Tnpsc Current Affairs in Tamil – 7th June 2024
1. எந்த அதிகாரத்தின் தலைமையின்கீழ், தேசிய நெருக்கடி மேலாண்மைக்குழு (NCMC) அமைக்கப்பட்டுள்ளது?
அ. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்
ஆ. இந்திய அமைச்சரவைச் செயலாளர்
இ. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
ஈ. இந்தியாவின் குடியரசுத் தலைவர்
- வெப்ப அலைகள் & காட்டுத்தீக்கான தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கான தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமைதாங்கினார். பேரிடர் மேலாண்மைக்கான முக்கிய தேசிய அளவிலான முடிவெடுக்கும் அமைப்பான NCMC, நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது, பல்வேறு மாநில அரசுகளுக்கு ஆதரவை வழங்குகிறது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்கிறது. அமைச்சரவை செயலாளரின் தலைமையின்கீழ், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் செயலாளர்கள் இதில் அடங்குவர்.
2. அண்மையில், ‘சிறார் ஊட்டச்சத்து அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
அ. UNICEF
ஆ. WHO
இ. UNDP
ஈ. உலக வங்கி
- UNICEFஇன், ‘சிறார் ஊட்டச்சத்து அறிக்கை, 2024’ உலகளவில் 27% குழந்தைகள் கடுமையான உணவில்லா நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில், இதன் சதவீதம் 40%ஆக உள்ளது; இது தெற்காசியாவிலேயே இரண்டாவது மிக அதிகமாகும். முதன்மை சிக்கல்களில் நலமற்ற உணவுகளின் பரவல் அடங்கும். சமத்துவமின்மை, மோதல்கள், காலநிலை நெருக்கடிகள் மற்றும் உணவு சந்தைப்படுத்தல் ஆகியவை பங்களிக்கும் காரணிகள் ஆகும். தரவு அமைப்புகளை மேம்படுத்துதல், உணவு முறைகளை மாற்றுதல் மற்றும் குழந்தை ஊட்டச்சத்துக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவை UNICEFஇன் பரிந்துரைகளில் அடங்கும்.
3. ‘TRISHNA’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. விண்வெளியை ஆராய்தல்
ஆ. மேற்பரப்பு வெப்பநிலை & நீர் மேலாண்மையை பிராந்திய அளவிலிருந்து உலகளவில் கண்காணித்தல்
இ. கடல் நீரோட்டங்களைப் ஆய்வது
ஈ. நிலவின் மேற்பரப்பை வரைபடமாக்குதல்
- ISRO & CNES இடையேயான கூட்டுப்பணியான, ‘TRISHNA’ பணியானது, உலகளவில் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் நோக்கங்களில் ஆற்றல் மற்றும் நீர் வரவு செலவுகளை விரிவாகக் கண்காணித்தல், நகர்ப்புற வெப்பத்தீவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் வெப்ப முரண்பாடுகளைக் கண்டறிதல் ஆகியவை அடங்கும். இந்தத்திட்டமானது இரு முதன்மை பேலோடுகளைக் கொண்டுள்ளது: CNESஇன் தெர்மல் இன்ஃப்ரா-ரெட் சென்சார் மற்றும் ISROஇன் VNIR-SWIR பேலோடு.
- சூரியன் ஒத்திசைவான சுற்றுப்பாதையில் செயல்படும், ‘TRISHNA’, அதன் ஐந்தாண்டு செயல்பாட்டு வாழ்க்கையில் காலநிலை கண்காணிப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடலை கணிசமாக மேம்படுத்தும்.
4. சமீபத்தில், 2025-26 காலத்திற்கு UNSCஇன் நிரந்தர உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் எவை?
அ. உக்ரைன், இஸ்ரேல், சோமாலியா மற்றும் மாலத்தீவுகள்
ஆ. உகாண்டா, கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான்
இ. பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரேக்கம் மற்றும் பனாமா
ஈ. பெரு மற்றும் சிலி
- பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரேக்கம் மற்றும் பனாமா ஆகிய நாடுகள் இரகசிய வாக்கெடுப்புமூலம் UNSC இன் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இரண்டாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன; நிரந்தரமற்ற உறுப்பினர் ஆவதற்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபையின் 2/3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாகிஸ்தான் தனது எட்டாவது பதவிக்காலத்தில் உள்ளது. 1963ஆம் ஆண்டின் ஐநா சாசனத் திருத்தம் நிரந்தரமற்ற உறுப்பினர்களை ஆறிலிருந்து பத்தாக உயர்த்தியது.
5. அண்மையில், நெகிழிக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி ஆலையை தொடக்கிய மாநில அரசு எது?
அ. அஸ்ஸாம்
ஆ. சிக்கிம்
இ. மணிப்பூர்
ஈ. மிசோரம்
- இந்திய ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவு, கிழக்கு சிக்கிமில் நெகிழிக் கழிவு மேலாண்மை ஆலை தொடங்குவது உட்பட, வட வங்கம் மற்றும் சிக்கிமில், ‘Go Green Initiatives’மூலம் உலக சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடியது. ‘சத்பவனா’ முயற்சியின் ஒருபகுதியாக, நெகிழிக்கழிவுகளை சாலை கட்டமைப்புப்பொருட்கள் மற்றும் செங்கற்களாக மறுசுழற்சி செய்வதன்மூலம் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி கிராம மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் 2027ஆம் ஆண்டுக்குள் நிலநிரப்புகளை அகற்றுவதை இலக்காகக்கொண்டு சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான இராணுவத்தின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
6. அண்மையில், இந்தியா மற்றும் கத்தாருக்கு இடையிலான முதலீட்டுக்கான கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி
ஆ. தோஹா
இ. சென்னை
ஈ. கன்னியாகுமரி
- இந்தியா மற்றும் கத்தார் இடையேயான முதலீட்டுக்கான கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை இந்தக்கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு, ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம்போன்ற துறைகளில் இது கவனம் செலுத்துகிறது. இது உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது; இது இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையேயான வலுவான பொருளாதார உறவுகளை பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் வலுப்படுத்துகிறது.
7. அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனை பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்?
அ. 67
ஆ. 74
இ. 79
ஈ. 97
- அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில், 74 பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 2019இல் வெற்றிபெற்ற 78இல் இருந்து இது சிறிதளவு குறைந்துள்ளது. இந்த 74 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் 13.63% உள்ளனர்; இது 33% பிரதிநிதித்துவத்திற்கு வெகு தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளாக முன்னேற்றம் இருந்தாலும், மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மெதுவாகவும், சீரற்றதாகவும் உள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கை 1952இல் நடந்த முதல் தேர்தல்களில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது; அப்போது 22 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
8. 2024 – உலக பெருங்கடல்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Planet Ocean: Tides are Changing
ஆ. Awaken New Depth
இ. Revitalization: Collective Action for the Ocean
ஈ. The Ocean: Life and Livelihoods
- உலக பெருங்கடல் நாளானது ஜூன்.08 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் கடல்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்புபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “Awaken New Depth” என்ற கருப்பொருள், கடல்சார் சூழல்களில் மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை மையமாகக் கொண்டது மற்றும் நிலையான கடல்சார் மேலாண்மையை ஊக்குவிக்கிறது. ஐநா சபை அதன் நியூயார்க் தலைமையகத்தில் இந்த நாளின் கொண்டாட்டங்களை நடத்துகிறது.
9. அண்மையில் காலஞ்சென்ற A J T ஜான்சிங் என்பவர் சார்ந்த துறை எது?
அ. வனவிலங்கு பாதுகாவலர்
ஆ. கேளிக்கைக் கலைஞர்
இ. கவிஞர்
ஈ. அரசியல்வாதி
- புகழ்பெற்ற இந்திய வனவிலங்கு பாதுகாப்பாளரும் உயிரியலாளருமான A J T ஜான்சிங், 2024 ஜூன்.07ஆம் தேதி அன்று பெங்களூருவில் 78 வயதில் காலமானார். தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பிறந்த அவர், ஜிம் கார்பெட்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டார். ஜான்சிங், இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் சேர்ந்து புலிகள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி பல்வேறு உயிரினங்களில் கவனம் செலுத்தியது. மேலும் அவர் 70-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்த 80 பிரபலமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
10. அண்மையில், ஜெர்மனியின் முனிச்சில் நடந்த ISSF உலகக்கோப்பை-2024இல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
அ. சௌரப் சவுத்ரி
ஆ. திவ்யான்ஷ் சிங்
இ. சரப்ஜோத் சிங்
ஈ. அபிஷேக் வர்மா
- மே.31 முதல் ஜூன்.08, 2024 வரை ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற ISSF உலகக்கோப்பையில் சரப்ஜோத் சிங் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் 242.7 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார். சீனாவின் ஷுவாய்ஹாங் பு வெள்ளியும், ஜெர்மனியின் ராபின் வால்டர் வெண்கலமும் வென்றனர். பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியில் சிஃப்ட் கவுர் சாம்ரா வெண்கலம் வென்றார். இந்தியா இரண்டு பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
11. மோங்லா துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
அ. வங்காளதேசம்
ஆ. மியான்மர்
இ. இலங்கை
ஈ. இந்தியா
- சீனாவின் பிராந்திய செல்வாக்கை எதிர்கொள்ள வங்காளதேசத்தின் மோங்லா துறைமுகத்தை இயக்கவும், புதிய முனையத்தை உருவாக்கவும் இந்தியா இலக்கு வைத்துள்ளது. வங்காளதேசத்தின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான மோங்லா, வங்காள விரிகுடாவில் இருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் சுந்தரவனக்காடுகளால் பாதுகாக்கப்படுகிறது. மோங்லா மீதான இந்தியாவின் ஆர்வம், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு போக்குவரத்துச் செலவையும் குறைக்கும்.
12. வகுப்பறைகளில், ‘பசுமைப்படுத்தல் கல்வி’க்கான புதிய முயற்சிகளை தொடங்கியுள்ள அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. UNICEF
இ. UNESCO
ஈ. UNEP
- UNESCO ஆனது பசுமைப்படுத்தல் கல்விக்கூட்டாண்மையின்கீழ், பசுமைப்படுத்தல் பாடத்திட்ட வழிகாட்டுதல் மற்றும் பசுமைப்பள்ளி தரத் தரநிலைகள் ஆகிய புதிய கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பசுமைப்படுத்தல் பாடத்திட்ட வழிகாட்டுதல் ஆனது பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் தலைப்புகளை முதன்மையாகக் கொண்டு வருவதற்கான நடைமுறை கையேட்டை வழங்குகிறது. பசுமைப்பள்ளி தரத் தரநிலைகள் – ஒரு செயல்சார்ந்த அணுகுமுறையுடன் பசுமைப்பள்ளிகளை உருவாக்குவதற்கான குறைந்தபட்ச தேவைகளை அமைக்கிறது. எண்பது உறுப்புநாடுகளை உள்ளடக்கிய இந்த முன்முயற்சி, பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் திறன் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் திறன்களை கற்பவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வெப்பத்தின் தாக்கம் குறைக்க கட்டடங்களில், ‘சிலிக்கான் பெயின்ட்’ அடிக்கும் திட்டம்.
வெப்பத்தின்தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு கட்டடங்களின் மேற்பகுதியில் ‘சிலிக்கான் வண்ணப்பூச்சு’ அடிக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 68% மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர் என அத்துறை கூறியுள்ளது.