Tnpsc Current Affairs in Tamil – 7th December 2023
1. எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் செயல்படுகிறது?
அ. உள்துறை அமைச்சகம் 🗹
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
ஈ. சட்ட அமைச்சகம்
- கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 4,45,256 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2021ஆம் ஆண்டில் 4,28,278 ஆகவும், கடந்த 2020ஆம் ஆண்டில் 3,71,503 ஆகவும் இருந்தது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆண்டறிக்கையின்படி ஒரு இலட்சம் மக்களுள் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் 66.4 ஆகும்.
- தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகபட்ச விகிதம் தில்லியில் (144.4) காணப்படுகிறது. நாட்டின் மொத்த சராசரி விகிதம் 66.4 ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேச மாநிலத்தில் (65,743) அதிகபட்ச முதல் தகவல் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
2. அண்மையில் GRSEஆல் வழங்கப்பட்ட இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஆய்வுக்கப்பலின் பெயர் என்ன?
அ. INS சந்தாயக் 🗹
ஆ. INS சஹாயக்
இ. INS சுவீகர்
ஈ. INS சந்தேஷ்
- கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஆய்வுக்கப்பலான INS சந்தாயக்கை கடற்படை நாளன்று இந்தியக் கடற்படையிடம் வழங்கினர். GRSEஆல் கட்டப்படும் நான்கு ஆய்வுக் கப்பல்களின் (பெரியது) வரிசையில் INS சந்தாயக் முதன்மையானதாகும். இது 1981 முதல் 2021 வரை இந்தியக் கடற்படையில் ஆய்வுக்கப்பலாக இதே பெயரில் இயங்கி வந்த கப்பலின் புதிய பதிப்பாகும். இந்த ஆய்வுக் கப்பல்கள் முழு அளவிலான கடலோர மற்றும் ஆழ்கடல் நீரியலை ஆய்வுசெய்யும் திறன்கொண்டவை.
3. இந்தியாவில், ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ வெளியிடும் நிறுவனம் எது?
அ. ஜல் சக்தி அமைச்சகம்
ஆ. NITI ஆயோக் 🗹
இ. WAPCOS
ஈ. DPIIT
- NITI ஆயோக் ஆனது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இதுவரை 2018 ஜூனில் ஒருமுறையும் CWMI 2.0 என கடந்த 2019 ஆகஸ்டில் ஒருமுறையும் என இரு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. CWMI இன் அடுத்த பதிப்பு, நாடு தழுவிய COVID-19 நிலைமை காரணமாக தாமதத்துடன் 2022 ஆகஸ்டில் தயாரிக்கப்பட்டது. கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டின் மூன்றாவது முதல் ஆறாவது பதிப்பு வரையிலான ஒருங்கிணைந்த அறிக்கையை NITI ஆயோக் விரைவில் வெளியிடும்.
4. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் வெப்பமண்டல சூறாவளிகளுக்கானப் பெயர்கள் எதன் அடிப்பையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?
அ. பல்வேறு நாடுகளின் பரிந்துரையின் பேரில் 🗹
ஆ. UNESCOஇன் பரிந்துரையின் பேரில்
இ. UNEPஇன் பரிந்துரையின் பேரில்
ஈ. UNFCCCஇன் பரிந்துரையின் பேரில்
- ‘மிக்ஜம்’ புயலானது கடந்த டிச.05ஆம் தேதியன்று, ஆந்திர பிரதேச மாநிலத்தின் நெல்லூரில் கரையைக் கடந்தது. அதற்கு ஒருநாள் முன்னதாக, அப்புயல் வட தமிழ்நாட்டில் 150-200 மிமீ மழையைப் பொழிந்தது. கடந்த 2000ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையத்தின் உறுப்பினர்களைக்கொண்ட உலக வானிலை அமைப்பின் குழுமம் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் வெப்பமண்டல சூறாவளிகளின் பெயர்களின் பட்டியலைத் தயாரித்தது. இது 2004 செப்டம்பர் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் இந்தப் பெயர்கள் பயன்படுத்தபடுகிறது.
- ‘மிக்ஜம்’ (மியான்மர்) புயலைத் தொடர்ந்து வரும் அடுத்த ஐந்து புயல்கள் ‘ரெமல்’ (ஓமன்), ‘அஸ்னா’ (பாகிஸ்தான்), ‘டானா’ (கத்தார்), ‘பெங்கால்’ (சவூதி அரேபியா) மற்றும் ‘சக்தி’ (இலங்கை) என்று அழைக்கப்படும்.
5. SAMRIDHI (Strategic Acceleration for Market, Research, Innovation & Development) தொடங்கப்பட்ட மாநிலம் எது?
அ. மகாராஷ்டிரா
ஆ. ஒடிசா
இ. பஞ்சாப் 🗹
ஈ. இராஜஸ்தான்
- பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், iHub AwaDHஆல் வழிநடத்தப்படும் SAMRIDHI (சந்தை, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த முடுக்கம்: ICPS துளிர் நிறுவல்களுக்கான முழுமையான முன்னெடுப்பு) எனப்படும் உழவு மற்றும் நீர் தொழில்நுட்பத்தில் புதுமையைக் கொண்டு வரும் துளிர் நிறுவல் முடுக்கித்திட்டத்தை தொடக்கிவைத்தார். iHub AwaDh என்பது National Mission on Interdisciplinary Cyber-Physical Systems (NM-ICPS) கீழ் அமைக்கப்பட்ட மையங்களாகும்.
6. இந்தியா இணைய ஆளுகை மன்றம் – 2023 நடத்தப்படுகிற நகரம் எது?
அ. ஹைதராபாத்
ஆ. புது தில்லி 🗹
இ. பெங்களூரு
ஈ. சென்னை
- இந்தியா இணைய ஆளுகை மன்றம் – 2023 ஆனது, “Moving Forward – Calibrating Bharat’s Digital Agenda” என்ற கருப்பொருளின்கீழ் நடத்தப்படுகிறது. இந்தியா இணைய ஆளுகை மன்றம் என்பது ஐநா இணைய ஆளுகை மன்றத்துடன் தொடர்புடைய ஒரு முன்னெடுப்பாகும். இந்நிகழ்வு புது தில்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வானது பாதுகாப்பான, நம்பகமான & நெகிழ்வான இணையவெளியை உருவாக்குதலில் தனது கவனத்தைச்செலுத்தும்.
7. காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் (UNFCCC) எத்தனையாவது மாநாட்டை (COP) நடத்த இந்தியா முன்வந்துள்ளது?
அ. 29ஆவது
ஆ. 30ஆவது
இ. 32ஆவது
ஈ. 33ஆவது 🗹
- ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் (UNFCCC) 33ஆவது மாநாட்டை (COP33) நடத்த பிரதமர் நரேந்திர மோடி முன்வந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த COP28 மாநாட்டில் உயர்மட்டப்பிரிவின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, COP33 உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்தார். இதற்கு முன்னர் 2022 அக்.23 முதல் நவ.01 வரை புது தில்லியில் COP8ஐ இந்தியா நடத்தியது.
8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கஜராஜ் சிஸ்டம்’ என்பது ____?
அ. யானைகளிடையே நோயைக் கண்டறிவதற்கு AI அடிப்படையிலான அமைப்பு
ஆ. யானைகளின் இறப்பைத் தடுப்பதற்கு AI அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு
இ. யானைகளைப் பயிற்றுவிப்பதற்கான AI அடிப்படையிலான அமைப்பு
ஈ. யானைகளின் சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான AI அடிப்படையிலான அமைப்பு
- இரயில் தண்டவாளங்களில் யானைகள் சிக்கி மரணிப்பதைத் தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை இந்திய இரயில்வே தொடங்கியது. வனப்பகுதிகள் வழியாக செல்லும் 700 கிமீ நீள இரயில் பாதையில், ‘கஜராஜ் சிஸ்டம்’ நிறுவப்படவுள்ளது. அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா, கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த வசதி நிறுவப்படும் என இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சில துளிர் நிறுவல்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், கடந்த ஆண்டு அஸ்ஸாமில் 150 கிமீட்டர் நீள இரயில் பாதையில் செயல்படுத்தப்பட்டது.
9. உலகின் முதல் பெயர்த்தகு பேரிடர் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ள நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தியா
இ. உக்ரைன்
ஈ. இஸ்ரேல்
- மத்திய சுகாதார அமைச்சகமும் மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இணைந்து உலகின் முதல் பெயர்த்தகு பேரிடர் மருத்துவமனையை உருவாக்கியுள்ளன. உயிரிழப்பு சம்பவங்களில் பயன்படுத்தக்கூடிய 72 உதவி கியூப்களை இது உள்ளடக்கியதாகும். BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitri) திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்பு, இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோருக்குச் சிகிச்சையளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
10. அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. டிசம்பர்.01
ஆ. டிசம்பர்.02 🗹
இ. டிசம்பர்.03
ஈ. டிசம்பர்.04
- சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு நாளானது ஐக்கிய நாடுகள் பொது அவையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் டிச.02ஆம் தேதி அனுசரிக்கப்படும் நாளாகும். இந்த நாள் முதன் முதலில் 1986ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. இந்த நாளன்று, கடந்த காலங்களில் அடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்களை உலகம் நினைவு கூர்கிறது.
11. 2023 – உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் இந்தியாவின் தரநிலை யாது?
அ. 49 🗹
ஆ. 59
இ. 62
ஈ. 52
- மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனமானது (IMD) 2023ஆம் ஆண்டுக்கான அதன் உலக டிஜிட்டல் போட்டித்தன்மை தரவரிசையை வெளியிட்டது. IMDஇன் ஆய்வின்படி, இணைய பாதுகாப்பு அறிவின் அடிப்படையில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால தயார்நிலைபோன்ற கூறுகளில் அது சிறப்பான இடத்தில் இல்லை. 64 நாடுகளில் இந்தியா 49ஆவது இடத்தில் உள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. நாட்டில் அங்கீகாரம் பெற்ற 1.14 லட்சம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: மத்திய அரசு
கடந்த அக்.31ஆம் தேதி நிலவரப்படி, 1,14,902 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டுத் துறை அங்கீகரித்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.