் வாலில் கொண்டுள்ள இந்த நஞ்சற்ற இனம் அதன் மிகையான அடிப்புற செதில்களால் வேறுபட்டு காணப்படுகிறது.
  • மேகமலை புலிகள் காப்பகம், பெரியாறு புலிகள் சரணாலயம் மற்றும் மூணாற்றின் யெல்லப்பட்டி ஆகிய இடங்களில் பிரத்தியேகமாக காணப்படுகிறது. ‘Uropeltidae’ குடும்பத்தைச் சேர்ந்த கேடய-வால் பாம்புகள், தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவை. அவை மலைப்பாங்கான காடுகளில் மண்ணுக்கு அடியில் ஓரடி வரை துளையிட்டு வாழ்கின்றன. அவை தமது வால் முனையில் ஒரு கெரடினஸ் கவசத்தைக் கொண்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம்: சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற நடுவண் அரசு முடிவு.

வங்கிகள் கட்டுப்பாட்டுச்சட்டம் 1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், நிர்வாக மாற்றம்) சட்டம், 1970 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை வங்கியில் நடுவணரசின் பங்கு 51 சதவீதமாகக் குறைக்கப்படும்.

தனியார்மயமாக்கப்படும் ஒரு வங்கி IDBI என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கும் சட்டத்திருத்த மசோதா 2021ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக நடுவணரசு மாற்றியது. இதன்மூலம் நாட்டிலுள்ள பொதுத்துறை வங்களின் எண்ணிக்கை 27இலிருந்து 12ஆக குறைக்கப்பட்டது.

2. TANGEDCOஐ இரண்டாகப்பிரிக்க நடுவணரசு ஒப்புதல்.

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் (TANGEDCO) நிர்வாக காரணங்களுக்காக TANGEDCOஐ இரண்டாகப் பிரிக்க நடுவண் அரசிடம், தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. இதற்கு தற்போது நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ‘TANGEDCO’ இனி ‘தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம்’ என்று ஒரு பிரிவாகவும், ‘தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம்’ என்று இன்னொரு பிரிவாகவும் செயல்படவுள்ளது.

இதில், தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் என்பது நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் எரிபொருட்களை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதை மேற்கொள்ளும். அதேபோல் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் என்பது வளி, சூரியவொளி, உயிரி-எரிபொருள், கடலலை உள்ளிட்டவற்றின்மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கான பணிகளை இனி மேற்கொள்ளும்.

3. நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு: தமிழ்நாடு 2ஆவது இடம்.

2023-24ஆம் ஆண்டுக்கான NITI ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு 2ஆவது இடம் பிடித்துள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான NITI ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் இந்தியா ஒட்டுமொத்தமாக 71 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கான அந்தக் குறியீட்டில் இந்தியா 66 புள்ளிகளைப்பெற்ற நிலையில், தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.

மாநிலங்களைப் பொருத்தவரை நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் கேரளம் மற்றும் உத்தரகண்ட் தலா 79 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளன. நாகாலாந்து 63 புள்ளிகளுடனும், ஜார்கண்ட் 62 புள்ளிகளுடனும், பீகார் 57 புள்ளிகளுடனும் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக உள்ளன. இந்தக் குறியீட்டில் யூனியன் பிரதேசங்களை பொருத்தவரை சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகள், தில்லி ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

4. ஜூன்.25 – அரசமைப்பு படுகொலை நாள்: நடுவணரசு அறிவிப்பு.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை கண்டித்து, ஆண்டு தோறும் ஜூன்.25ஆம் தேதியன்று ‘சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் ‘அரசியலமைப்பு படுகொலை நாள்’ அனுசரிக்கப்படும் என்று நடுவணரசு அறிவித்துள்ளது.

5. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் ஊடக மாநாடு: நடுவணரசு அறிவிப்பு.

‘உலக ஆடியோ காணொலி மற்றும் பொழுதுபோக்கு மாநாடு’ இந்தியாவில் முதல்முறையாக கோவா மாநிலத்தில் வருகின்ற நவம்பரில் நடைபெறவுள்ளது. பன்னாட்டு திரைப்பட திருவிழாவுடன் இம்மாநாடும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6. காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூரில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜூலை. 15ஆம் தேதியன்று (‘பெருந்தலைவர்’ காமராஜர் பிறந்த நாள் :: கல்வி வளர்ச்சி நாள்) தொடங்கி வைக்கிறார்.

1. Which organization recently upgraded the Regional Analysis of Indian Ocean (RAIN) system for gathering information on the health of the Indian Ocean?

A. National Institute of Oceanography

B. Indian National Centre for Ocean Information Services (INCOIS)

C. Indian Meteorological Department

D. National Oceanic and Atmospheric Administration (NOAA)

  • The Indian National Centre for Ocean Information Services (INCOIS) in Hyderabad has upgraded its Regional Analysis of Indian Ocean (RAIN) system to include Sea Surface Height Anomaly (SSHA) alongside salinity and sea surface temperature. Developed since 2023 and implemented recently, the system aids in monitoring the Indian Ocean’s health. Additionally, the Indian Ocean Dipole (IOD) is currently neutral but is expected to turn positive, potentially increasing monsoon rainfall in India from August onwards.

2. Anand Marriage Act provides statutory recognition to marriage rituals of which community in India?

A. Muslim

B. Sikh

C. Jain

D. Jews

  • The National Commission for Minorities held a video conference to discuss the implementation of the Anand Marriage Act, which recognizes Sikh marriage rituals. States like Jharkhand, Maharashtra, and Meghalaya reported its implementation, while others assured to do so within two months. Originating in 1909 and amended in 2012, the Act allows Sikhs to register marriages outside the Hindu Marriage Act. Recently, Jammu and Kashmir framed rules for Anand marriage registration.

3. Recently, India and which country signed Mutual Recognition Agreement (MRA) for Organic Products?

A. Hong Kong

B. Taiwan

C. Vietnam

D. Japan

  • The India-Taiwan Mutual Recognition Agreement (MRA) for Organic Products came into effect on July 8, 2024, announced at the 9th Working Group on Trade Meeting in New Delhi. This agreement boosts trade in organic products between the two countries. Certified organic products from India can now be exported to Taiwan and vice versa. Implementing agencies are India’s APEDA and Taiwan’s Agriculture and Food Agency. Key exports include aromatic plants, rice, and herbal tea.

4. Recently, where was the 25th Prime Minister’s Science, Technology & Innovation Advisory Council (PM-STIAC) meeting held?

A. New Delhi

B. Chennai

C. Bengaluru

D. Hyderabad

  • The 25th Prime Minister’s Science, Technology & Innovation Advisory Council (PM-STIAC) meeting, chaired by Professor Ajay Kumar Sood on July 9, 2024 in New Delhi, reviewed various science and technology initiatives. Established in 2018, PM-STIAC advises on strategic matters, formulates missions like Deep Ocean Exploration, AI, National Quantum, Electric Vehicle, and AGNIi missions, and oversees their implementation across government agencies to advance India’s scientific and technological capabilities.

5. Recently, which organization has released Financial Inclusion Index?

A. Reserve Bank of India

B. NABARD

C. Ministry of Finance

D. SEBI

  • The Reserve Bank’s Financial Inclusion (FI) Index rose to 64.2 in March 2024, up from 60.1 in March 2023, indicating growth in financial inclusion across India. The index ranges from 0 (complete exclusion) to 100 (full inclusion) and comprises three parameters: access (35%), usage (45%), and quality (20%). The improvement was mainly driven by the usage dimension.

6. Which state government recently announced free higher education policy for EWS, SEBC, OBC girls?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Kerala

D. Himachal Pradesh

  • The Maharashtra government has announced a new policy making higher education free for girls from the Economically Weaker Section (EWS), Socially and Economically Backward Classes (SEBC), and Other Backward Classes (OBC). Effective from the 2024-25 academic year, this initiative aims to increase female participation in professional courses and aligns with the National Education Policy (NEP).

7. Recently, researchers of which institute have demonstrated a novel method to create mineral nanoparticles using microdroplets of water?

A. IIT Madras

B. IIT Kanpur

C. IIT Delhi

D. IIT Bombay

  • Researchers at IIT Madras have discovered a method to create mineral nanoparticles using microdroplets of water, which are about 10 micrometers in size. This breakthrough has potential implications for the origin of life and agricultural soil replenishment. Microdroplets can break down minerals into nanoparticles faster than bulk water. Silica nanoparticles, for example, can enhance plant growth, potentially converting unproductive soils into fertile lands and improving food production and security.

8. Recently, which organization has launched the ‘Medical Devices Information System’ (MeDvIS)?

A. World Health Organization

B. World Bank

C. UNICEF

D. UNDP

  • The World Health Organization (WHO) has launched MeDevIS (Medical Devices Information System), an online platform providing global access to information on 2,301 types of medical devices. This resource aids decision-making for the selection, procurement, and use of medical devices for diagnostics & treatment of various diseases. The platform covers over 10,000 medical technologies, from simple tools like thermometers to complex equipment like defibrillators and radiotherapy devices, enhancing access and navigation for healthcare providers.

9. What is the theme of ‘World Population Day 2024’?

A. To Leave No One Behind, Count Everyone

B. Safeguard the health and rights of women and girls

C. Gender equality and reproductive health

D. Family Planning is a Human Right

  • World Population Day is observed annually on July 11 since 1990, focusing on population growth, environmental impact, and development issues. Established by the UNDP in 1989, the date marks the global population surpassing five billion on July 11, 1987. The 2024 theme is, “To Leave No One Behind, Count Everyone”.

10. Which country is the host of ‘Exercise Pitch Black 2024’?

A. India

B. France

C. Australia

D. New Zealand

  • An Indian Air Force (IAF) contingent arrived at RAAF Base Darwin, Australia, for Exercise Pitch Black 2024, from July 12 to August 2. This biennial, multinational exercise, the largest in its 43-year history, involves 20 countries, 140+ aircraft, and 4400 personnel. Focusing on night operations and Large Force Employment warfare, it includes IAF’s Su-30 MKI, C-17 Globemaster, and IL-78 aircraft, enhancing international cooperation and best practices.

11. What is the primary objective of Borehole Geophysics Research Laboratory (BGRL) scientific deep-drilling programme?

A. To study marine biodiversity

B. To explore for fossil fuels

C. To understand reservoir-triggered earthquakes

D. To search for underground water sources

  • The Borehole Geophysics Research Laboratory (BGRL) in Karad, Maharashtra, under the Ministry of Earth Sciences, leads India’s deep-drilling programme. It aims to reach 6 km into the earth’s crust to study reservoir-triggered earthquakes in Maharashtra’s Koyna-Warna region, prone to seismic activity since the 1962 impoundment of the Koyna Dam. This effort advances seismology and technological innovation, vital for understanding geohazards and developing geo-resources.

12. Recently, scientists have discovered a new species of a shield-tail snake in which region of India?

A. Western Ghats

B. Eastern Ghats

C. Trans Himalayas

D. Aravalli Range

  • Researchers recently discovered a new species of shield-tail snake, Uropeltis caudomaculata, in the Meghamalai-Munnar landscape of the Western Ghats. Named for the yellow spot on its tail, this non-venomous species is distinguished by its increased number of ventral scales and is found exclusively in the Meghamalai Tiger Reserve, Periyar Tiger Reserve, and Yellapetty, Munnar. Shield-tail snakes belong to the Uropeltidae family, endemic to peninsular India and Sri Lanka. They inhabit hilly forests, burrow up to one foot below soil, and occupy tunnels in leaves, humus, rocks, and logs. They possess a keratinous shield at the tail tip.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!