Tnpsc Current Affairs in Tamil & English – 12th August 2024
1. DAY-NRLMஆல் அண்மையில் தொடங்கப்பட்ட, “மில்லியன் வடிவமைப்பாளர்கள், பில்லியன் கனவுகள்” என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
அ. வேளாண் உற்பத்தியை மேம்படுத்துவது
ஆ. அமைப்புகள் வடிவமைப்பு அறிவுகொண்ட தனிநபர்களை மேம்படுத்துவது
இ. சுகாதார அணுகலை வழங்குவது
ஈ. எண்மக் கல்வியறிவை அதிகரிப்பது
- தீன்தயாள் அந்தியோதயா யோஜனா–தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கமானது (DAY-NRLM) “மில்லியன் வடிவமைப்பாளர்கள், பில்லியன் கனவுகள்” என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிக்கலான சமூகச் சிக்கல்களைச்சமாளிக்க இந்தியா முழுவதுமுள்ள தனிநபர்களுக்கு அமைப்பு வடிவமைப்பு அறிவை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது DAY-NRLM உடன் இணைந்து LEAPஆல் வழிநடத்தப்படுகிறது. LEAP என்பது ஹார்வர்ட் வடிவமைப்பு ஆய்வகத்தின் பலதரப்பட்ட பணிகளின் தயாரிப்பு ஆகும். டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா அறக்கட்டளை மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியால் இது நடத்தப்படுகிறது.
2. அண்மையில், SJVN நிறுவனத்தால் 90 MW உற்பத்தித்திறன்கொண்ட, “ஓம்கரேஷ்வர் மிதவை சூரியவொளி மின்னுற்பத்தித் திட்டம்” வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட மாநிலம் எது?
அ. மத்திய பிரதேசம்
ஆ. ஹரியானா
இ. பஞ்சாப்
ஈ. உத்தரகாண்ட்
- SJVN லிமிடெட் (மின்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள மினி ரத்னா அட்டவணை ‘A’ CPSU) மத்திய பிரதேசத்தின் கந்த்வாவில் 90 மெகாவாட் (MW) ஓம்கரேஷ்வர் மிதவை சோலார் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத்திட்டம் ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்போன்ற நீர்நிலைகளில் மிதக்கும் சோலார் பேனல்களை நிறுவுவதை உள்ளடக்கியது. உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியா மிதவை சூரிய மின்னாற்றல் உற்பத்தித் திறன் 280-300 ஜிகாவாட் ஆகும்.
3. PARI (Public Art of India) திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. கலாச்சார அமைச்சகம்
ஈ. விவசாய அமைச்சகம்
- உலக பாரம்பரிய குழு கூட்டத்தின் 46ஆவது அமர்வின்போது PARI திட்டம் தொடங்கப்பட்டது. லலித் கலா அகாடமி மற்றும் நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தை கலாசார அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது ஃபட், தங்கா, வார்லி, கோண்ட், அல்போனா, செரியல், தஞ்சை, கலம்காரி, பித்தோரா மற்றும் கேரள சுவரோவியங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை நவீன கருப்பொருள்களுடன் இணைத்து கலையைக் கொண்டாடுவதையும் மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. ‘நடவடிக்கை துதி’ என்றால் என்ன?
அ. அஸ்ஸாம் ரைபிள்ஸ் நடத்திய கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை
ஆ. வான்வழி தீயணைப்பு முறைமூலம் காட்டுத்தீயைத் தடுத்தல்
இ. மியான்மருக்கான இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்
ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- ஜம்மு பிராந்தியமானது தீவிரவாத நடவடிக்கை மற்றும் கல்வான் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டில் படைகள் மீண்டும் பணியமர்த்தப்பட்டதன் காரணமாக அதிகரித்த பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டது. பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்த சிறப்புப்படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட கூடுதல் படைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அண்மைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கடந்த 1991ஆம் ஆண்டில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் நடத்திய ஆபரேஷன் துதி, இப்பகுதியில் மேற்கொள்ளபட்ட வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும்.
5. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்துடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. குத்துச்சண்டை
ஆ. மல்யுத்தம்
இ. டேபிள் டென்னிஸ்
ஈ. பூப்பந்து
- 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில், ஆடவருக்கான 57 கிகி மல்யுத்தப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார். ஹரியானா மாநிலத்தில் 2003 ஜூலை.16இல் பிறந்த அமன் ஷெராவத் தனது ஃப்ரீஸ்டைல் நுட்பத்திற்காக அறியப்பட்டவர். வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் அவர் போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை 13-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2021-உலக மல்யுத்த U23 சாம்பியன்ஷிப்பில் வெள்ளி மற்றும் 2022 ஆசிய U23 சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதன்மூலம் அமன் ஷெராவத் முதலில் கவனத்தைப் பெற்றார்.
6. அண்மையில், இந்தியப்பெருங்கடலில் உள்ள நீரடியிலுள்ள கட்டமைப்புகளுக்கு கீழ்க்காணும் எந்த 3 பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன?
அ. அசோகர், சந்திரகுப்தர் மற்றும் கல்பதரு
ஆ. மகாத்மா, நேரு மற்றும் பாரதி
இ. இமயமலை, கங்கை, கிருஷ்ணா
ஈ. சிவன், விஷ்ணு, பிரம்மா
- இந்தியப்பெருங்கடலில் உள்ள மூன்று நீரடியிலுள்ள கட்டமைப்புகளுக்கு சமீபத்தில் அசோகா, சந்திரகுப்தர் மற்றும் கல்பதரு என்று பெயரிடப்பட்டது. இந்தப் பெயர்கள் இந்தியாவால் முன்மொழியப்பட்டு சர்வதேச நீரியல் அமைப்பு (IHO) மற்றும் UNESCOஇன் அரசுகளுக்கிடையேயான கடல்சார் ஆணையம் (IOC) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
- 2012இல் கண்டறியப்பட்ட நீள்வட்ட ‘அசோகர்’ கடல்நில உயர்ச்சி 180 ச.கிமீ பரப்பைக்கொண்டது. கடந்த 2012இல் கண்டுபிடிக்கப்பட்ட ‘கல்பதரு’ மலை முகடு, 430 சதுர கிமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கு துணைபுரிகிறது. 2020இல் அடையாளம் காணப்பட்ட ‘சந்திரகுப்தர்’ மலை முகடு, 675 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட ஒரு நீளமான அமைப்பாகும்.
7. அண்மையில், இருதரப்பு வான்படை பயிற்சியான, ‘உதர சக்தி – 2024’இல் பங்கேற்ற நாடுகள் எவை?
அ. சீனா மற்றும் ஜப்பான்
ஆ. இந்தியா மற்றும் மியான்மர்
இ. இந்தியா மற்றும் மலேசியா
ஈ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
- இந்திய வான்படையானது இராயல் மலேசிய வான்படையுடன் இணைந்து இருதரப்பு உதர சக்தி-2024 பயிற்சியில் பங்கேற்றது. 2024 ஆக.06-09 வரை மலேசியாவின் குவாந்தனில் இந்தப்பயிற்சி நடைபெற்றது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ஏழு சுகோய்-30 போர் விமானங்களை இரு விமானப்படைகளும் பயன்படுத்தின.
- இந்தியாவின் சுகோய்-30 விமானங்கள், பெரும்பாலும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்டால் தயாரிக்கப்பட்டது ஆகும். உதர சக்தி-2024 பயிற்சியில் பயிற்சிப் பயிற்சிகள் மற்றும் பொருள் நிபுணர் பரிமாற்றக் கருத்துகள் ஆகியவை அடங்கும். இப்பயிற்சி இருநாடுகளின் Su-30 விமானங்களை உள்ளடக்கிய விமானப்போரில் கவனம் செலுத்தியது.
8. அண்மையில், திமோர் லெஸ்டியின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, ‘Grand-Collar of the Order’ என்ற விருதைப் பெற்ற இந்தியர் யார்?
அ. திரௌபதி முர்மு
ஆ. நரேந்திர மோதி
இ. நீரஜ் சோப்ரா
ஈ. S ஜெய்சங்கர்
- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, திமோர் லெஸ்ட்டின் உயரிய குடிமக்கள் விருதான, ‘Grand Collar of Order of Timor Leste’ஐ 2024 ஆகஸ்ட்.10 அன்று திலியில் பெற்றார். 2024 ஆகஸ்ட்.05-10 வரை ஃபிஜி, நியூசிலாந்து மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர், திமோர் லெஸ்டேவுக்குச் சென்றார்; இவ்வாறு திமோர் லெஸ்டேவுக்குச்செல்லும் முதல் இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆவார். இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, திமோர் லெஸ்டேவின் அதிபர் ஜோஸ் ரமோஸ் ஹோர்டாவுடன் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் திறன் மேம்பாட்டு உதவிபற்றி விவாதித்தார். இந்தியாவிற்கும் திமோர் லெஸ்டேவிற்கும் இடையில் ஊடக ஒத்துழைப்பு, அதிகாரிகளுக்கான விசா விலக்குகள் மற்றும் கலாசார பரிமாற்ற திட்டங்கள் உட்பட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
9. ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) 2.0 திட்டத்தைச்’ செயல்படுத்த பொறுப்புள்ள அமைச்சகம் எது?
அ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
ஆ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
இ. விவசாய அமைச்சகம்
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
- 2024 ஆகஸ்ட்.09 அன்று, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை, `10 இலட்சம் கோடி முதலீட்டில் பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (PMAY-U) 2.0-க்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய திட்டம், 2024 டிசம்பர் வரை நடப்பில் இருக்கும் அசல் PMAY-Uக்கு மாற்றாக இருக்கும். ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கும் PMAY-U 2.0 ஆனது நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு ஒரு கோடி வீடுகளைக் கட்டித்தருவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இத்திட்டத்தைச் செயல்படுத்தும். இது 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து நகரங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் வீடில்லாத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய்கொண்ட பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் குடும்பங்களை இந்தத் திட்டம் குறிவைத்துள்ளது. அவர்களின் ஆண்டு வருமான வரம்பு முறையே `3 இலட்சம், `6 இலட்சம் மற்றும் `9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
10. WMOஆல் அண்மையில் தொடங்கப்பட்ட, “Polar Coupled Analysis and Prediction for Services” என்ற திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. விண்வெளி ஆய்வை மேம்படுத்துவது
ஆ. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கின் வானிலை மற்றும் தட்பவெப்பநிலை தகவல்களை அதிகரிப்பது
இ. புதிய ஆற்றல்மூலங்களை உருவாக்குவது
ஈ. உலகளாவிய இணைய இணைப்பை மேம்படுத்துவது
- உலக வானிலை அமைப்பு (WMO) ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த “Polar Coupled Analysis and Prediction for Services” (PCAPS)ஐ அறிமுகப்படுத்தியது. இந்தப் பிராந்தியங்களில் வானிலை, நீர், பனி மற்றும் தட்பவெப்பநிலைபற்றிய தகவல்களை மேம்படுத்துவதை PCAPS நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் சிறந்த கண்காணிப்பு அமைப்புகள், புவி அமைப்பு மாதிரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட முன்கணிப்பு சேவைகளை உருவாக்குகிறது. PCAPS என்பது WMOஇன் உலக வானிலை ஆராய்ச்சி திட்டத்தின் ஒருபகுதியாகும்.
11. எந்த மாநிலத்தில் ஜுவாங்கா பழங்குடியினர் முதன்மையாக வசிக்கின்றனர்?
அ. ஒடிஸா
ஆ. உத்தரபிரதேசம்
இ. குஜராத்
ஈ. இராஜஸ்தான்
- வன உரிமைச்சட்டத்தின்கீழ் ஜுவாங்கா பழங்குடியினருக்கான வாழ்விட உரிமைகளை ஒடிஸா மாநிலத்திலுள்ள கியோஞ்சர் மாவட்ட அளவிலான குழு அங்கீகரித்துள்ளது. ஜுவாங் என்றும் அழைக்கப்படும் ஜுவாங்கா, ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி சமூகமும் மாநிலத்தில் உள்ள 13 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் ஒன்றுமாகும்.
- இலைதழை உடையுடுத்தும் முறைக்கு பெயர்பெற்ற அவர்கள், இப்போது வழக்கமான ஆடைகளை அணிகின்றனர். ஆஸ்திரேசிய மொழிக்குடும்பத்தின் ஒருபாகமான ஜுவாங் (முண்டாரி) மொழியை பேசுகிற அவர்களின் பாரம்பரிய தொழில்களில் இடப்பெயர்ச்சிமுறை சாகுபடியும் அடங்கும்.
12. தூய்மையான தாவரங்கள் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. பால் பண்ணைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது
ஆ. நகர்ப்புறத்தில் பசுஞ்சோலைகளை விரிவுபடுத்துவது
இ. கால்நடைகளின் நலத்தை மேம்படுத்துவது
ஈ. விவசாயிகளுக்கு வைரஸ் இல்லாத, உயர்தர நடவுப்பொருட்கள் கிடைப்புக்கான அணுகலை வழங்குவது
- நாடு முழுவதும் பழப்பயிர்களின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக தூய்மையான தாவரங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. தூய்மையான தாவரங்கள் திட்டம், பயிர் விளைச்சலையும் தரத்தையும் அதிகரிக்க, விவசாயிகளின் வருமானத்திற்கு பயனளிக்கும் வகையில் வைரஸ் இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்குப் பதிலாக உற்பத்தித்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
- வேளாண்மை மற்றும் விவசாயிகள்நல அமைச்சகத்தின்கீழ், ICARஉடன் தேசிய தோட்டக்கலை வாரியத்தால் (NHB) செயல்படுத்தப்படும் இது, தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் ஒருபகுதியாகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இந்திய அரசின் பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள்.
இந்திய அரசின், ‘போஷான் 2.0 இயக்கம்’ சிறார்கள், சிறுமிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு சவாலுக்கு தீர்வுகாணும் நோக்கம் கொண்டதாகும். ‘வாத்சல்யா இயக்கம்’, பல்வேறு சூழல்களால் பாதிக்க -ப்பட்ட சிறார்களின் நலன் மற்றும் மறுவாழ்வுக்கான திட்டமாகும். ‘சக்தி இயக்கம்’ என்பது பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் திட்டமாகும்.
2. தேசப்பிரிவினை பெருந்துயர் நாள்: விழிப்புணர்வு கண்காட்சி நடத்த UGC அறிவுறுத்தல்.
தேசப்பிரிவினை பெருந்துயார் நினைவு நாளையொட்டி (ஆக.14), அதுதொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியை உயர்கல்வி நிறுவனங்களில் காட்சிப்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி கலை, பண்பாட்டு திரைப்படங்களை காணலாம்.
சென்னையில் கோட்டூர்புரத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘நிஜமாகும் கனவு’ என்ற திட்டத்தின்கீழ் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படங்கள் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் திரையிடப்படவுள்ளன. இந்த நூலகத்தில் வாசகர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த ஆளுமைகள் உரையாற்றும், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற நிகழ்வும் நடத்தப்பட்டு வருகின்றது.
1. What is the primary objective of the “Million Designers, Billion Dreams” initiative, recently launched by DAY-NRLM?
A. To improve agricultural productivity
B. To empower individuals with systems design knowledge
C. To provide healthcare access
D. To enhance digital literacy
- The Deendayal Antyodaya Yojana–National Rural Livelihoods Mission (DAY-NRLM) has launched the “Million Designers, Billion Dreams” program. The initiative aims to provide systems design knowledge to individuals across India to tackle complex societal issues. It is led by LEAP in collaboration with DAY-NRLM. LEAP is a product of multidisciplinary work by Harvard’s Design Laboratory, Transform Rural India Foundation, and funded by the Bill and Melinda Gates Foundation.
2. Recently, SJVN Limited has successfully commissioned the 90 MW ‘Omkareshwar Floating Solar Project’ in which state?
A. Madhya Pradesh
B. Haryana
C. Punjab
D. Uttarakhand
- SJVN Limited (Mini Ratna Schedule ‘A’ CPSU under Ministry of Power) has successfully commissioned the 90 MW Omkareshwar Floating Solar Project in Khandwa, Madhya Pradesh. This project involves placing solar panels on floating structures in water bodies like lakes and reservoirs. India has a potential capacity of 280-300 GW for floating solar power, according to the World Bank.
3. Project PARI (Public Art of India) is launched by which ministry?
A. Ministry of Home Affairs
B. Ministry of Rural Development
C. Ministry of Culture
D. Ministry of Agriculture
- Project PARI was launched during the 46th Session of the World Heritage Committee Meeting. The Ministry of Culture initiated the project, managed by Lalit Kala Akademi and the National Gallery of Modern Art. It features various art forms including Phad, Thangka, Warli, Gond, Alpona, Cheriyal, Tanjore, Kalamkari, Pithora, and Kerala Murals. The project aims to celebrate and enhance the public art scene by combining India’s cultural heritage with modern themes.
4. What is ‘Operation Dudhi’?
A. Counter-insurgency operation conducted by Assam Rifles
B. Preventing forest fires by aerial firefighting
C. India’s humanitarian assistance and disaster relief to Myanmar
D. None of the above
- The Jammu region has faced increased security challenges due to militant activity and troop redeployment to the LAC post-Galwan incident. Recent reports indicate the induction of additional troops, including Special Forces and Assam Rifles, to strengthen counter-terrorism efforts. Operation Dudhi, conducted by Assam Rifles in 1991, is a notable example of successful counter-terrorism in the region.
5. Aman Sehrawat, who recently won bronze medal at Paris Olympics 2024, is associated with which sports?
A. Boxing
B. Wrestling
C. Table Tennis
D. Badminton
- At the 2024 Paris Olympics, Aman Sehrawat from India won a bronze medal in the men’s 57kg wrestling category, marking a proud moment in India’s wrestling history. Born in Haryana on July 16, 2003, Sehrawat is known for his freestyle technique. He defeated Puerto Rico’s Darian Toi Cruz 13-5 in the bronze medal match. Aman first gained attention by winning a silver at the 2021 World Wrestling U23 Championships and gold at the 2022 Asian U23 Championships.
6. Recently, which three names were given to the underwater structures in the Indian Ocean?
A. Ashoka, Chandragupta, and Kalpataru
B. Mahatma, Nehru, and Bharati
C. Himalaya, Ganga, and Krishna
D. Shiva, Vishnu, and Brahma
- Three underwater structures in the Indian Ocean were recently named Ashoka, Chandragupt, and Kalpataru, highlighting India’s influence in marine science. The names were proposed by India and approved by the International Hydrographic Organisation (IHO) and UNESCO’s Intergovernmental Oceanographic Commission (IOC).
- Ashoka Seamount, discovered in 2012, is oval-shaped and spans 180 sq km. Kalpataru Ridge, also discovered in 2012, covers 430 sq km and may support marine biodiversity. Chandragupt Ridge, identified in 2020, is an elongated structure covering 675 sq km.
7. Recently, which countries participated in bilateral Air force exercise ‘Udara Shakti 2024’?
A. China and Japan
B. India and Myanmar
C. India and Malaysia
D. India and Australia
- The Indian Air Force (IAF) participated in the bilateral Exercise Udara Shakti 2024 with the Royal Malaysian Air Force. The exercise took place in Kuantan, Malaysia, from 6-9 August 2024. Both air forces deployed seven Sukhoi-30 fighter planes, which are purchased from Russia.
- India’s Sukhoi-30 planes, mostly produced by Hindustan Aeronautics Limited (HAL), are the Su-30MKI variant, specifically modernized for India. Exercise Udara Shakti 2024 included Training Exercises and Subject Matter Expert Exchange concepts. Training Exercises focused on air combat involving Su-30 planes from both countries.
8. Which Indian recently received the highest civilian ‘Grand-Collar of the Order’ award of Timor Leste?
A. Droupadi Murmu
B. Narendra Modi
C. Neeraj Chopra
D. S Jaishankar
- President Droupadi Murmu received Timor Leste’s highest civilian award, the Grand Collar of Order of Timor Leste, on 10 August 2024 in Dili. She is the first Indian President to visit Timor Leste, as part of her three-nation tour to Fiji, New Zealand, and Timor Leste from 5-10 August 2024. President Murmu discussed IT infrastructure, medical, and capacity-building assistance with Timor Leste’s President José Ramos Horta. Three MoUs were signed between India and Timor Leste, including media cooperation, visa exemptions for officials, and cultural exchange programs.
9. Which ministry is the nodal body for implementing the ‘Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-U) 2.0 scheme’?
A. Ministry of Urban Development
B. Ministry of Housing and Urban Affairs
C. Ministry of Agriculture
D. Ministry of Rural Development
- On August 9, 2024, the Union Cabinet, led by Prime Minister Narendra Modi, approved Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-U) 2.0 with an investment of Rs 10 lakh crores. This new scheme will replace the original PMAY-U, which runs until December 2024. PMAY-U 2.0 will last for five years and aims to build one crore houses for the urban poor and middle-class families.
- The Union Ministry of Housing and Urban Affairs will implement the scheme. It covers towns from the 2011 census and targets economically weaker sections, low-income groups, and middle-income groups families without pucca houses, with income limits of Rs 3 lakh, Rs 6 lakh, and Rs 9 lakh per year, respectively.
10. What is the objective of “Polar Coupled Analysis and Prediction for Services” (PCAPS) project, recently launched by WMO?
A. To improve space exploration
B. To increase weather and climate information in the Arctic and Antarctic
C. To develop new energy sources
D. To enhance global internet connectivity
- The World Meteorological Organization (WMO) launched the “Polar Coupled Analysis and Prediction for Services” (PCAPS) to enhance weather forecasting in the Arctic and Antarctic. PCAPS aims to improve information on weather, water, ice, and climate in these regions. The project will develop better observation systems, Earth system models, and advocate for improved forecasting services. PCAPS is part of WMO’s World Weather Research Programme (WWRP).
11. The Juanga Tribe primarily resides in which state?
A. Odisha
B. Uttar Pradesh
C. Gujarat
D. Rajasthan
- The District Level Committee of Keonjhar in Odisha approved habitat rights for the Juanga tribe under the Forest Rights Act (FRA). The Juanga, also known as Juang, are an indigenous community in Odisha’s Keonjhar district and one of 13 particularly vulnerable tribal groups (PVTGs) in the state. They were originally known for their leaf skirt attire but now wear market-bought clothing. They speak Juang (Mundari), part of the Austroasiatic language family. Their traditional occupations included shifting cultivation.
12. What is the primary objective of the ‘Clean Plant Programme (CPP)?
A. To increase the number of dairy farms
B. To expand urban green spaces
C. To improve livestock health
D. To provide access to virus-free, high-quality planting materials to farmers
- The Union Cabinet has approved the Clean Plant Programme (CPP) to improve fruit crop quality and productivity nationwide. The Clean Plant Programme aims to provide virus-free, high-quality planting materials to boost crop yields and quality, benefiting farmers’ income. It focuses on improving productivity and quality rather than cutting production costs.
- Implemented by the National Horticulture Board (NHB) with ICAR, under the Ministry of Agriculture and Farmers Welfare, it is part of the Mission for Integrated Development of Horticulture (MIDH).