TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 9th April 2024

1. அண்மையில், உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த லேசரை உருவாக்கிய நாடு எது?

அ. பல்கேரியா

ஆ. எஸ்டோனியா

இ. ருமேனியா

ஈ. சுவீடன்

  • ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்கட்டமைப்பு ELI திட்டத்தின் ஒருபகுதியாக, ருமேனியா உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த லேசர் ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. “Extreme Light Infrastructure-Nuclear Physics”- (ELI-NP)” என்று அழைக்கப்படும் இந்த லேசர், புக்கரெஸ்டுக்கு அருகிலுள்ள ருமேனியாவின் மகுரேலில் அமைந்துள்ளது. இது, நோபல் இயற்பியல் பரிசு வென்ற ஜெரார்ட் மௌரோ மற்றும் டோனா ஸ்டிரிக்லேண்ட் ஆகியோரின் கண்டுபிடிப்புகளான சிர்ப்ட்-பல்ஸ் ஆம்ப்லிஃபிகேஷனை அடிப்படையாகக்கொண்ட ஓர் அற்புதமான தொழில்நுட்பமாகும். பிரெஞ்சு லேசர் நிறுவனமான தேல்ஸால் இயக்கப்படுகிற இந்த லேசர், சுகாதாரம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் புரட்சிகரமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. பாபிகொண்டா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. குஜராத்

ஈ. கேரளா

  • பாபிகொண்டா தேசியப்பூங்காவில் காட்டுத்தீயை தடுக்க ஆந்திர பிரதேச மாநில அரசு தொழில்நுட்ப உதவிகளை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறது. கிழக்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள பாபிகொண்டா தேசியப் பூங்கா, அதிக மழைப்பொழிவுக்கும் கோதாவரியாற்றுக்கும் பெயர்பெற்றதாகும். 1978இல் வனவிலங்கு சரணாலயமாக உருவாக்கப்பட்டு 2008இல் தேசியப்பூங்காவாக மேம்படுத்தப்பட்ட இது, பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல்மூலம் முக்கியமான பறவைகள் மற்றும் பல்லுயிர்ப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதி, ‘கஞ்சு மேகா’ என்ற தனித்துவமான குட்டை ஆட்டினத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

3. ஆகாசதீரன் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனம்

ஆ. பாரத் மின்னணு நிறுவனம்

இ. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

ஈ. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

  • 2024 ஏப்.04 அன்று, இந்திய இராணுவம் வான் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ‘ஆகாசதீரன்’ கட்டளை மையம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை அதன் வான் பாதுகாப்புப் படையில் ஒருங்கிணைத்தது. BELஆல் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, இந்தியாவின் தற்சார்பு முன்னெடுப்பின் ஒருபகுதியாக உள்ளது. 2024ஆம் ஆண்டை ‘தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொள்ளுதல் ஆண்டு’ என இந்திய இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்திய நாட்டின் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பை விரைவு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அண்மையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியை நடுவணரசு நிறுத்தி வைத்திருப்பதாகக்கூறி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மகாராஷ்டிரா

  • மிக்ஜம் புயல் மற்றும் 2023இல் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிந்தைய தேசிய பேரிடர் நிவாரண நிதியை நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிற பேரிடர் நிவாரண நிதி ஆனது கடந்த 2004 – ஆழிப்பேரலை நிகழ்வுக்குப்பிறகு, பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005இன்கீழ் உருவாக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண நிதி சூறாவளி, வறட்சி மற்றும் வெள்ளம்போன்ற கடுமையான பேரிடர்களை உள்ளடக்கியது ஆகும்; மாநில பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக இது வழங்கப்படுகிறது.

5. அண்மையில், நிலவு மற்றும் பிற வான் பொருட்களுக்கான ஓர் ஒருங்கிணைந்த நிலவு நேரத்தை நிறுவப்போகிற விண்வெளி அமைப்பு எது?

அ. JAXA

ஆ. ISRO

இ. NASA

ஈ. ROSCOSMOS

  • நிலவு மற்றும் வான் பொருள்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட நிலவு நேரம் (LTC) என்ற ஓர் ஒருங்கிணைந்த நேர தரநிலையை உருவாக்குமாறு NASAவுக்கு வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது. நிலவு சம்பந்தமான பல்வேறு விண்வெளி திட்டங்கள் நிலவிவரும் இவ்வேளையில், விண்வெளியில் பன்னாட்டு விதிமுறைகளை அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2026இல் உருவாக்கப்படவுள்ள LTC, நிலவு ஈர்ப்பு விசைகளைக் கணக்கிடும் மற்றும் பணிகள் மற்றும் தரவு பரிமாற்றங்களில் துல்லியத்தைத் தருவிக்கும்.

6. அண்மையில், பெருநிறுவன சமூகப்பொறுப்பு பங்களிப்புக்காக, 15ஆவது CIDC விஸ்வகர்மா விருது-2024 பெற்ற நிறுவனம் எது?

அ. NHPC

ஆ. பவர்கிரிட்

இ. SJVN லிட்

ஈ. NTPC

  • கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கவுன்சில் நிறுவியுள்ள 15ஆவது மகாராஷ்டிராவின் நகர & தொழில்மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்வகர்மா விருதுகள் இரண்டினை சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனம் (SJVN) வென்றுள்ளது. இந்த விருதுகள் குறித்துப் பேசிய SJVN தலைவரும் நிர்வாக இயக்குநரும் CSR அறக்கட்டளையின் தலைவருமான கீதா கபூர், புதுமையான மற்றும் நிலையான பெருநிறுவன சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள்மூலம் நேர்மறையான மாற்றத்திற்கு தங்கள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன என்றார்.
  • SJVN ஆனது கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் கலாசார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு CSR நடவடிக்கைகளுக்காக `450 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் SJVN சார்பாக தலைமைப் பொதுமேலாளர் (மனிதவளம்) பல்ஜீத் சிங் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.

7. எந்த மொழியிலும் எந்தக் குரலையும் நகலெடுக்கக்கூடிய, ‘குரல் இயந்திரம் – Voice Engine’ எனப்படும் புதிய AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?

அ. டீப் மைண்ட்

ஆ. OpenAI

இ. இயந்திர நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம்

ஈ. IBM

  • எந்த மொழியிலும் எந்தக்குரலையும் பிரதிபலிக்கும் திறன்கொண்ட ஓர் அற்புதமான AI மாதிரியை, ‘Voice Engine’ என்ற பெயரில் OpenAI வெளியிட்டுள்ளது. ஒரே மாதிரியான குரலில் பேச்சை உருவாக்குவதற்காக பயனர்கள் குறுகிய ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றுகிறார்கள். இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படாத இது, நோயாளிகளின் குரல் மீட்புக்கு உதவுதல், மொழிபெயர்த்தல் போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

8. பழங்கால பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளமையால் அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பதிமலை குகை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

  • பதிமலை குகையானது ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளது. இது யானை, ஒரு தேர் (மயில் என்றும் கூறப்படுகிறது) மற்றும் ஆரம்பகால மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ள இந்தத் தளத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பாதுகாப்பின்றி ஊறு நேரும் அச்சத்தில் உள்ளன. வெண்ணிறமிகளால் வரையப்பட்ட இக்கலைப்படைப்பு கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. மற்ற பாறை ஓவிய தளங்களைப் போலல்லாமல், பதிமலைஎளிதில் அணுகும் வகையில் மலையின் அடிவாரத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

9. “டிராகன்களின் தாய்” வால் விண்மீன் என்பது என்ன வகை வால் விண்மீனாகும்?

அ. ஹேலி வால் விண்மீன்

ஆ. டெம்பல் வால் விண்மீன்

இ. என்கே வால் விண்மீன்

ஈ. குய்ப்பர் பெல்ட் வால் விண்மீன்

  • அதிகாரப்பூர்வமாக வால் விண்மீன் 12P/Pons-Brooks என்று அழைக்கப்படும், “டிராகன்களின் தாய்” வால் விண் மீன், தற்போது அந்திவேளைக்குப் பிறகு வடக்கு அரைக்கோளத்தில் தெரிந்து வருகிறது. ஹேலி-வகை வால் விண் மீனான இது, தோராயமாக 71 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 கிமீ அகலமான கருவுடன் சுற்றி வருகிறது. பனி, தூசி மற்றும் பாறைப்பொருட்களால் ஆன இது சூரியனை நெருங்கும்போது திடப்பொருளிலிருந்து வாயுவாக மாறுகிறது. வியாழன்-குடும்பத்து வால் விண்மீன் என வகைப்படுத்தப்பட்டுள்ள இது, செவ்வாய்க்கோளின் சுற்றுப்பாதைக்கு அருகில் அண்மைநிலையை அடைந்து 2024 ஜூனில் பூமிக்கு அருகே நெருங்கி வரும்.

10. அண்மையில், 114 வயதில் மரணித்த உலகின் மிகவும் வயதான மனிதரின் பெயர் என்ன?

அ. ஜான் டினிஸ்வுட்

ஆ. ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா

இ. யூகிச்சி சுகன்ஜி

ஈ. யூஜெனி பிளான்சார்ட்

  • உலகின் மிகவும் வயதான மனிதராக கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 115வது பிறந்தநாளுக்கு சற்று முன்னர் காலமானார். அவரது நீண்ட ஆயுளுக்கான இரகசியங்களில் கடின உழைப்பு, சீக்கிரம் உறங்கும் நேரம் மற்றும் தினசரி ஒரு குவளை அகார்டியன்ட் (மது வகை) ஆகியவை அடங்கும்.

11. அண்மையில், குழந்தைப்பேறு பதிவுக்கான மாதிரி விதிகளை உருவாக்கியுள்ள அமைச்சகம் எது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • தாய் மற்றும் தந்தை இருவரின் மதத்தையும் பெற்றோர்கள் தனித்தனியாக குறிப்பிட வேண்டும் என்ற குழந்தைப் பேறு பதிவுக்கான புதிய விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. முன்பு, குடும்பத்தின் மதம் மட்டுமே குறிப்பிடப்பட்டு வந்தது. புதுப்பிக்கப்பட்ட, ‘படிவம் எண்.1-பிறப்பறிக்கை’ ஆனது குழந்தையின் மதம் மற்றும் பெற்றோர் இருவரின் மதத்திற்கும் தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்தப் புதுப்பிப்பு தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பொருந்தும். 2023ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்தம்) சட்டத்தின்படி, தேசிய தரவுத்தளத்தில் இந்தத் தகவல்களைப் பராமரிக்க வேண்டும்.

12. 2024 – உலக சுகாதார நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Building a fairer, healthier world

ஆ. My Health, My Right

இ. Our planet, our health

ஈ. Support nurses and midwives

  • உலக சுகாதார நாளானது ஆண்டுதோறும் ஏப்.07 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையிலும் உலகளாவிய சுகாதார பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது நலமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்க்கிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாக, “எனது உடல்நலம், எனது உரிமைகள்” தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருள் சுகாதாரப் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட உரிமைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் மகள் காலமானார்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் மூத்த மகள் இராஜலட்சுமி (91) காலமானார். தேசபக்திப்பாடல்கள்மூலம் நாட்டு மக்களிடையே சுதந்திரப்போராட்டத்தை வளர்த்தவர்களில் ஒருவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!