TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 30th January 2024

1. 2024 – தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Sustainable Journeys, Timeless Memories

ஆ. Tourism and Green Investments

இ. Rural and Community Centric Tourism

ஈ. Tourism for Inclusive Growth

  • தேசிய சுற்றுலா நாளானது 2024 ஜன.25 அன்று கொண்டாடப்பட்டது. “Sustainable Journeys, Timeless Memories” என்பது இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். பொறுப்பான மற்றும் கவனம் நிறைந்த பயணத்தை மேற்கொள்வதை இந்தக் கருப்பொருள் ஊக்குவிக்கிறது. இந்த நாளை முன்னிட்டு கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது.

2. 2024 – குடியரசு நாள் விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றவர் யார்?

அ. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

ஆ. ருசிய அதிபர் விளாடிமிர் புடின்

இ. பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்

ஈ. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

  • இந்தியாவின் 75ஆவது குடியரசு நாள் விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். குடியரசு நாளன்று புதுதில்லியின், ‘கடமைப்பாதை’யில் இந்தியா தனது இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் குடியரசு நாளைக் கொண்டாடியது.

3. “பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் நிதி” என்ற அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ. RBI

ஆ. SBI

இ. NABARD

ஈ. IDBI

  • இந்திய ரிசர்வ் வங்கியின், “பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் நிதிகள்” என்ற அறிக்கையானது 2020-21 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் 2.58 இலட்சம் பஞ்சாயத்துக்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்துள்ளது. சொத்துவரிபோன்ற வரையறுக்கப்பட்ட வருவாய் ஆதாரங்களையே பஞ்சாயத்துகள் பெரிதும் (95%) நம்பியுள்ளன. சீரற்ற தரவானது நிதிநலத்தை மதிப்பிடுவதில் சவால்களை ஏற்படுத்துகிறது. பஞ்சாயத்துகளுக்கான வருவாய் ஆதாரங்களில் மத்திய & மாநில அரசின் மானியங்களும் அடங்கும். மேலும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு வரிகள் மற்றும் அபராதங்களை விதிக்கவும் அதிகாரம் உள்ளது.

4. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 44ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. காந்திநகர்

இ. லக்னோ

ஈ. இந்தூர்

  • குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 5ஆவது சர்வதேச மற்றும் 44 ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். இந்த மாநாடு, “தடயவியல் நடத்தை அறிவியல்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இது வளர்ந்துவரும் ஒரு துறை என அமித் ஷா கூறினார். திறன் மேம்பாடு மற்றும் புலனாய்வுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் தடயவியல் சிறப்பு மையம் ஒன்றையும் அவர் தொடக்கிவைத்தார்.

5. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டை விஞ்சி உலகளவில் நான்காவது மிகப்பெரிய பங்குச்சந்தையாக மாறியது?

அ. ஹாங்காங்

ஆ. சிங்கப்பூர்

இ. இலங்கை

ஈ. ஆஸ்திரேலியா

  • இந்தியப் பங்குச்சந்தை முதன்முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்குத்தள்ளி, உலகின் நான்காவது மிகப்பெரிய பங்குச்சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கூட்டு மதிப்பு $4.33 டிரில்லியன் அமெரிக்க டாலரை நெருங்கியுள்ளது. ஹாங்காங் சந்தைகளின் கூட்டு மதிப்பு $4.29 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. உலக அளவில் முன்னணி பங்குச் சந்தைகளாக அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. முதலீட்டாளர்கள் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பங்கேற்பு காரணமாக இந்தியப் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன

6. எந்த அமைச்சகத்தின்கீழ், எல்லைப் பாதுகாப்புப் படை செயல்படுகிறது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) செயல்பாட்டு அதிகார வரம்பை 15 கிமீ முதல் 50 கிமீ வரை விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவிற்கு பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாகவும், மாநிலச் சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரங்களை கையகப்படுத்துவது போல உள்ளதாகவும் அம்மாநிலங்கள் வாதிடுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் போருக்குப்பிறகு கடந்த 1965இல் நிறுவப்பட்ட BSF, உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்தியாவின் முதன்மை பாதுகாப்புப் படையாகும். இது முதன்மையாக இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லை மற்றும் இந்தோ-வங்காளதேச சர்வதேச எல்லை உட்பட பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

7. இந்திய தரநிலைகளின் சூழலில், ‘SMART’ எதைக் குறிக்கிறது?

அ. Specific Measurable Achievable Relevant and Time-bound

ஆ. Standards Machine Applicable Readable and Transferable

இ. Standardized Measurement and Reporting Technique

ஈ. Systematic Manageable Analytical Resourceful Timely

  • இந்திய தரநிலைகளின் பணியகத்தின் (BIS) தலைமை இயக்குநர் இந்திய தரநிலைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக SMART (Standards Machine Applicable Readable and Transferable) அணுகுமுறையை ஆதரிக்கிறார். சர்வதேச எலெக்ட்ரோடெக்னிகல் கமிஷன் (IEC) மற்றும் தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ISO) ஆகியவற்றின் முன்முயற்சி இந்த இயந்திர விளக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.

8. எந்த அமைச்சகத்தால், விஜய் இராகவன் குழு உருவாக்கப்பட்டது?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் K விஜய் ராகவன் தலைமையிலான குழு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மறுசீரமைப்பை மதிப்பாய்வு செய்து முன்மொழிந்துள்ளது. கடந்த 1958ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட DRDO, அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் கவனஞ்செலுத்துகிறது.

9. 75ஆவது குடியரசு நாளை முன்னிட்டு எத்தனை பத்ம விருதுகளுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்?

அ. 132

ஆ. 130

இ. 150

ஈ. 135

  • 2024ஆம் ஆண்டு குடியரசு நாளை முன்னிட்டு 132 பத்ம விருதுகளுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்த மதிப்புமிக்க பட்டியலில் 5 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும். இந்த விருதுகள் அனைத்தும் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை மேற்கொண்டோரை அங்கீகரிக்கிறது. கூடுதலாக, இப்பட்டியலில், “வெளிநாட்டவர்கள்/NRI/PIO/OCI” பிரிவிலிருந்து 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.

10. 2023 – ஜீவன் ரக்ஷா பதக்கங்களை பெற்றவர்களின் எண்ணிக்கை?

அ. 28

ஆ. 29

இ. 30

ஈ. 31

  • மரணத்திற்குப் பின் விருது பெற்ற 3 பேர் உட்பட 31 நபர்களுக்கான ஜீவன் ரக்ஷா பதக்கங்களை வழங்க இந்தியக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். உயிர்களைக் காப்பாற்ற சிறந்த வீரச்செயல்கள் புரிவோரை அங்கீகரித்து வழங்கப்படும் இந்த விருதுகள், சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் (3 பேர்), உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் (7 பேர்), மற்றும் ஜீவன் ரக்ஷா பதக்கம் (21 பேர்) என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

11. ‘காந்தமானி பூம்’ உடன் தொடர்புடைய திட்டம் எது?

அ. சந்திரயான்-3

ஆ ஆதித்யா-L1

இ. ககன்யான்

ஈ. NISAR

  • ஏவப்பட்ட 132 நாட்களுக்குப் பிறகு, லாக்ரேஞ்ச் புள்ளி L1இல் நிலைபெற்றிருக்கும் ஆதித்யா-L1 செயற்கைக்கோளில் 6 மீட்டர் அளவிலான மேக்னடோமீட்டர் பூம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்தது. இது இரண்டு அதிநவீன மேக்னடோமீட்டர் உணரிகளைக் கொண்டுள்ளது. இந்தக் காந்தமானி பூம் விண்வெளியில் உள்ள கோள்களுக்கு இடையேயான காந்தப்புலங்களை அளவிடுகிறது.
  • விண்கலத்திலிருந்து 3 மற்றும் ஆறுமீட்டர் தொலைவில் இவை வைக்கப்பட்டுள்ளன. இது விண்கலம் உருவாக்கும் காந்தப்புல தாக்கத்தை குறைப்பதோடு, துல்லியமான அளவீடுகளை உறுதிசெய்கிறது.

12. யாருக்கு, மதிப்புமிக்க ‘Freedom of City of London’ விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. மதுர் குமார்

ஆ. லோக்நாத் மிஸ்ரா

இ. ஷாருக் T வாடியா

ஈ. அஜித் மிஸ்ரா

  • இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வசித்து வரும் புகழ்பெற்ற வழக்கறிஞரான அஜித் மிஸ்ரா, சட்ட மற்றும் பொது வாழ்வில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க, ‘Freedom of City of London’ விருதைப்பெற்றார். UK India Legal Partnershipஇன் நிறுவனர் மற்றும் தலைவரான அஜித் மிஸ்ரா, இரட்டை-தகுதி பெற்ற வழக்கறிஞர் மற்றும் இந்தியாவிற்கும் UK-க்கும் இடையே M&A மற்றும் வணிகப்பரிவர்த்தனைகளை எளிதாக்குவதில் இரண்டு தசாப்தகால அனுபவத்தைப் பெற்றவர் ஆவார்.

13. பழசி நீர்ப்பாசனத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • 2008ஆம் ஆண்டு முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நீர்விநியோகத்தை மீட்டெடுக்கும் நோக்கில் பழசி பாசனத் திட்டத்திற்கான மூன்றாம் கட்ட சோதனை ஓட்டத்தை கேரள நீர்ப்பாசனத்துறை தொடங்கியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பிரதான கால்வாய் மற்றும் மாஹி கிளைக்கால்வாயை உள்ளடக்கிய கால்வாய் மதகுகள் ஜன.31ஆம் தேதி 9:00 மணிக்கு திறக்கப்படவுள்ளன. இச்சோதனையானது கால்வாய் நிலைமைகளை முழுவதும் மதிப்பிடுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. “உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம்”

தமிழ்நாட்டில், மாவட்ட ஆட்சியர்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளைக்கேட்டறியும் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் மாதந்தோறும் நான்காவது புதன்கிழமை செயல்படுத்தப்படவுள்ளது. “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணிநேரம் தங்கியிருக்க வேண்டும். அதாவது, முதல் நாள் காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 9 மணிவரை அதே வட்டத்தில் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த `88.80 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் ஒரு வட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு `20,000 செலவிட முடியும். சென்னையைத் தவிர்த்து 37 மாவட்டங்களில் ஓராண்டுக்கு 444 முகாம்கள் நடத்தப்படும்.

$3.7 டிரில்லியன் டாலர் GDPஉடன் உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. மானிய விலையில் பருப்பு வகைகள்: தமிழ்நாட்டில் NCCF அறிமுகம்.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு பொதுவிநியோகத் துறையின் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு லிட் (NCCF) ஆனது மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாரத் டால்’ என்ற வணிகப்பெயரில் அந்தத் தயாரிப்புகள் தமிழ்நாட்டில் விநியோகம் செய்யப்படவுள்ளன.

3. UNESCO பாரம்பரியப் பட்டியலுக்கு செஞ்சிக்கோட்டை பரிந்துரை.

2024-25ஆம் ஆண்டிற்கான UNESCOஇன் உலக பாரம்பரியப் பட்டியலில் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட மராத்தா இராணுவ நிலப்பரப்புக் காட்சிகள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மராட்டிய ஆட்சியில் இராணுவ சக்தியின் உத்தியாக பன்னிரண்டு பகுதிகள் இருந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் சல்ஹேர் கோட்டை, ஷிவ்னேரி கோட்டை, லோகாட், கந்தேரி கோட்டை, இராய்காட், இராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய்துர்க், சிந்துதுர்க் போன்றவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையும் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin