Tnpsc Current Affairs in Tamil & English – 10th & 11th October 2024
1. அக்.04-10 வரை கொண்டாடப்பட்ட, “2024 – உலக விண்வெளி வாரத்துக்கான” கருப்பொருள் என்ன?
அ. Space and Climate Change
ஆ. Space and Sustainability
இ. Women in Space
ஈ. The Moon: Gateway to the Stars
- உலக விண்வெளி வாரமானது 2024 அக்.04-10 வரை கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இது ஐநா பொதுச் சபையின் கருப்பொருளைப் பின்பற்றி கொண்டாடப்படுகிறது. “விண்வெளி மற்றும் தட்பவெப்பநிலைமாற்றம்” என்பது நடப்பு 2024இல் கடைப்பிடிக்கப்பட்ட உலக விண்வெளி வாரத்துக்கான கருப்பொருளாகும். இக்கருப்பொருள் தீவிர வானிலை மற்றும் தட்பவெப்பநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது. பூமியின் தட்பவெப்பநிலைபற்றிய நமது புரிதலையும் நிர்வாகத்தையும் விண்வெளி ஆய்வு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப்பற்றி மக்களுக்குக் கற்பித்தல் மற்றும் ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. 2024ஆம் ஆண்டுக்கான பல்லுயிர் பெருக்கத்திற்கான, ‘மிடோரி பரிசு’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
அ. வேரா வோரோனோவா மற்றும் யசபெல் அகஸ்டினா கால்டெரோன் கார்லோஸ்
ஆ. ஜேன் குடால் மற்றும் டேவிட் அட்டன்பரோ
இ. அசாத் செர்ஹால் மற்றும் ஆல்ஃபிரட் ஓட்டெங்-யெபோவா
ஈ. கேத்தி மெக்கின்னன் மற்றும் கிரேட்டா துன்பெர்க்
- 2024 – பல்லுயிர் பெருக்கத்திற்கான மிடோரி பரிசு கஜகஸ்தானைச் சேர்ந்த வேரா வொரோனோவா மற்றும் பெருவைச் சேர்ந்த யசபெல் அகஸ்டினா கால்டெரோன் கார்லோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரியல் பன்முகத்தன்மைக்கான பேரவையுடன் இணைந்து AEON சுற்றுச்சூழல் அறக்கட்டளையால் இப்பரிசு நிறுவப்பட்டது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வளங்குன்றா தன்மைக்கு தனிநபர்கள் ஆற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை இது அங்கீகரிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது.
3. அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த வனவிலங்கு பூங்காவில் ஓர் அரிய பழுப்புநிற கண்குத்திப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது?
அ. துத்வா தேசியப்பூங்கா
ஆ. ஹஸ்தினாபூர் வனவிலங்கு சரணாலயம்
இ. கிஷன்பூர் சரணாலயம்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- ஓர் அண்மைய தகவல்களின்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள துத்வா தேசியப்பூங்காவில் ஓர் அரிய பழுப்புநிற கண்குத்திப்பாம்பு தென்பட்டது. துத்வா தேசியப்பூங்காவின் வரலாற்றில் அல்லது உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஓர் இனமாக இது வெளிப்பட்டது. 2019இல் அரிதான செம்பவளநிற ஓலைப்பாம்பு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது, துத்வாவில் கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது குறிப்பிடத்தக்க ஊர்வன கண்டுபிடிப்பு ஆகும்.
4. எந்தெந்த நாடுகளின் முச்சந்திக்கு அருகில் லிபுலேக் கணவாய் அமைந்துள்ளது?
அ. இந்தியா, மியான்மர் மற்றும் வங்காளதேசம்
ஆ. இந்தியா, நேபாளம் மற்றும் சீனா
இ. இந்தியா, பூடான் மற்றும் சீனா
ஈ. சீனா, பூட்டான் மற்றும் நேபாளம்
- புனித கைலாய சிகரத்தினை யாத்ரீகர்கள் அண்மையில் இந்திய எல்லையில் உள்ள பழைய லிபுலேக் கணவாயில் இருந்து தரிசித்தனர். லிபுலேக் கணவாய் என்பது உத்தரகாண்டில் உள்ள ஓர் உயரமான கணவாய் ஆகும்; இது இந்தியா, நேபாளம் மற்றும் சீனாவின் முச்சந்திக்கருகில், 5,334 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது உத்தரகாண்ட் மாநிலத்தை திபெத்துடன் இணைப்பதோடு இமயமலைக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது. இது பித்தோராகரில் உள்ள வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 1992இல் சீனாவுடனான வர்த்தகத்திற்காக இது திறக்கப்பட்டது. கைலாய மானசரோவர் யாத்திரையின் ஒருபகுதியான இது, சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் கைலாய மலையாகும்.
5. WHOஇன் தென்கிழக்காசியாவிற்கான பிராந்தியக்குழுவின் 77ஆவது அமர்வின் தலைவராகத் தெரிவானவர் யார்?
அ. இராஜ்நாத் சிங்
ஆ. JP நட்டா
இ. அனுப்ரியா பட்டேல்
ஈ. ஜாதவ் பிரதாப்ராவ்
- மத்திய சுகாதார அமைச்சர் JP நட்டா உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசியாவிற்கான பிராந்தியக்குழுவின் 77ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழு தென்கிழக்காசிய பிராந்தியத்தில் WHOஇன் சுகாதாரக்கொள்கைகளை வடிவமைக்கிறது. புது தில்லியில் தொடங்கிய 3 நாள் அமர்வில், வங்கதேசம், இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்றனர். பொதுச்சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் முக்கிய தொற்றுநோயியல் மற்றும் மக்கள்தொகைசார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.
6. பெருவில் நடந்த ISSF ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?
அ. 18
ஆ. 20
இ. 24
ஈ. 30
- பெருவில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய துப்பாக்கிச்சுடும் வீரர்கள் 13 தங்கம், 3 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 24 பதக்கங்களை வென்றனர். இத்தாலி இரண்டாவது இடத்தையும், நார்வே மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இறுதிநாளில், ஆடவர் 50 மீ பிஸ்டல் பிரிவில் தீபக் தலால், கமல்ஜீத் மற்றும் இராஜ் சந்திரா தங்கப்பதக்கம் வென்றனர். அடுத்த முக்கிய நிகழ்வான ISSF உலகக்கோப்பை இறுதிப்போட்டி புது தில்லியில் அக்.13-18 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
7. அண்மையில் தனது ஓய்வை அறிவித்த தீபா கர்மாகருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. சீருடற்பயிற்சி
ஆ. பூப்பந்து
இ. ஹாக்கி
ஈ. டென்னிஸ்
- ஒலிம்பிக் வீராங்கனையும் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான தீபா கர்மாகர் சீருடற் பயிற்சியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்ட் இவர்தான். அவர், 2016 – ரியோ ஒலிம்பிக்கில் புரோடுனோவா வால்ட் விளையாடி பதக்கத்தை தவறவிட்டார். 2014 – காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2018 – துர்கியே உலகக்கோப்பையில் தங்கமும் வென்றார் தீபா கர்மாகர். 2024ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்த ஆசிய மகளிர் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார்.
8. மைக்ரோ RNAஐக் கண்டுபிடித்ததற்காக, 2024ஆம் ஆண்டு உடலியல் (அ) மருத்துவத்துக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
அ. ஹான்ஸ் கிளெவர்ஸ் மற்றும் எரிக் டோபோல்
ஆ. விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன்
இ. ஸ்டூவர்ட் ஓர்கின் மற்றும் பீட்டர் பார்ன்ஸ்
ஈ. பால் ரிட்கர் மற்றும் பிரான்சிஸ் காலின்ஸ்
- 2024ஆம் ஆண்டுக்கான உடலியல் (அ) மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவியலாளர்கள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNAஇன் கண்டுபிடிப்பு மற்றும் படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறைக்குப் பிந்தைய அதன் பங்கிற்காக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர். மரபணு செயல்பாட்டைக் கட்டுப்படுத்த மைக்ரோ RNA முக்கியமானது. உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களின் கண்டுபிடிப்பு இன்றியமையாதது என்று நோபல் அவை கூறியுள்ளது. வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனாக்களைப் (சுமார் $1.1 மில்லியன்) பெறுவார்கள்.
9. எந்த ஆற்றின்மீது ஹிராகுட் அணை கட்டப்பட்டுள்ளது?
அ. நர்மதை
ஆ. கோதாவரி
இ. கிருஷ்ணா
ஈ. மகாநதி
- கிழக்கு இந்தியாவின் முக்கிய திட்டமான ஹிராகுட் அணையுடன் இணைக்கப்பட்டுள்ள கால்வாய் வலையமைப்பு புதுப்பிக்கப்படவுள்ளது. ஹிராகுட் அணை இந்தியாவின் மிகநீளமான அணை மற்றும் உலகின் மிகநீளமான மண் அணையாகும்; இதன் நீளம் 25.79 கிமீ ஆகும். இது மகாநதி ஆற்றின் குறுக்கே, ஒடிஸாவின் சம்பல்பூருக்கு மேல் 15 கிமீ தொலைவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 746 சதுர கிமீ பரப்பளவில் ஆசியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரியான ஹிராகுட் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. 1957இல் தொடங்கப்பட்ட இது, விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவின் முதல் மிகப்பெரிய பல்நோக்கு ஆற்றுப்பள்ளத்தாக்கு திட்டமாகும்.
10. 2024 – இந்திய வான்படை நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
அ. அக்டோபர்.08
ஆ. அக்டோபர்.09
இ. அக்டோபர்.10
ஈ. அக்டோபர்.11
- ஒவ்வோர் ஆண்டும் அக்.08 அன்று நாட்டிற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்கள் & விமானிகளை கௌரவிக்கும் வகையில், இந்திய வான்படை நாளை இந்தியா கடைப்பிடிக்கிறது. இந்த ஆண்டு, இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில் இந்த நாளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், “பாரதிய வாயுசேனா: சக்ஷம், சஷக்த் ஔர் ஆத்மநிர்பர் – Potent, Powerful, and Self-Reliant” என்பதாகும்.
11. கஜகஸ்தான் தனது முதல் அணுமின் நிலையத்தை கீழ்க்காணும் எந்த ஏரிக்கு அருகில் நிறுவுகிறது?
அ. அலகோல் ஏரி
ஆ. லெமூரியா ஏரி
இ. பால்காஷ் ஏரி
ஈ. கிரைவ் ஏரி
- உலகின் முன்னணி யுரேனியம் உற்பத்தியாளரான கஜகஸ்தான், ஆற்றல் திறனை அதிகரிக்க தனது முதல் அணு மின் நிலையத்தை உருவாக்க பரிசீலித்து வருகிறது. பால்காஷ் ஏரிக்கு அருகில் உள்ள இடம், கடந்த சோவியத் கால அணுசக்தி சோதனைகள் காரணமாக மில்லியன் கணக்கானவர்களை கதிர்வீச்சுக்கு ஆளாக்கியதன் காரணமாக குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
12. அண்மையில் ஒடிஸாவில், கீழ்க்காணும் எந்த அரிய வகை சிறுத்தை இனம் தென்பட்டது?
அ. பனிச்சிறுத்தை
ஆ. கருஞ்சிறுத்தை
இ. அரேபிய சிறுத்தை
ஈ. ஜாவான் சிறுத்தை
- அனைத்து ஒடிsaa சிறுத்தை மதிப்பீடு-2024இன் அடிப்படையில் மூன்று வனப்பிரிவுகளில் கருஞ்சிறுத்தைகள் எனப்படும் அரிய வேங்கைகள் இருப்பதாக ஒடிஸா தெரிவித்துள்ளது. குறிப்பாக வேட்டையாடலால் பாதிக்கப்பட்ட இந்த இனத்தைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒடிஸாவில் மொத்தம் 696 சிறுத்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் தனித்தன்மை வாய்ந்த அரச வங்கப் புலிகள் மிகுந்துள்ளன.
1. What is the theme of “World Space Week 2024”, celebrated from October 4th to 10th?
A. Space and Climate Change
B. Space and Sustainability
C. Women in Space
D. The Moon: Gateway to the Stars
- World Space Week is celebrated from October 4 to 10, 2024. Each year, it follows a theme set by the United Nations General Assembly. The theme for 2024 is “Space and Climate Change.” This theme highlights the role of space science and technology in addressing extreme weather and climate change. It aims to educate and inspire people about how space exploration can improve our understanding and management of Earth’s climate. It focuses on the partnership between space technology and climate science for a better future.
2. Who have been awarded the MIDORI Prize for Biodiversity 2024?
A. Vera Voronova and Ysabel Agustina Calderón Carlos
B. Jane Goodall and David Attenborough
C. Assad Serhal and Alfred Oteng-Yeboah
D. Kathy MacKinnon and Greta Thunberg
- The MIDORI Prize for Biodiversity 2024 has been awarded to Vera Voronova from Kazakhstan and Ysabel Agustina Calderón Carlos from Peru. The prize was established by the AEON Environmental Foundation in collaboration with the Convention on Biological Diversity (CBD). It recognizes individuals for their significant contributions to biodiversity conservation and sustainability. The award is given biennially, every two years.
3. Rare brown vine snake recently spotted in which wildlife park of Uttar Pradesh?
A. Dudhwa National Park
B. Hastinapur Wildlife Sanctuary
C. Kishanpur Sanctuary
D. None of the above
- According to recent reports, a rare brown vine snake has been spotted in Dudhwa National Park in Uttar Pradesh. It emerged as a species never previously documented in the wildlife history of Dudhwa National Park or the entire state of Uttar Pradesh. This is the second remarkable reptile discovery in Dudhwa, following the rediscovery of the rare red coral Khukri snake in 2019.
4. Lipulekh Pass is located near the trijunction of which countries?
A. India, Myanmar and Bangladesh
B. India, Nepal and China
C. India, Bhutan and China
D. China, Bhutan and Nepal
- Pilgrims recently had the first-ever view of the sacred Kailash peak from the Old Lipulekh pass in Indian territory. Lipulekh Pass is a high-altitude pass in Uttarakhand, near the trijunction of India, Nepal, and China, at 5,334 meters. It links Uttarakhand with Tibet and serves as a gateway to the Himalayas. It is situated in Vyas Valley, Pithoragarh. It opened for trade with China in 1992. It has ancient trade significance and is part of the Kailash Mansarovar Yatra, a sacred Hindu pilgrimage to Mount Kailash, believed to be Lord Shiva’s abode.
5. Who was elected as the Chairperson of the 77th session of the WHO’s Regional Committee for Southeast Asia?
A. Rajnath Singh
B. JP Nadda
C. Anupriya Patel
D. Jadhav Prataprao
- Union Health Minister JP Nadda was elected Chairperson of the 77th session of WHO’s Regional Committee for Southeast Asia. The committee shapes WHO’s health policies in the region. The three-day session began in New Delhi and includes health ministers from Southeast Asian nations like Bangladesh, India, Indonesia, Sri Lanka, and others. The focus is on improving public health systems and addressing key epidemiological and demographic challenges.
6. How many medals won by India at ISSF Junior World Shooting Championship in Peru?
A. 18
B. 20
C. 24
D. 30
- Indian shooters dominated the ISSF Junior World Shooting Championship in Peru, winning 24 medals: 13 gold, 3 silver, and 8 bronze. Italy secured second place, while Norway came in third. On the final day, Deepak Dalal, Kamaljeet, and Raj Chandra won the men’s 50m pistol team gold medal. The next major event is the ISSF World Cup Final in New Delhi, scheduled for Oct.13 to 18.
7. Dipa Karmakar, who recently announced her retirement, was associated with which sports?
A. Gymnastics
B. Badminton
C. Hockey
D. Tennis
- Olympian and Commonwealth Games bronze medallist Dipa Karmakar announced her retirement from gymnastics. She was the first Indian female gymnast to gain international recognition. She narrowly missed a medal at the 2016 Rio Olympics, performing the Produnova vault.
- Dipa Karmakar won a bronze medal at the 2014 Commonwealth Games and gold at the 2018 World Cup in Turkiye. She also won gold at the 2024 Asian Women’s Artistic Gymnastics Championships in Tashkent, Uzbekistan.
8. Who were awarded the 2024 Nobel Prize in Physiology or Medicine for discovery of microRNA?
A. Hans Clevers and Eric Topol
B. Victor Ambros and Gary Ruvkun
C. Stuart Orkin and Peter Barnes
D. Paul Ridker and Francis Collins
- The Nobel Prize in Physiology and Medicine 2024 has been awarded to scientists Victor Ambros and Gary Ruvkun. They were recognized for their discovery of microRNA and its role in post-transcriptional gene regulation. MicroRNA is crucial for regulating gene activity. The Nobel Assembly stated that their discovery is vital for understanding how organisms develop and function. The winners receive a prize of 11 million Swedish crowns, equivalent to about $1.1 million.
9. Hirakud Dam is built on which river?
A. Narmada
B. Godavari
C. Krishna
D. Mahanadi
- The canal network connected to Hirakud Dam, a major project in eastern India, is set for renovation. Hirakud Dam is the longest dam in India and the longest earthen dam in the world, with a length of 25.79 km. It is built across the Mahanadi River, 15 km upstream of Sambalpur, Odisha. The dam creates the Hirakud Reservoir, the largest artificial lake in Asia, covering 746 sq. km. Inaugurated in 1957, it was India’s first major post-independence multipurpose river valley project.
10. ‘Indian Air Force Day 2024’ is celebrated on which day?
A. October 8
B. October 9
C. October 10
D. October 11
- Every year on October 8, India observes Indian Air Force Day to honor servicemen and pilots who sacrificed their lives for the nation. This year, the celebration marks the 92nd anniversary of the Indian Air Force. The event takes place at Marina Beach in Chennai. The theme for this year is “Bharatiya Vayusena: Saksham, Sashakt aur Aatmnirbhar,” which translates to “Potent, Powerful, and Self-Reliant.”
11. Kazakhstan establishes its first nuclear power station near which lake?
A. Lake Alakol
B. Lake Lemuria
C. Lake Balkhash
D. Lake Kryve
- Kazakhstan, the world’s leading uranium producer, is considering its first nuclear power station to enhance energy capacity. The location, near Lake Balkhash, is significant due to past Soviet-era nuclear tests that exposed millions to radiation.
12. Which rare species of leopard has recently identified in Odisha?
A. Snow Leopard
B. Black Panther
C. Arabian Leopard
D. Javan Leopard
- Odisha has reported the presence of rare melanistic leopards, known as black panthers, in three forest divisions based on the All-Odisha Leopard Estimation-2024. This species is particularly vulnerable to poaching, and the state is taking measures to protect them. The survey revealed a total of 696 leopards in Odisha. Similipal Tiger Reserve, which houses lot of unique Royal Bengal tigers.