Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th March 2024
1. அண்மையில், மக்களாட்சிக்கான மூன்றாவது உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
அ. இந்தியா
ஆ. தென் கொரியா
இ. வியட்நாம்
ஈ. ஜெர்மனி
- தென் கொரியா மக்களாட்சிக்கான மூன்றாவது உச்சிமாநாட்டை சியோலில் 2024 மார்ச்.18-20 வரை நடத்தியது. 2021இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உச்சிமாநாடு எதேச்சதிகாரத்தை எதிர்த்து மனித உரிமைகளை நிலைநிறுத்துகிறது. தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் நடப்பு உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தனர்.
2. அண்மையில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, ‘பல்கேரிய ரூயென் கப்பலை’ மீட்ட இந்திய கடற்படைக் கப்பல் எது?
அ. INS கல்வாரி
ஆ. INS கொல்கத்தா
இ. INS கும்பீர்
ஈ. INS கந்தேரி
- இந்தியப்பெருங்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 7 பல்கேரிய குடிமக்களை இந்திய கடற்படை மீட்டதற்கு பிரதமர் நரேந்திர மோதிக்கு பல்கேரிய அதிபர் ரூமென் ராதேவ் நன்றி தெரிவித்தார். 2023 டிசம்பர்.14 அன்று கடத்தப்பட்ட MV ரூயென், 2017க்குப் பிறகான முதல் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்தலைக் குறிக்கிறது. INS கொல்கத்தா தலைமையிலான இந்தியக்கடற்படையின் நடவடிக்கை, 2024 மார்ச்.16 அன்று கடற்படையினரை வெற்றிகரமாக மீட்டது. இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
3. சமீபத்தில், யாருக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது?
அ. தமிழிசை சௌந்தரராஜன்
ஆ. CP இராதாகிருஷ்ணன்
இ. பன்வாரிலால் புரோகித்
ஈ. கல்ராஜ் மிஸ்ரா
- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2024 மார்ச்.18 அன்று பதவி விலகிய தமிழிசை சௌந்தரராஜனுக்குப் பதிலாக, தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் ஜார்கண்ட் மாநில ஆளுநர் CP இராதாகிருஷ்ணனை நியமித்தார். பாஜகவின் தமிழ்நாடு பிரிவுத்தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 2019 மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். 39 இடங்களைக்கொண்ட தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 2024 ஏப்ரல்.19 அன்று நடைபெறவுள்ளது.
4. அண்மையில், மூன்றாவது வடகிழக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்ட இடம் எது?
அ. நாகாலாந்து
ஆ. அஸ்ஸாம்
இ. அருணாச்சல பிரதேசம்
ஈ. மிசோரம்
- மூன்றாவது வடகிழக்கு விளையாட்டுப் போட்டிகள் நாகாலாந்தில் சோவிமாவில் உள்ள விளையாட்டு மையத்தில் தொடங்கியது. நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியூ ரியோ இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எட்டு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் 15 பிரிவுகளில் போட்டியிடுகின்றனர். வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, புல்வெளி டென்னிஸ், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, கைப்பந்து மற்றும் வுஷூபோன்ற விளையாட்டுகளை இது கொண்டுள்ளது.
5. சமீபத்தில், நான்காவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) புத்தொழில் கருத்துக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
அ. சென்னை
ஆ. புது தில்லி
இ பெங்களூரு
ஈ. ஹைதராபாத்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) புத்தொழில் மன்றத்தின் நான்காவது பதிப்பு மார்ச்.19 அன்று புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்புநாடுகளிடையே புத்தொழில் தொடர்புகளை விரிவுப்படுத்துதல், புதுமைக்கு உகந்த சூழலை ஊக்குவித்தல், வேலை உருவாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் புதுமையான தீர்வுகளை உருவாக்க இளம் திறமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்த முயற்சி தனது கவனம் முழுவதையும் செலுத்தியது.
6. ஒவ்வோர் ஆண்டும், ‘சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
அ. 20 மார்ச்
ஆ. 21 மார்ச்
இ. 22 மார்ச்
ஈ. 23 மார்ச்
- சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு நாளானது ஆண்டுதோறும் மார்ச்.21 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் 1960இல் தென்னாப்பிரிக்காவின் ஷார்ப்வில்லியில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 69 பேரைக்கொன்ற நாளை நினைவுகூருகிறது. சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு நாளை ஐநா அவை நிறுவியது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “A Decade of Recognition, Justice, and Development” என்பதாகும்.
7. ‘Brucethoa isro’ என்றால் என்ன?
அ. தாவர நோய்
ஆ. புதிய வகை சிலந்தி
இ. புதிய வகை ஆழ்கடல் ஏழிணைக்காலி (isopod)
ஈ. சிறுகோள்
- ISROஇன் பெயரால் கேரளத்தின் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஆழ்கடல் ஏழிணைக்காலிக்கு ‘Brucethoa isro’ என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். கேரளாவின் கொல்லம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட இந்தச்சிறிய மீன்-ஒட்டுண்ணி ஓட்டுடலியானது ஸ்பின்னிஜா கிரீனையின் செவுளில் வாழ்கிறது. இது இந்தியாவில் காணப்படும் இவ்வகை உயிரங்களில் இரண்டாவது வகையாகும். ISROஇன் விண்வெளிப் பயணங்களைப் போற்றும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
8. தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஏவுகலமான, ‘அக்னிபான் SORTeD’ஐ ஏவுவதற்குத் தயாராகவுள்ள விண்வெளிசார் புத்தொழில் நிறுவனம் எது?
அ. கேலக்ஸை ஸ்பேஸ்
ஆ. அக்னிகுல் காஸ்மோஸ்
இ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்
ஈ. துருவா விண்வெளி
- சென்னையில் உள்ள விண்வெளிசார் தனியார் புத்தொழில் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஏவுகலமான, ‘அக்னிபான் SOrTeD (Suborbital Tech Demonstrator)’ஐ 2024 மார்ச்சில் ஏவத் தயாராகி வருகிறது. இந்த ஏவுகலம் அக்னிகுலின் சொந்த ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் 2022இல் ஏவப்பட்ட விக்ரம்-S-க்குப் பிறகு தனியாரால் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஏவுகலம் அக்னிபான் ஆகும். விக்ரம்-S என்பது முழுக்க முழுக்க கலவைப்பொருட்களால் செய்யப்பட்ட முதல் ஏவுகலம் ஆகும்.
9. 2024 – உலக தண்ணீர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Groundwater: Making the invisible visible
ஆ. Leveraging Water for Peace
இ. Water and Climate Change
ஈ. Leaving No One Behind
- 1993ஆம் ஆண்டு முதல் மார்ச்.22ஆம் தேதி முதன்முதலாக உலக தண்ணீர் நாள் அனுசரிக்கப்பட்டு, அன்றுமுதல் ஒவ்வோர் ஆண்டும் அந்நாளின்போது நன்னீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது வாழ்வில் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஐநா பொதுச்சபை இதனைக் கடைப்பிடிக்க தொடங்கியது. 2024இல் வரும் இந்நாளுக்கான, “Leveraging Water for Peace” என்ற கருப்பொருள், உலகளாவிய அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வளர்ப்பதில் எல்லைகடந்த நீர் ஒத்துழைப்பின் முதன்மை பங்கை எடுத்துக்காட்டுகிறது.
10. சமீபத்தில், வான்பயண வார வெற்றியாளர் (Aviation Week Laureates) விருதைப் பெற்ற இந்திய அமைப்பு எது?
அ. ISRO
ஆ. DRDO
இ. ICAR
ஈ. CSIR
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) நடப்பு 2024ஆம் ஆண்டில், ‘சந்திரயான்-III’ திட்டத்தில் நிகழ்த்திய சாதனைகளுக்காக வான்பயண வார வெற்றியாளர் விருதைப் பெற்றது. ISRO சார்பில் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தின் துணைத்தூதர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் விருதை ஏற்றுக்கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைத்தவர்களை இந்த விருது மதித்து அங்கீகரிக்கிறது.
11. 2024 – உலக காடுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Forests and innovation: new solutions for a better world
ஆ. Forests restoration: The path to recovery and welfare
இ. Forests and Biodiversity
ஈ. Learn to Love Forests
- உலக காடுகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இது காடுகளின் மதிப்பைப் போற்றுகிறது மற்றும் மரக்கன்று நடவு இயக்கங்கள் உட்பட காடுகள் தொடர்பான பிரச்சாரங்களில் உலகளாவிய பங்கேற்பை ஊக்குவிக்கிறது. உணவு & உழவு அமைப்பு மற்றும் ஐநா காடுகள் மன்றம் ஆகியவற்றால் ஒருங்கிணைந்து நடத்தப்படும் இந்நாள், கடந்த 1971இல் நிறுவப்பட்டது. “Forests and innovation: new solutions for a better world” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் உலக காடுகள் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
12. உலக காற்றுத் தர அறிக்கையின்படி, கடந்த 2023இல் எந்த நாடு 3ஆவது மாசுபட்ட நாடாக இருந்தது?
அ. நேபாளம்
ஆ. எகிப்து
இ. இந்தியா
ஈ. பின்லாந்து
- சுவிஸ் நிறுவனமான IQAirஇன் உலக காற்றுத் தர அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில், உலகளவில் 3ஆவது மாசுபட்ட நாடாக இந்தியா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 134 நாடுகளில் உள்ள 7,812 இடங்களில் நிறுவப்பட்டுள்ள 30,000+ காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 10 இடங்கள் மட்டுமே WHOஇன் தூய்மையான காற்றின் தரத்தை எட்டியுள்ளன. பிரெஞ்சு பாலினேசியா, மொரிஷியஸ் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை தூய்மையான காற்றைக் கொண்டுள்ளன; அதே நேரத்தில் இந்தியா ஆனது பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைவிட மாசு அளவுகளில் பின்தங்கியுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. விஜயநகர ஆட்சிக்கால புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டி அடுத்த கரகப்பூசாரி வட்டம் பகுதியில் விஜயநகர மன்னர் ஆட்சிக்கால புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முன்னங்கால்களைத் தூக்கியபடி வாயைப் பிளந்த நிலையில் தாக்கவரும் புலியை வீரன் அதன் வாயில் தன் இடது கையால், ‘கட்டாரி’யால் குத்திய நிலையில், வலது கையில் பெரிய வாளினை ஏந்தி, தாக்க முற்படும் நிலையில் இந்த நடுகல் செதுக்கப்பட்டுள்ளது.
‘கட்டாரி’ என்ற ஆயுதம்:
‘கட்டாரி’ என்ற ஆயுதம் இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு குத்துவாள் ஆயுத வகையாகும். நடுவிரல், ஆள்காட்டி விரலுக்கிடையில் வைத்து பயன்படுத்தும் இந்தக் குத்துவாளின் கைப்பிடியானது, ‘ஏ’ வடிவில் இருக்கும். இது வடமொழியில் கட்டாரா அல்லது கட்டாரி என மருவியது.
2033ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி பொருளாதாரத்தின் மதிப்பு $44 பில்லியன் டாலர்களாக (சுமார் `3.67 இலட்சம் கோடி) அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி பொருளாதார மதிப்பில் 8 சதவீதமாகும்.
2. வைகை-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் நடைபெறுகின்றன.
வைகை-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள வைகை-காவிரி-குண்டாறு விவசாயிகளுக்கு மட்டுமன்றி, பொதுமக்களின் முதன்மை குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த 3 ஆறுகளின் இணைப்பானது சுமார் 255 கிமீட்டர் தொலைவு ஆகும். முதல் கட்டமாக, கரூர் மாவட்டம், மாயனூர் ஆற்றிலிருந்து புதுக்கோட்டை வரை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வைகை ஆற்றுக்கும், மூன்றாம் கட்டமாக வைகை ஆற்றிலிருந்து குண்டாறுக்கும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் 81 சதவீதம் அதிகரித்த மீன் நுகர்வு.
இந்தியாவின் மீன் நுகர்வு கடந்த 2005-2021 காலகட்டத்தில் 81 சதவீதம் அதிகரித்துள்ளது. மீன் உண்பவர்களின் விகிதத்தைப் பொருத்தவரை, 99.35 சதவீதத்தினருடன் திரிபுரா முதலிடம் வகிக்கிறது. வெறும் 20.55 பேர் மட்டுமே மீன் நுகர்வோரைக் கொண்டு இந்தப் பட்டியலில் ஹரியாணா கடைசி இடத்தில் உள்ளது.