TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 8th 9th and 10th June 2024

1. MTU 1271, BPT 2846 மற்றும் NLR-3238 ஆகியவற்றுடன் தொடர்புடைய பயிர் எது?

அ. அரிசி

ஆ. பருத்தி

இ. கரும்பு

ஈ. கடுகு

  • ஆச்சார்யா NG ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகம் (ANGRAU) ஆந்திரப் பிரதேசத்தில் காரீப் பருவத்திற்கான புதிய நெல் வகைகளாக MTU 1271, BPT 2846, மற்றும் NLR-3238 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மூன்றும் BPT 5204 என்ற நெல் இரகத்திற்கு மாற்றாக அறிமுகப்பட்டுள்ளன. MTU 1271 எண்பது 140 நாள் பயிர் காலத்துடன் ஒரு ஏக்கருக்கு 2.8-3 டன்கள் மகசூல் தருகிற குட்டை இரக நெற்பயிராகும். BPT 2846 எண்பது 130-135 நாட்களில் ஏக்கருக்கு 2.4 டன் மகசூல் தருகிறது. NLR-3238, 22.5% அதிக துத்தநாக கலவையுடன், அனைத்து பருவங்களிலும் வளரும் தன்மை கொண்டதாக உள்ளது.

2. அண்மையில், உணவில் திரவ நைட்ரஜனை அனுமதியின்றி பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கிய அமைப்பு எது?

அ. FCI

ஆ. FSSAI

இ. வேளாண்மை அமைச்சகம்

ஈ. ICAR

  • இந்திய உணவுப் பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI) நிறுவனங்களால் உணவில் திரவ நைட்ரஜனை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. திரவ நைட்ரஜன், ஒரு நிறமற்ற, மணமற்ற வாயு அல்லது திரவமாகும். இது உறைதல், பேக்கேஜிங் மற்றும் நுரைக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2011இன் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறையின்படி, இது விதிமுறைகளின்கீழ் ஒரு நல்ல உற்பத்தி நடைமுறை சேர்க்கையாகக் கருதப்படுகிறது. இது பால்சார்ந்த பனிக்கூழ்களில் அவற்றின் உறைதலுக்கா -கவும் குளிர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

3. கீழ் சுபன்ஸ்ரீ புனல் மின்னுற்பத்தித் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. மிசோரம்

  • அஸ்ஸாமில் உள்ள 2000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட கீழ் சுபன்ஸ்ரீ நீர்மின்னுற்பத்தித் திட்டத்தில் (SLHEP) மீன்வள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சுபன்ஸ்ரீ ஆற்றின் மீது நிறுவப்பட்டுள்ள ஈர்ப்புவிசை அணையான SLHEP, கட்டிமுடிந்ததும் இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்னுற்பத்தி நிலையமாக இருக்கும். NHPCஆல் இது உருவாக்கப்பட்டு வருகிறது. பொன்மணலுக்காக அறியப்படுகிற இந்த ஆறு, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் பரவி, குறிப்பிடத்தக்க நீர்மின் உற்பத்தித் திறனை வழங்குகிறது.

4. அண்மையில், ‘இழப்பு மற்றும் சேதம் குறித்த 3ஆவது கிளாஸ்கோ உரையாடல்’ நடைபெற்ற இடம் எது?

அ. பான், ஜெர்மனி

ஆ. லண்டன், UK

இ. பாரிஸ், பிரான்ஸ்

ஈ. புது தில்லி, இந்தியா

  • இழப்பு மற்றும் சேதம் பற்றிய மூன்றாவது கிளாஸ்கோ உரையாடல் ஜெர்மனியின் பான் நகரத்தில் UNFCCC-க்கான துணை அமைப்புகளின் 60ஆவது அமர்வின் போது நிகழ்ந்தது. 2019இல் நிறுவப்பட்ட சாண்டியாகோ நெட்வொர்க் ஃபார் லாஸ் அண்ட் டேமேஜ், வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தைத் தணிக்க உதவுகிறது. தட்பவெப்பநிலை தொடர்பான தாக்கங்களை நிர்வகிப்பதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் திறனை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவை இது திரட்டுகிறது.

5. சுகாதார அமைச்சகம் கீழ்காணும் எந்த அமைப்புடன் இணைந்து சமீபத்தில் டிஜிட்டல் தளமான நேஷனல் ஹெல்த் க்ளைம் எக்ஸ்சேஞ்சை (NHCX) அறிமுகப்படுத்தியது?

அ. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்

. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI)

இ. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)

ஈ. NITI ஆயோக்

  • சுகாதார அமைச்சகமும் IRDAIஉம் இணைந்து National Health Claim Exchange (NHCX) தொடங்குகின்றன. டிஜிட்டல் தளமான இது காப்பீட்டு நிறுவனங்கள், சுகாதார சேவை வழங்குநர்கள் மற்றும் அரசாங்க காப்பீட்டு நிர்வாகிகளை ஒன்றிணைக்கிறது. பங்குதாரர்களிடையே தரவு பரிமாற்றத்தை எளிதாக்குவதன்மூலம் காப்பீடு உரிமைகோரல் செயலாக்கத்தில் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதை NHCX நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் குறிக்கோள்களான சுகாதார காப்பீடு கோரல்களை எளிதாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஹெல்த்கேர் தளத்தை உருவாக்குதல், காப்பீடுதாரர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பயனளிக்கிறது.

6. அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான EY உலக தொழில்முனைவோராக அறிவிக்கப்பட்டவர் யார்?

அ. வெள்ளையன் சுப்பையா

ஆ. வைபவ் ஆனந்த்

இ. ரீதேஷ் திங்ரா

ஈ. பிரதாப் ராஜு

  • இந்திய தொழிலதிபரான வெள்ளையன் சுப்பையா மொனாக்கோவில் நடைப்பெற்ற விழாவில் 2024ஆம் ஆண்டின் EY தொழில்முனைவோர் விருதை வென்றார். இதன்மூலம் இந்த மரியாதையைப் பெறும் நான்காவது இந்தியர் ஆனார். அவர் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் நிர்வாக துணைத்தலைவராகவும், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். 47 நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 51 வெற்றியாளர்களுள் ஒருவரான வெள்ளையன் சுப்பையா, 2023 இந்தியா விருதை வென்ற பிறகு இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

7. சுஹெல்வா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. இராஜஸ்தான்

ஈ. குஜராத்

  • சுஹெல்வா வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் வாழ்வதற்கான சான்றுகள் காரணமாக உத்தர பிரதேசத்தில் புதிய புலிகள் காப்பகம் நிறுவப்படும். ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர் மற்றும் கோண்டா மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த சுஹெல்வா வனவிலங்கு சரணாலயம், இந்திய-நேபாள எல்லையில் 452 சதுர கிமீ பரப்பளவில் கடந்த 1988ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இலையுதிர் காடுகள் மற்றும் பாதி வறண்டதுமான வனப்பகுதிகளின் கலவையைக் கொண்டுள்ளது. சுஹெல்வா வனவிலங்கு சரணாலயம் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக விளங்குகிறது. இது பாபர்-தாராய் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருபகுதியாக உள்ளது.

8. அண்மையில், கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் ASEAN பிராந்திய மன்றத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. பெய்ஜிங், சீனா

ஆ. புது தில்லி, இந்தியா

இ. பாங்காக், தாய்லாந்து

ஈ. வியன்டியான், லாவோ

  • 2024 ஜூன் 7-8 அன்று, லாவோ PDR, வியன்டியானில் நடந்த கிழக்காசிய உச்சிமாநாடு மற்றும் ASEAN பிராந்திய மன்றம் ஆகியவற்றில் இந்தியா சார்பில் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார் கலந்துகொண்டார். இந்தோ-பசிபிக் அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மோதல்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. நிலைத்தன்மையை ஊக்குவிப்பதில் EASஇன் பங்கை ஜெய்தீப் மஜும்தார் வலியுறுத்தினார் மற்றும் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்தினார்.

9. ‘ஒட்டும் பணவீக்கம்’ என்றால் என்ன?

அ. விலையில் தற்காலிக வீழ்ச்சி

ஆ. வழங்கல் & தேவையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலைகள் விரைவாகச் சரிசெய்யப்படும் ஒரு நிகழ்வு

இ. வழங்கல் & தேவையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலைகள் விரைவாகச் சரிசெய்யப்படாத ஒரு நிகழ்வு

ஈ. நுகர்வோர் பொருட்களின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு

  • இந்திய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய மதிப்பாய்வில், ஒட்டும் பணவீக்கம் குறித்த கவலைகளை மேற்கோள்காட்டி, தொடர்ந்து எட்டாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது. ஒட்டும் பணவீக்கம் (sticky inflation) என்பது வழங்கல் மற்றும் தேவை மாற்றங்களுக்கு ஏற்ப விலைகள் விரைவாகச் சரி செய்யப்படாத ஒரு நிகழ்வாகும்; இதன் விளைவாக நிலையான பணவீக்கம் ஏற்படுகிறது. ஊதிய உயர்வு மற்றும் நுகர்வோர் விலைகள்போன்ற காரணிகள் இந்நிகழ்வைத் தூண்டுகின்றன. பணவியல் அதிகாரிகள் கொள்கையை இறுக்குவது மற்றும் வட்டி விகிதங்களை அதிகரிப்பதை கருத்தில்கொள்ள இது தூண்டுகிறது.

10. அண்மையில், இந்தியாவில் டிரோன் புத்தொழில்களை ஊக்குவித்தற்காக UDAAN திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. ஐஐடி தில்லி

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி பம்பாய்

ஈ. ஐஐடி ரூர்க்கி

  • IIT கான்பூரின் புத்தொழில் அடைவு மற்றும் புத்தாக்க மையம் இந்தியாவில் டிரோன் புத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் UDAAN திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. UDAAN, SIIC, Drone CoE கான்பூர் மற்றும் டிரோன் பெடரேசன் ஆப் இந்தியா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், ஆண்டுதோறும் 20 புத்தொழில்களை (start-up) அது தேர்ந்தெடுக்கும். பங்கேற்பாளர்களுக்கு R&D வசதிகள், வழிகாட்டுதல், நிதியுதவி மற்றும் தொழில் தொடர்புகளுக்கான அணுகல் என அனைத்து வழங்கப்படும். இது தயாரிப்பு மேம்பாடு, சந்தை பகுப்பாய்வு மற்றும் வளர்ச்சி திட்டமிடல் ஆகியவற்றில் புத்தொழில்களை ஆதரிக்கிறது.

11. இந்தியாவின் எந்த அதிகாரத்தின் தலைமையின் கீழ் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு உள்ளது?

அ. இந்தியப்பிரதமர்

ஆ. இந்திய உள்துறை அமைச்சர்

இ. மக்களவையின் அவைத்தலைவர்

ஈ. இந்தியக்குடியரசுத்தலைவர்

  • பிரதமர் நரேந்திர மோதி மற்றும் முப்பது கேபினட் அமைச்சர்கள், ஐந்து சுயேச்சை அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் அடங்கிய 71 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு என்பது தேசிய பாதுகாப்பு நியமனங்கள், பாதுகாப்புக்கொள்கைகள் மற்றும் செலவுத்தீர்மானங்
    -களுக்கான உச்சபட்ச அமைப்பாகும். இதன் உறுப்பினர்களில் பாதுகாப்பு, உள்துறை, நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளனர். இந்திய தேசத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் வெளியுறவுக்கொள்கை விஷயங்களுக்கு இக்குழு தீர்வுகாண்கிறது.

12. இந்தியாவில், ‘குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பை’ நடத்திய அமைச்சகம் எது?

அ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஆ. உழவு அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் , புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 1950இல் நிறுவப்பட்டதிலிருந்து குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆய்வு குடும்ப மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களில் அதன் விநியோகம் குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது.
  • பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காக செய்யப்பட்டும் செலவுகள் கிராமப்புறங்களில் 46%ஆகவும் நகர்ப்புறங்களில் அது 39%ஆகவும் உள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற “பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு” செலவுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 2022-23இல் முதன்முறையாக உணவல்லா செலவுகள், குறிப்பாக போக்குவரத்து மற்றும் நீடித்த பொருட்களுக்கான செலவினம் உயர்ந்துள்ளது. 2011-12 முதல் 2022-23 வரை, கிராமப்புறச்செலவுகள் 164% அதிகரித்து `3,773 ஆகவும், நகர்ப்புறங்களில் 146% அதிகரித்து `6,459 ஆகவும் உள்ளது; இது குறிப்பிடத்தக்க நுகர்வு வளர்ச்சிப் போக்கைக் குறிக்கிறது.

13. 40ஆம் ஆண்டு நிறைவையொட்டி அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘ஆபரேஷன் புளூஸ்டாரி’ன் முதன்மை நோக்கம் என்ன?

அ. காஷ்மீரில் தீவிரவாதிகளைப் பிடித்தல்

ஆ. சீக்கிய பிரிவினைவாதிகளை பொற்கோவிலிலிருந்து வெளியேற்றுதல்

இ. இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குதலிலிருந்து பாதுகாத்தல்

ஈ. மேற்கு வங்கத்தில் பொதுவுடமைவாத எழுச்சியை ஒடுக்குதல்

  • ஆபரேஷன் புளூஸ்டாரின் நாற்பதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது பொற்கோவிலில் காலிஸ்தானை ஆதரிக்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 1984 ஜூனில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் ஆணையிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான சீக்கிய பிரிவினைவாதிகளை கோவிலில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக்கொண்டது.
  • கடுமையான சண்டைக்குப் பெயர்போன இந்நடவடிக்கை, கோவில் வளாகத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது; மேலும் பொதுமக்களின் உயிர்களையும் பலிவாங்கியது. இந்நடவடிக்கை இறுதியில் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்கு வழிவகுத்து, சீக்கிய வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வாக ஆனது.

14. அண்மையில், ‘உலக மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பின் நிலை – 2024’ அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)

இ. உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO)

ஈ. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)

  • FAOஇன், ‘உலக மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பின் நிலை-2024’ அறிக்கையானது உலகளாவிய போக்குகளை பகுப்பாய்வு செய்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், மொத்த நீர்வாழ் உற்பத்தி 223.2 மில்லியன் டன்களை எட்டியது; மீன்வளர்ப்பு முதன்முறையாக பிடிக்கப்பட்ட மீன்வளத்தை மிஞ்சியது. சீனா உற்பத்தியில் (36%) முதலிடம் பிடித்தது; அதைத்தொடர்ந்து இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் பெரு ஆகிய நாடுகள் உள்ளன. உள்நாட்டு மீன்பிடி, 11.3 மில்லியன் டன்கள் உற்பத்தியுடன் முதன்மையாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்டது.

15. அண்மையில், இந்தியாவின் முதல் தனியார் உயிர்க்கோளமாக அறிவிக்கப்பட்ட ராஜாஜி ராகவ உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. இமாச்சல பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • உத்தரகாண்டின் இராஜாஜி தேசியப்பூங்காவிற்குள் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உள்ள இராஜாஜி ராகவ உயிர்க்கோளம், அரிய மற்றும் அழிந்துவரும் பூர்வீக இன மரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஜெய் தர் குப்தா மற்றும் விஜய் தஸ்மனா ஆகியோரால் நிறுவப்பட்ட இது, புலிகள் காப்பகத்திற்குள் அமையவுள்ள இந்தியாவின் முதல் உயிர்க்கோளமாகும். பூர்வீகமற்ற யூகலிப்டஸ் மரங்களை அகற்றுவதன்மூலம் தரிசுநிலத்தை மீட்டெடுத்து, நீரைத்தக்கவைக்கும் நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

16. சமீப செய்திகளில் இடம்பெற்ற சுகாதார மற்றும் தாவரநல நடவடிக்கைகள் (SPS ஒப்பந்தம்) ஆகியவற்றுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ. உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO)

ஆ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)

இ. உலக வர்த்தக அமைப்பு (WTO)

ஈ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO)

  • இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் கோழி இறக்குமதி சர்ச்சை உள்ளிட்ட ஏழு சர்ச்சைகளைக்கு உலக வர்த்தக அமைப்பின்மூலம் தீர்வுகண்டன. 1995 ஜன.01 முதல் அமல்படுத்தப்பட்ட சுகாதார & தாவரநல நடவடிக்கைகளின் பயன்பாடு குறித்த ஒப்பந்தம் (SPS ஒப்பந்தம்), உணவுப்பாதுகாப்பு, விலங்குகள் மற்றும் தாவரநலத் தரங்களை நிர்வகிக்கிறது. சுகாதாரம் மற்றும் தாவரநல நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தம் என்பது உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தமாகும். இது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழ்க்கை மற்றும் நலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துதல், ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்படுத்துவதற்கான விதிகளை நிறுவுகிறது.

17. பெருநாரை சார்ந்த இனம் எது?

அ. மீன்

ஆ. சிலந்தி

இ. நாரை

ஈ. எறும்பு

  • நகரமயமாக்கல் அஸ்ஸாமின் ஈரநிலங்களில் வாழ்ந்து வரும் பெருநாரைகளை அச்சுறுத்தி வருகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் பெருநாரைகள், ஈரநிலங்களுக்கு அருகிலுள்ள உயரமான மரங்களில் கூடு கட்டுகின்றன; அவற்றின் முதன்மை இரையாக மீன் மற்றும் தவளைகள் உள்ளன. அச்சுறுத்தல்களில் வாழ்விட இழப்பு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை அடங்கும். IUCNஆல் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

18. ஜெர்மனியில் நடந்த 2024 – ஹெய்ல்பிரான் நெக்கர்கப் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

அ. அலெக்சாண்டர் ரிட்சார்ட்

ஆ. நிகோலோஸ் பாசிலாஷ்விலி

இ. சுமித் நாகல்

ஈ. ரமேஷ் கிருஷ்ணன்

  • சுமித் நாகல் தனது ஆறாவது ATP சேலஞ்சர் பட்டத்தை ஜெர்மனியில் நடந்த 2024 – ஹெய்ல்பிரான் நெக்கர்கப் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் மூன்று செட்களில் அலெக்சாண்டர் ரிட்சார்ட்டை வீழ்த்தியதன்மூலம் பெற்றார். இவ்வெற்றி சுமித் நாகலின் ATP தரவரிசையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது; மேலும் 2024 கோடைகால பாரிஸ் ஒலிம்பிக்கில் அவரது இடத்தை தக்கவைக்க உதவும். இது அவரது நான்காவது களிமண் கள பட்டத்தையும், 2024இல் அவரது இரண்டாவது வெற்றியையும் குறிக்கிறது.

19. எந்த நாட்டின் முன்னாள் பிரதமர், ஐநா பொதுச்சபையின் வரவிருக்கும் 79ஆவது கூட்டத்தொடரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

அ. கேமரூன்

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • ஐநா பொதுச்சபையின் 79ஆவது கூட்டத்தொடரின் தலைவராக கேமரூனின் முன்னாள் பிரதமர் பிளமோன் யாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமர்வு செப்.10, 2024 செவ்வாய் அன்று தொடங்கி செப்டம்பர் 24, 2024 செவ்வாய் அன்று நியூயார்க் நகரில் முடிவடையும். பிளமோன் யாங் ஓராண்டு காலத்திற்கு இதன் தலைமைப் பொறுப்பை வகித்திருப்பார். ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், பிளமோன் யாங்கை, “தன்னுடைய கண்டத்தின் எதிர்காலத்திற்காக தன்னையே அர்ப்பணித்த பெருமைக்குரிய ஆப்பிரிக்கர்” என்று விவரித்தார்.

20. அண்மையில், 2024 – நார்வே செஸ் போட்டியை 17.5 புள்ளிகளுடன் வென்றவர் யார்?

அ. R பிரக்ஞானந்தா

ஆ. மேக்னஸ் கார்ல்சன்

இ. ஃபேபியானோ கருவானா

ஈ. குகேஷ் டி

  • மேக்னஸ் கார்ல்சன் நார்வே செஸ் போட்டியில் ஆறாவது முறையாக வென்றார். ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான ஆர்மகெடான் டை-பிரேக்கரில் அவர் இவ்வெற்றியைப்பெற்றார்.
  • இந்திய கிராண்ட்மாஸ்டர் R பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றில் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சனை விட 3 புள்ளிகள் பின்தங்கி 3ஆவது இடத்தைப்பிடித்தார். பெண்கள் பிரிவில் இந்தியாவின் R வைஷாலி நான்காவது இடத்தையும், GM கோனேரு ஹம்பி ஐந்தாமிடத்தையும் பிடித்தனர். ஸ்டாவஞ்சரில் நடைபெற்ற இந்தப்போட்டியில், இறுதிச்சுற்றில் பல பரபரப்பான ஆட்டங்கள் இடம்பெற்றன.

21. இந்தியக்கடற்படையின் முதல் பெண் ஹெலிகாப்டர் ஓட்டுநர் யார்?

அ. மோகனா சிங்

ஆ. அனாமிகா B ராஜீவ்

இ. பிரியா பால்

ஈ. அர்ச்சனா கபூர்

  • துணை Lt. அனாமிகா B ராஜீவ், அரக்கோணம் INS ராஜாளியில், இந்தியக்கடற்படையில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனை 102ஆவது ஹெலிகாப்டர் கன்வெர்ஷன் கோர்ஸின் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பின்போது எட்டப்பட்டது. ஜூன்.7 அன்று 4ஆவது அடிப்படை ஹெலிகாப்டர் கன்வெர்ஷன் பயிற்சியின் முதல்கட்டப்பயிற்சியின் முடிவைக்குறிக்கும் நிகழ்வில் துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தகர் இருபத்தோரு அதிகாரிகளுக்கு, “பொன்னிறக்கைகள் – Golden Wings” விருதை வழங்கினார்.

22. அண்மையில், பிரேம் சிங் தமாங் என்பவர் கீழ்க்காணும் எந்த இமயமலை மாநிலத்தின் முதலமைச்சரானார்?

அ. உத்தரகாண்ட்

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. மேகாலயா

  • சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் பிரேம் சிங் தமாங் சிக்கிமின் முதலமைச்சராக ஜூன்.10 அன்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். 56 வயதான அவர் நேபாளி மொழகயில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா அவருக்கு வால் கேங்க்டாக்கில் உள்ள பால்ஜோர் அரங்கத்தில் வைத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சோனம் லாமா, அருண் குமார் உப்ரேட்டி உட்பட 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

23. அண்மையில், மத்திய பிரதேசத்தின் எந்தபப் புலிகள் காப்பகத்தில், முதன்முறையாக ஓர் அரிய 4 கொம்புகள் கொண்ட மறிமான் காணப்பட்டது?

அ. வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகம்

ஆ. கன்ஹா புலிகள் காப்பகம்

இ. பென்ச் புலிகள் காப்பகம்

ஈ. பன்னா புலிகள் காப்பகம்

  • ‘சௌசிங்கா’ என்றழைக்கப்படும் ஓர் அரிய 4 கொம்புகள்கொண்ட மறிமான் முதன்முறையாக முன்னர் நௌரதேகி சரணாலயம் என்றழைக்கப்பட்ட வீராங்கனை துர்காவதி புலிகள் காப்பகத்தில் தென்பட்டது. Tetracerus quadricornis என்ற அறிவியல் பெயருடைய மிகச்சிறிய ஆசிய மான் வகையான இது, இந்தியா மற்றும் நேபாளத்தில் மட்டுமே உள்ளது. இம்மான்கள் வறண்ட, இலையுதிர் காடுகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் வாழ்கின்றன. ஆண் மான்களுக்கு மட்டுமே 4 கொம்புகள் உள்ளன. IUCNஇன் சிவப்புப்பட்டியலில் இம்மான்கள் பாதிக்கப்படக் கூடியவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.

24. ‘AIM – ICDK நீர் சவால் 4.0’ என்பது கீழ்க்காணும் எந்த அமைப்பின் முன்முயற்சியாகும்?

அ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்

ஆ. NITI ஆயோக்

இ. வேளாண்மை அமைச்சகம்

ஈ. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

  • NITI ஆயோக்கின்கீழ் உள்ள அடல் புத்தாக்க இயக்கம் (AIM) இரண்டு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியது: ‘AIM – ICDK நீர் சவால் 4.0’ மற்றும் ‘உங்களுக்கான கண்டுபிடிப்புகள்’ கையேட்டின் ஐந்தாவது பதிப்பு.
  • இந்தியாவில் உள்ள இராயல் டேனியர் தூதரகத்தில் அமைந்துள்ள டென்மார்க் புதுமை கண்டுபிடிப்பு மையத்துடன் இணைந்து அடல் புத்தாக்க இயக்கம், நீர் சவாலில் வெளிப்படையான புதுமைக் கண்டுபிடிப்புகளின் நான்காவது பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முன்முயற்சி கண்டுபிடிப்புத் தீர்வுகள்மூலம் சிக்கலான தண்ணீர் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இந்தியா – டேனிய இருதரப்பு பசுமை உத்திசார்ந்த கூட்டாண்மையின் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் இந்திய கூட்டாண்மையை உலகளாவிய அடுத்த தலை முறை டிஜிட்டல் செயல் திட்டத்தில் பங்கேற்கும் மற்றும் ஒன்பது நாடுகளின் (இந்தியா, டென்மார்க், கானா, கென்யா, கொரியா, தான்சானியா, தென்னாப்பிரிக்கா, கானா, கொலம்பியா & மெக்ஸிகோ) முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களிலிருந்து இளம் திறமையாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டில் முதல்முறையாக… சென்னையில் அரசு இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் தொடக்கம்!

நாட்டிலேயே முதல்முறையாக சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகம் ஜூன்.07 அன்று தொடங்கப்பட்டது. எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், மதுரையில் இராஜாஜி மருத்துவமனையிலும் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என்று 2022-23ஆம் ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் மகப்பேறுகளில் தாய்மார்களின் இறப்பு 70க்கும் மேல் இருந்தது. அது தொடர்ச்சியாக படிப்படியாக குறைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாள் 54ஆகவும், கடந்த ஆண்டு 52ஆகவும், இந்த ஆண்டு 45ஆகவும் குறைந்துள்ளது. . உலக சுகாதார மையம் இன்றைக்கு இந்தியாவில் கருத்தரிப்பின்மை பாதிப்பு என்பது 25-45 வயதுக்குட்பட்ட மகளிருக்கு 3.9 சதவீதமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2. ‘ரெப்போ’ வட்டி விகிதம்: 8ஆவது முறையாக மாற்றமில்லை.

வங்கிகளுக்கான குறுகிய காலக்கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து எட்டாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடர்கிறது.

RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதாரம், நிதிசார் முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு 6.5% வட்டி விகிதத்தை மாற்றமின்றி தொடர்வது என்று நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக முடிவெடுக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி 7.2%:

கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வேகமெடுத்த பொருளாதார வளர்ச்சியால் (7.8 சதவீதம்) இது சாத்தியமானது.

பணவீக்கம் 4.5%: கடந்த நிதியாண்டில், பணவீக்கம் 4.8%ஆக இருந்தது. இந்நிதியாண்டில் அது 4.5 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு தங்க இருப்பு அதிகரிப்பு: வெளிநாட்டு இருப்பின் ஒருபகுதியாக பிரிட்டனில் இருந்து 100 மெட்ரின் டன் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தங்க இருப்பு 822 டன்னாக உள்ளது. அதில் 408 டன் உள்நாட்டிலும் 413 டன் வெளிநாட்டிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி உச்சம்: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த மே.31ஆம் தேதி $65,151 கோடி டாலராக உச்சம் பெற்றது.

3. பனை மரங்கள் பாதுகாப்பு:

உடன்குடி, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பனைத்தொழிலை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற உணவுப்பொருள்கள் பிரபலமானவை. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனைப்பொருள்கள் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதோடு, அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. மேலும், உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடும் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பனை மரங்களை வெட்டுவதைத் தடுக்க கடந்த 2021ஆம் ஆண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல்.

காவேரியாறு மற்றும் அதன் துணையாறுகளுடன் இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நீர்நிலைகளுக்கு புத்துயிரளிக்கும் வகையில் `11,250 கோடி மதிப்பில், ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்துக்கு மத்திய அரசின் மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் கட்டமாக `1,958 கோடியில் புனரமைப்புத் திட்டம் மேட்டூர் முதல் திருச்சிராப்பள்ளி வரையிலும், 2ஆவது கட்ட புனரமைப்பு பணி திருச்சிராப்பள்ளி முதல் காவேரி கடலில் இணையும் இடம் வரையிலான ஆற்றின் போக்கில் `8,753 கோடி செலவில் காவேரி புத்துயிர் திட்டம் செயல்படுத்தப்படும்.

‘நமாமி கங்கை’ திட்டத்தைத் தொடர்ந்து, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி உள்ளிட்ட தென்மாநிலங்களில் வற்றாத ஆறுகளுக்குப் புத்துயிரளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான பூர்வாங்க அறிக்கை 2019 அக்.21ஆம் தேதி ஜல் சக்தி அமைச்சகத்திடம் கொள்கை ரீதியான ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

5. பிரதமராக நரேந்திர மோதி இன்று பதவியேற்பு:

பிரதமராக தொடர்ந்து 3ஆம் முறையாக நரேந்திர மோதி ஜூன்.09 அன்று பதவியேற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைப்பார். நாட்டில் தொடர்ந்து 3 முறை பிரதமரான முன்னாள் பிரதமா ஜவஹர்லால் நேருவின் சாதனையை நரேந்திர மோதி தற்போது சமன் செய்யவுள்ளார். அண்மையில் நடந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

6. ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் வெளிநாடு செல்லும் மாணவர்கள்:

‘நான் முதல்வன்’ திட்டத்தின் பல்வேறு பாடப்பிரிவுகளில் தேர்வுசெய்யப்பட்ட தமிழ்நாட்டுக்கல்லூரிகளைச்சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் சிறப்புப்பயிற்சி பெறுவதற்காக இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!