TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 12th July 2024

1. கேரள மாநிலத்தின் குளத்துப்புழை கிராமப்பஞ்சாயத்தில், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தை தொடங்கிய அமைப்பு எது?

அ. SEBI

. NABARD

இ. FCI

ஈ. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்

  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) தனது முதல் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தை கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள குளத்துப்புழை கிராமப்பஞ்சாயத்தில் ஜூலை.08ஆம் தேதி அன்று தொடங்கியது. தனலால் செயல்படுத்தப்படும் இந்த ஐந்தாண்டுத் திட்டம், பல்வேறு விவசாயத்தின்மூலம் 413 பழங்குடியின குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இதில் நீர்வள மேம்பாடு, திறன் பயிற்சி மற்றும் சமூகத்தைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக பழங்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

2. அண்மையில், ரேச்சல் ரீவ்ஸ், கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் பெண் நிதியமைச்சராக ஆனார்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஐக்கிய இராச்சியம்

இ. ரஷ்யா

ஈ. நியூசிலாந்து

  • 45 வயதான ரேச்சல் ரீவ்ஸ், ஐக்கிய இராச்சியத்தின் முதல் பெண் நிதியமைச்சராக ஆனார். ஆக்ஸ்போர்டில் இளங்கலைப் பட்டமும் LSEஇல் முதுகலைப் பட்டமும்பெற்ற பொருளாதார நிபுணரான இவர், இங்கிலாந்து வங்கி மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்துள்ளார். 2010ஆம் ஆண்டில் லீட்ஸ் வெஸ்டுக்கான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2021இல் நிதிக்கொள்கைத் தலைவரானார். வருவாய் அல்லது மாநகராட்சி வரிகளை உயர்த்தாமல் இங்கிலாந்தின் மந்தமான பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதை அவர் தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.

3. ‘மீளாக்க நிறுத்தி – Regenerative Braking’இன் முதன்மை செயல்பாடு என்ன?

அ. வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பது

ஆ. இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவது

இ. எரிபொருள் எரிப்பை அதிகரிப்பது

ஈ. இயந்திரத்தை குளிர்விப்பது

  • ஹைபிரிட் மற்றும் முழு-எலக்ட்ரிக் வாகனங்களில் காணப்படும் மீளாக்க நிறுத்தி, வாகனத்தின் உயர் மின்னழுத்த மின்கலத்தை மின்னேற்றம் செய்ய இயக்க ஆற்றலை நிறுத்தியிலிருந்து மின்னாற்றலாக மாற்றுகிறது. இயக்க ஆற்றல் மீட்பு அமைப்பு என்றும் அறியப்படுகிற இது, மின்னியற்றிகளாக செயல்பட மின் மோட்டார்களை தலைகீழாகப் பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு மகிழுந்தின் வேகத்தைக் குறைத்து, வழக்கமான நிறுத்திகளுக்கு உதவுகிறது மற்றும் எரிபொருள் திறனை மேம்படுத்துகிறது.

4. தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. கடல்சார் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துதல்

ஆ. ஆழ்கடல்களில் கடல்சார் பல்லுயிர்களின் நீண்டகால பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்தல்

இ. கடலோரப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல்

ஈ. கடல்சார் வர்த்தகத்தை மேம்படுத்துதல்

  • பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை, தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தம் அல்லது ‘ஆழ்கடல் ஒப்பந்தத்தில்’ இந்தியா கையெழுத்திட ஒப்புதல் அளித்தது. UNCLOSஇன் கீழ் உள்ள இந்த ஒப்பந்தம், பன்னாட்டு ஒத்துழைப்புமூலம் ஆழ்கடல்களில் கடல்சார் பல்லுயிர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிலையான பயன்பாடு மற்றும் பயன்களின் சமமான பகிர்வை உறுதிசெய்கிறது. இது சுற்றுச்சூழல்-மைய அணுகுமுறை, பாரம்பரிய மற்றும் அறிவியலறிவை ஊக்குவிக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களைக் குறைக்கிறது.

5. அண்மையில், இந்திய பெருநிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணிக்கவும் பெருநிறுவன மோசடிகளைக் கண்டறியவும், ‘AI தணிக்கைக் கருவியை’ கூட்டாக உருவாக்குவதற்காக கீழ்க்காணும் எந்த அமைச்சகத்துடன் CA நிறுவனம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

  • CA நிறுவனமும் நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் நிறுவன செயல்திறனைக் கண்காணிக்கவும் மோசடிகளைக் கண்டறியவும் ஒரு ‘AI தணிக்கைக் கருவியை’ உருவாக்க கூட்டிணைந்து வருகின்றன என்று அந்நிறுவனத்தின் ரஞ்சீத்குமார் அறிவித்தார். இக்கருவி நிறுவனங்கள் ‘இயங்கும் நிறுவனமாக’ இருக்க உதவும். CA நிறுவனம் AI கருவிக்காக `25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதிகபட்சமாக `100 கோடி வரை நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

6. அண்மையில், இந்திய அரசாங்கம், கீழ்க்காணும் எந்த மத்திய அமைச்சகத்தை ஹஜ் செயற்குழுவுக்கான மைய அமைச்சகமாக நியமித்தது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. சிறுபான்மையினர் நல அமைச்சகம்

  • வெளியுறவு அமைச்சகத்திற்கு மாற்றாக சிறுபான்மையினர் நல அமைச்சகத்தை ஹஜ் செயற்குழுவுக்கான மைய அமைச்சகமாக இந்திய அரசாங்கம் நியமித்துள்ளது. ஹஜ் செயற்குழு (திருத்தம்) விதிகள், 2024 என்ற புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு, உள்துறை, நிதி மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து ஆகிய அமைச்சகங்களின் அதிகாரிகள் பதவிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். முன்னதாக, வெளியுறவு அமைச்சகம் ஹஜ் செயற்குழு சட்டம், 2002இன்கீழ் ஹஜ் புனிதப்பயண நிர்வாகத்தை நிர்வகித்து வந்தது.

7. “Sustainable Transport for Rural Entrepreneurs through Electric Bicycles – STREE” திட்டத்தைத் தொடங்குவதற்கு, கீழ்க்காணும் எந்த இரண்டு நிறுவனங்கள் கூட்டிணைந்துள்ளன?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் & ஒருங்கிணைப்பு எரிசக்தி சேவைகள் நிறுவனம் (CESL)

ஆ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் & DRDO

இ. வேளாண்மை அமைச்சகம் & ஒருங்கிணைப்பு எரிசக்தி சேவைகள் நிறுவனம் (CESL)

ஈ. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ISRO

  • தீனதயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM)கீழ், Sustainable Transport for Rural Entrepreneurs through Electric Bicycles – STREE தொடங்க ஒருங்கிணைப்பு எரிசக்தி சேவைகள் நிறுவனம் (CESL) உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கையெழுத்திட்டது.
  • மின்சார மிதிவண்டிகளைக்கொண்டு பசுமையான போக்குவரவை வழங்குவதன்மூலம், வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தி கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை STREE திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. CESL புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்சார போக்குவரவுத் தீர்வுகளில் கவனம் செலுத்துகிறது. DAY-NRLM ஆனது பல்வேறு துறைகளில் உள்ள சுய-உதவிக்குழுக்கள் (SHGs) பெண்கள் தலைமையிலான நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.

8. அண்மையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. கௌதம் கம்பீர்

ஆ. MS தோனி

இ. யுவராஜ் சிங்

ஈ. ராகுல் டிராவிட்

  • இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்குப் பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஜூலை.09 அன்று BCCI செயலர் ஜெய் ஷா அறிவித்தபடி, கௌதம் கம்பீரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் நீடிக்கும். 2026 T20 உலகக்கோப்பை, 2027 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2025 ICC சாம்பியன்ஸ் கோப்பைபோன்ற போட்டிகளில் அவர் அணியை மேற்பார்வையிடுவார். கௌதம் கம்பீர், ஜூலை மாத இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பங்கை தொடங்குவார்.

9. “Order of St. Andrew the Apostle” விருது என்பது எந்த நாட்டின் மிகவுயரிய குடிமக்கள் கௌரவ விருதாகும்?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ரஷ்யா

இ. பிரான்ஸ்

ஈ. ஜெர்மனி

  • இந்தியா-ரஷ்யா உத்திசார் கூட்டாண்மை மற்றும் நட்புறவுகளை வளர்ப்பதற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 2019இல் வழங்கப்பட்ட ரஷ்யாவின் மதிப்புமிக்க புனித ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர் விருதை பிரதமர் நரேந்திர மோதி அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டார். ஜார் பீட்டர் தி கிரேட் அவர்களால் 1698இல் நிறுவப்பட்ட இந்தக் கௌரவம், சிறந்த குடிமகன் அல்லது இராணுவ பொறுப்பை அங்கீகரிக்கிறது.

10. 2024 – ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் வழிநடத்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. ககன் நரங்

ஆ. மேரி கோம்

இ. நீரஜ் சோப்ரா

ஈ. அபினவ் பிந்த்ரா

  • நான்கு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும், 2012இல் வெண்கலப்பதக்கம் வென்றவருமான ககன் நரங், 2024 ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வழிநடத்தியாக மேரி கோமுக்குப்பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மேரி கோம் பதவி விலகினார். PV சிந்து பெண் கொடிதாங்கியாக இருப்பார். 2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஜூலை 26 முதல் ஆகஸ்ட்.11 வரை நடைபெறவுள்ளன.

11. அண்மையில், இந்தியாவும் ரஷ்யாவும் எந்த ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க ஒப்புக்கொண்டன?

அ. 2025

ஆ. 2027

இ. 2028

ஈ. 2030

  • இந்தியாவும் ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் $100 பில்லியன்களாக அதிகரிக்கவும், 22ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டின்போது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க தேசிய நாணயங்களைப் பயன்படுத்தவும் ஒப்புக்கொண்டன. உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழப்பதை நிறுத்தவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார். ரஷ்யா தனது இராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களை விரைவாக வெளியேற்றும் எனத் தெரிவித்தது.

12. அஸ்ஸாமில் உள்ள எந்தத் தேசியப்பூங்காவில் அண்மையில், ‘சலாசர் குழிவிரியன்’ பாம்பு தென்பட்டது?

அ. காசிரங்கா தேசியப்பூங்கா

ஆ. மனாஸ் தேசியப்பூங்கா

இ. ரைமோனா தேசியப்பூங்கா

ஈ. நமேரி தேசியப்பூங்கா

  • ‘ஹாரி பாட்டர்’ தொடரின் சலாசர் ஸ்லிதரின் பெயரால் அழைக்கப்படும் சலாசர் குழி விரியன், அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப்பூங்காவில் தென்பட்டது. குழி விரியன்கள் இரையிலிருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சைக் கண்டறியும் வெப்ப-உணர்திறன் குழியுறுப்புகளைக் கொண்ட நஞ்சுப்பாம்புகளாகும். பல்வேறு வாழ்விடங்களில் காணப்படும் அவை முதன்மையாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில், குறிப்பாக ஆசியா மற்றும் அமெரிக்காவில் காணப்படுகின்றன. 2019இல் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட சலாசர் குழி விரியன்களில் ஆண் பாம்புகளுக்குத் தனித்துவமான ஆரஞ்சு / சிவப்பு கோடுகள் உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உலக மக்கள்தொகை நாள்:: ஜூலை.11

உலக மக்கள்தொகை நாளானது ஆண்டுதோறும் ஜூலை.11 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. “கருத்தரிப்பு காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக ஆரோக்கியமான கால இடைவெளி” என்பது இந்த நாளுக்கானக் நடப்பு 2024ஆம் ஆண்டுக்கானக் கருப்பெருளாகும்.

2. குடும்பத்தலைவிகளுக்கு பொருளாதார அதிகாரமளித்தல் அவசியம்: இந்திய உச்சநீதிமன்றம்.

வீட்டுப்பெண்களான குடும்பத்தலைவிகளுக்கு தனியாக வருமானம் இல்லை என்பதால் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை கணவர் அளிக்க வேண்டியது கட்டாயமென்றும், அதுதான் உண்மையான வளர்ச்சி என்றும் இந்திய உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி வி நாகரத்னா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குற்றவியல் நடைமுறைச் சட்ட (CrPC) பிரிவு 125இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத்தொகை) கோரலாம் என உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்று நீதிபதிகள் பி வி நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் தனித்தனியாக தீர்ப்பு அளித்தனர்.

3. தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டுக்கு `3,000 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்.

தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பு, தரத்தை மேம்படுத்துவதற்கு `3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் உதவியுடன், சுகாதார சீரமைப்பு திட்டம் 2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 5 ஆண்டு கொண்ட இத்திட்டத்தில் `2,854.74 கோடி மதிப்பில் பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் `1,998.32 கோடி உலக வங்கியும், `856.42 கோடி தமிழ்நாடு அரசும் நிதியளிக்கிறது.

1. Which organization recently launched an Integrated Tribal Development Programme (ITBP) in the Kulathupuzha grama panchayat, Kerala?

A. SEBI

B. NABARD

C. FCI

D. Ministry of Tribal Affairs

  • The National Bank for Agriculture and Rural Development (NABARD) launched its first integrated tribal development program in Kulathupuzha Gram Panchayat, Kollam, on July 8. Implemented by Thanal, the five-year project aims to enhance the livelihoods of 413 tribal families through diverse agricultural and non-agricultural activities. It includes water resource development, skill training, and the creation of a Tribal Farmer Producer Company (FPO) to empower the community economically.

2. Recently, Rachel Reeves has become the first woman finance minister of which country?

A. Australia

B. United Kingdom

C. Russia

D. New Zealand

  • Rachel Reeves, 45, is the UK’s first female Chancellor of the Exchequer. An economist with a BA from Oxford and an MSc from LSE, she worked at the Bank of England and in the private sector. Elected Labour MP for Leeds West in 2010, she became finance policy chief in 2021. Rachel Reeves aims to stabilize the UK’s sluggish economy without raising income or corporation taxes.

3. What is the primary function of ‘Regenerative Braking’?

A. To increase vehicle speed

B. To convert kinetic energy into electrical power

C. To enhance fuel combustion

D. To cool down the engine

  • Regenerative braking, found in hybrid and full-electric vehicles, converts kinetic energy from braking into electrical power to charge the vehicle’s high-voltage battery. Also known as a kinetic energy recovery system, it uses electric motors in reverse to act as generators. This system slows the car, aiding traditional brakes, improves fuel consumption, and reduces wear on brake pads by decreasing the overall braking load.

4. What is the primary objective of the Biodiversity Beyond National Jurisdiction (BBNJ) Agreement?

A. To promote tourism in marine areas

B. To address concerns over the long-term protection of marine biodiversity in the high seas

C. To regulate fishing activities in coastal regions

D. To enhance maritime trades

  • The Union Cabinet, chaired by Prime Minister, approved India signing the Biodiversity Beyond National Jurisdiction (BBNJ) Agreement, or ‘High Seas Treaty’. Under UNCLOS, this treaty aims to protect marine biodiversity in the high seas through international cooperation, ensuring sustainable use and equitable sharing of benefits. It promotes an ecosystem-centric approach, traditional and scientific knowledge, and minimizes environmental impacts.

5. Recently, the CA Institute has initiated talks with which ministry to jointly develop an ‘AI Audit Tool’ to track performance of corporate India and detect corporate frauds?

A. Ministry of Home Affairs

B. Ministry of Defence

C. Ministry of Science and Technology

D. Ministry of Electronics and Information Technology

  • CA Institute and the Ministry of Electronics and Information Technology (MeitY) are collaborating to develop an AI Audit Tool to track corporate performance and detect frauds, announced President Ranjeet Kumar Agarwal. This tool will help companies remain ‘going concerns’. ICAI has allocated ₹25 crore for AI tools, with plans to increase the budget to ₹100 crore.

6. Recently, the government of India has designated which ministry as the nodal ministry for the Haj Committee?

A. Ministry of Defence

B. Ministry of External Affairs

C. Ministry of Home Affairs

D. Ministry of Minority Affairs

  • The government has designated the Ministry of Minority Affairs as the nodal ministry for the Haj Committee, replacing the Ministry of External Affairs (MEA). New rules, named the Haj Committee (Amendment) Rules, 2024, have been introduced. Officers from the ministries of External Affairs, Home Affairs, Finance, and Civil Aviation will be nominated as ex-officio committee members. Previously, the MEA managed Haj pilgrimage administration under the Haj Committee Act, 2002.

7. Which two organizations recently signed an MoU to launch the “Sustainable Transport for Rural Entrepreneurs through Electric Bicycles” (STREE) program?

A. Ministry of Rural Development & Convergence Energy Services Limited (CESL)

B. Ministry of Urban Development & DRDO

C. Ministry of Agriculture & Convergence Energy Services Limited (CESL)

D. Ministry of Defence & ISRO

  • The Ministry of Rural Development (MoRD) signed an MoU with Convergence Energy Services Limited (CESL) to launch “Sustainable Transport for Rural Entrepreneurs through Electric Bicycles” (STREE) under the Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission (DAY-NRLM).
  • STREE aims to empower rural women by providing green mobility via electric bicycles, enhancing livelihood opportunities and socio-economic status. CESL focuses on renewable energy and electric mobility solutions. DAY-NRLM promotes SHG women-led enterprises in diverse sectors.

8. Recently, who has been appointed as the head coach of the Indian men’s cricket team?

A. Gautam Gambhir

B. MS Dhoni

C. Yuvraj Singh

D. Rahul Dravid

  • Gautam Gambhir, a former Indian cricketer, has been appointed as the head coach of the Indian men’s cricket team, replacing Rahul Dravid. Announced by BCCI Secretary Jay Shah on July 9, 2024, Gambhir’s term will last three years. He will oversee the team in key tournaments like the 2026 T20 World Cup, 2027 ODI World Cup, and 2025 ICC Champions Trophy. Gambhir starts his role in July with a tour to Sri Lanka.

9. “Order of St. Andrew the Apostle” Award is the highest civilian honour award of which country?

A. Australia

B. Russia

C. France

D. Germany

  • Prime Minister Narendra Modi officially received Russia’s prestigious Order of St Andrew the Apostle, awarded in 2019 for his contributions to India-Russia strategic partnership and fostering friendly ties. Established in 1698 by Tsar Peter the Great, the honor recognizes exceptional civilian or military merit.

10. Who has been chosen as India’s chef-de-mission for the 2024 Olympics?

A. Gagan Narang

B. Mary Kom

C. Neeraj Chopra

D. Abhinav Bindra

  • Four-time Olympian and 2012 bronze medallist Gagan Narang replaced Mary Kom as India’s chef-de-mission for the 2024 Olympics, the Indian Olympic Association (IOA) announced. Mary Kom stepped down due to health issues. P.V. Sindhu will be the female flagbearer. The Paris Olympics will run from July 26 to August 11, 2024.

11. Recently, India and Russia agreed to increase bilateral trade to 100 billion dollars by which year?

A. 2025

B. 2027

C. 2028

D. 2030

  • India and Russia agreed to increase bilateral trade to $100 billion by 2030 and use national currencies to bypass Western sanctions during the 22nd Annual Summit. Prime Minister Modi urged an end to civilian deaths in Ukraine. Russia will expedite the discharge of Indian recruits in its military.

12. Which national park in Assam recently discovered the ‘Salazar Pit Viper’?

A. Kaziranga National Park

B. Manas National Park

C. Raimona National Park

D. Nameri National Park

  • The Salazar Pit Viper, named after Salazar Slytherin from the ‘Harry Potter’ series, was discovered in Assam’s Kaziranga National Park. Pit vipers are venomous snakes with heat-sensitive pit organs that detect infrared radiation from prey.
  • Found in diverse habitats, they are mainly in tropical and subtropical regions, especially Asia and the Americas. The Salazar Pit Viper, first identified in Arunachal Pradesh in 2019, is nocturnal, and males have distinctive orange-to-reddish stripes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!