TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 2nd November 2023

1. இந்தியாவின் முதல் லாவெண்டர் பண்ணை அமையவுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஜம்மு காஷ்மீர் 🗹

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

  • ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சல்லா கிராமத்தில் இந்தியாவின் முதல் லாவெண்டர் பண்ணை அமையவுள்ளது. இது வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு சொந்தமான இரண்டு ஹெக்டேர் நிலத்தில் வரவுள்ளது. ஐரோப்பாவை பூர்வீகமாகக்கொண்ட லாவெண்டர் 2018ஆம் ஆண்டில் CSIR-Aroma Mission இன்கீழ் ஜம்மு பிரிவின் மிதவெப்ப மண்டலங்களில் இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தால் (IIIM) அறிமுகப்படுத்தப்பட்டது; அது முதல் தோடா இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாக ஆனது.

2. தேசிய ஒற்றுமை நாளன்று பிரதமரால் தொடங்கப்பட்ட அமைப்பின் பெயர் என்ன?

அ. மேரா யுவ பாரத் – MY பாரத் (எ) எனது இளைய பாரதம் அமைப்பு 🗹

ஆ. PM YUVA அமைப்பு

இ. மேரி மாத்தி அமைப்பு

ஈ. கர்தவ்ய அமைப்பு

  • பிரதமர் நரேந்திர மோடி அமிர்த தோட்டம் மற்றும் அமிர்த மகோத்சவ நினைவகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதோடு நாட்டின் இளையோருக்காக வடிவமைக்கப்பட்ட எனது இளைய பாரதம் (MY பாரத்) அமைப்பை தொடக்கிவைத்தார். புது தில்லியில் உள்ள கர்தவ்ய பாதையில், “எனது மண் எனது தேசம்” இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் இது தொடங்கப்பட்டது.

3. இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் வான் பாதுகாப்பு அமைப்பு திட்டமான ‘குஷா’ சார்ந்த நிறுவனம் எது?

அ. HAL

ஆ. DRDO 🗹

இ. L&T

ஈ. BHEL

  • 2028-29க்குள் இந்தியா தனது சொந்த நீண்டதூம் செல்லும் வான்பாதுகாப்பு அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தில் உள்ளது. இந்த உள்நாட்டு அமைப்பு 350 கிமீ தூரம் வரையிலான விமானம், டிரோன்கள், கப்பல் எறிகணைகள், மறைந்திருந்து தாக்கும் போர்க்கருவிகள் மற்றும் பலவித ஆயுதங்கள் உட்பட பலவிதமான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘குஷா திட்டம்’ என்று அழைக்கப்படும் இந்த இலட்சியத்திட்டம், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் உள்ளது.

4. ‘விஷன் இந்தியா@2047’ திட்டத்தைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள நிறுவனம் எது?

அ. NASSCOM

ஆ. NITI ஆயோக் 🗹

இ. RBI

ஈ. இந்திய தேர்தல் ஆணையம்

  • இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வரும் ஒரு தொலைநோக்கு ஆவணம் அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் அதன் வரைவு தயாராகும் என NITI ஆயோகின் தலைமைச் செயல் அதிகாரி BVR சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் உட்கட்டமைப்பு, நலன், வர்த்தகம் மற்றும் தொழில், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பத்துத் துறை சார்ந்த கருப்பொருள் பார்வைகளை ஒருங்கிணைப்பதற்காக NITI ஆயோக் பணிக்கப்பட்டது.
  • 2047இல் இந்தியாவின் பொருளாதாரம் $30 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $17,590ஆக இருக்கும் என்றும் NITI ஆயோக் கணித்துள்ளது.

5. இந்தியாவானது எந்த நாட்டுடன் இணைந்து ‘புத்தாக்க தளம்’ மற்றும் ‘நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்புத்தன்மை புத்தாக்க உரையாடல்’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது?

அ. சுவீடன்

ஆ. சுவிட்சர்லாந்து 🗹

இ. ஆஸ்திரேலியா

ஈ. பின்லாந்து

  • இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் இணைந்து இந்தோ-சுவிஸ் புத்தாக்க தளத்தை தொடங்கியுள்ளன. இந்தத் தளத்தின் தொடக்கத்தோடு பெங்களூரில் இந்தோ-சுவிஸ் நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்புத்தன்மை புத்தாக்க உரையாடலும் நடந்தது. நுண்ணுயிர் எதிர்ப்பி எதிர்ப்புத்தன்மை உடனான ஒரு சோதனை திட்டத்துடன் இத்தளம் தொடங்கியது. இந்தத் தளத்தின் தொடக்கமானது புத்தாக்கத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அதை மேலும் உத்திசார்மயமாக்குவதும் ஆகும்.

6. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபடுத்தும் பொருட்களை அகற்ற ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. IISc பெங்களூரு

ஆ. ஐஐடி மெட்ராஸ் 🗹

இ. ஐஐடி டெல்லி

ஈ. ஐஐடி காரக்பூர்

  • தமிழ்நாட்டின் மெட்ராஸின் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கழிவுநீரில் இருந்து சுவடு மாசுகளை அகற்றக்கூடிய ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கியுள்ளனர். இந்த ஏரோஜெல் ஆனது கிராஃபைனின் மாற்றியமைக்கப்பட்ட சிலிக்காவால் ஆனதாகும்; இதனால் கழிவுநீரில் இருந்து சிறிய துகள்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற முடியும்.

7. மயூரக்ஷி ஆறானது கீழ்காணும் எந்த இந்திய மாநிலத்தின் வழியாக பாய்கிறது?

அ. ஜார்கண்ட் 🗹

ஆ. அஸ்ஸாம்

இ. கர்நாடகா

ஈ. மத்திய பிரதேசம்

  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்காவில் மயூரக்ஷி ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள மிகநீளமான பாலத்தை அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் திறந்து வைத்தார். `198 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் 2.34 கிமீ நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. இது பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் குறைத்து, இணைப்பை மேம்படுத்தும். இந்த ஆறு ஜார்க்கண்டில் உள்ள திரிகூட மலையில் உற்பத்தியாகிறது. இது ஜார்கண்ட் வழியாக பாய்ந்து மேற்கு வங்கத்தின் இரண்டு மாவட்டங்கள் வழியாக ஹூக்ளி ஆற்றில் கலக்கிறது.

8. IQAirஇன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் நான்காவது இடம்பிடித்த இந்திய நகரம் எது?

அ. சென்னை

. தில்லி 🗹

இ. கொல்கத்தா

ஈ. வாரணாசி

  • IQAirஇன்படி, தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகியவை உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களாக 4, 7 மற்றும் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. மும்பையின் காற்றின் தரம் தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக நலமற்றதாக உள்ளது. 2022ஆம் ஆண்டு சராசரி PM2.5 செறிவின் அடிப்படையில், உலகின் முதல் பத்து மாசுபட்ட நாடுகளில் இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில், IQAir கணக்கெடுப்பில், லாகூர் மற்றும் பெய்ஜிங் ஆகியவை மாசுபட்ட முதல் ஐந்து நகரங்களில் இடம்பெற்றுள்ளன.

9. எந்த மாநிலத்தில் உள்ள இரத்னகிரி, இராஜபூர் அருகே இரண்டு பழமையான கோவில் குகைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன?

அ. கர்நாடகா

ஆ. மகாராஷ்டிரா 🗹

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. கேரளா

  • மகாராஷ்டிர மாநிலத்தின் இரத்னகிரி, இராஜபூர் அருகே 2 பழமையான கோவில் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் குகைகள் பொ ஆ 5 அல்லது 6ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவை எலிபெண்டா குகைகளைவிட பழமையானவையாகும். இரத்னகிரியில் பௌத்த மையமான இரத்னகிரி குகைகளும் உள்ளன. பௌத்த நினைவுச்சின்னங்கள் பொ ஆண்டு 5ஆம் நூற்றாண்டிலிருந்தே காணப்படுகின்றன. 13ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட நினைவுச் சின்னமே இறுதியானதாகும்.

10. ‘B61-13’ அணுகுண்டுடன் தொடர்புடைய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. அமெரிக்கா 🗹

ஈ. சீனா

  • இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமாமீது போடப்பட்ட அணுகுண்டைவிட 24 மடங்கு ஆற்றல்வாய்ந்த புதிய அணுகுண்டொன்றை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. B61-13 என்ற அணுகுண்டானது நாகசாகியில் போடப்பட்ட 25 கிலோ டன் வெடிகுண்டைவிடவும் கிட்டத்தட்ட 14 மடங்கு பெரியதாக இருக்கும்.

11. யாரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய ஒற்றுமை நாள் கொண்டாடப்படுகிறது?

அ. ‘மகாத்மா’ காந்தி

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. ‘சர்தார்’ வல்லபாய் படேல் 🗹

ஈ. டாக்டர் பி ஆர் அம்பேத்கர்

  • விடுதலை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான ‘சர்தார்’ வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்.31 அன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை நாள் கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேல் அக்.31, 1875 இல் பிறந்தார். விடுதலைக்குப் பிறகு 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்தில் இணைத்த பெருமைக்குரியவர் அவர்.

12. ‘ஷென்சோ-16’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. சீனா 🗹

இ. தென் கொரியா

ஈ. இஸ்ரேல்

  • 5 மாதங்கள் புவி சுற்றுப்பாதையில் இருந்த மூன்று சீன விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர். அவ்விண்வெளி வீரர்கள் ஷென்ஷோ-16 திட்டத்தின் ஒருபகுதியாக இருந்தனர். அவர்கள் மூவரும் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் சுமார் எட்டு மணி நேர விண்வெளி நடைப்பயணத்திலும் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். நிலையத்தை ஒன்றிணைப்பதற்குத் தேவையான பணிகலையும் அவர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையம் சுமார் பத்தாண்டு காலத்திற்கு செயல்படுவதோடு பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சோதனைகளையும் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டியாங்காங் விண்வெளி நிலையத்தில் கீரை, செர்ரி தக்காளி மற்றும் பச்சை வெங்காயத்தை விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பயிரிட்டுள்ளனர்.

13. ‘மீண்டும் மஞ்சப்பை’ என்பது நெகிழிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக கீழ்காணும் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும்?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கேரளா

இ. ஒடிசா

ஈ. மேற்கு வங்காளம்

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், கடந்த 2021ஆம் ஆண்டு, நெகிழிப் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டத்தைத் தொடக்கினார். சமீபத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் கீழ் `25 இலட்சம் மதிப்பிலான தானியங்கி மஞ்சப்பை வழங்கும் எந்திரம் பெசன்ட் நகரில் திறக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் நெகிழி மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழித் தடையை அமல்படுத்தவும் இது எண்ணுகிறது. இதில் ஒரு துணிப்பை விற்கும் பகுதியும் ஒரு நெகிழிக் குடுவையை நசுக்கும் இயந்திரமும் இடம்பெற்றுள்ளது.

14. ‘இராஜாஜி புலிகள் காப்பகம்’ அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. உத்தரகாண்ட் 🗹

ஈ. மேற்கு வங்காளம்

  • இராஜாஜி புலிகள் காப்பக பாதுகாப்பு அறக்கட்டளையை அமைக்க உத்தரகாண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறக்கட்டளையின் முதன்மை நோக்கம், இராஜாஜி புலிகள் காப்பகத்தை உள்ளடக்கிய பகுதிகளில் சுற்றுச்சூழல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியை விரைவுபடுத்துவதும் எளிதாக்குவதும் ஆகும். காடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க அங்கு வாழ் உள்ளூர் மக்களுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதையும் இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம்.

ஹாங்சோவில் நடந்த பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான தனிநபர் பிரிவில் அவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதேபோன்று பெண்கள் கலப்பு காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கலப்பு காம்பவுண்ட் பிரிவில் இராகேஷ் குமார் மற்றும் ஷீத்தல் தேவி தங்கம் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக ஷீத்தல் தேவி 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று 3 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. கம்பு ஊன்றித் தாண்டுதல்: தேவ் மீனா சாம்பியன்.

கோவாவில் நடைபெறும் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் பிரிவில் மத்திய பிரதேசத்தின் தேவ் மீனா 5.16 மீ உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் அவர், அடுத்த ஆண்டு பெருவில் நடைபெறவிருக்கும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதிபெற்றார்.

3. ஐஸ்வரி பிரதாப்புக்கு தங்கம்.

தென் கொரியாவில் நடைபெறும் 15ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப்பதக்கம் வென்றார்.

4. நண்டுத்தின்னிப் (Crab-plover) பறவைகளின் இனப்பெருக்கப் பகுதிகள்.

முதன்முறையாக, கோடியக்கரைக்கு அருகிலுள்ள திருமறைக்காட்டின் சதுப்பு நிலத்தில் நண்டுத் தின்னி பறவை இனத்தின் இனப்பெருக்கப் பகுதிகள் தென்பட்டுள்ளன. நண்டுத்தின்னிப் பறவைகள் (Dromas ardeola) பாகிஸ்தான், தீபகற்ப இந்தியா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவு, வட இலங்கை மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு குளிர்காலத்தில் வருகைதரும் ஒரு பறவையாகும் என்பதோடு இது வங்காளதேசப் பகுதிகளில் சுற்றித் திரியும் பறவையாகும்.

5. விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவர்கால ஓவியங்கள்.

விழுப்புரம் மாவட்டம் பனமலையில் அமைந்துள்ள தாளகிரீஸ்வரர் திருக்கோவிலில் 1,300 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் நடனத்தைச்சித்தரிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இக்கோவிலானது ‘இராஜசிம்மன்’ எனப் பொதுவாக அறியப்படும் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதாகும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin