Tnpsc Current Affairs in Tamil & English – 11th July 2024
1. ‘Habrocestum swaminathan’ என்பது சார்ந்த இனம் எது?
அ. தவளை
ஆ. மீன்
இ. சிலந்தி
ஈ. முதலை
- இரிஞ்ஞாலக்குடாவில் அமைந்துள்ள கிறிஸ்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளில், குப்பைகளில் வாழும் இரு புதிய சிலந்தி இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். ‘Habrocestum swaminathan’ மற்றும் ‘Habrocestum benjamin’ எனப்பெயரிடப்பட்ட இவை Habrocestum இனத்தைச் சார்ந்தவைகளாகும். இந்தச் சிலந்திகள் இயற்கையான பூச்சிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் சுற்றுச்சூழல் நலத்தின் குறிகாட்டிகளாக செயல்படுகின்றன. குந்தியாற்றின் அருகே காணப்பட்ட, ‘Habrocestum swaminathan‘ என்ற இனம், M S சுவாமிநாதன் பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் வண்ணமயமான திட்டுகளுக்கு பெயர் பெற்றதுவும் துஷாரகிரி அருவிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதுவுமான ‘Habrocestum benjamin‘ என்ற இனம் குதிக்கும் சிலந்தி நிபுணர் சுரேஷ் P பெஞ்சமின் பெயரால் அழைக்கப்படுகிறது.
2. கடற்தடுப்பணையின் முதன்மை செயல்பாடு என்ன?
அ. வண்டலைச் சேகரிப்பதும் கரையோரப் பெயர்வைத் தடுப்பதும்
ஆ. கடல்வாழ் உயிரினங்களுக்கு செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்குதல்
இ. மணல் மறுசுழற்சி மூலம் கடற்கரையை ஊட்டச்சத்து மிக்கதாக்குதல்
ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- கேரளத்தின் பூந்துறைப் பகுதியில் கடலோர அரிப்பை எதிர்த்துப் போராடும் ஒரு முயற்சியாக, நீர்ப்பாசனத்துறை `17.5 கோடி செலவில் எட்டு கடற்தடுப்பணைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. பொதுவாக மரம், பாறை அல்லது பசுங்காரையால் காட்டப்படும் கடற்தடுப்பணைகள், கரையிலிருந்து கடலின் உள்வரை விரிவடைந்து வண்டலைச் சேகரிக்கவும், அலையாற்றலைச் சிதறடிக்கவும், கரையோரப் பெயர்வைத் தடுக்கவும் உதவுகிறது. அவை கடலோர அரிப்பைக்குறைக்கின்றன; கடற்கரைகளை விரிவுபடுத்துகின்றன. குறைந்தபட்ச பராமரிப்பே தேவைப்படும் இவை, கடற்கரைகளை உறுதிப்படுத்துவதற்கான நிலைத்த கட்டமைப்புகளாகச் செயல்படுகின்றன.
3. அண்மையில், 15ஆவது வேளாண் தலைமைத்துவ விருதுகள் குழுவால் நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாய மாநில விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. கேரளா
ஈ. சிக்கிம்
- நீதியரசர் P சதாசிவம் தலைமையிலான 15ஆவது வேளாண் தலைமைத்துவ விருதுகள் குழு, நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாய மாநிலமாக மகாராட்டிராவை தேர்வுசெய்துள்ளது. மகாராட்டிர மாநில முதலமைச்சர் ஸ்ரீ ஏக்நாத் ஷிண்டே இந்த விருதை ஜூலை10 அன்று புது தில்லியில் பெற்றுக்கொண்டார். அதன் புதுமையான வேளாண் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள மகாராட்டிராவின் முன்முயற்சிகளில் பெருமூங்கில் திட்டம், விரிவான நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் நானோ-தொழில்நுட்ப உர விநியோகம் ஆகியவை அடங்கும்.
4. அண்மையில் பாரி (இந்தியாவின் பொதுக்கலை) என்ற திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. கலாச்சார அமைச்சகம்
இ. உள்துறை அமைச்சகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், 2024 ஜூலை.21-31 வரை புது தில்லியில் நடைபெறும் உலக பாரம்பரியக் குழு கூட்டத்தின் 46ஆவது அமர்வின்போது, பாரி (PARI :: Public Art of India :: இந்திய பொதுக்கலை) திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இதன்கீழ், கலாச்சார அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமான லலித் கலா அகாதெமி, நாடு முழுவதிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட காட்சிக்கலைஞர்களை அழைத்துள்ளது. நமது தேசிய தலைநகரத்தின் வளமான வரலாற்று பாரம்பரியத்திற்கு பெருமைசேர்க்கும் அதே வேளையில், தில்லியின் அழகியல் மற்றும் கலாசார கண்ணோட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதை பாரி திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- லலித் கலா அகாதெமி மற்றும் தேசிய நவீன கலைக்கூடம் ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகால நமது கலை பாரம்பரியத்தை வெளிக்கொணர எண்ணும் அதே வேளையில் நவீன கருப்பொருள்கள் மற்றும் நுட்பங்களை அவை இணைக்கின்றன.
5. அண்மையில், சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த 2024-ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
அ. துருவ் சித்வாலா
ஆ. பங்கஜ் அத்வானி
இ. ரூபேஷ் ஷா
ஈ. கீத் சேத்தி
- சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற 2024 – ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை துருவ் சித்வாலா 5-2 என்ற கணக்கில் பங்கஜ் அத்வானியை தோற்கடித்து வென்றார். இந்த வெற்றி துருவ் சித்வாலாவின் மூன்றாவது ஆசிய பில்லியர்ட்ஸ் பட்டத்தைக் குறிக்கிறது; இதற்கு முன்பு 2015 மற்றும் 2016இல் அவர் பட்டம் வென்றிருந்தார். தனது மூன்றாவது பட்டத்தையும் ஹாட்ரிக் சாம்பியன்ஷிப்பையும் இலக்காகக் கொண்டிருந்த பங்கஜ் அத்வானி, இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவினார்.
6. 2024 – ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற இடம் எது?
அ. மேடன், இந்தோனேசியா
ஆ. புது தில்லி, இந்தியா
இ. ஜோகூர், மலேசியா
ஈ. கொல்கத்தா, இந்தியா
- மலேசியாவின் ஜோகூரில் நடைபெற்ற 2024-ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் இரண்டு பட்டங்களை வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் அபை சிங் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா இணை ஹாங்காங்கின் டோங் டிஸ் விங் மற்றும் மிங் ஹாங் டாங் இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் சிங், வேலவன் செந்தில்குமார் இணையானது மலேசியாவின் ஓங் சாய் ஹங், சயாபிக் கமல் இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஏழு நாடுகளைச் சேர்ந்த 33 அணிகள் பங்கேற்ற இந்தச் சாம்பியன்ஷிப், 2024 ஜூலை.04-07 வரை நடைபெற்றது.
7. CAMCOPTER S-100 என்றால் என்ன?
அ. ஆளில்லா விமானம்
ஆ. சிறுகோள்
இ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்
ஈ. ஆக்கிரமிப்பு தாவரம்
- ஆஸ்திரிய நிறுவனமான ஷீபலிலிடமிருந்து CAMCOPTER S-100 என்ற சுழலும் ஆளில்லா விமானத்தை இந்தியா வாங்கவுள்ளது. இவ்வமைப்பு இந்தியப்பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் ISR திறன்களை மேம்படுத்தும். வியன்னாவில் 1951ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஷீபல் நிறுவனம், அனைத்து வசதிகளுடன்கூடிய உயர் தொழில்நுட்ப ஆளில்லா வான்வழி வாகன அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. இராணுவம் மற்றும் வணிகம் சார்ந்த தயாரிப்புகளுக்கு இது பெயர் விளங்கிய நிறுவனமாகும்.
8. கண்டகி ஆறு கீழ்க்காணும் எந்த ஆற்றின் இடதுகரை துணையாறாகும்?
அ. காவேரியாறு
ஆ. கங்கையாறு
இ. நர்மதையாறு
ஈ. கோதாவரியாறு
- பீகாரின் சரண் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின்மீது உள்ள 15 ஆண்டுகள் பழமையான பாலமொன்று ஜூலை.04 அன்று இடிந்து விழுந்தது; 24 மணி நேரத்திற்குள்ளாக இது அம்மாவட்டத்தில் இடிந்து விழுந்த 3ஆவது பாலமாகும். இந்தப் பாலம் சரணில் உள்ள கிராமங்களை சிவான் மாவட்டத்துடன் இணைக்கிறது. பீகார் முழுவதும் கடந்த 17 நாட்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ‘நாராயணி’ மற்றும் ‘கந்தக்’ என்று அழைக்கப்படும் கண்டகி ஆறு நேபாளத்தில் உற்பத்தியாகி பீகார் மாநிலம் பாட்னா அருகே கங்கையில் கலக்கிறது.
- 475 மைல்கள் பரப்பளவில், 46,300 சதுர கிமீ நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ள இது, இந்தியாவில் 7,620 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த ஆறானது இமயமலை, கங்கை, புர்கி கண்டக் படுகை மற்றும் காக்ரா நீர்வடிநிலம் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டுள்ளது; அதன் மேற்புற நீர்ப்பிடிப்பில் 1,710 பனிப்பாறைகளும் 300க்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.
9. பழுதுபார்ப்பதற்கான உரிமை இணையதளத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
இ. மின்சார அமைச்சகம்
ஈ. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்
- மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை வாகனங்களைப் பழுதுபார்க்கும் நடைமுறைகளை எளிதில் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், பழுதுபார்ப்பதற்கான உரிமை (Right to Repair) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை நிலைநிறுத்தவும், சிக்கல் இல்லாமல் வாகனப் பழுதுபார்ப்பை மேற்கொள்ளும் வகையிலும் இந்தத் தளம் அறமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இதுதொடர்பாக வாகன நிறுவனங்கள் பங்கேற்ற கூட்டம் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் நிதி கரே தலைமையில் புது தில்லியில் நடைபெற்றது. இதில் வாகன தொழிற்துறை சங்கங்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்கள் இத்தளத்தில் இணைய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின்போது கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
10. கோப்பர்நிக்கஸ் திட்டம் என்றால் என்ன?
அ. ஒரு புதிய இணையவெளிப் பாதுகாப்பு திட்டம்
ஆ. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் புவி கண்காணிப்பு திட்டமாகும்
இ. இது வனவிலங்குகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்காணிப்பதற்கான ஒரு திட்டமாகும்
ஈ. புதிய கல்வித் திட்டம்
- நடப்பு 2024 ஜூன் மாதம் உலகளவில் வெப்பமான ஜூன் மாதமாகப் பதிவுசெய்யப்பட்டது. அம்மாதத்து வெப்பநிலை 1991-2020 சராசரியைவிட சராசரியாக 0.67°C அதிகமாகவும், 2023 ஜூனிலிருந்த முந்தைய அதிகபட்சமான 0.14°C விடவும் அதிகமாகும் என கோப்பர்நிகஸ் தட்பவெப்பநிலைமாற்ற சேவையகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் புவி கண்காணிப்பு திட்டத்தின் ஒருபகுதியான C3S, உலகளாவிய தட்பவெப்பநிலை கொள்கைகள் மற்றும் நெகிழ்திறன் முயற்சிகளை ஆதரிக்கிறது. இது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் மற்றும் சிட்டு உணரிகளில் இருந்து தரவைப் பயன்படுத்துகிறது.
11. அண்மையில், உலகளாவிய உயிர்க்கோளக் காப்பகங்கள் வலையமைப்பில் எத்தனை புதிய உயிர்க்கோளக் காப்பகங்கள் சேர்க்கப்பட்டன?
அ. 11
ஆ. 22
இ. 33
ஈ. 44
- கொலம்பியா, டொமினிகன் குடியரசு, காம்பியா, இத்தாலி, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், கொரிய குடியரசு மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள 11 புதிய உயிர்க்கோளக்காப்பகங்களை UNESCO உலகளாவிய உயிர்க்கோளக் காப்பகங்கள் வலையமைப்பில் சேர்த்தது. உயிர்க்கோளக்காப்பகங்கள் அறிவியல் ஆய்வுக்கு உதவுகின்றன; சுற்றுச் சூழல் கொள்கைகளை அறிவிக்கின்றன மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்தச் சேர்த்தல்களுடன், உலக உயிர்க்கோளக்காப்பகங்களின் எண்ணிக்கை இப்போது 136 நாடுகளைச் சார்ந்த 759 தளங்களாக உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 7.44 மில்லியன் சகிமீ ஆகும்.
12. ‘ஜோராவர்’ என்ற இந்தியாவின் உள்நாட்டு இலகுரக பீரங்கியின் முன்மாதிரியை வெளியிட்ட அமைப்பு எது?
அ. ISRO
ஆ. HAL
இ. DRDO
ஈ. BHEL
- பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு இலகுரக பீரங்கியான ஜோராவரின் முன்மாதிரி ஜூலை.06 அன்று வெளியிடப்பட்டது. கம்மின்ஸ் எஞ்சின்மூலம் இயக்கப்படுகிற இது, தீவிர வானிலை மற்றும் உயரமான இடங்களில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு ஆகஸ்டுக்குள் ராணுவத்திற்குப் பயன்படும் விதமாக ஆக்குவதற்கான அனைத்து சோதனைகளும் முடிக்கப்படும். இப்புதிய உள்நாட்டு இயந்திரத்தையும் DRDO உருவாக்கியுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ஊரகப்பகுதிகளில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்.
ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மற்றும் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திட மக்களை நாடிச்செல்லும் தமிழ்நாடரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான, “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான முகாமினை தருமபுரி மாவட்டம் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1. Habrocestum swaminathan belongs to which species?
A. Frog
B. Fish
C. Spider
D. Crocodile
- Researchers from Christ College, Irinjalakuda, discovered two new litter-dwelling jumping spider species in the southern Western Ghats’ evergreen forests. Named Habrocestum swaminathan and Habrocestum benjamin, they contribute to the genus Habrocestum.
- These spiders play crucial roles in natural pest control and serve as indicators of ecosystem health. Habrocestum swaminathan was found near the Kunthi river, honoring MS Swaminathan, while Habrocestum benjamin, noted for its colorful patches, was discovered near Thusharagiri waterfalls and named after jumping spider specialist Suresh P Benjamin.
2. What is the primary function of ‘Groynes’?
A. To trap sediment and prevent longshore drift
B. To create artificial reefs for marine life
C. To facilitate beach nourishment through sand recycling
D. None of the above
- In an effort to combat coastal erosion in Kerala’s Poonthura region, the irrigation department plans to construct eight groynes costing Rs 17.5 crore. Groynes, typically made of wood, rock, or concrete, extend from shore into the sea to trap sediment, dissipate wave energy, and counter longshore drift. They reduce erosion, widen beaches, and require minimal maintenance, serving as durable structures crucial for stabilizing coastlines and supporting local activities.
3. Recently, which state has been honored with the Best Agriculture State Award for 2024 by the 15th Agriculture Leadership Awards Committee?
A. Tamil Nadu
B. Maharashtra
C. Kerala
D. Sikkim
- The 15th Agriculture Leadership Awards Committee, chaired by Justice P Sathasivam, has named Maharashtra the Best Agriculture State for 2024. Maharashtra Chief Minister Shri Eknath Shinde will receive the award in New Delhi on July 10. Recognized for its innovative agricultural policies and programs, Maharashtra’s initiatives include the largest bamboo mission, extensive irrigation projects, and nano-technology fertilizer distribution.
4. Which ministry has recently launched Project Pari (Public Art of India)?
A. Ministry of Defence
B. Ministry of Culture
C. Ministry of Home Affairs
D. Ministry of Agriculture
- The Ministry of Culture has launched Project PARI (Public Art of India) in conjunction with the 46th World Heritage Committee Meeting in New Delhi from July 21-31, 2024. Executed by Lalit Kala Akademi and National Gallery of Modern Art, this initiative aims to blend India’s rich artistic heritage with modern themes. Over 150 artists will create public artworks, democratizing art and enhancing cultural engagement nationwide.
5. Recently, who won the 2024 Asian Billiards Championship in Riyadh, Saudi Arabia?
A. Dhruv Sitwala
B. Pankaj Advani
C. Rupesh Shah
D. Geet Sethi
- Dhruv Sitwala defeated Pankaj Advani 5-2 to win the 2024 Asian Billiards Championship in Riyadh, Saudi Arabia. This victory marks Sitwala’s third Asian billiards title, having previously won in 2015 and 2016. Advani, aiming for his third title and a hat-trick of championships, fell short in the final.
6. Where was the Asian Squash Doubles Championship 2024 held?
A. Medan, Indonesia
B. New Delhi, India
C. Johor, Malaysia
D. Kolkata, India
- Indian squash players secured two titles at the 2024 Asian Squash Doubles Championship in Johor, Malaysia. Abhay Singh and Joshna Chinappa won the mixed doubles, defeating Hong Kong’s Tong Tsz Wing and Ming Hong Tang. In the men’s doubles, Singh and Velavan Senthilkumar triumphed over Malaysia’s Ong Sai Hung and Syafiq Kamal. The championship featured 33 teams from seven countries and was held from July 4-7, 2024.
7. What is CAMCOPTER S-100?
A. Unmanned Aerial Vehicle
B. Asteroid
C. Newly discovered exoplanet
D. Invasive plant
- India is acquiring the Camcopter S-100 rotary unmanned aerial system from Austrian company Schiebel. This system will enhance the Indian Navy’s ISR capabilities in the Indian Ocean Region, marking a significant technological collaboration. Schiebel, founded in 1951 in Vienna, specializes in high-tech unmanned systems with global facilities and a strong reputation for military, commercial, and humanitarian products.
8. Gandaki River is a left bank tributary of which river?
A. River Kaveri
B. River Ganges
C. River Narmada
D. River Godavari
- A 15-year-old bridge over the Gandaki River in Bihar’s Saran district collapsed on July 4, the third bridge collapse in the district within 24 hours. The bridge connected villages in Saran to Siwan district. Over the past 17 days, 12 bridges have collapsed across Bihar. The Gandaki River, also known as Narayani and Gandak, originates in Nepal and flows into the Ganges near Patna, Bihar.
- Spanning 475 miles, it has a catchment area of 46,300 sq.km, with 7,620 sq.km in India. The river is bordered by the Himalayas, Ganga, Burhi Gandak Basin, and Ghagra Basin, with 1,710 glaciers and over 300 lakes in its upper catchment.
9. Right to Repair Portal was launched by which ministry?
A. Ministry of Defence
B. Ministry of Science and Technology
C. Ministry of Power
D. Ministry of Consumer Affairs
- The Centre has launched the unified Right to Repair Portal India, urging automobile companies and other sectors to participate. Led by the Department of Consumer Affairs, the portal aims to empower consumers with easy access to repair information, promoting reuse and reducing e-waste. Chaired by Nidhi Khare, the meeting involved major automobile associations and companies like TATA Motors, Mahindra, and Yamaha Motors India.
10. What is Copernicus Programme?
A. A new cybersecurity programme
B. It is European Union’s Earth Observation Programme
C. It’s a programme to observing wildlife migration patterns
D. New Educational programme
- June 2024 was recorded as the warmest June globally, with temperatures averaging 0.67°C above the 1991-2020 average and surpassing the previous high set in June 2023 by 0.14°C, according to the Copernicus Climate Change Service (C3S). C3S, part of the Copernicus Earth Observation Programme by the EU, supports climate policies and resilience efforts globally. It utilizes data from earth observation satellites and in situ sensors, processing it to provide authoritative climate information.
11. How many new biosphere reserves recently added to World Network of Biosphere Reserves?
A. 11
B. 22
C. 33
D. 44
- UNESCO designated 11 new biosphere reserves across Colombia, the Dominican Republic, Gambia, Italy, Mongolia, Philippines, Republic of Korea, and Spain, including two transboundary reserves. Biosphere reserves aid scientific research, inform environmental policies, and support local sustainable development. With these additions, the World Network of Biosphere Reserves now totals 759 sites in 136 countries, covering 7.44 million square kilometers.
12. Which organization has recently unveiled the prototype of India’s indigenous light tank ‘Zorawar’?
A. ISRO
B. HAL
C. DRDO
D. BHEL
- The prototype of India’s indigenous light tank, Zorawar, developed by the Defence Research and Development Organisation (DRDO) and Larsen & Toubro (L&T), was unveiled on July 6. Powered by a Cummins engine, it is designed for extreme weather and high altitudes along the northern border. Extensive trials will follow, aiming for Army user trials by August 2025. DRDO is also developing a new domestic engine for the tank.