TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 29th & 30th October 2023

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘பண்ணி திருவிழா’ என்பது கீழ்காணும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு சமயம்சார்ந்த விழாவாகும்?

அ. ஒடிசா

ஆ. பீகார்

இ. ஆந்திரப் பிரதேசம் 🗹

ஈ. குஜராத்

  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில், ‘பண்ணி திருவிழா’ என்று அழைக்கப்படும் பாரம்பரிய கோல் சண்டை திருவிழாவின்போது குறைந்தது மூன்று பேர் இறந்தனர், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேனி மற்றும் மல்லாசுரனை வென்ற மல மல்லேஸ்வர சுவாமி மற்றும் பார்வதி தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விஜயதசமி அன்று இரவு ‘பண்ணி திருவிழா’ கொண்டாடப்படுகிறது.

2. ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தங்கள் முதல் கூட்டு கடற்படை பயிற்சியை கீழ்காணும் எந்த இடத்தில் நடத்தின?

அ. கினியா வளைகுடா 🗹

ஆ. இந்தியப் பெருங்கடல்

இ. தென்சீனக்கடல்

ஈ. பின்லாந்து வளைகுடா

  • ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் சமீபத்தில் கினியா வளைகுடாவில் தங்கள் முதல் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தின. பிரஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் 3ஆவது கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின்போது, இந்திய கடற்படையின் கடற்புற ரோந்துக் கப்பலான INS சுமேதா, பிற மூன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் கப்பல்களுடன் இணைந்தது.

3. 7ஆவது இந்திய மொபைல் மாநாட்டை நடத்திய நகரம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. பெங்களூரு

இ. புது தில்லி 🗹

ஈ. சென்னை

  • புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 7ஆவது இந்திய மொபைல் மாநாட்டை ‘உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு’ என்ற கருப்பொருளின்கீழ் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான கிகா ஃபைபர் சேவையை ‘ஜியோஸ்பேஸ் ஃபைபர்’மூலம் வழங்கவுள்ளது. இதன்மூலம் இந்தியாவிற்குள் இதுவரை இணைய சேவை கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கு அதிவேக அகலக்கற்றை இணையசேவைகளை வழங்க முடியும்.

4. ஓர் அண்மைய ஆய்வின்படி, கீழ்காணும் எந்த இந்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் மயில்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது?

அ. தமிழ்நாடு 🗹

ஆ. கோவா

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

  • தேசியப் பறவையாகக் கருதப்படும் இந்திய மயில் (Pavo cristatus), வனவிலங்கு பாதுகாப்புத் திருத்தச் சட்டம், 2022 இன் அட்டவணை-Iஇன்கீழ், மிகவுயர்ந்த பாதுகாப்பு கொண்ட பறவையினமாகும். சமீபத்திய ஆய்வின்படி, கடந்த 5-10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மயில்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வயல்வெளிகளில் மயில்கள் பெரும்பாலும் நஞ்சால் இறக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.

5. ‘சர்வதேச பயண கண்காட்சிகள் – ஆசியா’வை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சிங்கப்பூர் 🗹

இ. வங்காளதேசம்

ஈ. இலங்கை

  • இந்திய சுற்றுலா அமைச்சகமானது சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய சர்வதேச பயண கண்காட்சிகளில் பங்கேற்றது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சாத்தியமிகு சர்வதேச சந்தைகளில் இந்தியாவை விருப்பமான சுற்றுலாத்தலமாக நிலை நிறுத்தும் நோக்கோடு “Incredible India! Visit India Year 2023” என்ற கருப்பொருளுடன் நடப்பாண்டு (2023) ‘Visit India – இந்தியாவிற்கு வருகைத் தாருங்கள்’ ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

6. இந்தியாவின் முதன்மையான கரீப் பயிர் எது?

அ. அரிசி 🗹

ஆ. கோதுமை

இ. சோளம்

ஈ. பாசிப்பயறு

  • உழவு & உழவர்கள் நல அமைச்சகம் 2023-24ஆம் ஆண்டிற்கான முதன்மை கரீப் பயிர்களின் உற்பத்திக்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. முதன்மை கரீப் பயிரான நெற்சாகுபடி பரப்பு முந்தைய ஆண்டு இறுதி மதிப்பீட்டைவிட சுமார் 2 இலட்சம் ஹெக்டேரும் சராசரி நெற்பரப்பைவிட சுமார் 4.5 இலட்சம் ஹெக்டேர் அதிகமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரி அரிசி உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இதன் உற்பத்தி சுமார் 1 இலட்சம் டன்கள் அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

7. 2023-ஆசிய பாரா விளையாட்டுப்போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்திலுள்ளது?

அ. முதலாவது

ஆ. மூன்றாவது

இ. ஐந்தாவது 🗹

ஈ. ஏழாவது

  • ஹாங்சோவில் நடைபெற்ற 2023-ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 111 பதக்கங்களை வென்று போட்டியை நிறைவு செய்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் பெற்ற 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 72 பதக்கங்களைவிட இந்த ஆண்டின் எண்ணிக்கை அதிகமாகும். ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில், இந்தியா 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

8. ‘UNU-EHS ஒன்றோடு ஒன்றிணைந்த பேரிடர் அபாயங்கள்’ அறிக்கையின்படி, எந்தெந்த இந்திய மாநிலங்களில் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது?

அ. பஞ்சாப் & ஹரியானா 🗹

ஆ. மகாராஷ்டிரா & மத்திய பிரதேசம்

இ. ஒடிசா & சத்தீஸ்கர்

ஈ. பீகார் & ஜார்கண்ட்

  • 2023ஆம் ஆண்டுக்கான “ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பேரிடர் அபாயங்கள்” என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகமான சுற்றுச்சூழல் & மனிதகுல பாதுகாப்புக்கான நிறுவனம் (UNU-EHS), ஜெர்மனியில் உள்ள பான் நகரில் சமீபத்தில் வெளியிட்டது. இது வடமேற்குப் பகுதியில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கவனம் செலுத்துகிறது; மேலும் நிலத்தடி நீர் குறைவின் அபாயத்தையும் எடுத்துரைக்கிறது.

9. “About this Image” என்ற உண்மைச் சரிபார்ப்புக் கருவியை அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ. கூகுள் 🗹

ஆ. அமேசான்

இ. ஆப்பிள்

ஈ. மைக்ரோசாப்ட்

  • கூகுள் தனது தேடல் அம்சத்தில், “About this Image” என்ற உண்மைச் சரிபார்ப்புக் கருவியை உலகெங்கிலும் உள்ள ஆங்கில மொழி பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இணையத்தில் பார்க்கும் படங்களைப் பற்றிய நம்பகமான தகவல்களைக் கண்டறிய உதவும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் படங்களின் நம்பகத்தன்மை மற்றும் சூழலைச் சரிபார்க்க தனிநபர்களுக்கு இது ஒரு வசதியான வழிமுறையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

10. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட மேக விதைப்பு பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட சேர்மம் எது?

அ. சோடியம் குளோரைடு

ஆ. கால்சியம் குளோரைட் 🗹

இ. பொட்டாசியம் குளோரைடு

ஈ. மெக்னீசியம் குளோரைடு

  • மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியில் நடத்தப்பட்ட மேக விதைப்பு சோதனையானது வழக்கமான அளவைவிட 18 சதவீதம் அதிக மழைப்பொழிவை ஈந்தது. புனேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனமும் பிற நிறுவனங்களும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. கால்சியம் குளோரைடு துகள்களின் ஈரமுறிஞ்சும் விசிறல்கள் மழையைத் தூண்டுவதற்காக வெப்பச்சலன மேகத்தளத்தில் தெளிக்கப்பட்டன.

11. உலக அளவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு எது?

அ. ஆஸ்திரேலியா 🗹

ஆ. இந்தியா

இ. ஜப்பான்

ஈ. இஸ்ரேல்

  • அண்மையில், ஆஸ்திரேலியாவின் முதன்மை மின்சாரக் கட்டமைப்பு முதன்முறையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 70% பங்கைக் கடந்தது. ஆஸ்திரேலியா புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் உலகளாவில் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் மேற்கூரை சூரிய அமைப்புகளை அதிகளவில் தனிநபர்கள் பயன்படுத்துவது ஆஸ்திரேலிய நாட்டில் ஆகும்.

12. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டைகோநாட்ஸ்’ என்பது கீழ்காணும் எந்த நாட்டு விண்வெளி வீரர்களைக் குறிக்கும் சொல்லாகும்?

அ. ரஷ்யா

ஆ. சீனா 🗹

இ. ஜப்பான்

ஈ. இஸ்ரேல்

  • சீன விண்வெளி வீரர்கள் சில வேளைகளில் ‘டைகோநாட்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். சீன விண்வெளி வீரர்களின் இளைய குழு சீன விண்வெளி நிலையத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கியது. ஷென்ஷோ-17 அல்லது “டிவைன் வெசல்” என அழைக்கப்படும் விண்கலம், வடமேற்குச் சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-2F ஏவுகலத்தின்மூலம் மூன்று பணியாளர்களுடன் ஏவப்பட்டது.

12. ‘டிராகன்ஃபிளை ரோட்டர்கிராஃப்ட் லேண்டர்’உடன் தொடர்புடைய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா 🗹

இ. ஜப்பான்

ஈ. இஸ்ரேல்

  • NASAஇன் ‘டிராகன்ஃபிளை ரோட்டார்கிராஃப்ட் லேண்டர்’ சனியின் நிலவான டைட்டனை ஆராயும் பணிக்காக பயன்படுத்தப்படும். டைட்டனானது அடர்த்தியான வளிமண்டலத்திற்கும் குறைந்த ஈர்ப்பு விசைக்கும் பெயர் பெற்றது, இது வான்வழி ஆய்வுக்கேற்ற இடமாக உள்ளது. டிராகன்ஃபிளை என்பது அணுசக்தியால் இயங்கும் ட்ரோன் ஆகும். இது வாழ்க்கைக்கு அடித்தளமாக செயல்படும் சிக்கலான வேதியியலைப் படிக்கும் நோக்கத்திற்காக NASAவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2047-க்குள் `2,500 இலட்சம் கோடி பொருளாதாரம்: தொலைநோக்குத் திட்டம் தயாரிப்பு.

சுதந்திரம் பெற்றதன் நூற்றாண்டான 2047ஆம் ஆண்டுக்குள் சுமார் `2,500 லட்சம் கோடி மதிப்புகொண்ட வளர்ந்த பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று NITI ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி PVR சுப்பிரமணியம் தெரிவித்தார். வரும் டிசம்பருக்குள் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அதற்கு அடுத்த மும்மாதங்களில் அது பொதுவெளியில் வெளியிடப்படும்.

2. ‘எனது இளைய பாரதம்’ திட்டம் நாளை தொடக்கம்.

‘சர்தார்’ வல்லபபாய் படேலின் பிறந்தநாளான அக்.31ஆம் தேதி ‘எனது இளைய பாரதம்’ திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தேசத்தைக் கட்டமைக்கும் பல்வேறு நிகழ்வுகளில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க இத்திட்டம் மேடை அமைத்துத்தரும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் சக்தியை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு முயற்சி இதுவாகும்.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!