Tnpsc Current Affairs in Tamil & English – 10th July 2024
1. தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. கரிம வெளியேற்றத்தை 50% அளவுக்குக் குறைப்பது
ஆ. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் வழித்தோன்றல்களை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுதல்
இ. மின்சார வாகன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது
ஈ. சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிப்பது
- 2023 ஜனவரி.04 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் நிதியுதவி செய்வதற்கான வழிகாட்டுதல்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டது. பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இது. உள்நாட்டு மின்னாற்பகுப்பு உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான நிதிச்சலுகைகள், சோதனைத்திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன் மையங்களின் மேம்பாடு, R&Dக்கான உத்திசார் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு கூட்டாண்மை (SHIP) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இதன் முக்கிய கூறுகளில் அடங்கும்.
2. ‘அபோபிஸ் – Apophis’ என்றால் என்ன?
அ. சிறுகோள்
ஆ. கருந்துளை
இ. நீர்மூழ்கிக்கப்பல்
ஈ. ஆக்கிரமிப்பு களை
- கோள் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்காக பூமியிலிருந்து 32,000 கிமீ தொலைவில் உள்ள, ‘அபோபிஸ்’ என்ற சிறுகோளை 2029ஆம் ஆண்டில் ஆய்வுசெய்ய திட்டமிட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டு சிறுகோள் நாளில் ISRO தலைவர் அறிவித்தார். 2004இல் கண்டுபிடிக்கப்பட்ட, ‘அபோபிஸ்’ என்பது பூமிக்கருகில் உள்ள ஒரு பொருளாகும். ஒரு காலத்தில் இது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. கடந்த 2021 மார்ச்சில் மேற்கொள்ளப்பட்ட ரேடார் ஆய்வுகளின்படி, குறைந்தது அடுத்த நூற்றாண்டு வரை அபோபிஸால் பூமிக்கு எந்தவொரு அபாயம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
3. அண்மையில், எந்த மாநிலத்தின் மைக்கா சுரங்கங்களை குழந்தைத் தொழிலாளர் இல்லாத சுரங்கமாக தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) அறிவித்தது?
அ. மத்திய பிரதேசம்
ஆ. ஜார்கண்ட்
இ. ஒடிசா
ஈ. குஜராத்
- தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது (NCPCR) 2024 ஜூலை.05 அன்று ஜார்கண்டின் மைக்கா சுரங்கங்களை குழந்தைத் தொழிலாளர் இல்லாத சுரங்கமாக அறிவித்தது. மாநில மற்றும் மத்திய அரசுகள், சிவில் சமூகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த முயற்சி 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுமார் 20,000 குழந்தைகள் முன்பு மைக்கா சுரங்கத்தில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பின்னர் மறுவாழ்வு அளிக்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
4. காசிரங்கா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
அ. நாகாலாந்து
ஆ. மணிப்பூர்
இ. மேற்கு வங்காளம்
ஈ. அஸ்ஸாம்
- காசிரங்கா தேசியப்பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனியான பெண் கங்கைநீர் முதலை காணப்பட்டது. கங்கைநீர் முதலைகள் அல்லது Gavialis gangeticus, ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் பரவலாக வாழ்ந்து வந்த நன்னீர் முதலைகளாகும். ஆனால் இப்போது முதன்மையாக நேபாளம் மற்றும் வட இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. மிகவும் அருகிய இனமான இவற்றுள் ஆண் முதலை 20 அடி வரையும், பெண் முதலை 15 அடி வரையும் வளர்கின்றது.
5. கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணை அமைந்துள்ள மாநிலம் எது?
அ. மகாராஷ்டிரா
ஆ. கர்நாடகா
இ. மத்திய பிரதேசம்
ஈ. தெலுங்கானா
- காவேரியாற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் (KRS) நீர்த்தேக்கம் அண்மையில் 100 அடியைத் தாண்டி அதிகபட்சமாக 124.80 அடியாக உயர்ந்தது. கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவில் அமைந்துள்ள புவியீர்ப்பு அணையான இது 1911-1931க்கு இடையில் கட்டப்பட்டது. மகாராஜா நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் பெயரால் அழைக்கப்படுகின்ற இந்த அணை சர் M விஸ்வேஸ்வரயாவால் வடிவமைக்கப்பட்டதாகும். நீர்ப்பாசனம் வழங்கல், நீர்மின்னுற்பத்தி மற்றும் வறட்சி தணிப்பு ஆகியவை இதன் முதன்மை நோக்கங்கள் ஆகும். 130 சதுர கிமீ இந்த நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
6. SEHER திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. சுகாதார சேவைகளை மேம்படுத்த
ஆ. பெண் தொழில்முனைவோர் மத்தியில் நிதிசார் கல்வியறிவு மற்றும் வணிகத்திறன்களை மேம்படுத்துதல்
இ. விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்க
ஈ. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்
- NITI ஆயோக்கின் பெண் தொழில்முனைவோர் திட்ட தளமும் டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனமும், ‘SEHER’ என்ற திட்டத்தைத்தொடங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள பெண்தொழில்முனைவோருக்கு நிதிதொடர்பான தகவல்களை வழங்குதல், வணிகத்திறன்களை அதிகரித்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- பெண் தொழில்முனைவோர் திட்ட தளம் (WEP) என்பது NITI ஆயோகால் நிறுவப்பட்ட ஒரு பொது-தனியார் கூட்டு தளமாகும். இது இந்தியாவில் பெண்தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவதை நோக்கம் எனக்கொண்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உதயம் பதிவு தளத்தின் தகவல்படி, இந்தியாவில் 63 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன.
7. கலம்காரி கலை வடிவத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. ஆந்திர பிரதேசம்
ஆ. உத்தர பிரதேசம்
இ. அஸ்ஸாம்
ஈ. நாகாலாந்து
- ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த ஓவியக்கலையான கலம்காரி கலை, இப்போது விசைத்தறிகள் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருள் செலவுகள் காரணமாக நலிவடைந்து வருகிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் கலம்காரி கலை, 16-17ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் குதுப் ஷாஹிஸின்கீழ் திலாங் பகுதியில் (இப்போது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா) உருவானது. “கலம்காரி” என்ற சொல் “கலம்” (பேனா) மற்றும் “கரி” (கைவினைத்திறன்) எனப் பொருள்படுகிறது. இது இரண்டு தனித்துவமான பாணிகளைக் கொண்டுள்ளது: அவை திருக்காளத்தி மற்றும் பெத்தண்ணா.
8. பிரான்சு அரசாங்கத்துடன் இணைந்து இந்தோ-பிரெஞ்சு கல்லீரல் & வளர்சிதைமாற்ற நோய் வலையமைப்பைத் (InFLiMeN) தொடங்கிய அமைச்சகம் எது?
அ. புவி அறிவியல் அமைச்சகம்
ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
இ. வெளியுறவு அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தோ-பிரெஞ்சு கல்லீரல் மற்றும் வளர்சிதைமாற்ற நோய் வலையமைப்பை (InFLiMeN) பிரெஞ்சு அரசாங்கத்துடன் இணைந்து தொடங்கியது. இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் & பிலியரி சயின்சஸ், இன்ஸ்டிடியூட் ஆஃப் தில்லியில் அமைந்துள்ள InFLiMeN, கல்லீரல் மற்றும் வளர்சிதைமாற்றக் கோளாறுகளை எதிர்த்துப் போராடுவதற்கான அறிவியல் பரிமாற்றங்கள் & கூட்டுத்திட்டங்களை ஊக்குவிக்கும் ஒரு கூட்டு ஆராய்ச்சித் திட்டமாகும். குறிப்பாக, மூன்றில் ஒரு இந்தியருக்கு கொழுப்புக் கல்லீரல் உள்ளது; இது வகை-2 நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும். இச்சிக்கலைத் தீர்ப்பதில் InFLiMeN செயலாற்றுகிறது.
9. உலகின் முதல் அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (CNG) இயங்கும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
அ. யமஹா
ஆ. பஜாஜ் ஆட்டோ
இ. ஹீரோ
ஈ. டி வி எஸ்
- பஜாஜ் ஆட்டோ நிறுவனமானது புனேயில் CNGஇல் இயங்கும் உலகின் முதல் இருசக்கர வாகனத்தை, ‘ஃப்ரீடம் 125’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. சுமார் `95,000 விலையில் விற்கப்படும் இந்த வாகனம், மோட்டார் சைக்கிள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெட்ரோலை நம்பியிருத்தலிலிருந்து இனி விடுதலை என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி இராஜீவ் பஜாஜ் சுட்டிக்காட்டினார். இது 125 cc திறன்கொண்ட எஞ்சினைக் கொண்டுள்ளது.
10. ஒவ்வோர் ஆண்டும் விலங்குவழி பரவும் நோய்கள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. ஜூலை.06
ஆ. ஆகஸ்ட்.16
இ. ஆகஸ்ட்.06
ஈ. ஜூலை.16
- 1885ஆம் ஆண்டு லூயிஸ் பாஸ்டரால் கண்டுபிடிக்கப்பட்ட ரேபிஸ் தடுப்பூசியை நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் ஜூலை.6 அன்று உலக விலங்குவழி பரவும் நோய்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள்போன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படும் இந்நோய்கள், நேரடி தொடர்பு, அசுத்தமான உணவு அல்லது நீர் அல்லது கொசுக்கள் போன்ற கொணரிகள்மூலம் பரவலாம். “One World, One Health: Prevent Zoonoses” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
11. அண்மையில், இந்திய அரசாங்கம், கீழ்க்காணும் எந்தெந்தப்பொருட்கள் இந்திய தரநிலைகளின் பணியகத்துடன் (BIS) ஒத்திசைவதைக் கட்டாயமாக்கியுள்ளது?
அ. துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியத்தாலான சமையல் உபகரணங்கள்
ஆ. பித்தளையாலான விளிம்புப்பட்டைகள்
இ. நெகிழிப்பொருட்கள்
ஈ. மரத்தாலான கைவினைப்பொருட்கள்
- சமையல் உபகரணங்கள்மீது ISI முத்திரை இடம்பெறுவதை கட்டாயமாக்கி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான துறை தரக்கட்டுப்பாட்டு ஆணையை அண்மையில் பிறப்பித்தது. பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் BIS சார்பில் இந்த ISI குறியீடு மேம்படுத்தப்பட்டுள்ளது. பாத்திரம் மற்றும் உபகரணங்களின் வடிவமைப்பு விவரக்குறிப்பு, செயல்திறன் அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தரக்குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆணையை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று BIS தெரிவித்துள்ளது.
12. “அயன்-டோம்” ஆகாஷ் சர்ஃபேஸ்-டூ ஏர் ஏவுகணையானது எந்த அமைப்பால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது?
அ. ISRO
ஆ. HAL
இ. DRDO
ஈ. BHEL
- இந்திய “அயன்-டோம்” ஆகாஷ் என்ற தரையிலிருந்து வானிலக்கைத் தாக்கும் ஏவுகணையை பிரேசில் நாடு கொள்முதல் செய்யவுள்ளது. பிரேசிலின் கொள்முதலுக்கான பட்டியலில் சீனாவின் ஸ்கை டிராகன்-50உம் உள்ளது. இந்தியாவின் DRDOஆல் உருவாக்கப்பட்டு மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிட்ஆல் தயாரிக்கப்பட்ட, ‘ஆகாஷ்’ என்ற தரையிலிருந்து வானிலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை, போர் விமானங்கள் மற்றும் எறிகணைகள் உள்ளிட்ட வான்சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது. இந்திய இராணுவம் மற்றும் வான்படையுடன் இணைந்து செயல்படுகிற இந்த ஏவுகணை இலக்கு வழிகாட்டலுக்காக, ‘இராஜேந்திரா’ என்னும் ரேடாரையும் தன்வசம் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இருதரப்பு வர்த்தகத்தை `8.35 லட்சம் கோடியாக உயர்த்த உடன்பாடு: இந்தியா-ரஷியா கூட்டறிக்கை.
2 நாள் பயணமாக ரஷியா சென்ற பிரதமர் நரேந்திர மோதி, ரஷிய அதிபர் புதினுடன் இருநாடுகளிடையேயான 22ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது, முதலீடுகளை ஊக்குவிப்பது, வர்த்தகத்துக்கு அந்தந்த நாட்டு ரூபாய்களை பயன்படுத்துவது, எரிசக்தி முதல் வேளாண் துறைகள் வரையிலும் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன்மூலம் வரும் 2030-க்குள் இந்தியா-ரஷியா இடையேயான வர்த்தகத்தை `8,35,037 கோடியாக ($100 பில்லியன்) உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்போன்ற பொருள்களுக்கு இந்திய ரூபாயில் பணஞ்செலுத்தவும், அதுபோல, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ரஷியாவின் ரூபெல்லில் பணம் செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
2. கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு!
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மருங்கூரில் வாழ்விடப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இராசராசன் காலத்துச் செம்புக்காசு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணாலான வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்டிரும் சிறுவர் சிறுமியரும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். இத்தகைய விளையாட்டுகள், ‘பாண்டி விளையாட்டு’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.
3. கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றும் குழிகள், பானை விளிம்புகள் கண்டெடுப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள், இரு பானைகளின் விளிம்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது அங்கு பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. கண்ணாடிப்பாசிமணிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஆகியவையும் கண்டறியப்பட்டன.
4. தமிழ்நாடு மக்கள் நலவாழ்வுத் துறை திட்டங்கள்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது. 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுச் சுகாதார அமைப்புமூலம் பல்வேறு பொது சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
காப்பீட்டுத்திட்டம்: ஏழை மக்களுக்காக 2009ஆம் ஆண்டு ஜூலை.23ஆம் தேதி காப்பீட்டு திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி தொடங்கினார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் தொடங்கியது முதல் கடந்த ஜூன் வரை `13,625 கோடி மதிப்பீட்டில் செலவில், 1.4 கோடி மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மொத்த பயனாளிகளில் 4.32 மில்லியன் மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர்சிகிச்சைகள் பெற்றுள்ளனர்.
2008 செப்.15ஆம் தேதி 1,353 அவசர ஊர்திகளுடன் 108 அவசரகால பராமரிப்பு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் எந்த இடத்திலிருந்தாலும், கட்டுப்பாட்டறையை தொடர்புகொண்ட 11 நிமிஷங்கள் 23 விநாடிகளுக்குள் அவசர ஊர்தி அந்த இடத்துக்கு சென்றடையும் வகையில் அத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம் திட்டம்: சாலைப்போக்குவரத்து விபத்துகளுக்கு இலவச அவசர சிகிச்சை வழங்கும் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டம் 2023 டிச.18ஆம் தேதி தொடங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. உறுப்புதானம் செய்யப்பட்ட உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படுகிறது.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் 2021 ஆக.5 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மக்களுக்கு தேவையான மருந்துகள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மக்களைத்தேடி ஆய்வகம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், தொழிலாளரைத்தேடி மருத்துவம் என்னும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
5. தேசிய காசநோய் ஒழிப்புத்திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதன் நியமனம்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகராக Dr செளமியா சுவாமிநாதன் சமூகநலன் அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளார். Dr செளமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) தலைமை இயக்குநராகவும் இதற்குமுன்பு பணியாற்றியுள்ளார்.
1. What is the primary objective of the National Green Hydrogen Mission?
A. To reduce carbon emissions by 50%
B. To make India a global hub for producing, utilising, and exporting Green Hydrogen and its derivatives
C. To develop electric vehicles infrastructure
D. To promote the use of solar energy
- The Ministry of New and Renewable Energy issued guidelines for funding under the National Green Hydrogen Mission, approved by the Union Cabinet on January 4, 2023. The mission aims to make India a global hub for producing, utilizing, and exporting green hydrogen. Key components include financial incentives for domestic electrolyser manufacturing and green hydrogen production, pilot projects, development of Green Hydrogen Hubs, the Strategic Hydrogen Innovation Partnership (SHIP) for R&D, and a coordinated skill development program.
2. What is ‘Apophis’?
A. Asteroid
B. Black hole
C. Submarine
D. Invasive weed
- At Asteroid Day 2024, ISRO Chairperson announced plans to study asteroid, ‘Apophis’ in 2029 when it comes within 32,000 km of Earth to enhance planetary defense efforts. Discovered in 2004, Apophis is a near-Earth object once considered highly hazardous. However, radar observations in March 2021 confirmed there is no risk of Apophis impacting Earth for at least the next century.
3. Recently, the National Commission for Protection of Child Rights (NCPCR) declared the mica mines of which state child-labor-free?
A. Madhya Pradesh
B. Jharkhand
C. Odisha
D. Gujarat
- The National Commission for Protection of Child Rights (NCPCR) declared Jharkhand’s mica mines child labor-free on July 5, 2024. The initiative began 20 years ago, involving state and central governments, civil society, and local authorities. Around 20,000 children were previously employed in mica mining but have since been rehabilitated and enrolled in schools.
4. Kaziranga National Park is located in which state?
A. Nagaland
B. Manipur
C. West Bengal
D. Assam
- A lone female gharial has been spotted for over three years in Kaziranga National Park and Tiger Reserve. Gharials, or Gavialis gangeticus, are freshwater crocodiles once widespread across South Asia but now found mainly in fragmented populations in Nepal and northern India. They are critically endangered, with a global population reduced to a few hundred. Males can reach 20 feet, while females grow up to 15 feet.
5. Krishna Raja Sagara (KRS) Dam is located in which state?
A. Maharashtra
B. Karnataka
C. Madhya Pradesh
D. Telangana
- The Krishnaraja Sagar (KRS) reservoir across the Cauvery River recently breached the 100-foot mark, with a maximum level of 124.80 feet. Located in Mandya, Karnataka, the gravity dam was constructed between 1911 and 1931. Named after Maharaja Krishna Raja Wadiyar IV and designed by Sir M. Visvesvaraya, its primary purposes are irrigation, hydroelectric power, and drought mitigation. The reservoir covers 130 sq. km.
6. What is the primary objective of the SEHER programme?
A. To improve health care services
B. To enhance financial literacy and business skills among women entrepreneurs
C. To promote sports activities
D. To develop new technologies
- NITI Aayog’s Women Entrepreneurship Platform (WEP) and TransUnion CIBIL have launched the SEHER programme to enhance financial literacy and business skills among women entrepreneurs. This initiative aims to improve access to financial tools for business growth and job creation, supporting WEP’s goal of improving financing for India’s 63 million MSMEs. Launched in 2018, WEP supports women entrepreneurs through promotion, finance access, market linkages, training, mentoring, and business development services.
7. Kalamkari Art Form is related to which state?
A. Andhra Pradesh
B. Uttar Pradesh
C. Assam
D. Nagaland
- Kalamkari art, a once-flourishing hand-painted or block-printed cotton textile tradition, now struggles due to power looms and rising raw material costs. Practiced in Andhra Pradesh, Kalamkari originated in the Tilang region (now Andhra Pradesh and Telangana) during the 16-17th century under the Qutb Shahis of Golconda. The term “Kalamkari” combines “Kalam” (pen) and “Kari” (craftsmanship). It features two distinct styles: Srikalahasti and Pedana.
8. Which ministry launched Indo-French Liver and Metabolic Disease Network (InFLiMeN) in collaboration with Government of France?
A. Ministry of Earth Sciences
B. Ministry of Science and Technology
C. Ministry of External Affairs
D. Ministry of Home Affairs
- The Ministry of Science and Technology launched the Indo-French Liver and Metabolic Disease Network (InFLiMeN) with the French government. InFLiMeN, based at the Institute of Liver and Biliary Sciences in New Delhi, is a joint research program promoting scientific exchanges and collaborative projects to combat liver and metabolic disorders. Notably, every third Indian has fatty liver, which precedes Type 2 Diabetes, highlighting InFLiMeN’s significance in addressing this issue.
9. Which company has recently launched the world’s first compressed natural gas (CNG)-powered two-wheeler?
A. Yamaha
B. Bajaj Auto
C. Hero
D. TVS
- Bajaj Auto launched the world’s first CNG-powered two-wheeler, the Freedom 125, in Pune. Priced at around Rs 95,000, this entry-level vehicle aims to revolutionize the motorcycle market. CEO Rajiv Bajaj highlighted its freedom from petrol reliance. It has a 125cc engine.
10. Which day is observed as World Zoonoses Day every year?
A. July.06
B. August.16
C. August.06
D. July.16
- World Zoonoses Day, observed on 6 July each year, commemorates Louis Pasteur’s first rabies vaccine administered in 1885. It raises awareness about diseases transmissible between animals and humans, known as zoonoses. These diseases, caused by pathogens like viruses, bacteria, and parasites, can spread through direct contact, contaminated food or water, or vectors like mosquitoes. The 2024 theme, “One World, One Health: Prevent Zoonoses,” underscores the global effort needed to break transmission cycles and prevent future pandemics.
11. Recently, the Government of India has mandated conformity to the Bureau of Indian Standards (BIS) for which materials?
A. Stainless steel and Aluminium utensils
B. Brass flanges
C. Plastic products
D. Wooden Handicrafts
- The Government of India recently mandated that stainless steel and aluminum utensils must adhere to Bureau of Indian Standards (BIS) specifications. This move aims to improve kitchen safety, quality, and efficiency. Issued by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) on March 14, 2024, the Quality Control Order requires the ISI mark on these utensils, with non-compliance subject to penalties.
12. “Iron-Dome” Akash Surface-to-Air Missile (SAM), recently seen in news, was indigenously designed and developed by which organization?
A. ISRO
B. HAL
C. DRDO
D. BHEL
- The Indian “Iron-Dome” Akash Surface-to-Air Missile (SAM) is competing with China’s Sky Dragon-50 for an order from Brazil. Developed by India’s DRDO and produced by Bharat Dynamics Ltd, Akash SAM defends against air threats, including fighter jets and ballistic missiles. It operates with the Indian Army and Air Force, featuring a Rajendra radar for target guidance.