Tnpsc Current Affairs in Tamil – 31st May 2024
1. K-9 வஜ்ரா என்றால் என்ன?
அ. தன்னிச்சையாக இயங்கும் பீரங்கி அமைப்பு
ஆ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்
இ. 3D முறை அச்சிடலில் உருவாக்கப்பட்ட செமி கிரையோஜெனிக் எஞ்சின்
ஈ. சிறுகோள்
- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட K9 வஜ்ரா:: தன்னிச்சையாக இயங்கும் பீரங்கி அமைப்பு உட்பட பல்வேறு முதன்மை பாதுகாப்புத்திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்குப் பிந்தைய இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. தென் கொரியாவின் ஹன்வா டிஃபென்ஸின் தொழில்நுட்பத்துடன் லார்சன் & டூப்ரோவால் (L&T) உருவாக்கப்பட்ட K9 வஜ்ரா என்பது தன்னிச்சையாக இயங்கும் பீரங்கி அமைப்பு ஆகும். இதால் ஒரே சமயத்தில் பல்வேறு குண்டுகளைச் சுடமுடியும். 50 கிமீ தொலைவிலுள்ள இலக்குகளை 15 வினாடிகளுக்கு மூன்று சுற்றுகள் வீதம் தாக்கும் திறனுடையது இது.
2. அண்மையில், வளர்ந்து வரும் சிறு தீவு நாடுகள் பற்றிய நான்காவது சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. டிரினிடாட் மற்றும் டொபாகோ
ஆ. ஆன்டிகுவா மற்றும் பார்புடா
இ. பஹாமாஸ்
ஈ. பார்படாஸ்
- மே.27-30 வரை நடைபெற்ற SIDS4 மாநாட்டில், 3,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி, “SIDS-க்கான ஆன்டிகுவா மற்றும் பார்புடா நிகழ்ச்சி நிரலை” உருவாக்கினர். ஆண்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற SIDS தொடர்பான ஐநாஇன் 4ஆவது சர்வதேச மாநாட்டில், பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி அதன் உள்கட்டமைப்புக்கான தீவு நாடுகள் திட்டத்தின்கீழ் நிதியுதவியை அறிவித்தது.
3. இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In / ICERT) என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் ஒரு செயல்பாட்டு அமைப்பாகும்?
அ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ஆ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஈ. தகவல் தொடர்பு அமைச்சகம்
- இந்தியாவின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) டெஸ்க்டாப்புகளுக்கான கூகுள் குரோமில் அதிக தீவிர பாதிப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள கணினி பாதுகாப்பு நிகழ்வுகளுக்கான தேசிய நிறுவனமான CERT-In, இந்திய இணையவெளியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனவரி 2004 முதல் செயல்பட்டு வருகிற இது, இந்தியாவில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கும் குறைப்பதற்கும் பொறுப்பாகும்.
4. Earth Cloud Aerosol and Radiation Explorer (EarthCARE) செயற்கைக்கோள் திட்டம் என்பது எந்த இரண்டு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்?
அ. ESA & JAXA
ஆ. NASA & ISRO
இ. CNSA & JAXA
ஈ. ISRO & ESA
- ESA & JAXA ஆகியவற்றின் கூட்டு முயற்சியான EarthCARE மிஷன், காலநிலை நெருக்கடிக்கு மத்தியில் பூமியின் கதிர்வீச்சு சமநிலைக்கு முக்கியமான மேகங்கள், ஏரோசோல்கள் மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சூரிய-ஒத்திசைவு சுற்றுப்பாதை பணியான இது வளிமண்டல லிடார் மற்றும் கிளவுட் ப்ரொஃபைலிங் ரேடார் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறது. மேகங்கள் மற்றும் ஏரோசோல்கள் பூமியின் வெப்பப்பாதீடில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; சூரியவொளியை பிரதிபலிப்பதில் மற்றும் கதிர்வீச்சைக் கவர்வதில் அவற்றின் பாத்திரங்கள்மூலம் காலநிலையைப் பாதிக்கின்றன. மனித நடவடிக்கைகள் குறிப்பாக ஏரோசல் அளவை பாதிக்கின்றன.
5. எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள், ‘லிக்னோசாட்’ என்ற சிறிய மர செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்?
அ. சீனா
ஆ. இந்தியா
இ. ஜப்பான்
ஈ. ஆஸ்திரேலியா
- ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் NASA மற்றும் JAXAஉடன் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட, ‘லிக்னோசாட்’ என்ற உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். இச்சிறிய கனச்செவ்வக வடிவிலான செயற்கைக்கோள், மீள்தன்மையுடைய மாக்னோலியா மரத்தால் ஆனது; SpaceX ஏவுகலம்மூலம் இது ஏவப்படவுள்ளது. ‘லிக்னோசாட்’ விண்வெளி ஒழுங்கீனத்தைக் குறைத்து சுற்றுச்சூழலுக்குகந்த விண்வெளி நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்கமான அலுமினிய செயற்கைக்கோள்களைப் போலல்லாமல், ‘லிக்னோசாட்’ மீண்டும் புவிக்குள் வரும்போது தீங்கற்ற முறையில் எரியும்.
6. 2024-26 காலத்திற்கான கொழும்பு செயல்முறையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாடு எது?
அ. இந்தியா
ஆ. வங்காளதேசம்
இ. நேபாளம்
ஈ. பூடான்
- 2024-26ஆம் ஆண்டிற்கான கொழும்பு செயல்முறையின் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது; இது 2003-க்குப் பிறகு முதல் முறையாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கான பிராந்திய ஆலோசனை தளமான கொழும்பு செயல்முறை, வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற 12 ஆசிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. நிறுவன உறுப்பினரான இந்தியா, திறன் அங்கீகாரம் மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. ஐநாஇன் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இந்தச் செயல்முறையை ஆதரிக்கிறது.
7. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கீழ்க்காணும் எந்த உயிரினங்களில் 40 புதிய ‘நிடோவைரஸ்’களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்?
அ. முதுகெலும்பிகள்
ஆ. முதுகெலும்பில்லாதவை
இ. முதுகெலும்பிகள் மற்றும் முதுகெலும்பில்லாதவை இரண்டும்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி முதுகெலும்பிகளில் 40 புதிய ‘நிடோவைரஸ்’களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
- உறையினுள் இருக்கும், நேர்மறை-இழையான RNAஐக் கொண்டிருக்கும், ‘நிடோ வைரஸ்கள்’ முதுகெலும்பிகள் மற்றும் முதுகெலும்பில்லாதவை என இரண்டையும் பாதிக்கின்றன. ஓம்புயிரிகள் வெவ்வேறு வைரஸ்களுடன் இணைந்து பாதிக்கப்படும்போது, மரபணு மறுசீரமைப்பு ஏற்படலாம்; அது புதிய, அதிக அபாயகரமான வைரஸ்களை உருவாக்கக் கூடும்.
8. ILOஇன் கூற்றுப்படி, உலகளாவிய வேலையின்மை விகிதம் நடப்பு 2024ஆம் ஆண்டில் எந்தச் சதவீதத்திற்குச் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
அ. 4.5%
ஆ. 4.9%
இ. 5.3%
ஈ. 5.5%
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உலகளாவிய வேலையின்மை சற்று குறையும் என்று கணித்துள்ளது; இது 2024இல் 4.9%ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதில், ‘மெதுவான முன்னேற்றமே’ காணப்படும் என ILO எச்சரிக்கிறது. 2025ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 4.9%ஆக நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
9. 2024 – உலக சுகாதார சபைக்கானக் கருப்பொருள் என்ன?
அ. All for Health, Health for All
ஆ. Health for peace, Peace for Health
இ. Saving Lives, Driving Health for All
ஈ. Support Nurses and Midwives
- எழுபத்தேழாவது உலக சுகாதார சபை சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் மே.27 – ஜூன்.01 வரை, “அனைவருக்கும் நலம், நலத்திற்காக அனைவரும்” என்ற கருப்பொருளின்கீழ் கூடுகிறது. அரபு, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ருஷிய மற்றும் சுபானிய மொழிகளில் விளக்கங்களைக் கொண்டிருக்கும் நடைமுறைகளின் நேரடி இணையலைபரப்பின் மூலம் இந்நிகழ்வு நடத்தப்படும்.
10. எவரெஸ்ட் சிகரத்தையும் லோட்ஸே சிகரத்தையும் ஒரே பருவத்தில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்த இந்திய மலையேறி யார்?
அ. பிரேர்னா டாங்கி
ஆ. அஜீத் பஜாஜ்
இ. சத்யதீப் குப்தா
ஈ. ஜெய் வர்தன் பகுகுணா
- இந்திய மலையேறி சத்யதீப் குப்தா ஒரே பருவத்தில் 2 முறை எவரெஸ்ட் சிகரத்தையும் லோட்சே சிகரத்தையும் ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து லோட்சே சிகரத்தை 11:15 நிமிடங்களில் கடந்து அதிவேகமாக பயணித்த சாதனையையும் படைத்தார். வழிகாட்டிகளுடன் சேர்ந்து, சத்யதீப் குப்தா மே.21ஆம் தேதியன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்; அதைத்தொடர்ந்து மே.22ஆம் தேதியன்று லோட்சே சிகரத்தை அடைந்தார்.
11. 2023ஆம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவிற்கு எவ்வளவு இறையாண்மைக்கடன் வழங்கியுள்ளது?
அ. $4.6 பில்லியன்
ஆ. $2.6 பில்லியன்
இ. $3.6 பில்லியன்
ஈ. $1.6 பில்லியன்
- ஆசிய வளர்ச்சி வங்கி கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு $2.6 பில்லியன் இறையாண்மைக்கடனை வழங்கியுள்ளது. இக்கடன் நகர்ப்புற மேம்பாடு, மின்துறை மேம்பாடு, தொழில்துறை வழித்தட மேம்பாடு, தோட்டக் கலை ஆதரவு, இணைப்பு மேம்பாடு மற்றும் காலநிலை நெகிழ்திறன்மிக்க கட்டிடம் ஆகியவற்றிற்கு நிதியளிக்கும். மாநிலங்கள் முழுவதும் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக இந்திய அரசுக்கு இறையாண்மைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் கட்டமைப்பு மாற்றம், வேலை உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, பசுமை வளர்ச்சி மற்றும் விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை ஆசிய வளர்ச்சி வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
12. அண்மையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா-ஜப்பான் கூட்டுப்பணிக்குழுவின் 6ஆவது கூட்டம் எங்கு நடைபெற்றது?
அ. புது தில்லி
ஆ. ஹைதராபாத்
இ. சென்னை
ஈ. பெங்களூரு
- இந்தியா-ஜப்பான் கூட்டுப்பணிக்குழுவின் 6ஆவது கூட்டம், மே.29 அன்று புது தில்லியில் நடைபெற்றது. பிராந்திய பயங்கரவாத அச்சுறுத்தல்கள், அரச ஆதரவு பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளால் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து முக்கிய விவாதங்கள் இதன்சமயம் நடைபெற்றன. தகவல் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புமூலம் கூட்டுறவை மேம்படுத்த இருநாடுகளும் வலியுறுத்தின. இதன் அடுத்த சந்திப்பு டோக்கியோவில் நடைபெறும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு: நவீனமையமாகும் கல்வி
கேரள மாநிலம் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பாடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் செயற்கை நுண்ணறிவு கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பது இதுவே முதல்முறை. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் போன்றவற்றை பயிற்சிசெய்ய, ‘ஸ்கிராட்ச்’ மென்பொருளுடன் ‘பிக்டோ பிலாஸ்க்’ தொகுப்பு பாடப்புத்தகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.