TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 10th & 11th August 2024

1. ‘Eta Carinae’ என்றால் என்ன?

அ. ஆக்கிரமிப்புக்களை

ஆ. நீர்மூழ்கிக்கப்பல்

இ. ஹைபர்ஜெயண்ட் விண்மீன்

ஈ. முக்கியத்துவம் மிக்க கனிமம்

  • 7,500 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஹைப்பர்ஜெயண்ட் விண்மீனான ஈடா கரினேவை வானியலாளர்கள் கூர்நோக்கி வருகின்றனர்; ஏனெனில் அது விரைவில் ஒரு சூப்பர்நோவாவாக மாறவுள்ளது. சுமார் 170 ஆண்டுகட்கு முன்பு, ஒரு பெருவெடிப்பின்மூலம் ஹோமன்குலஸ் நெபுலாவை இது உருவாக்கியது. Eta Carinae இயற்கையான லேசர் கற்றை ஒளியை வெளியிடுவதில் தனித்துவமானதாக உள்ளது. இறுதியில் சூப்பர்நோவாவாக மாறவுள்ள அது, கண்கவர் ஒளிக்காட்சியையும் விண்மீன்கள்பற்றிய மதிப்புமிக்க தகவல்களையும் வழங்கும்.

2. போஜ் ஈரநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஹரியானா

இ. பஞ்சாப்

ஈ. உத்தரகாண்ட்

  • போபாலில் உள்ள போஜ் ஈரநிலம் அதன் ராம்சர் தள அந்தஸ்தை இழக்கும் அபாயம் இல்லை என்று மத்திய அரசு சமீபத்தில் உறுதியளித்தது. இது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ளது. இது இரண்டு தொடர்ச்சியான மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்களைக் (மேலேரி மற்றும் கீழேரி) கொண்டுள்ளது. மேலேரி போபாலுக்கு குடிநீரை வழங்குகிறது. பல்லுயிர் வளம் நிறைந்த இந்த ஈரநிலத்தில், 15-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் மற்றும் ஆமைகள் உள்ளன. 2002இல் இது ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது.

3. அண்மையில், இந்தியா, புவிசார் குறியீடு பெற்ற தனது முதல் அத்திப்பழச்சாற்றை கீழ்க்காணும் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது?

அ. போலந்து

ஆ. மலேசியா

இ. தாய்லாந்து

ஈ. இந்தோனேசியா

  • இந்தியா புவிசார் குறியீடு பெற்ற தனது முதல் அத்திப்பழச்சாற்றை போலந்துக்கு ஏற்றுமதி செய்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற புரந்தர் அத்திப்பழங்கள் ஹாங்காங்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. புரந்தர் பீடபூமி உழவர்கள் உற்பத்தி நிறுவனம் இந்த ஏற்றுமதியை மேற்கொண்டது. இந்தச்சாதனை இந்திய அத்திப் பழங்களின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது.

4. ‘Hypervirulent Klebsiella pneumoniae (hvKp)’ என்றால் என்ன?

அ. ஒரு வகை தடுப்பூசி

ஆ. மருந்து-எதிர்ப்பு பாக்டீரியா

இ. வைரஸ் தடுப்பு மருந்து

ஈ. பூஞ்சை

  • மீயுயிரியான ஹைப்பர்வைரண்ட் க்ளெப்சில்லா நிமோனியா (hvKp) பற்றி WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. hvKp என்பது ஒரு மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாவாகும். இது நலமான மக்களில்கூட கடுமையான, வேகமாக பரவும் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இது மண் மற்றும் நீர்போன்ற சுற்றுச்சூழலிலும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் மேல் தொண்டை மற்றும் குடலிலும் காணப்படுகிறது. இது நிமோனியா, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், இரத்த ஓட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் மூளைக்காய்ச்சல்போன்ற தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

5. ‘Ceropegia Shivrayiana’ என்றால் என்ன?

அ. நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. ஒரு பூக்கும் தாவரம்

இ. ஒரு வகை பாக்டீரியா

ஈ. வைரஸ் தடுப்பு மருந்து

  • கோலாப்பூர் விஷால்காட் பகுதியில், ‘Ceropegia Shivrayiana’ என்ற புதிய பூக்குஞ்செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பைட்டோடாக்ஸாவில் விவரிக்கப்பட்டுள்ள இந்தத் தாவரம், விஷால்காட் கோட்டையின் பல்லுயிர் பெருக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. கோலாப்பூரில் உள்ள புதிய கல்லூரி மற்றும் சிவாஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக்குழு, சுமார் 6 ஆண்டுகளாக கோட்டையின் தாவரங்களை ஆய்வுசெய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ‘சத்ரபதி’ சிவாஜி மகாராஜாவின் பெயரால் அழைக்கப்படும் இந்தத் தாவரம், கோட்டைகள் மற்றும் அவற்றின் சுற்றுப் புறங்களின் சுற்றுச்சூழல் மதிப்பை அவர் அங்கீகரிப்பதற்காக சூட்டப்பட்டுள்ளது.

6. Mpox (Monkeypox என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கீழ்க்காணும் எந்த நோய்க்கிருமியால் ஏற்படுகிறது?

அ. வைரஸ்

ஆ. பாக்டீரியா

இ. பூஞ்சை

ஈ. புரோட்டோசோவா

  • காங்கோவில் குரங்கம்மை (Mpox) நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதற்குத் தீர்வுகாண்பதற்காக உலக சுகாதார நிறுவனம் (WHO) அண்மையில் ஓர் அவசரக்கூட்டத்தை நடத்தியது. பெரியம்மை தொடர்புடைய விலங்குவழி பரவும் வைரஸ் நோயான Mpox, கடந்த 1970இல் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மக்களுடன் நேரடிதொடர்பில் இருப்பதன்மூலம் பரவும் இதன் அறிகுறிகளாக தோல் வெடிப்பு, காய்ச்சல் மற்றும் தசைவலி உள்ளது. இதற்கென குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.

7. உலக பழங்குடியினர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 8 ஆகஸ்ட்

ஆ. 9 ஆகஸ்ட்

இ. 10 ஆகஸ்ட்

ஈ. 11 ஆகஸ்ட்

  • உலக பழங்குடியினர் நாளானது 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.09 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது உலகளவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின மக்களின் பங்களிப்புகள் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பூர்வீக குடிமக்கள் பற்றிய நாடுகளின் செயற்குழுவின் முதல் கூட்டத்தைக் குறிக்கும் வகையில் 1994ஆம் ஆண்டு ஐநா பொதுச்சபை இந்த நாளை அறிவித்தது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact” என்பதாகும்.

8. அண்மையில், 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வென்ற பதக்கம் _____?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதலில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஈட்டியெறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

9. அண்மையில், இந்தியா தனது முதல் 24/7 தானிய ATMகளைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஒடிசா

இ. ஜார்கண்ட்

ஈ. இராஜஸ்தான்

  • இந்தியாவின் முதல் 24 மணிநேர தானிய ATM அண்மையில் ஒடிசாவின் புவனேசுவரத்தில் உள்ள மஞ்சேசுவரில் தொடங்கப்பட்டது. ஒடிசா தனது முதல் தானிய ஏடிஎம்மை 2024 ஆகஸ்ட்.08 அன்று தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தியது. இத்தொழில்நுட்பம், மத்திய அன்னபூர்த்தி திட்டத்தின் ஒருபகுதியாக, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக உலக உணவு திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. தானிய ஏடிஎம்கள் தானியங்கு இயந்திரங்களாகும், அவை மக்களுக்கு நேரடியாக உணவு தானியங்களை வழங்குகின்றன. அவை பசியைக் குறைப்பதோடு நியாயமான விநியோகத்தை உறுதிசெய்கின்றன.

10. கஸ்தூரி காட்டன் பாரத் என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ. ஜவுளி அமைச்சகம்

ஆ. MSME அமைச்சகம்

இ. விவசாய அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • ஜவுளி அமைச்சகம், QR குறியீடு சான்றிதழ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கஸ்தூரி பருத்தி பாரதத்தை தயாரிக்க பருத்தி பொறியாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. “கஸ்தூரி காட்டன் பாரத்” என்பது இந்திய பருத்திக்கான பிரீமியம் பிராண்ட் முன்னெடுப்பாகும். 2022 டிச.15 அன்று இந்திய பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம் இது முறைப்படுத்தப்பட்டது. QR-அடிப்படையிலான சான்றிதழும் பிளாக்செயின் தொழில்நுட்பமும் விநியோகச்சங்கிலி முழுவதும் முழு தடமறியும் தன்மையை உறுதி செய்கின்றன. இந்தத் திட்டம், மாநில அளவிலான நிதி ஒதுக்கீடு ஏதுமில்லாமல் தேசிய மற்றும் பன்னாட்டளவில் ஊக்குவிக்கப்படுகிறது.

11. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் ‘வெண்கலப்பதக்கம்’ வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஸ்பெயின்

ஈ. பாகிஸ்தான்

  • 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலம் வென்றது. இந்த வெற்றியானது 1972ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்தியா தொடர்ந்து ஒலிம்பிக் ஹாக்கிப் பதக்கங்களைப்பெற்ற முதல்முறையாகும். இப்போட்டி பாரிஸில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஷூட் அவுட்டில் ஜெர்மனியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நெதர்லாந்து தங்கம் வென்றது.

12. அண்மையில், ஒலிம்பிக்கிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தனது ஓய்வை அறிவித்த இந்திய மல்யுத்த வீரர் / வீராங்கனை யார்?

அ. அமன் ஷெராவத்

ஆ. வினேஷ் போகத்

இ. நிஷா தஹியா

ஈ. அன்ஷு மாலிக்

  • இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் (29), 50 கிகி பிரிவில் தங்கப்பதக்கத்திற்கான போட்டிக்குமுன், 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததற்காக ஒலிம்பிக்கிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டபின்னர், ஓய்வுபெறுவதாக அறிவித்தார். தீவிர எடை குறைப்பு செயற்பாட்டால் ஏற்பட்ட கடுமையான நீரிழப்பு காரணமாக, ஒரு கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். வெவ்வேறு எடைப்பிரிவுகளில் மும்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், நடப்புச்சாம்பியனான யுய் சுசாகியைத் வீழ்த்திய முதல் சர்வதேச மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும், 2024இல் ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு வந்த முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையும் ஆனார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கோயம்புத்தூர் அருகே புதிய கற்காலச்சான்றுகள்: தமிழ்ப்பல்கலைக்கழகத்தினர் கண்டெடுப்பு.

கோயம்புத்தூர் அருகே பூலுவப்பட்டி மோளப்பாளையம் நொய்யலாற்றுப்பள்ளத்தாக்கில் புதிய கற்காலச் சான்றுகளை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தினர் கண்டெடுத்துள்ளனர். அங்கு கரிந்த விதைகள், எலும்புகள், கற்கருவிகள், பானையோடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன் மோளப்பாளையத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களின் சான்றாக இவை விளங்குகின்றன.

2. ஹாக்கி: இரட்டை தங்கம் வென்ற முதல் அணி நெதர்லாந்து.

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்ற முதல் நாடு என்ற சிறப்பை நெதர்லாந்து பெற்றுள்ளது.

3. ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த கிளிமஞ்சாரோ சிகரத்தின் உச்சியில் மிகப்பெரிய தேசியக்கொடி.

78ஆவது விடுதலை நாளை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள இமயமலை மலையேறும் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளி பயணக்குழு, ஆப்பிரிக்க கண்டத்தின் மிகவுயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோவின் உஹுரு உச்சியில் 7800 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்திய தேசியக்கொடியை ஏற்றியுள்ளது. குரூப் கேப்டன் ஜெய் கிஷன் தலைமையிலான குழு இந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்தது.

1. What is ‘Eta Carinae’?

A. Invasive weed

B. Submarine

C. Hypergiant star

D. Critical Mineral

  • Astronomers are watching Eta Carinae, a hypergiant star 7,500 light-years away, as it might soon explode as a supernova. About 170 years ago, it had a major outburst, creating the Homunculus Nebula. Eta Carinae is unique for emitting natural laser light and recently showed intriguing details in the nebula. When it eventually goes supernova, it could provide a spectacular light show and valuable insights into massive stars.

2. Bhoj Wetland is located in which state?

A. Madhya Pradesh

B. Haryana

C. Punjab

D. Uttarakhand

  • The Union Government recently assured that Bhoj Wetland in Bhopal is not at risk of losing its Ramsar site status. It is located in Bhopal, Madhya Pradesh. It consists of two contiguous human made reservoirs, Upper Lake (Bhojtal) and Lower Lake (Chhota Talaab). The Upper Lake provides drinking water for Bhopal and is surrounded by a Van Vihar national park, human settlements, and farmland. The wetland is rich in biodiversity, with over 15 fish species and vulnerable species like turtles and amphibians. It was designated a Ramsar site in 2002.

3. Recently, India exported its first GI-tagged fig juice to which country?

A. Poland

B. Malaysia

C. Thailand

D. Indonesia

  • India has exported its first GI-tagged fig juice to Poland, marking a major achievement for Indian agriculture. This follows the export of GI-tagged Purandar figs to Hong Kong. The Purandar Highlands Farmers Producer Company Ltd, with government support, facilitated these exports. This milestone highlights the quality of Indian figs and opens up new opportunities for expanding Indian agricultural products in global markets.

4. What is Hypervirulent Klebsiella pneumoniae (hvKp)?

A. A type of vaccine

B. Drug-resistant bacteria

C. Antiviral drug

D. Fungus

  • The WHO has issued a warning about the superbug hypervirulent Klebsiella pneumoniae (hvKp). hvKp is a drug-resistant bacterium that can cause severe, fast-spreading infections even in healthy people. It is found in the environment, like soil and water, as well as in the upper throat and gut of animals and humans. It can lead to infections such as pneumonia, urinary tract infections, bloodstream infections, and meningitis.

5. What is ‘Ceropegia Shivrayiana’?

A. Submarine

B. A flowering plant

C. A type of bacteria

D. Antiviral drug

  • A new flowering plant, Ceropegia shivrayiana, has been discovered in Kolhapur’s Vishalgad area. The plant, detailed in Phytotaxa, highlights Vishalgad Fort’s biodiversity. It was found by a research team from New College, Kolhapur, and Shivaji University, who have studied the fort’s flora for six years. Named after Chhatrapati Shivaji Maharaj, the plant honors his recognition of the ecological value of forts and their surroundings.

6. Mpox (also known as Monkeypox) is caused by which pathogen?

A. Virus

B. Bacteria

C. Fungus

D. Protozoa

  • The World Health Organization (WHO) recently held an emergency meeting to address a surge in monkeypox (Mpox) cases, particularly in Congo. Mpox, a viral zoonotic disease related to smallpox, was first identified in 1970 in the Democratic Republic of the Congo. t spreads through direct contact with infected animals or people, and symptoms include skin rashes, fever, and muscle aches. There is no specific treatment; supportive care is crucial.

7. Which day is observed as “International Day of Indigenous Peoples”?

A. 8 August

B. 9 August

C. 10 August

D. 11 August

  • The International Day of Indigenous Peoples is observed annually on August 9 since 1995. It aims to raise awareness about the contributions and rights of indigenous, or tribal, peoples, who are among the most vulnerable globally. The UN General Assembly declared this day in 1994 to mark the first meeting of the Nations Working Group on Indigenous Populations in 1982. The theme for 2024 is “Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact,” highlighting the need to safeguard these communities.

8. Recently, Neeraj Chopra won which medal in the men’s javelin throw event at the Paris Olympics 2024?

A. Gold

B. Silver

C. Bronze

D. None of the Above

  • Neeraj Chopra won a silver medal in men’s javelin throw at the Paris 2024 Olympics with a throw of 89.45 meters. Pakistan’s Arshad Nadeem won gold with a record-breaking throw of 92.97 meters, marking Pakistan’s first gold in javelin throw. Grenada’s Anderson Peters secured the bronze with a throw of 88.54 meters.

9. Recently, India launched its first 24/7 grain ATM in which state?

A. Bihar

B. Odisha

C. Jharkhand

D. Rajasthan

  • India’s first round-the-clock grain ATM was recently launched at Mancheswar in Bhubaneswar, Odisha. Odisha introduced its first Grain ATM on August 8, 2024, under the National Food Security Programme. This technology, part of the central Annapurti programme, was developed with the World Food Programme to enhance food security. Grain ATMs are automated machines that provide food grains directly to people, reducing hunger and ensuring fair distribution.

10. Kasturi Cotton Bharat is an initiative of which ministry?

A. Ministry of Textiles

B. Ministry of MSME

C. Ministry of Agriculture

D. Ministry of Finance

  • The Ministry of Textiles has empowered cotton ginners to produce Kasturi Cotton Bharat using QR code certification technology. Kasturi Cotton Bharat is a premium brand initiative for Indian cotton, focusing on traceability, certification, and branding. It was formalized through an MoU between the Cotton Corporation of India and the Cotton Textiles Export Promotion Council on December 15, 2022. QR-based certification and Blockchain technology ensure full traceability across the supply chain. The program is promoted both nationally and internationally, with no state-level fund allocation.

11. Which country won the ‘Bronze medal’ in Hockey event at the Paris Olympics 2024?

A. India

B. China

C. Spain

D. Pakistan

  • India’s men’s hockey team won bronze at the Paris 2024 Olympics, defeating Spain 2-1. This victory marks India’s first consecutive Olympic hockey medals since 1972. The match took place at stadium in Paris. The Netherlands won gold, beating Germany 2-1 in a shootout in the final.

12. Recently, which Indian wrestler has announced her retirement after being disqualified from the Olympics?

A. Aman Sherawat

B. Vinesh Phogat

C. Nisha Dahiya

D. Anshu Malik

  • Indian wrestler Vinesh Phogat, 29, announced her retirement after being disqualified from the Olympics for being 100 grams overweight before her gold medal bout in the 50 kg category.
  • She appealed to the Court of Arbitration for Sports (CAS) to be awarded a joint silver medal, citing severe dehydration from extreme weight-cutting measures. Phogat, a three-time Olympian in different weight classes, became the first international wrestler to defeat reigning champion Yui Susaki and the first Indian female wrestler to reach an Olympic final in 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!