TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th May 2024

1. ‘Gliese 12 b’ என்றால் என்ன?

அ. நீர்மூழ்கிக்கப்பல்

ஆ. முக்கியமான கனிமம்

இ. பூமி அளவுள்ள புறக்கோள்

ஈ. ஒரு வகை தடுப்பூசி

  • வானியலாளர்கள், NASAஇன் TESS மற்றும் பிற தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மீனத்தில் உள்ள சிவப்புக் குள்ளமான Gliese 12 ஐச் சுற்றிவரும் ஒரு மிதமான, பூமி அளவிலான வெளிக்கோளான Gliese 12b ஐக் கண்டுபிடித்துள்ளனர். Gliese 12b, பூமி அல்லது வீனஸைப் போன்றது, பூமியை விட 3.87 மடங்கு நிறை கொண்டது மற்றும் ஒவ்வொரு 12.8 நாட்களுக்கும் அதன் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இது பூமியை விட 1.6 மடங்கு அதிக ஆற்றலைப் பெறுகிறது மற்றும் 107°F (42°C) என மதிப்பிடப்பட்ட மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்டுள்ளது.

2. எந்த நாள் ஆண்டுதோறும் ‘உலக தைராய்டு தினமாக’ அனுசரிக்கப்படுகிறது?

அ. 22 மே

ஆ. 23 மே

இ. 24 மே

ஈ. 25 மே

  • உலக தைராய்டு தினம், ஆண்டுதோறும் மே 25 அன்று, தைராய்டு சுரப்பி மற்றும் தொடர்புடைய நிலைமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கழுத்தின் அடிப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியான தைராய்டு, தைராய்டு ஹார்மோன்களை (T4 & T3) சுரப்பதன்மூலம் முக்கிய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு மற்றும் புரத உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன. பொதுவாக பெண்களில் காணப்படும் தைராய்டு கோளாறுகள், எல்லா வயதினரையும் எல்லா பாலினத்தவரையும் பாதிக்கிறது; ஹைப்போ தைராய்டிசம் (செயல்படாத தைராய்டு) மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் (அதிக செயலில் உள்ள தைராய்டு), ஹார்மோன் உற்பத்தியை பாதிக்கிறது.

3. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. ஒடிசா

ஈ. குஜராத்

  • நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில் கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தமிழக வனத்துறையினர் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இது 1,411.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, 2013இல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது, இது புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கான வாழ்விடமாக உள்ளது. இக்காப்பகம் உலகின் மிகப்பெரிய புலிகள் எண்ணிக்கையையும் (280) இருளா மற்றும் குரும்பா போன்ற பழங்குடியினரின் தாய் நிலமாகவும் உள்ளது.

4. எந்த அமைச்சகத்தின் கீழ், PM KUSUM திட்டம் வருகிறது?

அ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஆ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • PM-KUSUM திட்டத்தின்கீழ் சோலார் வாட்டர் பம்ப் நிறுவலுக்கு பதிவுக்கட்டணம் கோரும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு எதிராக விவசாயிகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019இல் தொடங்கப்பட்ட, PM-KUSUM விவசாயத்தை டீசலற்றதாக்குவது, உழவர்களின் வருவாயை அதிகரிப்பது மற்றும் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. `34,422 கோடி நிதியுதவியுடன் 2026 மார்ச்சுக்குள் 34,800 மெகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது இதன் இலக்காகும். சோலார் பம்புகளுக்கு விவசாயிகள் 30-50% வரை மானியம் பெறுகிறார்கள்.

5. எந்தத் துறையுடன் ISHAN திட்டம் தொடர்புடையது?

அ. வான்வெளி துறை

ஆ. விவசாயத் துறை

இ. சுகாதாரத் துறை

ஈ. கல்வித் துறை

  • விமானப்போக்குவரத்து நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், இந்தியா தனது துண்டு துண்டான வான்வெளி நிர்வாகத்தை நாக்பூரில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த அமைப்பில் இணைக்க, Mission Indian Single Sky Harmonized Air Traffic Management (ISHAN)ஐ அறிமுகப்படுத்துகிறது. தற்போது, ​​இந்திய வான்வெளி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக நிர்வகிக்கப்படுகிறது. ISHAN அவற்றை நாக்பூரை மையமாகக் கொண்டு ஒருங்கிணைத்து, செயல்திறனை மேம்படுத்துகிறது. 1995இல் உருவாக்கப்பட்ட இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய அரசின் சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது.

6. eVTOLகள் என்றால் என்ன?

அ. இவை மின்சார உந்துவிசையைப் பயன்படுத்தி செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கக்கூடிய வாகனங்கள்

ஆ. இது புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து

இ. இது ஒரு புதிய வகை களைக்கொல்லி

ஈ. இது திடக்கழிவுகளில் இயங்கும் பைரோலிசிஸ் அமைப்பு

  • ஐஐடி மெட்ராஸின் ePlane நிறுவனம் eVTOL (எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்) விமானத்தை பெங்களூருவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. eVTOLகள் செங்குத்தாக புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் மின் உந்துவிசையைப் பயன்படுத்துகின்றன; ரோட்டர்கள் (அ) ப்ரொப்பல்லர்களை இயக்கும் மின் மோட்டார்களுக்கு சக்தி அளிக்க லித்தியம்-அயன் பேட்டரிகளைப் பயன்படுத்துகின்றன. அவை நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, வளிமாசைக் குறைப்பது மற்றும் அவசர சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. எந்த நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்?

அ. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

ஆ. ஐஐடி, கான்பூர்

இ. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

ஈ. ஐஐடி, ரூர்க்கி

  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் ஒட்டுண்ணியின் புரோகிபிடின் புரதத்தை குறிவைத்து சாத்தியமான மலேரியா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளனர். செல் பிரஸ்மூலம் iScienceஇல் வெளியிடப்பட்ட அவர்களின் ஆராய்ச்சி, சிறந்த தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான நம்பிக்கையை வழங்குகிறது. அனோபிலிஸ் கொசுக்களால் பரவும் மலேரியா, 2022இல் 249 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 60,800 இறப்புகளுடன் உலகளவில் குறிப்பிடத்தக்க சுகாதாரச் சுமையாக உள்ளது. இந்தத் தடுப்பூசி உருவாக்கம் மலேரியா கட்டுப்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்; அது பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு நோயைத் தீர்க்கும்.

8. பெரியாறு எந்த மாநிலத்தின் மிக நீளமான ஆறாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கோவா

ஈ. கர்நாடகா

  • கேரளாவில் உள்ள பெரியாற்றில் சமீபத்தில் மீன்கள் பலியாகி பெரும் அழிவையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியது. கேரளாவின் மிகநீளமான ஆறான பெரியாறு, தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி வடக்கு நோக்கி பாய்ந்து, பெரியாறு தேசியப்பூங்கா வழியாக மனிதனால் உருவாக்கப்பட்ட பெரியாறு ஏரிக்குள் செல்கிறது. இது இறுதியில் அரபிக்கடலை அடையும் முன் வேம்பநாடு ஏரியில் இணைகிறது. 244 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, கேரள மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாக விளங்குகிறது. இவ்வாற்றின் குறுக்கேதான் கேரளத்தின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான இடுக்கி அணை உள்ளது.

9. 2024 – உலக ஸ்கிசோஃப்ரினியா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Breaking the Stigma, Sharing Our Stories

ஆ. Celebrating the Power of Community Kindness

இ. Do what you can do

ஈ. Embracing recovery

  • உலக ஸ்கிசோஃப்ரினியா தினம், மே.24 அன்று அனுசரிக்கப்பட்டது. இது உலகளவில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கும் கடுமையான மனநோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஸ்கிசோஃப்ரினியாவுடன் தொடர்புடைய தவறான கருத்து உட்பட கட்டுக்கதைகளை அகற்ற எண்ணுகிறது. குழப்பமான சிந்தனை, பிரமைகள் மற்றும் மாயத்தோற்றம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். 2024 ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Celebrating the Power of Community Kindness” என்பதாகும்.

10. அண்மையில், சிமெண்ட் மற்றும் கட்டிடப் பொருட்களுக்கான தேசிய கவுன்சில்-அடைவு மையத்தை (NCB-IC) திறந்த அமைச்சகம் எது?

அ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஆ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • அண்மையில், சிமெண்ட் மற்றும் கட்டிடப் பொருட்களுக்கான தேசிய கவுன்சில்-அடைவு மையம் (NCB-IC) டிபிஐஐடி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளரால் திறக்கப்பட்டது. NCB-ICஇல், ஸ்டார்ட்-அப்கள்/தொழில்முனைவோர் தயாரிப்பு மேம்பாட்டிற்காக NCB அறிவியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடம் இருந்து வழிகாட்டுதலைப் பெறுகின்றனர். டிபிஐஐடி-அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் இப்போது மொத்தம் 1,36,584 உள்ளன. DPIITஇன்கீழ் இயங்கும் NCB என்பது சிமென்ட், கட்டுமானப்பொருட்கள் மற்றும் கட்டுமானத்தொழில்களில் கவனம் செலுத்தி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, கல்வி & தொழில்துறை சேவைகளை வழங்கும் முன்னணி R&D அமைப்பாகும்.

11. அண்மையில், வங்காள விரிகுடாவைத் தாக்கிய சூறாவளி புயலுக்கு, ‘ரீமல்’ எனப் பெயரிட்ட நாடு எது?

அ. ஓமன்

ஆ. மியான்மர்

இ. வங்காளதேசம்

ஈ. இந்தியா

  • இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து தீவிர புயலாக, ‘ரீமல்’ புயலாக மாறியுள்ளது என்றும், காற்றின் வேகம் மணிக்கு 100-120 கிமீ வீசும் என்றும் கூறியுள்ளது. ஓமனால் பெயரிடப்பட்ட, ‘ரீமல்’ சூறாவளி, இந்தப் பருவத்தில் உருவான முதல் புயலாகும். இது மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் பலத்த மழையைப் பொழிவிக்கும்.

12. 2024 – ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்ட் யார்?

அ. தீபா கர்மாகர்

ஆ. பிரணதி நாயக்

இ. ருச்சா திவேகர்

ஈ. கல்பனா தேப்நாத்

  • ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சாதனையை திரிபுராவின் தீபா கர்மாகர் படைத்தார். 2024ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 13.566 மதிப்பெண்களுடன் பெண்களுக்கான வால்ட் பைனலை அவர் வென்றார். வடகொரியாவின் கிம்சோன்-கியாங் மற்றும் ஜோ கியோங்-பியோல் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். இந்த வெற்றி இருந்தபோதிலும், 2024 – பாரிஸ் ஒலிம்பிக் ஒதுக்கீட்டை தவறவிட்ட தீபா கர்மாகர் ஆல்ரவுண்டில் 16ஆவது இடத்தைப் பிடித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கேன்ஸ் திரைப்பட விழா.

கேன்ஸ் திரைப்பட விழாவின் 2ஆவது உச்ச அங்கீகாரமான, ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை இந்திய இயக்குநர் பாயல் கபாடியாவின், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ என்னும் திரைப்படம் வென்றுள்ளது. இதன்மூலம், கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை பாயல் கபாடியா பெற்றுள்ளார்.

அடுத்த தலைமுறை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘லா சினெஃப்’ விருது பிரிவில் மைசூரு மருத்துவர் சித்தானந்த S நாயக் இயக்கிய, ‘சன்ஃபிளவர்ஸ் வேர் தி பர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ’ என்னும் குறும்படம் முதல் பரிசை வென்றது. அமெரிக்க இயக்குநர் சியென் பேகர் இயக்கிய ‘அனோரா’ படத்துக்கு கோல்டன் பாம் விருது வழங்கப்பட்டது.

பல்கேரிய இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜனோவின், ‘தி ஷேம்லெஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்திய தயாரிப்பு வடிவமைப்பாளர் சென்குப்தா, ‘அன்செர்டைன் ரிகார்ட்’ (மாறுபட்ட கதைக்களம்) பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகை விருதை வென்ற முதல் இந்தியரான சென்குப்தா தனது வெற்றியை மாற்றுப்பாலினத்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!