TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th January 2024

1. BCCI விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்’ என்ற விருதை பெறவுள்ள வீரர் யார்?

அ. சுப்மன் கில்

ஆ. ரோகித் சர்மா

இ. விராட் கோலி

ஈ. K L இராகுல்

  • முன்னாள் இந்திய பல்திறனரும் பயிற்சியாளருமான இரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை BCCI வழங்கவுள்ளது. கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தனது சிறந்த செயல்பாட்டிற்காக, ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்’ விருதைப் பெறவுள்ளார்.

2. பின்வருவனவற்றில் D K பாசு வழக்குடன் தொடர்புடையது எது?

அ. காவலர் சிறைக்காப்பில் உள்ள தனிநபரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்தல்

ஆ. சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல்

இ. குழந்தைத் தொழிலாளர்

ஈ. பாலியல் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு

  • காவல்துறையின் அத்துமீறல் மற்றும் சிறைக்காவலில் வன்முறைக்கு எதிரான D K பாசு வழக்கை (1996) இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் கோட்டிட்டுக்காட்டியது. காவலர் சிறைக்காப்பில் இறந்தவர்கள் குறித்ததுதான் D K பாசு எதிர் (Vs) மேற்கு வங்காள மாநில வழக்கு. சிறைக்காவல் வன்முறையானது சட்டத்தின் ஆட்சியையும் மனித கண்ணியத்தையும் மீறுகிறது என்ற தீர்ப்பிற்கு வழிவகுத்த வழக்கை மனுதாரர் D K பாசு முன்னிலைப்படுத்தினார். இத்தீர்ப்பு அடிப்படை உரிமைகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதோடு சிறைக்காவலில் அத்துமீறலுக்கு ஆளான நபர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டது.

3. இந்திய வான்படை நடத்திய, ‘டெசர்ட் நைட்’ பயிற்சியில் பங்கேற்ற இருநாடுகள் எவை?

அ. எகிப்து மற்றும் சூடான்

ஆ. பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

இ. பிரான்ஸ் மற்றும் ரஷ்யா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து

  • இந்திய வான்படை, பிரெஞ்சு வான்படை மற்றும் ஐக்கிய அரபு அமீரக வான்படை இணைந்து, ‘டெசர்ட் நைட்’ என்ற வான்படைப் போர்ப்பயிற்சியை மேற்கொண்டன. இந்திய வான்படை சார்பில் சுகோய்-30 MKI, MiG-29, ஜாகுவார், அவாக்ஸ், C-130-J உள்ளிட்ட விமானங்கள் இப்பயிற்சியில் பங்கேற்றன. பிரான்ஸ் சார்பில் ரபேல் போர்விமானம் பங்கேற்றது. ஐக்கிய அரபு அமீரக வான்படை சார்பில், F16 இரக விமானம் இதில் பங்கேற்றது. இந்தக் கூட்டு வான் படைப்பயிற்சி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நடைபெற்றது.
  • 3 நாடுகளின் வான்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த, ‘டெசர்ட் நைட்’ விமானப்படைப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். பயிற்சிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், செயல்பாட்டு அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ள உதவின. இத்தகைய பயிற்சிகள், இந்திய வான்படையின் வலிமையை வெளிப்படுத்துவதோடு பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.

4. 42 நாள் நடைபெறும், ‘மகாமண்டல திருவிழா’ தொடங்கப்பட்ட இடம் எது?

அ. ஹரியானா

ஆ. சத்தீஸ்கர்

இ. உத்தர பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • பாலராமரின் பிராண பிரதிஷ்டையைத் தொடர்ந்து அயோத்தியில் உள்ள இராமர் திருக்கோவிலில் 42 நாள் நடக்கும் ‘மகாமண்டல திருவிழா’ தொடங்கியது. ஜனவரி.24ஆம் தேதி தொடங்கி, இராமர் திருக்கோவிலின் அறங்காவலர் ஜகத்குரு விசுவேஷ் பிரபன் தீர்த்தரின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத் திருவிழாவில், தினசரி கலசபூஜை மற்றும் கருவறையில் நாற்பத்தெட்டு கலசங்கள்வைத்து வழிபடுதல் ஆகியவை அடங்கும்.
  • வைஷ்ணவ பாரம்பரிய முறைப்படி, கடவுள் இராமருக்கு பலவிதமான இனிப்புகள் கொண்ட இராஜபோக விருந்து அளிக்கப்படும். இராமர் ஜென்மபூமி வளாகத்தில் பல்வேறு மந்திரங்களை ஓதுவதும் இந்தத் திருவிழாவில் அடங்கும்.

5. முதன்முதலில், ‘தேசிய பெண் குழந்தைகள் நாள்’ கொண்டாடப்பட்ட ஆண்டு எது?

அ. 2006

ஆ. 2007

இ. 2008

ஈ. 2009

  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.24 அன்று தேசிய பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் இந்த நாள் அறிவிக்கப்பட்டது. இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நாள். இது கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் சம வாய்ப்புகளுக்காக வாதிடுகிறது.
  • பிரதம அமைச்சரின், “பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் ஆண்டு நிறைவையும் இந்த நாள் நினைவுகூருகிறது. பெண் சிசுக்கொலையைத் தடுத்தல் மற்றும் அனைத்து பெண் குழந்தைகளையும் காப்பாற்றுதல் மற்றும் அவர்களுக்கு தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

6. இந்திய வானிலை ஆய்வுமையத்துடன் இணைந்து, ‘Insat-3DS’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. இந்திய கடலோர காவல்படை

ஈ. HAL

  • இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட, ‘Insat-3DS’ செயற்கைக்கோள் மீதான முக்கியமான சோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நிறைவு செய்துள்ளது. காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் தொடரின் ஒருபகுதியாக, இது காலநிலை சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கெனவே சுற்றுப்பாதையில் உள்ள INSAT-3D மற்றும் INSAT-3DR உடன் கூடிணைந்து செயல்படவுள்ள இந்தச் செயற்கைக்கோள், GSLV-F14 பயன்படுத்தி ஏவப்படும். INSAT-3DR ஆனது இரவுநேர மேகம் மற்றும் மூடுபனி படங்களையும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மதிப்பீட்டையும் மேம்பட்ட துல்லியத்தில் வழங்கும் திறன்கொண்டதாகும்.

7. ‘ஃபிட் இந்தியா சாம்பியன்ஸ்’ என்ற இணையவழி ஒலிபரப்புத் தொடரைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான உடல்தகுதி இந்தியா இயக்கம், ‘ஃபிட் இந்தியா சாம்பியன்கள்’ என்ற இணையவழி ஒலிபரப்புத் தொடரை (podcast) அறிமுகஞ்செய்ய உள்ளது. எண்ணிம மற்றும் பல்லூடக தொழினுட்பத்தின்மூலம் நலத்தை முன்கூட்டியே நிர்வகிக்கும் உடற்பயிற்சித் துறையில் ஒரு முக்கிய பங்குதாரரான GOQii உடன் இணைந்து இது தொடங்கப்படுகிறது.
  • இந்திய விளையாட்டு வீரர்களின் சிறந்த சாதனைகள் & எழுச்சியூட்டும் அம்சங்களைக்கொண்ட ஒரு புதுமையான தொடர், ஜன.27 முதல் தொடங்குகிறது. ஹாங்சோவில் நடந்த 2023 ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் காலால் அம்பெய்தி அறிமுகத்திலேயே தங்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, தொடக்க அத்தியாயத்தில் இடம்பெறுவார்.

8. பர்வதமாலா திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. வேளாண்மை அமைச்சகம்

  • தேசிய கயிற்றுப்பாதை மேம்பாட்டுத்திட்டமான பர்வதமாலா திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 400 திட்டங்களுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2022-23 மத்திய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், குறைந்த சாலை மற்றும் இரயில் இணைப்புடன் கூடிய மலைப்பகுதிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) துணை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தால் (NHLML) செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது.

9. அண்மையில், ‘பாரத இரத்னா’ விருது வழங்கப்பட்ட கர்பூரி தாக்கூர், கீழ்காணும் எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?

அ. ஜார்கண்ட்

ஆ. பீகார்

இ. உத்தர பிரதேசம்

ஈ. ஒடிசா

  • பிரபல காந்திய சமாதர்மவாதியும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூர், 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான, ‘பாரத இரத்னா’ விருதை அவரது மரணத்திற்குப்பிறகு பெறவுள்ளார். இந்த விருது எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவையைப் புரிவோரை அங்கீகரிக்கிறது. பாரம்பரியமாக இந்தியாவில் பிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, விதிவிலக்காக அன்னை தெரசா, கான் அப்துல் கபார் கான் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

10. 2024 – ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் யார்?

அ. கோபி T

ஆ. மான் சிங்

இ. ஸ்ரீனு புகதா

ஈ. கார்த்திக் குமார்

  • 2024ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மராத்தான் ஓட்டப்பந்தய வீரர் மான் சிங் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2:14:19 நேரத்தில் போட்டியை நிறைவு செய்த மான் சிங், 65 வினாடி தாமதத்தில் இரண்டாமிடம் பிடித்தார். 2017இல் இந்தப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் கோபி தொனகல் ஆவார்.

11. 14ஆவது அனைத்திந்திய இந்திய காவல் அதிரடிப்படை போட்டி நடத்தப்பட்ட இடம் எது?

அ. விசாகப்பட்டினம்

ஆ கர்னூல்

இ. குண்டூர்

ஈ. நெல்லூர்

  • 14ஆவது அனைத்திந்திய காவல் அதிரடிப்படை போட்டியானது 2024 ஜன.22-30 வரை நடைபெறும். இப்போட்டி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கிரேஹவுண்ட்ஸ் மையத்தில் நடைபெறுகிறது. ஆந்திர பிரதேச மாநில காவல்துறையால் இது நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி இந்தியாவில் உள்ள காவல் அதிரடிப்படைகளுக்கான சிறந்த போட்டியாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் 16 மாநில காவல்துறைகளும், மத்திய காவல் முகமைகளின் ஏழு அணிகளும் பங்கேற்கும்.

12. ‘மைமோசா – Mimosa’ என்றால் என்ன?

அ. தீநுண்மம்

ஆ. பூஞ்சை

இ. ஆக்கிரமிப்பு தாவரம்

ஈ. பண்டைய விவசாய நுட்பம்

  • அஸ்ஸாம் மாநிலம் அதிகரித்துவரும், ‘மைமோசா’ என்னும் ஆக்கிரமிப்பு தாவரங்களின் அச்சுறுத்தலுடன் போராடி வருகிறது; இது அதன் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு இடரை ஏற்படுத்துகிறது. UNESCOஇன் உலக பாரம்பரிய தளமாக விளங்கும் கசிரங்கா தேசியப்பூங்கா, இதன் அதிகரிப்பை எதிர்கொண்டு வருகிறது. இது வன விலங்குகளுக்கான உணவு கிடைப்பையும் பாதிக்கிறது. முதலில் மண் செறிவூட்டலுக்காக தேயிலை தொழிற் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட இது, தற்போது காலநிலை மற்றும் புவியியல் காரணிகளால் அந்தப் பகுதியை அச்சுறுத்துகிறது. ‘மைமோசா’ என்பது தொட்டாற் சுருங்கி செடியாகும்.

13. முதலமைச்சர் கிராமின் சோலார் தெரு விளக்குத் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஜார்கண்ட்

இ. ஒடிசா

ஈ. மத்திய பிரதேசம்

  • முதலமைச்சர் கிராமின் சோலார் தெருவிளக்குத் திட்டம் பீகார் மாநிலத்துடன் தொடர்புடையதாகும். 18 மாதங்களுக்கு முன்பு பீகாரில் முதலமைச்சர் கிராமின் சோலார் தெருவிளக்குத் திட்டம் தொடங்கப்பட்ட போதிலும், 80% கிராமப்புற கிராமங்களில் இன்னும் சோலார் தெருவிளக்குகள் நிறுவப்படவில்லை. பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், 8,000 கிராம பஞ்சாயத்துகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சோலார் தெருவிளக்குகளை நிறுவும் திட்டத்தை முதலமைச்சர் நிதீஷ்குமார் கடந்த 2022இல் தொடங்கினார். இருப்பினும், இன்றுவரை 106,161 விளக்குகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. பீகார் மாநிலப் பஞ்சாயத்து இராஜ் துறையின் டிஜிட்டல் தளத்தின் அதிகாரப்பூர்வ தரவுமூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தொடர்ந்து 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி.01 அன்று தாக்கல்செய்கிறார். இதன்மூலம் ஐந்தாண்டு ஆட்சிக்காலமும் நாட்டின் நிதியமைச்சராக தொடர்ந்து 6 மத்திய பட்ஜெட் தாக்கல்செய்த முதல் பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெறுகிறார். 6ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் சூழலில், தொடர்ந்து ஐந்து பட்ஜெட்களை தாக்கல்செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர்கள் அருண் ஜேட்லி, ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை அவர் முறியடிப்பார். அதேபோல், கடந்த 1959 முதல் 1964ஆம் ஆண்டுவரை தொடந்து 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல்செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சாதனையையும் அவர் சமன் செய்வார்.

2. நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில்தான் அதிக கல்லூரிகள்: ஆய்வறிக்கை தகவல்.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருப்பதாகவும், அதையடுத்து மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் அதிக கல்லூரிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் அகில இந்திய உயர்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் 328 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 45,473 கல்லூரிகள் இந்த ஆய்வின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 42,825 கல்லூரிகள் கடந்த 2021-22ஆம் கல்வியாண்டுக்கான அகில இந்திய உயர்கல்வித்துறை ஆய்வில் பங்கேற்றன. கல்லூரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு (2829) ஐந்தாம் இடத்தில் உள்ளது.

கர்நாடகத்தில் அதிக கல்லூரி அடர்த்தி: மக்கள்தொகை விகிதாசாரப்படி, அதிகமான கல்லூரிகளைக்கொண்ட மாநிலமாக ஒரு இலட்சம் பேருக்கு 66 கல்லூரிகளுடன் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகம், பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 1,106 கல்லூரிகள் உள்ளன.

மாணவர் சேர்க்கை – 4.32 கோடி: நாட்டின் மொத்த உயர்கல்வி மாணாக்கர் சேர்க்கை 4 கோடியே, 32 இலட்சத்து, 68 ஆயிரத்து, 181 ஆகும்.

3. சோழர்கால குடவோலை முறைக்குப் பெருமைசேர்த்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி!

“வளர்ந்த இந்தியா”, “மக்களாட்சியின் தாய் இந்தியா” ஆகிய 2 கருப்பொருள்களில் இந்தியாவின் 75ஆவது குடியரசு நாள் விழா நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக பிரான்சு அதிபர் இமானுவல் மேக்ரான் பங்கேற்றார்.

இந்த விழாவின் அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழநாடின் அலங்கார ஊர்தி, பத்தாம் நூற்றாண்டின் சோழர்கால குடவோலை தேர்தல் முறையை காட்சிப்படுத்தியது. “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.

கிராம நிர்வாகப் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யவும், அந்தப் பகுதியின் விருப்பங்களை பேரரசுக்குத் தெரிவிக்கவும் பின்பற்றப்பட்ட இவ்வழிமுறை தொடர்பான வரலாற்றுச்சான்றுகள், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலுக்கு முன்னோடியாக இந்தப் பண்டைய முறை கருதப்படுகிறது. மக்கலாட்சியின் பண்டைய வேர்கள் தமிழ்மண்ணில் உள்ளதை எடுத்துக்காட்டிய தமிழக ஊர்தியில் உத்திரமேரூர் திருவைகுண்டப் பெருமாள் திருக்கோவிலின் மாதிரியும் இடம்பெற்றிருந்தது. குடவோலை குறித்து மருதன் இளநாகனார் எழுதிய, ‘கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்டார்’ என்ற சங்க இலக்கிய அகநானூற்று பாடலுக்கு அப்போது மகளிர் நடனமாடினர்.

4. அரசுப்பள்ளிக்கு நிலமளித்த ஆயி அம்மாள், 5 பேருக்கு பதக்கங்கள்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் சிறப்பு விருது: அரசுப் பள்ளிக்கு நிலத்தைத் தானமாக வழங்கிய மதுரை மாவட்டம் யா. கொடிக்குளம் கிராமத்தைச் சோர்ந்த ஆயி அம்மாள் என்ற பூரணத்திற்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் அடங்கியது.

வீரதீரச்செயல் விருது: பல்வேறு நிகழ்வுகளின்போது உடனடியாக செயலாற்றி மற்றவர்களின் நலனுக்காக பாடுபடு -வோருக்கு வீரதீரச்செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சிங்கித் துறையைச் சேர்ந்த யாசர் அராபத், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தே. டேனியல் செல்வசிங், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வட்டாட்சியர் சு. சிவக்குமார் ஆகியோர் அண்ணா பதக்கங்கள் பெற்றனர். இந்தப்பதக்கம் தலா `1 லட்சத்துக்கான காசோலை, தங்கமுலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியதாகும்.

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கத்தைப் பேண பாடுபடுவோருக்கு, கோட்டை அமீர் பெயரில் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜூபேருக்கு, இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மதநல்லிணக்க விருது வழங்கப்பட்டது. இவ்விருது `25 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

வேளாண்துறை சிறப்பு விருது: நெல்லுற்பத்தியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் சி நாராயணசாமி நாயுடு நெல்லுற்பத்தித் திறனுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சி பாலமுருகனுக்கு, நாராயணசாமி நாயுடு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, `5 இலட்சம் பரிசுத்தொகை, தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் ஆகியன அடங்கியதாகும்.

சிறந்த காவல் நிலையம்: காவல் நிலையங்களுக்குள் மிகவும் சிறப்பான முறையில் பணிசெய்தல், குற்றங்களைக் குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த காவல்நிலையங்களுக்கு முதலமைச்சரின் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு முதலமைச்சரின் விருதுக்கான முதல் பரிசை மதுரை மாநகர SS காலனி காவல்நிலையம் பெற்றது.

5. ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனைவோருக்கான கண்காட்சி.

தென்னிந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டின் சென்னையில் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில்முனை
-வோருக்கான கண்காட்சி நடைபெறுவதாக இளையோர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவு திட்டம், சுயவுதவிக்கான பொருளாதார கடனுதவி திட்டம், துரித மின்னிணைப்பு திட்டம், நிலம் வாங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் திட்ட உதவிகள், கல்விக் கடன் திட்டம், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைமூலம் தொழில்தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை தொழில் முனைவோராக அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இக்கண்காட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட 8,000க்கும் மேற்பட்ட பொருள்கள் 410 அரங்குகளிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

6. பெண் சக்தியை பறைசாற்றிய அணிவகுப்பு!

முதன்முறையாக முப்படை வீராங்கனைகள்:

75ஆவது குடியரசு நாள் விழாவில் முதன்முறையாக முப்படை வீராங்கனைகளின் குழு பங்கேற்றது. கேப்டன் சந்தியா தலைமையில் இந்தக் குழு மிடுக்குடன் அணிவகுத்தது.

இராணுவ வல்லமை: தேசத்தின் இராணுவ வல்லமையை வெளிப்படுத்தும் வகையில், டி-90 பீஷ்மா பீரங்கிகள், NAG ஏவுகணை அமைப்புமுறை, காலாட்படை போர் வாகனங்கள், ஆயுதங்களைக் கண்டறியும், ‘ஸ்வாதி’ ரேடார் அமைப்புமுறை, டிரோன்களை முடக்கும் அமைப்புமுறை, தரையிலிருந்து வானிலுள்ள இலக்குகளை விரைந்து தாக்கும், ‘அஸ்திரா’ ஏவுகணைகள், இலகு இரக போர் விமானமான தேஜஸ், அதிநவீன மின்னணு போர்த் தளவாடங்கள், ‘சக்தி’ இணையவழி பாதுகாப்பு அமைப்புமுறை உள்ளிட்டவை அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin