TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 27th & 28th April 2024

1. இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • ஆவணக்காப்பக விவகாரங்களுக்கான உயர் ஆலோசனை அமைப்பான இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையம் (IHRC), பதிவுகளை உருவாக்குபவர்கள், பாதுகாப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களின் அகில இந்திய மன்றமாக செயல்படுகிறது. இது பதிவுகளின் மேலாண்மை & வரலாற்று ஆராய்ச்சிகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. 1919ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட IHRC, மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது. IHRCஇன் தனித்துவமான அடையாளம் மற்றும் அதன் நெறிமுறைகளைத் தெரியப்படுத்துவதற்காக, புதிய இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசக வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
  • மைகௌ தளத்தில் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டியில், மொத்தம் 436 உள்ளீடுகள் பெறப்பட்டன. தில்லியைச் சேர்ந்த ஷௌர்யா பிரதாப் சிங் வடிவமைத்து சமர்ப்பித்த இலச்சினை மற்றும் குறிக்கோள் வாசகம் தேர்வு செய்யப்பட்டு இரண்டுக்குமான முதல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2. 2024 – உலக அறிவுசார் சொத்துரிமை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Women and IP: Accelerating innovation and creativity

ஆ. IP and the SDGs: Building our common future with innovation and creativity

இ. IP and Youth Innovating for a Better Future

ஈ. Taking your ideas to the market

  • உலக அறிவுசார் சொத்துரிமை நாளானது ஆண்டுதோறும் ஏப்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதில் அறிவுசார் சொத்துகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதற்காக WIPOஆல் அனுசரிக்கப்படுகிறது. “IP and the SDGs: Building our common future with innovation and creativity” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். 1974இல் ஐநாஇன் ஒரு சிறப்பு நிறுவனமாக WIPO மாறியது.

3. அண்மையில், சமீபத்தில், 26ஆவது உலக ஆற்றல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. பெல்ஜியம்

ஆ. நெதர்லாந்து

இ. ஜெர்மனி

ஈ. டென்மார்க்

  • 2024 ஏப்.24 அன்று நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடந்த 26ஆவது உலக ஆற்றல் மாநாட்டின்போது அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை மாநாடு கூடியது. துபாயில் நடந்த COP28 ஐநா காலநிலை மாற்ற மாநாட்டின் மாற்றத்தக்க தாக்கத்தை மையமாகக்கொண்ட விவாதங்கள் நடந்தேறின. “Redesigning Energy for People and Planet” என்ற கருப்பொருளின்கீழ் நடந்த இது, கணிக்கவியலா சூழலில் உலகளாவிய ஆற்றல் மாற்றங்களை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

4. அண்மையில், இந்தியாவின் முதல் பன்னோக்கு பசுமை ஹைட்ரஜன் சோதனை திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. ஒடிஸா

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • SJVN நிறுவனமானது இந்தியாவின் முதல் பன்னோக்கு பசுமை ஹைட்ரஜன் சோதனை திட்டத்தை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நாத்பா ஜாக்ரி புனல்மின்னுற்பத்தி நிலையத்தில் தொடக்கியது. தினசரி எட்டு மநே செயல்படும் இது, 14 கிகி பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் NJHPS-க்காக அதிவேகங்கொண்ட ஆக்ஸிஜன் எரிபொருள் பூச்சுப்பொருளையும் தயாரிக்கும். இதன் 20 Nm/மணி கார மின் பகுப்பி, சிம்லாவில் உள்ள 1.31 மெகாவாட் சூரிய மின் நிலையத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படுகிறது.

5. எண்மமயமாக்கல்மூலம் விவசாயக்கடன் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக அண்மையில் RBIஉடன் கூட்டிணைந்த வங்கி எது?

அ. NABARD

ஆ. SBI

இ. SIDBI

ஈ. HDFC

  • NABARD மற்றும் RBI புத்தாக்க மையம் ஆகியவை எண்மமயமாக்கல்மூலம் விவசாயக்கடன்களை நவீனமயமாக்க கூட்டிணைந்துள்ளன. இது இந்திய விவசாயிகளுக்கான அணுகலை மேம்படுத்தவும் கடனளிப்பு செயலாக்கத்தை மேம்படுத்தவும் நோக்கம் கொண்டுள்ளது. NABARD ஆனது அதன் e-KCC கடன் தொடக்க அமைப்பு போர்ட்டலை RBI இன்னோவேஷன் ஹப்பின் பொது தொழில்நுட்ப தளத்துடன் ஒருங்கிணைக்கும். இந்த ஒத்துழைப்பு NABARD வங்கியின் இலக்கான கிராமப்புற செழிப்பை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புறங்களில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது என்று தலைவர் ஷாஜி K V கூறியுள்ளார்.

6. செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. உக்ரைன்

ஈ. ஈராக்

  • ஆண்டுதோறும் ஏப்.26 அன்று சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது; செர்னோபில் பேரழிவு நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 1986 ஏப்.26இல், உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலைய பெருவெடிப்பு ஒரு பெரிய கதிரியக்க மேகத்தை உமிழ்ந்தது; அது சுமார் 8.4 மில்லியன் மக்களை தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுக்கு உட்படுத்தியது. பேரழிவின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் உதவுகிறது.

7. அண்மையில், இந்தியாவில் நிலையான திட்டங்களை மேற்கொள்வதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக்கடனாகப் பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் எது?

அ. ஊரக மின்மயமாக்கல் கழகம் (REC)

ஆ. கனரக பொறியியல் கழகம் (HEC)

இ. பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)

ஈ. HMT லிட் (HMTL)

  • இந்தியாவில் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய பொதுத்துறை நிறுவனமும், மத்திய மின்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமுமான REC லிட், இந்தியாவில் தகுதியான பசுமை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக் கடனாகப் பெறுகிறது.
  • இத்தாலிய ஏற்றுமதி கடன் நிறுவனமா SACEஇடமிருந்து இந்தக் கடன்தொகை பெறப்படுகிறது. இந்திய அரசின் ஒரு நிறுவனத்திற்கும் SACE நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் முதல் கடன் ஒத்துழைப்பு இதுவாகும். இந்தக் கடன் வசதி REC நிறுவனத்திற்கான உத்திசார் முதலீடாக அமையும். இது இந்நிறுவனத்தின் பசுமை நிதி கட்டமைப்புடன் இணைந்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. அண்மையில், ஷென்சோ-18 விண்கலத்தை அதன் விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக செலுத்திய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • லாங் மார்ச் 2-F ஏவுகலத்தில் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து மூன்று பேர்கொண்ட குழுவை சீனா தனது டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. ஷென்சோ-18 குழுவினர் சுமார் ஆறு மாதங்கள் அந்நிலையத்தில் தங்கி, அறிவியல் சோதனைகளை நடத்தி, விண்வெளி குப்பைகள் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவி, அறிவியல் கல்வியை மேம்படுத்துவார்கள். 2030ஆம் ஆண்டளவில் நிலவில் விண்வெளி வீரர்களை நிலை நிறுத்துவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது; அது நிறைவேறினால் சோவியத் யூனியன் (USSR) மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு அவ்வாறு நிகழ்த்தும் மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

9. அண்மையில், “Gender report – Technology on her terms” என்ற தலைப்பிலான 2024 – உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNDP

ஆ. IMF

இ. UNESCO

ஈ. UNICEF

  • ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (UNESCO) 2024 – உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையை “Gender report – Technology on her terms” என்ற தலைப்பில் பிரான்சில் வெளியிட்டது. பெண்களின் கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. கென்யாவில் உள்ள M-shule தளத்தை மேற்கோள் காட்டி, பெண்களுக்கான கல்வித்தடைகளை கையாளுவதற்கான ICTஇன் திறனை இது எடுத்துக்காட்டுகிறது.

10. அண்மையில், எந்த விண்வெளி அமைப்பு, நியூசிலாந்தில் இருந்து அதன் ‘Advanced Composite Solar Sail System’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது?

அ. JAXA

ஆ. NASA

இ. ISRO

ஈ. CNSA

  • அண்மையில் NASA நியூசிலாந்தில் இருந்து தனது ‘Advanced Composite Solar Sail System’ என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இவ்விண்கலம் சூரிய ஆற்றலை தன் உந்துதலுக்காகப் பயன்படுத்துகிறது; பூமிக்கு மேலே 1,000 கிமீ தொலைவில் 80 சதுர.மீ அளவுக்கு இது சுற்றிவருகிறது. இதன் முக்கிய நோக்கங்களில் சூரிய அழுத்தத்தின் செயல்திறன் மற்றும் திசையமைவு மாறுவீதத்தை வெளிப்படுத்துதல் அடங்கும்.

11. அண்மையில், கொரியாவின் சாங்வோனில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட் போட்டியில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ. ஈஷா சிங்

ஆ. அவனி லேகரா

இ. மோனா அகர்வால்

ஈ. சிப்ட் கௌர் ஷர்மா

  • கொரியாவின் சாங்வோனில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட் போட்டியில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய பாரா-ஷூட் வீராங்கனை மோனா அகர்வால் தங்கமும், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ராணுவ வீரர் அமீர் அகமது பட் வெள்ளியும் வென்றனர். 37 வயதான மோனா அகர்வால், R2-10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 தங்கப்பதக்கத்தை 250.8 மதிப்பெண்களுடன் வென்றார்; இது இந்த ஆண்டில் அவர் வெல்லும் இரண்டாவது உலகக்கோப்பை பட்டமாகும். சுலோவாக்கியாவின் வெரோனிகா வடோவிகோவா வெள்ளிப்பதக்கமும், சுவீடன் வீராங்கனை அன்னா பென்சன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

12. நீலகிரி வரையாடு திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. தெலங்கானா

  • பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கமானது (IUCN) 3-நாள் ஒத்திசைக்கப்பட்ட நீலகிரி வரையாடு எண்ணிக்கை கணக்கெடுப்பில் மூன்றாந்தரப்பு பார்வையாளராக இணையவுள்ளது. ஏப்.29 அன்று தொடங்கும் இக்கணக்கெடுப்பு, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகும். கூட்டுப் பணியாளர்களில் WWF-இந்தியா, WII மற்றும் AIWC ஆகியவை அடங்கும். தமிழ்நாடு அரசால் தொடக்கப்பட்ட நீலகிரி வரையாடு திட்டம், 2022-2027 வரை, அவ்வுயிரினங்களைப் பாதுகாப்பதையும் அதன் உயிர்வாழ்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2024 மே.01இல் கிராம சபைக்கூட்டம் நடைபெறாது: மாண்புமிகு தமிழ்நாடு அரசு.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மே.01 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறாது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், உள்ளாட்சிகளின் வழக்கமான கூட்டங்கள், செயல்பாடுகளுக்கு எத்தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு ஆறுமுறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு நாள் (ஜன.26), உலக தண்ணீர் நாள் (மார்ச்.22 ), உழைப்பாளர் நாள் (மே.01), விடுதலை நாள் (ஆக.15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்.02), உள்ளாட்சிகள் நாள் (நவ.01) ஆகிய நாள்களில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஊராட்சிகளின் வளர்ச்சிப்பணிகள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும்.

2. தென்னிந்திய நீர்த்தேக்கங்களில் நீரிருப்பு: பத்து ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு.

நாட்டின் பல்வேறு மண்டலங்களில் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரிருப்பு குறித்த விவரங்களை மத்திய நீராணையம் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களின்படி தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில், மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் 42 நீர்த்தேக்கங்கள் உள்ளன. அந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 53.334 பில்லியன் கன மீட்டர்களாகும்.

தற்போது இந்நீர்த்தேக்கங்களில் நீரிருப்பு 8.865 பில்லியன் கனமீட்டர்களாக உள்ளது. இது இந்நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் 17 சதவீதமாகும். இந்த நீர் இருப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 29 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளின் இதே காலகட்டத்தில், இந்நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் நீர் இருப்பு சராசரியாக 23 சதவீதம் இருந்தது. கடந்த ஆண்டு மற்றும் 10 ஆண்டுகால சராசரியுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு இந்த நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மிகவும் குறைந்துள்ளது. இது தென்மண்டலத்தில் குடிநீர் பற்றாக்குறை, பாசனம், குடிநீர் விநியோகம், நீர்மின்னுற்பத்தி ஆகியவற்றுக்கான சவால்கள் மோசமடையும் நிலையை சுட்டிக்காட்டுகிறது.

3. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டின் நேத்ரா குமணன் தகுதி.

இந்திய படகோட்டும் வீராங்கனை நேத்ரா குமணன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். ஏற்கெனவே, விஷ்ணு சரவணன் அந்தப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், தற்போது இந்தியாவுக்கு அதில் 2ஆவது இடம் கிடைத்துள்ளது.

4. தமிழ்நாட்டில் 1000 இடங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்.

தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்கும் மையங்களை அமைக்க பொதுச் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக உப்பு, சர்க்கரை கரைசலான ORS கரைசலை வழங்க, ‘Rehydration Points’ என்னும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

5. காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி தியாகராயர்: முதலமைச்சர் புகழாரம்.

சர் பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாளையொட்டி, காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி தியாகராயர் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!