TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 24th May 2024

1. அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) 99ஆவதாக உறுப்பினராகியுள்ள நாடு எது?

அ. ஸ்பெயின்

ஆ. மொராக்கோ

இ. அல்ஜீரியா

ஈ. பிரேசில்

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் 99ஆம் உறுப்பினராக ஸ்பெயின் இணைந்துள்ளது. இதற்கான ஒப்புதலை புது தில்லியில் தூதர் ஜோஸ் மரியா ரிடாவ் டோமிங்குஸ் இணைச்செயலாளர் அபிஷேக் சிங்கிடம் ஒப்படைத்தார். கடந்த 2015இல் COP21இன்போது இந்தியா மற்றும் பிரான்சால் இணைந்து நிறுவப்பட்ட பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி, சூரியவொளி ஆற்றலின் பயன்பாட்டை மேம்படுத்துதல், ஆற்றலுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் உறுப்புநாடுகளில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப்போராடுவதற்கான மாற்றத்தை உருவாக்குவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. அண்மையில், முதலாவது ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற இடம் எது?

அ. பெய்ரூட், லெபனான்

ஆ. பாங்காக், தாய்லாந்து

இ. பெய்ஜிங், சீனா

ஈ. புது தில்லி, இந்தியா

  • 2024 மே.20-21 ஆகிய தேதிகளில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற முதலாவது ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் மூன்று பதக்கங்களை வென்றனர். இந்திய அணி 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் 3 நிமிடங்களில் தேசிய சாதனை படைத்தது. முகமது அஜ்மல், ஜோதிகா ஸ்ரீ தண்டி, அமோஜ் ஜேக்கப் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோரால் 14.1 வினாடிகளில் இந்தச் சாதனை படைக்கப்பட்டது.
  • ஆடவர் அணி 4×400 மீ தொடரோட்டப்போட்டியில் 3 நிமிடம் 05.76 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், மகளிர் அணி 4×400 மீ தொடரோட்டப்போட்டியில் 3 நிமிடம் 33.55 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றது. பதினாறு நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வு, 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிச்சுற்று ஆகும்.

3. இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் கங்கை ஓங்கில்கள் அதிகம் காணப்படுகின்றன?

அ. உத்தரகாண்ட்

ஆ. உத்தர பிரதேசம்

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

  • இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் கூற்றுப்படி, கங்கை மற்றும் அதன் துணையாறுகளில் சுமார் நான்காயிரம் ஓங்கில்கள் வாழ்கின்றன; அதில் உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 2,000 ஓங்கில்கள் வாழ்கின்றன. இந்த ஓங்கில்களைப் பாதுகாக்க, உத்தர பிரதேச மாநில அரசு சம்பலில் ஒரு ஓங்கில்கள் சரணாலயத்தை உருவாக்கி அறிவித்தது; அங்கு 111 ஓங்கில்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நமாமி கங்கே முயற்சியானது, மாசுக்கட்டுப்பாடு, ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 2030ஆம் ஆண்டுக்குள் ஓங்கில்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கங்கை, யமுனை மற்றும் சம்பல்போன்ற பல்வேறு ஆறுகளில் வாழ்ந்துவரும் ஓங்கில்கள் உலகளவில் அழிந்து வரும் இனமாக உள்ளது.

4. வானியல் துறையில் வழங்கப்படும், ‘ஷா’ பரிசினை நடப்பு 2024ஆம் ஆண்டில் பெற்ற இந்திய வம்சாவளி பேராசிரியரின் பெயர் என்ன?

அ. ரகு ராஜ் பகதூர்

ஆ. அபிஜித் பானர்ஜி

இ. ஸ்ரீனிவாஸ் R குல்கர்னி

ஈ. கணேஷ் தாக்கூர்

  • கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி பேராசிரியரான ஸ்ரீனிவாஸ் R குல்கர்னி, வானியல் துறையில் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான ஷா பரிசைப் பெறுகிறார். மில்லிசெகண்ட் பல்சர்கள், காமா-கதிர் வெடிப்புகள் மற்றும் சூப்பர்நோவாக்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீனிவாஸ் R குல்கர்னியின் பணி நிலையற்ற வான் நிகழ்வுகள் பற்றிய மேம்பட்ட புரிதலைக் கொண்டுள்ளது.

5. அண்மையில், ‘2024 – சைபர் சுரக்ஷா’ என்ற பயிற்சி நடைபெற்ற இடம் எது?

அ. ஹைதராபாத்

. புது தில்லி

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • மே.22 அன்று நடந்த, ‘சைபர் பாதுகாப்பு–2024’ பயிற்சியில் ராணுவத்தலைமைத்தளபதி ஜெனரல் அனில் சௌகான் கலந்துகொண்டு, இந்தியாவின் இணைய பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விரிவான சைபர் பாதுகாப்புப் பயிற்சி, சைபர் பாதுகாப்பு முகமையால் 2024 மே.20-24 வரை நடத்தப்படுகிறது. இது அனைத்து சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் இணையப் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதையும், அனைத்துப் பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு இராணுவ மற்றும் முக்கியமான தேசிய அமைப்புகளின் பங்கேற்பாளர்களிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

6. அண்மையில், பௌத்த திருவிழாவான சாகா தாவா கொண்டாடப்பட்ட மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. நாகாலாந்து

இ. அஸ்ஸாம்

ஈ. மணிப்பூர்

  • பௌத்த பூர்ணிமாவுடன் இணைந்த சாகா தாவா என்ற ‘மும்முறை ஆசி’ விழாவானது 2024 மே.23 அன்று சிக்கிம் மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. இந்தப் புனித புத்த விழா சாக்கிய முனிவாரான புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணத்தைக் குறிக்கிறது. திபெத்திய பௌத்த நாட்காட்டியின் நான்காவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் கொண்டாடப்படும் இவ்விழாவில், சிக்கிமில் உள்ள பௌத்தர்கள், சித்தார்த்த கௌதமரின் வாழ்க்கையில் நடந்த இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை புத்தபெருமானாகக் கருதி, மடங்களில் பிரார்த்தனை செய்கின்றனர்.

7. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மூத்த பெண்மணியாக ஆனவர் யார்?

அ. கமி ரீட்டா

ஆ. ஜோதி ராத்ரே

இ. சங்கீதா பால்

ஈ. பிரேம்லதா அகர்வால்

  • மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலரான ஜோதி ராத்ரே (55), மே.19 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மிக மூத்த இந்தியப் பெண்மணி ஆனார். சங்கீதா பாலின் சாதனைக்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது சாதனை நிகழ்ந்துள்ளது. அவர் ஏற்கனவே 5 கண்டங்களில் உள்ள மிகவுயர்ந்த சிகரங்களில் ஏறியுள்ள அவர் விரைவில் வின்சன் மற்றும் தெனாலி மலையின் உச்சியை அடையவும் இலக்கு வைத்துள்ளார்.

8. அண்மையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா-இங்கிலாந்து கூட்டுப்பணிக்குழுவின் 16ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. லண்டன்

ஆ. புது தில்லி

இ. சென்னை

ஈ. பர்மிங்காம்

  • இந்திய வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த K D தேவால் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் ஃபெல்டன் தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 16ஆவது இந்தியா-இங்கிலாந்து கூட்டுப் பணிக்குழு கூட்டம் புது தில்லியில் கூடியது.
  • பன்னாட்டு முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர். பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிய மதிப்பீடுகளை இருநாடுகளும் பகிர்ந்து கொண்டன; உலகளவில் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட, விரிவான மற்றும் நீடித்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

9. தென்சீனக் கடலுக்கு இந்தியக் கடற்படையின் கிழக்குக் கடற்படையின் இயக்க ஈடுபாட்டின் ஒருபகுதியாக, பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குச் சென்ற இந்தியக் கடற்படைக் கப்பல்கள் யாவை?

அ. INS விக்ராந்த், INS ஷர்துல் மற்றும் INS கேசரி

ஆ. INS தில்லி, INS சக்தி மற்றும் INS கில்தான்

இ. INS கரஞ்ச், INS வேலா மற்றும் INS வாகீர்

ஈ. INS சாத்புரா, INS பெட்வா மற்றும் INS கோரா

  • தென்சீனக் கடலில் கிழக்குக் கடற்படையின் இயக்க ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படைக் கப்பல்களான INS தில்லி, INS சக்தி, INS கில்தான் ஆகியவை பிலிப்பைன்ஸின் மணிலாவுக்குப் பயணம் செய்தன. இந்தப் பயணம் பிலிப்பைன்ஸுடனான இந்தியாவின் வலுவான உறவுகளையும், பங்களிப்பை மேலும் ஆழப்படுத்துவதில் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது.
  • இந்தியக் கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் இடையேயான நிபுணர் பரிமாற்றம், விளையாட்டுப் போட்டிகள், கப்பல்தளப்பயணங்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு சமூகத் தொடர்புத் திட்டங்கள் ஆகியவை துறைமுக நிகழ்வுகளில் இடம்பெற்றிருந்தன. இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படைகளுக்கு இடையே கடற்படை ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டுத் தன்மையை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியது.

10. ATD BEST விருதுகள் – 2024இல், கீழ்க்காணும் எந்தப் பொதுத்துறை நிறுவனத்திற்கு திறமை மேம்பாட்டு பிரிவில் மூன்றாம் இடம் வழங்கப்பட்டது?

அ. NTPC

ஆ. NHPC

இ. REC

ஈ. SJVN

  • NTPC ஆனது ATD BEST விருதுகள்-2024இல் உலகளவில் திறமை மேம்பாட்டிற்காக மூன்றாமிடத்தைப் பெற்றது. மே.21 அன்று நியூ ஆர்லியன்ஸில் வழங்கப்பட்ட இந்த விருதை, NTPCஇன் உத்திசார் மனிதவள மற்றும் திறமை மேலாண்மைக்கான தலைமைப் பொது மேலாளர் ரச்சனா சிங் பால் ஏற்றுக்கொண்டார். 2003இல் நிறுவப்பட்ட ATD BEST விருதுகள், பணியாளர் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய மின்துறை நிறுவனமான NTPC, கடந்த 1975இல் நிறுவப்பட்டது.

11. அண்மையில், ஐநா பொதுச்சபையால் பன்னாட்டு மார்க்கோர் காட்டு ஆடுகளின் நாள் என அறிவிக்கப்பட்ட தேதி எது?

அ. மே.23

ஆ. மே.24

இ. மே.25

ஈ. மே.26

  • ஐநா பொதுச்சபை மே.24ஆம் தேதியை பன்னாட்டு மார்க்கோர் காட்டு ஆடுகளின் நாள் என நியமித்து அறிவித்தது. பாகிஸ்தானும் மற்ற எட்டு நாடுகளும் இதற்கானத் தீர்மானத்திற்கு ஆதரவளித்தன. மத்திய மற்றும் தெற்காசியாவின் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மிக்க உயிரினமான மார்க்கோர் காட்டு ஆடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. அண்மையில், Zero Waste to Landfill என்ற பெருமையைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையம் எது?

அ. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்

ஆ. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

இ. இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ஈ. சென்னை சர்வதேச விமான நிலையம்

  • திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், இந்திய தொழிற்துறை கூட்டமைப்பிடமிருந்து, ‘Zero Waste to Landfill’ என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்திய விமான நிலையமாக மாறியுள்ளது. 100% நெகிழி மற்றும் நகராட்சி திடக் கழிவுகள் உட்பட, 99.50% கழிவுகளை நிலத்தில் நிரப்பப்படாமல் இவ்விமான நிலையம் செய்துள்ளது. இச்சாதனை ஒரு வலுவான மதிப்புச் சங்கிலி மற்றும் 5R கொள்கைகள் (குறைத்தல், மறுபயன்பாடு, மறு செயலாக்கம், மறுசுழற்சி மற்றும் மீட்டெடுப்பு) மூலம் அடையப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 16 வயது இந்திய சிறுமி சாதனை!

இந்திய கடற்படை அதிகாரியின் மகள் காம்யா கார்த்திகேயன் (16) வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளார். நேபாளம் வழியாக உலகின் மிகவுயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்த இளம் இந்தியர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். சாதனைக்காகச் சிறுவர்களுக்கு வழங்கப்படும், ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி’ விருதை 2021-ஆம் அண்டு காம்யா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்.

தமிழ்நாடு உள்பட தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தென்னிந்திய அளவிலான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 26 வனக்கோட்டங்களில், 697 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!