Tnpsc Current Affairs in Tamil – 28th November 2023
1. உலகின் மிகப்பெரிய ஒற்றை-தள சூரிய மின்னுற்பத்தி ஆலையான, ‘அல் தஃப்ரா’ திட்டத்தைத் தொடங்கிய நாடு எது?
அ. இஸ்ரேல்
ஆ. ஐக்கிய அரபு அமீரகம் 🗹
இ. ஈரான்
ஈ. ஓமன்
- ஐக்கிய அரபு அமீரகம், நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் COP28 மாநாட்டிற்கு முன்னதாக உலகின் மிகப் பெரிய ஒற்றை-தள சூரிய மின்னுற்பத்தி ஆலையைத் திறந்துள்ளது. 2 GW உற்பத்தித் தூரன் கொண்ட இந்த அல் தஃப்ரா திட்டம் அபுதாபி நகரத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 2.4 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்கள் – 2023இன் சின்னம் யாது?
அ. விகாஸ்
ஆ. உஜ்வாலா 🗹
இ. உதய்
ஈ. உடான்
- முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்கள் – 2023இன் இலச்சினை மற்றும் சின்னமான, ‘உஜ்வாலா’ என்ற சிட்டுக்குருவியை மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை 11 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இருபத்தெட்டு மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. தமிழ்நாடு 🗹
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. ஒடிசா
- பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதுமையான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒரு வட்டத்திற்குச் சென்று மாதத்தில் ஒரு நாள் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிவார்கள்.
- “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்” என்று சொன்ன, பெருந்தகை ‘பேரறிஞர்’ அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது. இந்தத்திட்டம், ‘களத்தில் முதல்வர்’ என்ற திட்டத்தின் அடுத்தகட்டம் எனலாம்.
4. மண்ணீரல் வீக்க நோய் மற்றும் வில்சன் நோய் உள்ளிட்ட 4 அரிய நோய்களுக்கெனப் பொதுவான மருந்தை அறிவித்துள்ள நாடு எது?
அ. இலங்கை
ஆ. வங்காளதேசம்
இ. இந்தியா 🗹
ஈ. நேபாளம்
- விலையேற்றத்தைக் குறைக்கவும், அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கவும், நான்கு பொதுவான மருந்துகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் தற்போது டைரோசின் குருதி வகை-1, மண்ணீரல் வீக்க நோய், வில்சன் நோய் மற்றும் டிராவெட்-லெனாக்ஸ் காஸ்டாட் சிண்ட்ரோம் ஆகிய 4 அரிய நோய்களுக்கான சிகிச்சைக்காக சந்தையில் கிடைக்கின்றன.
5. இந்தியாவில் உள்ள தனது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக அண்மையில் அறிவித்த நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. ஆப்கானிஸ்தான் 🗹
இ. இஸ்ரேல்
ஈ. உக்ரைன்
- இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக தில்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. இந்நடவடிக்கை நவ.23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த செப்.30ஆம் தேதி தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதைத் தொடந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசின் நிலைப்பாடு மாறி, பணிகளைச் சாதாரணமாக செய்யும் அளவுக்கு நிலைமை இயல்பானதாக மாறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.
6. ‘Malligyong-1’ என்ற உளவு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
அ. உக்ரைன்
ஆ. இஸ்ரேல்
இ. வட கொரியா 🗹
ஈ. மலேசியா
- 6 மாதங்களில் 3ஆவது முயற்சியாக இராணுவ உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, உளவு செயற்கைக்கோளான, ‘Malligyong-1’ அதன் சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
7. எந்த நாட்டில், ‘mpox’ அல்லது குரங்குக்காய்ச்சல் பாலியல் உறவின் மூலமாக பரவுவதை உலக சுகாதார அமைப்பு (WHO) உறுதிப்படுத்தியுள்ளது?
அ. கென்யா
ஆ. ரஷ்யா
இ. காங்கோ 🗹
ஈ. அர்ஜென்டினா
- உலக சுகாதார அமைப்பானது (WHO) முதன்முறையாக காங்கோவில், ‘mpox’ அல்லது குரங்குக்காய்ச்சல் பாலியல் உறவின் வழியாகப் பரவுவதை உறுதிப்படுத்தியது. WHO ஆனது அதிகாரப்பூர்வமாக mpox’ஐ, குரங்கம்மை தீ நுண்மத்தால் (வைரஸ்) ஏற்படும் ஒரு பாலியல் ரீதியாக பரவும் தொற்று நோயாக (STD) வகைப்படுத்தியுள்ளது.
8. எந்த ஆசிய நாடு 6 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவதாக அறிவித்துள்ளது?
அ. வங்காளதேசம்
ஆ. சீனா 🗹
இ. சிங்கப்பூர்
ஈ. தாய்லாந்து
- பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் நுழைவு இசைவு இல்லாமல் 15 நாட்கள் வரை சீனாவுக்குள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாடு அறிவித்துள்ளது. வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்கச் செல்வது அல்லது 15 நாட்களுக்கு மேல் தங்காத இந்த 6 நாடுகளைச்சேர்ந்த குடிமக்களுக்கு அடுத்த ஆண்டு டிச.01 முதல் நவ.30 வரை விசா தேவையில்லை.
9. இந்திய நிறுவனமான மெர்லின்ஹாக் இத்தாலியின் வேகா காம்போசிட்ஸ் நிறுவனத்துடன் கீழ்காணும் எந்தப் பாதுகாப்பு வழித்தடத்தில் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு வசதியை அமைக்கும் நோக்கோடு கையெழுத்திட்டது?
அ. தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம் 🗹
ஆ. உத்தரபிரதேச பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம்
இ. மகாராஷ்டிரா பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம்
ஈ. இராஜஸ்தான் பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடம்
- இந்திய நிறுவனமான மெர்லின்ஹாக் ஏரோஸ்பேஸ், தமிழ்நாடு பாதுகாப்பு தொழிற்துறை வழித்தடத்தில் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு வசதியை நிறுவும் நோக்கோடு இத்தாலியின் வேகா காம்போசிட்ஸ் உடனான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சியானது, இந்தியாவின் வளர்ந்துவரும் சந்தையை வளர்த்தெடுக்க நோக்கம் கொண்டுள்ளது.
10. உயிரிவாயு கலவையைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. இந்தியா 🗹
இ. சீனா
ஈ. இலங்கை
- இயற்கை எரிவாயுவுடன் சுருக்கப்பட்ட உயிரிவாயுவைக் கலக்கும் முறையை இந்திய அரசாங்கம் படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளது. 2025 ஏப்ரலிலிருந்து 1% என்ற தொடக்கத்துடன் 2028ஆம் ஆண்டுக்குள் 5% என்ற அளவுக்குக் கொண்டு செல்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அதன் ஒட்டுமொத்த எரிவாயு நுகர்விற்கு பிற நாடுகளைச் சார்ந்துள்ளது. இதன்மூலம் இறக்குமதியை பாதியாகக் குறைக்க அது விரும்புகிறது.
11. தேசிய உலோகவியல் விருதுகளை வழங்குகின்ற அமைச்சகம் எது?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
ஆ. MSME அமைச்சகம்
இ. எஃகு அமைச்சகம் 🗹
ஈ. எரிசக்தி அமைச்சகம்
- 2022ஆம் ஆண்டுக்கான தேசிய உலோகவியல் விருதுகளை மத்திய எஃகு அமைச்சகம் வழங்கியது. ஐந்து சிறப்பு மிக்க உலோகவியலாளர்களுக்கு ஐந்து பிரிவுகளின்கீழ் மதிக்கத்தக்க இந்த விருதுகள் வழங்கப்பட்டன. டாக்டர் காமாட்சி முதலி உத்தண்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் டாக்டர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜிக்கு தேசிய உலோகவியலாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
12. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிற மாதம் எது?
அ. நவம்பர் 🗹
ஆ. டிசம்பர்
இ. ஜனவரி
ஈ. மார்ச்
- ஐநா பொதுச்சபை நவ.25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான உலக நாளாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் நீளும் இந்த நாளின் நிகழ்வானது, நவ.25 அன்று தொடங்கி டிச.10 அன்று சர்வதேச மனித உரிமைகள் நாளன்று முடிவடையும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 2024 மார்ச்சுக்குள் 31 எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்கள் பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் 31 எம்க்யூ-9பி பிரிடேட்டர் டிரோன்கள் (ஆளில்லா விமானம்) கொள்முதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போர்புரிதல், கடற்பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ-9பி பிரிடேட்டர் மேற்கொள்ளும். இந்த டிரோன்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்ர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தது.
2. மலேசியாவுக்கு டிச.01 முதல் நுழைவு இசைவு இல்லாமல் பயணிக்கலாம்!
டிச.01ஆம் தேதிமுதல் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் மலேசியாவுக்குப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக புதிய நடைமுறை அறிமுகம் செய்வதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3. ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்சுக்கு புக்கர் பரிசு.
உலகப்புகழ்பெற்ற புனைவு இலக்கிய விருதான புக்கர் பரிசை ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் பெற்றார். பால் லிஞ்ச் எழுதிய ப்ராபெட் ஸாங் (Prophet Song – தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. புக்கர் விருதுடன் பரிசுத்தொகையாக £50,000 பவுண்டும் (இந்திய மதிப்பில் சுமார் `52 இலட்சம்) பால் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு புக்கர் பரிசுபெற்ற ஷேகன் கருணதிலகவிடமிருந்து கோப்பையை பால் லிஞ்ச் பெற்றுக்கொண்டார்.
4. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலை.
பெரம்பலூர் மாவட்டத்தின் எறையூர் SIPCOT தொழில் வளாகத்தில் அமைந்துள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் `400 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, 2022 ஆனது அண்மையில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டிருந்தது. இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், `400 கோடி மதிப்பீட்டுச்செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
IMPORTANT LINKS
TNPSC Current Affairs
https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/
Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test
https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb
Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO