TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th November 2023

1. முந்திரிக்குப் புவிசார் குறியீடு பெற்றுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கோவா 🗹

இ. கேரளா

ஈ. ஒடிசா

  • முந்திரிக்கான புவிசார் குறியீடு அண்மையில் கோவாவுக்கு வழங்கப்பட்டது. கோவாவில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி சார்ந்த தயாரிப்புகளை மட்டுமே, “கோவா முந்திரி” என்று பெயரிட முடியும் என்பதை இது உறுதிசெய்கிறது. இந்தப் புவிசார் குறியீடு கோவா முந்திரியின் நம்பகத்தன்மையை பாதுகாக்கிறது. இதன்மூலம் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொட்டைகளை, ‘கோவா முந்திரி’ எனக்கூறி விற்கப்படுவதை தடுக்கவியலும்.

2. கத்தாளை மீனை, ‘மாநில மீன்’ என அறிவித்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத் 🗹

இ. மகாராஷ்டிரா

ஈ. மேற்கு வங்காளம்

  • குஜராத் மாநில அரசு, உலகளாவிய மீன்வள மாநாட்டின்போது குஜராத் மாநிலத்தின், ‘மாநில மீனாக’ கத்தாளை மீன் இனத்தை அறிவித்தது. கரும்புள்ளிகள் கொண்ட கத்தாளை மீன், அழகுசாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படும் நீந்தற்பைக்கு பேர்பெற்றதாகும். சுவை மிகுந்த மீனாகவும் உள்ள இது மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஆண்டு மீன் ஏற்றுமதி `5,000 கோடியாகும்; இது இந்தியாவின் மொத்த மீன் ஏற்றுமதியில் 17% ஆகும்.

3. நோவா-டிகிங் (Noa-Dihing) இசைத்தவளை என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட ஓர் உயிரினமாகும்?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம் 🗹

இ. மணிப்பூர்

ஈ. மேகாலயா

  • நோவா-டிகிங் இசைத்தவளை என்பது அருணாச்சல பிரதேச மாநிலத்தின் நம்தாபா-கம்லாங் நிலப்பரப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உயிரினமாகும். நோவா-டிகிங் ஆற்றின் நினைவாக அவ்வுயிரினத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 380 கிமீ நீளமுள்ள நோவா டிகிங் அல்லது புர்கி திகிங் என்பது பிரம்மபுத்திரா ஆற்றின் ஒரு மிகநீளமான துணையாறாகும்.

4. ‘SATHEE’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?

அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம் 🗹

இ. MSME அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • SATHEE (Self-Assessment Test and Help for Entrance Exams) என்ற இணையவழி பயிற்சித்தளத்தை மத்திய கல்வியமைச்சகமும் IIT-கான்பூர் நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளன. தேர்வுத் தயாரிப்புக்கெனப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இணையதளத்தை போட்டித் தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கல்வி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘SATHEE’ என்பது மாணவர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கிடைக்கப்பெறும் ஒரு திறந்தநிலை கற்றல் தளமாகும்.

5. ‘வஜ்ர பிரஹார்’ என்பது இந்தியாவிற்கும் கீழ்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டுப்பயிற்சியாகும்?

அ. அமெரிக்கா 🗹

ஆ. மியான்மர்

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

  • 14ஆவது இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப்படை பயிற்சி ‘வஜ்ர பிரஹார்-2023’ மேகாலயா மாநிலம் உம்ரோயில் தொடங்கியது. அமெரிக்க படைப்பிரிவுக்கு, அமெரிக்க சிறப்புப் படைகளின் 1ஆவது சிறப்புப் படைக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்திய இராணுவப் பிரிவுக்கு கிழக்குக் கமாண்டைச் சேர்ந்த சிறப்புப் படை வீரர்கள் தலைமை தாங்குகின்றனர்.
  • வஜ்ரா பிரஹார் பயிற்சி என்பது இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவ சிறப்புப் படைகள் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சியாகும். இதன் முதல் பயிற்சி இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

6. கொசு தொடர்பான பிரச்னைகளை சமாளிப்பதற்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மீன் எது?

அ. கொசு மீன் 🗹

ஆ. வௌவால் மீன்

இ. தோப்பா மீன்

ஈ. கெளுத்தி மீன்

  • கடந்த சில மாதங்களாக, ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், உள்ளூர் மக்களால் புகாரளிக்கப்பட்ட கொசுக்கள் தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்கும் நடவடிக்கையாக, உள்நாட்டு நீராதாரங்களில் கொசு மீன்களை விட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில், சில மாதங்கட்கு முன்பு சுமார் 20 இலட்சம் கொசு மீன்கள் விடப்பட்ட நிலையில், கூடுதலாக ஆறு இலட்சம் கொசு மீன்களை விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

7. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஒரு சுகாதார உட்கட்டமைப்பில் 1000 பேருக்கு எத்தனை படுக்கைகள் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது?

அ. 1

ஆ. 3 🗹

இ. 5

ஈ. 10

  • உலகளாவிய சுகாதார அறிக்கையின்படி, இந்தியா தற்போது 1.42 பில்லியன் மக்கள்தொகைக்கு போதுமான அளவு சேவை செய்ய சுகாதார உட்கட்டமைப்பு இல்லாமல் போராடுகிறது. இந்தியாவில் தற்போது 2 பில்லியன் சதுர அடி சுகாதார உட்கட்டமைப்புதான் உள்ளது. உலக சுகாதார அமைப்பு 1000 பேருக்கு 3 படுக்கைகள் என்ற விகிதத்தை அறிவுறுத்துகிறது. இந்தப் பரிந்துரைக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்ய இந்தியாவிற்குக் கூடுதலாக 2.4 மில்லியன் படுக்கைகள் தேவையாகும்.

8. அதிவிரைவான கண்டுபிடிப்பு மற்றும் துளிர் நிறுவல்கள் விரிவாக்கம் Rapid Innovation and Startup Expansion (RISE) என்ற முடுக்கி திட்டத்துடன் தொடர்புடையது எது?

அ. DIIIT

ஆ. அடல் புத்தாக்க இயக்கம் 🗹

இ. SEBI

ஈ. NASSCOM

  • NITI ஆயோக்கின் ஒருபகுதியான அடல் புத்தாக்க இயக்கம், புது தில்லியில் அதிவிரைவான கண்டுபிடிப்பு மற்றும் துளிர் நிறுவல்கள் விரிவாக்கம் (RISE) என்ற முடுக்கி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முன்னெடுப்பானது, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்த்தெடுக்கும். சுற்றுநிலை பொருளாதார தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்தும் துளிர் நிறுவல்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் நோக்கோடு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

9. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் செல்லும் முதல் கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணையுடன் (NASM-SR) தொடர்புடைய அமைப்பு எது?

அ. HAL

ஆ. DRDO 🗹

இ. ISRO

ஈ. L&T

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (DRDO) இணைந்து, இந்திய கடற்படையானது, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறுகிய தூரம் செல்லும் முதல் கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணையை (Naval Anti-Ship Missile-Short Range) வெற்றிகரமாக சோதித்தது. விசாகப்பட்டினத்தில் உள்ள சீகிங் 42பி ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்ட அந்தச்சோதனைகள், பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பங்கஜ் அத்வானியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டேபிள் டென்னிஸ்

ஆ. ஸ்குவாஷ்

இ. பில்லியர்ட்ஸ் 🗹

ஈ. தடகள

  • இறுதிப்போட்டியில் சகநாட்டவரான சௌரவ் கோத்தாரியை வீழ்த்தி இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 26ஆவது முறையாக IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 38 வயதான அவர், சமீபத்தில் 1000 புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் சௌரவ் கோத்தாரியை தோற்கடித்தார். அவர் தனது முந்தைய பட்டங்களை 2005, 2008, 2014 மற்றும் 2018இல் வென்றிருந்தார்.

11. உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?

அ. நீதிபதி பாத்திமா பீவி 🗹

ஆ. நீதிபதி சுஜாதா மனோகர்

இ. நீதிபதி ரூமா பால்

ஈ. நீதிபதி கியான் சுதா மிஸ்ரா

  • உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான நீதிபதி பாத்திமா பீவி அண்மையில் தனது 96ஆவது வயதில் காலமானார். இந்திய நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் இசுலாமிய பெண்ணும் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் நீதிபதி பாத்திமா பீவி ஆவார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 25-11-2023: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஆரஞ்சு நிற மின் விளக்குகளால் சென்னை ரிப்பன் மாளிகை மிளிரவைக்கப்பட்டது.

2. விண்ணில் ‘எல்-1’ பகுதியை நெருங்கிய ஆதித்யா விண்கலம்.

சூரியனின் புறவெளியை ஆய்வுசெய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்.02 அன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. அந்த விண்கலம் ‘எல்-1’ பகுதிக்குள் நுழைவது வரும் 2024 ஜனவரி.07ஆம் தேதியன்று நிறைவடையும்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஒலி எழுப்பும் ஏவுகணை ஏவப்பட்டதன் 60ஆம் ஆண்டு நினைவு விழா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

‘எல்-1’ பகுதி: பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (எல்-1)’ என்ற பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான பகுதியில் ஈர்ப்புவிசை சமமாக இருக்கும். சுமார் 1475 கிலோ எடைகொண்ட ஆதித்யா விண்கலம் 125 நாள்கள் பயணத்துக்கு பின்னர், இந்த எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச்சூழல், கதிர்வீச்சு, காந்தப்புயல் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகளை விண்கலம் மேற்கொள்ளும். இதற்காக தொலைநோக்கி, பிளாஸ்மா அனலைசர் (பகுப்பாய்வு கருவி), எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் (ஊடுகதிர் நிறமாலைமானி) உள்ளிட்ட 7 விதமான ஆய்வுக்கருவிகள் ஆதித்யா விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன.

3. திட்டக்குடியில் `33 கோடியில் கால்நடை தீவன ஆலை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் (MT) உற்பத்தித் திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. NABARD திட்டத்தின் கடனுதவியுடன் `33 கோடியில் தீவன ஆலை நிறுவப்படவுள்ளது.

4. “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டம்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளில், “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற முன்னெடுப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைப் பொருத்தவரை பள்ளிகளில் அனைத்துப் பகுதிகளையும் சுற்றுச்சூழலை பசுமையாக வைப்பதே நோக்கமாகும்.

5. தமிழ்நாட்டில் 7,000 மெகாவாட் (MW) சூரியசக்தி மின்னுற்பத்தி.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தித் திறன் 7,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 300 நாள்களுக்கு மேலாக மின்சாரம் கிடைக்கும் சூழல் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிக திறனில் அமைக்கப்பட்ட சூரியசக்தி மின் நிலையங்கள்மூலம் உற்பத்தித்திறன் 6,649 மெகாவாட்டாகவும், மேற்கூரைமூலம் மின் உற்பத்தித் திறன் 449 மெகாவாட்டாகவும், விவசாய நிலங்கள்மூலம் 65.86 மெகாவாட் ஆகவும் என ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 7,164.59 மெகாவாட்டாக உள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு மாதங்களில் 263 மெகாவாட் அளவிலான அதிகத் திறன் கொண்ட சூரியமின்சக்தி நிலையங்கள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன. நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனில் குஜராத் மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

IMPORTANT LINKS

TNPSC Current Affairs

https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/

Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test

https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb

Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO

https://wp.me/p7JanY-ag8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!