TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 5th and 6th June 2024

1. அகாட்சுகி திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. ESA

  • ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) அகாட்சுகி உடனான தொடர்பை இழந்தது. இது 2010இல் ஜப்பானால் மற்றொரு கோளுக்குச் செல்வதற்கான முதல் வெற்றிகரமான திட்டமாகும். அகாட்சுகி, வெள்ளிக்கோளைச்சுற்றியுள்ள நிலநடுக்கோடு சுற்றுப்பாதையில் திரிந்து அக்கோளின் நச்சு வளிமண்டலம் மற்றும் எரிமலை மேற்பரப்பு, வானிலை முறைகள், மின்னல் மற்றும் வலுவான காற்றினால் ஏற்படும் மீ-சுழற்சி ஆகியவற்றை ஆய்வுசெய்தது. இது 2014 வரை செயல்பட்ட ESAஇன் வீனஸ் எக்ஸ்பிரஸுக்கு துணையாக இருந்தது. அது புற-ஊதா மற்றும் அகச்சிவப்பு கேமராக்களைப் பயன்படுத்தி உலகளவில் மேகங்கள் மற்றும் வளிமண்டல கட்டமைப்புகளை வரைபடமாக்கியது.

2. Dictyostelium discoideum’ என்றால் என்ன?

அ. அமீபா

ஆ. பாசி

இ. களை

ஈ. மருந்து

  • பசுந்தாடி மரபணுக்கள் ‘Dictyostelium discoideum’ அமீபாவில் இயற்கையான பொதுநலப்பண்புகளை இயக்குகிறன என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த மரபணுக்கள் தனிநபர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு ஒத்துழைக்க உதவுகின்றன; இது வெவ்வேறு மரபணு பதிப்புகளைக் கொண்டடோர்க்கு தீங்கு விளைக்கும் நடத்தையை ஏற்படுத்துகிறது. இயற்கையில் பொதுநலப்பண்பு என்பது ஒரு விலங்கு தனக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படும் நடத்தையை உள்ளடக்கியது; ஆனால் அதன் இனத்தின் மற்றவற்றுக்கு நன்மை பயக்கும்.

3. 2025 ஜூன் 8-10 வரை இந்தியாவின் தில்லியில் 81ஆவது IATA வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் உலக வான் போக்குவரத்து உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?

அ. நேபாளம்

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. ரஷ்யா

  • சர்வதேச வான் போக்குவரத்துக் கழகத்தின் (IATA) வருடாந்திர பொதுக்கூட்டத்தை (AGM) அடுத்த ஆண்டு இந்தியா நடத்தவுள்ளது. 1945இல் நிறுவப்பட்ட IATA, உலகளாவிய விமானத்தொழிற்துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதன் நலன்களுக்காக வாதிடுகிறது மற்றும் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தற்கு தொழில் தரங்களை நிறுவுகிறது. முன்னணி பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் உட்பட 330 உறுப்பினர் விமான நிறுவனங்களுடன், IATA விமானத்துறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமையகம் கனடாவின் மாண்ட்ரீலில் அமைந்துள்ளது.

4. அண்மையில், அஸ்ஸாமின் எந்த மாவட்டத்தில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (IIM) நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

அ. காமரூபம்

ஆ. ஜோர்காட்

இ. கோலாகாட்

ஈ. சோனித்பூர்

  • காமரூபம் மாவட்டத்தில் புதிய இந்திய மேலாண்மை நிறுவனத்தை நிறுவுதற்கான (IIM) அஸ்ஸாமின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. IIM ஆமதாபாத் இத்திட்டத்திற்கு வழிகாட்டுகிறது. இம்முடிவு வடகிழக்கில் கல்வி மற்றும் தொழிற்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது; அங்கு தற்போது ஒரே ஒரு IIM மட்டுமே உள்ளது. IIM ஆமதாபாத்துடனான அஸ்ஸாம் மாநிலத்தின் ஒத்துழைப்பு கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியால் அண்டை மாநிலங்களான நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகியவை பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5. ஆண்டுதோறும், ‘வன்தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான உலக நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.03

. ஜூன்.04

இ. ஜூன்.05

ஈ. ஜூன்.06

  • ஆண்டுதோறும் ஜூன்.4ஆம் தேதி அன்று, வன்தாக்குதலுக்கு ஆளான அப்பாவி குழந்தைகளுக்கான உலக நாள், அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் துன்பங்களை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 19, 1982இல் நிறுவப்பட்ட இந்நாள், அப்பாவி குழந்தைகள் தாங்கும் வலியை மையமாகக்கொண்டுள்ளது. 1997இல் நிறுவப்பட்ட போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐநா அலுவலகம் (UNODC), குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. ஹைட்ராக்ஸியூரியா மருந்துடன் தொடர்புடைய நோய் எது?

அ. டெங்கு

ஆ. காசநோய்

இ. மலேரியா

ஈ. அரிவாள் செல் இரத்த சோகை

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) இந்தியாவில் இருபது மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் அரிவாள் செல் இரத்த சோகை நோயின் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறது. சிறார் நோயாளிகளுக்கு ஏற்ற ஹைட்ராக்ஸியூரியா சூத்திரங்கள் இல்லாதது, சிறார்களுக்கு துல்லியமான அளவை மருந்தளவை வழங்குவதில் சிக்கலை உண்டாக்குகிறது. அரிவாள் செல் இரத்த சோகை நோய் மற்றும் தலசீமியாவுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுடைய ஹைட்ராக்ஸியூரியா, தற்போது குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியில் இல்லை.
  • இதற்குத் தீர்வுகாண, இளம் நோயாளிகளுக்கு சிகிச்சை நெறிமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, குழந்தைகளுக்கான குறைந்த அளவிலான ஹைட்ராக்ஸியூரியா சூத்திரங்களை உருவாக்குவதற்கும் வணிகமயமாக்குவதற்கும் ICMR ஒத்துழைப்பை நாடுகிறது.

7. 2024 – உலக சுற்றுச்சூழல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Land restoration, desertification and drought resilience

ஆ. Beat Plastic Pollution

இ. Ecosystem Restoration

ஈ. Solution to plastic pollution

  • உலக சுற்றுச்சூழல் நாளானது கடந்த 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன்.05 அன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோர் இதை கடைப்பிடிப்பதில் பங்கேற்கின்றனர். “Land restoration, desertification and drought resilience” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் உலக சுற்றுச்சூழல் நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. 2024 – உலக சுற்றுச்சூழல் நாளுக்கானக் கொண்டாட்டங்களை நிகழ்த்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. சவூதி அரேபியா

ஈ. ரஷ்யா

  • உலக சுற்றுச்சூழல் நாளானது ஆண்டுதோறும் ஜூன்.05ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. சவூதி அரேபியாவால் நடத்தப்படும் 2024ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாளின் கொண்டாட்டங்கள், பாலைவனமாக்கலை எதிர்த்துப்போராடுவதற்கான ஐநா அமைப்பின் (UNCCD) 30ஆம் ஆண்டு நிறைவுடன் ஒத்துப்போகிறது. ஒவ்வோர் ஆண்டும் தற்போதைய சுற்றுச் சூழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் தேர்வுசெய்யப்படுகிறது.
  • 2018ஆம் ஆண்டில் 45ஆவது உலக சுற்றுச்சூழல் நாளை, இந்தியா, “Beat Plastic Pollution” என்ற கருப்பொருளுடன் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

9. 2024 – தைவான் தடகள ஓபனில், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?

அ. 5

ஆ. 6

இ. 7

ஈ. 8

  • இந்திய விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் 2024-தைவான் தடகள ஓபனில் மொத்தம் ஏழு பதக்கங்களுடன் (மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்) போட்டியை நிறைவு செய்தனர். ஈட்டி எறிதலில் DP மனு முதல் தங்கத்தையும், பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் நயனா ஜேம்ஸ் மற்றொரு தங்கத்தையும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் அங்கேஷ் சௌத்ரி தங்கம் வென்றார். சோம்நாத் சவுகான், நித்யா ராம்ராஜ் மற்றும் தேவ் மீனா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் VK விஸ்மயா வெண்கலத்தையும் வென்றனர். உலக தடகள கான்டினென்டல் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியான இந்த நிகழ்வு தைபேயில் நடந்தது.

10. அண்மையில், 2023-24இல் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாக உருவான நாடு எது?

அ. மொரீஷியஸ்

ஆ. நெதர்லாந்து

இ. வியட்நாம்

ஈ. சீனா

  • இந்தியாவின் ஒட்டுமொத்த சரக்கு ஏற்றுமதியில் 3 சதவீத சரிவு இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடர்ந்து 2023-24இல் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாக நெதர்லாந்து ஆனது. நெதர்லாந்திற்கான முக்கிய ஏற்றுமதிகளில் பெட்ரோலிய பொருட்கள் ($14.29 பில்லியன்), மின்சார பொருட்கள், வேதிகள் மற்றும் மருந்துகள் ஆகியவை அடங்கும். இதன் விளைவாக, நெதர்லாந்துடனான இந்தியாவின் வர்த்தக உபரி $17.4 பில்லியனாக உயர்ந்துள்ளது; இது 2022-23 நிதியாண்டில் $13 பில்லியனாக இருந்தது என்று வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

11. அண்மையில், 2024 – ஹிந்தி சாகித்ய பாரதி விருது பெற்றவர் யார்?

அ. ரமேஷ்சந்திர ஷா

ஆ. சீனி விஸ்வநாதன்

இ. கிருஷ்ண பிரகாஷ்

ஈ. சந்தீப் ஜோஷி

  • மும்பை காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப்பிரிவான, ‘ஃபோர்ஸ் ஒன்’ பிரிவில் புகழ்பெற்ற கிருஷ்ண பிரகாஷ், மும்பையின் சப் மீ ராம் ஷஷ்வத் ஸ்ரீ ராம் நிகழ்ச்சியில் வருடாந்திர ஹிந்தி சாகித்ய பாரதி விருதைப் பெற்றுள்ளார். ‘சூப்பர் போலீஸ்’ என்று அழைக்கப்படும் கிருஷ்ண பிரகாஷ், எலைட் ஃபோர்ஸ் ஒன்றுக்குத் தலைமைதாங்கி, 2 முறை கின்னஸ் உலக சாதனை படைத்தவராவார்.

12. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மத்திய பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

  • தமிழ்நாடு வனத்துறையினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சந்திப்பில் அமைந்துள்ள இந்தக் காப்புக்காடு நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். இது முதுமலை, பந்திப்பூர் மற்றும் பிலிகிரி இரங்கசுவாமி திருக்கோவில் புலிகள் காப்பகங்களுடன் இணைந்துள்ளது; இம்மூன்றிலும் கூட்டாக 280-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளன. 2013இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட இது, கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை இணைத்து பல்லுயிர்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது.

13. அண்மையில், “நன் ஆஃப் தி அபோவ்” (NOTA) விருப்பம் மத்திய பிரதேசத்தின் எந்தத் தொகுதியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது?

அ. குவாலியர்

ஆ. இந்தூர்

இ. கஜுராஹோ

ஈ. ஜபல்பூர்

  • மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில், “நன் ஆஃப் தி அபோவ்” (NOTA) விருப்பம் 2,18,674 வாக்குகளைப் பெற்று 2ஆமிடத்தைப் பிடித்தது. எந்த ஒரு வேட்பாளர்களையும் தேர்வுசெய்யாமல், எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தாமல், இரகசியம் காத்து, வாக்காளர்கள் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க NOTA விருப்பம் அனுமதிக்கிறது. 2013 சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இது, PUCL vs Union of India வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

14. அண்மையில், ‘கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் – 2024’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNEP

ஆ. UNDP

இ. உலக வங்கி

ஈ. IMF

  • உலக வங்கியின், “State and Trends of Carbon Pricing-2024” அறிக்கையானது, 2023ஆம் ஆண்டில் CP வருவாய், 75 உலகளாவிய CP கருவிகள் உலகளாவிய பைங்குடில் வாயு உமிழ்வுகளில் 24%ஐ உள்ளடக்கி $100 பில்லியன் டாலர்களைத் தாண்டியது எனக்கூறுகிறது. பிரேசில், இந்தியா மற்றும் துருக்கி ஆகியவை CP செயல்படுத்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளன; அதே நேரத்தில் சீனாவும் இந்தியாவும் கரிமத்தை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. கார்பன் விலை நிர்ணயமானது முதன்மையாக CO2 விலை நிர்ணய வழிமுறைகள் மூலம் பைங்குடில் வாயு உமிழ்வுக்கான செலவுகளை இணைக்கிறது.

15. ‘Parengyodontium album’ என்றால் என்ன?

அ. அமீபா

ஆ. பூஞ்சை

இ. பாக்டீரியா

ஈ. புரதம்

  • இராயல் நெதர்லாந்து கடலாராய்ச்சி நிறுவனத்தைச்சேர்ந்த கடல் நுண்ணுயிரியலாளர்கள் கடலிலுள்ள பிளாஸ்டிக் பாலிஎதிலீனை (PE) உடைக்கக்கூடிய கடற்பூஞ்சையான, ‘Parengyodontium album’ஐ கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பூஞ்சை PE- பெறப்பட்ட கார்பனை பூஞ்சை உயிரியாக மாற்றுகிறது; UV சூரியவொளிக்கதிர் ஆரம்பக்கட்ட PE ஒளிச் சிதைவுக்கு உதவுகிறது. ஆண்டுதோறும், மனிதர்கள் 400 பில்லியன் கிகி பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறார்கள்; அவற்றில் பெரும்பாலானவை கடலில் கலந்து கடலை மாசுபடுத்துகின்றன.

16. அண்மையில், தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்திற்கான முதல் கூட்டத்தை எந்த இடத்தில் நடத்தியது?

அ. புது தில்லி

ஆ. பெங்களூரு

இ. சென்னை

ஈ. ஹைதராபாத்

  • தேசிய அளவிலான ஒருங்கிணைப்புக்குழு (NLCC) புது தில்லியில் உள்ள கூட்டுறவு அமைச்சகத்தில், உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்காக அதன் முதலாவது கூட்டத்தைக் கூட்டியது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கிடங்குகள், செயலாக்க அலகுகள் மற்றும் நியாய விலைக் கடைகளை நிறுவுவதன்மூலம் அடிமட்ட அளவில் விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு அரசாங்க திட்டங்களை ஒருங்கிணைக்கிறது மற்றும் NCDC, NABARD, FCI மற்றும் CWCபோன்ற நிறுவனங்களால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/UT-களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

17. அண்மையில், ‘உலகளாவிய மண் கூட்டாண்மையின் 12ஆவது முழுமையான மாநாட்டை’ நடத்திய அமைப்பு எது?

அ. உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO)

ஆ. உலக வானிலை அமைப்பு (WMO)

இ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP)

ஈ. உலக வங்கி

  • 2024 ஜூன்.03-05 வரை ஐநாஇன் உணவு மற்றும் உழவு அமைப்பால் உலகளாவிய மண் கூட்டாண்மையின் 12ஆவது முழுமையான மாநாடு நடத்தப்பட்டது. இதில் 700 பங்காளர்கள் மற்றும் FAO உறுப்பினர்கள் இருந்தனர். உலகளாவிய மண் கூட்டாண்மை என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பொறிமுறையாகும்; இது நிலையான மண் மேலாண்மையை ஊக்குவிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
  • உலகளாவிய மண் கூட்டாண்மையின் பங்காளர்கள் மற்றும் FAO உறுப்பினர்களுக்கு அறிவு & நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வதற்கும், உலகளாவிய மண் நிகழ்ச்சி நிரல்பற்றிய முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது.

18. ஆயுதப்படைகளுக்காக சிறப்பு டெலி மனாஸ் பிரிவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் எந்த அமைச்சகத்துடன் கையெழுத்திட்டது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. உழவு அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. தகவல் தொடர்பு அமைச்சகம்

  • சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்கள், ஆயுதப்படைகளுக்காக சிறப்பு மனநல ஆதரவை வழங்கும் பிரத்யேக ‘டெலி மனாஸ்’ பிரிவு ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த முன்முயற்சி ஆனது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போதுள்ள 51 ‘டெலி மனாஸ்’ பிரிவுகளைச் சேர்த்து, நாடு முழுவதும் உள்ள இராணுவ வீரர்களுக்கு மனநலச்சேவைகளை வழங்கும்.

19. மினிட்மேன் III என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்தில் இருந்து நிராயுதபாணியான, ‘மினிட்மேன்-III ICBM’ஐ அமெரிக்கா சோதித்தது. 1960களில் பயன்படுத்தப்பட்ட மினிட்மேன்-III என்பது போயிங் வடிவமைத்த அமெரிக்க அணுசக்தி மும்மையின் ஒரே நில அடிப்படையிலான கூறு ஆகும். 10 ஆண்டு சேவைக்கான தொடக்கநிலை திட்டங்கள் இருந்த போதிலும், 2029இல் GBSD கிடைக்கும் வரை இது பயன்படுத்தப்படும். 13,000 கிமீ தூரம் வரை செல்லும் முந்நிலை, திட எரிபொருள் ஏவுகணையான இது, ஒரேயொரு அணு ஆயுதத்தை சுமந்துகொண்டு விரைவாகச் செல்லும் திறன் படைத்தது.

20. H5N2 வைரசுடன் தொடர்புடைய நோய் எது?

அ. மலேரியா

ஆ. டெங்கு

இ. பறவை காய்ச்சல்

ஈ. எய்ட்ஸ்

  • H5N2 பறவைக்காய்ச்சலின் முதல் மனித பாதிப்பு மெக்ஸிகோவில் பதிவாகியுள்ளது; இதில் 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இப்பறவைக்காய்ச்சல், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் ஏற்படுகிறது. முதன்மையாக கோழி மற்றும் காட்டுப்பறவைகளைப் பாதிக்கின்ற இது, அவற்றின் நேரடி தொடர்புமூலம் மனிதர்களுக்குப்பரவுகிறது. முதன் முதலில் மெக்ஸிக கோழிப்பண்ணையில் காணப்பட்ட ஒரு துணை வகை வைரஸான H5N2, புலம்பெயர் பறவை இனங்கள் மற்றும் உள்நாட்டுப்பறவைகளுடனான தொடர்புகள்மூலம் பரவுகிறது.

21. 2024 – உலக உணவுப் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Prepare for the unexpected

ஆ. Food Standards Save Lives

இ. Safer food, better health

ஈ. Safe food today for a healthy tomorrow

  • ஜூன்.7ஆம் தேதி கொண்டாடப்படும் உலக உணவுப் பாதுகாப்பு நாள், உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உணவினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. 2016ஆம் ஆண்டில் ஐநாஆல் தொடங்கப்பட்ட இது, FAO & WHOஆல் ஆதரிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் பாதுகாப்பான, சத்தான உணவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2020 ஆகஸ்ட்.03 அன்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், உலகளாவிய நலத்தில் உணவுப் பாதுகாப்பின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: “Prepare for the unexpected”.

22. NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிட் (NIPL) அண்மையில் UPI பேமெண்ட்டுகளை இயக்குவதற்காக, எந்தத் தென்னமெரிக்க நாட்டுடன் கைகோர்த்தது?

அ. பிரேசில்

ஆ. அர்ஜென்டினா

இ. பெரு

ஈ. சிலி

  • இந்திய தேசிய கொடுப்பனவு கழகமும் (NPCI) பெருவின் மத்திய வங்கியும் (BCRP) பெருவில் UPIபோன்ற கட்டண முறையை உருவாக்குவதற்காக கூட்டு சேர்ந்துள்ளன. இது NPCIஇன் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட முதல் தென்னமெரிக்க நாடாக பெருவை மாற்றுகிறது. இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு இடையே உடனடியாக பணம் செலுத்த உதவுகிறது. இந்த முன்முயற்சியானது பெருவின் மக்களிடையே டிஜிட்டல்முறை கட்டணங்களை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

23. அண்மையில், 1000 நாட்கள் விண்வெளியில் கழித்த முதல் நபர் என்ற பெருமையைப்பெற்ற ரஷ்ய விண்வெளி வீரரின் பெயர் என்ன?

அ. எலினா கொண்டகோவா

ஆ. நிகோலாய் சப்

இ. யூரி ககாரின்

ஈ. ஒலெக் கொனோனென்கோ

  • ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ 1000 நாட்கள் விண்வெளியில் கழித்து உலக சாதனை படைத்தார். ISS-க்கான அவரது அண்மைய பணி 2023 செப்டம்பர்.15 அன்று NASA விண்வெளி வீரர் லொரல் ஓ’ஹாரா மற்றும் நிகோலாய் சப் ஆகியோருடன் தொடங்கியது. 1996 முதல் விண்வெளி வீரராக இருந்து வரும், ஒலெக் கோனோனென்கோ, மொத்தம் நான்கு சோயுஸ் பயணங்களை வழிநடத்தியுள்ளார்.

24. அண்மையில், இந்தியா, எந்தெந்த நாடுகளுடன் இணைந்து உயிரி மருந்தாக்கத் தொழிற்துறை கூட்டணியை அறிமுகப்படுத்தியது?

அ. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா

ஆ. சீனா, ரஷ்யா மற்றும் நேபாளம்

இ. இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் இஸ்ரேல்

ஈ. ஆஸ்திரேலியா, சீனா மற்றும் இங்கிலாந்து

  • இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை இணைந்து உயிரி மருந்தாக்கத் தொழிற்துறை கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் முதல் கூட்டம் சான் டியாகோவில் உயிரி- சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. உயிரிகளிலிருந்து பெறப்பட்ட உயிரிமருந்துகள் எதிர்கால மருந்துகள் உலகில் 50% உள்ளடக்கியதாக அமைக்கப்படும். COVID-19 தொற்றுநோய்களின்போது ஏற்பட்ட மருந்துப் பற்றாக்-குறையைப் போன்று எதிர்காலத்தில் ஏற்படாமலிருப்பதை உறுதிசெய்வதே இந்தக் கூட்டணியின் நோக்கமாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலவிலிருந்து மாதிரிகளுடன் புறப்பட்ட சீன ஆய்வுக்கலம்.

நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டு சீனாவின், ‘சாங்கே-6’ விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. ‘சாங்கே-6’ எனப் பெயரிடப்பட்ட இந்த நிலவு ஆய்வுத்திட்டத்தில் கிடைக்கும் வெற்றி, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிக்கு உதவியாக இருக்கும் என சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், அசென்டர் மற்றும் புவிக்கு திரும்பிவரும் ரீ-என்ட்ரி கலம் ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன. அதில் பூமிக்குத் திரும்பிவரும், ‘ரீ-என்ட்ரி’ கலம்தான் நிலவின் மாதிரிகளுடன் தற்போது புறப்பட்டுள்ளது.

2. மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் விசிக, நாம் தமிழர்.

மாநிலக்கட்சியாக ஒரு கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் விதியின்படி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான தகுதியைப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மற்றொரு விதியின்படி மக்களவைத் தேர்தலில் 8% வாக்குகள் பெற்ற கட்சி மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்படும். அவ்வகையில் நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிக்கான அங்கீகார தகுதியைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக ஆகிய 4 கட்சிகள் உள்ளன. அதைப்போல தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக்கட்சிகளாக காங்கிரசு, பாஜக, மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய ஆறு கட்சிகள் உள்ளன.

3. உலக சுற்றுச்சூழல் நாள்: மரக்கன்று நடும் பிரசாரத்தைத் தொடங்கினார் மோடி.

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு தில்லியில் வைத்து, ‘ஏக் பேட் மா கீ நாம்’ (தாயின் பெயரில் ஒரு மரம்) என்ற பெயரில் மரம் நடும் விழிப்புணர்வு பிரசாரத்தைப் பிரதமர் நரேந்திர மோதி தொடக்கிவைத்தார்.

4. 17ஆவது மக்களவை கலைப்பு.

மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி, 17ஆம் மக்களவையை கலைக்க இந்தியக்குடியரசுத்தலைவர் ஆணை பிறப்பித்தார். இதுதொடர்பாக குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, அரசமைப்புச்சட்டத்தின் 85ஆவது பிரிவின் உட்கூறுகளின்கீழ், 17ஆவது மக்களவையை கலைக்கும் ஆணையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு கையொப்பமிட்டாார்’ என்று தெரிவிக்கப்பட்டது. 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!