TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 25th October 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அனுபவ்’ வலைத்தளத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர் & ஓய்வூதியங்கள் அமைச்சகம் 🗹

ஆ. நிதி அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்

  • மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை சார்பில் புதுதில்லியில் ‘அனுபவ்’ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2023ஆம் ஆண்டிற்கான விருதாளர்களைக் கௌரவிக்கும் வகையில் மத்திய பணியாளர், பொது மக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விருதுகளை வழங்கினார். பிரதமர் ஆணையின் பேரில் 2015 மார்ச் மாதம் ‘அனுபவ்’ வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஓய்வுபெறும் / ஓய்வுபெற்ற ஊழியர்கள் தாங்கள் செய்த பாராட்டத்தக்க பணிகளைச் சமர்ப்பிக்கவும் காட்சிப்படுத்தவும், அரசாங்கத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் ஓர் அமைப்பை வழங்குகிறது.

2. மத்திய ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி பிராண்டின் பெயர் என்ன?

அ. கஸ்தூரி பருத்தி பாரதம் 🗹

ஆ. கிரியா பருத்தி பாரதம்

இ. டெக்ஸோ பருத்தி பாரதம்

ஈ. நமோ பருத்தி பாரதம்

  • மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு & பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கஸ்தூரி காட்டன் பாரத் https://kasturicotton.texprocil.org என்ற இணையதளத்தை தொடக்கிவைத்தார். ‘கஸ்தூரி காட்டன் பாரத்’ பிராண்டை உற்பத்தி செய்ய பருத்தியரைப்பாளர்களுக்கான பதிவு செயல்முறை மற்றும் பிராண்டட் இந்திய பருத்தியை தனித்துவமாக்கும் அதன் செயல்முறைகளை முன்னிலைப்படுத்துகிறது. இந்த முன்முயற்சிகள் குறித்த தேவையான தகவல்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு ஒரு டிஜிட்டல் தளத்தையும் இந்த இணையதளம் வழங்குகிறது. ‘கஸ்தூரி காட்டன் பாரத்’ என்பது ஜவுளி அமைச்சகம், இந்திய பருத்திக் கழகம், வர்த்தக அமைப்புகள் மற்றும் தொழிற்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

3. ‘மகிளா சாரதி’ என்ற திட்டத்தைத் தொடக்கிய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. பீகார்

ஆ. உத்தரப்பிரதேசம் 🗹

இ. கேரளா

ஈ. கர்நாடகா

  • உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் சமீபத்தில், “மகிளா சாரதி” திட்டத்தைத் தொடக்கிவைத்தார். இந்தத்திட்டத்தின்கீழ், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 51 பேருந்துகள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைக் கொண்டு இயக்கப்படும்.

4. ‘Paintbrush Swift’ என்பது எந்த அரிய உயிரினத்தின் பெயராகும்?

அ. பாம்பு

ஆ. பட்டாம்பூச்சி 🗹

இ. தவளை

ஈ. தட்டான்

  • மேற்கு இமயமலையில் உள்ள அரிய வகை, ‘பெயிண்ட் பிரஷ் ஸ்விஃப்ட் பட்டாம்பூச்சி’, இமாச்சலப்பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் முதன்முறையாக நிழற்படம் எடுக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம் தோராயமாக 430 வண்ணத்துப்பூச்சி இனங்களுக்குத் தாயகமாக உள்ளது; அது இந்தியாவில் காணப்படும் மொத்த பட்டாம்பூச்சி இனங்களில் தோராயமாக 25%த்தை உள்ளடக்கியதாகும்.

5. திட்டம் 15Bஇன் கீழ் தயாரிக்கப்பட்ட மூன்றாவது கப்பலான INS இம்பாலை வழங்கிய கப்பல் கட்டும் நிறுவனம் எது?

அ. மசாகன் கப்பல் கட்டுநர்கள் 🗹

ஆ. கொச்சி கப்பல் கட்டுந்தளம்

இ. கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள்

ஈ. இந்துஸ்தான் கப்பல் கட்டுந்தளம்

  • அண்மையில், மசாகன் கப்பல் கட்டுநர்கள் நிறுவனமானது மறைந்திருந்து ஏவுகணைகளை அழித்தொழிக்கும் INS இம்பால் கப்பலை இந்திய கடற்படைக்கு வழங்கியது. இது திட்டம் 15Bஇன் கீழ் தயாரிக்கப்பட்ட மூன்றாவது கப்பல் ஆகும். திட்டமிட்டதைவிட நான்கு மாதங்களுக்கு முன்பே இக்கப்பல் கட்டி முடிக்கப்பட்டது. பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கான தங்குமிட வசதிகளுடன் இயக்கப்பட்ட முதல் கடற்படை போர்க்கப்பல் ஐஎன்எஸ் இம்பால் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உத்பவ் திட்டத்துடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம் 🗹

ஆ. MSME அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், இந்திய இராணுவ பாரம்பரிய விழாவைத் தொடக்கி வைத்தபோது ‘உத்பவ்’ என்ற திட்டத்தையும் தொடக்கி வைத்தார். இந்திய ராணுவம் மற்றும் ஐக்கிய சேவை நிறுவனத்துக்கு இடையிலான ஒத்துழைப்பான ‘உத்பவ்’ திட்டம், இந்தியாவின் பண்டைய இராணுவ சிந்தனைகளின் வேர்களை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு முயற்சியாகும்.
  • ‘உத்பவ்’ என்றாள் ‘தோற்றம்’ அல்லது ‘தொடக்கம்’ எனப்பொருள்படும். பண்டைய அறிவைச் சமகால இராணுவ நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதும், நவீன பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான மற்றும் முழுமையான அணுகுமுறையை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

7. 2023 அக்டோபரில், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பாக ‘அமைதி உச்சிமாநாட்டை’ நடத்திய நாடு எது?

அ. துருக்கி

ஆ. கிரீஸ்

இ. எகிப்து 🗹

ஈ. பிரான்ஸ்

  • எகிப்து நடத்திய கெய்ரோ உச்சிமாநாட்டில், அரபு நாட்டுத் தலைவர்கள் காசா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்; அவ்வேளையில் ஐரோப்பிய தலைவர்கள் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். இஸ்ரேல் மற்றும் மூத்த அமெரிக்க அதிகாரிகள் அங்கு இல்லாததால், நடந்துவரும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்த மோதலின் விளைவாக 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் காசா பகுதியில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ரபா எல்லையைக் கடக்கும் பகுதி’ என்பது எவ்விரு இடங்களுக்கு இடையேயான ஒரு பிரத்யேக கடக்கும் இடம் ஆகும்?

அ. இஸ்ரேல் மற்றும் காசா பகுதி

. எகிப்து மற்றும் காசா பகுதி 🗹

இ. இஸ்ரேல் மற்றும் ஜோர்டான்

ஈ. இஸ்ரேல் மற்றும் லெபனான்

  • அரபுமொழியில் ‘மாபர் ரபா’ என்றழைக்கப்படும் ‘ரபா எல்லையைக் கடக்கும் பகுதி’, எகிப்து மற்றும் காசா பகுதிக்கு இடையேயான ஒரு பிரத்யேக கடக்கும் இடமாக செயல்படுகிறது. தற்போது இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படாத ஒரே முனை இதுவாகும். இதனூடாக பொதுமக்கள் தரைவழியாக காசாவிற்குள் நுழையவும் வெளியேறவும் முடியும்.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘புனித போர்பிரியஸ் தேவாலயம்’ என்பது கீழ்காணும் எந்த நகரத்தில் உள்ள பழமைவாத தேவாலயமாகும்?

அ. காசா 🗹

ஆ. ஏருசலேம்

இ. ரோம்

ஈ. வாடிகன் நகரம்

  • ஏருசலேமின் கிரேக்க பழமைவாத திருச்சபையின் ஒரு பகுதியான காசாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித போர்பிரியஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்தை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக அத்தேவாலயம் குறிப்பிடத்தக்க சேதத்தைச் சந்தித்தது. இது 1600 ஆண்டுகளுக்கு முன்பு புனிதப்படுத்தப்பட்ட ஒரு தேவாலயமாகும். இது ஐந்தாம் நூற்றாண்டில் பிறமத நகரமாக இருந்த காசாவை கிறிஸ்தவமயமாக்கியதற்காக அறியப்படுகிற புனித போர்பிரியஸின் பெயரால் வழங்கப்படுகிறது.

10. ‘சைலண்ட் ஷார்க்’ என்ற கூட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியை நடத்திய நாடுகள் எவை?

அ. ஜப்பான் மற்றும் தென் கொரியா

ஆ. அமெரிக்கா மற்றும் தென் கொரியா 🗹

இ. சீனா மற்றும் ரஷ்யா

ஈ. எகிப்து மற்றும் இஸ்ரேல்

  • தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து, கொரிய தீபகற்பத்தின் அருகே ஒரு கூட்டு வான்வழிப் பயிற்சியை நடத்தின; இது இம்மூன்று நாடுகளுக்கு இடையிலான முதல் கூட்டணியைக் குறிக்கிறது. வடகொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக அந்நாடுகளின் பதிலடி திறன்களை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. தென் கொரிய மற்றும் அமெரிக்க கடற்படைகள் ‘சைலண்ட் ஷார்க்’ எனப்படும் இந்த நீர்மூழ்கி எதிர்ப்புப் பயிற்சியை நிறைவுசெய்தன.

11. ‘சிந்தனை சுதந்திரத்திற்கான ஷகாரொவ் பரிசு’ வழங்குவது எது?

அ. ஐக்கிய நாடுகள் அவை

ஆ. ஐரோப்பிய ஒன்றியம் 🗹

இ. பன்னாட்டு மன்னிப்பு அவை

ஈ. பன்னாட்டு நீதிமன்றம்

  • ஈரானில் கலாசாரக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு சர்ச்சைக்குரிய முறையில் கடந்தாண்டு உயிரிழந்த பெண் மாஷா அமீனிக்கு, ஐரோப்பிய யூனியனின் உயரிய மனித உரிமைகள் விருதான ஷகாரொவ் பரிசு மரணத்துக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு, நிகராகுவாவில் மனித உரிமைகளுக்காகப் போராடிய வில்மா நெட் டே எஸ்கார்சியா, கத்தோலிக்க மதகுரு ரொனால்டோ இவாரெஸ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சோவியத் ரஷியாவின் மனித உரிமைப் போராளியான ஆண்ட்ரேய் ஷகாரொவின் நினைவாக இந்த விருது கடந்த 1988ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • 12. இந்தியக் கடற்படையானது கீழ்காணும் எந்த நகரத்தில், ‘பிரஸ்தான்-2023’ என்ற பயிற்சி நடத்தியது?

அ. விசாகப்பட்டினம்

ஆ. காக்கிநாடா 🗹

இ. பனாஜி

ஈ. காந்திநகர்

  • காக்கிநாடாவில் உள்ள கடலோர மேம்பாட்டுப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கிழக்குக் கடற்படைப் பிரிவின்கீழ், ஆந்திர பிரதேசத்தின் கடற்படைப் பொறுப்பதிகாரியால் ‘பிரஸ்தான்-2023’ என்ற பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை, எண்ணெய் இயக்குநர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் அரசு முகமைகள் உட்பட பல அமைப்புகள் பங்கேற்றன. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் எண்ணெய்க் கசிவுகள்போன்ற பல்வேறு சூழ்நிலைகளில், பாதுகாப்பு வழிமுறைகளின் செயல்திறனை சோதிக்கும் நோக்கோடு இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.

13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தோர்டோ கிராமம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. பீகார்

ஆ. குஜராத் 🗹

இ. அஸ்ஸாம்

ஈ. கோவா

  • குஜராத் மாநிலத்தில் உள்ள ‘தோர்டோ’ என்ற கிராமம், ஐக்கிய நாடுகள் அவையின் உலக சுற்றுலா அமைப்பின் “சிறந்த சுற்றுலா கிராமம்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது. பரந்து விரிந்த கட்ச் பெரும்பாலையில் அமைந்துள்ள, குஜராத்தின் தோர்டோ கிராமம், ஆண்டுதோறும் ‘ரான் உத்சவம்’ நடத்துவதற்காக பெயர்பெற்றதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘மாமன்னர்’ இராஜராஜனின் 1038ஆவது சதய விழா தொடக்கம்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ‘மாமன்னர்’ இராஜராஜசோழனின் 1038ஆம் ஆண்டு சதய விழா தொடங்கியது. கடந்த 985ஆம் ஆண்டு முதல் 1014ஆம் ஆண்டு வரை அவர் ஆட்சி புரிந்தார். சிவபாத சேகரன், திருமுறைகண்ட சோழன், ஜெகநாதன் என பல சிறப்புப் பெயர்களுடன் அவர் விளங்கினார். இத்திருக்கோயில் ஆன்மிகத்துக்கு மட்டுமல்லாமல், நமது கட்டடக்கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் நாகரிகத்தின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. நிகழாண்டு இந்த விழா அரசு விழாவாக தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிறது.

அன்றைய நாளில் மூவர் அருளிய திருமுறைகளை தமிழ் இலக்கியத்துடனும், பண்பாடுடனும், கலாசாரத்துடனும் வழிநடத்தியவர் இராஜராஜசோழன். சோழநாட்டை சோறுடைத்து எனக்கூறுவர். ‘சோறு’ என்பது அறிவுத்திறன் சார்ந்தது என்கிற பொருளை உள்ளடக்கியதாக இராஜராஜ சோழனின் ஆட்சி அமைந்திருந்தது.

2. பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: சென்னை முதலிடம்.

தேசிய அளவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. செர்பியா நாட்டின் போஸ்னியா-ஹெர்சகோவினாவில் உள்ள பஞ்சா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக். இவர் ‘கூகுள்’ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக உள்ளார். செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘நம்பியோ’ என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார். இந்த நிறுவனத்தின்மூலம் அவர், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்புபற்றி ஆய்வு மேற்கொண்டார். பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் ஆய்வுநடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவை அண்மையில் அந்நிறுவனம் வெளியிட்டது. இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் இந்திய அளவில் சென்னை முதலிடத்தையும், உலகளவில் 127ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

3. பாகிஸ்தான்: ‘கோரி’ ஏவுகணை வெற்றிகர சோதனை.

தனது ‘கோரி’ ஏவுகணை மற்றும் அதனை ஏவும் சாதனங்களை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக ஏவி சோதித்தது. ஒலியைவிட வேகமாகவும் 1,500 கிமீ தொலைவு வரை பாய்ந்து செல்லக்கூடிய குறுகிய தொலைவு ஏவுகணையான ‘கோரி’, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்கொண்டது.

4. மருதுபாண்டியர்கள் நினைவுநாள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 222ஆம் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, முதல் போர் பிரகடனம் செய்து, விடுதலைப்போராட்டத்துக்கு வித்திட்ட மருதிருவர்கள் கடந்த 1801ஆம் ஆண்டு, அக்.24ஆம் தேதி ஆங்கிலேயர்களால் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களது நினைவுநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

5. ஆசிய பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்; தமிழ்நாட்டின் மாரியப்பனுக்கு வெள்ளி!

ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. ஆடவர் உயரம் தாண்டுதலில் கைலேஷ் குமார் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதே பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், இராம்சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். மேலும், வட்டு எறிதல் போட்டியில் தமிழ்நாட்டு வீரர் முத்துராஜா வெண்கலம் வென்றுள்ளார்.

6. எட்டயபுரத்தில் தமிழறிஞர் உமறுப்புலவர் பிறந்தநாள் விழா.

சீறாப்புராணம் காப்பியம் இயற்றிய தமிழறிஞர் அமுதகவி உமறுப்புலவரின் 381ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் எட்டயபுரத்தில் கொண்டாடப்பட்டது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin