TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 2nd & 3rd March 2024

1. இந்திய தேர்தல் ஆணையமானது, ‘மேரா பேலா வோட் தேஷ் கே லியே’ என்ற பரப்புரையை கீழ்காணும் எந்த அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • தேர்தல் செயல்பாட்டில் இளையோரை ஈடுபடுத்துவதையும் ஊக்கப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கல்வி அமைச்சகம் 2024 பிப்ரவரி.28 முதல் மார்ச்.06 வரை, ‘மேரா பேலா வோட் தேஷ் கே லியே’ என்ற பரப்புரையை நடத்துகிறது. UGC தலைவர் M ஜெகதேஷ் குமார், முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிக்கவும், அணிதிரட்டவும் அழைப்புவிடுத்ததோடு இந்தப் பரப்புரைக்கு ஆதரவளிக்கவும் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

2. குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. குஜராத்

  • ஆந்திர பிரதேச மாநிலம் சதீஷ் தவான் விண்வெளி கலத்துறைக்குப்பின் இரண்டாவது விண்வெளி கலத்துறையாக அமையும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறையை பிரதமர் திறந்து வைத்தார். இந்த வசதி சிறிய செயற்கைக்கோள் ஏவுகலங்களை வணிகரீதியாக ஏவுவதில் நிபுணத்துவம் பெறும். 2,350 ஏக்கர் பரப்பளவில், ஏவுதளங்கள் மற்றும் ஏவுகல ஒருங்கிணைப்பு பகுதிகள் உட்பட 35 வசதிகளை இது கொண்டுள்ளது. `986 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், இந்தியாவின் விண்வெளி திறன்களை முன்னேற்றுகிறது.

3. ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய தாய் மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக கீழ்காணும் எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA) கையெழுத்திட்டுள்ளது?

அ. சிங்கப்பூர்

ஆ. வியட்நாம்

இ. தாய்லாந்து

ஈ. ஜப்பான்

  • இந்தியாவின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனமானது (NIA) 2024-பிப்ரவரியில் தாய்லாந்தின் பாரம்பரிய தாய் மற்றும் மாற்று மருத்துவத் துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆயுர் வேதம் மற்றும் பாரம்பரிய தாய் மருத்துவத்தில் கல்விசார் ஒத்துழைப்புக்கானதாகும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம். மலேசியா மற்றும் கொரியாபோன்ற நாடுகளில் உள்ள பிற பல்கலைகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் NIA கூட்டாண்மையைக் கொண்டுள்ளது.

4. அண்மையில், லோக்பால் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அஜய் மாணிக்கராவ் கான்வில்கர்

ஆ. சதீஷ் சந்திர சர்மா

இ. சூர்யா காந்த்

ஈ. சஞ்சீவ் கண்ணா

  • லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013இன்கீழ் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் மாணிக்கராவ் கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால், ஒரு தலைவரும் அதிகபட்சம் எட்டு உறுப்பினரையும் கொண்டதாகும். தேர்வுக்குழுவின் பரிந்துரையின்பேரில் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரை பதவியில் இருப்பார்கள். இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள் இவர்களுக்கும் பொருந்தும்.

5. அண்மையில், 2024 – ஆசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்ட இடம் எது?

அ. லக்னோ

ஆ. போபால்

இ. புது தில்லி

ஈ. ஜெய்ப்பூர்

  • பிப்.26 அன்று புது தில்லியில் நடந்த 43ஆவது 2024 – ஆசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா, மொத்தம் 18 பதக்கங்களை வென்று போட்டியை நிறைவுசெய்தது. இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் நடந்த இப்போட்டியில், ஜூனியர் மற்றும் பாரா டிராக் சைக்கிள் போட்டிகளை உள்ளடக்கிய 18 நாடுகளைச்சேர்ந்த 500 பேர் கலந்துகொண்டனர். குறிப்பிடத்தக்க வகையில், இந்தச்சாம்பியன்ஷிப், பாரிஸ்-2024 ஒலிம்பிக்கிற்கான இறுதி தகுதி நிகழ்வாக செயல்பட்டது.

6. ’ஸ்வயம் பிளஸ்’ என்ற தளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. கல்வி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • தேசிய கல்விக் கொள்கை – 2020’க்கு ஒத்திசைந்தவாறு, ‘ஸ்வயம் பிளஸ்’ என்ற தளத்தை கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொழிற்சார் திறன்களை வளர்த்தெடுக்கும் படிப்புகளை வழங்குவதோடு, கற்போரின் வேலைவாய்ப்பையும் மேம்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க அம்சங்களில் பன்மொழி உள்ளடக்கம், AI-வழிகாட்டல், ஆகியவை அடங்கும். மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர்கல்வித்துறையின் நிதியுதவியுடன் செயல்படும் இத் தளத்தைச் செயல்படுத்துவதற்கென நியமிக்கப்பட்ட மைய முகமையாக IIT மெட்ராஸ் உள்ளது.

7. அண்மையில், எந்தப் புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில், முதல் ஊர்வனக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?

அ. முதுமலை புலிகள் காப்பகம்

ஆ. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

இ. களக்காடு புலிகள் காப்பகம்

ஈ. திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம்

  • முதுமலை புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊர்வனக் கணக்கெடுப்பில் 82 ஊர்வனம் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு அவற்றை பாதுகாப்பதற்கான உத்திகளை வகுப்பதற்கு வனத்துறைக்கு உதவியது. கணக்கெடுப்பு செய்யப்பட்ட உயிரினங்களில், கிட்டத்தட்ட அச்சுறுத்தலுக்கு உள்ளான இந்திய மலைப்பாம்பு மற்றும் சதுப்புநில முதலை ஆகியவை அடங்கும்.

8. இந்தியாவுக்கான உலக தங்க குழுமத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சச்சின் ஜெயின்

ஆ. ஆர்த்தி சக்சேனா

இ. தர்மேஷ் சோடா

ஈ. ஷீலா குல்கர்னி

  • 2024 பிப்ரவரியில் இந்தியாவுக்கான உலக தங்க குழுமத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக சச்சின் ஜெயின் நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக அவர் பல்வேறு பெரிய பதவிகளை வகித்துள்ள சச்சின் ஜெயின், இதற்கு முன் டி பீர்ஸ் நிறுவனத்தின் பணிப்புரிந்து வந்தார். இந்திய நுகர்வோர் மற்றும் நகைச் சந்தை குறித்து அவருக்கு ஆழ்ந்த அறிவு உள்ளது.

9. 2024 – அரிய நோய்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Rare is many, rare is strong, rare is proud

ஆ. Share Your Colours

இ. Reframe Rare for Rare Disease Day

ஈ. Bridging health and Social Care

  • அரிதான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆதரவை எடுத்துக்காட்டும் விதமாக பிப் 29 அரிய நோய்கள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. “Share Your Colours’ என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள் ஆகும். அரிய நோய்களை எதிர்கொள்வோருக்கு ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது.

10. தாவி பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கேரளா

ஆ. ஜம்மு காஷ்மீர்

இ. தில்லி

ஈ. கோவா

  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2024 மார்ச்.01 அன்று தொடங்கும் நான்கு நாள் நடைபெறும், ‘தாவி விழா’, இப்பகுதியின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது. ஜம்முவின் பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வலியுறுத்தும் இந்த விழாவில் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், நாட்டுப்புற இசை, தெருக் கூத்து, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனம் மற்றும் மேளா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது இளைஞர்களின் படைப்பாற்றலுக்கான தளத்தை வழங்குகிறது மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை ஊக்குவிக்கிறது.

11. சமீபத்தில், இந்தியப் பிரதமர், நாட்டின் முதல் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை கீழ்காணும் எந்த மாநிலத்தில் தொடக்கினார்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. உத்தரபிரதேசம்

  • ஹரித் நௌகா திட்டத்தின்கீழ் இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் உள் நாட்டு நீர்வழிக்கப்பலைத் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். தமிழ் நாட்டிற்குக் காசியின் பரிசான இது, புதுமையான பசுமை ஆற்றல் தீர்வுகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை குறிக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்கள் போக்குவரத்து, பொருள் கையாளுதல், நிலையான, கையடக்க மற்றும் அவசரகால காப்பாற்றல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

12. ஆண்டுதோறும் நடைபெறும் நிதிசார்ந்த கல்வியறிவு வாரப் பிரச்சாரத்துடன் தொடர்புடையது எது?

அ. IIT சென்னை

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. பாரத வங்கி

ஈ. ISRO

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் நிதிசார்ந்த கல்வியறிவு வாரத்தை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டுக்கான நிதிசார்ந்த கல்வியறிவு வாரமானது 2024 பிப்ரவரி.26 முதல் மார்ச்.01 வரை, “Make a Right Start – Become Financially Smart: சரியாகத் தொடங்குங்கள் – நிதிசார் விவரங்களில் ஸ்மார்ட் ஆகுங்கள்” என்ற கருப்பொருளுடன் அனுசரிக்கப்படும். இது நிதிசார் கல்விசெய்திகளை குடிமக்களுக்கு பரப்புவதன் மூலம் நிதிசார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.03) போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்.

தமிழ்நாட்டில் மார்ச்.03 நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் 43,051 மையங்களில் நடக்கும் முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து இருபது ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!