TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 12th September 2024

1. 2024-2026 வரை உலக தற்கொலை தடுப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Changing the Narratives on Suicide

ஆ. Creating Hope through Action

இ. Working together to prevent suicide

ஈ. One World Connected

  • உலக அளவில் தற்கொலை தடுப்புபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்.10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2003இல் முதன்முதலில் அனுசரிக்கப்பட்ட இந்நாள், தற்கொலை எண்ணம் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிகள்குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதை நோக்கம் எனக் கொண்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 7,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன. 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Changing the Narratives on Suicide” என்பதாகும்.

2. அண்மையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) முதல் நிறுவன நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு

இ. புது தில்லி

ஈ. ஹைதராபாத்

  • புது தில்லியில் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) முதல் நிறுவன நாளன்று சைபர் கிரைமை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய முயற்சிகளைத் தொடங்கி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் உரையாற்றினார். இணைய மோசடிக் கட்டுப்பாட்டு மையம் (CFMC) வங்கிகள், நிதி இடைத்தரகர்கள் மற்றும் இணையவழி நிதிக்குற்றங்களில் உடனடி நடவடிக்கைக்காக சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் நிறுவப்பட்டது. ‘சமன்வயா’ இயங்குதளம் என்பது இணையக் குற்றங்களின் தரவுப்பகிர்வு, வரைபடமாக்கல் மற்றும் சட்ட அமலாக்க முகவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்கான இணைய அடிப்படையிலான அமைப்பாகும்.
  • ‘சைபர் கமாண்டோஸ்’ என்ற திட்டம், டிஜிட்டல் பாதுகாப்பில் மாநில மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க பயிற்சிபெற்ற சைபர் நிபுணர்களைக் கொண்ட சிறப்புக்குழுவாகும்.

3. ‘விண்முகில் – Nebula’ என்றால் என்ன?

அ. விண்வெளியில் தூசி மற்றும் வாயுவால் உண்டாகும் மாபெரும் முகில்

ஆ. விமானந்தாங்கிக்கப்பல்

இ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

ஈ. புறக்கோள்

  • விண்வெளி ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ‘ரெட் ஸ்பைடர்’ விண்முகிலின் அற்புதமான படத்தை NASA சமீபத்தில் பகிர்ந்துள்ளது. ஒரு விண்முகில் என்பது விண்வெளியில் தூசி மற்றும் வாயுவால் ஏற்படும் மிகப்பெரிய முகிலாகும்; அங்கு புதிய விண்மீன்கள் உருவாகலாம் அல்லது இறக்கும் விண்மீன்களிலிருந்து வாயு மற்றும் தூசி சேகரிக்கப்படலாம். விண்முகில்கள், பொதுவாக, “விண்மீன் வளர்ப்பகம்” என்று அழைக்கப்படுகின்றன.
  • ஈர்ப்புவிசையானது விண்முகிலில் உள்ள தூசி மற்றும் வாயுக்கூட்டங்களை ஒன்றிணைத்து, இறுதியில் ஒரு சூடான மையத்தை உருவாக்கி புதிய விண்மீனாக மாறும். விண்முகில்கள் விண்மீனிடைவெளியில் காணப்படுகின்றன. நமக்கு அருகில் சுமார் எழுநூறு ஒளியாண்டுகள் தொலைவில் ‘ஹெலிக்ஸ்’ விண்முகில் உள்ளது.

4. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்களுக்கான ஆணையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்களுக்கான ஆணையம் (CSTT) அண்மையில் அனைத்து 22 அதிகாரப்பூர்வ இந்திய மொழிகளிலும் தொழில்நுட்ப சொற்களை வழங்கும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. 1960 டிசம்பரில் நிறுவப்பட்ட இது, ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் அறிவியல் & தொழில்நுட்ப சொற்களை உருவாக்குதல் மற்றும் வரையறுத்தலை குறிக்கோளாகக் கொண்டது. இது உயர்கல்வித் துறையின்கீழ், கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது, அதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. CSTTஇன் முக்கிய செயல்பாடுகள் தரப்படுத்தப்பட்ட சொற்களை உருவாக்குதல், அதன் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் பரவலான பயன்பாட்டை உறுதிசெய்தல்.

5. 2024 நவம்பரில், ‘பன்னாட்டு கூட்டுறவுக் கூட்டணி பொதுச்சபை’ மற்றும் ‘உலகளாவிய கூட்டுறவு மாநாடு’ ஆகியவற்றை நடத்தவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. நேபாளம்

ஈ. ரஷ்யா

  • நவம்பர் மாதம் புது தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பன்னாட்டு கூட்டுறவுக் கூட்டணியின் பொதுச்சபை மற்றும் உலகளாவிய மாநாட்டை இந்தியா முதல் முறையாக நடத்தவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள், “சகாகர் சே சம்ரிதி” என்ற பிரதமர் நரேந்திர மோதியின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும், “Cooperatives Build Prosperity for All” என்பதாகும். இந்த நிகழ்வானது ஐநா பன்னாட்டு கூட்டுறவு ஆண்டு – 2025ஐ அறிமுகப்படுத்தி அதற்கான நினைவு முத்திரையை வெளியிடும். உலகின் கூட்டுறவு நிறுவனங்களில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள இந்தியா, இதன்மூலம் அதன் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. அண்மையில், “இந்தியாவின் சுகாதார இயக்கவியல் (உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள்) 2022-23” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. சுகாதார அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • சுகாதார அமைச்சகம், “இந்தியாவின் சுகாதார இயக்கவியல் (உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள்) 2022-23” அறிக்கையை வெளியிட்டது; இது முன்னர் கிராமப்புற சுகாதார புள்ளிவிவரங்கள் என்று அறியப்பட்டது. இந்தியாவில் 714 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் 362 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. 2005-2023 வரை கிராமப்புற சுகாதார வசதிகள் அதிகரித்துள்ளன; நாடு முழுவதும் சுமார் 32,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) உள்ளன; அவற்றில் 25,000 கிராமப்புறங்களில் உள்ளன. PHCகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் 20,000 இலிருந்து 32,000ஆக அதிகரித்துள்ளனர்; ஆனால் காலியிடங்கள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. பல துணை மையங்கள் (SCs) மற்றும் நகர்ப்புற PHCகள் (U-PHCs) வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன; நகர்ப்புற மக்கள்தொகை விதிமுறைகளின்படி U-PHCகளில் 36% பற்றாக்குறை நிலவி வருகிறது.

7. செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளை நிறைவுசெய்த இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பு தொடங்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2017

ஆ. 2018

இ. 2019

ஈ. 2020

  • இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்னெடுப்பு (IPOI) 2019இல் பாங்காக்கில் நடந்த கிழக்காசிய உச்சிமாநாட்டில் உலகளாவிய, ஒப்பந்தமல்லாத முயற்சியாக இந்தியாவால் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் 2015ஆம் ஆண்டு ‘Security and Growth for All in the Region (SAGAR)’ என்ற கருத்தை அடிப்படையாகக்கொண்டது. IPOI நடைமுறை ஒத்துழைப்புமூலம் சமூகத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒத்த எண்ணங்கொண்ட நாடுகளுடன் கூட்டுறவை ஊக்குவிக்கிறது. புவிசார் அரசியல் போட்டிக்கு மாற்றாக உள்ள IPOI, இந்தியாவின் கடல்சார் தொலைநோக்குப் பார்வை-2030 & AIIPOIP மற்றும் ASEANஇன் AOIP போன்ற உலகளாவிய முன்முயற்சிகளுடன் இணைகிறது.

8. அண்மையில், காற்று தர மேலாண்மை பரிமாற்ற தளத்தை (AQMx) உருவாக்கி அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. UNEP

ஆ. தட்பவெப்பநிலை மற்றும் தூயவளிக்கான கூட்டணி (CCAC)

இ. தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC)

ஈ. உலக சுகாதார அமைப்பு

  • தட்பவெப்பநிலை மற்றும் தூயவளிக்கான கூட்டணி (CCAC) காற்று தர மேலாண்மை பரிமாற்ற தளத்தை (AQMx) அறிமுகப்படுத்தியுள்ளது. வளிமாசுபாட்டுக்குத் தீர்வுகாண்பதில் உலகளாவிய வளித்தர நிபுணர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. AQMx WHOஇன் வளித்தர வழிகாட்டுதல் இலக்குகளுடன் சீரமைக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் கருவிகளை வழங்குகிறது. வளிமாசுபாட்டிற்கு உலகளாவிய ஒத்துழைப்பைக் கோரும் ஐநா சுற்றுச்சூழல் சபையின் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது. இத்தளமானது காற்றின் தர மேலாண்மை திறன் இடைவெளிகளை நிர்வகிக்கப்பட்ட வழிகாட்டுதலுடன் தீர்வுகாண்கிறது.

9. அண்மையில், ஐந்தாவது ‘இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு’ கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. மணிலா

ஆ. புது தில்லி

இ. ஆன்டிபோலோ

ஈ. சென்னை

  • மணிலாவில் நடந்த 5ஆவது இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு செயலர் தலைமைதாங்கினார். இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான 75 ஆண்டுகால அரசியல்சார் உறவுகள் மற்றும் பத்து ஆண்டுகால இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை ஆகியவற்றுடன் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 1949இல் தொடங்கிய அரசியல்சார் உறவுகள், 1992இல் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் 2014இல் கிழக்கை நோக்கி செயல்படு கொள்கையுடன் வலுப்பெற்றன.
  • இருநாடுகளுக்கும் இடையேயான அண்மைய முன்னேற்றங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கான $374.9 மில்லியன் ஒப்பந்தம், பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வளர்ந்துவரும் இருதரப்பு வர்த்தகம் ஆகியவை அடங்கும்.

10. பிரதமர் கிராம சதக் யோஜனாவைச் (PMGSY) செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், “2024-25 முதல் 2028-29 நிதியாண்டில் பிரதமர் கிராமச்சாலைகள் திட்டம்-IV (PMGSY-IV)”-ஐ செயல்படுத்துவதற்கான ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதலளிக்கப்பட்டது. சாலை வசதி இல்லா, தகுதிவாய்ந்த 25,000 குடியிருப்புகளுக்கு புதிய இணைப்புச்சாலைகள் அமைக்கவும், புதிய இணைப்புச்சாலைகளில் பாலங்கள் கட்டுதல் / மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக 62,500 கிமீ நீளமுள்ள சாலைகள் அமைக்க நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு `70,125 கோடியாகும்.

11. ‘Ahaetulla longirostris’ என்பது சார்ந்த இனம் எது?

அ. சிலந்தி

ஆ. தவளை

இ. பாம்பு

ஈ. மீன்

  • Ahaetulla longirostris’ என்ற புதிய பாம்பினம் இந்தியாவில் தனித்துவமான நீண்ட மூக்குடன் கண்டுபிடிக்கப்பட்டது. நீள்மூக்குடைய கொடி போன்ற இப்பாம்பு, பீகார் மற்றும் மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டது. மெல்லிய, நீளமான உடலமைப்புகொண்ட இது, 4 அடி நீளம் வரை வளரக்கூடியது. அதன் நிறம் பிரகாசமான பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு-பழுப்பு வரை உள்ளது. அதன் முக்கோண வடிவிலான தலையின் நீளத்தில் 18% மூக்கு இடம்பெற்றுள்ளது. இவ்வினங்கள் காடுகளிலும் நகர்ப்புறங்களிலும் வாழக்கூடியவை.

12. அண்மையில், எந்த நாட்டுடன் இணைந்து “கிழக்குப்பாலம்-VII & அல் நஜா-V பயிற்சியை” ஓமன் நடத்தியது?

அ. இந்தியா

ஆ. பூடான்

இ. மியான்மர்

ஈ. நேபாளம்

  • 2024 செப்டம்பரில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இந்திய மற்றும் ஓமன் இராணுவப்படைகள் இருதரப்பு பயிற்சிகளை நடத்துகின்றன. இந்திய வான்படையானது 2024 செப்.11-22 வரை ஓமனின் வான்படை தளமான மசிராவில் நடைபெறும் ஈஸ்டர்ன் பிரிட்ஜ்-VII பயிற்சியில் பங்கேற்கிறது. இந்தியக்குழுவில் MiG-29, ஜாகுவார் போர் விமானங்கள் மற்றும் C-17 குளோப் மாஸ்டர்-III போக்குவரத்து விமானங்கள் உள்ளன. 2009இல் முதன்முதலில் நடத்தப்பட்ட இந்தப்பயிற்சி, இயங்குதன்மை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துகிறது. இந்திய இராணுவம் AL NAJAH-V பயிற்சியில் 2024 செப்டம்பர்.13-26 வரை ஓமனின் சலாலாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாலைவனப்போரில் கவனம் செலுத்துகிறது. இப்பயிற்சிகள் இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையில் மாறி மாறி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு பெண்களின் நலத்தைப் பாதிக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு பெண்களின் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் கருச்சிதைவு அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 76% பேர் மட்டுமே போதுமான அளவு அயோடின் கலந்த உப்பை உட்கொள்கின்றனர். ஒரு குழந்தையின் முதல் 1000 நாள்களில் மூளை வளர்ச்சியின் பெரும்பகுதி அயோடினை சார்ந்தே நடைபெறுகிறது.

2. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: 90,000 ‘ஒசல்டாமிவிர்’ மாத்திரைகள் கொள்முதல்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், 90,000 ‘ஒசல்டாமிவிர்’ மாத்திரைகள் கொள்முதல் செய்ய, மருத்துவ சேவை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தால், ‘ஏடிஸ்–ஏஜிப்டி’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

1. What is theme of ‘World Suicide Prevention Day’ for 2024-2026?

A. Changing the Narratives on Suicide

B. Creating Hope through Action

C. Working together to prevent suicide

D. One World Connected

  • World Suicide Prevention Day is observed annually on September 10 to raise awareness about suicide prevention globally. First held in 2003, its goal is to educate the public on suicidal behavior and ways to prevent it. Over 700,000 suicides occur worldwide each year. The 2024 theme, “Changing the Narratives on Suicide.

2. Recently, where was the the first Foundation Day program of the Indian Cybercrime Coordination Centre (I4C) organized?

A. Chennai

B. Bengaluru

C. New Delhi

D. Hyderabad

  • The union home minister addressed the first Foundation Day of the Indian Cyber Crime Coordination Centre (I4C) in New Delhi, launching new initiatives to combat cybercrime. The Cyber Fraud Mitigation Centre (CFMC) was established to coordinate with banks, financial intermediaries, and law enforcement for immediate action on online financial crimes.
  • The Samanvaya Platform is a web-based system for cybercrime data sharing, mapping, and coordination among law enforcement agencies. The ‘Cyber Commandos’ Program will create a special team of trained cyber experts to support state and central agencies in digital security.

3. What is a ‘Nebula’?

A. Giant cloud of dust and gas in space

B. Aircraft carrier

C. Earth observation satellite

D. Exoplanet

  • NASA recently shared an amazing image of the Red Spider Nebula, exciting space fans. A nebula is a large cloud of dust and gas in space, where new stars can form or where gas and dust from dying stars collect. Nebulae are called as “star nurseries”. Gravity causes clumps of dust and gas in a nebula to come together, eventually collapsing to form a hot core that becomes a new star. Nebulae are found in interstellar space, with the closest known one being the Helix Nebula, about 700 light-years from Earth.

4. Commission for Scientific and Technical Terminology (CSTT) is functioning under which ministry?

A. Ministry of Defence

B. Ministry of Education

C. Ministry of Home Affairs

D. Ministry of Science and Technology

  • The Commission for Scientific and Technical Terminology (CSTT) recently launched a website offering technical terms in all 22 official Indian languages. Established in December 1960, CSTT’s goal is to develop and define scientific and technical terms in Hindi and other Indian languages. It operates under the Department of Higher Education, Ministry of Education, with its headquarters in New Delhi. The CSTT’s main functions are to create standardized terminology, promote its use, and ensure widespread distribution.

5. Which country will host the ‘International Cooperative Alliance General Assembly’ and the ‘Global Cooperative Conference’ in November 2024?

A. India

B. China

C. Nepal

D. Russia

  • India will host the International Cooperative Alliance’s general assembly and global conference for the first time in November at Bharat Mandapam, New Delhi. The theme of the conference is “Cooperatives Build Prosperity for All,” reflecting Prime Minister Narendra Modi’s vision of ‘Sahkar se Samriddhi.’ The event will launch the UN International Year of Cooperatives – 2025 and unveil a commemorative stamp for it. India, with a significant share of the world’s cooperatives, aims to boost its cooperative movement through this conference.

6. Which ministry recently published report “Health Dynamics of India (Infrastructure and Human Resources) 2022-23”?

A. Ministry of Rural Development

B. Ministry of Health

C. Ministry of Home Affairs

D. Ministry of Urban Development

  • The Health Ministry released the “Health Dynamics of India (Infrastructure and Human Resources) 2022-23” report, formerly known as Rural Health Statistics. India has 714 district hospitals and 362 medical colleges. Rural health facilities have increased from 2005 to 2023, with around 32,000 Primary Health Centers (PHCs) nationwide, 25,000 of which are in rural areas.
  • Doctors and medical officers in PHCs increased from 20,000 to 32,000, but vacancies have nearly doubled. Many Sub-Centres (SCs) and Urban PHCs (U-PHCs) operate in rented buildings, with a 36% shortfall in U-PHCs as per urban population norms.

7. Indo-Pacific Oceans Initiative (IPOI), recently completed 5 years of implementation, was launched in which year?

A. 2017

B. 2018

C. 2019

D. 2020

  • The Indo-Pacific Oceans Initiative (IPOI) was launched by India in 2019 at the East Asia Summit in Bangkok as a global, non-treaty initiative. It builds on India’s 2015 ‘Security and Growth for All in the Region (SAGAR)’ concept. IPOI promotes community building and partnerships with like-minded countries through practical cooperation. IPOI offers an alternative to geopolitical competition and aligns with India’s Maritime Vision 2030 and global initiatives like AIIPOIP and ASEAN’s AOIP.

8. Which organization recently developed and launched the Air Quality Management Exchange Platform (AQMx)?

A. UNEP

B. Climate and Clean Air Coalition (CCAC)

C. Intergovernmental Panel on Climate Change (IPCC)

D. World Health Organization

  • The Climate and Clean Air Coalition (CCAC) launched the Air Quality Management Exchange Platform (AQMx). It aims to assist air quality professionals globally in addressing air pollution. AQMx provides guidance and tools aligned with WHO Air Quality Guidelines targets. It was created in response to a UN Environment Assembly resolution, calling for global cooperation on air pollution. The platform addresses air quality management capacity gaps with curated guidance.

9. Recently, where was the fifth ‘India-Philippines Joint Defence Cooperation’ meeting held?

A. Manila

B. New Delhi

C. Antipolo

D. Chennai

  • The Defence Secretary co-chaired the 5th India-Philippines Joint Defence Cooperation Committee meeting in Manila. This meeting is significant as it coincides with 75 years of diplomatic ties between India and the Philippines and 10 years of India’s Act East Policy.
  • Diplomatic relations began in 1949, and ties strengthened with India’s Look East Policy in 1992 and Act East Policy in 2014. Recent developments include a $374.9 million contract for BrahMos missiles, an MoU on Defence Industry cooperation, and growing bilateral trade.

10. Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) is implemented by which ministry?

A. Ministry of Rural Development

B. Ministry of Housing and Urban Affairs

C. Ministry of Home Affairs

D. Ministry of Urban Development

  • The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, approved the fourth phase of the Pradhan Mantri Gram Sadak Yojana-IV (PMGSY-IV). It is implemented by Ministry of Rural Development. PMGSY-IV will run for five years (2024-2029) with a total cost of Rs 70,125 crore, shared by the central and state governments. The target is to build and upgrade 62,500 km of roads to connect 25,000 unconnected villages.

11. ‘Ahaetulla longirostris’ belongs to which species?

A. Spider

B. Frog

C. Snake

D. Fish

  • A new snake species, Ahaetulla Longirostris, was discovered in India with a unique long snout. This snake, called the long-snouted vine snake, was found in Bihar and Meghalaya. It has a slender, elongated body and can grow up to 4 feet long. Its color ranges from bright green to orange-brown, with an orange belly. The head is triangular, and the snout is 18% of the head’s length. The species can live in both forests and urban areas.

12. Recently, Oman hosts “Eastern Bridge VII & Al Najah V Exercise” with which country?

A. India

B. Bhutan

C. Myanmar

D. Nepal

  • Indian and Omani military forces are conducting bilateral exercises in September 2024 to strengthen defence ties. The Indian Air Force is participating in Exercise Eastern Bridge VII, held at Air Force Base Masirah, Oman, from 11-22 September 2024. The Indian contingent includes MiG-29s, Jaguar fighter planes, and C-17 Globemaster III transport planes. This exercise, first held in 2009, enhances interoperability and operational readiness.
  • The Indian Army is also participating in Exercise AL NAJAH-V from 13-26 September 2024 in Salalah, Oman, focusing on counterterrorism operations and desert warfare. These exercises are held biennially, alternating between India and Oman.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!