Tnpsc Current Affairs in Tamil – 29th April 2024
1. அழகர் திருக்கோவிலானது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
அ. மதுரை
ஆ. தேனி
இ. திண்டுக்கல்
ஈ. தென்காசி
- கள்ளழகர் வைகை ஆற்றில் இருந்து ஊர்வலமாகத் திரும்பியதை அடுத்து சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது. தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் திருக்கோவில், ‘கள்ளழகர்’ என்று போற்றப்படும் திருமாலின் நூற்றெட்டு திருத்தலங்களில் ஒன்றாகும். கோட்டைச் சுவர்களுக்குள் ஆறு தாழ்வாரங்களைக் கொண்டுள்ள இத்திருக்கோவில், தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் மற்றும் ஆழ்வார்களின் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலின் மண்டபத்தூண்கள் நாயக்க கலைப்பாணியைக் காட்டுகின்றன.
2. 21ஆவது U20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற ஹர்ஷித் குமார் சார்ந்த விளையாட்டு எது?
அ. ஈட்டியெறிதல்
ஆ. சுத்தியெறிதல்
இ. டென்னிஸ்
ஈ. செஸ்
- 21ஆவது U20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய தடகள வீரர்கள் மொத்தம் 18 பதக்கங்களை வென்றனர். சுத்தியெறிதலில் ஹர்ஷித் குமார் தங்கமும், ஆடவர் வட்டெறிதலில் ரித்திக் வெள்ளியும் வென்றனர். 800 மீ ஓட்டப் பந்தயத்தில் லக்சிதா சாண்டிலியா வெள்ளிவென்றார். கலப்பு ரிலே அணி வெள்ளியும், பெண்களுக்கான 400 மீட்டர் தடையோட்டத்தில் ஸ்ரேயா ராஜேஷ் வெண்கலமும் சுத்தியெறிதல் போட்டியில் பிரதீக் வெண்கலமும் வென்றனர்.
3. சிறுநீரகிய இணைப்போக்கு (Nephrotic Syndrome) என்றால் என்ன?
அ. ஒரு தோல் கோளாறு
ஆ. சிறுநீரில் அதிகப்படியான புரதத்தை உண்டுபண்ணும் ஒரு சிறுநீரக கோளாறு
இ. ஒரு சுவாச நிலை
ஈ. ஒரு நரம்பியல் கோளாறு
- அழகுதரும் பூச்சுகளை தவறாமல் பயன்படுத்துவதால் சிறுநீரகிய இணைப்போக்கு (Nephrotic Syndrome) ஏற்படும் எனக் கேரள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகிய இணைப்போக்கு என்பது ஒரு சிறுநீரகக் கோளாறு ஆகும்; இது குளோமருலி அழற்சியின் காரணமாக சிறுநீரில் அதிகப்படியான புரதத்தை ஏற்படுத்துகிறது. நலமான சிறுநீரகங்கள் கழிவுகளை வடிகட்டுகின்றன; ஆனால் வீக்கமடைந்த குளோமருலி புரதத்தை சிறுநீரில் கசியவிடும். இது குறிப்பிடும் அளவுக்கு ஒரு சிறுநீரக நோய் அன்று என்றாலும் சிறுநீரக வடிகட்டிகளை சேதப்படுத்தும் பல்வேறு நிலைமைகளின் விளைவுக்குக் காரணமாக அமைகிறது.
4. அறிவுசார் குறைபாடுகள் உள்ளோரின் அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம் (NIEPID) சார்ந்த அமைச்சகம் எது?
அ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்
இ. உள்துறை அமைச்சகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- இந்தியாவிலுள்ள வயதுவந்தோரில் குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளை கண்டறிவதற்காக, அறிவுசார் குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம் உருவாக்கிய புதிய சோதனையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1984இல் நிறுவப்பட்ட NIEPID, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது; இது அறிவுசார் குறைபாடுகள் உள்ள தனிநபர்களுக்கான சேவைகளில் கவனம் செலுத்துகிறது. தெலுங்கானாவின் செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு, நாடு முழுவதும் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு சேவைகளை இது வழங்குகிறது.
5. UNCTAD அறிக்கையின்படி, 2023இல் இந்திய சேவைத்துறை ஏற்றுமதியின் வளர்ச்சி வீதம் என்ன?
அ. 11.4%
ஆ. 9.2%
இ. 8.1%
ஈ. 10.7%
- UNCTAD அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில், இந்திய சேவைத்துறை ஏற்றுமதிகள் 11.4% அதிகரித்து $345 பில்லியன் டாலராகவும், சீன சேவைத்துறை ஏற்றுமதிகள் 10.1% குறைந்து $381 பில்லியன் டாலராகவும் உள்ளது. இந்தியாவின் சேவை இறக்குமதி 0.4% குறைந்து $248 பில்லியன் டாலராக உள்ளது. உலக அளவில் சேவை ஏற்றுமதியில் இந்தியா 7ஆவது இடத்தில் உள்ளது; அமெரிக்கா முன்னணியில் உள்ளது. கூடுதலாக, இந்தியா 9ஆம் பெரிய சேவை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. UNCTADஇன் அறிக்கையின்படி, அமெரிக்காவும் சீனாவும் சேவை இறக்குமதியாளர்களாக உயர் இடத்தில் உள்ளன.
6. சமீபத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி, இந்தியா
ஆ. அஸ்தானா, கஜகஸ்தான்
இ. பெய்ஜிங், சீனா
ஈ. தெஹ்ரான், ஈரான்
- 2024 ஏப்.26 அன்று கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அர்மானே பங்கேற்றார். அனைத்து உறுப்புநாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் நெறிமுறையில் கையெழுத்திட்டனர். ‘வசுதைவ குடும்பகம்’ என்ற இந்தியத்தத்துவத்தை எதிரொலிக்கும், “ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற கருத்தை உறுப்பினர்கள் ஆமோதித்தனர்.
7. அண்மையில், ‘இந்தியாவில் காப்புரிமைப் போக்குகள்’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. NASSCOM
ஆ. CSIR
இ. IRDAI
ஈ. நிதி அமைச்சகம்
- உலக அறிவுசார் சொத்துரிமை நாளுடன் இணைந்து போகும் விதமாக, அண்மையில் NASSCOMஆல் இந்தியாவில் காப்புரிமைப் போக்குகள் என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல்.26 அன்று கொண்டாடப்படும் உலக அறிவுசார் சொத்துரிமை நாள், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதில் அறிவுசார் சொத்துரிமைகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. WIPOஆல் கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நாளுக்கான நடப்பு 2024ஆம் ஆண்டுக்கானக் கருப்பொருள், “IP and the SDGs: Building Our Common Future with Innovation and Creativity” என்பதாகும்.
8. அண்மையில், உணவுப்பொருட்களில் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அறிவித்த மாநில அரசு எது?
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகா
இ. கேரளா
ஈ. ஆந்திர பிரதேசம்
- உணவுப்பொருட்களில் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கவும், உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிலைச்சட்டம், 2006ஐ அமல்படுத்தவும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் மற்றபிற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திரவ நைட்ரஜன் என்பது -320°F (-196°C) கொதிநிலையுடன் கூடிய ஒரு மந்தமான, நிறமற்ற, மிகவும் குளிர்ந்த வாயுநிலை தனிமமாகும்; இதனை உண்ணும்பொழுது வாயில் காயங்கள், உறுப்பு சேதம் மற்றும் துளைகள் உள்ளிட்ட உடல்நல இடர்களை ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழிற்துறை செயல்முறைகளில் உணவை விரைவாக குளிர்விக்க மற்றும் உறைய வைக்க இவ்வாயு பயன்படுத்தப்படுகிறது.
9. ‘பாம்பி பக்கெட்’ என்றால் என்ன?
அ. வான்வழியாகத் தீயை அணைக்கும் கருவி
ஆ. பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம்
இ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
ஈ. கருந்துளை
- நைனிடாலில் காட்டுத்தீயை அணைப்பதற்காக இந்திய வான்படை, ‘பாம்பி பக்கெட்டுகள்’ பொருத்திய MI 17 V5 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியது. ‘பாம்பி பக்கெட்’ என்பது ஹெலிகாப்டர் வாளி என்றும் அழைக்கப்படுகிறது; இது 1980களில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு தீயணைக்கும் கருவியாகும். ஹெலிகாப்டரின்கீழ் பொருந்தி இருக்கும் இது, ஆறுகள் அல்லது குளங்களில் இருந்து நீரை நிரப்பிக்கொண்டு வந்து தண்ணீரை வெளியிடுகிறது. அணுகமுடியாத காட்டுத்தீயை எதிர்த்துப் போராட இது உதவுகிறது.
10. இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் நிகர குடும்ப சேமிப்பு வீதம் என்ன?
அ. 4.5%
ஆ. 5.3%
இ. 6.7%
ஈ. 7.1%
- இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய தரவு, 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் நிகர குடும்ப சேமிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3%ஆக 47 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவை எட்டியதாக தெரிவிக்கிறது. 2022இல் இது 7.3%ஆக இருந்தது. அதே நேரத்தில், குடும்பக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8%ஆக உயர்ந்துள்ளது; இது 1970 காலகட்டத்திற்குப் பிறகு இரண்டாவது அதிகபட்சமாகும். வீட்டுச் சேமிப்பு விகிதம் என்பது நிதிச்சொத்துகள், அசையா சொத்துக்கள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களை உள்ளடக்கிய செலவழிப்பதற்குப் பதிலாக சேமிக்கப்படும் செலவழிப்பு வருமானத்தின் விகிதமாகும்.
11. அண்மையில், 2024 – கேம்பிரிட்ஜ் அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதுகளில் மத்திய கிழக்கு & வட ஆப்பிரிக்காவின் (MENA) பிராந்திய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் யார்?
அ. ஜினா ஜஸ்டஸ்
ஆ. ரேவதி அத்வைதி
இ. சுப்ரியா சாஹு
ஈ. மிருதுளா கர்க்
- 2024 – கேம்பிரிட்ஜ் அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதுகளில், UAE, ஷார்ஜா பெண்கள் கிளை ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை ஜினா ஜஸ்டஸ், MENA பிராந்தியத்திற்கான விருதினை வென்றார். கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், 2005ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார். வழிகாட்டுதல் மற்றும் தொண்டு பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜினா ஜஸ்டஸ், 141 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 14,840 பரிந்துரைகளில் தனித்துவமாக நின்றார். இந்த விருதுகள் உலக அளவில் தொடக்கநிலை மற்றும் இடைநிலைக் கல்வியாளர்களை கௌரவிக்கின்றன.
12. அண்மையில், ICC ஆடவர் T20 உலகக்கோப்பை-2024இன் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யார்?
அ. யுவராஜ் சிங்
ஆ. ஹர்பஜன் சிங்
இ. சுரேஷ் ரெய்னா
ஈ. இர்பான் பதான்
- பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 36 நாட்களில் தொடங்கவுள்ள ICC ஆடவர் T20 உலகக்கோப்பை – 2024 போட்டிக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் 2007ஆம் ஆண்டு வெற்றியின்போது ஓர் ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்ததற்காகப் புகழ் பெற்ற யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல் மற்றும் உசைன் போல்ட் ஆகியோருடன் தூதுவர்களாக இணைகிறார். ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரும், எட்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவருமான உசைன் போல்ட், இந்நிகழ்விற்கு மேலும் உற்சாகமூட்டுகிறார். 42 வயதான யுவராஜ் சிங், இந்தியாவின் 2007ஆம் ஆண்டு வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வரும் ஜூன்.01ஆம் தேதி தொடங்கும் பத்து அணிகள்கொண்ட T20 போட்டிக்கான போட்டிக்கு முந்தைய விளம்பரங்களில் அவர் பங்கேற்பார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ‘முதல்வரின் மாநில இளைஞர் விருது’ ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாளன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. விருதுடன் `1 இலட்சம் ரொக்கத்துடன், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவையும் வழங்கப்படும்.