TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 4th July 2024

1. 2024 – புள்ளியியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Use of data for decision-making

ஆ. Alignment of State Indicator Framework with National Indicator Framework

இ. Data for Sustainable Development

ஈ. End Hunger, Achieve Food Security and Improved Nutrition

  • இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன்.29 அன்று கொண்டாடப்படும் தேசிய புள்ளியியல் நாள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலில் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸ் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரை கௌரவிக்கிறது. 2007இல் தொடங்கப்பட்ட இந்நாளின் குறிக்கோள், சமூக-பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் புள்ளிவிவரத்தின் முக்கியப்பங்குபற்றிய விழிப்புணர்வை இளையோரிடையே ஏற்படுத்துவதாகும். “Use of data for decision-making” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

2. அண்மையில், இந்தியாவின் 35ஆவது வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அமிதாப் காந்த்

ஆ. விக்ரம் மிஸ்ரி

இ. ருசிரா கம்போஜ்

ஈ. அஜய் பிசாரியா

  • 2024 ஜூலை.15 அன்று வினை மோகன் குவாத்ராவை அடுத்து இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டார். சீன விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற விக்ரம் மிஸ்ரி, 2019-2021 கால கட்டத்தில் கால்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் உட்பட சீனாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.

3. ‘Amoebic Meningoencephalitis’ என்றால் என்ன?

அ. சாதாரண சளி

ஆ. மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ஓர் அரிதான, பொதுவாக ஆபத்தான தொற்று

இ. ஒரு வகையான புற்றுநோய்

ஈ. நுரையீரலில் ஏற்படும் பாக்டீரியா தொற்று

  • கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், ‘Amoebic Meningoencephalitis’ (PAM) எனப்படும் Naegleria fowleri அமீபாவால் ஏற்படும் அரிதான, பொதுவாக ஆபத்தான மூளைத்தொற்றுக்கு எதிராக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமீபா வெதுவெதுப்பான, ஆழமற்ற நீரில் செழித்து வளர்கிறது. அந்த நீரை பயன்படுத்துவோரின் மூக்குவழியாக அது மூளைக்குள் நுழைகிறது. ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி, கடினமான கழுத்து வலி, வலிப்பு, பிரமைகள் மற்றும் கோமா ஆகியவை அடங்கும். நோய்த்தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தோன்றும்.

4. தனது முழு விலங்கினங்களின் சரிபார்ப்புப் பட்டியலைத் தயாரித்த உலகின் முதல் நாடு எது?

அ. பூட்டான்

ஆ. இந்தியா

இ. நேபாளம்

ஈ. மியான்மர்

  • 104,561 உயிரினங்களை ஆவணப்படுத்தி அதன் முழு விலங்கினங்களின் முழுமையான சரிபார்ப்புப் பட்டியலைத் தயாரித்த முதல் நாடாக இந்தியா ஆனது. கொல்கத்தாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்த இந்தச் சாதனை, இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் விலங்கினங்களின் சரிபார்ப்புப் பட்டியல் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதோடு ஒத்துப்போகிறது. அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியமான இந்த வலைத்தளம், அறியப்பட்ட அனைத்து விலங்குகளின் 121 சரிபார்ப்புப் பட்டியல்களை உள்ளடக்கியது. இந்த நிகழ்வில் இரண்டாவது விலங்கு வகைபிரித்தல் உச்சிமாநாடு-2024உம் இடம்பெற்றது.

5. தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 9ஆவது ICC ஆடவர் T20 உலகக்கோப்பையை வென்ற அணி எது?

அ. இந்தியா

ஆ. ஆப்கானிஸ்தான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. நியூசிலாந்து

  • ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, 2024 ஜூன்.29 அன்று பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை 7 இரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 9ஆவது ICC ஆடவர் T20 உலகக்கோப்பையை வென்றது. 2007 வெற்றியைத்தொடர்ந்து இது இந்தியாவின் இரண்டாவது T20 உலகக்கோப்பை வெற்றியாகும். இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி, இரவீந்திர ஜடேஜா ஆகியோரின் T20 ஓய்வு அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளராக இராகுல் டிராவிட்டின் கடைசி பணியும் அதுதான்.

6. ‘Snowblind’ என்றால் என்ன?

அ. புறக்கோள்

ஆ. சிறுகோள்

இ. தீம்பொருள் (Malware)

ஈ. மருந்துகள்

  • ‘Snowblind’ எனப்படும் புதிய ஆண்ட்ராய்டு தீம்பொருள், ‘seccomp’ என்ற பாதுகாப்பு அம்சத்தைப் பயன்படுத்தி, குறுக்கீடு-எதிர்ப்பு வழிமுறைகளைத் தவிர்த்து, வங்கிச்சான்றுகளைத் திருடுவதற்கு பயனர்களை குறிவைக்கிறது. கண்டறிதலைத் தவிர்க்க இந்தத்தீம்பொருள், செயலிகளை மீண்டும் கட்டுகிறது மற்றும் உயிரியளவுகள் மற்றும் இரு -காரணி அங்கீகாரத்தை முடக்கி, திரைகளை எங்கிருந்தும் நோக்குவதற்கான சேவைகளைப் பயன்படுத்துகிறது. இது முதன்மையாக நம்பத்தகாத ஆதாரங்களில் இருந்து செயலிகள் வழியாக சாதனங்களை பாதிக்கிறது. தற்போது தென்கிழக்காசியாவில் இந்தச் செயலி அதிகளவில் பரவி வருகிறது.

7. அண்மையில், eSankhyiki என்ற வலைத்தளத்தை உருவாக்கிய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், உலகளாவிய புள்ளியியல் நடைமுறைகள் மற்றும் சிறந்த தரவுப் பகிர்வு தரநிலைகளை உறுதிசெய்ய தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக திட்டமிடுபவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடித் தகவல்களை வழங்குவதற்காக இந்த அமைச்சகம் இசங்க்யிகி (eSankhyiki) என்ற தளத்தை உருவாக்கியுள்ளது.
  • நாட்டில் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை எளிதாக மக்களிடம் கொண்டுசெல்வதும், விரிவான தரவு மேலாண்மை மற்றும் பகிர்வு முறையை ஏற்படுத்துவதும் இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

8. அண்மையில், நிலையான டிரைநைட்ரோடொலுயீனை (TNT) விட 2.01 மடங்கு அதிக ஆபத்தான SEBEX-2ஐ வெற்றிகரமாக உருவாக்கி சான்றளித்துள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. வங்காளதேசம்

இ. பிரான்ஸ்

ஈ. ஆப்கானிஸ்தான்

  • வெடிகுண்டுகள் மற்றும் வெடியுளைகளுக்காக உருவாக்கப்பட்ட TNTஐவிட 2.01 மடங்கு ஆற்றல்வாய்ந்த ஆபத்தான வெடிமருந்தான, ‘SEBEX-2’ஐ இந்தியா உருவாக்கி சான்றளித்துள்ளது. இந்திய கடற்படையால் அங்கீகரிக்கப்பட்ட இது, உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த அணுவல்லாத வெடிபொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கூடுதல் எடை கொள்ளாமல் மேம்படுத்தப்பட்ட அழிவுத் திறனைத் தன்வசம் கொண்டுள்ள SEBEX-2, இராணுவ ஆயுதங்களில் புரட்சியை ஏற்படுத்தும்.

9. INS ரன்வீர் சார்ந்த வகை எது?

அ. சீ வொல்ஃப்

ஆ. ராஜ்புத்

இ. ஸ்கார்பீன்

ஈ. கல்வாரி

  • கிழக்குக் கடற்படை கட்டளையின்கீழ் உள்ள ரன்வீர் கப்பல் வங்காளதேசத்தின் சட்டோகிராமுக்குச் சென்றடைந்தது. இந்தப் பயணம், இந்திய மற்றும் வங்காளதேச கடற்படைகளைச் சேர்ந்த வீரர்கள், இருநாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பரஸ்பர கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைமுக கட்டம் முடிந்ததும், INS ரன்வீர் கப்பல், வங்காளதேச கடற்படையின் கப்பல்களுடன் இணைந்து கடல்சார் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கும். INS ரன்வீர் என்பது ஓர் ஏவுகணை அழிப்புக்கப்பலாகும். இது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உணரிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான பாகங்கள் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும்.

10. ஒவ்வோர் ஆண்டும் ‘சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.01

ஆ. ஜூலை.05

இ. மார்ச்.29

ஈ. மார்ச்.05

  • சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) நாளானது ஆண்டுதோறும் ஜூலை.01 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது இந்தியாவின் புதிய வரி முறையை அமல்படுத்தியதை நினைவுபடுத்துகிறது. 2024 – கொண்டாட்டம் GSTஇன் ஏழாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. முன்பு மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட்ட சிக்கலான வரிக் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கோடு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தியாவில் மறைமுக வரிகளை ஒழுங்குபடுத்துவதன்மூலமும் பொருளாதார செயல்திறனை வளர்ப்பதன்மூலமும் GST பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

11. அண்மையில், எந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தென்னை நார்களிலிருந்து மீ மின்தேக்கிகளுக்கு (super capacitors) செயலூட்டிய கரியை உற்பத்தி செய்யும் முறையை உருவாக்கியுள்ளனர்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. மகாராஷ்டிரா

  • கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரியைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், மீ மின்தேக்கிகளுக்கு தென்னை நாரிலிருந்து செயலூட்டிய கரியை உருவாக்கும் முறையை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையான, திறமையான தீர்வு, செயலூட்டிய கரியின் உயர் பரப்பளவை மேம்படுத்துகிறது; அது உயர் செயல் திறன்கொண்ட மீ மின்தேக்கிகளுக்கு ஏற்றதாக அமைகிறது. இந்தச்சாதனங்கள் மின்வேதியியல் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும், அயனிகளின் மீளக்கூடிய உறிஞ்சுதல் மற்றும் சிதைவுமூலம் ஆற்றலைச் சேமித்து வழங்குகின்றன.

12. M K ரஞ்சித்சிங் மற்றும் பலர் எதிர் இந்திய ஒன்றியம் மற்றும் பலர் வழக்குடன் தொடர்புடைய பிரச்சினை எது?

அ. வறுமை மற்றும் பசி

ஆ. தட்பவெப்பநிலை மாற்றம்

இ. முத்தலாக்

ஈ. மேற்கூறப்பட்ட எதுவும் இல்லை

  • இந்திய உச்சநீதிமன்றம், M K ரஞ்சித்சிங் மற்றும் பலர் எதிர் இந்திய ஒன்றியம் மற்றும் பலர் வழக்கில் அளித்த தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்த தீர்ப்பு நீதித்துறையில் ஒரு முன்னுதாரணத்தை அமைத்துள்ளது. அரசியலமைப்பின் 21 மற்றும் 14ஆவது பிரிவுகளின்கீழ், “காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான” உரிமையை அடிப்படை உரிமையாக இந்த முக்கிய தீர்ப்பு நிறுவுகிறது. இந்தத் தீர்ப்பு, சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதிலும், குடிமக்களின் உரிமைகளைக் காப்பதிலும் நீதித்துறையின் பங்கை எடுத்துரைத்து, நிர்வாகம் & சட்டத்தில் செல்வாக்கு செலுத்துவதன்மூலம் இந்தியாவின் தட்பவெப்பநிலைக் கொள்கையை வடிவமைக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பன்னாட்டு நெகிழிப்பை இல்லாத நாள்.

ஆண்டுதோறும் ஜூலை.03 அன்று நெகிழிப்பைகளைத் தவிர்த்தல், நெகிழிக்கழிவுகளைக்குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பன்னாட்டு நெகிழிப்பை இல்லாத (plastic bag free) நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

2. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவராக மகேசன் காசிராஜன் பதவியேற்பு.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவராக M மாலிக் பெரோஸ்கான் செயலாற்றி வந்தார். அவரைத் தொடர்ந்து, இப்போது ஓய்வுபெற்ற இஆப அதிகாரியான மகேசன் காசிராஜன், முறைமன்ற நடுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

பணி என்ன?

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் பணிசெய்து வரும் அலுவலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அதுதொடர்பான விசாரணைகளை முறைமன்ற நடுவம் மேற்கொண்டு வருகிறது. இந்த நடுவத்தை அமைப்பதற்கான பிரத்யேக சட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு இயற்றப்பட்டு அந்த ஆண்டு நவம்பரில் இருந்து நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் அலுவலகம் சென்னை கிண்டியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!