Tnpsc Current Affairs in Tamil & English – 11th September 2024
1. சனிக்கோளின் வளையங்கள் கீழ்க்காணும் எந்த ஆண்டில் மறைந்துவிடுமென சமீபத்தில் NASA உறுதிசெய்தது?
அ. 2024 டிசம்பர்
ஆ. 2025 மார்ச்
இ. 2026 ஏப்ரல்
ஈ. 2027 மார்ச்
- ஒளியியல் மாயை காரணமாக சனியின் வளையங்கள் 2025 மார்ச் மாதத்தில் ‘மறைந்துவிடும்’ என்று NASA உறுதிப்படுத்தியது. சனியின் அச்சு பூமியைப்போலவே சாய்ந்துள்ளது; இதனால் அதன் வளையங்கள் வெவ்வேறு நேரங்களில் ஞாயிறை வித்தியாசமாக எதிர்கொள்ளும். சனியின் ஆண்டின் ஒருபகுதியில், வளையங்கள் மிகவும் பிரகாசமாக பிரகாசிக்கும், பிறிதொரு பகுதியில், அவற்றின் அடிப்பகுதி மட்டுமே தெரியும். இந்தச் சீரமைப்பு சனியின் வளையங்களை மிகமெல்லியதாகவும், சிறிய ஒளியை பிரதிபலிக்கவும் செய்கிறது, அவை பூமியிலிருந்து கிட்டத்தட்ட கண்ணுக்குத்தெரியாதவையாக இருக்கும். இதுபோன்றதொரு நிகழ்வு கடைசியாக 2009இல் நடந்தது.
2. Tianwen-3 திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?
அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. ரஷ்யா
ஈ. இந்தியா
- சீனா தனது Tianwen-3 திட்டத்திற்காக கோள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும். கோள் பாதுகாப்பு என்பது பூமிக்கும் மற்ற வான் பொருள்களுக்கும் இடையில் உயிரியல் மாசுபடுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கையானது புறவெளி உடன்படிக்கை (1967) கட்டுரை IXஐ அடிப்படையாகக் கொண்டது; இது சுற்றுச்சூழலின் தீங்கு விளைவிக்கும் மாசுபாட்டைத் தவிர்க்க எண்ணுகிறது. தியான்வென்-3 திட்டம் என்பது செவ்வாய்க் கோளுக்குச்சென்று மாதிரியைச் சேகரித்து திரும்பும் சீனாவின் திட்டமாகும்; இது 202ஆம் ஆண்டில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கோளின் பாறைகள் மற்றும் மண்ணின் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு திருப்பி அனுப்ப இரண்டு விண்கலங்கள்-ஒரு சுற்றுக்கலன் மற்றும் ஒரு தரையிறங்கியை செவ்வாய்க்கோளுக்கு அனுப்புவது இதில் அடங்கும்.
3. அண்மையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமானது (AIIMS) எந்த நகரத்தில் புகையிலை ஒழிப்பு கிளினிக்கை தொடக்கியது?
அ. சென்னை
ஆ. ஹைதராபாத்
இ. போபால்
ஈ. புது தில்லி
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) 2024 செப்.10 அன்று புது தில்லியில் ஒரு புகையிலை ஒழிப்பு மருத்தவகத்தைத் தொடக்கியது. இந்த மருத்துவகம் தேசிய போதைப்பொருள் சார்ந்த சிகிச்சை மையம் மற்றும் நிறுவனங்களின் நுரையீரல், மாறுநிலை மற்றும் துயில்மருத்துவத் துறை ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு இணைவாகும். புகையிலைக்கடிமையாகி அதிலிருந்து மீளப்போராடும் மக்களுக்கு உதவுவதே இதன் குறிக்கோள்.
- உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் மூன்றாவது பெரிய புகையிலை உற்பத்தியாளரான இந்தியாவில் புகையிலை பயன்பாடு ஒரு முக்கிய பொதுச்சுகாதாரப்பிரச்சினையாகும். உலகளாவிய வயது வந்தோர் புகையிலை ஆய்வு-2 (GATS-2)இன்படி, 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர்களில் 28.6% பேர் புகையிலையை ஏதோ ஒரு வடிவில் பயன்படுத்துகின்றனர்.
4. அண்மையில், இந்தியாவின் புதிய நிதிச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. அருண் குமார்
ஆ. சுசீல் குமார் திரிவேதி
இ. துஹின் காந்தா பாண்டே
ஈ. ஜிதேந்திர குமார்
- புதிய நிதித்துறை செயலாளராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். 1987 ஒடிஸா கேடரைச் சேர்ந்த மூத்த இஆப அதிகாரி ஆவார் அவர். தற்போது நிதியமைச்சகத்தில் பணியாற்றி வரும் அவர், பொது நிறுவனங்கள் துறை மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்.
5. அண்மையில், ‘4ஆவது இன்டர்காண்டினென்டல் கோப்பை ஆடவர் கால்பந்து போட்டியை’ வென்ற நாடு எது?
அ. இந்தியா
ஆ. சிரியா
இ. மொரிஷியஸ்
ஈ. சிங்கப்பூர்
- இறுதி ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்தியாவை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி 4ஆவது கண்டங்களிடையே ஆடவர் கால்பந்து கோப்பைக்கான சாம்பியன்ஷிப்பை சிரியா வென்றது. வெற்றியாளர்களுக்கான கோப்பையை சிரிய அணித்தலைவர் மஹ்மூத் அல்-மவாஸ் பெற்றுக்கொண்டதோடு, போட்டியின் சிறந்த வீரராக சையத் அப்துல் ரஹீம் தெரிவு செய்யப்பட்டார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) ஏற்பாடு செய்திருந்த இந்தப்போட்டி, 2024 செப்.03 முதல் 09 வரை ஹைதராபாத்தில் உள்ள GMC பாலயோகி அரங்கத்தில் நடைபெற்றது. ரவுண்ட் ராபின் வடிவத்தில் மூன்று அணிகள் பங்கேற்றன: சிரியா, இந்தியா மற்றும் மொரீஷியஸ்.
6. அண்மையில், “2ஆவது பன்னாட்டு பௌத்த ஊடக மாநாடு” நடத்தப்பட்ட இடம் எது?
அ. புது தில்லி
ஆ. கொல்கத்தா
இ. சென்னை
ஈ. பெங்களூரு
- இரண்டாவது பன்னாட்டு பௌத்த ஊடக மாநாடு செப்.11 அன்று புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. கருப்பொருள், “Mindful Communication for Conflict Avoidance and Sustainable Development” என்பதாகும். உலகளாவிய சிக்கலைத் தீர்ப்பதற்கும் ஊடகங்களில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பௌத்த போதனைகளை நவீன ஊடக நடைமுறைகள் உடன் எவ்வாறு ஒருங்கிணைக்க முடியும் என்பதை இந்த மாநாடு ஆராயும். இந்த நிகழ்வு ஆசியா முழுவதும் பௌத்த ஊடக வல்லுநர்களின் வலையமைப்பை உருவாக்குவதற்கும் பணியாற்றும். இந்நிகழ்வில் 18 நாடுகளைச் சேர்ந்த ஊடகப்பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
7. நுவகாய் பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
அ. ஒடிஸா
ஆ. பீகார்
இ. ஹரியானா
ஈ. ஜார்கண்ட்
- ஒடிஸா மாநிலத்தில், குறிப்பாக மேற்கு மற்றும் சில தெற்குப் பிராந்தியங்களில், புதிய பட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும், ‘நுவகாய்’ பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்நிகழ்ச்சியில், முதல்வர் மோகன் சரண் மாஜி, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில், முதல்வர்-கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இருபகுதிகளாக ஆண்டுக்கு `4,000 வழங்கப்படும். இன்று, சுமார் 46 லட்சம் உழவர்களின் கணக்கில் `2,000 வைப்பு செய்யப்பட்டது; மீதமுள்ள தொகை அட்சய திருதியை அன்று வழங்கப்படும். மொத்தம் `925.40 கோடி நிதி கிட்டத்தட்ட 46 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
8. அண்மையில், இந்தியப்பிரதமரால் SEMICON இந்தியா-2024 ஆனது கீழ்க்காணும் எந்த நகரத்தில் நடைபெறும் இந்திய ஏற்றுமதி சந்தையில் தொடங்கி வைக்கப்பட்டது?
அ. பெருநகர நொய்டா
ஆ. போபால்
இ. ஜெய்ப்பூர்
ஈ. காந்திநகர்
- பிரதமர் நரேந்திர மோதி SEMICON இந்தியா – 2024ஐ செப்.11 அன்று உத்தரபிரதேசத்தின் பெருநகர நொய்டாவில் தொடக்கி வைத்தார். 2024 செப்.11-13 வரை நடைபெறுகிற இந்நிகழ்வு, இந்தியாவை வளர்ந்து வரும் குறைகடத்தி முதலீட்டு மையமாக எடுத்துக்காட்டுகிறது. SEMICON இந்தியா – 2024 ஆனது உலகளாவிய குறைகடத்தித் தலைமைகள், தொழில்துறை மற்றும் அரசு அதிகாரிகளை இணைக்க ஒரு தளத்தை வழங்குகிறது. SEMIஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மூஞ்சென் இந்தியா உடன் இணைந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஆதரிக்கப்படுகிறது. “Shaping the Semiconductor Future” என்பது இதன் கருப்பொருளாகும். இந்தியாவின் மின்னணுத் துறையின் மதிப்பு தற்போது $150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ள நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் அதனை $500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9. அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) இணைந்த 101ஆவது நாடு எது?
அ. பாகிஸ்தான்
ஆ. நேபாளம்
இ. பூடான்
ஈ. குரோஷியா
- பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) முழு உறுப்பினராக இணைந்த 101ஆவது நாடாக நேபாளம் ஆனது. நேபாளம் தனது ஒப்புதலுக்கான இசைவை புது தில்லியில் உள்ள ISAஇடம் ஒப்படைத்தது. நேபாள Dr சுரேந்திர தாபா மற்றும் இந்தியாவின் இணைச்செயலர் அபிஷேக் சிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது இது செய்யப்பட்டது. ISA என்பது சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு கூட்டுத்தளமாகும். அதன் முக்கிய குறிக்கோள்கள் ஆற்றல் அணுகலை மேம்படுத்துதல், ஆற்றல் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் ஆற்றல் மாற்றங்களை ஆதரித்தல் ஆகும். ISA ஆனது இந்தியா மற்றும் பிரான்ஸால் சூரிய ஆற்றல் பயன்பாட்டின்மூலம் தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்டது.
10. நீலகிரி மலை ரெயிலானது தமிழ்நாட்டின் எந்த மாவட்ட(ங்களில்)த்தில் அமைந்துள்ளது?
அ. நீலகிரி
ஆ. கோயம்புத்தூர்
இ. (அ) மற்றும் (ஆ)
ஈ. கன்னியாகுமரி
- நீலகிரி மலை ரெயிலின் (NMR) ஒருபகுதியான குன்னூர் ரெயில் நிலையம், அமிர்த பாரத நிலைய திட்டத்தின்கீழ் உருமாற்றப்பட்டு வருகிறது. “ஊட்டி பொம்மை ரெயில்” என்று அழைக்கப்படும் NMR ரெயில்தடம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை 45.88 கிமீ தூரம் செல்கிறது. 1854இல் திட்டமிடப்பட்ட பிறகு, 1899 ஜூன்.15 அன்று இந்த ரெயில் முதன்முதலில் ஓடியது. அரசாங்க ஒப்பந்தத்தின்கீழ் இந்த ரெயில் மெட்ராஸ் ரெயில்வேயால் இயக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டில், NMR UNESCOஇன் உலகப் பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டது.
11. ‘பசுமைப்படுத்தும் எஃகு: நிலைத்தன்மைக்கான பாதை’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?
அ. எஃகு அமைச்சகம்
ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- எஃகு அமைச்சகம் செப்.10ஆம் தேதி புது தில்லியில், “பசுமைப்படுத்தும் எஃகு: நிலைத்தன்மைக்கான பாதை” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது. அமைச்சகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களைச்சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிலையான எஃகு உற்பத்தியைப் பற்றி விவாதித்தனர். இந்த நிகழ்வில் பசுமை எஃகு மாற்றத்தை இயக்குவதற்கான தலைமை மற்றும் புதுமைபற்றிய குழு விவாதம் இடம்பெற்றது.
- இதன் சமயம், “இந்தியாவில் எஃகு துறையை பசுமையாக்குதல். செயல் திட்டம்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. எஃகு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது இந்திய எஃகு துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான ஒரு விரிவான உத்தியை உள்ளடக்கியது. தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட உறுதிப்பாடுகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, 2070க்குள் நிகர சுழிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் இலக்குக்கு ஏற்ப, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகள் & செயல் திட்டத்தை பின்பற்ற எஃகு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
12. அண்மையில், புதிதாக உருவாக்கப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முதல் ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
அ. பிரதமர் நரேந்திர மோதி
ஆ. உள்துறை அமைச்சர் அமித் ஷா
இ. பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- புது தில்லியில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முதல் ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்கு பிரதமர் தலைமைதாங்கினார். தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பில் (NIRF) குறைந்த தரவரிசையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டிகளாக ஓய்வுபெற்ற அறிவியலாளர்கள் மற்றும் பேராசிரியர்களை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. IIT-கள் மற்றும் தேசிய ஆய்வகங்களின் வல்லுநர்கள் அரசாங்க நிதியுதவியுடனான வழிகாட்டுதலை வழங்குவார்கள். உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி திறன்களை அதிகரிப்பதே குறிக்கோள்.
- Partnerships for Accelerated Innovation and Research (PAIR) திட்டமும் ஆராய்ச்சியின் சிறப்பை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. 2023 சட்டத்தின்கீழ் ANRF, நிறுவப்பட்ட ஆராய்ச்சிக்காக தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கத்துடன் கூட்டிணையும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வருவாய் அடிப்படையில் ரயில் நிலையங்கள் தரவரிசை: சென்னை சென்ட்ரலுக்கு 3ஆவது இடம்.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்களுக்கான தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும். முன்னதாக 2017-18 நிதியாண்டில் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டை அடிப்படையாக கொண்டு ரயில்வே வாரியம் ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
முதலிடம்: இதில் புது தில்லி ரயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு `3,337 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து `1,692 கோடி வருவாய் ஈட்டி ஹௌரா ரயில் நிலையம் இரண்டாமிடத்திலும், `1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் மூன்றாமிடத்திலும் உள்ளது. தொடர்ந்து முதல் பட்டியலில் தெற்கு ரயில்வேயின் சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்ளன.
1. Recently, NASA confirmed that Saturn’s rings are expected to ‘disappear’ in which year?
A. 2024 December
B. 2025 March
C. 2026 April
D. 2027 March
- NASA confirmed that Saturn’s rings will appear to ‘disappear’ in March 2025 due to an optical illusion. Saturn’s axis is tilted similarly to Earth’s, causing its rings to face the Sun differently at various times. During part of Saturn’s year, the rings shine brightly, while in the other part, only their underside is visible. This alignment makes the rings appear very thin and reflect little light, rendering them almost invisible from Earth. The last time this happened was in 2009.
2. Tianwen-3 mission is associated with which country?
A. Japan
B. China
C. Russia
D. India
- China will adhere to planetary protection guidelines for its Tianwen-3 mission. Planetary protection aims to prevent biological contamination between Earth and other celestial bodies. This principle is based on Article IX of the Outer Space Treaty (1967), which seeks to avoid harmful contamination of environments. The Tianwen-3 mission is China’s Mars sample-return project, set for a proposed 2028 launch. It will involve sending two spacecraft—an orbiter and a lander—to Mars to collect and return samples of Martian rocks and soil to Earth.
3. Recently, the All-India Institute of Medical Sciences (AIIMS) inaugurated a Tobacco Cessation Clinic (TCC) in which city?
A. Chennai
B. Hyderabad
C. Bhopal
D. New Delhi
- The All-India Institute of Medical Sciences (AIIMS) inaugurated a Tobacco Cessation Clinic (TCC) in New Delhi on September 10, 2024. The clinic is a collaboration between the National Drug Dependence Treatment Centre and the institute’s Department of Pulmonary, Critical, and Sleep Medicine. The clinic’s goal is to help people who are struggling with tobacco addiction.
- Tobacco use is a major public health issue in India, which is the world’s second-largest consumer and third-largest producer of tobacco. According to the Global Adult Tobacco Survey 2 (GATS-2), 28.6% of Indian adults aged 15 and above use tobacco in some form.
4. Recently, who has been appointed as new finance secretary of India?
A. Arun Kumar
B. Susheel Kumar Trivedi
C. Tuhin Kanta Pandey
D. Jitendra Kumar
- Tuhin Kanta Pandey has been appointed as the new Finance Secretary. He is a senior IAS officer from the 1987 Odisha Cadre. He currently serves in the Finance Ministry, overseeing the Department of Public Enterprises (DPE) and the Department of Investment and Public Asset Management (DIPAM).
5. Which country recently won the ‘4th Intercontinental Cup Men’s Football Tournament’?
A. India
B. Syria
C. Mauritius
D. Singapore
- Syria won the 4th Intercontinental Cup men’s football championship, defeating India 3-0 in the final round-robin match. Mahmoud Al-Mawas, Syrian captain, received the winners’ trophy and was named the Syed Abdul Rahim Player of the Tournament. The tournament, organized by the All-India Football Federation, took place from 3 to 9 September 2024 at GMC Balayogi Stadium in Hyderabad. Three teams participated: Syria, India, and Mauritius, in a round-robin format.
6. Recently, where was the “2nd International Buddhist Media Conclave” organized?
A. New Delhi
B. Kolkata
C. Chennai
D. Bengaluru
- The Second International Buddhist Media Conclave organized on 11th September in New Delhi. The theme is “Mindful Communication for Conflict Avoidance and Sustainable Development.” The conclave will explore how Buddhist teachings can be integrated into modern media practices to address global issues and build trust in media. The event will also work on creating a network of Buddhist media professionals across Asia. Media representatives from 18 countries will participate in this event.
7. Nuakhai festival is celebrated in which state?
A. Odisha
B. Bihar
C. Haryana
D. Jharkhand
- In Odisha, especially in the western and some southern regions, people are celebrating the ‘Nauakhai’ festival, which marks the start of the new rice season. On this occasion, Chief Minister Mohan Charan Majhi introduced the CM-Kisan Yojana to support farmers with financial aid. Under this scheme, farmers will receive Rs 4,000 annually in two parts. Today, Rs 2,000 was deposited into the accounts of around 46 lakh farmers, with the remaining amount to be given on Akshaya Tritiya. A total of Rs 925.40 crore will be distributed to nearly 46 lakh beneficiaries.
8. Recently, the Prime Minister of India inaugurated SEMICON India 2024 at India Expo Mart in which city?
A. Greater Noida
B. Bhopal
C. Jaipur
D. Gandhinagar
- Prime Minister Narendra Modi inaugurated SEMICON India 2024 on 11 September 2024 in Greater Noida, Uttar Pradesh. The event runs from 11 to 13 September and highlights India as a growing semiconductor investment hub. SEMICON India 2024 offers a platform for global semiconductor leaders, industry, and government officials to connect.
- The event is organized by SEMI, in collaboration with München India and supported by MeitY. The theme is “Shaping the Semiconductor Future.” India’s electronics sector is currently valued at $150 billion, with a target of $500 billion by 2030.
9. Recently, which country has become the 101st member to join the International Solar Alliance (ISA)?
A. Pakistan
B. Nepal
C. Bhutan
D. Croatia
- Nepal has become the 101st country to join the International Solar Alliance (ISA) as a full member. Nepal handed over its Instrument of Ratification to the ISA in New Delhi. This was done during a meeting between Nepal’s Dr. Surendra Thapa and India’s Joint Secretary Abhishek Singh. The ISA is a collaborative platform focused on increasing the use of solar energy technologies. Its main goals are improving energy access, ensuring energy security, and supporting energy transitions. ISA was initiated by India and France to combat climate change through solar energy deployment.
10. Nilgiri Mountain Railway is situated in which district(s) of Tamil Nadu?
A. The Nilgiris
B. Coimbatore
C. (A) and (B)
D. Kanyakumari
- The Coonoor railway station, part of the Nilgiri Mountain Railway (NMR), is being transformed under the Amrit Bharat Station Scheme, drawing criticism from heritage enthusiasts. The NMR line, known as the Ooty toy train, runs 45.88 km from Mettupalaiyam to Ooty, located in Tamil Nadu’s Coimbatore and Nilgiri districts. The train first ran on June 15, 1899, after plans were initiated in 1854. The railway was operated by Madras Railway under a government agreement. In 2005, the NMR was recognized as a UNESCO World Heritage Site, highlighting its cultural and historical significance.
11. Recently, which ministry organized the event ‘Greening Steel: Pathway to Sustainability’?
A. Ministry of Steel
B. Ministry of Science and Technology
C. Ministry of New and Renewable Energy
D. Ministry of Defence
- The Ministry of Steel organized the event “Greening Steel: Pathway to Sustainability” on 10th September in New Delhi. Various experts from ministries, academia, and think tanks attended the event to discuss sustainable steel production. The event featured a panel discussion on leadership and innovation for driving the green steel transition. The report “Greening the Steel Sector in India: Roadmap and Action Plan” was released, focusing on decarbonization strategies. This aligns with India’s Net Zero emissions goal for 2070, as reducing carbon in steel production is vital to combat climate change.
12. Recently, who chaired the first Governing Board meeting of the newly formed Anusandhan National Research Foundation (ANRF)?
A. Prime Minister Narendra Modi
B. Home Minister Amit Shah
C. Defence Minister Rajnath Singh
D. None of the above
- The Prime Minister chaired the first Governing Board meeting of the Anusandhan National Research Foundation (ANRF) in New Delhi. The government plans to engage retired scientists and professors as mentors for universities with lower National Institutional Ranking Framework (NIRF) rankings.
- Experts from IITs and national labs will provide mentorship, supported by government funding and postdoctoral support. The goal is to boost research capabilities in higher education institutions. The Partnerships for Accelerated Innovation and Research (PAIR) Programme was also announced to promote research excellence. ANRF, established under the 2023 Act, will collaborate with industry, academia, and government for research.