Tnpsc Current Affairs in Tamil – 24th November 2023
1. ‘14ஆவது உமிழ்வு இடைவெளி அறிக்கை-2023’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?
அ. UNEP 🗹
ஆ. FAO
இ. உலக வங்கி
ஈ. WEF
- நடப்பு 2023ஆம் ஆண்டில் 14ஆவது உமிழ்வு இடைவெளி அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, தற்போதுள்ள நிபந்தனைக்குட்பட்ட மற்றும் நிபந்தனையற்ற தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் அனைத்தும் 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டாலும், உலக வெப்பநிலை 2.5°Cஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பாரிசு ஒப்பந்தத்தால் நிறுவப்பட்ட 2°C இலக்கை விட அதிகமாகும்.
2. ‘வஜ்ர பிரஹார் – 2023’ என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுப்பயிற்சியாகும்?
அ. இந்தியா மற்றும் இலங்கை
ஆ. இந்தியா மற்றும் அமெரிக்கா 🗹
இ. இந்தியா மற்றும் இங்கிலாந்து
ஈ. இந்தியா மற்றும் பிரான்ஸ்
- 14ஆவது இந்திய-அமெரிக்கக் கூட்டு சிறப்புப்படை பயிற்சி ‘வஜ்ர பிரஹார்-2023’ மேகாலயா மாநிலம் உம்ரோயில் தொடங்கியது. அமெரிக்க படைப்பிரிவுக்கு, அமெரிக்க சிறப்புப் படைகளின் 1ஆவது சிறப்புப் படைக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்திய இராணுவப் பிரிவுக்கு கிழக்குக் கமாண்டைச் சேர்ந்த சிறப்புப் படை வீரர்கள் தலைமை தாங்குகின்றனர். வஜ்ரா பிரஹார் பயிற்சி என்பது இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க ராணுவ சிறப்புப் படைகள் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சியாகும்.
- கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு உத்திகள் போன்ற பகுதிகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் முதல் பயிற்சி இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
3. வளிமண்டல அலைகள் பரிசோதனையுடன் தொடர்புடைய விண்வெளி முகமை எது?
அ. NASA 🗹
ஆ. ISRO
இ. ESA
ஈ. JAXA
- விண்வெளி வானிலையும் பூமியின் வளிமண்டல நிலைமைகளையும் பாதிக்கும் ஒரு முதன்மையான காரணியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமான வளிமண்டல அலைகள் பரிசோதனையைத் தொடங்க NASA தயாராகி வருகிறது. இந்த ஆய்வின் கவனம் வளிமண்டல ஈர்ப்பு அலைகள்மீது இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட வகை செங்குத்தலை ஆகும்.
4. கனிமீடு, காலிஸ்டோ மற்றும் யூரோபா ஆகியவை கீழ்காணும் எந்தக் கோளின் நிலவுகளாகும்?
அ. செவ்வாய்
ஆ. வியாழன் 🗹
இ. சனி
ஈ. வெள்ளி
- ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் (JUICE) ஆய்வுத்திட்டமானது பூமி மற்றும் திங்கள் ஆகிய இரண்டின் ஈரப்பையும் பயன்படுத்தி வியாழனை நோக்கிச் சென்று வரலாற்றுச் சாதனை படைக்கவுள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் ஏவப்பட்ட இத்திட்டம், வாயுக்கோளான வியாழனை மட்டுமன்று, அதன் மூன்று பனிக்கட்டி நிலவுகளையும் (கனிமீடு, காலிஸ்டோ மற்றும் யூரோபா) ஆயும். பெருங்கடல்களுக்கான சாத்தியக்கூறுகளையும் அது ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
5. திங்களின் மண்மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வர நோக்கம் கொண்டுள்ள இந்தியத் திட்டம் எது?
அ. சந்திரயான்-3
ஆ. மங்கள்யான்-2
இ. சந்திரயான்-4 🗹
ஈ. ககன்யான்
- சந்திரயான்-4 திட்டமானது திங்களின் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர நோக்கம் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும் இந்தத் திட்டத்திற்கு, இரு ஏவுகலங்கள் தேவைப்படும், ஒவ்வொன்றும் நான்கு தனித்தனி தொகுதிகளை கொண்டு செல்லும். அவை: பரிமாற்ற தொகுதி, தரையிறங்கி தொகுதி, மேற்செல்லும் தொகுதி மற்றும் மறு-நுழைவு தொகுதி ஆகும்.
6. ஜோசப் போகாய் என்பவர் கீழ்காணும் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
அ. லைபீரியா 🗹
ஆ. அர்ஜென்டினா
இ. ஐக்கிய அரபு அமீரகம்
ஈ. அமெரிக்கா
- அண்மையில் நடந்த லைபீரிய அதிபர் தேர்தலில் ஜோசப் போகாய் வெற்றி பெற்றார். முன்னாள் சர்வதேச கால்பந்து நட்சத்திரமான வீயா பெற்ற 49.36% வாக்குகளை முறியடித்து, போகாய் 50.64 சதவீத வாக்குகளுடன் வெற்றியைப் பெற்றார். FIFAஇன் சிறந்த உலக வீரர் கோப்பை மற்றும் பலோன் டி’ஓர் ஆகிய இரண்டையும் வென்ற முதல் ஆப்பிரிக்க கால்பந்து வீரர் வீயா ஆவார்.
7. ஐநா தணிக்கை குழுவின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?
அ. K வேணுகோபால்
ஆ. கிரிஷ் சந்திர முர்மு 🗹
இ. வினோத் ராய்
ஈ. சசிகாந்த் சர்மா
- இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மு, வரும் ஆண்டிற்கான ஐநா தணிக்கை குழுவின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற வெளிநாட்டு தணிக்கையாளர் குழுவின் அறுபத்து மூன்றாவது அமர்வில் முர்மு பங்கேற்றார்.
8. ‘சர்வதேச எம்மி இயக்குநரக விருது’ பெற்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
அ. ஏக்தா கபூர் 🗹
ஆ. ஜோயா அக்தர்
இ. சுதா கொங்கரா
ஈ. ஜூஹி சாவ்லா
- 2023 – சர்வதேச எம்மி விருதுகளில், இந்திய நகைச்சுவை நடிகர் வீர் தாசுக்கு, ‘வீர் தாஸ்: லேண்டிங்’க்காக ‘சிறந்த நகைச்சுவைக்கான’ பிரிவில் எம்மி விருதை வென்றார். தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ‘கலை மற்றும் பொழுதுபோக்கு உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக’ மதிப்புமிக்க சர்வதேச எம்மி இயக்குநரக விருதைப் பெற்றார்.
9. ‘தேசிய நீர்வழி-1’ என அறிவிக்கப்பட்ட நீர்வழி எது?
அ. கங்கை-பாகீரதி-ஹூகி ஆறு 🗹
ஆ. பிரம்மபுத்திரா ஆறு (துப்ரி-சாடியா)
இ. கிருஷ்ணா ஆறு (விஜயவாடா-முக்த்யாலா)
ஈ. மண்டோவி ஆறு
- இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகள் ஆணையத்திற்கும் அமேசான் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இக்கூட்டு முயற்சியானது, குறிப்பாக கங்கையாற்றைப் (தேசிய நீர்வழி-1) பயன்படுத்தி, போக்குவரத்துகளை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதற்கும் நீர்வழிப் போக்குவரவின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
10. 8ஆவது இந்திய நீர் விளைவு உச்சிமாநாட்டை நடத்தும் நகரம் எது?
அ. புனே
ஆ. புது தில்லி 🗹
இ. கொல்கத்தா
ஈ. மைசூரு
- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புது தில்லியில் 8ஆவது இந்திய நீர் விளைவு உச்சிமாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார். இந்த மூன்று நாள் உச்சிமாநாடு, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் கங்கை நதிப் படுகை மேலாண்மை மற்றும் ஆய்வுகள் மையம் (cGanga) ஆகியவற்றால் 2023 நவம்பர்.22 முதல் 24 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
11. ‘ASEAN-இந்தியா தினை விழா – 2023’ நடத்தப்படுகிற நாடு எது?
அ. இந்தியா
ஆ. இலங்கை
இ. வங்காளதேசம்
ஈ. இந்தோனேசியா 🗹
- 2023 – ASEAN-இந்தியா தினை விழாவானது இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் தொடங்கியது. இந்த விழாவின் முதன்மை நோக்கம் ASEAN பிராந்தியத்தின் உறுப்புநாடுகளிடையே தினை மற்றும் தினைசார்ந்த பொருட்களுக்கான சந்தையை வளர்ப்பதும் அதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்குவதும் ஆகும்.
12. ‘AUSTRAHIND – 23’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தும் நாடு எது?
அ. ஆஸ்திரேலியா 🗹
ஆ. இந்தியா
இ. ஜப்பான்
ஈ. மியான்மர்
- ‘ஆஸ்ட்ராஹிந்த்-23’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சிக்காக 81 வீரர்களைக்கொண்ட இந்திய இராணுவக்குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. ‘ஆஸ்ட்ராஹிந்த்’ முதல் பயிற்சி இராஜஸ்தானில் கடந்த 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இரு நாடுகளில் ஒரு நாட்டில் மாறிமாறி இப்பயிற்சி நடத்தப்படுகிறது. இருநாட்டு இராணுவங்களுக்கு இடையே புரிந்துணர்வை மேம்படுத்த, நட்புநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இப்பயிற்சி உதவும்.
13. CCRASஆல் அண்மையில் தொடங்கப்பட்ட, ‘AGNI’ முன்னெடுப்புடன் தொடர்புடைய துறை எது?
அ. பாதுகாப்பு
ஆ. அனல் மின்சாரம்
இ. ஆயுர்வேதம் 🗹
ஈ. எஃகு
- ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS), அறிவியல் முறைமைகள்மூலம் ஆயுர்வேத நடைமுறைகளை ஆராயவும் மற்றும் சரிபார்ப்பதற்கும், Ayurveda Gyan Naipunya Initiative – AGNI என்றவொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் குறிப்பாக ஆயுர்வேதத்தை கடைப்பிடிக்கும் மருத்துவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை ஆயுர்வேத அணுகுமுறைகளுடன் ஆதார அடிப்படையிலான மதிப்பீட்டை ஒருங்கிணைப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்.
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 96. 1989ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமை அவருக்குச் சொந்தமானது. 1992ஆம் ஆண்டில் பணி ஓய்வுபெற்ற பாத்திமா பீவி, தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 1997 முதல் 2001 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. பிரிட்டன் விசா: இந்தியர்கள் முதலிடம்.
பிரிட்டன் (UK) நுழைவு இசைவு (விசா) பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது அந்நாட்டின் குடியேற்ற அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
TNPSC Current Affairs
https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/
Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test
https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb
Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO