TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 28th October 2023

1. ‘குறிப்பு – Reference’ பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ. BPCL

ஆ. HPCL

இ. IOC 🗹

ஈ. REC

  • இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) சிறப்பு ‘குறிப்பு’ பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் இத்தகைய உற்பத்தியின் முதல் நிகழ்வைக் குறிக்கிறது. இந்த எரிபொருள்கள் உயர்ந்த விவரக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. மேலும், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் மற்றும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் போன்ற சோதனை முகவர்களால் நடத்தப்படும் அளவுத்திருத்தம் மற்றும் சோதனை செயல்முறைகளுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

2. இந்திய போட்டி ஆணையம் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?

அ. வெளியுறவு அமைச்சகம்

ஆ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் 🗹

இ. நிதி அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • இந்தியப் போட்டி ஆணையம் (CCI) என்பது பெருநிறுவன் விவகாரங்கள் அமைச்சகத்தின் சட்டப்பூர்வ அமைப்பாகும். இது போட்டிச்சட்டம், 2002ஐச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான நிறுவனமாகும். அண்மையில், இந்தியப் போட்டி ஆணையம் மதிப்புமிக்க 18-உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச போட்டி நெட்வொர்க்கின் வழிநடத்தல் குழுவில் ஒரு விரும்பத்தக்க நிலையைப் பெற்றுள்ளது. இவ்வழிநடத்தல் குழுவானது சர்வதேச போட்டி நெட்வொர்க்கின் மிக உயர்ந்த நிர்வாகக் குழுவாக செயல்படுகிறது.

3. இந்திய இராணுவத்தின் முதல் செங்குத்து காற்றுப்புழை கட்டப்பட்டுள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. சிக்கிம்

ஆ. பஞ்சாப்

இ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

ஈ. ஜம்மு காஷ்மீர்

  • இந்திய இராணுவத்தின் முதல் செங்குத்து காற்றுப்புழை இமாச்சலப்பிரதேசத்தின் பக்லோவில் அமைந்துள்ள சிறப்புப் படைகள் பயிற்சிப்பள்ளியில் திறக்கப்பட்டது. இந்த அதிநவீன காற்றுப்புழை ஆயுதப்படை வீரர்களின் போர் இயல் வீழ்வுத்திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. பாப்லோ பிக்காசோ என்பவர் கீழ்காணும் எந்த நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞராவார்?

அ. அமெரிக்கா

ஆ. ஸ்பெயின் 🗹

இ. இத்தாலி

ஈ. ஆஸ்திரேலியா

  • அக்.25 அன்று, புகழ்பெற்ற ஸ்பானிய கலைஞரான பாப்லோ பிக்காசோவின் (1881-1973) 142ஆவது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. அவரது கலைப்படைப்புகள் ஓவியங்கள், மாதிரிச் சித்திரங்கள், பொறிப்புகள், சிற்பங்கள் மற்றும் மட்பாண்டக் கலைகள் என விரிந்து பரந்த தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. அவர் தனது வாழ்வின் பெரும்பகுதியை பிரான்ஸில் கழித்தார்.

5. BISஆல் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட ‘ISI7017 (பாகம் 2/ பிரிவு 7): 2023’உடன் தொடர்புடைய தயாரிப்பு எது?

அ. சூரியவொளித்தகடு

ஆ. மின்சார வாகன மின்னேற்றிகள் 🗹

இ. தூக்கி எறியக்கூடிய நெகிழிகள்

ஈ. நுண்ணுயிர் நீக்கிகள்

  • துள்ளுந்து, ஈருருளி மற்றும் இழுவண்டிகள் போன்ற இலகுரக மின்சார வாகனங்களுக்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட AC மற்றும் DC இணைந்த மின்னேற்றி இணைப்பான் தரநிலைக்கு இந்தியத் தரநிலைகள் அமைவனம் (BIS) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய தரநிலை, ISI7017 (பாகம் 2 / பிரிவு 7): 2023, NITI ஆயோக், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி மற்றும் பல்வேறு அரசு மற்றும் தொழிற்துறை பங்குதாரர்களின் ஒத்துழைப்புமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

6. வங்கிகளில் நிர்வாக இயக்குநருடன் சேர்த்து எத்தனை முழு நேர இயக்குநர்களை நியமிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது?

அ. ஒன்று 🗹

ஆ. இரண்டு

இ. மூன்று

ஈ. நான்கு

  • இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் தங்கள் வாரியங்களில் நிர்வாக இயக்குநரைத் தவிர குறைந்தபட்சம் ஒரு முழு நேர இயக்குநரை நியமித்து தங்கள் நிர்வாக குழுக்களை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நியமனங்களுக்கான முன்மொழிவுகளை வங்கிகள் சமர்ப்பிக்க நான்கு மாத காலக்கெடுவை ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

7. இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 66 சதவீதம் கீழ்க்காணும் எந்த வகை நோய்களால் ஏற்படுகிறது?

அ. தொற்று நோய்கள்

ஆ. தொற்றா நோய்கள் 🗹

இ. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்

ஈ. பரம்பரை நோய்கள்

  • இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 66 சதவீதம் தொற்றா நோய்கள் காரணமாக நிகழ்கின்றன. இதில் 22% அகால மரணங்களாக 2019ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளன. ICMRஇன் சமீபத்திய ஆய்வின்படி, தொற்றா நோய்கள் காரணமாக நிகழ்கின்றன இறப்புகளின் சதவீதத்தை குறைப்பதில் உலக நலவாழ்வு அமைப்பும் ஐக்கிய நாடுகள் அவையும் வைத்துள்ள இலக்குகளை இந்தியா குறைவாகவே எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஃபிளமிங்கோ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. சுற்றுச்சூழல்

. பிரபஞ்சத்தின் பரிணாமம் 🗹

இ. இணையவெளிப் பாதுகாப்பு

ஈ. கணிதம்

  • பிரபஞ்சம் எவ்வாறு உருவானது? என்பதை ஆராய்வதற்காக வானியலாளர்கள் மிகப்பெரிய கணினி உருவகப்படுத் -துதல்களை மேற்கொண்டுள்ளனர். ஃபிளமிங்கோ என பெயரிடப்பட்ட திட்டம் சாதாரண பொருள், இருண்டபொருள் மற்றும் இருண்ட ஆற்றல் உட்பட பிரபஞ்சத்தின் அனைத்து கூறுகளின் பரிணாம வளர்ச்சியைக் கணக்கிட்டது. மேம்பட்ட தொலைநோக்கிகளிலிருந்து பெறப்பட்ட சமீபத்திய தரவுகளை ஒருங்கிணைப்பதன்மூலம் ஓர் உருவகப்ப -டுத்தப்பட்ட பிரபஞ்சத்தை நிறுவப்பட்ட மெய்யுடன் ஆய்வுசெய்ய இது எண்ணுகிறது.

9. ‘நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி’யுடன் தொடர்புடைய விண்வெளி அமைப்பு எது?

அ. NASA 🗹

ஆ. ISRO

இ. ESA

ஈ. JAXA

  • NASA தனது ‘நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி’யை விண்ணில் செலுத்தி, பால்வெளி அண்டத்தின் அடியாழம் வரை ஆய்ந்து அதனை மனிதகுலத்திற்குத் தெரிவிக்கவுள்ளது. இத்தொலைநோக்கியானது, உலகம்பற்றிய நமது புரிதலை மாற்றக்கூடிய இரகசியங்களுக்காக ‘கதை சொல்லி சுடர்’களைக் கண்காணிக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அதிதொலைதூர விளக்கத்திற்கான புதிய சாதனையை இது அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. 2023ஆம் ஆண்டில் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. கோவா 🗹

ஆ. மகாராஷ்டிரா

இ. கேரளா

ஈ. குஜராத்

  • கோவாவின் பனாஜியில் 37ஆம் தேசிய விளையாட்டுப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். 28 அரங்குகளில் 43க்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறைகளில் 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். கோவாவில் முதன்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

11. குறைகடத்திகள் விநியோகச் சங்கிலி கூட்டாண்மையில், இந்தியா, எந்த நாட்டுடன் கூட்டிணைந்துள்ளது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஸ்வீடன்

இ. ஜப்பான் 🗹

ஈ. இஸ்ரேல்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஜப்பானின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இடையே ஜப்பான்-இந்தியா குறைகடத்திகள் விநியோகச் சங்கிலி கூட்டாண்மை குறித்து 2023 ஜூலையில் கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்திற்கு குறைகடத்திகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரும்புகிறது.

12. சர்வதேச கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிகமான இரன்களை எடுத்தவர்களில் சராசரி 50ஐக் கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. விராட் கோலி 🗹

இ. கிளென் மேக்ஸ்வெல்

ஈ. டேவிட் வார்னர்

  • 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச கிரிக்கெட்டில் 26000 இரன்களை குவித்தவர்கள் நான்கு பேர் மட்டுமே உள்ளனர். விராட் கோலி, வங்காளதேசத்திற்கு எதிராக, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் (567) இந்தச் சாதனையை எட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 10000-க்கும் அதிகமான ரன்களை 53.99 என்ற சராசரியுடன் கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர் இவராவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை: தேர்தல்துறை தகவல்.

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 11 இலட்சத்து 31 ஆயிரத்து 197ஆக உள்ளது. ஆண்களைவிட 9 இலட்சத்து 85 ஆயிரத்து 961 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

அதிகம்-குறைவு:

மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் உள்ளது.

படிவங்களும், ஆதாரச் சான்றுகளும்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக படிவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவங்களைத் தேர்தல் துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதன் விவரம்:

படிவம் 6: புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம்.

படிவம் 6A: வெளிநாடுவாழ் வாக்காளர் ஒருவர் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கு பயன்படுத்தலாம்.

படிவம் 6B: வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மையென சான்றளிப்பது.

படிவம் 7: வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள பெயரை நீக்கக்கோருவதற்கு.

படிவம் 8: வீட்டை ஒரு தொகுதியிலிருந்து வேறுதொகுதிக்கு மாற்றினாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்கு உள்ளேயே மாற்றினாலோ இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளைத் திருத்தம் செய்யவும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும் படிவத்தை உபயோகிக்கலாம்.

என்னென்ன சான்றுகள் தேவை?

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது ஆகியவற்றுக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். முகவரிச் சான்றாக முக்கிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்கலாம். அதன்படி, முகவரிக்காக குடிநீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு இரசீதில் ஏதேனும் ஒன்று (குறைந்தது ஓராண்டுக்காவது), ஆதார் அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் இப்போதைய கணக்குப்புத்தகம், கடவுச்சீட்டு, வருவாய்த்துறைகளின் நில உரிமைப்பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவுசெய்யப்பட்ட விற்பனைப் பத்திரம்.

வயதுச்சான்றாக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்புச்சான்றிதழ், இந்திய கடவுச்சீட்டு ஆகியவற்றை அளிக்கலாம். 25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

2. ஜம்முவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை இராணுவம் முறியடித்த ‘வீரதீர தின’ கொண்டாட்டம்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகளை இந்திய இராணுவத்தின் காலாட்படை முறியடித்ததை நினைவுகூரும் 76ஆவது ‘ஷௌரிய திவாஸ்’ (வீரதீர நாள்) கொண்டாடப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் மகாராஜா ஹரிசிங், இந்திய குடியரசு இடையே 1947 அக்.26-இல் கையொப்பமிடப்பட்டது. அதற்கடுத்த நாளான அக்.27இல் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற புத்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படைமூலம் இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்டது. இதுவே சுதந்திர இந்தியாவில் இராணுவம் பெற்ற முதல் வெற்றியாகும்.

இந்நாளை ஒவ்வோர் ஆண்டும் காஷ்மீரில் இந்திய இராணுவம் ‘வீரதீர தினமாகக்’ கொண்டாடுகிறது. அதேநாளை இந்திய இராணுவம் ‘காலாட்படை தினமாகவும்’ கொண்டாடி வருகிறது. இந்நாளில் பாகிஸ்தான் பிடியிலிருந்து ஸ்ரீநகர் விமானதளத்தை பாதுகாத்த, மேஜர் சோம்நாத் சர்மாவுக்கு இராணுவத்தின் உயரிய விருதான ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin