TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 10th September 2024

1. ‘கவாசாகி நோய்’ என்றால் என்ன?

அ. அரிதான இருதய நோய்

ஆ. தாவர நோய்

இ. பூஞ்சை நோய்

ஈ. கண் கோளாறு

  • COVID-19இன் 2ஆவது அலைக்குப்பிறகு குழந்தைகளிடையே கவாசாகி நோய் அதிகரித்து வருவதாக பெங்களூரு மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கவாசாகி நோய், அல்லது கவாசாகி நோய்க்குறி, முக்கியமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. இது இரத்தநாளங்களில் வீக்கம் (குறிப்பாக கரோனரித் தமனிகள்) மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தி இருதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நோயெதிர்ப்பு அமைப்பு இரத்த நாளங்களைத் தாக்குவதால், வீக்கம் மற்றும் நிணநீர் கணுக்கள், தோல் மற்றும் வாய் ஆகியவற்றில் சிக்கல்கள் ஏற்படுகிறது. காய்ச்சல், சொறி, கை வீக்கம், கண்கள் சிவத்தல், நிணநீர் சுரப்பிகள் வீங்குதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். 1967இல் ஜப்பானில் டோமிசாகு கவாசாகி என்பவரால் முதன்முதலில் இது கண்டறியப்பட்டது.

2. அண்மையில், இந்தியாவின் எந்த மாநிலத்தில் புதிய வகை, ‘மஞ்சள்’ கண்டுபிடிக்கப்பட்டது?

அ. தமிழ்நாடு

ஆ. ஒடிஸா

இ. நாகாலாந்து

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • நாகாலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தில், ‘Curcuma ungmensis’ என்ற புதிய மஞ்சளினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ‘Curcuma’ வகையைச்சேர்ந்தது, இஞ்சி குடும்பத்தின் ஒருபகுதி (Zingiberaceae). Curcuma ungmensis என்பது நிலத்தடி தண்டுகளைக்கொண்ட ஒரு வேர்த்தண்டுக்கிழங்கு மூலிகையாகும். இந்தத் தாவரம் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பூக்கின்றது. இது சாலை மேம்பாடு, கட்டுமானம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ‘Curcuma’ இனமானது இந்தியாவில் சுமார் 40 உள்ளது; இது முதன்மையாக வடகிழக்கு, தெற்கு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது.

3. பெபிகொலம்போ என்பது எந்த இரு விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாகும்?

அ. JAXA மற்றும் ESA

ஆ. NASA மற்றும் ISRO

இ. ISRO மற்றும் ROSCOSMOS

ஈ. NASA மற்றும் CNSA

  • பெபிகொலம்போ விண்கலம் அண்மையில் புதனின் தென்துருவத்தின் முதல் தெளிவான படங்களை வழங்கியது. இந்தத் திட்டம் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத்திட்டமாகும். இத்தாலிய கணிதவியலாளரான கியூசெப் கொலம்போவின் பெயரால் வழங்கப்படும் இது, 2018 அக்.20 அன்று ஏவப்பட்டது. இந்தத் திட்டமானது புதனின் மேற்பரப்பு, கலவை, காந்தப்புலம் மற்றும் ஞாயிறுடனான தொடர்புகளை ஆய்வுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அண்மையில், அருண் கோயல், கீழ்க்காணும் எந்த நாட்டுக்கான இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டார்?

அ. பல்கேரியா

ஆ. கிரேக்கம்

இ. குரோஷியா

ஈ. அல்பேனியா

  • ஓய்வுற்ற இஆப அதிகாரியும், இந்திய முன்னாள் தேர்தல் ஆணையருமான அருண் கோயல், குரோஷியாவுக்கான இந்தியத்தூதராக வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 மார்ச்சில் அவர் ஓய்வுற்றதைத் தொடர்ந்து, பொதுச்சேவையில் அவர் தொடர்ந்து ஆற்றிய பங்களிப்பை இந்தப் புதிய பதவி எடுத்துக்காட்டுகிறது. ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் அவரது விரிவான அனுபவம், இந்தியாவிற்கும் குரோஷியாவிற்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவுகளை வலுப்படுத்த உதவும் என எண்ணப்படுகிறது.

5. அண்மையில், ஆசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. விக்ராந்த் சின்ஹா

. ரந்தீர் சிங்

இ. விஸ்வநாதன் ஆனந்த்

ஈ. அர்ஜுன் கோயல்

  • இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் முக்கியப்பிரமுகரான ரந்தீர் சிங், ஆசிய ஒலிம்பிக் குழுமத்தின் (OCA) 44ஆவது பொதுச்சபையின் முதல் இந்தியத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரந்தீர் சிங்கின் ஆழ்ந்த அனுபவமும் விளையாட்டுப்பின்னணியும் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் உட்பட, OCAஇன் உலகளாவிய பங்கை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. மா நந்தா-சுநந்தா மகோத்சவம் என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஹரியானா

இ. கர்நாடகா

ஈ. மிசோரம்

  • உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் அண்மையில் நைனிடாலில் மா நந்தா-சுநந்தா மகோத்சவத்தைத் தொடக்கி வைத்தார். மக்களை அவர்களின் கலாசார வேர்களுடன் இணைப்பதை இத்திருவிழா வலியுறுத்துகிறது. அல்மோரா, நைனிடால், கோட் அலாங், போவாலி மற்றும் ஜோகர்போன்ற இடங்களில் ஒவ்வொரு செப்டம்பர் மாதத்திலும், குமாவோன் பகுதியில் நந்தாஷ்டமி திருவிழாவின்போது மா நந்தா-சுநந்தா மகோத்சவத்தின்போதும் நந்தா மற்றும் சுநந்தா தெய்வங்களை இத்திருவிழா கௌரவிக்கிறது. கூடுதலாக, செப்.2ஆம் தேதியை அல்பைன் புல்வெளிகளைப் பாதுகாக்கும் நோக்கோடு ‘புக்யால் பாதுகாப்பு நாள்’ என அம்மாநிலம் முதலமைச்சர் அறிவித்தார்.

7. அண்மையில், “உள்நாட்டு வான்போக்குவரத்து தொடர்பான 2ஆவது ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு” நடைபெற்ற இடம் எது?

அ. காத்மாண்டு

ஆ. புது தில்லி

இ. பெய்ஜிங்

ஈ. டோக்கியோ

  • உள்நாட்டு வான்போக்குவரத்து தொடர்பான 2ஆவது ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு புது தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றது. இது பன்னாட்டு சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பு (ICAO) மற்றும் இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தால் இணைந்து நடத்தப்பட்டது. முதல் மாநாடு கடந்த 2018இல் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்தது. இந்தியா 2ஆவது மாநாட்டை 2020ஆம் ஆண்டில் நடத்த முன்வந்தது; ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
  • இந்த மாநாடு இந்தியாவின் வான்போக்குவரத்துத்துறை மாறிவரும் நேரத்தில் வந்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமானச்சந்தையாக, சரக்கு மற்றும் பிராந்திய விமானப்போக்குவரத்துக்கான மையமாக மாறுவதை இந்தியா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. INS மால்பே, INS முல்கி என்பன சார்ந்த வகை எது?

அ. கமோர்டா

ஆ. அபய்

இ. மாஹே

ஈ. சரயு

  • இந்திய கடற்படைக்காக கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கிக்கப்பலைத்தாக்கும் திறன் கொண்ட நான்காவது மற்றும் ஐந்தாவது கப்பல்களான மால்பே மற்றும் முல்கி ஆகியவை கொச்சியில் 2024 செப்.09 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. மாகே வகுப்பைச் சேர்ந்த அக்கப்பல்கள், கடற்படையின் அபய் வகுப்பு கப்பல்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்ணிவெடிகள் இடுதல், துணை மேற்பரப்பு கண்காணிப்பு மற்றும் கடலோர நீரில் தேடுதல் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்காக இந்தக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 78 மீட்டர் நீளம் கொண்ட அவை, 25 நாட்ஸ் வேகத்தில் கடலில் பயணிக்கும் மற்றும் 1,800 கடல் மைல்கள் வரை செல்லும் திறன்கொண்டவை.

9. அண்மையில், அருகிவரும் உயிரினமான நீண்ட ஆமையானது இந்தியாவின் எப்பகுதியில் முதன்முறையாகக் காணப்பட்டது?

அ. ஆரவல்லி மலைத்தொடர்

ஆ. இமயமலை

இ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஈ. வடகிழக்கு

  • நீண்ட ஆமை (Indotestudo elongata) அண்மையில் ஹரியானாவின் டம்டாமா பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரில் ஓர் ஆராய்ச்சி கணக்கெடுப்பின்போது காணப்பட்டது. மஞ்சள்-பழுப்பு நிறத்தில் நடுத்தர அளவில் காணப்படும் இது, தனது ஓட்டில் கரும்புள்ளிகளைக் கொண்டுள்ளது. இனப்பெருக்க காலத்தில், அது அதன் நாசியைச்சுற்றி ஒரு இளஞ் சிவப்பு வளையத்தை உருவாக்குகிறது. மேலும் முதிர்ந்த ஆமைகள் நாசி மற்றும் கண்களைச்சுற்றி இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளன. இது இந்தியாவின் சில பகுதிகள், நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் உட்பட தென் கிழக்காசியா முழுவதும் இலையுதிர் மற்றும் மலைப்பாங்கான பசுமையான காடுகளில் காணப்படுகிறது. அதன் IUCN நிலை ‘அருகிவரும்’ நிலையில் உள்ளது; மேலும் இது CITES பின் இணைப்பு-IIஇல் பட்டியலிடப்பட்டுள்ளது.

10. இந்திய வானிலை ஆய்வுத்துறையால் கீழ்க்காணும் எந்த ஆண்டில், ‘மாவட்ட வேளாண்மை வானிலை ஆய்வு அலகுகள்’ நிறுவப்பட்டது?

அ. 2014

ஆ. 2015

இ. 2018

ஈ. 2020

  • இந்திய வானிலை ஆய்வுத்துறை (IMD) கிராமின் கிரிஷி மௌசம் சேவா (GKMS) திட்டத்தின்கீழ் மாவட்ட வேளாண் வானிலை அலகுகளை (DAMUs) புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. DAMU-கள் முதன்முதலில் 2018இல் IMDஆல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICAR) இணைந்து நிறுவப்பட்டது. வானிலை தரவுகளைப் பயன்படுத்தி துணை மாவட்ட அளவிலான வேளாண் ஆலோசனைகளை வழங்குவதே இதன் இலக்காக இருந்தது.
  • கிருஷி அறிவியல் மையங்களில் அமைந்துள்ள DAMU-க்கள் விதைப்பு, அறுவடை, உரம் மற்றும் நீர்ப்பாசனம் பற்றிய ஆலோசனைகளை உருவாக்கின. இந்த ஆலோசனைகள் வாரத்திற்கு இருமுறை செய்திகள், வாட்ஸ்அப், செய்தித் தாள்கள் மற்றும் நேரில் உழவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அவை விவசாயிகளுக்கு நடவடிக்கைகளைத் திட்டமிட உதவியது மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கியது.

11. அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின் தலைவராக மீண்டும் ஒருமனதாகத் தெரிவானவர் யார்?

அ. தர்மேந்திர பிரதான்

ஆ. JP நட்டா

இ. இராஜ்நாத் சிங்

ஈ. அமித் ஷா

  • அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு அமைப்புகளும் இந்திய மொழிகளில் செயல்படுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் தானாக மொழிபெயர்க்கும் மென்பொருளை அதிகாரப்பூர்வ மொழித்துறை உருவாக்கி வருகிறது. புதிய அரசமைந்த பிறகு குழுவை மீண்டும் அமைப்பதற்கான கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. அமித் ஷா இதற்கு முன்பு 2019 முதல் 2024 வரை இக்குழுவின் தலைவராக இருந்தார்.

12. செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள, ‘பிரதமர் கிசான் மந்தன் யோஜனா (PM-KMY)’இன் முதன்மை நோக்கம் என்ன?

அ. விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் சிரமத்தைக் குறைத்தல்

ஆ. நுண்ணீர் பாசன விரிவாக்கத்திற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு உதவுதல்

இ. சிறு, குறு விவசாயிகளுக்கு முதுமைக் காலத்தில் சமூகப் பாதுகாப்பு வழங்குதல்

ஈ. உள்ளூர் மொழியில் விவசாய சமூகத்திற்கு தகவல் மற்றும் அறிவைப் பரப்புவது

  • பிரதமர் கிசான் மந்தன் யோஜனா (PM-KMY) செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது 2019 செப்.12 அன்று தொடங்கப்பட்டது. இது இந்தியா முழுவதும் நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குகிறது. இத்திட்டம் தன்னார்வ முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும். தகுதியுடைய விவசாயிகளுக்கு அறுபது வயதுக்குப்பிறகு மாதம் `3,000 இதன்கீழ் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஓய்வூதியத்திற்கு மாதாந்திர பங்களிப்பை வழங்குகிறார்கள், நடுவணரசும் அவர்களின் பங்களிப்புக்குச் சமமாக நிதி வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. செய்தித்துளிகள்..

1) உலக அளவில் 46% எண்ம பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.

2) இந்தியாவில் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் 5000 பேருக்கு உரிய பயிற்சி அளித்து, அவர்களை ‘சைபர் கமாண்டோக்களாக’ உருவாக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் கடந்த 2018இல் நிறுவப்பட்டது.

1. What is ‘Kawasaki Disease’?

A. Rare heart disease

B. Plant disease

C. Fungal disease

D. Eye disorder

  • A Bengaluru doctor noted an increase in Kawasaki disease among children after COVID-19’s second wave. Kawasaki disease, or Kawasaki syndrome, mainly affects children under 5 years. It causes fever and inflammation of blood vessels, especially the coronary arteries, leading to heart issues. The immune system attacks blood vessels, causing swelling and problems with lymph nodes, skin, and the mouth. Symptoms include fever, rash, swollen hands, red eyes, and swollen lymph glands. First identified by Tomisaku Kawasaki in Japan in 1967.

2. Recently, a new species of ‘Curcuma’ was discovered in which state of India?

A. Tamil Nadu

B. Odisha

C. Nagaland

D. Arunachal Pradesh

  • Researchers discovered a new species, Curcuma ungmensis, in Nagaland’s Mokokchung district. It belongs to the Curcuma genus, part of the ginger family (Zingiberaceae). Named after Ungma village, where it was found, Curcuma ungmensis is a rhizomatous herb with underground stems. The plant flowers from August to October, with blooms lasting only a day. It faces threats from road development, construction, and natural disasters. The Curcuma genus has about 40 species in India, primarily found in the northeast, south, and the Andaman and Nicobar Islands.

3. BepiColombo is a joint mission between which two space agencies?

A. JAXA and ESA

B. NASA and ISRO

C. ISRO and ROSCOSMOS

D. NASA and CNSA

  • The BepiColombo spacecraft recently provided the first clear images of Mercury’s south pole. This mission is a collaboration between the European Space Agency (ESA) and the Japan Aerospace Exploration Agency (JAXA). Named after Italian mathematician Giuseppe Colombo, it was launched on October 20, 2018. The mission aims to study Mercury’s surface, composition, magnetic field, and solar interactions.

4. Recently, Arun Goel has been appointed as India’s ambassador to which country?

A. Bulgaria

B. Greece

C. Croatia

D. Albania

  • Arun Goel, a retired IAS officer and former Election Commissioner of India, has been appointed as India’s Ambassador to Croatia by the Ministry of External Affairs. Following his retirement in March 2024, this new role highlights his continued contribution to public service. His extensive experience in governance and administration will help strengthen diplomatic relations between India and Croatia, marking an important step in his distinguished career.

5. Recently, who has made history by becoming the first Indian to be elected as the President of the Olympic Council of Asia (OCA)?

A. Vikrant Sinha

B. Randhir Singh

C. Viswanathan Anand

D. Arjun Goel

  • Randhir Singh, a key figure in Indian sports administration, has been elected as the first Indian president of the Olympic Council of Asia (OCA) at its 44th General Assembly. Singh, who has been associated His deep experience and background in sports are expected to drive initiatives to strengthen the OCA’s global role, including preparations for the upcoming Asian Games and other major events.

6. Maa Nanda-Sunanda Mahotsav is celebrated in which state?

A. Uttarakhand

B. Haryana

C. Karnataka

D. Mizoram

  • Uttarakhand Chief Minister recently inaugurated the Maa Nanda-Sunanda Mahotsav, 2024, in Nainital through a virtual event, emphasizing the festival’s role in connecting people with their cultural roots. The Maa Nanda-Sunanda Mahotsav honors the goddesses Nanda and Sunanda during the Nandashtami festival in the Kumaon region, celebrated every September in places like Almora, Nainital, Kot Along, Bhowali, and Johar. Additionally, the CM declared September 2nd as Bugyal Conservation Day to protect alpine meadows.’

7. Recently, where was the “2nd Asia-Pacific Ministerial Conference on Civil Aviation” held?

A. Kathmandu

B. New Delhi

C. Beijing

D. Tokyo

  • The 2nd Asia Pacific Ministerial Conference on Civil Aviation was held at Bharat Mandapam, New Delhi. It was co-hosted by the International Civil Aviation Organization (ICAO) and the Ministry of Civil Aviation, Government of India. The first conference took place in 2018 in Beijing, China. India had offered to host the second conference in 2020, but it was postponed due to the COVID-19 pandemic. This conference came at a time when India’s aviation industry was transforming. As the world’s third-largest domestic aviation market, India aimed to become a hub for MRO services, cargo, and regional aviation.

8. INS Malpe and INS Mulki belongs to which type of class?

A. Kamorta

B. Abhay

C. Mahe

D. Saryu

  • INS Malpe and INS Mulki, two anti-submarine warfare shallow watercraft vessels, were launched by the Indian Navy at Cochin Shipyard. These are the fourth and fifth indigenously built vessels of this type. They belong to the Mahe Class and will replace the Navy’s Abhay Class ASW Corvettes. The vessels are designed for anti-submarine operations, mine-laying, sub-surface surveillance, and search and rescue in coastal waters. They are 78 meters long, can reach speeds of 25 knots, and have an endurance of 1,800 nautical miles.

9. Recently, a critically endangered elongated tortoise was spotted for the first time in which region of India?

A. Aravallis

B. Himalayas

C. Western Ghats

D. Northeastern

  • The elongated tortoise (Indotestudo elongata) was recently spotted in Haryana’s Damdama area during a research survey in the Aravallis. It is medium-sized with a yellowish-brown or olive shell and black blotches on each scute. During the breeding season, it develops a pink ring around its nostrils, and mature individuals show pinkish color around the nostrils and eyes.
  • It is found in Sal deciduous and hilly evergreen forests across Southeast Asia, including parts of India, Nepal, Bhutan, and Bangladesh. Its IUCN status is Critically Endangered, and it is listed in CITES Appendix II.

10. District Agro-Meteorology Units were established by the India Meteorological Department in which year?

A. 2014

B. 2015

C. 2018

D. 2020

  • The India Meteorological Department (IMD) plans to revive District Agro-Meteorology Units (DAMUs) under the Gramin Krishi Mausam Sewa (GKMS) scheme. DAMUs were first established in 2018 by IMD in collaboration with the Indian Council of Agricultural Research (ICAR). The goal was to provide sub-district-level agricultural advisories using weather data.
  • Located in Krishi Vigyan Kendras (KVKs), DAMUs prepared advisories on sowing, harvesting, fertilizers, and irrigation. These advisories were shared with farmers twice a week via messages, WhatsApp, newspapers, and in-person. They helped farmers plan activities and gave early warnings for extreme weather events.

11. Recently, who has been unanimously re-elected as the Chairperson of the Parliamentary Committee on Official Language?

A. Dharmendra Pradhan

B. JP Nadda

C. Rajnath Singh

D. Amit Shah

  • Home Minister Amit Shah was unanimously re-elected as Chairperson of the Parliamentary Committee on Official Language. The government aims for all government systems to operate in Indian languages by 2047. The Department of Official Language is developing software to automatically translate all languages of the Eighth Schedule. A meeting was held in New Delhi to reconstitute the committee after the formation of the new government. Amit Shah previously served as the committee’s Chairperson from 2019 to 2024.

12. What is the primary objective of ‘Pradhan Mantri Kisan Maandhan Yojana (PM-KMY)’, recently completed 5 years of implementation?

A. To modernize agriculture and reducing the drudgery of farming operations

B. To facilitate resource mobilization for the Micro Irrigation expansion

C. To provide social security to Small and Marginal Farmers in their old age

D. To disseminate information and knowledge to the farming community in local language

  • The Pradhan Mantri Kisan Maandhan Yojana (PM-KMY) has completed five successful years. It was launched on September 12, 2019. It provides social security to land-holding small and marginal farmers across India. The scheme is a voluntary old-age pension program offering Rs. 3,000 per month to eligible farmers after they turn sixty. Farmers contribute monthly to the pension fund, with the central government matching their contributions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!