TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 4th October 2023

1. “இந்திய மூப்படைதல் அறிக்கை – 2023” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. NSO

இ. UNFPA 🗹

ஈ. உலக வங்கி

  • பன்னாட்டு மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தால், “இந்திய மூப்படைதல் அறிக்கை – 2023” சமீபத்தில் வெளியிடப்பட்டது. 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாழும் முதியோர்களின் எண்ணிக்கை நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 20%ஆக இருக்கக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 41% ஆக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

2. 2023ஆம் ஆண்டில், ‘சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான’ வெண்கல விருதை வென்றுள்ள காங்தாங் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மேகாலயா 🗹

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. மணிப்பூர்

  • மேகாலயாவின் கிழக்குக் காசிக் குன்றுகளில் அமைந்துள்ள ‘காங்தாங்’ என்ற கிராமம் சமீபத்தில் தேசிய சுற்றுலா விருதுகள்-2023’இல் வெண்கல விருதைப்பெற்றது. இவ்விருதுகள் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்பட்டன. மேகாலயா மாநிலம் வீட்டுவிடுதி திட்டத்தைச் செயல்படுத்தி, ஒரு வீட்டுவிடுதிக்கு `7 இலட்சம் வரை மானியம் வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 300 வீட்டுவிடுதிகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன.

3. நடப்பு 2023ஆம் ஆண்டில், ‘வருடாந்திர IAEA பொது மாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஆஸ்திரியா 🗹

இ. பாரிஸ்

ஈ. ரோம்

  • IAEAஇன் வருடாந்திர பொது மாநாடு வியன்னாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ‘நிகர சுழியம்’ என்ற இலக்கை அடைவதற்காக அணுசக்திமூலம் 22 கிகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்தது. அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜித் குமார் மொஹந்தி, IAEAஇன் தலைமை இயக்குநருடனான சந்திப்பின்போது அணுமின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான இந்தியாவின் இலட்சியமிகு திட்டங்களைப் பகிர்ந்துகொண்டார்.

4. “Smart Cities Mission, India: Localising SDGs” என்ற அறிக்கையை தயாரித்த மத்திய அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் 🗹

இ. MSME அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • “பொலிவுறு நகரங்கள் திட்டம், இந்தியா: நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்” என்ற அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமும் ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்திட்டமும் இணைந்து தயாரித்துள்ளன. பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் உள்ள 70 சதவீத திட்டங்கள் நகரங்கள், தூய நீர் மற்றும் சுகாதாரம், தூய எரிசக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் ஒத்துப்போகின்றன என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

5. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை அடுத்து இ-கேபினட் முறையை அறிமுகப்படுத்திய இரண்டாவது வடகிழக்கு மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. திரிபுரா 🗹

இ. மேகாலயா

ஈ. மேற்கு வங்காளம்

  • திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா அம்மாநிலத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ‘இ-கேபினெட்’ முறையை அம்மாநிலத்தின் செயலகத்தில் தொடக்கிவைத்தார். இதன்மூலம் உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு இம்மாதிரியான முறையை கொண்டுள்ள நான்காவது மாநிலமாகவும், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பிறகு இம்மாதிரியான முறையை கொண்டுள்ள இரண்டாவது மாநிலமாகவும் திரிபுரா மாறியுள்ளது.

6. ‘Mobile Number Portability’ குறித்த வரைவு விதிமுறைகளை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. NASSCOM

ஆ. TRAI 🗹

இ. TCIL

ஈ. C-DoT

  • ‘Mobile Number Portability’ குறித்த தொலைத்தொடர்பு வரைவு விதிமுறைகள் (ஒன்பதாவது திருத்தம்), 2023 ஆனது அண்மையில் TRAIஆல் வெளியிடப்பட்டது. இது சிம்-ஸ்வாப் மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்புத் திட்டங்களை முன்மொழிகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI) புதிய இணைப்பு மற்றும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டு வருகிறது.

7. NITI ஆயோக்குடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, 2023 ஜூலையில் நாட்டிலேயே அதிக மின்சாரத் தேவை உள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. உத்தர பிரதேசம் 🗹

ஈ. குஜராத்

  • இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக் உடன் இணைந்து, இலாப நோக்கற்ற அமைப்பான வசுதா அறக்கட்டளை தயாரித்த அறிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில், உத்தர பிரதேச மாநிலமும் மகாராஷ்டிரமும் இணைந்து, 15.3 பில்லியன் அலகு மின்சாரத்தை நுகர்வு செய்து, நாட்டிலேயே அதிக மின்சாரத் தேவை இருக்கும் உள்ள மாநிலங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. Standardised Precipitation Index (SPI) என்பது எந்த அளவுருவைக் கண்காணிக்கப் பயன்படும் கருவியாகும்?

அ. வெள்ளம்

. வறட்சி 🗹

இ. காற்று தரம்

ஈ. கதிர்வீச்சுகள்

  • இந்திய வானிலை ஆய்வுத்துறையால் (IMD) கண்காணிக்கப்படும் மாவட்டங்களில் 70%க்கும் அதிகமானவை (அதாவது 718இல் 500க்கும் அதிகமானவை) தற்போது மிதமான வறட்சி முதல் கடுமையான வறட்சி வரையிலான வானிலை வறட்சி நிலைமைகளை அனுபவித்து வருகின்றன. இந்தக் கண்டறிவுகள் IMDஆல் பராமரிக்கப்படும் சமீபத்திய தரப்படுத்தப்பட்ட மழைப்பொழிவு குறியீட்டுத் (Standardised Precipitation Index) தரவை அடிப்படையாகக் கொண்டதாகும். Standardised Precipitation Index (SPI) என்பது வறட்சியைக் கண்காணிப்பதற்காக IMDஆல் பயன்படுத்தப்படுகிற ஒரு நிகழ்தகவுக் கருவியாகும்.

9. ஸ்க்ரப் டைபஸ் நோயை எதிர்கொள்கிற இந்திய மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

இ. குஜராத்

ஈ. கோவா

  • ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத மழைப்பொழிவு நிகழ்ந்த காரணமாக, ஸ்க்ரப் டைபஸ் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமியான ஓரியன்டியா சுட்சுகாமுஷியின் பரப்பிகளான, ‘சிகர்ஸ்’ அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 1000க்கும் மேற்பட்டோர் அந்நோயால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அம்மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் நோய் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

10. சர்வதேச மொபைல் தொலைத்தொடர்பு தரநிலைகளை உருவாக்கும் நிறுவனம் எது?

அ. IMF

ஆ. ITU 🗹

இ. UNESCO

ஈ. MIT

  • ஐக்கிய நாடுகளின் அமைப்பான ITUஇன் ஆய்வுக்குழு, ஜெனிவாவில் நடந்த அதன் சமீபத்திய கூட்டத்தின்போது, இந்தியாவின் 6G தொலைநோக்குப் பார்வைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பது (ITU) சர்வதேச மொபைல் தொலைத்தொடர்பு தரநிலைகளை உருவாக்குவதற்கு பொறுப்புள்ள அமைப்பாகும். 6G என்றும் அழைக்கப்படும் IMT 2030, ITU-R ஆய்வுக்குழு 5இன் பணிபுரி கூட்டாளர் 5Dஆல் உருவாக்கப்படுகிறது.

11. ‘ஸ்வவலம்பன் 2.0’ என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் உள்நாட்டுமயமாக்கலுக்கான செயல்திட்டமாகும்?

அ. IRDAI

ஆ. இந்திய கடற்படை 🗹

இ. NITI ஆயோக்

ஈ. இந்திய ரிசர்வ் வங்கி

  • இந்திய கடற்படை அதன் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டுமயமாக்கலுக்கான செயல்திட்டத்தை ‘ஸ்வவலம்பன் 2.0’ என்ற பெயரில் அடுத்த வாரம் வெளியிடவுள்ளது. இந்திய கடற்படைத் துணைத்தலைவர் சஞ்சை சிங்கின் கூற்றுப்படி, இதுவரை அடைந்த சாதனைகள் மற்றும் இதற்கு மேல் அடையப் போகும் சாதனைகளுக்கான வழிகள் குறித்த மேம்பட்ட புதுப்பிப்பை இது வழங்கும்.

12. ‘நூர் 3 படமாக்கல் செயற்கைக்கோளை’ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய நாடு எது?

அ. இஸ்ரேல்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஈரான் 🗹

ஈ. வட கொரியா

  • ஈரானின் புரட்சிகர காவலர்கள் படையானது 3ஆவது இராணுவ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ‘நூர் 3 படமாக்கல் செயற்கைக்கோள்’ பூமியின் மேற்பரப்பிலிருந்து 450 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் நூர் 2 விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

12. IISERஇன் அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட ஒரு வட்ட வடிவ ஆர்என்ஏ வைரஸின் பெயர் என்ன?

அ. ciTRAN 🗹

ஆ. ciRNA

இ. ciHIV

ஈ. ciReplica

  • போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் (IISER) அறிவியலாளர்கள், ‘ciTRAN’ எனப்படும் ஒரு வட்ட வடிவ ஆர்என்ஏ வைரஸைக் கண்டறிந்துள்ளனர்; இது எச்ஐவி-1 வைரஸின் நகலெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபடும் ஒரு கூறாகும். இதன்கூடுதலாக, வைரஸ் படியெடுத்தலைத் தடுக்கும் திறன்கொண்ட ஒரு மூலக்கூறையும் அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். மரபணு வெளிப்பாடு ஒழுங்குமுறை மற்றும் பல்வேறு உயிரியல் செயல்பாடுகளில் வட்ட வடிவ ஆர்என்ஏ முக்கியப் பங்காற்றுகிறது. எச்ஐவி-1 நகலெடுப்பில் அதன் தாக்கம் பெரும்பாலும் ஆராயப்படாமலேயே உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உலக வனவிலங்கு நாள் – அக்டோபர்.04

கருப்பொருள்: Great or Small, Love Them All.

2. அக்டோபர் 04-10: உலக விண்வெளி வாரம்.

கருப்பொருள்: Space and Entrepreneurship.

3. இன்று ICC உலகக்கோப்பை தொடக்க விழா

13ஆவது ICC உலகக்கோப்பை தொடரின் தொடக்க விழா இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

4. ஆசிய விளையாட்டுப்போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றது இந்திய ஜோடி

ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. அரையிறுதிப்போட்டியில் அனாகத் சிங், அபய் சிங் ஜோடி, மலேசிய ஜோடியை வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

5. 2023ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

6. ஆசிய போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.

இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கமும், கிஷோர் ஜெனா வெள்ளியும் வென்றனர். 88.88 மீ தூரம் ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ரா முதலிடமும், 87.54 மீ தூரம் ஈட்டியெறிந்து கிஷோர் ஜெனா 2ஆவது இடமும் பிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!