TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘ஆராட்டு விழா’வுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. கேரளா 🗹

ஆ. கர்நாடகா

இ. ஒடிசா

ஈ. பீகார்

  • திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி திருக்கோவிலில், ‘ஆராட்டு விழா’ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘ஆராட்டு’ திருவிழாவின் தனிச்சிறப்பு என்னவெனில், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் தலைவர் இன்றும் பாரம்பரிய உடையில் ஊர்வலத்தின்போது தெய்வங்களின் சிலைகளை அழைத்துச் செல்வதுதான். ‘ஆராட்டு விழா’ ஆண்டுக்கு இருமுறை கொண்டாடப்படுகிறது.

2. உலக மேம்பாட்டுத் தகவல் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர் 22

ஆ. அக்டோபர் 24 🗹

இ. அக்டோபர் 27

ஈ. அக்டோபர் 30

  • உலக மேம்பாட்டுத் தகவல் நாளானது அக்டோபர்.24 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மேம்பாட்டில் உள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நோக்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நாள் ஐநா நாளுடன் ஒத்துப்போகிறது; 1945ஆம் ஆண்டில் ஐநா செயல்படத் தொடங்கிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

3. ‘பன்னாட்டு புலம்பெயர்வு கண்ணோட்ட அறிக்கை – 2023’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ. IMF

ஆ. OECD 🗹

இ. WEF

ஈ. உலக வங்கி

  • ‘பன்னாட்டு புலம்பெயர்வு கண்ணோட்ட அறிக்கை–2023’ஐ அண்மையில் பொருளியலுக்கான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (OECD) வெளியிடப்பட்டது. பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதில் முன்னணியில் உள்ள இந்தியர்கள், அயல்நாட்டுக் குடியுரிமையைப் பெறுவதில் முதலிடம் வகிக்கின்றனர் என்று OECDஇன் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. நடப்பாண்டில் (2023) வரும் உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. A healthier future for mothers and children 🗹

ஆ. Eradicate poliomyelitis

இ. Polio Free Earth

ஈ. Polio Free Villages

  • இளம்பிள்ளைவாத நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக போலியோ நாள் உலகளவில் இளம்பிள்ளைவாத நோயை (போலியோ) முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டுகிறது. போலியோ என்பது போலியோ வைரஸால் ஏற்படும் ஓர் உயிருக்கு ஆபத்தான நோயாகும். நடப்பு 2023ஆம் ஆண்டில் வரும் உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருள் “A healthier future for mothers and children” என்பதாகும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற போர்னியோ தீவு உள்ள கண்டம் எது?

அ. வட அமெரிக்கா

ஆ. ஆசியா 🗹

இ. ஆப்பிரிக்கா

ஈ. ஐரோப்பா

  • தென்கிழக்கு ஆசியாவின் மலாய் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான போர்னியோ, இந்தோனேசிய கலிமந்தன் மற்றும் ஒரு சிறு நாடான புருனே ஆகிய இரண்டு மலேசிய மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. குறைந்தது 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேற்பரப்பில் இருந்து மறைந்து போன பொன்டஸ் தட்டு எனப்படும் புராதன புவியத்தட்டு ஒன்றை அறிவியலாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்டுபிடித்துள்ளனர். இம்மேலோட்டுத் துண்டுகள் தென்சீனக்கடலில், போர்னியோ தீவுக்கு அருகில் அமைந்துள்ளன.

6. விக்ரம்-1 ஏவுகலத்தை உருவாக்கிய இந்திய விண்வெளிசார் துளிர் நிறுவனம் எது?

அ. துருவ் ஏரோஸ்பேஸ்

ஆ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் 🗹

இ. பிக்ஸல் ஏரோஸ்பேஸ்

ஈ. பாரத் விண்வெளி

  • விண்வெளி சார்ந்து துளிர் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விக்ரம்-1 என்ற ஏவுகலத்தை அண்மையில் வெளியிட்டது. இந்த ஏவுகலம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தாழ்புவி சுற்றுப் பாதைக்கு செயற்கைக்கோள்களைக் கொண்டுசெல்லும் பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் -1 என்பது பல்நிலை ஏவுகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தோராயமாக 300 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை தாழ்புவி சுற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும் திறன்கொண்டது இது.

7. இந்தியாவில் பனிச்சிறுத்தை எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 🗹

இ. உத்தரகாண்ட்

ஈ. சிக்கிம்

  • ஐந்தாண்டு கால அறிவியல் மதிப்பீட்டின்படி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் 75 பனிச்சிறுத்தைகள் இருப்பதாகவும், இது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை என்பதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பனிச்சிறுத்தை கணக்கெடுப்பு மதிப்பீட்டின் ஒருபகுதியாக இந்த மதிப்பீடு நடத்தப்பட்டது. இந்தியாவில், ஹிமாச்சலப் பிரதேசம் தவிர, ஜம்மு காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய இமாலய மாநிலங்களில் இவை காணப்படுகின்றன. பனிச்சிறுத்தைகளின் அதிக அடர்த்தியானது ஸ்பிட்டி மற்றும் பின் பள்ளத்தாக்கின் மேற்கு-இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘பதுகம்மா விழா’வுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

. தெலுங்கானா 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. குஜராத்

  • தெலுங்கானா மாநிலத் திருவிழாவான, ‘பதுகம்மா’ (மலர்-திருவிழா) ஆந்திர பிரதேச எல்லையில் அமைந்துள்ள பல கிராமங்களில் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் சாதவாகன நாட்காட்டியின்படி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளை விளக்குகள் மற்றும் மலர்கள் மற்றும் வண்ணக் கோலங்களால் அலங்கரித்து, பாரம்பரிய மற்றும் பண்டிகை முறையில் இத்திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

9. இந்தியா உட்பட சில நாடுகளின் குடிமக்களுக்கு இலவச நுழைவு இசைவு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ள அண்டை நாடு எது?

அ. இலங்கை 🗹

ஆ. வங்காளதேசம்

இ. வியட்நாம்

ஈ. தாய்லாந்து

  • இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் குடிகளுக்கு இலவச நுழைவு இசைவு வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முன்முயற்சி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு சோதனைத் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இது 2024 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்கும். கடனில் சிக்கியுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மீண்டும் புத்துயிர் பெறவைப்பதே இதன் நோக்கமாகும்.

10. இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு எது?

அ. 1948

ஆ. 1962 🗹

இ. 1975

ஈ. 1982

  • இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை உதய நாளானது 1962ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் அக்.24 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய-சீனப் போருக்குப் பிறகு, உயரமான பகுதிகளில் எல்லையைக் காக்க சிறப்புப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. இந்தக்காவல்படையில் தற்போது சுமார் 85,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

11. இந்தியாவின் முதல் நானோ DAP (திரவ) ஆலை திறக்கப்பட்ட மாநிலம் எது?

அ. குஜராத் 🗹

ஆ. பீகார்

இ. மத்திய பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உள்ள கலோலில் IFFCOஇன் நானோ DAP (திரவ) ஆலையை மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்தார். IFFCOஇன் கலோல் பிரிவு சுமார் 42 லட்சம் குடுவைகள் பசுமை தொழினுட்பம் சார்ந்த நானோ DAPஐ உற்பத்தி செய்யும். வழக்கமான DAP ஒரு மூட்டை சுமார் `1300 விலையில் கிடைக்கும் எனில், விவசாயிகள் நானோ திரவ DAPஇன் ஒரு குடுவையை `600-க்கு பெறமுடியும்.

12. ஜம்ராணி அணை பன்னோக்குத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. உத்தரகாண்ட் 🗹

ஈ. குஜராத்

  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜம்ராணி அணை பன்னோக்குத் திட்டத்தை நீர்வளம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் – விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின்கீழ் (PMKSY-AIBP) சேர்க்க பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. PMKSY-AIBP என்பது நீர்வளங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்புத் துறையின் கீழ் உள்ள ஒரு திட்டமாகும்.

13. 5T (தன்னிலைமாற்ற முயற்சிகள்) திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஒடிஸா 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. மேற்கு வங்காளம்

  • ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய V K பாண்டியன், 5T (தன்னிலைமாற்ற முயற்சிகள்) மற்றும் ‘நவீன் ஒடிஸா’ ஆகியவற்றின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது குடிமைப்பணிகள் சேவையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அவருக்கு இந்த நியமனத்தின்மூலம் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்மூலம் மாநில முதலமைச்சரின்கீழ் நேரடியாக பணியாற்ற முடியும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள்.

கோவாவில் அக்டோபர்.26 முதல் நவ.9 வரை நடைபெறும் 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

2. கிர்கிஸ்தானில் SCO கூட்டம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் SCO தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை சீனா, ரஷியா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அதிபர்கள் இணைந்து தொடங்கினர். இந்த அமைப்பில் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாகின.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!