Tnpsc Current Affairs in Tamil – 30th May 2024
1. ‘ஐநா அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் – 2024’இன் கருப்பொருள் என்ன?
அ. Women in Peacekeeping
ஆ. Fit for the future, building better together
இ. The Road to a Lasting Peace
ஈ. People Peace Progress
- 4,000-க்கும் மேற்பட்ட அமைதி காக்கும் படையினரின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் விதமாகவும், உலகளாவிய அமைதி முயற்சிகளை மேம்படுத்துவதற்காகவும் மே.29 அன்று ஐநா அமைதிப்படைகளின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. 2002இல் ஐநா பொதுச்சபை தீர்மானத்தால் நிறுவப்பட்ட இது, 1948இல் நிகழ்ந்த முதல் ஐநா அமைதி காக்கும் பணியின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இதன் முதல் அனுசரிப்பு 2003இல் நிகழ்ந்தது. 2024இன் கருப்பொருள், “Fit for the future, building better together” என்பதாகும்.
2. அல்கலைன் எலக்ட்ரோலைசர் முறையைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்காக எந்த ஆராய்ச்சி மையத்துடனான ஒப்பந்தத்தில் BHEL கையெழுத்திட்டுள்ளது?
அ. பாபா அணு ஆராய்ச்சி மையம்
ஆ. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
இ. தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்
ஈ. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
- அரசு நடத்தும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிட் (BHEL) ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான 50-கிலோவாட் அல்கலைன் எலக்ட்ரோலைசர் அமைப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் (BARC) கையெழுத்திட்டுள்ளது. மும்பையின் டிராம்பேயில் உள்ள இந்தியாவின் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான BARC, அணுசக்தித் துறையின் கீழ் இயங்குகிறது; இது பிரதமரின் மேற்பார்வையில் உள்ளது. இது அணு அறிவியல் மற்றும் பொறியியலில் விரிவான ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.
3. ஷராவதி ஆறு எந்த மாநிலத்திற்குள் பாய்கிறது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. கர்நாடகா
ஈ. ஆந்திரப் பிரதேசம்
- தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஷராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் சுரங்கம் மற்றும் புவியியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்குக் கர்நாடகாவில் பாயும் ஷராவதி ஆறு, மேற்கே அரபிக்கடலில் கலக்கிறது. இது 128 கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் அதன் படுகை 2,985 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த ஆறு ஜோக் அருவியை உருவாக்குகிறது மற்றும் ஏழு அணைகள் மற்றும் ஐந்து சுரங்கங்களுடன் கர்நாடகாவின் 40% நீர்மின்சாரத்தை உருவாக்குகிறது.
4. மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக அண்மையில் ஆப்பிரிக்காவின் எந்த நாட்டில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன?
அ. கென்யா
ஆ. ஜிபூட்டி
இ. தான்சானியா
ஈ. போட்ஸ்வானா
- ஈராண்டுகால, ‘ஜிபூட்டி தோழமைமிக்க கொசுக்கள் திட்டத்தின்’ ஒருபகுதியாக மலேரியாவை எதிர்த்துப்போராட ஜிபூட்டியில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த முறையானது பெண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் ஆண் கொசுக்களை அறிமுகப்படுத்துகிறது; அது பெண் சந்ததிகள் முதிர்வயது வரை உயிர் வாழ்வதைத் தடுக்கும் மரபணுவைக் கடத்துகிறது, மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் ஸ்டீபன்சி கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதேபோன்ற முறைகள் பிரேஸில், கேமன் தீவுகள், பனாமா & இந்தியாவிலும் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.
5. விவேகானந்தர் பாறை நினைவகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. ஒடிசா
ஈ. மேற்கு வங்காளம்
- 2024 மக்களவைத் தேர்தலின் முடிவைக் குறிக்கும் வகையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் 48 மணி நேரம் தியானம் செய்தார். சுவாமி விவேகானந்தரைப் போற்றும் வகையில் 1970 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நினைவிடம், வங்காள விரிகுடா, இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரியில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. இது ‘ஸ்ரீபாத மண்டபம்’, ‘விவேகானந்தர் மண்டபம்’, மற்றும் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச்சிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
6. மாகெல்லன் பணியின் முதன்மை நோக்கம் என்ன?
அ. செவ்வாய் கிரகத்தை ஆராய
ஆ. ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி வீனஸின் மேற்பரப்பை வரைபடமாக்குதல்
இ. சந்திரனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக
ஈ. புறக்கோள்களை ஆய்வு செய்ய
- NASAஇன் மாகெல்லன் திட்டத்திலிருந்து ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியலாளர்கள் வெள்ளியில் புதிய எரிமலை ஓட்டங்களைக் கண்டுபிடித்தனர்; இது 1990 மற்றும் 1992க்கு இடையிலான எரிமலை செயல்பாட்டைக் குறிக்கிறது. 1989 மே.04இல் அட்லாண்டிஸ் என்ற விண்கலத்தில் ஏவப்பட்ட இது, ஃபெர்டினாண்ட் மாகெல்லனின் பெயரால் அழைக்கப்படும் இது, விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட முதல் கோள்களுக்கு இடையேயான திட்டமாகும். 1994இல், மாகெல்லன் தானே வெள்ளியில்மூழ்கி, வளிமண்டலத் தரவுகளைச் சேகரித்தது.
7. எந்த அமைப்பு சமீபத்தில், ‘ஆசியா-பசிபிக் வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டம்-2024’ அறிக்கையை வெளியிட்டது?
அ. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)
ஆ. உலக வர்த்தக அமைப்பு (WTO)
இ. சர்வதேச நாணய நிதியம் (IMF)
ஈ. உலக வங்கி
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 2024 – ஆசிய-பசிபிக் வேலைவாய்ப்பு மற்றும் சமூகப்பார்வை அறிக்கையை வெளியிட்டது. இந்தியப் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 58.2% என்ற அளவுக்கு மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு 2023இல் காணப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா அதிக முதியோர் மக்கள்தொகையை எதிர்கொள்கிறது; முதியோர் சார்பு விகிதம் 2050இல் 0.10லிருந்து 0.22ஆக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
8. சமீபத்தில், அஸ்ஸாமின் எந்தத் தேசியப்பூங்காவில், ‘இமயமலை செரோ’ தென்பட்டது?
அ. மனாஸ் தேசியப்பூங்கா
ஆ. நம்தாபா தேசியப்பூங்கா
இ. நமேரி தேசியப்பூங்கா
ஈ. ஒராங் தேசியப்பூங்கா
- சமீபத்தில், நமேரி தேசியப்பூங்காவில், ஆடு, கழுதை, மாடு மற்றும் பன்றியின் கலவையை ஒத்த ஓர் ‘இமயமலை செரோ’ தென்பட்டது. தாவர உண்ணிகளான செரோக்கள், பொதுவாக இமயமலையில் 2,000 முதல் 4,000 மீட்டர் உயரத்தில் வாழ்கின்றன. மெயின்லேண்ட் செரோவின் கிளையினமான இமயமலை செரோ IUCNஇன் சிவப்புப் பட்டியலின்படி பாதிக்கப்படக்கூடிய உயிரினமாகும். அஸ்ஸாமின் சோனிட்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நமேரி புலிகள் காப்பகம், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ளது.
9. சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவுக்காக பப்புவா நியூ கினியாவிற்கு இந்திய அரசு எவ்வளவு உதவி செய்துள்ளது?
அ. $1 மில்லியன்
ஆ. $2 மில்லியன்
இ. $3 மில்லியன்
ஈ. $4 மில்லியன்
- பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 2,000 பேர் உயிரிழந்ததையடுத்து இந்தியா $1 மில்லியன் டாலர் உடனடி உதவியை வழங்கியது. 2018இல் நிலநடுக்கத்திற்குப் பிறகும் மற்றும் 2019 மற்றும் 2023இல் எரிமலை வெடிப்புகளைத் தொடர்ந்தும் உதவி வழங்கப்பட்டது. இந்தியாவிற்கும் பப்புவா நியூ கினியா நாட்டிற்கும் இடையிலான அரசியல் ரீதியிலான உறவுகள் 1975இல் தொடங்கியது. பப்புவா நியூ கினியா தனது முதல் பாதுகாப்பு ஆலோசகரை இந்தியாவிற்கு நியமித்தது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக உள்ளது. ஐநா மற்றும் காமன்வெல்த் போன்ற சர்வதேச மன்றங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை அந்நாடு ஆதரித்துள்ளது.
10. மைக்ரோசெபலி என்றால் என்ன?
அ. குழந்தையின் கண்கள் இயல்பை விட மிகவும் சிறியதாக இருக்கும் நிலை
ஆ. குழந்தையின் தலை இயல்பை விட மிகவும் சிறியதாக இருக்கும் நிலை
இ. குழந்தையின் தலை இயல்பை விட பெரியதாக இருக்கும் நிலை
ஈ. ஒரு குழந்தையின் இதயம் இயல்பை விட பெரியதாக இருக்கும் நிலை
- மைக்ரோசெபலி மற்றும் நியூரான் வளர்ச்சியில் SASS6 மரபணுவின் முக்கியத்துவத்தை ஓர் அண்மைய ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. மைக்ரோசெபலி குழந்தைகளின் தலையின் அளவைக் கணிசமான அளவில் குறைக்கிறது; இது பெரும்பாலும் மோசமான இயங்கு திறன்கள், பேச்சில் குளறல் மற்றும் அசாதாரண முகத்தோற்றங்களுடன் தொடர்புடையது. இது கரு மூளை வளர்ச்சியின்போது ஏற்படும் அசாதாரண உயிரணுப் பிரிவிலிருந்து உருவாகிறது மற்றும் மகப்பேறுக்கு முற்பட்ட காலத்தில் கண்டறியப்படலாம். SASS6 மரபணுவின் இரண்டு பிறழ்ந்த நகல்களைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காரணமாக இது ஏற்படுகிறது. இரத்த உறவுகளுக்குள் திருமணம் புரிவது இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
11. வானிலிருந்து நிலப்பாரப்பு இலக்கைத்தாக்கும் ஏவுகணையான ருத்ரM-IIஐ உருவாக்கிய அமைப்பு எது?
அ. DRDO
ஆ. ISRO
இ. JAXA
ஈ. ESA
- பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசாவின் கடற்கரையிலிருந்து Su-30 MK-I வானூர்தியில் இலிருந்து ருத்ரM-II ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. சோதனை அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்தது; ஏவுகணையின் உந்துவிசை, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டல் அமைப்புகள் சரிபார்க்கப்பட்டது. இந்தச் சாதனையை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். ஒரு திட-இயக்க ஏவுகணையான ருத்ரM-II, மேம்பட்ட DRDO தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துகிறது.
12. அக்னிபானின் துணை-சுற்றுப்பாதை ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனம் எது?
அ. ஆஸ்ட்ரோகேட் ஆய்வகங்கள்
ஆ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்
இ. துருவ விண்வெளி
ஈ. அக்னிகுல காஸ்மோஸ்
- இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் அதன் முதல் துணை-சுற்றுப்பாதை சோதனை கலமான, ‘அக்னிபான் SOrTeD’ஐ வெற்றிகரமாக ஏவியது; இது உலகின் முதல் ஒற்றை-துண்டு 3D-அச்சிடப்பட்ட ராக்கெட் இயந்திரத்தால் இயக்கப்படுகிறது. முந்தைய நான்கு ஏவுதல் முயற்சிகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இந்தச் சாதனை, இந்தியாவில் இரண்டாவது தனியார் ஏவுகல ஏவுதலைக் குறிக்கிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்த இலக்கு: மத்திய அமைச்சர் கட்கரி.
அடுத்த பத்து ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனை சீராக அதிகரித்து வருகிறது. அரசின் ‘வாகன்’ இணையதளத்தில் இது தொடர்பான விரிவான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2. ஜூன்.03இல் ஒரே நேர்க்கோட்டில் ஆறு கோள்கள்.
வானில் ஆறு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன்.03ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன்.3ஆம் தேதி கிழக்குத்திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரவுள்ளன. இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்கலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.