TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 26th June 2024

1. 2024 – பன்னாட்டு ஒலிம்பிக் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Together, For a Peaceful World

. Let’s Move and Celebrate

இ. Together for a better world

ஈ. Moving Forward: United by Emotion

  • 1894ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஜூன்.23ஆம் தேதி உலகம் முழுவதும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. டாக்டர் ஜோசப் க்ரஸ்ஸால் கடந்த 1947ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட இந்த நாள் முதல் முறையாக 1948ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. “Let’s Move and Celebrate” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் 2024 ஜூலை.26 முதல் ஆகஸ்ட்.11 வரை நடைபெறவுள்ளன.

2. அண்மையில், 16ஆவது ஆந்திர பிரதேச சட்டப்பேரவையின் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. அசோக் பெண்டாலம்

ஆ. C அய்யண்ணபத்ருடு

இ. கொய்யே மோஷனு ராஜு

ஈ. ஜெகன் மோகன் ரெட்டி

  • தெலுங்கு தேசம் கட்சியின் நர்சிப்பட்டினம் MLA, C அய்யண்ணபத்ருடு, 16ஆவது ஆந்திர பிரதேச சட்டப்பேரவையின் சபாநாயகராக 2024 ஜூன்.22 அன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவைத்தலைவர் பதவிக்கு வேறு எந்த MLAஉம் வேட்புமனுத் தாக்கல்செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.

3. கேரள மாநிலத்தின் எந்த நகரம் அண்மையில் இந்திய நாட்டின் முதல் UNESCO ‘இலக்கிய நகரம்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது?

அ. திருவனந்தபுரம்

ஆ. கோழிக்கோடு

இ. கொல்லம்

ஈ. பத்தனம்திட்டா

  • கேரள மாநிலத்தின் கோழிக்கோடு UNESCO படைப்பாற்றல் நகரங்கள் வலையமைப்பில் இணைந்து இந்தியாவின் முதல் UNESCO ‘இலக்கிய நகரமாக’ ஆனது. 2004இல் நிறுவப்பட்ட UCCN, இலக்கியம், கைவினைப்பொருட்கள் மற்றும் இசைபோன்ற துறைகளில் உலகளவில் கிட்டத்தட்ட 300 நகரங்களை உள்ளடக்கி, படைப்பாற்றல்மூலம் நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. UCCNஇல் உள்ள மற்ற இந்திய நகரங்களில் ஸ்ரீநகர் மற்றும் ஜெய்ப்பூர் (கைவினை மற்றும் நாட்டுப்புற கலைகள்), மும்பை (திரைப்படம்), சென்னை, குவாலியர் மற்றும் வாரணாசி (இசை) மற்றும் ஹைதராபாத் (அறுசுவை உணவியல்) ஆகியவை அடங்கும்.

4. இ-சம்ரிதி தளத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. விவசாய கடன் வழங்க வேண்டும்

ஆ. குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) பருப்புகளை

கொள்முதல் செய்து கொள்வதற்கு விவசாயிகள் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கான தளம்

இ. பயிர்க்காப்பீடு வழங்குதல்

ஈ. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல்

  • குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) உறுதிசெய்யப்பட்ட பருப்பு கொள்முதலுக்காக இ-சம்ரிதி தளத்தில் பதிவு செய்ய உழவர்களை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய வேளாண் அமைச்சர் வலியுறுத்தினார். NAFED மற்றும் NCCFஆல் தொடங்கப்பட்ட இந்தத்தளம் நேரடிப்பதிவு அல்லது PACS மற்றும் FPOமூலம் பதிவுசெய்துகொள்ள அனுமதிக்கிறது. NAFEDமூலம் நேரடியாக உழவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவுவைக்கப்படுகிறது. NAFED, 1958இல் நிறுவப்பட்ட ஒரு தலைமைச் சந்தைப்படுத்தல் கூட்டுறவு நிறுவனமாகும். இது வேளாண் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது.

5. ‘Dendrophthoe longensis’ என்றால் என்ன?

அ. பூஞ்சை நோய்

ஆ. அதிவேக தாக்குதல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்

இ. புதிய வகை தாவரம்

ஈ. விண்வெளி ஆய்வூர்தி

  • இந்திய தாவரவியலாளர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 2 புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நிலமேல் தண்டுடைய-ஒட்டுண்ணி தாவரமான, ‘Dendrophthoe longensis’, அந்தமானின் பசுமையான காடுகளில் உள்ள மாமரங்களில் காணப்பட்டது. ஒரு சிறிய, வெள்ளை மற்றும் ஊதாநிற புள்ளிகள்கொண்ட ஒரு மூலிகைத் தாவரமான ‘Petrocosmea arunachalense’, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவில் அறியப்பட்ட இரண்டாவது ‘Petrocosmea’ இனமாகும்.

6. சிந்து நதிநீர் ஒப்பந்தம் (IWT) என்பது எந்த இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தமாகும்?

அ. இந்தியா மற்றும் சீனா

ஆ. இந்தியா மற்றும் பாகிஸ்தான்

இ. இந்தியா மற்றும் நேபாளம்

ஈ. இந்தியா மற்றும் பூடான்

  • இந்தியாவுடனான 1960ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் தூதுக்குழு சமீபத்தில் ஜம்மு வந்தது. அப்போதைய இந்தியப்பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சிந்து நதியின் நீர்விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது. இந்தியா பியாஸ், ராவி மற்றும் சட்லஜ் ஆறுகளிலிருந்தும் பாகிஸ்தான் செனாப், சிந்து மற்றும் ஜீலம் ஆறுகளிலிருந்தும் தண்ணீரைப்பெற்றது. நிரந்தர சிந்து ஆணையம் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிடுகிறது.

7. ஆண்டுதோறும், ஐநா பொதுச்சேவை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.21

ஆ. ஜூன்.22

இ. ஜூன்.23

ஈ. ஜூன்.24

  • பொதுச் சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றவும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாள் ஆண்டுதோறும் ஜூன்.23ஆம் தேதி அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.
  • சமூகங்கள் பொதுச்சேவையின் மதிப்பைக் கொண்டாடுவது, வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பை வெளிப்படுத்துவது, அரசு ஊழியர்களின் பணியைக் கௌரவிப்பது மற்றும் பொதுத்துறையில் பணியாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பது ஆகியவற்றை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

8. UNCTAD அறிக்கையின்படி, 2023இல் அந்நிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில், இந்தியா, எந்த நிலைக்குத் தள்ளப்பட்டது?

அ. 9ஆவது

ஆ. 10ஆவது

இ. 15ஆவது

ஈ. 17ஆவது

  • UNCTAD அறிக்கையின்படி, இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு (FDI) கடந்த 2023இல் 43% குறைந்துள்ளது. 2022இல் இருந்த $49 பில்லியனில் இருந்து $28 பில்லியனாகக் குறைந்துள்ளது. உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு 2 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியா, சீனா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ளது. இந்தியாவின் உலகளாவிய FDI பெறுநர் தரவரிசையானது 2023இல் இருந்த 8ஆவது இடத்திலிருந்து 15ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆனால் பசும்புலம் திட்டங்கள் மற்றும் பன்னாட்டு திட்ட நிதி ஒப்பந்தங்களை ஈர்ப்பதில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது.

9. உலக கைவினைக் கழகத்தால், ‘உலக கைவினை நகரம்’ என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்திய நகரம் எது?

அ. ஸ்ரீநகர்

ஆ. கொச்சி

இ. அயோத்தி

ஈ. கொல்கத்தா

  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் மிகப்பெரிய நகரமான ஸ்ரீநகர், உலக கைவினைக் கழகத்தால், ‘உலக கைவினை நகரம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்ட இந்த அங்கீகாரம், நகரின் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கைவினைஞர்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த விருது ஸ்ரீநகரின் தனித்துவமான பாரம்பரிய கைவினைப் பொருட்களைப் பாதுகாப்பதையும், அவர்களின் உலகளாவிய போற்றுதலையும் கலாச்சார செழுமையையும் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது.

10. அண்மையில், உலகளாவிய உள்நாட்டு விமானச்சந்தையில், இந்தியா, எந்த இடத்தைப் பிடித்துள்ளது?

அ. முதலாவது

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது

ஈ. நான்காவது

  • பத்தாண்டுகளுக்கு முன்பு ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா தற்போது பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் முன்னேறி உலகின் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டுச்சந்தையாக இந்தியாவின் விமானப்போக்குவரத்துத்துறை உயர்ந்துள்ளது. விமான இருக்கை திறனில் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.9% என்ற அளவில் முன்னணியில் உள்ளது. குறைந்த விலை விமானங்கள் தற்போது 78.4 சதவீத சந்தைப்பங்குடன் ஆதிக்கம் செலுத்துகின்றன; அதில் இண்டிகோ 62%ஐக்கொண்டுள்ளது.

11. அண்மையில், WTT (உலக டேபிள் டென்னிஸ்) போட்டியாளர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் / வீராங்கனை யார்?

அ. மம்தா மேத்தா

ஆ. ஸ்ரீஜா அகுலா

இ. நேஹா அகர்வால்

ஈ. மனிகா பத்ரா

  • ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா அகுலா, WTT போட்டியாளர் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்; மேலும் WTT போட்டியாளர் லாகோஸ்-2024இல் இரட்டையர் பட்டத்தையும் வென்றார். ஜூன்.19 முதல் 23 வரை நைஜீரியாவின் லாகோஸில் நடைபெற்ற இந்நிகழ்வில், $80,000 மதிப்பிலான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. ஸ்ரீஜா அகுலா, ஒற்றையர் இறுதிப்போட்டியில் சீனாவின் யிஜி டிங்கை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

12. நிலக்கரி அமைச்சகமானது அண்மையில் எந்த மாநிலத்தில் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கத்திற்கான (UCG) இந்தியாவின் முதல் சோதனைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது?

அ. பீகார்

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. மத்திய பிரதேசம்

  • இந்தியாவின் நிலக்கரி அமைச்சகம் ஜார்கண்டின் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கஸ்தா நிலக்கரித் தொகுதியில் நாட்டின் முதல் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கத் திட்டத்தைத் தொடக்கியது. ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிட் (ECL) தலைமையிலான இம்முயற்சி நிலக்கரியை மீத்தேன், ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாற்ற முயற்சி செய்கிறது. இந்த வாயுக்கள் செயற்கை இயற்கை எரிவாயு உற்பத்தி, எரிபொருள் மற்றும் உரத்தொகுப்பு மற்றும் வெடிபொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பரந்த தொழில்துறை பயன்பாடுகளைக்கொண்டுள்ளன. இது இந்தியாவின் நிலக்கரிசார் தொழிற்துறையில் நிலையான பயன்பாடுகளுடன் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகள்: பூமிக்குக் கொண்டு வந்தது சீன விண்கலம்.

நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துக்கொண்டு சீனாவின் ‘சாங்கே-6’ விண்கலத்தின் தரை இறங்கி பகுதி பூமிக்குத் திரும்பிவந்தது. நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து பாறைகள் உள்ளிட்ட மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

2. செம்மொழிப் பூங்காவில் உணவுத்திருவிழா.

உலக அகதிகள் நாளை முன்னிட்டு, ஐநா அவையின் அகதிகளுக்கான உயராணையத்தின் சார்பில், “ஊரும் உணவும்” என்னும் உணவுத்திருவிழா சென்னையில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்காவில் ஜூலை 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. நடப்பாண்டு, ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ என்னும் கருப்பொருளில் இத்திருவிழா நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!