Tnpsc Current Affairs in Tamil & English – 12th & 13th October 2024
1. நி-க்ஷய் போஷன் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. இரத்தசோகை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது
ஆ. பின்தங்கிய குழுவிற்கு சுகாதார சேவைகளை உறுதி செய்வது
இ. காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவுக்கான ஊக்கத்தொகைகளை வழங்குவது
ஈ. இருதய நோய்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது
- மத்திய சுகாதார அமைச்சகமானது நி-க்ஷய் போஷன் திட்டத்தின்கீழ் காசநோயாளிகளுக்கான மாதாந்திர ஊட்டச் சத்து ஆதரவை `500இலிருந்து `1,000ஆக உயர்த்தியுள்ளது. நி-க்ஷய் போஷன் திட்டமானது தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், 2018 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. இது தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், நேரடி பலன் பரிமாற்றத் திட்டமாகும். இத்திட்டம் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிவிக்கப்பட்ட அனைத்து காசநோயாளிகளும் இத்திட்டத்தின் தகுதியான பயனாளிகளாவர்.
2. அண்மையில் புது தில்லியில் ஹம்சஃபர் கொள்கையை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
அ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
ஆ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
இ. பாதுகாப்பு அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2024 அக்.07 அன்று புது தில்லியில் ஹம்சஃபர் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையை நிதின் கட்கரி முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். ஹம்சஃபர் கொள்கையானது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் பயண வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் காயமாற்று மையங்கள்போன்ற உலகத்தரம்வாய்ந்த வசதிகளை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது. பயணிகள் நன்கு பராமரிக்கப்பட்ட, சுகாதாரமான சேவைகளை அணுகலாம். NHAIஇன் ‘ராஜ்மார்க் யாத்ரா’ என்ற செயலியில் சேவை வழங்குநர் விவரங்களை எளிதாகக்காணலாம்.
3. அண்மையில், “உலகளாவிய நீர்வள அறிக்கையை” வெளியிட்ட அமைப்பு எது?
அ. UNDP
ஆ. பன்னாட்டு செலாவணி நிதியம்
இ. உலக வானிலை அமைப்பு
ஈ. உலக வங்கி
- நடப்பு 2023ஆம் ஆண்டின் உலகளாவிய நீர்வளங்களின் நிலை அறிக்கை, கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக உலகளாவிய ஆறுகளுக்கு இது மிகவும் வறண்ட ஆண்டு என வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டறிக்கையானது 2021ஆம் ஆண்டு முதல் உலக வானிலை அமைப்பினால் வெளியிடப்பட்டு வருகிறது. இது பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீர்வளங்கள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
- கடந்த ஐந்தாண்டுகளில் இயல்பற்ற ஆற்றின் நீரோட்டங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து பரவலாகக் காணப்படுகிறது. அனைத்து பனிப்பாறை பகுதிகளும் 2023இல் பனியிழப்பைச் சந்தித்தன. உலகளவில் 600 ஜிகா டன்களுக்கு மேல் தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது; மேலும் 3.6 பில்லியன் மக்களுக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டில் 5 பில்லியனுக்கும் அதிகமாக உயரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது, இது நிலையான வளர்ச்சி இலக்கு-6ஐ அடைவதில் தோல்வியைக் குறிக்கிறது.
4. திருக்குறுங்குடி கோவில்கள் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. கேரளா
ஈ. கர்நாடகா
- நம்பிராயர் கோவில், திருமலை நம்பி கோவில், அணிலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட திருக்குறுங்குடி கோவில்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) சமீபத்தில் இந்தத் திருக்கோவில்களில் இருந்து பாண்டியர் காலத்திய ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இக்கோவில் கல்வெட்டுகள் வரலாற்று நன்கொடைகளை வெளிப்படுத்துகின்றன; கோவில் விளக்குகளுக்கு செம்மறி ஆடுகள் மற்றும் தோட்டங்களுக்கு வரியில்லா நிலம். விஜயநகர ஆட்சியின்போது இந்தப் பகுதியின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் மத நடைமுறைகளை இது எடுத்துக்காட்டுகிறது.
5. உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்காட்சியகங்கள் சங்கமானது (WAZA) சமீபத்தில் இந்தியாவில் உள்ள எந்த விலங்கியல் பூங்காவின் உறுப்புத்துவத்தை நிறுத்தி வைத்தது?
அ. தில்லி உயிரியல் பூங்கா
ஆ. கொல்கத்தா உயிரியல் பூங்கா
இ. மும்பை உயிரியல் பூங்கா
ஈ. லக்னோ உயிரியல் பூங்கா
- உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்காட்சியகங்களின் சங்கம் (WAZA) தேசிய விலங்கியல் பூங்கா அல்லது தில்லி உயிரியல் பூங்காவின் உறுப்புத்துவத்தை நிறுத்தி வைத்தது. அவ்வுயிரியல் பூங்காவில் உள்ள ஒற்றை ஆப்பிரிக்க யானையின் மோசமான நிலைகுறித்த கவலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. WAZA என்பது உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்காட்சியகங்களுக்கான உலகளாவிய அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் விலங்கு பராமரிப்பு, சூழல் கல்வி மற்றும் உலகளாவிய பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது.
6. ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இணையதளத்தின் பெயர் என்ன?
அ. சுரக்ஷா
ஆ. அனுபவ்
இ. நிஷ்சித்
ஈ. சங்கல்ப்
- பிரதமர் நரேந்திர மோதியின் வழிகாட்டுதலின் பேரில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையானது ‘அனுபவ்’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இத்தளம் ஓய்வுபெறும் மற்றும் ஓய்வுற்ற அரசு ஊழியர்கள் தங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது. சமர்ப்பிப்புகளை ஊக்குவிப்பதற்காக 2015இல் ஒரு வருடாந்திர விருதுகள் திட்டம் உருவாக்கப்பட்டது; இதன் விளைவாக 10,886 எழுதுதல்கள் வெளியிடப்பட்டன. இதுவரை, 78 சிறந்த பதிவுகள் 59 அனுபவ விருதுகளையும் 19 ஜூரி சான்றிதழ்களையும் பெற்றுள்ளன.
- தேசிய அனுபவ விருதுகள் திட்டம்-2025 ஆனது நடுவண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களை விருதுகளுக்காக தங்கள் எழுத்துப்பதிவுகளை சமர்ப்பிக்க வரவேற்கிறது. முதல் முறையாக, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களும் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்கள். ஓய்வூதியம் பெறுவோருக்கான சமர்ப்பிப்பு காலம் ஓய்வுக்குப்பின் ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
7. அண்மையில், எந்த விலங்கியல் பூங்காவின் சிவப்புப்பாண்டா திட்டம், 2024 – WAZA பாதுகாப்பு விருதுக்கான இறுதிப் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது?
அ. பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா
ஆ. நேரு விலங்கியல் பூங்கா
இ. நந்தன்கானன் விலங்கியல் பூங்கா
ஈ. சாமராஜேந்திரா விலங்கியல் பூங்கா
- டார்ஜிலிங்கில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவின் சிவப்புப்பாண்டா திட்டம், 2024 – WAZA பாதுகாப்பு விருதுக்கான இறுதிப்போட்டியாளராகத் தெரிவாகியுள்ளது. 2022 மற்றும் 2024க்கு இடையில் 9 சிறைபிடிக்கப்பட்ட சிவப்புப்பாண்டாக்கள் மேற்கு வங்காளத்தின் சிங்காலிலா தேசியப்பூங்காவில் விடுவிக்கப்பட்டன.
- உயிரியல் பூங்கா நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடன் வாழ்விட மறுசீரமைப்புக்காக இந்த விலங்கியல் பூங்கா ஒத்துழைக்கிறது. சிவப்புப்பாண்டாக்கள் மற்றும் பிற அழிந்து வரும் உயிரினங்களின் கருமுட்டை/விந்தணு, திசுக்கள் மற்றும் DNAஐப் பாதுகாக்க இது ஓர் உயிரி-வங்கி மற்றும் மரபணு வள வசதியைக் கொண்டுள்ளது. நவ.7 அன்று ஆஸ்திரேலியாவின் டரோங்கா உயிரியல் பூங்காவில் நடைபெறும் 79ஆவது WAZA வருடாந்திர மாநாட்டில் விருது வென்ற பூங்கா அறிவிக்கப்படும்.
8. இந்திய காட்டுக்கழுதை (Equus hemionus khur) முதன்மையாகக் காணப்படுகிற மாநிலம் எது?
அ. மகாராஷ்டிரா
ஆ. குஜராத்
இ. மத்திய பிரதேசம்
ஈ. ஒடிஸா
- குஜராத்தில் இந்திய காட்டுக்கழுதைகளின் (Equus hemionus khur) எண்ணிக்கை 2020இல் இருந்த 6,082இல் இருந்து 2024இல் 7,672ஆக அதிகரித்துள்ளது; இது 26.14% அதிகரிப்பாகும். குர் என்பது ஆசிய காட்டுக்கழுதையின் (Equus hemionus) ஒரு கிளையினமாகும், இது ஒருவகை காட்டுக்கழுதை என்றும் அழைக்கப்படுகிறது. இது முதன்மையாக குஜராத்தின் லிட்டில் ரான் ஆஃப் கட்சில் காணப்படுகிறது. லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என்பது ஒரு ஈர நிலமும் பாலைவனமுமாகும்; மேலும் குர் என்பது பொதுவாக ஒரு தாவர உண்ணியாகும். IUCNஆல் அழிந்து வரும் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ள இவ்விலங்கு, வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம், 1972இன் அட்டவணை-Iஇன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
9. உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் அவை – 2024 நடைபெறும் நகரம் எது?
அ. புது தில்லி
ஆ. சென்னை
இ. கோயம்புத்தூர்
ஈ. காக்கிநாடா
- உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் அவையானது 2024 அக்.14-24 வரை புது தில்லியில் நடைபெறுகிறது. கடந்த 2002 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும் இது, ITU தரநிலைப்படுத்தல் துறையின் ஆளும் மாநாடாகும். தொலைத்தொடர்பு தரப்படுத்தலுக்கான ஆய்வுக்குழுக்களின் பணித்திட்டம் மற்றும் கட்டமைப்பை இது வரையறுக்கிறது. நடப்பு 2024ஆம் ஆண்டு மாநாட்டை நடத்துவது உலகளாவிய தொலைத்தொடர்பு தரநிலைகளை அமைப்பதில் இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த நிகழ்வு 2024 அக்.14 அன்று ICT தரநிலை கொள்கை விவாதங்களில் கவனம் செலுத்தி, உலகளாவிய தரநிலை கருத்தரங்கத்துடன் தொடங்கும்.
10. அண்மையில், வனப்பாதுகாப்பை மேம்படுத்த, ‘GREEN PLUS’ திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
அ. அஸ்ஸாம்
ஆ. மேகாலயா
இ. சிக்கிம்
ஈ. நாகாலாந்து
- மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் K சங்மா வனப்பகுதியை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பசுமை மேகாலயா+ திட்டத்தைத் தொடங்கினார். வனப்பகுதிகளைக் காப்பதற்கு ரொக்கப்பரிசை வழங்குவதன்மூலம் வனப்பாதுகாப்பை விரிவுபடுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு இயற்கை வனங்களைக் காப்பதில் உறுதிபூண்டுள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்கான (PES) கொள்கையை இது பின்பற்றுகிறது. இந்த முன்முயற்சியானது 2022இல் தொடங்கப்பட்ட மாநிலத்தின் PES திட்டத்தின் ஒருபகுதியாகும். 50,000 ஹெக்டேர்களை பாதுகாப்பதை இது இலக்கு வைத்துள்ளது.
11. 21ஆவது ASEAN-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 19ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டை நடத்துகிற நாடு எது?
அ. மியான்மர்
ஆ. லாவோ PDR
இ. மலேசியா
ஈ. இந்தோனேசியா
- 21ஆவது ASEAN-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 19ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவை தற்போதைய ASEAN தலைவரான லாவோ PDRஆல் நடத்தப்படுகிறது. இந்தியா தனது செயல்படு கிழக்கு கொள்கையின் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது, ஆசியான் உறவுகளை முக்கிய மையமாக கொண்டுள்ளது. ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு அவர்களின் விரிவான மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை மதிப்பிடும் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பை விவாதிக்கும். கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மூலோபாய நம்பிக்கையை வளர்க்கிறது மற்றும் முக்கிய பிராந்திய பிரச்சினைகளை விவாதிக்க தலைவர்களை அனுமதிக்கிறது. இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
12. ‘Unified Genomic Chip’ஐ உருவாக்கிய அமைப்பு எது?
அ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)
ஆ. கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD)
இ. இந்திய உணவுக் கழகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- இந்தியப் பிரதமர் அண்மையில், ‘ஒருங்கிணைந்த மரபியல் சில்லு’ என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கினார். இந்தியாவில் உயர்தர கால்நடைகளை முன்கூட்டியே கண்டறிந்து பால்பண்ணையின் செயல்திறனை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த மரபியல் சில்லில் இரண்டு பதிப்புகள் உள்ளன: கால்நடைகளுக்கான, ‘கௌ சில்லு’ மற்றும் எருமைக்கான, ‘மஹிஷ் சில்லு’.
- கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறையால் உருவாக்கப்பட்ட இச்சில்லு, இளம், உயர்தர காளைகளை முன்கூட்டியே கண்டறிந்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க விவசாயிகளுக்கு உதவுகிறது. இது குறிப்பாக இந்திய கால்நடை இனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. பிரதமர் இன்று லாவோஸ் பயணம் – ASEAN மாநாட்டில் பங்கேற்பு
ASEAN-இந்தியா உச்சிமாநாடு மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோதி அக்.10 அன்று லாவோஸ் நாட்டுக்குச் சென்றார். ASEAN-இந்தியா இடையிலான 21ஆவது உச்சிமாநாடு மற்றும் 19ஆவது கிழக்காசிய உச்சிமாநாடு ஆகியவை லாவோஸின் வியன்டியன் நகரில் அக்.10 & 11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
2. விடுதலைப்போராட்ட வீரர்கள் 3 பேருக்கு சிலைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் முக்கியத் தளபதியாகத் திகழ்ந்து அவரது மடியில் உயிர்நீத்த மாவீரன் வெண்ணிக்காலாடியின் தியாக வீரத்தைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவல் கிராமம் பச்சேரியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சிவகங்கையை மீட்டிட படைதிரட்டி ‘வீரமங்கை’ வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி, எரியெண்ணெயைத் தடவிக்கொண்டு வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து அழித்துத் தியாகச்சுடராகி ஒளிர்ந்தார். அவரது நினைவுப்போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் இராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலு நாச்சியார் மணிமண்டப வளாகத்தில் குயிலித்தாய்க்கு சிலை நிறுவப்பட்டது.
இதேபோன்று, வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டோருக்கு பாடம் புகட்டுவேன் என வீர முழக்கமிட்டார், தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர். அதன்படியே செய்தும் காட்டினார். அவரது வீரத்தைப் போற்றும் வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் எத்தலப்பர் நாயக்கருக்கு சிலையும், நினைவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
3. ரத்தன் டாடா காலமானார்!
தொழிலதிபர் ரத்தன் டாடா (86) மும்பையில் காலமானார். 1991-2012 வரையில் டாடா குழுமத்தின் தலைவராக அவர் பதவி வகித்து வந்தார். அவருக்கு 2000ஆம் ஆண்டு ‘பத்ம பூஷண்’ விருதும், 2008ஆம் ஆண்டில் ‘பத்ம விபூஷண்’ விருதும் வழங்கி நடுவண் அரசு கௌரவித்தது.
4. இலவச அரிசி திட்டம்: 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஏழைகளுக்கு மக்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ், வரும் 2028ஆம் ஆண்டு வரை இலவச செறிவூட்டப்பட்ட அரசி விநியோகத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் வழிகாட்டு நடைமுறையின் அடிப்படையில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், Vit B12 ஆகிய நுண்ணூட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட அரிசி ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பிரதமரின் இலவச உணவு தானிய விநியோகத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களின் கீழ் ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட இலவச அரசி விநியோகத்தை வரும் 2024ஆம் ஆண்டு ஜூலை முதல் 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1. What is the main objective of the Ni-Kshay Poshan Yojana?
A. Offer free medical treatment for anaemia patients
B. To ensure health care services to the disadvantaged group
C. Offer incentives for nutritional support to TB patients
D. Aims to reduce cardiovascular diseases
- The Union Health Ministry has increased monthly nutrition support for TB patients under Ni-Kshay Poshan Yojana from Rs 500 to Rs 1,000. Ni-Kshay Poshan Yojana was launched in April 2018 under the National Health Mission. It is a direct benefit transfer (DBT) scheme under the National Tuberculosis Elimination Program (NTEP). The scheme aims to provide nutritional support to TB patients. All notified TB patients are eligible beneficiaries of the scheme.
2. Which ministry recently launched Humsafar Policy in New Delhi?
A. Ministry of Urban Development
B. Ministry of Road Transport and Highways
C. Ministry of Defence
D. Ministry of Home Affairs
- The Union Ministry of Road Transport and Highways launched the Humsafar Policy on 7 October 2024 in New Delhi. The policy was introduced by Nitin Gadkari in the presence of key officials. Humsafar Policy aims to improve travel convenience on National Highways and Expressways. It focuses on developing world-class facilities like eateries, fuel stations, and trauma centres along highways. Commuters will have access to well-maintained, hygienic services. Service provider details can be easily found on the NHAI’s ‘Rajmarg Yatra’ app.
3. Which organization recently published the “State of Global Water Resources Report”?
A. UNDP
B. International Monetary Fund
C. World Meteorological Organization
D. World Bank
- The State of Global Water Resources report 2023 reveals that it was the driest year for global rivers in over three decades. This annual report has been published by the World Meteorological Organization since 2021. It provides a detailed overview of water resources, drawing from various national and international sources. The last five years have seen widespread below-normal river flows and reservoir inflows.
- All glacier regions reported ice loss in 2023, marking the largest mass loss in 50 years. Over 600 gigatons of water were lost globally, and 3.6 billion people lack adequate water access. This figure is projected to rise to over 5 billion by 2050, indicating a failure to meet Sustainable Development Goal 6.
4. Thirukurungudi Temples are located in which state?
A. Tamil Nadu
B. Andhra Pradesh
C. Kerala
D. Karnataka
- The Thirukurungudi Temples, including the Nambi Rayar Temple, Thirumalai Nambi Temple, and Aniliswarar Temple, are situated in Tamil Nadu’s Tirunelveli district. The Archaeological Survey of India (ASI) has recently documented inscriptions from these temples, dating back to the 9th Century during the Pandya period. These inscriptions reveal historical donations, including sheep for temple lamps and tax-free land for gardens, highlighting the region’s rich cultural heritage and religious practices during the Vijayanagara reign.
5. World Association of Zoos and Aquariums (WAZA) recently suspended the membership of which zoological park in India?
A. Delhi Zoo
B. Kolkata Zoo
C. Mumbai Zoo
D. Lucknow Zoo
- The World Association of Zoos and Aquariums (WAZA) suspended the membership of the National Zoological Park, or Delhi Zoo. The decision was due to concerns over the poor conditions of the lone African elephant at the zoo. WAZA is the global umbrella organization for zoos and aquariums, established in 1935. It represents the zoo and aquarium community worldwide. The organization’s mission focuses on animal care, environmental education, and global conservation.
6. What is the name of the online platform launched by the government for sharing experiences of retiring government employees?
A. Suraksha
B. Anubhav
C. Nishchit
D. Sankalp
- The Department of Pension & Pensioners’ Welfare launched the online platform ‘Anubhav’ on Prime Minister Narendra Modi’s direction. This platform allows retiring and retired government employees to share their work experiences. An Annual Awards Scheme was created in 2015 to encourage submissions, resulting in 10,886 published write-ups. So far, 78 outstanding write-ups have received 59 Anubhav Awards and 19 Jury Certificates.
- The National Anubhav Awards Scheme 2025 invites Central Government employees and pensioners to submit their write-ups for awards. For the first time, employees from Central Public Sector Undertakings will also be eligible to participate. The submission period for pensioners has been extended from one year to three years post-retirement.
7. Recently, the Red Panda Program of which zoological park has been selected as a finalist for the WAZA Conservation Award 2024?
A. Padmaja Naidu Himalayan Zoological Park
B. Nehru Zoological Park
C. Nandankanan Zoological Park
D. Chamarajendra Zoological Park
- Darjeeling’s Padmaja Naidu Himalayan Zoological Park’s Red Panda Program is a finalist for the 2024 WAZA Conservation Award. Between 2022 and 2024, nine captive-bred red pandas were released into Singalila National Park, West Bengal.
- The zoo collaborates with institutions and the government of India for habitat restoration. It has a Biobanking and Genetic Resource Facility to preserve gametes, tissues, and DNA of Red Pandas and other endangered species. The award winner will be announced at the 79th WAZA Annual Conference on 7th November in Taronga Zoo, Australia.
8. Indian wild ass (Equus hemionus khur) is primarily found in which state?
A. Maharashtra
B. Gujarat
C. Madhya Pradesh
D. Odisha
- The population of Indian Wild Ass (Equus hemionus khur) in Gujarat increased from 6,082 in 2020 to 7,672 in 2024, a rise of 26.14%. The khur is a subspecies of the Asiatic wild ass (Equus hemionus), also known as the onager. It is primarily found in the Little Rann of Kutch (LRK), Gujarat. Little Rann of Kutch is both a wetland and desert, and the khur is a generalist herbivore. It is solitary and shy, classified as endangered by IUCN and listed under Schedule I of the Wildlife Protection Act, 1972.
9. Which city is the venue of World Telecommunication Standardization Assembly (WTSA) 2024?
A. New Delhi
B. Chennai
C. Coimbatore
D. Kakinada
- The World Telecommunication Standardization Assembly (WTSA) takes place in New Delhi from October 14 to 24, 2024. WTSA has been held every four years since 2002 and is the governing conference of the ITU Standardisation Sector. It defines the work program and structure of study groups for telecommunication standardization. Hosting WTSA 2024 is a significant milestone for India in setting global telecommunication standards. The event will start with the Global Standards Symposium (GSS) on October 14, 2024, focusing on ICT standardization policy debates.
10. Which state government recently launched GREEN PLUS Scheme to enhance forest conservation?
A. Assam
B. Meghalaya
C. Sikkim
D. Nagaland
- Meghalaya Chief Minister Conrad K Sangma launched the GREEN Meghalaya Plus (GMP) Scheme to enhance and conserve forest cover. The scheme aims to expand forest conservation by offering monetary rewards for protecting forested areas. It follows the Payment for Ecosystem Services (PES) principle, supporting individuals and communities committed to conserving natural forests for at least 30 years. This initiative is part of the state’s PES program launched in 2022 and targets an additional 50,000 hectares for conservation.
11. Which country hosts the 21st ASEAN-India Summit and the 19th East Asia Summit?
A. Myanmar
B. Lao PDR
C. Malaysia
D. Indonesia
- The 21st ASEAN-India Summit and the 19th East Asia Summit are being hosted by Lao PDR, the current ASEAN Chair. India is celebrating a decade of its Act East Policy, with ASEAN relations as a key focus. The ASEAN-India Summit will assess the progress of their Comprehensive Strategic Partnership and discuss future cooperation. The East Asia Summit fosters strategic trust and allows leaders to discuss important regional issues. Prime Minister Modi is expected to hold bilateral meetings during the summits.
12. Which organization developed the Unified Genomic Chip?
A. Indian Council of Agricultural Research (ICAR)
B. Department of Animal Husbandry and Dairying (DAHD)
C. Food Corporation of India
D. Ministry of Agriculture
- The Prime Minister of India recently launched an initiative named ‘Unified Genomic Chip’. It aims to assist farmers in identifying high-quality cattle early and improving dairy farming efficiency in India. The Unified Genomic Chip has two versions: the ‘Gau Chip’ for cattle and the ‘Mahish Chip’ for buffalo. Developed by the Department of Animal Husbandry and Dairying, the chip helps farmers make informed decisions by identifying young, high-quality bulls early. It is designed specifically for Indian cattle breeds, enhancing the quality of livestock and the dairy sector.