Tnpsc Current Affairs in Tamil – 2nd July 2024
1. அண்மையில், இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. யுவராஜ் சிங்
ஆ. கபில் தேவ்
இ. சச்சின் டெண்டுல்கர்
ஈ. நீரஜ் சோப்ரா
- புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும், ஆர்வமுள்ள தொழிற்முறையல்லாத கோல்ப் வீரருமான கபில் தேவ், இந்தியாவின் தொழில்முறை கோல்ஃப் சுற்றுப்பயணத்தின் (PGTI) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ், துணைத்தலைவராகவும், PGTIஇன் ஆளும் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். “Haryana Hurricane” என்று அழைக்கப்படும் அவர், 2006இல் PGTIஇன் தொடக்கத்திலிருந்து, நாடு முழுவதும் போட்டிகளை ஏற்பாடு செய்து, இந்தியாவில் தொழிற்முறை கோல்ஃபை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
2. உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டம், ‘கத்திகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது?
அ. இராம்பூர்
ஆ. சஹாரன்பூர்
இ. மிர்சாபூர்
ஈ. ரேபரேலி
- “கத்திகளின் நகரம்” என்று அழைக்கப்படும் உத்தர பிரதேச மாநிலத்தின் இராம்பூர் மாவட்டம், பதினெட்டாம் (18ஆம்) நூற்றாண்டிலிருந்து புகழ்பெற்ற ராம்புரி சாக்குவை வடிவமைத்து வருகிறது. கைவினைத்திறன் மற்றும் அரச விசுவாசத்தின் சின்னங்களாகப் பார்க்கப்படும் இந்தக் கத்திகள், உயர்தர எஃகுமூலம் தயாரிக்கப்படுகின்றன. எலும்பு, கொம்பு அல்லது தந்தத்தின் கைப்பிடிகளுடன் வெகு நுணுக்கமாக இவை செய்யப்படுகின்றன. வன்முறையைக் குறைக்கும் நோக்கில் 1990 வாக்கில் இக்கத்திகளுக்குத் தடைவிதிக்கப்பட்டபோதிலும், ராம்பூர் கைவினைஞர்கள் தங்கள் கைவினைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனை சட்டப்பூர்வமாக மாற்றியமைத்தனர்.
3. காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்காக, ‘ரைசோடோப்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?
அ. தென்னாப்பிரிக்கா
ஆ. ஜிம்பாப்வே
இ. நியூசிலாந்து
ஈ. இந்தியா
- தென்னாப்பிரிக்க அறிவியலாளர்கள், “ரைசோடோப்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காக வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் நோக்கோடு அவற்றின் கொம்புகளில் கதிரியக்கப்பொருட்கள் செலுத்தப்படும். கொம்புகளை கண்டறியக்கூடியதாகவும், நுகர்வுக்கு நச்சுத்தன்மையுடையதாகவும் மாற்றுவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். 20 காண்டாமிருகங்களை உள்ளடக்கிய இந்தச் செயல்முறையானது துளையிடுதல், ரேடியோஐசோடோப்புகளைச் செருகுதல் மற்றும் நுண்புள்ளிகள் மற்றும் சில்லுகளைச்சேர்ப்பது ஆகியவை அடங்கும்.
4. அண்மையில், இமயமலைப்பகுதிகளில், ‘அயனமண்டல மின்னலைக்கண்ட (Gigantic Jets)’ அமைப்பு எது?
அ. JAXA
ஆ. ISRO
இ. NASA
ஈ. CNSA
- NASA சமீபத்தில் இமயமலைப்பகுதிகளில் பிரம்மாண்ட அயனமண்டல மின்னல்களைக் கண்டுள்ளது. இவ்வரிய மற்றும் ஆற்றல்மிகு மின்னல்கள் மேகத்தின் உச்சியிலிருந்து விண்வெளியின் விளிம்புவரை நீண்டு, வழமையான மின்னலிலிருந்து வேறுபடுகின்றன. 21ஆம் நூற்றாண்டில் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்ட, இந்த பிரம்மாண்ட அயன மண்டல மின்னல்களின் அடிப்பகுதி நீலநிற பிரம்மாண்ட அயனமண்டல மின்னல்களை ஒத்துள்ளது; அதே சமயம் அதன் மேற்பகுதி சிவப்பாக உள்ளது. இக்கண்டுபிடிப்பு வளிமண்டல நிகழ்வுகள்பற்றிய நமது புரிதலை அதிகரிக்கிறது.
5. பாலூட்டி விலங்கான, ‘பெருநில மலையாட்டின்’ காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ரைமோனா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
அ. ஒடிஸா
ஆ. அஸ்ஸாம்
இ. மத்திய பிரதேசம்
ஈ. சிக்கிம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் ரைமோனா தேசியப்பூங்காவில், கடல் மட்டத்திலிருந்து 96 மீட்டர் உயரத்தில், மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கருகில், ஓர் ஆடு அல்லது மானின் தோற்றுத்துக்கு இடைப்பட்ட ஒரு பாலூட்டி இனமான ‘பெருநில மலையாடு’ தென்பட்டது. அறிவியலாளர்களின் குழுவால் ஆவணப்படுத்தப்பட்ட இந்தக் கண்டுபிடிப்பு ஜர்னல் ஆஃப் த்ரெட்டென்ட் டாக்ஸாவில் வெளியிடப்பட்டது. இந்தியா-பூடான் எல்லைப்பகுதியில் வழக்கமாக 200-3,000 மீட்டர் உயரத்தில் காணப்படும் மலையாடுகள், பூங்காவின் பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
6. அண்மையில், MND ‘விழிப்புணர்வு, கவனிப்பு மற்றும் மேலாண்மை’ பற்றிய 3ஆவது ஆண்டு மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. AIIMS, பாட்னா
ஆ. KGMU, லக்னௌ
இ. NIMHANS, பெங்களூரு
ஈ. AIIMS, தில்லி
- பெங்களூருவில் உள்ள NIMHANSஇல் நடைபெற்ற MND ‘விழிப்புணர்வு, கவனிப்பு மற்றும் மேலாண்மை’பற்றிய வருடாந்திர மாநாடு, அறிகுறி மற்றும் ஆதரவான சிகிச்சைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. இயக்கு நரம்பணு நோய்கள் மூளை மற்றும் முதுகுத்தண்டில் உள்ள இயக்கு நரம்பணுக்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறு நோயாகும். இது பொதுவாக 50 வயதிற்குப் பிறகு தசை பலவீனம், பேச்சு மந்தம் மற்றும் பக்கவாதத்திற்குக் காரணமாக அமைகிறது. இதற்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை; இருப்பினும் சில நிகழ்வுகள் மரபணு ரீதியாக ஏற்படுகின்றன. இந்நோய் பெண்களைவிட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.
7. ‘Steriphopus wangala’ என்பது சார்ந்த இனம் எது?
அ. மீன்
ஆ. சிலந்தி
இ. தவளை
ஈ. வண்ணத்துப்பூச்சி
- மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ மலைப்பகுதியில், ‘Steriphopus wangala’ என்ற புதியதொரு சிலந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டது. காரோ சமூகத்தின் ‘வாங்கலா’ அறுவடை திருவிழாவின் பெயரால் அழைக்கப்படும் இந்தப் செம்பழுப்பு நிறத்தைக் கொண்ட சிலந்தி, ‘Palpimanidae’ சிலந்தி குடும்பத்தைச் சார்ந்ததாகும்.
8. NASAஇன் ஜூனோ புரோப் என்ற விண்கலம் கீழ்க்காணும் எந்தக் கோளைச் சுற்றிவந்து ஆய்வுசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டது?
அ. வியாழன்
ஆ. செவ்வாய்
இ. சனி
ஈ. வெள்ளி
- NASAஇன் ஜூனோ ஆய்வுக்கலத்தின் புதிய கண்டுபிடிப்புகள் வியாழனின் நிலவு அயோவில் எரிமலை ஏரிகளின் அளவை வெளிப்படுத்துகின்றன. 2011இல் ஏவப்பட்ட ஜூனோ, வியாழனின் தோற்றம் மற்றும் மாற்றங்களை ஆய்வு செய்யும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டது. 2016இல் வியாழனை சென்றடைந்த இது 11 நாட்களுக்கு ஒருமுறை வியாழனைச் சுற்றிவருகிறது. ஆரம்பத்தில் 5 ஆண்டு வரை பணிசெய்ய உருவாக்கப்பட்ட இதன் பணிக்காலம் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட பயணகாலத்தின்போது, ஜூனோ வியாழனின் நிலவுகளான கனிமீடு, யூரோபா மற்றும் அயோ மற்றும் அதன் வளிமண்டலம் மற்றும் வளையங்களை ஆராயும்.
9. அண்மையில், High-Speed Expendable Aerial Target (HEAT) ‘ABHYAS’இன் ஆறு தொடர்ச்சியான மேம்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக முடித்த அமைப்பு எது?
அ. JAXA
ஆ. DRDO
இ. ISRO
ஈ. HAL
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) அண்மையில் ஒடிஸாவின் சந்திப்பூரில் High-Speed Expendable Aerial Target (HEAT) ‘ABHYAS’இன் தொடர்ச்சியான மேம்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தது. DRDOஇன் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் வடிவமைத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட இது, ஆயுத அமைப்பு பயிற்சிக்கான யதார்த்தமான அச்சுறுத்தல் காட்சிகளை வழங்குகிறது. இது தன்னிச்சையாக பறப்பது மற்றும் பறத்தலுக்குப் பிந்தைய பகுப்பாய்வுக்கான தரவுப்பதிவுகளைக் கொண்டிருப்பது போன்ற பல்வேறு திறன்களைக் கொண்டுள்ளது.
10. அண்மையில், காமன்வெல்த் ஊராட்சி அரசு மன்றத்தின் (CLGF) வருடாந்திர வாரியக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. இந்தியா
ஆ. இலங்கை
இ. பூட்டான்
ஈ. சீனா
- “Reinforcing Social Resilience through Women’s Political Representation” என்ற கருப்பொருளின்கீழ், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் ஊராட்சி அரசு மன்றத்தின் வருடாந்திர வாரியக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது. 1995 முதல் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் காமன்வெல்த் ஊராட்சி அரசு மன்றம் (CLGF), இந்தியா உட்பட ஐம்பத்தாறு காமன்வெல்த் நாடுகளில் உள்ள ஊராட்சி அரசாங்கங்கள் மற்றும் அமைச்சகங்களை ஒன்றிணைக்கிறது. SDG 5 இலக்குகளுடன் இணைந்து, பொது வாழ்வில் பெண்களின் ஆர்வமிகு பங்கேற்பை ஆதரிப்பதற்காக உள்ளூர் நிர்வாகத்தில் பாலின சமத்துவத்தை இது பரிந்துரைக்கிறது.
11. அண்மையில், மகாராஷ்டிராவின் எந்தப் புலிகள் காப்பகத்தில் காட்டுத்தீயை முன்கூட்டியே கண்டறிவதற்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ. நவேகான் நாஜிரா புலிகள் காப்பகம்
ஆ. பெஞ்ச் புலிகள் காப்பகம்
இ. தடோபா அந்தாரி புலிகள் காப்பகம்
ஈ. ஷயாத்ரி புலிகள் காப்பகம்
- காட்டுத்தீயை முன்கூட்டியே கண்டறிவதற்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு பெஞ்சச் புலிகள் காப்பகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாராட்டிரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் பரவியுள்ள பெஞ்ச் புலிகள் காப்பகம், வெப்பமண்டல ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் தேக்கு உள்ளிட்ட பல்வேறு மர வகைகளுக்கு பெயர் பெற்றதாகும். 1975இல் தேசியப்பூங்காவாகவும், 1992ஆம் ஆண்டில் புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்ட இந்தக் காப்புக்காடு, பெஞ்ச் ஆற்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு விதமான விலங்குகள் மற்றும் தாவரங்களுடன் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டுள்ளது.
12. புவன் பஞ்சாயத்து 4.0 மற்றும் அவசரநிலை மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் ஆகியவற்றுக்கான தேசிய அளவிலான புவிசார் தரவுத்தளங்களை உருவாக்கிய அமைப்பு எது?
அ. JAXA
ஆ. ISRO
இ. NASA
ஈ. CNSA
- இந்திய விண்வெளி ஆய்வமைப்பான ISRO உருவாக்கிய ‘புவன் பஞ்சாயத்து 4.0, அவசரகால மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் 5.0 (National Database for Emergency Management (NDEM 5.0)) ஆகிய இரண்டு புதிய தகவல் இணையதளங்களை மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் தொடக்கி வைத்தார்.
- கிராமப்புற ஊராட்சிகளில் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு புவன் பஞ்சாயத்து தளம் உதவும். மேலும் நிலப்பதிவுகளுக்கு உள்ளூர் நிர்வாகத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை இது குறைப்பதோடு அடித் தள நிலையில் ஊழலைக்குறைக்கும். இயற்கைப்பேரிடர்கள் குறித்த விண்வெளி அடிப்படையிலான உள்ளீடுகளை வழங்குகின்ற பேரிடர் அபாய குறைப்புக்கு உதவுகின்ற அவசரகால மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் 5.0 இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் மாநில கல்விக்கொள்கை பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த முருகேசன் தலைமையில் பதினான்கு பேர்கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
2. 58 இலட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-A மருந்து.
பொதுவாக குழந்தைகளுக்கு பிறந்தவுடன் தாயிடமிருந்து கிடைக்கப்பெறும் வைட்டமின்-A சத்து, அதற்கடுத்த ஆறு மாதங்களில் இருந்து குறையத்தொடங்கும். ஒரு கட்டத்தில் அந்தச் சத்து மிகவும் குறைந்தால், குழந்தைக்கு வளர்ச்சி குறைபாடு, வயிற்றுப்போக்கு, கண்பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு, வைட்டமின்-A மருந்து கொடுக்கப்படுகிறது. 11 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 மிலி மருந்தும், ஒரு வயது முதல் ஐந்து வயது உள்ள குழந்தைகளுக்கு 2 மிலி மருந்தும் கொடுக்கப்படும்.